மாது - 3




 3


மெதுவாக குளிர் காற்று மட்டும் வீசிக் கொண்டிருக்க.. வெட்ட வெளியில் வானத்தில் தன் தலைவனுக்காக காத்து கொண்டிருந்தது வட்ட நிலா..


(பேயும் நடமாடுமாம்..)


அனைவரும் உறங்கிய நடுசாமம் பொழுது.. எங்கோ ஓர் மூலையில் ஊஊஊ என்று நாய் சத்தம் மட்டுமே கேட்ட நேரம்..


இங்கு கதிர் வீட்டில் அனைவரும் தூங்கியிருக்க தன் தலைவியை நினைத்த படி உறங்காமல் கனவு கண்டு கொண்டிருந்தான் பார்த்தி..


எப்பொழுதும் படுத்ததும் உறங்கி விடுபவன் இன்று எவ்வளவு தான் புரண்டு புரண்டு படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை..


ஒருவேளை தன் இள மானை பார்த்ததாலோ என்னவோ.. அவனுக்கு உறக்கம் வந்து கண்களை தழுவ வில்லை..


அவளை நினைத்து கொண்டே இவன் தன் அறையில் படுத்திருக்க கொட்டைகையில் கட்டியிருந்த மாடுகளின் சத்தம் கேட்கவே என்ன இப்படி கத்தாதுங்களே..


ஏன் இன்னைக்கு இப்படி கத்துதுங்க என்று யோசித்தாவாறு எழ இன்னும் மாடுகளின் சத்தம் அதிகரித்தது..


என்ன ஆச்சு என்று பின்புறம் சென்று பார்க்க அங்கும் இங்கும் கோழிகள் பறந்து கொண்டிருக்க கொட்டகை எரிந்து கொண்டிருந்தது..


மாடுகள் கட்டப் பட்டிருந்ததால் கத்திக் கொண்டிருந்தன.. ஐயோ எப்படி நெருப்பு வந்துச்சு என்று சற்று நெருப்பு குறைவான இடத்தின் அருகே சென்று கொட்டகை உள்ளே சென்றான்..


இங்கு மாடுகளின் சத்தம் கேட்க கதிர் எழுந்தவன் சட்டையை மாட்டி கொண்டு வெளியே வந்து பார்க்க எரியும் கொட்டகையில் பார்த்தி சென்று மாடுகளை அவிழ்ப்பதை பார்த்தவன் தானும் பாய்ந்து அங்கு சென்றான்..


இருவரும் மாடுகளை அவிழ்த்து விட்டு கொண்டிருக்க வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்..


சுந்தரம் தன் மகன்கள் இருவரையும் டேய் தம்பிகளா சீக்கிரம் வெளியே வாங்க டா.. தீ அதிகமா பத்துது டா.. இந்த பக்கம் பாருங்க என்கவும் கதிர் நின்ற வலது பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த வாரை ஒன்று விழ பெண்கள் அனைவரும் கத்தினர்..


இவர்களின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தண்ணீரை ஒரு பக்கம் ஊற்ற இருவரும் ஒருவாறு மாடுகளை அவிழ்த்து விட்டு வெளியே வர அவர்களை பிடித்து கொண்டனர்..


அங்கிருந்த யாரோ தீயணைப்பு வண்டிக்கு அழைத்திருக்க அவ்வண்டியும் வந்து விடவே விரைவாக தீயை அணைத்தவர்கள் மாடுகளை பாதுகாப்பாக கட்ட பார்த்தியின் அலைப்பேசி அந்நேரம் அடிக்கவும் எடுத்து பேசியவன் அந்த பக்கம் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்தான்..


அலைபேசியில் பேசி கொண்டிருந்தவன் தலையில் கை வைத்து கொண்டே தன் பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு செல்ல அதுவோ டயர் பஞ்சர் ஆகியிருந்தது..


அவன் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்று உணர்ந்த கதிர் பார்த்தி என்னடா ஆச்சு என்று அவனை உளுக்கவும் ஒரம் அடுக்கி வச்சுருந்த குடவுன் எல்லாம் எரிஞ்சு போச்சாம்னே..


போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. என்று தலையில் அடித்துக் கொள்ள அவன் கைகளை பிடித்து கொண்டவன் டேய் பார்த்தி.. விடு வா ஒன்னும் இல்லை.. நாம போய் பார்த்துட்டு வருவோம் என்று அவனை அழைக்க..


அண்ணா இது எவனோ நல்லா பிளான் பண்ணி செஞ்சுருக்காணுங்க.. அவன் மட்டும் என் கையில் கிடைச்சான் என்று கைகளை முறுக்கியவாறு ரௌத்திரத்துடன் கூற..


டேய் வா போய் பார்த்துட்டு வருவோம்.. அதுக்கப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.. வாவென்று அழைக்க வண்டியை பஞ்சர் பண்ணி வச்சுருக்கானுங்க அண்ணா…


எவளோ திமிரு இருந்தா நம்ம வீட்டுக்குள்ள புகுந்து இப்படி பண்ணிருப்பாங்க.. நான் நைட் கடைக்கு போய்ட்டு வந்து நிறுத்தும் போதுலாம் பஞ்சர் ஆகலை அண்ணா..இப்போதான் ஏதோ பண்ணிருக்கானுங்க..


எப்படி தானா நெருப்பு பிடுச்சு எரியும்.. எவனோ வேணும்னு இப்படி பண்ணிருக்கானுங்க என்று கோவத்தில் குதித்தவனை 


டேய் சரி வா என் வண்டியை உள்ள தான் நிறுத்தினேன்.. இரு வரேன் என்று தன் வண்டியை எடுத்து வந்தவன் டேய் ஏறு டா.. போய் என்னன்னு பார்த்ததால் தான்டா நிலைமை ஐப்பசி இருக்குன்னு தெரியும்..


அதுக்குள்ள தைய தக்கான்னு குதிக்காம வண்டியில் வந்து ஏறு என்று அதட்ட வந்து வண்டியில் ஏறி அமர கதிர் வண்டியை கிளப்பினான்..


இருவரும் சென்றதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரவர் வீட்டுக்கு செல்ல மாரியாத்தா ஏன் தான் என் பிள்ளைகளுக்கு இப்படி நடக்குதோ.. என்று தான் பாட்டிற்கு அப்பத்தா புலம்ப ம்மா விடுமா.. எந்த உயிருக்கும் சேதாரம் இல்லாமல் தப்பிச்சதே பெரிய விஷயம் வாம்மா..


உள்ள போகலாம் என்றவர் தன் மனைவியையும் மருமகளையும் வாங்கம்மா உள்ள போகலாம் என்று அழைத்து சென்றார்..


தமிழ் வாசல் அருகே நிற்க தமிழு ஆத்தா உள்ள வா.. பனி பெய்யுது.. ரெண்டு பேரும் வந்துருவாங்க.. வாத்தா என்று அழைத்து சென்றார்..


அந்நேரம் மகள் யாழினி அழவும் தன்னறைக்கு சென்றவள் அவளை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்து கொண்டே காத்திருந்தாள்..


 இங்கு அண்ணனும் தம்பியும் வண்டியில் வந்தவர்கள் கடையை பார்க்க முற்றிலும் எரிந்து போயிருந்தது..


அதனை பார்த்ததும் நேத்து தான் அண்ணா அந்த கம்பெனில இருந்து இறக்கி வச்சுட்டு போனாங்க.. 


இப்போ இப்படி ஆயிடுச்சு..என்று வருத்தப்பட டேய்.. இதுக்கு இந்த இன்சூரன்ஸ் அது இதுன்னு ஏதாவது இருக்கும் டா…பார்த்துக்கலாம் என்கவும் பார்த்திக்கு தாள முடியவில்லை..


முற்றிலும் கரிக்கட்டையாகி போயிருக்க அவனும் தமிழும் சேர்ந்து தயாரித்த ஆர்கானிக் உரங்கள் அனைத்தும் கயவர்களின் செயலால் பாழாகி போயிருந்தது..


அவன் கண்கள் சிவக்க அனைத்தையும் பார்த்தவாரு நின்றிருக்க அவன் வருத்த படுவதை பார்க்க முடியாமல் வாடா வீட்டுக்கு போகலாம்.. நாளைக்கு பார்க்கலாம் என்று அவனை வீட்டிற்கு அழைத்து வந்தான்..


வீட்டிற்கு வந்ததும் தமிழிடம் சென்று தமிழு எல்லாம் போயிடுச்சு.. நம்ம உழைப்பு எல்லாம் வீணா போச்சு.. ஒன்னு கூட மிஞ்சல..


தீ வச்சவங்க.. முதலில் அங்க வச்சுட்டு தான் இங்கே வந்துருக்கானுங்க.. நம்ம மேல இவ்ளோ வன்மம் யாருக்கு இருக்கும்.. என்று அவன் பாட்டுக்கு பேசி கொண்டே போக..


ஒரு வேளை நீங்க உரக்கடை வச்சுருக்குறது பிடிக்காதவங்க தான் இப்படி பண்ணிருக்கனும்.. என்று கதிர் கூற அப்படி யாருக்கு பிடிக்கல நாங்க கடை வச்சுருக்குறது..


நம்ம ஊரு மக்களுக்கு தானே செஞ்சு குடுத்துட்டு இருக்கோம்.. என்கவும் ஏன் வெளியூர்காரனா இருக்க கூடாது என்று தமிழ் கேள்வி எழுப்ப யோசித்தனர்..


என்ன யோசித்தும் யாரையும் சந்தேகப் பட முடியவில்லை..


சுந்தரம் அனைவரிடமும் சரிப்பா அவங்கவங்க ரூமுக்கு போய் தூங்குங்க.. காலையில் பேசிக்கலாம் என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்..


இங்கு அறைக்கு வந்த தமிழ் கதிரின் கை கால்களை எங்காவது காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்தவள் எப்போ நெருப்பை பார்த்தாலும் யோசிக்காம இப்படி தான் பாயுவீங்களா.. என்று கொட்ட..


தலையை கைகளால் தேய்த்து கொண்டே அடியேய் அவன் மட்டும் நெருப்புல நின்னுட்டு மாடுகளை அவுத்து விட்டுட்டு இருக்கும் போது என்னை பார்த்துட்டு நிக்க சொல்றியா என்கவும்


முதலில் அந்த நாயை உதைக்கணும்.. நெருப்புன்னு பயம் இல்லாம பாயிறது.. நம்மை யாரையும் கூப்பிடாம.. ஏதாவது ஆயுருந்தா என்ன ஆகுறது என்று நெஞ்சில் கை வைத்து கொண்டு கூற சரி தூங்கு டி தூக்கம் வருது..


விட்டா பேசிக்கிட்டே போவா.. வாடி தூக்கம் வருது என்று அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..


ஆனால் தமிழ் மனதில் இது யாரு பண்ணியிருப்பா.. என்று அந்த விஷயம் ஓடி கொண்டே இருந்தது..


காலையில் எழுந்ததும் பார்த்தி அனைவரையும் அழைத்தவன் நேத்து நடந்ததை பற்றி இனி பேச வேண்டாம்..


விடுங்க.. பாத்துக்கலாம் என்று ஒரு இரவில் அந்தர் பல்டி அடிக்க ஏன்.. ஏன் டா பேச கூடாது.. 


நான் போலீஸ்க்கு போவேன்.. என்று தமிழ் கூற ஏய் சொன்னா கேட்க மாட்டியா.. அது என்ன எப்போ பார்த்தாலும் எதுத்து எதுத்து பேசுற என்றும் இல்லாமல் இன்று அவளிடம் கத்தினான்..


அவன் கத்தவும் அதிர்ந்தவள் கலங்கிய கண்களோடு அவனை பார்த்தவள் விருட்டென்று தன் அறைக்கு சென்று விட்டாள்..


பார்த்தியா தன்னை திட்டியது.. தன்னிடம் எப்பொழுதும் சிறு பிள்ளை போல் விளையாட்டாக பேசும் தன் நண்பனா இவன் என்று யோசிக்க அவளுக்கு அழுகை தான் வந்தது..


அவள் உள்ளே சென்றதும் பார்த்தி என்ன இது.. இப்படி பேசுற.. உன் தோழியாக இருந்தாலும் என் பொண்டாட்டியை இனி ஒரு தரம் இப்படி சத்தமா பேசாத என்று கண்டித்து விட்டு தன் மனைவியை பார்க்க தன் அறைக்கு சென்றான்..


பெரியவர்களுக்கும் அதே எண்ணம் தான்.. என்றும் இல்லாமல் இன்று இவனுக்கு என்ன ஆயிற்று..இப்படி அதட்டி பேச என்ன காரணம் என்று தகின் யோசித்தனர்..


சுந்தரம் அவனை கண்டிக்கவும் செய்தார்.. பார்த்தி தமிழை எதுக்கு கத்துற.. அவள் உன்னோட அண்ணி அதை என்னைக்கும் மனசுல வச்சுக்கோ.. என்று தன் இளைய மகனை கண்டித்து விட்டு வேலையாக வெளியே சென்று விட்டார்..


டேய் என்ன டா உனக்கு ஆச்சு.. எதுக்கு அப்படி புள்ளைய கத்துன.. அவள் உனக்காகவும் தானே பேசினா.. உன்னோட உழைப்பும் தானே வீணா போச்சு.. அதுக்கு தானே அவள் போலீஸ்க்கு போறேன்னு சொன்னாள்..


என்ன தான் இருந்தாலும் கொஞ்சம் மென்மையா சொல்லிருக்கலாம் என்று வடிவு சொல்லிவிட்டு சமயலரைக்கு சென்று விட்டார்..


என்ன அப்பத்தா நீ மட்டும் ஏன் நிக்குற நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிட்டு போ என்கவும் அவர் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டார்..


எந்த நாயின்னு தெரியல.. டேய் நீ என் கையில கிடைச்ச சமாதி தான்டா..என்று நினைத்தவன் ஐயோ இவ வேற கோவிச்சுப்பாளே.. இவள வேற சமாதான படுத்தனும்..


ஹே சாரி தமிழ் என்று மனதிற்குள் தன் தோழியிடம் மன்னிப்பு வேண்டியவன் தன் கடைக்கு சென்றான்..


இங்கு எழில் வீட்டில் ஐயோ எல்லாம் எரிஞ்சு போச்சா.. இதை காரணம் காட்டி இவளை வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்றது என்று கேவலமாக தன் புத்தியை வெளிப்படுத்தவும் அதை எதேர்ச்சியாக கேட்ட எழில் கண்ணீரை கட்டு படுத்தி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்..


No comments:

Theme images by RBFried. Powered by Blogger.