உள்ளம் - 2




 மயக்கம் - 2:


இங்கு ஆறுமுகம் தன் மகள் சொன்னதை நினைத்து சிரித்தார். "சீதாவோ என் மூக்கு சப்பையாவா இருக்கு" என்று கை வைத்து தடவி பார்த்தார்.


பின் தன் கணவன் பக்கம் திரும்பவும் அவர் சிரித்துக்கொண்டிருக்கவும் அவர் விலாவில் தன் கைகளால் இடித்தவர் "உங்க மகள் சொன்னதுக்கு சிரிக்கிறீங்களா" என்று கேட்டார்.


அவரும் ஏதோ நினைப்பில் "ஆம்" என்று விடவும் "அப்போ என் மூஞ்சு சப்பையா இருக்கா..? இவ்வளவு நாள் இது தெரியாம தான் என்கூட குடும்பம் நடத்தினங்களா..? இப்போ உங்க மக சொல்லவும் சிரிச்சுட்டு நிக்குறீங்க...நான் எங்க அம்மா வீட்டுலையே இருக்கேன்.." என்று உள்ளே செல்ல போனவரை ஒரே இழுப்பில் தன் வண்டி அருகே இழுத்துப்போய் விட்டார்.


"விடுங்க.. நான் என் அம்மா வீட்டுலையே இருக்கேன்.." என்றதும் "ஏய்..! சீதாம்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டுப் பேறாடி.." என்று சமாதானம் சொன்னார்.


"நீங்களும் அவ சொன்னதுக்கு சிரிச்சீங்களே.. அப்போ நீங்களும் அப்படி தானே நினைக்குறீங்க.." என்றதும் "ஐயோ..! சீதா அது சும்மாடி நீ இல்லாமல் என் உலகமே இயங்காதுடி வாடி.." என்றதும் வேண்டுமென்றே முகத்தைத் திருப்பினார்.


"வினோத் வேற வந்து சொன்னதும் அவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டோம்.. புள்ள பசியில இருப்பான் வாடி.." என்றதும் "உங்களை மாறி தான் உங்க புள்ளையும் இருப்பான்.." என்றார்.


"இப்போ நீ வரலைன்னா தூக்கிட்டுப் போவேன் பரவா இல்லையா.." என்று அருகில் வந்தவரைக் கண்டு மெர்சலாகி விட்டார்.


"வெட்கம் கெட்ட மனுஷன்.." என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவர் "ஐயோ..! இருங்க போலாம் வண்டியை எடுங்க உங்களுக்குதான் வெட்கம் இல்லன்னா எனக்கும் இல்லன்னு நினைச்சுட்டீங்களா..!" என்று வண்டியில் ஏறி அமர்ந்தார். 


ஆறுமுகம் சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினார்.


"நான் ஒன்னும் உங்களுக்காக வரல என் பிள்ளைக்காகதான் வரேன்.." என்றதும் "சரிடி வீட்டுல போய் பேசிக்கலாம்.." என்று அழைத்துச் சென்றார்.


இங்கு தோட்டத்திற்கு அருளை இழுத்து வந்தவள் "மாமா.. அவன் கால உடைச்சியா இல்ல கையா..?" என்று கேட்டவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.


அவன் திரும்பி நின்றதும் "மாமா என்ன பாரு.. எதுக்கு திரும்பி நிக்கிற..?" என்று அவன் முன்னால் வந்து அவன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டாள்.


"யாரோ கேன்டின்ல உட்கார்ந்து இருக்கும்போது பேசவே இல்லை.. என் மேல கோபமா இருந்தாங்க.. அது யாருன்னு உனக்கு தெரியுமா மங்கை.." என்று கேட்டான்.


அவன் மங்கை என்றதும் கோபமானவள் "இப்போ எதுக்கு பேரு சொல்லி கூப்பிடுற..?" என்றதும் "நீ எதுக்கு என்மேல கோபமா இருந்த..?" என்று கேட்டான்.


"மாமா.. அது அந்த மூஞ்சுல தொப்பை வச்சவனை நீ அடிக்காம சும்மா வந்ததால் தான் கோபம்.. அதான் நீ போய் அடிச்சிட்டு வந்துட்டியே இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கேன் மாமா.." என்று சொன்னாள்.


"அங்கேயே அவன் கை காலை உடைச்சிருப்பேன் குட்டிமா.. பெரிய பிரச்சனை ஆயிடும்னுதான் அமைதியா வந்தேன்.."


"உங்க ஸ்கூல் பிரின்ஸ்பல் சொன்னதைக் கேட்டதானே.. அவங்களுக்கு அவங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்.. அதுக்காக அவங்க எந்த அளவுக்கு வேணாலும் போவாங்க.. அதான் ஒன்னும் பேசாம உங்களைக் கூட்டிட்டு வந்தேன்.." என்று சொல்லவும் மங்கை லேபில் நடந்தவற்றை தன் மாமனிடம் கூறினாள்.


"நான் நோட் சம்மிட் பண்ணிட்டு திரும்பவும் அவன் பின்னாடி தட்டவும் பயந்துட்டேன் மாமா.." என்று கண்கலங்க கூறினாள். "நீ தான சொல்லிருக்க யாராவது தப்பா நடந்துக்கிட்டா பயப்படாம பேஸ் பண்ணனும்னு.. அதான் பக்கத்தில் இருந்த கிளாஸ் பாட்டிலை எடுத்து அவன் மண்டையிலேயே அடிச்சேன்.."


"உடனே இரத்தம் வரவும் முத்தமிழ் என்னை அழைச்சிட்டுப் போய்ட்டா.. அந்த ஆளு பிரின்சி கிட்ட சொல்லிருக்கான்.. அவர் எங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாரு.. அப்புறம்தான் வீட்டுக்குக் கால் பண்ணி சொன்னாரு.."


"நீ வந்து அடிப்பன்னு பார்த்தேன்.. ஆனால் வீட்டுக்கேப் போய் அடிச்சிட்டு வந்துட்ட.. சூப்பர் மாமா.." என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு குதித்தாள்.


"உன்மேல தப்பில்லைன்னா எதுக்கும் பயப்படக்கூடாது குட்டிமா எப்பொழுதும் இப்படிதான் தைரியமா இருக்கனும் சரியா" என்றதும் "ம்ம்" என்று தலையாட்டினாள்.


"அவன் நான் அடிச்ச அடியில எழவே முடியாம கிடந்தான்.. அவன் பொண்டாட்டி வந்து சத்தம் போடவும் எல்லாத்தையும் சொன்னேன்.. அதை கேட்டு அவங்க பங்குக்கு சேர்த்து அடி வெளுத்தாங்க.. அவங்களே இனி பார்த்துப்பாங்கன்னு அப்புறம் நான் வந்துட்டேன் டா.." என்று கூறினான்.


"நல்லா அடி வாங்கட்டும்.." என்று கருவினாள். "சரிடா வரியா வயலுக்குப் போயிட்டு வரலாம்.." என்றதும் "ஓ... போலாமே" என்று கூறியதும் இருவரும் வண்டியில் கிளம்பினர்.


வண்டியை மரநிழலில் நிறுத்தியவன் அவள் இறங்கியதும் அவள் பார்வை சென்ற இடத்தைக் கண்டு "குட்டிமா.." என்று அதட்டிக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கினான்.


"மாமா ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள் "முடியாது" என்று தலையை ஆட்டினான். "அப்போ நீயாவது பிச்சுக்குடு" என்றதும் சற்று தொலைவில் இருந்து புளிய மரத்தில் இருந்த புளியங்காயைத்தான் கேட்டுக்கொண்டிருந்தாள்.


புளியங்காய் நல்ல புளிப்புடன் இருப்பதை அவள் விரும்பி சாப்பிடுவாள். சில நேரம் அருளிடம் கூறி பறித்துத் தரச் சொல்வாள். பல நேரம் தானே அந்த மரத்தில் ஏறி பறித்துச் சாப்பிடுவாள்.


"மாமா.. நீ பறிச்சுக் குடுக்கலைன்னா நானே மரத்துல ஏறி பறிப்பேன்.." என்றதும் "இரு இரு நானே பறிச்சுத் தரேன்.." என்று பறித்துக் கொடுத்தான்.


அவள் மரத்தில் ஏறி தவறி விழுந்து விட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு ரொம்பவே பயம்…எப்பொழுதும் சொல்வான் ஏறாதே என்று அவனிடம் நல்லா மண்டையை ஆட்டிவிட்டு யாரும் இல்லாத நேரம் மரத்தில் ஏறி பறித்துச் சாப்பிடுவாள்.


அன்று ஒரு நாள் அப்படிதான் யாரும் இல்லை என்று ஏறி பறித்தவள் கீழே இறங்கும் பொழுது கால் ஒழுங்காக வைக்காமல் வழுக்கி விட்டதும் கிளையைப் பிடித்துக் கொண்டாள்.அப்பொழுது அருள் வந்ததால் தப்பித்தாள்.அவளைக் கீழே இறக்கி விட்டு "நீ ஏறினா நான் உங்கிட்ட பேசவே மாட்டேன் குட்டிமா.." என்றதும்தான் கொஞ்சம் அடங்கினாள்.


அவன் பறித்துத் தந்த புளியங்காயை ரசித்து உண்டவள் தன் மாமனைப் பார்த்தாள். அவனோ அங்கு அருகில் இருந்த கிணறு அருகே சென்று கொண்டிருந்தான். "மாமா குளிக்கப்போறியா..?" என்று இங்கிருந்து கத்திக் கேட்டாள்.


"ஆமாம்.." என்று பொத்தென்று கிணற்றில் குதித்தான். அவன் குதித்ததும் ஓடி வந்தவள் "மாமா.." என்று மேலிருந்து கத்தினாள். "நான் வரவா..?" என்று கேட்டதும் "ம்ம்.. ஆனால் படி வழியா இறங்க கூடாது.. குதி.." என்றதும் சற்றும் யோசிக்காமல் குதித்துவிட்டாள்.


உடனே பயந்தவன் "அரசி" என்று குதித்த வேகத்தில் உள்ளே சென்று மேலே வந்து திரும்ப மூழ்க போனவளைப் பிடித்து இழுத்துத் தூக்கி அங்கிருந்த படியில் அவளை அமர வைத்தான்.


இறுமியவள் தன் எதிரில் இருந்தவனைப் பார்த்துப் "பயந்துட்டியா மாமா..?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். 


"ஏன் டா இப்படி பண்ணின உனக்கு நீச்சல் தெரியாதுல்ல.. அப்புறம் ஏன்டா குதிச்ச..?"என்று கேட்டான்.


"நீ என்னைவிட மாட்டேன்னு எனக்கு தெரியும் மாமா அதான் குதிச்சேன்.. நான் நினைச்சது போலவே நீ என்னை இழுத்துக்கிட்டு வந்துட்ட.." என்று கூறினாள்.


அவளை அப்படியே அணைத்துக் கொண்டவன் "நான் ரொம்ப பயந்துட்டேன்டா குட்டிமா.. இனி இப்படி எல்லாம் பண்ணாதே.."என்று கூறினான்.


அவள் தலையாட்டவும் "இதுக்குத்தான் உன்னை நீச்சல் கத்துக்க சொன்னா கேட்கவே மாட்டுற.." என்று ஆதங்கப்பட்டான்.


"எனக்கு அதிகமா தண்ணீர் இருந்தா பயமா இருக்கு மாமா.. அதான் நீச்சல் கத்துக்கலை சரி நீ குளிச்சிட்டு வா.. நான் மேலே போய் காத்தாட நிக்கிறேன்.. குளிருது.." என்று பற்கள் தந்தியடிக்கக் கூறினாள். "சரிடா பாத்துப்போ.. பாசி வழுக்கப் போகுது.." என்று எச்சரித்து அவள் மேலே ஏறியதும் தான் அவன் குளிக்க சென்றான்.


அவள் வெளியே காற்றாட நிற்கவும் சிறிது நேரத்தில் அருள் மேலே வந்தான். அப்பொழுது அந்த பக்கமாக மணிமேகலை வரவும் மங்கையிடம் வம்பிழுத்தார்.


"என்னடி உன் புருஷன் குளிக்கிறதுக்கு நீ காவல் இருக்கியா..?" என்று கேட்டதும் "நான் என் புருஷனுக்கு காவல் இருக்கேன்.. உனக்கென்ன பொறாமை கிழவி.." என்று கேட்டதும் "அடியாத்தி..! எனக்கெதுக்குடி பொறாமை நீ காவல் இரு.. இல்லை காலாட்டிட்டு இரு எனக்கென்ன..?" என்று அவர் வேலையைப் பார்க்க சென்றார்.


என்றும் இவ்வாறு பேசினால் கோபப்படும் அருள் எதும் பேசாமல் சென்று பைக்கில் ஏறினான்.அவன் ஏறவும் மங்கையும் வந்து பின்னால் அமர்ந்து "என்ன மாமா எதும் பேசாம வர..? நான் குதிச்சதையே யோசிச்சிட்டு இருக்கியா..?" என்றதும் "ம்ம்" என்றான்.


"மாமா நீ உள்ள இருக்கேன்னு தான் குதிச்சேன்.. ஒன்னும் இல்லை மாமா.. நான் உன்கூட தானே இருக்கேன்.." என்று அவன் தோளை அழுத்தினாள்.


அப்பொழுதே அவன் தன் மனதை சிறிது ஆராய்ந்திருந்தாள் பின்னாளில் வரும் பிரச்சனைகளைத் தடுத்திருக்கலாமோ…


மங்கை கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போது அவள் கல்லூரியில் படிக்கும் அவளது சீனியர் வினித் அவள் வீட்டிற்கு தன் பெற்றோர்களுடன் வந்து அவளைப் பெண் கேட்க படிப்பு முடிக்க இன்னும் மூன்று மாதம் தானே இருக்கு படிப்பை முடிக்கட்டும் என்று மங்கையின் பெற்றோர் கூறினார்.


அதற்கு வினித்தின் பெற்றோர் அதுக்கென்னங்க இன்னும் மூன்று மாதம் தானே எங்க பையனும் படிப்பை முடிச்சிடுவான் மூன்று மாதம் கழித்துக் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூற சரிங்க என் தம்பிக்கிட்ட கேட்டுட்டு சொல்றோம் என்று சீதா முடித்துக் கொண்டார்.


இவர்கள் வந்தது.. தன்னைப் பெண் கேட்டது.. எதுவும் தெரியாத மங்கை கல்லூரி விட்டு வந்ததும் ம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று கிளம்பியவளை தடுத்து நிறுத்திய சீதா ஏய் வரும் போது மாமன கூட்டிட்டு வா கொஞ்சம் பேசனும் என்று கூற என்ன பேச போற என்கிட்ட சொல்லு நானே மாமாகிட்ட சொல்லிடுறேன் என்று கூறினாள்…


அதெல்லாம் நானே அவன்கிட்ட பேசிக்கிறேன்.. போடி போய் சொன்னதை செய் என்று அவளை அனுப்பி வைத்தார்..


அருள் வீட்டுக்கு வந்தவள் அப்பொழுது தான் வயலில் இருந்து வந்தவன் குளிக்க செல்ல அவனிடம் மாமா அம்மா உன்கிட்ட ஏதோ பேசனுமாம் உன்னை கூப்பிட்டு வர சொன்னுச்சு என்று கூறவும் தோ வரேன் டா கொஞ்சம் நேரம் குளிச்சுட்டு வரேன் என்று பின்கட்டுக்கு சென்றான்…


எதுக்கு மங்கை அம்மா வர சொன்னாள் எதாவது விசேஷமா என்று கேட்க என்ன விசேஷம் அம்மாச்சி பொங்கலுக்கு கூட நாலு மாசம் இருக்கே இப்போ என்ன விசேஷம்.. நான் கேட்டா உன் பிள்ளை அப்படியே சொல்லிட்டு தான் மறுவேலை பார்க்கும் பாரு புள்ளையா பெத்து வச்சுருக்க.. நான் என்னனு கேட்டா எதுவுமே சொல்ல மாட்டாங்க என்று அலமேலுவிடம் தன் தாயை பற்றி போட்டுக் கொடுத்தாள்…


அருள் வந்ததும் இருவரும் கிளம்ப நான் முன்னாடி போறேன் நீங்க வண்டியில் வாங்க என்று விட்டு அலமேலு முன் சென்றார். இந்த அம்மாச்சி எதுக்கு மாமா இவ்வளவு வேகமா போகுது என்று தன் மாமனிடம் வினவ தெரியலையே என்று தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


அவளை ஏறி அமர சொல்லி விட்டு வண்டியை எடுத்தவன் நேராக அவ்வூரிலேயே உள்ள பொட்டிக் கடைக்கு சென்றான். கடைக்கு அருகில் வந்ததும் நிறுத்த உடனே வண்டியை விட்டு இறங்கியவள் குடுகுடுவென ஓடி கடைக்காரரிடம் கையை நீட்டினாள்.


அவரும் சிரித்துக் கொண்டே தேன் மிட்டாயை எடுத்து அவளிடம் கொடுக்க தன் மாமனை திரும்பிப் பார்த்தாள்.. அதற்கு அந்தக் கடைக்காரர் பொண்ணு உன் மாமன் முன்னாடியே காசெல்லாம் கொடுத்துட்டான் வாங்கிட்டுப் போ என்கவும் அவரிடம் வாங்கிக் கொண்டு வந்து வண்டியில் ஏற அருள் வண்டியைக் கிளப்பினான்.


பின்பு இருவரும் மங்கை வீட்டிற்கு வர சீதாவும் அலமேலுவும் பேசிக் கொண்டிருந்தனர்.. ஆறுமுகம் அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்தார்.. வா மாப்பிள்ளை வந்து உட்கார் என்கவும் வந்து அமர்ந்தவன் என்னக்கா பேசனும் எதாவது பிரச்சனையா என்று கேட்டான்.


சீதா உடனே மங்கையைப் பார்த்து ஏய் உள்ளே போடி பெரியவங்க ஏதாவது பேசுவோம் உனக்கிங்க என்ன வேலை என்று அதட்டவும் ஏன் நான் போகணும் நானும் இங்க தான் இருப்பேன் நானும் பெரிய பொண்ணு தான் என்று சட்டமாகத் தன் மாமன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்..


அவள் இருக்கட்டுமே க்கா நீ சொல்லு என்ன விஷயமென்று கேட்கவும் எல்லாம மங்கையோட கல்யாணம் விஷயம் தான் என்கவும் ஹே கல்யாணமா எனக்கா சூப்பர் சூப்பர் அப்பாடா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க உன் தொல்லை இல்லாம ஜாலியா இருப்பேன் என்று குதூகலத்துடன் தன் அறைக்கு ஓடினாள்.


அவள் அறைக்கு சென்றதும் சீதா இன்னும் விளையாட்டுத்தனம் குறையாமல் அப்படியே இருக்கா இவளைக் கட்டிக்கப் போறவன்தான் பாவம் என்று புலம்பினார்.. என்னப் பிள்ளை வளர்த்து வச்சுருக்கன்னு கட்டையை எடுத்து அடிக்க வராம இருந்தா சரி.. யாருக்கா மாப்பிள்ளை என்று அருள் கேட்கவும் மாப்பிள்ளை அது யாரோ மங்கை காலேஜ்ஜில் படிக்கிற பையனாம் என்று அவர்கள் வந்து பேசியதைக் கூறினார்.


படிக்கிற பையனுக்கு எப்படி மாமா கட்டிக்கொடுக்குறது என்று கேட்கவும் நானும் அது தான் மாப்பிள்ளை யோசிச்சேன் இன்னும் மூணு மாசத்துல அந்த பையனுக்கு படிப்பு முடிஞ்சிடுமாம் சொந்தமா கம்பெனி வச்சு நடத்தப் போறானாம் அது மட்டுமில்லாம இன்னும் மூணு மாசத்துல நம்ம மங்கைக்கும் படிப்பு முடிஞ்சிடும் என்று கூறினார்.


பையன் எப்படின்னு விசாரிக்கனும் அவங்க வீட்டை பற்றி அவங்க ஆளுங்க எப்படின்னு எல்லாம் விசாரிக்கனும் மாமா இன்னும் நிறைய வேலை இருக்கு என்று தன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனவனை தடுத்து நிறுத்தியவர் நீ ஏன் மங்கையைக் கட்டிக்கக் கூடாது மாப்பிள்ளை என்று கேட்க எங்களுக்கும் இதில் சம்மதம் என்பது போல் சீதாவும் அலமேலுவும் அமைதியாக அருளின் பதிலுக்காக அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவர் சட்டென்று இப்படி கேட்கவும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவன் மாமா என்று தயங்கினான்.


எப்படி பேச்சு வரும் இவன் எங்கே மங்கை எங்கே ஏணி வைத்தாலும் எட்டாதே அது மட்டுமில்லாமல் அவள் படித்திருக்கிறாள் வயது வேறு கம்மி என்று அத்தனையும் போட்டுக் குழப்பிக் கொண்டவன் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் நான் எப்படி மாமா மங்கையைக் கல்யாணம் பண்ணிக்க முடியும் அவள் நான் வளர்த்த பொண்ணு அவளைப் போய் எப்படி என்று மென்று முழுங்க என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் உன் அக்காவும் எந்த ஒரு கவலையும் இல்லாம சந்தோஷமா இருப்போம்.. ஒரே பொண்ணு பக்கத்துலயே இருப்பா இதே தெரியாத வேற பையனா இருந்தா எப்போ என்ன ஆகுமென்று வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கனும் என்று தன் மனதிலிருந்ததை ஆறுமுகம் வெளியடையாகவே அருளிடம் கூறினார்.


இவன் அனைத்தையும் கேட்டு விட்டு திரும்பவும் ஆரம்பப் புள்ளியில் இருந்து தொடங்கினான். இது எனக்கு சரியாப் படலை மாமா மங்கை படிச்சிருக்கு நான் படிக்கலை மங்கை மனசுல என்னென்ன நினைச்சிருக்கோ அவளுக்கும் ஆசை இருக்கும் ல மாமா அவளோட புருஷன் இவ்ளோ படிச்சிருக்கனும் நல்ல வேலைக்குப் போகணும் இப்படி நிறைய ஆசைகள் இருக்கும் ல நான் கடைசி வரைக்கும் விவசாயம் வீடுன்னு இங்கையே இருப்பேன் எதுக்கு என் கூட இருந்து கஷ்டப்படனும் அவள் மகாராணி போல வாழனும் என்று கூறியவன் நான் போய் அந்தப் பையனை பற்றியும் அவங்க வீட்டைப் பற்றியும் விசாரிக்கிறேன்.


நீங்க மங்கை கிட்ட கேட்டுக்கோங்க அவளுக்கு விருப்பமான்னு அவளை கேட்காம எதும் செய்யாதீங்க என்று கூறியவன் தன் வீட்டிற்குச் சென்றான். அவன் சென்றதும் அலமேலுவிடம் ஆறுமுகம் என்ன அத்தை இவன் இப்படி சொல்லிட்டுப் போறான்.மங்கைக்கு ஒன்னுன்னா அப்படி பதறுவான் ஒரு நாள் கூட வந்து பார்க்காம இருக்க மாட்டான்..


நம்ம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ என்று யோசனையுடன் கூற அதான் தம்பி எனக்கும் தெரியல இவளுக்கு ஒன்னுன்னா வானத்துக்கும் பூமிக்கும் அப்படியே குதிப்பான் அவளை ஒன்னு சொல்லக்கூடாதுன்னு கோழி மாதிரி அடைக்காத்துட்டு இப்போ ஒன்னுமில்லைன்னுட்டுப் போறான் என்று அவர் பங்குக்குக் கூறினார்.


(டேய் அருளு உன்னை உங்கம்மா கோழின்னு சொல்றாங்க பா அதுவும் மங்கையைப் பொத்தி வச்சு அடக்காக்குரியாம் ஹா ஹா)


சரி தம்பி நீங்க அவக்கிட்டக் கேட்டுக்கிட்டு எதா இருந்தாலும் முடிவுப் பண்ணுங்க இல்லன்னா இங்க அமுக்குனி மாதிரி இருந்துட்டு அவன்கிட்ட நம்மளை போட்டுக் கொடுப்பா ஹிம்ம் இவன் சரின்னு சொல்லிருந்தா ரெண்டுத்துக்கும் கல்யாணம் பண்ணியிருந்துருக்கலாம் இனிப் பொண்ணு வேற இவனுக்கும் பார்க்கனும் மணிமேகலையோட பொண்ணத்தான் பார்க்கனும் என்று கூற யாரு அந்த மல்லிகா பிள்ளையாம்மா என்று சீதா கேட்க ஹிம்ம் ஆமாம் அவளை தான் பார்க்கணும் என்று விட்டு அவரும் கிளம்பினார்.


சீதா அவர் சென்றதும் என்னங்க ரெண்டுமே பிடிக்கொடுக்காம பேசுதுங்க என்னப் பண்றது இப்போ என்று புலம்ப எது நடக்கனுமோ அது தான் சீதா நடக்கும் விடு என்ன நடந்தாலும் நன்மைக்கே பார்த்துக்கலாம் விடு என்று சமாதானம் செய்தவர் சரி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று விட்டுக் கிளம்பினார்.



No comments