மாது - 2




 2


கதவை திறந்ததும் தன் தந்தை நின்றதும் வாங்க ப்பா என்று உள்ளே அழைக்க உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே ம்மா.. 


(ஹூக்கும் விட்டிருந்தா உங்க மருமகன் இந்நேரம் பிள்ளையே பெத்துருப்பான்..)


ஹிம்ம்.. சம்மதம் ப்பா.. என்று கீழே பார்த்தவாரு கூறினாள்..


அவள் தலையை வருடியவாறு ஒன்னும் நினைக்காத கண்ணு எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. நீ எதுக்கும் கவலை படாத.. சரியா என்கவும் ஹிம்ம் என்றவாறு அவரை அணைத்து கொண்டு அவர் தோள் சாய்ந்தாள்..


இன்னும் ரெண்டு நாளில் சிம்பிளாக கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க என்று பின்னாடி இருந்து குரல் வர இருவரும் திரும்பினர்..


எழிலின் தாய் சாரதா தான் நின்று கொண்டிருந்தார்.. அப்பாடி எப்படியோ இந்த மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார் என்று பெருமூச்சு விட்டார்..


எங்க இவரும் இவளை வேண்டாம்னு சொல்லிடுவாங்களோ என்று பயந்து போயிட்டேன் என்று கூற எழிலுக்கு கண்கள் கலங்கியது..


ம்மா அதுக்கு அவளை ஒழுங்கா கம்மியா திங்க சொல்லு..


இப்படி தட்டு நிறைய போட்டு தின்னா இப்படி பெருத்துகிட்டே போனா எவன் கட்டுவான்..


இன்னும் ரெண்டு மாசம் போனா நீ அருக்கால இடிச்சுட்டு வேற தான் கட்டணும் என்கவும் எழில் அழுதாள்..


ஏய் ரேவதி.. சும்மா இரு.. என்று அவள் தந்தை அதட்ட ஹூக்கும் இதுக்கு மட்டும் வந்துருவீங்க வரிஞ்சி கட்டிக்கிட்டு..


உங்க பொண்ணை ஒன்னு சொல்ல விட மாட்டீங்களே என்று முனகியவாறு சென்று விட்டாள்..


இங்கு காரில் தங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் பார்த்தியை அதிசயமாக பார்த்து கொண்டிருந்தனர்..


எப்பொழுதும் கலகலப்பாக பேசி கொண்டு திரியும் பார்த்தி இவன் இல்லை..


இருபத்தைந்து வயது கட்டிளம் காளை..


சொந்தமாக உரம் கடை வைத்து நடத்தி வருகிறான்..


இதில் தமிழும் அவனும் சேர்ந்து ஆர்கானிக் உரங்களை தயார் செய்து தங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அறிமுக படுத்தி அதில் உள்ள நன்மைகளை விளக்கி இப்பொழுது அனைவரும் ஆர்கானிக் உரங்களை கொண்டு விவசாயம் செய்தனர்..


இவர்களே அதை சந்தைக்கு கொண்டு சென்று மிக பெரிய லாபமும் ஈட்டி தர அவர்களின் வழியை தாங்களும் பின்பற்றினர்..


என்ன டா பார்த்தா.. ஒரே ரொமான்ஸ் தான் போல..


ஹிம்ம் ஹிம்ம் என்ன நான் சொன்னது ரைட்டா.. என்று தமிழ் கிண்டல் செய்ய அவன் முறைக்க இவள் துள்ளினாள்..


தமிழ் பார்த்தி முறைத்ததற்கா துள்ளினாள்.. வாய்பில்லையே.. எங்கேயோ இடிக்குதே..


ஹிம்ம் இவன் தான் காரணமா..


தமிழ் துள்ளியவள் திரும்பி தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் கணவனை பார்த்து முறைத்தாள்..


என்ன பண்றீங்க.. எல்லாரும் இருக்கும் போது.. அதுவும் உங்க புள்ளைய கையில் வச்சுக்கிட்டு..


வீட்டுக்கு வாங்க துவைச்சு காய போடுறேன் என்று சிறிய குரலில் அவனை பார்த்து கொண்டே கூற வாடி நானும் அதுக்கு தான் வெயிட்டிங் என்று அவன் வாயசைக்க..


 ச்சி.. வர வர இந்த மனுஷனுக்கு எங்க என்ன பேசனும்னு தெரியலை..


எல்லாரும் இருக்கும் போது இப்படி இடுப்புல கிள்ளுராரு..


வயாசாகுதே ஒழுஞ்சு அறிவு வளரல என்று முனகி கொண்டே வர..


என்னா.. தமிழு.. எறும்பு கடிச்சுருச்சா என்று கிண்டல் குரலில் பார்த்தி கேட்க கதிர் தன் மேல் சாய்ந்து தூங்கும் மகளின் தலையை கோதியவாறு ஜன்னல் பக்கம் திரும்பி கொள்ள ஹிம்ம் அவனை முறைத்து கொண்டே..


சாதா எறும்பு இல்லை.. கட்டெறும்பு கடிச்சுருச்சி.. என்று பல்லை கடித்து கொண்டு கூற சிரித்தவாறு இவன் இந்த பக்கம் திரும்பி கொண்டான்..


அவன் அந்த பக்கம் திரும்பியதும் கதிரின் தொடையில் அழுத்தி கிள்ள அவள் கிள்ளியதில் ஏற்பட்ட வலியில் ஆஹ்ஹ் என்று தடவி விட்டவன்..


வீட்டுக்கு வா டி.. உன்னை இருக்கு..


ஹூக்கும்.. என்று வக்கலாம் காட்டியவள் திரும்பி அமர்ந்து கொண்டாள்..


வீட்டுக்கு வந்தவர்கள் அவரவர் அறைக்கு செல்ல வடிவு தன் கணவனிடம் ஏங்க எதுக்கு இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்..


அதுவும் இவ்வளவு சீக்கிரம்.. என்று கேட்க எனக்கென்ன டி தெரியும்.. உன் செல்ல பிள்ளை தான் இன்னும் ரெண்டு நாளுல வைக்க சொன்னான்..


அவன் விருப்பப் படுறான்.. அதுக்கப்பறம் நம்ம என்ன சொல்ல முடியும்.. விடு சிம்பிளா கோவிலில் கல்யாணத்தை முடுச்சுக்கிட்டா ரிசெப்ஷன் நல்லா வச்சுப்போம்.. என்று தன் மனைவிக்கு சமாதானம் கூறினார்.


இங்கு தன் அறைக்கு வந்த பார்த்தி.. தன்னவளுக்கு அழைக்க யாரிந்த நேரத்தில் நமக்கு கால் பண்றது..


இந்த நம்பர் அப்பாவ தவிர வேற யாருக்கும் தெரியாதே.. என்று நினைத்தவாறு தன் கைபேசியை எடுக்க தன் கள்வனின் எண்ணை கண்டு கொண்டாள்..


இவரா..என்று அதிர்ந்தவள் இவருக்கு எப்படி என் நம்பர் தெரியும் என்று யோசித்து கொண்டே இருக்க ரிங் கட்டாகி மறுபடியும் அவன் போட அந்த சத்தத்தில் தன் நினைவுக்கு வந்தவள் அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்..


அவள் ஏதும் பேசாமல் இருக்க அந்த பக்கத்தில் இருந்து பார்த்தி ஏய் குண்டாத்தி என்று கிசுகிசுப்பாக அழைக்க அவன் குரலை கேட்டதற்கே சிலிர்த்தாள்..


ஹிம்ம் என்ற சத்தம் மட்டும் வர ஏய் என்ன பேச மாட்டேங்குற.. ஒஹ் உன் நம்பர் எப்படி எனக்கு தெரியும்னு தானே பாக்குற..


ஹிம்ம்..


அதெல்லாம் எடுக்க வேண்டிய நேரத்துல எடுத்துட்டேன்.. என்கவும்


எப்போ..? என்று கேட்கவும் 


ஹிம்ம் பஞ்சு மெத்தையில் பரிசம் போடும் போது என்று கூறவும் அவள் அமைதியாக இருக்கவும் அவளுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்தவன்


இது கூட இன்னும் தெரியலை.. ஆனால் யோசிக்குறதை பாரு.. ஏதோ பெரிய இவ மாதிரி என்று அவளை திட்டியவன் அவளிடம் அதான் டி நீ என்கிட்ட பேசனும்னு ரெண்டாவது முறை உன் ரூமுக்கு என்னை அழைச்சுட்டு போனியே என்று அவளுக்கு நியாபகப் படுத்தவும்..


அதை புரிந்து கொண்டவள் அப்பொழுது அவன் செய்த செயலை நினைத்து உதடு கடித்தாள்.. 


அந்த பக்கத்தில் இருந்தவன் ஏய் என்ன தூங்கிட்டியா.? நான் சொன்னது புரிஞ்சுதா ஏதாவது.. இல்லை எப்பொழுதும் போல பெக்க பெக்கணு பேக்கு மாதிரி முழிச்சுட்டு நிக்குரியா.. என்று கேட்கவும்


ரோஷம் வந்தவள் ஹிம்ம் புரியுது என்கவும் 


ஹிம்ம் என்ன புரியுது.. என்று கேட்க மீண்டும் அமைதி அவளிடம்..


ஏய்.. ஏன் டி அது சின்னதா இருக்கு.. எனக்கு இன்னும் பெருசா வேணும்.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ.. எனக்கு அதெல்லாம் தெரியாது.. இன்னும் ரெண்டு நாளில் அது பெருசா ஆக்குற.. அவ்ளோதான் சொல்லிட்டேன்..


இல்லன்னு வச்சுக்கோ.. ஏற்கனவே உன் மேல செம காண்டுல இருக்கேன்.. இப்போ இதுவும் நீ பண்ணலை அப்பறம் தண்டனை பெருசா இருக்கும் பார்த்துக்கோ.. பை என்று அலைப்பேசி நனையும் அளவிற்கு முத்தமிட்டவன் அவளை பதில் பேச விடாமல் கட் பண்ணி விட்டான்..


போனை கீழே வைத்தவள் இவன் என்ன லூசா.. இது எப்படி பெருசாவும்.. லூசு என்று அவனை திட்டி விட்டு உறங்கி விட்டாள்..


இங்கு தமிழ் தன் அறைக்கு வந்தவள் போட்டிருந்த நகைகளை கழட்டி கொண்டிருக்க கதிர் தன் தோளில் சாய்ந்து தூங்கும் மகளை தட்டி கொடுத்தவாறே அறைக்குள் வந்தவன் அவளை படுக்க வைத்து விட்டு மெதுவாக தமிழின் அருகில் வந்தான்..


சேலையில் குத்தியிருந்த பின்னை கழட்டி கொண்டிருந்தவள் பின் அரவம் தெரியாமல் வந்து நின்றவன் பின்னால் இருந்து இறுக்கி அணைக்க துள்ளினாள்..


இப்போ எதுக்கு டி நான் வரதுக்கு முன்னாடி கழட்டுற.. நானே உனக்கு உதவி பண்ணிருப்பேன் தானே என்று அவள் கையை எடுத்து விட்டு கழட்ட அவன் அருகாமையில் கிறங்கி அமைதியாக நிற்க அவன் சூடான மூச்சு காற்று அவள் கழுத்தருகில் பட அவன் தோளில் அப்படியே சாய்ந்தாள்..


ஏய் அது என்னோட பொண்ணு இடம் டி என்று வேண்டுமென்றே அவளுக்கு வெறியேற்ற ஒஹ் அப்போ காரில் வரும் போது தெரியலையா இது என் பையன் இடமுன்னு என்று தன் இடுப்பை காட்ட அதுதான் இன்னும் பையன் வரலையே..


வா அவனுக்கு ஒரு வழி பண்ணுவோம் என்று அவளை தூக்க அவனிடம் இருந்து திமிறியவள் விடு விடு டா கதிரு.. 


எருமை அங்க காருல அத்தனை பேரு இருக்கும் போது கிள்ளுற.. உனக்கு எங்கயாச்சும் மண்டையில் மசாலா இருக்கா.. பார்த்தி பக்கத்துலையே உட்காந்துருந்தான்..


என்ன நெனச்சுருப்பான்.. என்கவும் அவன் என்ன டி நினைக்க போறான்.. நம்ம அண்ணன் அண்ணி மேல அவ்ளோ லவ்வா இருக்கான்ன்னு நெனச்சுருப்பான்.. என்று கூறிக் கொண்டே அவள் உடையை அகற்ற..


ஹிம்ம் விடுங்க.. ஒன்னும் வேண்டாம்.. நான் கோவமா இருக்கேன் என்கவும் அடிங்க.. நீ தானே டி சொன்ன கல்யாணம் ஆன புதுசுல யாரையும் நாம கண்டுக்க கூடாதுன்னு நீ தானே பைக்ல போகும் போது கட்டி பிடுச்சுட்டு வந்த..


நல்ல பையனா இருந்த என்னை மாத்திட்டு இப்போ நீ அந்தர் பல்டி அடிக்குற.. இது உனக்கே நியாமா இருக்கா என்று கொத்து சதையை பற்களால் கவ்வி கொள்ள அதன் பிறகு அவளுக்கு பேச்சே வரவில்லை..


தன் நெஞ்சோடு அவன் தலையை அழுத்தி கொள்ள தனக்கு வாகாக அவளை ஏந்தி கொண்டவன் தன் வேலையை தொடங்கினான்..


ஏய் எல்லாரும் தூங்கிருப்பானுங்க டா.. சீக்கிரம் ஊத்துங்க ஊத்துங்க காலையில் அவனுங்க எழுந்து பார்க்கும் போது எல்லாம் கரி கட்டையா கிடக்கணும்..


சின்ன பயலுங்கன்னு பார்த்தா.. நமக்கே போட்டியா வரான்னுங்க.. இனிமே நம்ம பக்கமே அவனுங்க திரும்பி கூட பார்க்க கூடாது..


கொளுத்துங்க டா.. எல்லாம் எரியட்டும்…


இவ்வளவு வன்மமா..? யாராக இருக்கும்..


சஹானா லக்ஷ்மண்

Post a Comment

Previous Post Next Post