4


முரளி காலையில் எப்பொழுதும் போல் தன் வயலுக்கு சென்றுவிட்டு வர வழியில் இருவர் நேற்று இரவு பார்த்தி வீட்டில் நடந்ததை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்தார்..


ஐயோ கடவுளே.. என்று தன் வீட்டிற்கு விரைந்தவர் தன் மனைவியை சாரதா.. சாரதா.. என்று அழைத்து கொண்டே வீட்டிற்குள் நுழைய சமயலறையில் இருந்தவர் இந்த மனுஷன் ஏன் காலையிலேயே இப்படி கத்துறாரு என்றபடி வெளியே வந்தார்..


என்னங்க என்ன ஆச்சு.. ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க.. ஏதும் பிரச்சனையா.. என்று கேட்க நேத்து நைட்டு மாப்பிள்ளை குடவுனுக்கு யாரோ தீ வச்சுடங்கலாம்…


 வா.. ஓரெட்டு போய் பார்த்துட்டு வந்துடுவோம்.. என்று கூற அது வரை அங்கு நின்று அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட ரேவதி.. ஹிம்ம் இந்த சம்மந்தமும் போச்சா.. விளங்கிடும்.. என்று கூற..


என்ன ஆச்சு டி.. எதுக்கு இப்போ இப்படி புரியாத மாதிரி பேசுற.. எதா இருந்தாலும் கொஞ்சம் தெளிவா சொல்லு..என்று சாரதா கேட்க..


இல்ல இப்போ மாப்பிள்ளையோட குடவுன் எரிஞ்சு போச்சுன்னு சொல்லறீங்களே.. 


ஒரு வேளை உங்க மூத்த பெண்ணால் தான் இப்படி நடந்துடுச்சுன்னு அவங்க நினைக்க வாய்ப்பிருக்கு இல்லையா.. என்று குரூர புத்தியை வெளிப்படுத்த அதை நம்பி சாரதாவும் அதிர்ந்தார்..


அவர் அதிர்வதை பார்த்தவள் ஆமா ம்மா.. நேத்து தானே இவளை பொண்ணு பார்க்க வந்தாங்க.. ஒரு வேளை இவளோட ராசியால தான் இப்படி நடந்துருக்குமோன்னு அவங்க நினைக்க வாய்ப்பிருக்கு தானே..


அப்படி அவங்க நினைச்சு ஒரு வேளை இந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிடங்கன்னா அதான் யோசிச்சேன் என்று கூற ஐயோ அப்படி மட்டும் நடக்க கூடாது டி..


நேத்து தான் இந்த மாப்பிள்ளையாச்சும் ஒத்துகிட்டாங்கன்னு சந்தோஷமா இருந்தேன்.. அந்த கடவுளுக்கு ஒரு இரவு கூட பொறுக்க முடியலையா.. அதுக்குள்ள இப்படி ஒரு செய்தியை கேட்டு எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு..


தன் அப்பா அம்மாவை இப்படி கத்தி அழைத்து கொண்டே வருவது கேட்டதும் என்னவென்று அறிய வெளியே வந்த எழில் இவர்கள் இருவரும் இப்படி பேசி கொள்வதை கேட்டு அவளுக்கும் அப்படி இருக்குமோ என்ற எண்ணம் உருவாகியது..


தங்களின் பேச்சால் அவ்வாறு அவளை யோசிக்க வைத்தனர்.. எழில் கண்கள் கலங்க தன்னறைக்கு தான் வந்த சுவடே தெரியாமல் செல்ல முரளி பார்த்து விட்டார்..


தன் மகள் கண்கள் கலங்கி செல்வதை கண்டு மனம் தாங்காதவர் ச்சே இதுங்க என்ன ஜென்மம் என்றே தெரியல.. இதுங்கலாம் எப்போவும் திருந்தாதுங்க.. என்று திட்டி விட்டு தன் மகள் அறைக்கு சென்றார்..


தன் அறைக்கு வந்த எழில் ஏன் டா என்னை கட்டிக்குறேன்ன்னு சொன்ன.. லூசா நீ.. பாரு ரேவதி சொல்றது போல என்னால தான் இப்படி ஆச்சோ.. என்னவோ.. பெரிய இவன் மாதிரி கட்டுனா என்னை தான் கட்டுவானாம்..


என்னால உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லன்னு சொன்னா கேட்க மாட்டுறான்.. லூசு என்று மனதால் அவனிடம் பேசிக் கொண்டிருக்க கதவு தட்டப்படவும் கண்களை துடைத்துக் கொண்டவள்.. சென்று கதவை திறந்தாள்..


அவரை பார்த்து சிரிக்க முயல அவளை வருத்தத்துடன் பார்த்தவர் கிளம்பு ம்மா மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்கவும் நான் எதுக்குப்பா என்கவும் நான் சொல்றேன் இல்லையா கிளம்பு என்கவும் சரிப்பா குளிச்சுட்டு வரேன் என்கவும் எதுவும் பேசாமல் தலையை ஆட்டி விட்டு சென்றான்..


போச்சு இப்போ அங்க போனால் அங்க இருக்குறவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியலையே.. என்று பயந்தபடி குளிக்க சென்றாள்..


இங்கு கதிர் தன் தம்பியை அதட்டி விட்டு தன் அறைக்கு வந்தவன் தமிழ் எங்கு என்று பார்த்தவன் அவளை கண்டு கொண்டதும் சிரித்து கொண்டே அவளருகில் வந்தான்..


தன் மகளை பார்க்க அவள் நல்ல உறக்கத்தில் இருக்க தமிழ் போர்வைக்குள் தன்னை பொதிந்து கொண்டு படுத்திருந்தாள்..


தன் மகளை ஒரு பார்வை பார்த்தவன் மெதுவாக அவள் அருகில் நெருங்கி படுத்து கொள்ள இவள் அவன் இடித்து கொண்டு படுக்கவும் ச்சே என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டான்..


எங்க போனாலும் பின்னாடியே வந்துருவான் லூசு காட்டான்.. இப்போதான் கல்யாணம் முடிஞ்ச புதுசு பாரு.. எப்போ பார்த்தாலும் வந்து ஒட்டி ஓரசிக்கிட்டு என்று பார்த்தி மேல் இருந்த கடுப்பை அவனிடம் காட்டினாள்..


இனி எவன்கிட்டேயும் பேச கூடாது.. பெரிய இவன்.. இவன் சொல்றதுக்கு மறு பேச்சு பேச கூடாதாம்.. அப்படி கத்துறான்.. லூசு.. எனக்கு வாச்சது எதுவும் சரியில்லை.. பிரெண்டும் சரியில்லை.. புருஷனும் சரியில்லை.. என்று அவள் பாட்டுக்கு திட்டி கொண்டே போக அவள் மேல் மூடியிருந்த போர்வையை கதிர் உருவினான்..


அவன் உறுவவும் ஏற்கனவே கொலைகாண்டில் இருந்தவள் டேய் எருமை மாடு நான் பாட்டுக்கு சும்மா தானே படுத்துருக்கேன்.. எதுக்கு இப்போ வந்து என்னை தொந்தரவு செய்யுற..


ஒரு நிமிஷம் என்னை தனியா இருக்க விடுறியா.. எப்போ பார்த்தாலும் தமிழ் தமிழுன்னுட்டு என்று கத்த அவள் வாயை பொத்தியவன் இப்போ எதுக்கு டி இப்படி கத்துற.. 


பாப்பா எழுந்திருக்க போறா.. என்று அதட்ட டேய் விடு டா.. நான் அப்படி தான் கத்துவேன் என்று பேசிக் கொண்டே அவன் கையை கடித்தாள்..


ஹேய் நாயா டி நீ.. எதுக்கு இப்போ கடிக்குற.. என்று கூறவும் ஹிம்ம் உனக்கு நான் நாய் தான்.. நீ ஏன் சொல்ல மாட்ட.. நான் உனக்கு நாய்.. உன் தம்பிக்கு நான் பேசுறது எல்லாமே எதுத்து பேசுற மாதிரி தான் இருக்கும்..


நான் என்னமோ நடக்காததுக்கு போய் கம்பலைன்ட் குடுக்க போற மாதிரி உன் தம்பி அந்த குதி குதிக்கிறான்..


எரிஞ்சு போனதுல அவனோட உழைப்பும் தான இருக்கு.. அப்படி சொல்றான் என்று கத்திக் கொண்டிருக்க அதுக்கு தான் தமிழ் அவனை திட்டி அனுப்பிட்டேன் என்று தானே சென்று தலையை கொடுத்தான்..


ஏது.. நீ திட்டுனியா.. நீ எதுக்கு அவனை திட்டுற.. என் பிரென்ட் என்னை என்ன வேணாலும் சொல்லுவான் நீ எதுக்கு அவனை திட்டுன.. நீ என்ன லூசா என்று தன்னை பார்த்து கேட்டவளை இவ என்ன லூசா என்பது போல் பார்த்தான்..


அடியேய் இது என்ன டி அநியாயமா இருக்கு.. நான் உனக்கு தான் டி சப்போர்ட் பண்ணினேன்.. நீ என்னை லூசுன்னு சொல்ற..என்று அவளிடம் கேட்க..


ஆமா அவன் என்னை தானே சொன்னான்.. நான் உன்கிட்ட வந்து சொன்னேனா அவன் என்னை திட்டிட்டான்னு..பாவம் அவன் சாப்பிடாம வெளியே போய்ட்டான்..


உனக்கு எங்கயாச்சும் அறிவு இருக்கா அத்தான்.. என்று கேட்க கதிர் பரிதாபமாக விழித்தான்.. ஏன்டா இந்த லூசுங்க நடுவுல நான் தலையிட்டேன்.. நான் பாட்டுக்கு போயிருந்துருக்கணும்.. இதுங்க பாட்டுக்கு அடிச்சுகட்டும்னு நடுவுல வந்தது குத்தமாயா என்று மனதிற்குள் தனக்கு தானே ஒரு குட்டும் வைத்து கொண்டான்..


அவன் ஏதாவது காரணத்தோட தான் சொல்லிருப்பான்.. கோபமா பேசவும் எனக்கும் கோபம் வந்துடுச்ச.. அதான் ரூமுக்கு வந்துட்டேன்.. அவன்கிட்ட காரணம் சொல்ற வரைக்கும் நான் பேச மாட்டேன்..


நீங்க இதையெல்லாம் கண்டுக்காதீங்க.. இப்போ கூட அந்த பேக்கு நீங்க என்கிட்ட செமையா திட்டு வாங்குவீங்கன்னு அவனுக்கு தெரியும் என்று கதிரிடம் கூற அங்கு தன் கடைக்கு சென்று கொண்டிருந்த பார்த்தியும் அதை தான் நினைத்து கொண்டிருந்தான்..


பாவம் அண்ணா நீ.. இப்படி நீயே போய் மாட்டுறியே.. இருந்தாலும் இவ்வளவு அப்பாவியா இருக்க கூடாது என்று மனதிற்குள் சிரித்து கொண்டான்..


அத்தான்.. அவனுக்கு போன் போடுங்க.. வீட்டுக்கு வர சொல்லுங்க.. சாப்பிட்டு போகட்டும்.. என்று வெளியே சென்று விட்டாள்..


கதிர் அவள் சென்றதும் இதுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்..


கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தவன் முகம் எதையோ கண்டு பிடித்து மகிழ்ச்சி அப்பட்டாமாக தெரிந்தது.. அவன் வந்தது முதல் அவன் முகத்தை பார்த்தே கண்டு பிடித்தவள் தன்னை பார்த்து சிரிக்கவும் முகத்தை திருப்பி கொண்டாள்..


இதை பார்த்த கதிர் ஐயோ இதுங்க சரியான லூசுங்களா இருக்கும் போல.. இதுங்க கூட சேர்ந்தா நாம லூசா மாறிடுவோம் போலையே என்று அவர்களை கண்டு கொள்ளாமல் சாப்பிட அமர்ந்தான்..


அப்பொழுது அவளிடம் பேச்சு கொடுப்பதற்காகவே தமிழ் அந்த ரசம் கொஞ்சம் ஊத்து என்று கூற வேண்டுமென்றே தட்டில் ஊத்துவதற்கு பதில் தடுமாறி அவன் மடியில் ஊத்தியது போல் பாவ்லா செய்ய ராட்சசி என்று முனகிவிட்டு பார்த்தி எழுந்து செல்ல..


இதை கண்ட பார்த்திக்கு இதென்னடா இப்படி பண்ணுறீங்க.. உங்களை எந்த ரகத்துல சேர்க்கிறதுன்னு தெரியலையே.. என்று தான் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தான்..


சற்று நேரத்தில் எழிலும் முரளியும் இவர்கள் வீட்டிற்கு வர எழில் பயந்து கொண்டே இருந்தாள்.. எங்கு தன்னால் தான் இவ்வாறு நடந்து விட்டது என்று சொல்லி விடுவார்களோ.. என்று பயந்து கொண்டே வந்தாள்..


எல்லாத்துக்கும் நீ தான் டி காரணம் முதலிலேயே எதுத்து என்னன்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா இந்த அளவிற்கு வந்துருக்குமா.. 


எதுக்கெடுத்தாலும் உனக்கு அழ மட்டும் தான் தெரியுமா.. என்று ஒரு அரை விட மற்ற இருவரும் பயத்தில் பிஎச்சில் விழுங்கினர்..


என்ன நடந்திருக்கும்..


யார் யாரை அடித்தது..


சுந்தரம் பார்த்தியை அழைத்து என்ன டா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல.. இங்க இருக்குற எல்லாருக்குமே தெரியும்.. தீ தானா பத்திக்கலைன்னு..


அப்பறம் ஏன் டா.. கம்பலைன்ட் கொடுக்க வேண்டாம்னு சொன்ன.. என்று கேட்கவும் எல்லாம் காரணமா தான் ப்பா.. என்னன்னு கேட்காதீங்க இப்போ சொல்ல முடியாது..


நேரம் வரும் போது உங்களுக்கே தெரியும் என்று விட்டு குளிக்க செல்ல தமிழ் சுடு தண்ணீர் போட விறகை எடுத்து கொண்டு வந்தாள்..


அவளிடம் சென்று தமிழ் சாரி என்கவும் அவள் அவனை கண்டு கொள்ளாமல் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் விறகை வைக்க ஏய் தமிழ் இப்போ நீ என்கிட்ட பேசலன்னு வச்சுக்கோ என் யாழ் குட்டிக்கிட்ட சொல்லுவேன்..


அப்பறம் நீ தான் வருத்த படுவா.. ஒழுங்கா இப்போவே சமாதானமா போய்டு.. இல்லன்னு வச்சுக்கோ பின் விளைவுகள் அதிகமா இருக்கும் பார்த்துக்கோ என்று தோள்களை குளுக்கியவாறு குளிக்க சென்று விட்டான்..


போடா கருவாயா.. வந்துட்டான் சமாதானம் ஒப்பந்தம் போட.. உன்னால என்ன பண்ண முடியுமோ பார்த்துக்கோ என்று அவனுக்கு கேட்கும் படியே கூறிவிட்டு தன் கணவனிற்கு வெண்ணீர் போட்டு கொண்டிருந்தாள்..


சற்று நேரத்தில் குளித்து விட்டு வந்தவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே யாழ் செல்லம் என்று கூப்பிட்டு கொண்டே போக.. அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்..


அப்பத்தா தன் கொள்ளு பேத்தியுடன் விளையாடி கொண்டிருக்க பார்த்தி யாழை அழைத்து கொண்டே வர தன் சித்தப்பாவிடம் தாவினாள்..


பாதி பாதி என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்ச என் செல்ல குட்டி யாழ் குட்டி என்று அவனும் கொஞ்ச.. இருவரும் கொஞ்சி கொண்டிருந்ததை கண்டு ஏதோ சரியில்லையே என்று யோசித்தவாறு குளிக்க சென்றான் கதிர்..


அவனுக்கு நன்றாக தெரியும் இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் தன் தலை உருள போவது நிச்சயம் என்பது அவனுக்கு தெரியும்..


அது போல் தான் நடந்தது..


கொல்லை புறம் வந்தவன் தமிழ் அடுப்பு எரிய விட்டு கொண்டிருக்க என்ன டி உன் குட்டி பாப்பாவும் கொழுந்தனும் கூட்டணி போடுதுங்க.. என்ன விஷயம்.. ஹிம்ம்..


 இப்போவே சொல்லிட்டேன்.. நீங்க ஏதாவது பண்ணிக்கிட்டு என் தலையை உருட்டாதீங்க.. நான் ரொம்ப பாவம் டி.. உங்க போதைக்கு நான் ஊருகாயா என்று கேட்டு கொண்டே தண்ணீரை விலாவினான்..



 

அத்தான்.. நான் ஏன் வீணா சண்டைக்கு போக போறேன் என்று நல்லவள் போல் கூறியவள் அந்த கருவாயன் ஏதாவது பண்ணினா நானும் பண்ணுவேன்..


அவன் ஒரு மடங்கு பண்ணினா நான் பத்து மடங்கு பண்ணுவேன் என்று வில்லி போல் கூறவும் அப்போ நான் வெளியூர் போறேன் போங்கடி நீங்களும் உங்க சண்டையும் என்று புலம்பியவாறு தண்ணீரை தூக்கி கொண்டு சென்றவனை பார்த்து களுக்கென்று சிரித்தாள்..



 

குட்டிமா உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. சித்தப்பா வெளிய போய்ட்டு வரும் போது வாங்கிட்டு வரேன் என்று கூற அதை கேட்டு கொண்டே வந்தவள் செல்ல குட்டி உங்க கருவாயன் பாதி இருக்கார் இல்லையா அவர் கலராக பேர் அண்ட் லவ்லி வாங்கிட்டு வர சொல்லு டா..


அப்போவாச்சும் உங்க பாதி வெள்ளையா ஆகுறான பார்ப்போம் என்று நக்கல் குரலில் கூற ஹுக்கும் இவங்க புருஷன் மட்டும் தக தகன்னு மின்னுறாங்க.. அங்கேயும் அதே கலர் தானே டா.. பட்டுக் குட்டி.. என்று இவனும் பேச..



 

அப்பொழுது குளித்து விட்டு வந்த கதிர் நான் இங்கே ஆளே இல்லையே டா.. ஏன் டா டேய்.. இப்போதான் காலே எடுத்து வைக்கிறேன்.. என்னை எப்படியாவது உங்க சண்டையில் இழுத்து விடுறீங்க.. 


ஏது என் புருஷன் சொக்க தங்கம் டா.. நீ கருப்பட்டி போடா.. என்று கத்த எங்க உன் புருஷரை கூப்பிடு நான் அந்த தங்கத்தை உரசி பார்க்கணும்.. கூப்பிடு கூப்பிடு என்கவும்


அத்தான்.. அத்தான்.. அவன் வரவில்லை என்றதும் டேய் அத்தான் என்று மரியாதை தேய ஆரம்பித்திருந்தது..


ஆஹா.. இப்போ போகலைன்னா கண்டிப்பா இன்னைக்கு பட்டினி போட்டுடுவா ராட்சசி.. உங்ககிட்ட வாக்கப்பட்டதுக்கு இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என்று தலையை தொங்க போட்டு கொண்டே வந்தான் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு..


பார்த்தி ஏதோ பேச ஆரம்பிக்க வெளியில் குரல் கேட்க மூவரும் திரும்பி பார்த்தனர்.. 



 

சுந்தரத்துடன் முரளி பேசியபடி வர அவர்கள் பின்னால் தலையை குனிந்தவாறு எதையோ யோசித்தபடி வந்தாள் எழில்..


அவளை பார்த்ததுமே அனைத்தும் மறந்த பார்த்தி யாரும் அறியாமல் தன் லட்டுக்காக ஜொள்ளு விட்டான்..


யாரும் அறியாமல் தன் முக பாவத்தை மாற்றியவன் அதற்குள் அவர்களும் உள்ளே வந்திருக்க வாங்க வாங்க என்று தன் வருங்கால மாமனாரை அழைக்க அவன் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்..


அவள் தன்னை பார்க்கவும் தானும் அவளை பார்த்தவன் அப்பொழுது தான் கண்டான் அவள் கண்கள் கலங்கி இருப்பதை..


என்ன ஆச்சு.. எதுக்கு கண்ணு கலங்கியிருக்கு.. என்ன நடந்துச்சு என்று யோசித்து கொண்டிருக்க அவள் தலையை குனிந்து கொண்டாள்.. அவள் கலங்கிய கண்களை கண்டதும் உள்ளம் பிசைய தமிழை திரும்பி பார்த்தான்..

 

பார்த்தி திரும்பி தமிழை பார்க்கவும் அவன் பார்வையை உணர்ந்தவள் தன் தந்தையுடன் நின்ற எழிலை அருகில் சென்று வா எழில் உள்ள போய் பேசலாம் என்று பார்த்தி அறைக்கு அழைத்து சென்றாள்..


அவளை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவள் ஐயோ உனக்கு குடிக்க கூட எதுவும் குடுக்காம நான் பாட்டுக்கு உள்ள அழைச்சுட்டு வரேன் என்று தலையில் அடித்து கொண்டவள்.. 


நீ இங்கு இரு எழில்.. நான் போய் உனக்கு குடிக்க கொண்டு வரேன் என்றவள் அவள் பதில் பேசும் முன் வெளியே சென்றிருந்தாள்..


வெளியே வந்தவள் பார்த்தியிடம் கண்ணை காட்ட யாழினியை 


தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றான்…


(டேய் நீங்க ரெண்டு பேரும் இப்போதானே டா அப்படி அடிச்சுக்கிடீங்க.. இப்படி அதுக்குள்ள பல்டி அடிக்குறீங்க..)


( பீலா விட்டது எல்லாம் நூலா அந்துரும் போலையே..)


தன் அறைக்கு வந்தவன் கதவை தாழ் போட அவன் வந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் அவனை கண்டதும் எழுந்து நின்றாள்..


அவள் அருகில் வர ஏதோ பேச வந்தவளை தடுத்து நிறுத்தியவன் யாழ் குட்டி இங்க பொம்மை கூட விளையாடிட்டு இருங்க.. 


நான் சித்தி கூட பேசிட்டு வரேன் என்று சில பொம்மைகளை அவளிடம் எடுத்து கொடுத்தவன் அவள் விளையாட ஆரம்பித்ததும் எழிலிடம் திரும்பி சொல்லு என்பது போல் தலையசைத்தான்..


(ஏன் துறை பேச மாட்டீரோ..தொண்டையில் கிச் கிச்சா..)


பார்த்தி.. என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவன் அறிந்து கொண்டான் வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறி விட்டதென்று..


நான் உனக்கு வேண்டாம் பார்த்தி.. இப்போ உன் குடவுன் எரிஞ்சது கூட என்னால தன் இருக்கும்.. நான் உனக்கு வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டாம்..


 

தயவு செஞ்சு கல்யாணத்தை நிறுத்திடு.. பொண்ணு பாக்க வந்ததுக்கே இந்த நிலைமை.. இன்னும் கல்யாணம் ஆனா என்னென்ன ஆகுமோ தெரியல.. எனக்கு பயமா இருக்கு..


உனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால தாங்கிக்கவே முடியாது.. அதுவும் என்னால ஏதாவது ஆயிடுச்சுன்னா உயிரோடவ இருக்க மாட்டேன் தயவு செஞ்சு கல்யாணம் வேண்டாம்னு நிறுத்திடு..


எனக்கு இது பழகி போன விஷயம் தான்.. பொண்ணு பார்க்க வருவதும் அவங்க வேண்டாம்னு சொல்லிட்டு போறதும் எனக்கு பழகி போச்சு..


உன்னை கெஞ்சி கேக்குறேன்..எனக்காக இதை பண்ணு என்று அழுதவள் அப்படியே மடங்கி அவன் காலருகில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள்..


அவள் அழுவதை பார்த்து மனம் வலிக்க முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கீழே குனிந்து அவள் அருகில் அமர்ந்தவன் என்னாச்சு.. இப்போ எதுக்கு இந்த அழுகை..


உன்னை இங்கு யாரும் எதுவும் சொல்லலை.. நீயா ஏதாவது நினைக்காத.. புரியுதா.. எவனோ பத்த வச்சதுக்கு நீ உன் மேல பழியை தூக்கி போட்டுக்குற..


உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க.. நீ பாட்டுக்கு வந்து என்னால தான்னு சொல்ற.. உன்னை இங்க யாருமே எதுவும் சொல்லல.. சொல்லவும் நான் விட மாட்டேன் என்று அழுத்தமாக கூறியவன் முதலில் அழாத கண்ணை தொடை என்று அதட்டினான்…


 

அவள் மேலும் அழவும் ஹேய் குண்டு.. இப்போ எதுக்கு டி இப்படி அழுகுற.. முகமெல்லாம் செவக்குது அழாத.. என்று கண்ணை துடைக்க


நீ இப்படி சொல்ற.. அங்க வீட்டுல என்னால தான் இப்படி நடந்துருக்கும்.. எல்லாம் என் ராசியால தான் இப்படி ஆயிடுச்சுன்னு நீங்க கல்யாணத்தை நிறுத்துடுவீங்கன்னு சொன்னாள் என்று தன் வாயாலேயே அனைத்தையும் உளறி கொட்டினாள்..


உணர்ச்சி வசப்பட்டதில் தன்னையும் அறியாமல் அங்கு நடந்ததை கூறி விட்டாள்..


அவனிடம் அழுது கொண்டே கூறிய பிறகு தான் உணர்ந்தாள்.. ஐயோ போச்சு.. திட்ட போறான் என்று நினைத்து கொண்டே அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை..


அவன் பாறையென இறுகி இருக்க எழுந்தவன் யாழினியை தூக்கி கொண்டு வெளியே வந்தான்.. போச்சு எதுவும் பேசாம போறானே.. என்ன நடக்க போகுதோ என்று கையை பிசைந்த படி அவன் பின்னால் சென்றாள்…


இங்கு வெளியே வந்தவன் தமிழிடம் பிள்ளையை கொடுக்க பிள்ளையை வாங்கியவள் எழிலோட அப்பாவுக்கு கடையில் வேலை இருக்குன்னு போயிட்டாரு..


எழிலை கூட்டிட்டு போய் அவங்க வீட்டில் விட்டுட்டு வா என்று கூறியவள் தன் அறைக்கு சென்று விட்டாள்..


எழில் பார்த்தியிடம் நானே வீட்டுக்கு போய்கிறேன் என்கவும் வண்டியில் வந்து ஏறு டி என்று பல்லை கடித்து கொண்டு கூறியவன் வெளியே சென்றான்..


அவள் ஏறி அமர்ந்ததும் வண்டியை எடுத்தவன் எதுவும் அவளிடம் பேசவில்லை.. இவள் தான் அவன் முகத்தை பார்த்து கொண்டே வந்தாள்..


எழில் வீடு முன்பு வண்டியை நிறுத்தியவன் இறங்கு என்று கூறியவன் அவளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல ரேவதி ஹாலில் இருந்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தவள் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் உங்க குடவுன் எரிஞ்சதுக்கு இவ காரணம் இல்லை…


அவள் அப்படி கூறவும் ஏற்கனவே வெறியில் இருந்தவன் இவ தான் எல்லாத்துக்கும் காரணம் என்று பலாரென்று அறை வைத்தான்…


எழிலுக்கு அவன் அடித்த அடி கூட வலிக்கவில்லை.. ஆனால் அவன் கூறிய சொல் அவளை கொல்லாமல் கொன்றது..


நீயுமா பார்த்தி..?? அவளால் அப்படி நினைக்க மட்டுமே முடிந்தது..