மாது மயங்கும் நேரம்
1
எதுக்கு இப்போ பொண்ணு கேட்டு வந்து நிக்குற.. உனக்கு அறிவில்லையா?
நான் தான் சொன்னேன் இல்லையா.. எனக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்லன்னு..
அப்புறம் எதுக்கு உன் வீட்டாளுங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துருக்க…
உனக்கு மண்டையில் மூளை இருக்கா இல்ல களிமண் இருக்கா..
என் பின்னாடி சுத்தும் போதே சொன்னேன் தானே என் பின்னாடி சுத்தாத.. நீ நினைக்குறது நடக்காதுன்னு..
அப்புறம் எதுக்கு இப்போ வந்து பொண்ணு கேக்குற.. ஒழுங்கா பொண்ணு பிடிக்கலைன்னு வெளியே போய் சொல்லு..
இல்லன்னு வச்சுக்கோ.. ஏன் டா இவளை கல்யாணம் பண்ணினோம்னு நினைக்குற அளவுக்கு நான் நடந்துப்பேன்…
அப்பறம் நீ தான் கஷ்ட படுவ.. என்ன உன் மர மண்டைக்கு விளங்குதா இல்லையா.. என்று எரிச்சலுடன் அவனை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.. எழிலரசி..
அவள் இப்படி கேவலமாக வண்டை வண்டையாக திட்டியும் எதிரில் இருந்தவன் முகத்தில் புன்னகை மாறாமல் அவளை பார்த்து கொண்டே சிரித்த படி நின்றிருந்தான்.. அவன் பார்த்திபன்..
பார்த்திபனா..? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.. ஆம் பார்த்திபனே.. நம் கதிர் வேலனின் தம்பி பார்த்திபன் தான்..
கதிர் வேலன் யாரென்று தெரிய வேண்டுமா அதற்கு புயலென மையம் கொண்டதோ மோகம் கதையை படியுங்கள்..
இங்கு அவனை மிரட்டிக் கொண்டிருந்தவள் அவன் தன்னை பார்த்து சிரிக்கவும் இவன் என்ன லூசா என்பது போல அவனை பார்த்தாள்..
நான் இவ்ளோ திட்டுறேன் உனக்கு சிரிப்பு கேக்குதா.. என்று அவனை திட்டுவதற்கே குத்தகைக்கு எடுத்தவள் போல திட்டிக்கொண்டே இருக்க அதுவரை தன்னை கட்டு படுத்தி கொண்டிருந்தவன்..
அவள் பின் தலையில் கை கொடுத்து தன் முகத்தருகில் இழுத்து அவளிதழோடு தன் இதழ் சேர்த்தான்..
அவன் செயலில் அதிர்ந்து திமிறியவளை தன் கரம் கொண்டு தன்னோடு பிணைத்தவன் அவள் இதழை வன்மையாக சுவைக்க அவன் நெஞ்சில் கைகளால் அடித்தாள்..
இன்னும் அழுத்தி அவள் இதழை பற்கள் கொண்டு கடிக்க அவனை அடிப்பதை நிறுத்தி விட்டு அமைதியாகி போனாள் அவன் ஏற்படுத்திய வலியில்…
அவள் இதழில் இருந்து பிரிந்தவன் ஏய் என்ன நெனச்சுட்டு இருக்க..
நான் ஒன்னும் பழைய பார்த்தி இல்லை.. நீ வேணும்னு சொன்னா வரதுக்கும் வேண்டாம்னு சொன்னா போறதுக்கும்..
உன்னை காதலிச்சு கல்யாணம் பண்றதா கனவு காணாத.. உன்னை கல்யாணம் பண்ணி என் கூடவே வச்சு பழி வாங்க தான் இந்த கல்யாணம்..
உன்னை பொண்ணு கேட்டு வந்ததும் உடனே அம்மணிக்கு கனவு.. அப்படி எல்லாம் நினைக்காத சரியா.. நீ கொடுத்த காயம் ஆறாத ரணமா இன்னும் என் நெஞ்சுல இருக்கு..
அதுக்கு நீ தான் மருந்து.. என்ன நான் சொல்றது புரியலையா..
காயமும் நீ .. மருந்தும் நீ..
நான் உன்னை கொடுமை படுத்துறதுல நீ ஒவ்வொரு முறையும் துடிக்குறதை பார்த்து நான் சந்தோஷ படனும்..
அது தான் எனக்கு வேண்டும்.. என்னை வேணாம்னு சொல்லிட்டு போனவளை நான் ஏன் திரும்ப வந்து பொண்ணு கேக்குறேன்னு இப்போ புரிஞ்சுருக்குமே..
என்ன புரியுதா.. என்று அழுத்தமாக கூறியவன் இன்னும் ரெண்டு நாளில் எனக்கும் உனக்கும் டும் டும்..
அப்புறம் உனக்கு இருக்கு.. நான் கட்டுற தாலி உன் கழுத்துல ஏறுனதும் என் கைதி நீ.. என்று அவள் கழுத்தை சுற்றி தன் கைகளை போட்டவாரு தன்னுடன் அவளை நெருக்கி கொண்டே கூறினான்..
அவன் அனைத்தையும் சொல்ல சொல்ல அவள் முகம் பயத்தில் வெளுப்பதை பார்த்து ரசித்தான்..
அவள் கன்னம் கிள்ளி அதுவரைக்கும் எப்படி எப்படி எல்லாம் சித்ரவதை பண்ணுவான்னு யோசிச்சுட்டு இரு .. என்ன வரட்டா.. என்று அவள் கன்னத்தில் மெதுவாக இரண்டு தட்டு தட்டி..
இப்போ வெளியே வந்து எப்போவும் முகத்தை வச்சுருப்பியே ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி..
அது போலவே வச்சுக்கிட்டு வெளிய வந்து என்னை பிடிச்சுருக்குன்னு சொல்லணும்.. என்ன ஓகே வா..
அப்படி நீ சொல்லலை என்றால் உன் தங்கச்சி ரேவதி தான் என்னோட அடுத்த டார்கெட்..
எப்படி என் ஐடியா.. ஆனாலும் உன் தங்கச்சி சும்மா சொல்ல கூடாது.. உன்னை விட நல்லாத்தான் இருக்கா என்று வேண்டுமென்றே அவள் எதை கூறினால் மனம் கஷ்ட படுவாளோ அதனையே கூறினான்..
அவன் கூறவும் அதுவரை பயந்து கொண்டிருந்தவள் அவன் சொன்ன வார்த்தையில் வெகுண்டெழுந்தவள் அவன் சட்டை காலரை பிடித்திழுத்து அவன் முகம் பார்த்தவள்..
முன்பு நான் தொடங்கியதை நானே முடிச்சு வச்சது போல இப்போ நீ தொடங்கிருக்க ஆனால் இது இனி முடியவே முடியாது…
நான் செய்ததுக்கு என்னை நீ என்ன வேணா பண்ணிக்கோ..என் தங்கையை இதில் இழுக்காத..
அப்போ உனக்கு இனிச்ச நான் இப்போ கசக்குதா என்று கோபமாக கேட்க..
ஹிம்ம் ஆமா அப்போ இனிப்பா இனிச்ச..இப்போ வேப்பங்காயா கசக்குற..
நான் இதில் எதுவுமே செய்யல.. எல்லாம் நீயா தேடிக்கிட்டது என்று அவன் கூற தன் தவறை நினைத்து வருந்தியவள் அவனை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டு உதட்டை பற்களால் கடிக்க..
அதை பார்த்தவன் அவள் உதட்டை தன் கைகளில் சிறை பிடித்தவன் இது கூட நீ செய்ய கூடாது..
அதை செய்ய நான் இருக்கேன்.. என்று வலிக்க கிள்ளியவன் வந்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லு.. அப்படி இல்லைன்னா என் அடுத்த டார்கெட் தான் சொன்னேன் இல்லையா அதுதான் நடக்கும்..
வா வா நான் முன்ன போறேன் என்று வெளியேற ஏன் டா என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற..
என்னால உனக்கு எதுவுமே பயன் இல்லை.. ஏன் இப்படி பண்ற.. நான் தான் வேணும்னு ஒத்த காலுல நிக்குற.. என்று தனக்குள் புலம்பியவள் முகத்தை துடைத்து கொண்டு வெளியே வந்தாள்..
அவள் வெளியே வர உடனே ஓடி வந்த ரேவதி அவளிடம் ஏய் ஒழுங்கா ஓகே சொல்லிடு..
நீ கல்யாணம் பண்ணினா தான் என் ரூட் கிளியர் ஆகும்.. சும்மா கல்யாணம் வேண்டாம்.. கருமாதி வேண்டாம்னு சொன்ன உன்னை என்ன பண்ணுவேன்ன்னு தெரியாது பார்த்துக்கோ.. என்று வெளியே சிரித்து கொண்டே மிரட்டி விட்டு சென்றாள்..
அவள் கூறியதில் எழில் கண் கலங்கவும் அதை கவனித்து கொண்டிருந்த பார்த்தி தன் கைகளை மடக்கியவாறு தன் கோபத்தை கட்டு படுத்தினான்..
பார்த்தியின் தந்தை சுந்தரம் உனக்கு என் பையனை பிடுச்சுருக்கா ம்மா..என்கவும் அவள் பார்த்தியை பார்க்க சொல்லு என்று கண்களால் மிரட்ட..
ஹிம்ம் என்று குனிந்து கொண்டு தலையை ஆட்டியவள் தன் தந்தையை பார்க்க அவர் முகத்தில் அப்படியொரு நிம்மதி..
திரும்பி தன் அம்மாவையும் தங்கையையும் பார்க்க அப்பாடி எப்படியோ கல்யாணம் முடிய போகுது என்று நினைத்தது அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது…
சுந்தரத்திடம் திரும்பியவள் நான்.. நான் என்று திணறியவள் மாமா அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று திரும்ப கேட்க அவர் போ டா என்று பார்த்திபனிடம் கூற பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ் என்னடா இங்கேயே எல்லாம் முடுச்சுடுவீங்க போல என்று கிண்டல் செய்ய முறைத்தான்..
அவன் முறைப்பதை கண்டு கப்பென்று வாயை மூடி கொண்டாள்…
அவன் எழுந்து திரும்ப எழில் அறைக்கு வர அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க என்ன? எதுக்கு இப்போ கூப்பிட்ட?? என்று எரிச்சலாக கேட்டான்..
அவனை நெருங்கியவள் பாரி என்கவும் எப்பொழுதும் இந்த அழைப்புக்கு மெழுகாய் உருகும் அவன் இன்று பாறையாக இறுகி நின்றான்..
அவன் கல் போல இறுகி நிற்க பாரி ஏன் டா என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற.. என்னால உனக்கு எந்த பயனும் இல்லை டா..
அவளை மேலும் கீழும் பார்த்தவன் அதை நான் சொல்லணும்.. நீ சொல்லாத என்று அவள் இதழை சிறை செய்தவன் சற்று நேரத்தில் அவளிடம் இருந்து பிரிந்து நீ ஓகே சொன்னதுக்காக தான்..
வேற எதுக்கும் இல்ல இன்னும் ரெண்டு நாள் தானே ..
பார்க்கலாம்..
வரேன் குண்டு குல்பி..
அதுவரை எல்லாத்துக்கும் சேர்த்து உடம்பை நல்லா தேத்தி வை என்று விட்டு நகர அவன் கையை பிடித்தவள் ஐ லவ் யூ பாரி என்கவும்..
ஐ ஹேட் யூ குண்டு குல்பி என்று கூறினான்..
அதை கண்டு சிரித்தவள் முதன் முதலாக எம்பி அவனிதழில் தன் இதழை பூட்ட அவனுக்கு சித்தம் கலங்கி பித்தம் தலைக்கேற அவளை அப்படியே தன்னுடன் அணைத்து தூக்கி கொண்டவன்..
அவள் செயலை தனதாக்கி கொண்டான்.. ஏய் குண்டு உன் மேல நான் கோவமா இருக்கேன் டி.. என்று அவள் இதழை மென்று தின்றான்..
(கோவமா இருக்கிறவன் பாக்குற வேலையா இது..)
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளை தாங்கி கொண்டு அங்கிருந்த கட்டிலில் அவளை சாய்த்து நெஞ்சில் முகம் புதைக்க..
அவளுக்கு மூச்சு நின்றே போனது.. அவன் முகத்தை நெஞ்சு குழியில் இருந்து எடுக்காமல் அங்கேயே புரட்டி கொண்டிருந்தான்..
அவன் செயலில் அவளுக்கு ஒரு கணம் நின்ற மூச்சு விட்டு விட்டு வர வேகமாக இழுத்து விட்டவள் பாரி என்று தன் நெஞ்சோடு அவன் முகத்தை வைத்து அழுத்தி கொண்டாள்..
அவள் தன் முகத்தை அந்த பூ பந்துகளில் வைத்து அழுத்தவும் ரவிக்கையோடே பற்களால் கடித்தவன் அவள் துள்ளவும் தன்னோடு இறுக்கி கொண்டான்..
அவன் செயலில் அவள் உடலில் புது ரத்தம் பாய வயிற்றில் பெயர் தெரியா பட்டாம் பூச்சிகள் பறக்க மேலெழுந்த உணர்வுகளை தாங்க முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க..
மேலும் கீழும் அசையும் இரண்டு மலைகளையும் கண்டவன் அதை இப்பொழுதே ஆண்டு விட வேண்டும் என்ற வேகம் எழுவதை கண்டு ஒரு நொடி தன் முகத்தை அங்கு வைத்து அவளின் கிறங்கடிக்கும் வாசனையை தன் நுரையீரல் முழுவதும் நிரப்பி கொண்டவன் எழுந்தவன் அவளிடம் ஒன்றும் கூறாமல் வெளியே சென்று விட்டான்…
அவன் எழுப்பிய உணர்வலைகள் மட்டு படாமல் இருக்க அப்படியே படுத்து கிடந்தவள் தன் அறை கதவு தட்ட படவும் தான் எழுந்தாள்..
எழுந்தவள் விலகி இருக்கும் முந்தானையை சரி படுத்தி கொண்டே தன்னவனின் நினைவை நெஞ்சில் அசை போட்டு கொண்டே சென்று கதவை திறந்தாள்…
0 Comments