மோகம் - 13

 



மோகம்-25:

அந்தப் பெண் கூறியதும் நாலு தடியர்கள் வந்து தீனாவை குண்டுகட்டாகக் தூக்கிச் சென்றனர். என்னப் பண்ணை அப்படியே நிக்கிறீங்க என்ன தான் இருந்தாலும் நம்ம பிள்ளை சொல்றதையும் கேளுங்க யாருன்னே தெரியாதுன்னு சொல்றான்…

நீங்களும் சும்மா இருக்கீங்க என்று கேள்வி எழுப்பவும் அந்தப் பொண்ணு தான் சொல்லிட்டுப் போகுதே சுந்தரம் எனக்கு புருஷனா இருப்பான்னு பத்தாதக்கு அட்ரெஸ் வேற குடுத்துட்டுப் போகுது பார்க்க பெரிய இடம் மாதிரி தெரியுது… 

இனியாச்சும் திருந்துறானான்னு பார்ப்போம் நான் வரேன் சுந்தரம் என்றவர் அவன் செஞ்சதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மன்னிச்சிடுங்க எல்லாரும் என்றவர் மனைவியுடன் கிளம்பிவிட்டார்..

சுந்தரம் வடிவிடம் சமாதானமா போனது தமிழுக்குப் பிடிக்கலையா என்று கேட்க பின்ன காயம் பட்டது அவப் புருஷனக்கு சும்மாவா விடுவா பண்ணை கேட்டதால் தான் அம்மா போனா இல்லன்னா இந்நேரம் அவன் ஜெயிலில் கம்பி எண்ணிட்டு இருப்பான்.

என் பிள்ளைக்கு எதாவது ஆயிருந்தா என்ன ஆகுறது அவளுக்கும் கோபம் இருக்காதா என்று தமிழின் மனநிலையைக் கூற கதிரிடம் போப்பா போய் கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வை தமிழ் கோவப்படுறது சரி தான்.. நான் இல்லைன்னு சொல்லலை போ கோபமா இருக்கும் சமாதானம் பண்ணு என்று அசால்டாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்…

அதனை கேட்டவனுக்கு தான் ஈரக் கொலையே நடுங்கியது.. ஹிம்ம் நீ போப்பா போய் வாங்கி கட்டிக்கோ என்று நக்கலாகப் பார்த்தி கூறினான். கதிர் முறைக்கவும் நான் இல்லை தமிழ் இந்த அண்ணன் தான் என்று விட்டு ஓட ஒரு நிமிடம் கதிருக்கு தூக்கி வாரி போட்டது.

திரும்பிப் பார்க்கவும் தமிழ் இல்லை என்றதும் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானவன் ஐயோ கதிர் உனக்கு பயப்படத் தெரியும்னு எனக்கு இப்போ தான் தெரியுது என்று அவன் மனசாட்சி நக்கலாகச் சிரிக்க நீ எல்லாம் என் மனசாட்சி தானா என்று காரித்துப்பி விட்டு தமிழ் என்று கத்தி அழைத்தான்.

ஆனால் பாருங்க ப்பா இவன் இவ்வளவு கத்தி கூப்பாடு போட்டும் யாரும் வெளியே வரலை இரண்டாம் முறை இன்னும் சற்றி குரலை உயர்த்தி அழைக்கவும் வெளியே வந்தவள் முறைத்தாள்…

அவள் முறைக்கவும் இவன் அவளுக்கு மேல் முறைத்தான் என்ன ஒரு முறை கூப்பிட்டா வர மாட்டியா வந்து கூட்டிட்டுப் போ என்று அதட்டவும் அவள் முகம் மாறியது.. இன்னும் ஒரு முறை அதிர்ந்து பேசினால் கூட கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடுவது போல் பாவமாக அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்..

அம்மாடி இவக்கிட்ட இருந்து இப்படி தான் தப்பிக்கனும் இல்லைன்னா என்னை தோரணமா கட்டி தொங்க விட்டுறுவா என்று மனதிற்குள் தனக்குத் தானே பேசிக் கொண்டவன் வந்து கூப்பிட்டுப் போக சொல்ல சொல்லி ஒரு ஆள் வைக்கனுமா என்று அதட்டவும் அவ்வளவு தான் வந்தே விட்டது…

கண்ணீர் வழிய பட்டென்று துடைத்துக் கொண்டவள் தலையைக் கீழே குனிந்தவாரே வந்து அவன் பக்கத்தில் நிற்க அவனும் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்தவாறு நின்றான்..

உள்ளுக்குள் ஐயோ புள்ளை பயந்துடுச்சு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் கையை எடுத்து தன் தோளை சுற்றிப் போட்டுக் கொண்டவள் அவன் இடுப்பை சுற்றிக் கையைப் போட்டு தன்னோடு நெருக்கிப் பிடித்துக் கொண்டவள் அவனை அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தாள்..

அவனை கட்டிலில் அமர வைத்து விட்டு அங்கு இருக்கப் பயந்துக் கொண்டு வெளியே போனவளை அழைத்தான்.. ஏய் தமிழ் இங்க வா எங்க அதுக்குள்ள போற நான் உன்னை போகவே சொல்லலையே இப்பொழுதும் அதே மிரட்டும் பாவம் அவன் குரல்களில் நிறைந்திருந்தது..

தமிழுக்கு திக்கென்று இருந்தது.. என்ன தமிழுக்கு பயமா ஆம் பயமே தான் தன் அத்தானின் மேல் எவ்வளவு காதல் அன்பு இருக்கிறதோ அதே அளவு இந்தக் குரலுக்கு பயமும் உண்டு..இந்தக் குரலைக் கேட்டால் போதும் அப்படியே தன் வால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அமைதியாகி விடுவாள்..

அவன் தடுத்ததும் கையைப் பிசைந்துக் கொண்டே திரும்ப இங்க வா எனக்கு தூக்கம் வருது வந்து தூங்க வை என்கவும் ஙே என்று முழித்தாள்…

அதென்னடா கதிரு தூக்கம் வருது தூங்க வை இதுல லாஜிக்கே இல்லையே என்று அவன் மனசாட்சிக் குரல் கொடுக்க நீ மூடிட்டு இரு நாங்க பாத்துக்குவோம்…

அவள் அங்கேயே நிற்கவும் வந்தியா என்று அழைக்கவும் உடனே குடுகுடுவென்று அவனருகே சென்றவள் அவன் படுக்க உதவி அவன் தலை முடியைக் கோத அந்த சுகத்தில் கண்கள் மூடியவன் சற்று நேரத்தில் கண்களைத் திறந்து எனக்கு கட்டிப் பிடிக்க பஞ்சுத் தலகாணி வேண்டும் என்று கேட்டான்…

அவனுக்கே இது ஓவரா தான் இருந்துச்சு ஆனாலும் பரவால்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று கூறிக்கொண்டு அவளைப் பார்க்க இந்த ரெண்டு தான் அத்தான் இருக்கு இதை இப்போதைக்கு யூஸ் பண்ணிக்கோங்க நான் சாயுங்காலம் பார்த்தியைப் போய் வாங்கி வர சொல்றேன் என்று பயந்தே படியே கூறினாள்..

(டேய் பச்சப் பிள்ளையை இப்படி ஏமாத்துற..)

இல்லை இந்த தலகாணில பஞ்சு இல்ல 

(பாராங்கல்லா இருக்கு)

ச்சே கடைக்காரன் ஏமாத்திட்டான்.

(அது வாங்குன உன்ன தான் குத்தம் சொல்லனும் நீ தான் பாத்து வாங்கனும்) 

அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாரே ச்சே தூக்கமே வராதே என்று அவளுக்கு கேட்கும் படி மெத்தையில் குத்திய வறு முணுமுணுத்தான்.

ஹே தமிழ் இங்க வா மேல ஏறி படு என்கவும் எனக்கு தூக்கம் வரலை அத்தான் என்று தப்பிக்க பார்க்க வர முடியுமா முடியாதா என்று கேட்க உடனே ஏறிப் படுத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யனும் என்பது போல் அவனை பார்த்தாள்…

என் பக்கம் திரும்பி ஒருக்களிச்சுப் படு என்று சாவிக் கொடுத்தது பொம்மையும் அதன்படி செய்தது.. 

அவளை அணைத்து அவள் தலை முடிக் கோதவும் அவனையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஏதோ பேச வரவும் அவள் உதட்டில் ஷூ என்று கை வைத்து தடுத்தவன் அவள் காதோரம் ஹஸ்கி வாய்சில் கண்ணை மூடு தமிழ் என்கவும் அவளும் அந்த குரலின் வசியத்திற்கு கட்டுப் பட்டவள் கண்களை மூடினாள்..

எப்பொழுது தூங்கினாள் என்றே தெரியாமல் கண்ணயர்ந்து விட அவள் சீரான மூச்சை வைத்தே உறங்குகிறாள் என்று உறுதிப் படுத்தியவன் தன் பஞ்சுப் பொதிகளில் முகத்தைப் பொதிந்து அவள் வாசனையை உள்ளிழுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..

மதியம் ஒரு மணிப் போல கதவு தட்டப்படவும் தான் எழுந்தாள் ஆனால் எழ முடியவில்லை.. அவன் தான் அவளை அணைத்துக் கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறானே.. பிராடு அப்படியே நான் திட்டுவனு என்னை தூங்க வச்சிட்டு நீங்களும் தூங்கிட்டீங்களா என்ன தான் நீங்க கோல்மால் பண்ணினாலும் நான் மசிய மாட்டேன் உங்ககிட்ட பேசவும் மாட்டேன் என்றவள் அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்…

( இதுங்க ரெண்டுமே பேச்சு ஒன்னா இருக்கு செயல் வேறயா இருக்கு… இதுங்க கூட இருந்தா நமக்குப் பைத்தியம் பிடுச்சிடும்….)

அவனை விலக்கி படுக்க வைக்க முயல அவள் முயல் குட்டியில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு விடாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…

எப்படி டைட்டா பிடிச்சிருக்காங்க என்று அவன் கையை எடுத்து நகர்த்தி தான் எழுந்துக் கொண்டவள் கதவை திறக்க அவள் நகர்த்தி படுக்க வைத்ததுமே விழிப்பு வந்தவன் எழுந்து அமர்ந்தான்..

இவள் கதவை திறக்கவும் பார்த்தி தான் நின்றுக் கொண்டிருந்தான் தமிழ் அப்பா உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க என்று கூறவும் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வா எனக்கு போகத் தெரியும் என்றவள் கதிரைத் திரும்பி பார்த்து உதட்டை சுழிக்கவும் இப்படி சுழிச்சே உசுப்பேத்துராளே…

வே என்ன தமிழ் அதிசயமா இருக்கு என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு பாட்டு பாடிட்டு இருப்ப என்று நக்கலாகக் கேட்கவும் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இப்போவும் என் புருஷன் எனக்கு மட்டும் தான் இப்போ கோபமா இருக்கேன் அதான் நீ அழைச்சிட்டு வா என்று விட்டு வெளியே சென்றாள்…

அண்ணா என்னாச்சு இன்னும் சமாதானமாகலையா என்று கேட்கவும் ஹிம்ம் நானும் தூங்கி எழுந்தா சரியா போய்டுவான்னு நினைச்சா இவ இப்படி சொல்லிட்டுப் போறா என்கவும் ஒஹ் இது புது டெக்னிக்கா இருக்கே கோபமா இருந்தா தூங்க வச்சிட்டா போய்டுமா என்று கேட்கவும் அவ தான் இப்படி சொல்லிட்டுப் போறாளே எங்க அதெல்லாம் ஒர்கவுட் ஆகலை…

இல்லை அண்ணா எனக்கு ஒன்னும் அப்படி தெரியலை அவ கோபமா இல்லாதப் போலத்தான் தெரியுது சரி நீ வா அப்பா கூப்பிட்டாரு என்று அழைத்து சென்றான்..

கதிர் வந்ததும் கதிரு உங்க வரவேற்பை இரண்டு வாரம் தள்ளி வச்சிக்கலாம் இப்போ இருக்குற நிலைமைல உன்னால நடக்க முடியாதில்லையா இந்த நாளை விட்டா ரெண்டு வாரம் கழிச்சு தான் நல்ல நாள் இருக்குன்னு சொன்னார்க அதான் அதுலையே வச்சிடலாம்னு சொன்னேன்…

அப்புறம் பத்திரிக்கை அடிக்கிற இடத்துலையும் சொல்லிட்டேன் தேதியை மாத்த சொல்லி இன்னும் ரெண்டு கொடுத்துடுவோம்னு சொன்னாங்க.. பத்திரிக்கையெல்லாம் நானும் பார்த்தியும் போய் கொடுத்துட்டு வந்துருவோம்..

சரிப்பா சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றவர் வெளியில் சென்று வருவதாக சொல்லி கிளம்பி விட்டார்..

 ஏய் தமிழ் அண்ணாவை கூட்டிட்டுப் போ என்கவும் இங்க வாயேன் என்று அவனை அருகில் அழைத்தவள் ஆமா உன்னை அடிக்கடி நந்திதா பேக்கரி பக்கம் பாக்குறதா ஒரு கிளி வந்து சொன்னுச்சு என்ன அப்படியா என்று கேட்க இவனுக்கு திக்கென்று ஆனது…

அவன் அதிர்ந்து நிற்பதைப் பார்த்து சிரித்தவள் என்ன லவ்ஸா உங்க அண்ணன் கிட்ட சொல்லவா என்று கேட்கவும் ஏய் நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாங்க எல்லாம் பண்ணக் கூடாதா என்று வினவ நீ என்ன அரை கிழவனா ஆயிட்டியா அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்ற…

ஏய் அப்போ எங்கண்ணனை அரை கிழவன்னு சொல்றியா என்கவும் அரை கிழவன் இல்லை உங்க அண்ணன் முழு கிழவன் போதுமா என்று வேண்டுமென்றே கதிரைப் பார்த்தவாறு கூற அதிர்ந்தான் என்னாது கிழவனா நானா…

மோகம் மையம் கொள்ளும்…

மோகம்-26:

தமிழின் தொலைப்பேசி அடிக்க எடுக்காமல் அதையே வெறித்து பார்த்தவாறு நீங்க அடிச்சுட்டு இருங்க நானும் பாத்துட்டு இருக்கேன்.. எவ்வளவு அசால்டாக சொல்றீங்க அவனை மன்னிக்க சொல்லி அதெப்படி அவனை மன்னிக்க முடியும் முடியவே முடியாது…

நீங்க என்னடான்னா அவனுக்கு வக்காளத்து வாங்கிட்டு வரீங்க எனக்கெல்லாம் அவ்வளவு பெரிய மனசில்லை அவனை மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய தியாகியாவே இருந்துட்டு போங்க என்று வறுத்தெடுத்தாள்..

மீண்டும் மீண்டும் அவள் தொலைப்பேசி அடிக்க ச்சே என்றவாறு எடுத்து பார்க்க சசி தான் அழைத்தாள்.. ஐயோ அக்கா என்று அதிர்ந்தாள் ச்சே அத்தான்னு நினைச்சு எடுக்காம விட்டுட்டோமே என்று தன்னையே கடிந்துக் கொண்டவள் போனை அட்டெண்ட் செய்து ஹலோ என்றாள்..

என்ன தமிழ் எங்கிருந்த இவ்வளவு நேரம் போன் இத்தனை முறை அடிச்சேன் எடுக்கவில்லையே…

தூங்கிட்டேன் அக்கா (சும்மா உத்து உத்து பாத்துட்டு இருந்தேன்னா சொல்ல முடியும்..)

என்ன தமிழ் இப்படி பண்ற

என்னக்கா பண்ணினேன்…

இன்னும் நாலு நாளுல வரவேற்பு வச்சிக்கிட்டு உன்னை யாரு அங்கப் போக சொன்னது…

இல்லக்கா என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து நிறுத்திய சசி 

என்ன தான் இருந்தாலும் அண்ணன் கிட்ட சொல்லாமப் போனது தப்பில்லையா தமிழ்…

இப்போ தான் கல்யாணம் ஆன புதுசு வேற இப்படியெல்லாம் விட்டுட்டுப் போகக் கூடாது தமிழ் ருசிக்கண்ட பூனைங்க இவங்களெல்லாம் சூட்டோட சூடா நம்ம முந்தானையில் முடிஞ்சி வச்சுக்கனும்…

இல்லன்னா போற வரவளுங்க எவளாவது கிடைச்ச கேப்புல தனக்கு சொந்தமாக்கிக்குவா.. உனக்கு நான் சொல்லி புரியனும்னு இல்லை புரிஞ்சி நடந்துக்கோ…

அதுவும் நீ போன கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்துச்சு வீட்டுக்கு.. நீ ஊருக்குப் போனதை சொன்னதும் கோபமா எங்கேயோ கிளம்பி போயிடுச்சு இன்னும் வீட்டுக்கு வரலை போன் போட்டாலும் ரிங் அடிச்சுக்கிட்டே இருக்கு…

ஆனால் போன் எடுக்கலை கேட்டா பிஸின்னு வருது எனக்கு எதோ தப்பா படுது தமிழ் இப்போவே சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் சாமர்த்தியம் என்று அசால்டாக பெரிய பாராங்கல்லையே எடுத்து தலையில் போட்டு அவளுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டு இவள் வைத்து விட்டாள்..

ஐயோ அவசரப்பட்டுக் கிளம்பி வந்தது தப்போ அத்தான் கிட்ட சொல்லிட்டு வந்துருக்கனுமோ போச்சு ஐயோ நானே என் தலையில மண்ணள்ளி போட்டுக்கிட்ட கதையா போச்சே…

இந்த மனுஷன் எவளையும் கண்டுக்காம போனாக்கூடா ஒருத்தியும் இவன் மேலருந்து கண்ண எடுக்க மாட்டாளுங்களே இப்போ இந்த அக்கா வேற இப்படி சொல்றாங்க.. ஐயோ என் அத்தானுக்கு ஒன்னுமே தெரியாதே ஐயோ என் பச்சப் பிள்ளையே விட்டுட்டு வந்துட்டேனே..

(ஹூக்கும் வாயில் விரல் வச்சாக்கூட கடிக்கத் தெரியாது இல்ல தமிழு..)

அதற்கு மேல் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்… ஐயோ அத்தனை முறை போன் போட்டாங்களே நான் தான் எடுக்கலை என்று அவனுக்குப் போட புல் ரிங் போய் கட்டானது…

உடனே வாட்சப் ஓப்பன் பண்ண இவங்க வாட்சப்பில் இருப்பாங்களான்னு தெரியலையே என்று நினைத்துக் கொண்டே அவன் நம்பரை செர்ச் பண்ண இருந்தான் அதுவும் ஆன்லைனில் அதை பார்த்ததுமே அடியாத்தாடி இதென்ன ஆன்லைன்ல இருக்காரு…

ஆனால் போன் எடுக்க மாட்டுறாரு என்று திரும்ப நார்மல் கால் போட கட்டானது.. திமிரப் பாரேன் கட் பண்றதை...டேய் கதிரு மண்டையைப் பொளந்துருவேன் போனை எடுடா என்று திட்டிக் கொண்டே போன் போட அப்பொழுதும் எடுக்கவில்லை…

மறுபடியும் வாட்சப் சென்று பார்க்க அப்பொழுதும் அவன் ஆன்லைனில் இருப்பதாக காட்ட வெறியானாள்… உடனே டேய் கதிரு தடியா என் கையில மாட்டுனா இன்னைக்கு நீ மர்கையா தான் அடி வெளுக்கிறேனா இல்லையான்னு பாரு போன் இத்தனை முறை அடிக்கிறேன் ஒரு முறையாவது அடிக்கிறியா டா என்று முதல் முதல் அவனுக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பினாள்..

அவங்க கடிச்சிக்கட்டும் அதுக்கு முன்னாடி தமிழ் அப்படி எங்கப் போனா இப்போ ஏன் இந்த வாட்சப் போர் ஏன் நடக்குதுன்னு பார்ப்போம் வாங்க…

தமிழ் தன்னை கிழவன் என்றதும் அன்று இரவு தங்கள் அறையில் கதிர் தமிழிடம் ஏய் நான் கிழவனா உனக்கு எங்க நல்லா பார்த்து சொல்லு என்று அதட்ட அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்பது போல் அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள் ஆமா கிழவன் தான் அதுக்கென்ன இப்போ என்று தெனாவெட்டாகக் கேட்டாள்…

அவன் அதிர்ந்து நோக்கவும் போயா கிழவா என்று அவனை திரும்பவும் கிழவன் என்று கூறி அவனை இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்து அனைத்துக் கொண்டு தூங்கி விட்டாள்..

இதுப் போலவே ஒரு வாரமும் அவனிடம் கிழவன் கிழவனென்று சொல்லி சொல்லியே வாயடைத்தவள் அவனிடம் அதன் பிறகு பேச வே மாட்டாள் இவனையும் பேச விடாமல் வாயடைத்து விடுவாள்..

சுந்தரம் தமிழின் அத்தை வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க நேரில் சென்றார்.. அப்பொழுது நடந்தது அனைத்தையும் கூறி வரவேற்பு வைத்திருப்பதாகக் கூறி விடைப் பெற்றார்.

சுந்தரம் சொன்ன கல்யாண விஷயமே அதிர்ச்சியைக் கொடுத்தாள் பத்திரிக்கையில் இருந்த தமிழின் போட்டோவைப் பார்த்து ராகேஷன் மனம் அதிர்ந்தது..

ராகேஷ் தமிழின் அத்தை சொர்ணவள்ளியின் ஒரே மகன்.. பத்திரிக்கையைப் பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான் இவ என்ன இப்படி இருக்கா அவளைப் பார்த்தவாரே அம்மா என்று கத்தினான்.. என்னடா எதுக்கு கத்துர என்று அவனிடம் வந்தவர்களை ம்மா எனக்கு வேணும் என்று தமிழின் புகைப்படத்தை நோக்கிக் கையை நீட்டினான்…

டேய் கல்யாணம் ஆனவள் உனக்கெதுக்குடா என்று முகத்தை சுளித்தவாறு கேட்க ம்மா இப்போ வந்துட்டுப் போனாரே அவரு சொல்றதை வச்சு பார்க்கறப்போ இது விருப்பப்பட்டு நடந்தக் கல்யாணம் இல்லை…

அவங்க அம்மாக்காக உசரம் தான் கல்யாணம் பண்ணி இருப்பா எப்படியும் இங்க வர வச்சுட்டா இவளை ஒரே நாளில் மடக்கிடுவேன்.. 

(அதுக்கு வாய்ப்பே இல்லை.. செமத்தையா வாங்கி கட்டிக்கப் போறான்…)

எப்படி இருக்கா பாரு ம்மா பட்டிக்காட்டுல வளர்ந்த மாதிரியா இருக்கா இவன் பாரு அவளுக்கு மேட்சே இல்லை ம்மா நான் தான் ம்மா அவளுக்கு சரியான துணை என்று கூறவும் ஹிம்ம் ஆமா அம்மா நான் இவளை கல்யாணம் பண்ணியே ஆகனும்…

இவனின் இச்செயலை ஆதரிக்கும் பெற்றோர் நல்லவர்களாகவா இருக்க முடியும்.. எல்லாம் ஜாடிக்கேத்த மூடி தான்.. சொர்ணவள்ளியின் கணவர் ராமதாஸ் எய் சொர்ணம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இவளை வளைச்சுப் போட்டுட்டா உங்க பூர்வீக சொத்து நமக்கு வந்துடும் என்ன சொல்ற என்று கேட்கவும் சூப்பர்ங்க என்று கைதட்டி சிரித்தவர்கள் அடுத்த நாளே கதிர் வீட்டிற்கு வந்தனர்…

குடும்பமாக வந்தவர்களை வரவேற்று கேள்வியாகப் பார்த்து நின்ற வடிவிடம் சென்று சொர்ணம் என்னக்கா என்னை தெரியலையா நாங்க தான் தமிழோட அத்தை மாமா அவன் என் பையன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் எங்க தமிழ் என்று தேட தோ கூப்பிடுறேன் என்று தமிழை அழைத்தார்.

அவர் அழைத்ததும் நம்ம வீடு தானே என்று எப்பொழுதும் போல் பாவாடை சட்டையில் வர இவர்கள் அமர்ந்திருந்தனர்.. தமிழ் இவர்களை சிறு வயதில் பார்த்தது அவளுக்கு உடனே நியாபகம் வரவில்லை இவர்கள் யாரென்று..

ஆனால் ராகேஷோ வெளியே நல்லப் பிள்ளை போல் அமர்ந்துக் கொண்டு உள்ளே ஐயோ நேரில் இன்னும் செமையா இருக்காளே என்று உள்ளுக்குள் மாற்றான் மனைவி என்றும் பாராமல் வர்ணித்துக் கொண்டிருந்தான்.

ஆத்தா தமிழு எப்படி இருக்க என்று அவளை அணைத்துக் கொண்டு பாச (அம்புட்டும் வேஷம்)மழையைப் பொழிந்தாள் சொர்ணம்..

நம்ம ஊருக்கு ஒரு முன வந்துட்டுப் போ தமிழ் எங்கக் கூட வரியா ஒரு இரண்டு நாள் இருந்துட்டு உடனே வந்துரலாம் என்று கேட்க தமிழுக்கும் ஆசையாக இருந்தது போயிட்டு வரலாம் இந்த அத்தானைக் கொஞ்சம் தவிக்க விடலாம் என்று யோசித்தவள் வடிவையும் சுந்தரத்தையும் பார்த்தாள்…

நீ போறதுன்னா போயிட்டு வா தமிழு உன் இஷ்டம் தான் என் கவும் துள்ளிக் குதித்து ஓடினாள் ஊருக்குக் கிளம்ப.. அவள் அப்படி துள்ளிக் குதித்து ஓடுவதை இவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டனர். அவளுக்கு இங்கு இருக்க பிடிக்காமல் தான் இப்படி ஓடுகிறாள் இவளை எப்படியும் தங்கள் பக்கம் வலைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுக் கொண்டிருந்தனர் அந்த மூடர்கள்…

அவர்களுக்கு தெரிய வில்லை அது இரும்பு வலைக்க முடியாதென்று இவர்களிடம் யார் சொல்வது.. 

கிளம்பி வந்தவள் வடிவிடம் அத்தை அவங்க வந்தா சொல்லிடுங்க நான் ரெண்டு நாளில் வந்துருவேன்னு என்று அனைவரிடமும் கூறிவிட்டு அவர்களுடன் புறப்பட்டாள்.. அப்புறம் என்ன ராக்கேஷுக்கு வாயெல்லாம் பல்லு தான்

 ( எப்படியும் தமிழ் தட்டி கையில் குடுக்கப் போறா அதான் இப்பவே சிரிச்சிக்கிறான் போல..)

இப்பொழுது வாட்சப்பில் அவனை திட்டி மெசேஜ் அனுப்ப உடனே புளு டிக் காமித்தது..

அதனைப் பார்த்ததும் வாடா தீவெட்டி தலையா என்று அவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள்..

நீ தான் என்கிட்ட சொல்லாம ஊருக்குப் போயிட்டியே அப்புறம் என்ன இதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற மூடிட்டு வைடி வந்துட்டா..
என்று காய்ந்தான்..

அதனை பார்த்தவள் ஐயோ என் அத்தான் இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே என்று இவளே கற்பனை செய்துக் கொண்டு எங்க இருக்கீங்க என்று அனுப்ப 

அதை உனக்கெதுக்கு சொல்லனும் முடியாது நான் எங்க வேணாலும் இருப்பேன் நீ ஏன் அதை கேக்குற என்று பதில் வந்தது..

ஐயோ ஐயோ எந்த சீமை சித்ராங்கி மடக்குனான்னு தெரியலையே பேச்செல்லாம் ஒரு மார்கமா தான் இருக்கு..

சொல்லுங்க அத்தான் எங்க இருக்கிங்க.. என்று மீண்டும் கேட்கவும் நான் தான் கிழவனாச்சே எதுக்கு என்கிட்ட பேசுற பேசாதே என் பதில் வந்தது…

ஐயோ அத்தான் அது நான் சும்மா சொன்னேன்.. என்று பதில் அனுப்பவும் அவன் அதற்கு எதுவும் பதில் அனுப்பவில்லை…

மீண்டும் தமிழ் அத்தான் நான் போன் பண்ணினா ஏன் எடுக்க மாட்டுறீங்க என்று அனுப்ப

நீயும் தான் நான் பண்ணும் போது எடுக்கலை இப்போ நீ பண்ணினா நான் உடனே எடுக்கனுமா என்று பதில் வந்தது…

ஐயோ இந்த அத்தான் என் ஏட்டிக்குப் போட்டியாவே பேசுறாங்க என்று நினைத்தவள் அத்தான் இப்போ நான் கால் பண்றேன் எடுங்க என்று மெசேஜ் அனுப்பிவிட்டு உடனே போட சிறிது நேரம் கழித்தே எடுத்தவன் காதில் வைக்கும் இவளும் அதுவரை என்ன எடுக்க மாட்டுறாங்க என்று போனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் எடுத்ததும் காதில் வைக்க மறுபக்கம் ஸ்ஸ் ஹா என்று கதிரின் குரலை கேட்டதும் ஐயோ என்று தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.

அடுத்து என்ன நடக்கும்…

மோகம் மையம் கொள்ளும்…



No comments:

Theme images by RBFried. Powered by Blogger.