மோகமுள் -46
மோகமுள் - 46:
ம்மா என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா ம்மா என்று ஆசி சுமதியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க நோ மீன்ஸ் நோ தான்டா என்கவும் ம்மா அதை சொல்ல வேண்டியவ சொல்லட்டும் நீ சொல்லாத.. என்னம்மா இப்படி கெஞ்ச வைக்கிற என்று சலித்துக் கொண்டவன் கன்னி டையன் சாபம் உன்னை சும்மா விடாதும்மா என்றான்.
நிருவோ என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திருவென விழித்தபடி இருந்தாள்.
மித்ரா நிரஞ்சனிடம் எங்க அண்ணா அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்களா என்று கேட்க
ஆமாம்மா இங்க தான் ஆசியே நிருக்கு எல்லாம் அவனே பார்த்துக்குறான் அதுமட்டுமில்லாம அப்பாவுக்கு கொஞ்சம் மீட்டிங்ஸ் இருக்கு அதான் அப்பாவும் அம்மாவும் கிளம்பிட்டாங்க.. ஒரு ஆறு மணி போலத்தான் ஏர்போர்ட் போய் விட்டுட்டு வந்தேன் என்று கூறினான்.
இவர்களிடம் நெருங்கிய ஆதி, சரி மித்து நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம் என்று கூறியவன் ஆசியையும் நிரஞ்சனையும் பார்த்து கண்களால் சைகை செய்ய சுமதி அதனை கண்டவர் ஆதி கண்ணா எங்கப்பா இந்த நேரத்துல என்று வினவினார்.
ம்மா ஒரு வேலையா போறோம் என்று அத்தோடு முடித்துக் கொண்டான்..
வன்முறை எதுவும் வேண்டாம் கண்ணா அப்பறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் என்கவும் ஐயோ அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தி மூவரும் வெளியில் சென்றனர்.
டெண்டர் தனக்கு கிடைத்த சந்தோஷத்தில் பட்ட பகலிலேயே பப்பில் காஸ்ட்லி சரக்கை வயிறு முழுக்க குடித்துவிட்டு கிடந்தவனை இருவர் வந்து அவன் வண்டியிலேயே தூக்கிப் போட்டு சென்றது கூட அவனுக்கு தெரியவில்லை.
இங்கு தங்கள் பழைய குடோனிற்கு வந்த மூவரும் போதையில் தலை தொங்கி போய் கிடந்தவனைப் பார்த்து ஆத்திரம் மேலோங்க அவனை நெருங்கினர்.
அங்கிருந்த குழாயை திறந்து விட்டு தண்ணீரை அவன் மீது பீச்சி அடித்து போதை தெளிய வைத்தனர் பின்னர் அவனை நெருங்கிய ஆதி ஏன்டா இப்படி பண்ண என்னோட வாழ்க்கையே அழிக்க பார்த்தியே உனக்கு தொழில்ல ஜெயிக்கனும்னா இதுதான் உனக்கு வழியா இப்படித்தான் உன்னை வளர்த்தாங்களா.. உங்க அப்பாவுக்கு எப்படி தான் இப்படி ஒரு பிள்ளை ச்சே என்று அவனை அடி பின்னி எடுத்து விட்டான்.
போதையில் இருந்தவனுக்கோ எதுவுமே உரைக்கவில்லை..
டேய் ஏன்டா என்னை அடிக்கிற ஆமாண்டா அப்படிதாண்டா பண்ணுவேன் நீ இருக்கக் கூடாது நீ இருந்தா எனக்கு நிம்மதியே இல்ல என் அப்பன் என்னன்னா எப்ப பார்த்தாலும் ஆதி இப்படி பண்றான் அப்படி பண்றான் அவனை மாதிரி ஒரு பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்று உன்னை பற்றியே எப்போதும் பேசினா அப்ப நான் என்ன சொம்பையா
ஏன் நான் எதுவுமே பண்ணலையா.. நான் எது பண்ணினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறாரு இதுக்கெல்லாம் காரணம் யாரு நீ.. நீ மட்டும் தான் அதனால தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணுனேன் என்னால தாங்க முடியல என்ன நெனச்சிட்டு இருக்கான் அந்த ஆளு அவன் பாட்டுக்கு பெத்த புள்ளைன்னு கூட பார்க்காம எப்ப பாத்தாலும் மட்டம் தட்டிக்கிட்டே இருந்தா நான் என்ன பண்ணுவேன் இப்படித்தான் பண்ணுவேன் என்று அவன் போதையில் உளறிக் கொண்டிருக்க
நீ பழி வாங்க நாங்கதான் கிடைச்சோமா நீ என்ன பெரிய புடுங்கியா எங்க அண்ணன என்ன வேணாலும் பண்ணுவியா என்று எட்டி உதைத்தான் ஆசி
நாற்காலியோடு கீழே விழுந்தவனை நோக்கி வந்தவன் உனக்கு பூ எப்படி இருக்கும் தெரியுமாடா அந்த மாதிரி என் நிரஞ்சனா மென்மையானவடா அவளை எப்படிடா இப்படி பண்ண தோணுச்சு அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா உன்னை உருத்தெரியாம அழிச்சிருப்பேன்டா என்று அவனை போட்டு உதைத்தவன் அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் என்னடா பண்ணி இருப்பேன் எல்லாம் உன்னால அவ அனுபவச்ச வேதனையும் வலியும் நீயும் அனுபவிக்கணும் உன்னை சும்மா விடமாட்டேன் டா என்று அவனை நைய புடை தடுத்து விட்டான்.
நிரஞ்சன் வெளியே எங்கேயோ சென்று வந்தவன் இருவரையும் நெருங்கியவன் டேய் டேய் விடுங்கடா செத்து தொலைய போறான் விடுங்கடா போதும் வாங்க நம்ம கிளம்பலாம் என்று அவன் கைகட்டுகளை அவிழ்த்து விட்டவன் தங்கள் வந்தது போலவே வீட்டிற்கு திரும்பி விட்டிருந்தனர்.
இங்கு வீட்டிற்கு வந்ததும் அசப்பு தெரியாமல் அவரவர் அறையில் சென்று முடங்கிக் கொண்டனர்.
ஆசி வரும் வரை தூங்காது இருந்த நிரஞ்சனா அவன் வந்ததும் எங்க மாமா போன என்று கேட்க சும்மா வெளியே ஒரு வேலையா போனேன் என்று கூறினான் பட்டும் படாமல்.
அவனை சும்மா விட்டுவிட்டு வந்தது இன்னும் அவனுக்கு மனக்கொதிப்பு அடங்கவில்லை..
அவனை இழுத்து தன் பக்கத்தில் படுக்க போட பார்க்க இருடி குளிச்சிட்டு வரேன் தூங்கு என்று விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
பின்பு அவன் வரும் வரை தூங்காது காத்திருந்தவள் உண்மைய சொல்லு எங்க போயிட்டு வந்த அவனை போட்டு தள்ளிட்டீங்களா என்று கேட்க ச்சீ அப்படி செஞ்சா அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அதனால எதுவும் பண்ணல சும்மா நாலு தட்டு தட்டினோம் அவ்வளவுதான் எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு கொலை பண்ற வெறியே வருது என்ன பண்றது என்னால ஒன்னும் பண்ண முடியல என்று தலைக்கு கை கொடுத்தவாறு மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்தான்.
அவனை நெருங்கி அணைத்து கொண்டவள் அவன் நெஞ்சில் தலை வைத்து ஓகே கூல் மாம்ஸ் தூங்கு எல்லாம் சரியா போயிடும் மாமா அப்புறம் பேசிக்கலாம் என்று அவனை மெதுவாக தட்டிக் கொடுக்க கட்டு போட்டிருந்த அவள் தலையை வருடி கொடுத்தவன் மாத்திரை போட்டியா இல்லை ஏமாத்திட்டியா என்னை தூங்க வைக்கிறது பார்த்தால் நீ மாத்திரை போடவில்லை போலையே என்று சந்தேகமாக அவளை பார்க்க ஐயா சாமி போட்டுட்டேன் ஏன் தான் இப்படி பண்றியோ நான் மாத்திரை எல்லாம் போட்டுட்டேன் நீ தூங்கு என்று தட்டிக் கொடுக்க அவனும் நிம்மதியாக நித்திரைக்கு சென்றான்.
இங்கு ஆதி அறையில் என்ன அத்தான் ஆச்சு என்ன ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்கவும் எனக்கென்ன நாளெல்லாம் நல்லா தான் இருக்கேன் நீ இன்னும் தூங்கலையா எவ்வளவு நேரம் ஆகுது மணி என்னன்னு பாருடி ஒரு மணி ஆகுது இன்னும் தூங்காம என்னடி பண்ற தூங்காம இருந்தா குழந்தைக்கு ஆகாது தெரியுமா? என்ன நினைச்சிக்கிட்டு இப்படியெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க எனக்கு ஒன்னும் புரியலையே என்றபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் வந்ததும் நீங்க சொல்லுங்க முதல்ல நான் அப்புறம் தூங்குறேன் எனக்கு எப்படி அத்தான் தூக்கம் வரும் எனக்கு எவ்வளவு கியூரியாசிட்டியா இருக்கு அவனை என்ன பண்ணிங்க போட்டுத் தள்ளிட்டிங்களா என்று கேட்க அவனை ஒன்னும் பண்ணல எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு கிழிச்சு தொங்க போட்டு இருந்திருக்கணும்.. அவனால எவ்ளோ மன உளைச்சலுக்கு ஆளானேன் தெரியுமா.. நானும் கஷ்டப்பட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி எவ்ளோ வேதனை அனுபவிச்சேன் தெரியுமா டி .
இப்படி உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு சும்மா இருக்குறதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா டி .. அதெல்லாம் சொன்னா புரியாது டி அந்த வேதனை இருக்கே சப்பா இப்போ நான் சந்தோஷமா இருக்கேன்.
அப்போ அவனை ஒன்னும் பண்ணலையா நீங்க என்று கோபமாக கேட்க
அவனை என்ன பண்றது சும்மா ரெண்டு அடி போட்டுட்டு வந்துட்டோம் என்று மெத்தையில் படுத்து கொண்டான்.
என்னதான் என் பேரை சொல்லி ஒரு 4 அடி போட வேண்டியது தானே.. அவன் என்ன சொன்னான் தெரியுமா என்று ஏதோ கூற வந்தவள் பட்டென்று நாக்கை கடித்து கொண்டு கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.
என்ன சொன்னான்.. எதுவும் மறைக்கிறியா என்கிட்ட சொல்லு டி என்று அழுத்தமாக கேட்க அவன் என்கிட்ட என்னோட ரூம் ஃபிரியா தான் இருக்கு வரியான்னு கேட்டான் அத்தான் என்று சொல்லவுமே பட்டென்று மெத்தையிலிருந்து எழ ஐயோ அத்தான் இப்போ எங்க போறீங்க என்று இழுத்து அமுக்கி படுக்க வைத்தவன் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டு அத்தான் விடுங்க போயிட்டுப் போறான்..
ப்ளீஸ் அத்தான் அதான் அடிச்சிட்டு வந்துட்டீங்களே அதுவே போதும் அத்தான் விடுங்க என்றவள் அவனை இன்னும் ஒட்டிப் படுத்துக் கொண்டு அவன் தாடையில் முத்தம் பதிக்க ஏய் எனக்கு நல்லா தெரியுது எதுக்கு இப்படி பண்றன்னு படுத்து தூங்குற வேலையை பாரு ஏற்கனவே ஒரு மணி ஆயிட்டு நீ தூங்கவே இல்ல தூங்கு என்று அவளை தட்டி கொடுக்க என்ன அத்தான் இப்படி பண்றீங்க ஒரு வார கணக்கு இன்னும் அப்படியே தான் இருக்கு இன்னும் அது சரியா ஆகலையே..
நீங்க தானே ஒரு வார கணக்கு முதல்ல நேர் பண்ண சொன்னீங்க வாங்க அந்த கணக்கு அப்படியே தான் இருக்கு என்று அவனை கிட்னி பிடுங்க கூப்பிட இன்னும் பத்து மாசத்துக்கு ஒன்னும் தேவையில்லை என்று திரும்பி படுத்து கொண்டான்.
என்னாது என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள் என்ன அத்தான் விளையாடுறீங்களா? சும்மா ரொம்ப ஓவரா பண்றீங்க அத்தான் என்று வெகுவாக சலித்துக் கொண்டாள்.
வந்த சிரிப்பை உதட்டை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டவன் ஆமாம் மித்ரா என்ன ஒரு பத்து மாசம் தானே அதெல்லாம் பரவாயில்லை தூங்கு தூங்கு நாளைல இருந்து உன்னை நல்லபடியா பார்த்துக்கணும் பேபி வேற இன்னும் பத்து மாசத்துல வந்துடுவாங்க..
அதுக்கப்புறம் என்ன பேரு வைக்கலாம் எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம் எல்லாம் யோசிக்கணும் அதுக்கே இந்த பத்து மாசம் சரியா போயிடும் அதுல எங்க இருந்து இதெல்லாம் நம்ம பார்க்கிறது என்று ஒன்றும் தெரியாதது போல வாயை விட்டான்.
அத்தான் இதெல்லாம் போங்கு தெரியுமா நேற்று ஒரு வார கணக்கு நேர் பண்ணுடி நேர் பண்ணுடின்னு அத்தனை வேலை பண்ணிட்டு இப்ப ஒண்ணுமே தெரியாதது போல பத்து மாசத்துக்கு நீங்க சும்மாவா இருப்பீங்க என்று கேட்க ஆமா நானெல்லாம் எவ்வளவு கண்ட்ரோலா இருக்கேன் தெரியுமா என்று அவன் தன் சட்டைக்காலரை ஏற்றிவிட்டு கொள்ள இரு இரு நீ எப்படி கண்ட்ரோலா இருக்க என்று உள்ளுக்குள் நினைத்தவளுக்கு தன் தலையில் சிகப்பு கலரில் இரண்டு கொம்பு முளைத்தது போல் தன்னையே நினைத்துக் கொண்டவள் அவன் மேல் பாய்ந்து பிராண்டி வைத்தாள்..
அவள் செயலில் அதிர்ந்தவன் ஐயயோ என்னடி பண்ற பாப்பா இருக்குடி என்று பதற அதெல்லாம் ஒன்னும் ஆகாது ரொம்ப பண்றீங்க ஆனா பத்து மாசம் எப்படித்தான் ஓட்டப் போறேன்னு தெரியல உங்ககிட்ட நான் படாதப்பாடு பட போறேன் போச்சு என்று பொய்யாக வருத்தப்பட அவளை தன் கைகளால் சிறை பிடித்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் அனைவரும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்பொழுது தொலைக்காட்சியில் ராகவன் இண்டஸ்ட்ரிசின் உரிமையாளர் ராகவனின் மகனான ரகுவீர் நேற்று இரவு ஈசிஆர் ரோட்டில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி சென்றதில் அந்த கார் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து கொள்ளானது..
அதில் படுகாயம் அடைந்த ரகுவீர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்துக் கொண்டிருக்க இங்கு அனைவரும் மூவரையும் என்னவென்று பார்த்தனர்.
மூவரும் ஒரு சேர நாங்களாம் எதுவும் பண்ணல அவன் குடிபோதையில் போய் விழுந்ததற்கு நாங்க என்ன பண்ணுவோம் நாங்க ஒரு நாலு தட்டு தட்டிட்டு வந்துட்டோம் அவ்வளவுதான் அதுக்கு மேல என்ன நடந்தது எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று கூறியவர்கள் ஒருவருக்கொருவர் அர்த்தமாக பார்த்துக் கொண்டனர்.
***
இரண்டு மாதங்கள் கழித்து
இப்பொழுது நிருவிற்கு தலையில் உள்ள காயங்கள் முழுவதுமாக குணமடைந்து லேசாக முடி வளர்ந்து இருந்தது..
தன் தலையை தடவியப் படியே கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவன் அவள் பின்னோடு கட்டிக்கொண்டு அவள் தோள் வளைவில் முகத்தைக் குற்றி தானும் கண்ணாடியை நோக்கியவன் என்னடி அப்படி பாத்துட்டு இருக்கே என்று கேட்டான் ஆசி..
நான் இப்படி பார்க்க நல்லாவே இல்ல தான மாமா அதான் இப்படி இருக்கியா என்று முக வாட்டத்துடன் கேட்க என் நிரு பாப்பா எவ்வளவு அழகு தெரியுமா அப்சரஸோட அத்தை பொண்ணு டி இந்த மேனகை ரம்பை ஊர்வசி இவங்கலாம் உன்கிட்டவே நிற்க முடியாது தெரியுமா என் நிரு அவ்ளோ அழகு என்றவாரு லேசாக முடி வளர்ந்திருந்த தலையில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
அதனை அவள் உணராமல் இல்ல மாமா நான் அழகா இல்லை என்று முகத்தை சுருக்க என்னடி இப்படி பண்ற இப்போ என்ன ஆச்சு என்று அவன் கேட்க இல்ல நீ பாரு எனக்கு உடம்பு சரியாகி நான் நல்லா தான் இருக்கேன் ஆனா இப்பவும் நீ என்கிட்ட வர மாட்டேங்குற அப்போ என்னை உனக்கு பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம் என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க
ஏய் நிரு பாப்பா அப்படியெல்லாம் எதுவும் இல்லடி ஏண்டி இப்படி பண்ற நான் நார்மலா தாண்டி இருக்கேன் நீ நினைக்கிற மாதிரி எதுவுமே கிடையாது உனக்கு உடம்பு நல்லா தேரட்டும் நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும் அதுவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல உனக்கு சந்தேகமே வேண்டாம் திரும்ப திரும்ப இந்த கேள்வியை கேட்டு என்னை சங்கடப்படுத்தாத ப்ளீஸ் நீ இப்படி கேக்கறத பார்த்தா என்னோட லவ்ல சந்தேகப்படுற மாதிரியே இருக்கு என்று முடித்துக் கொள்ள
இல்ல மாமா அது எப்படி இவ்வளவு நாள் நம்ம ஒண்ணா தான் இருக்கோம் எனக்கு உடம்பு சரியாயிடுச்சு என்று மீண்டும் அதே பல்லவியை ஆரம்பிக்க
அடியேய் இது தாண்டி சும்மா போற ஓணானை தானே வேட்டியில் எடுத்து விட்ட கதையாக தான் இருக்கு உன் கதை..
நானும் எவ்வளவு நாள்தான் கண்ட்ரோலா இருக்கிறது என்று அவளை தன் பக்கம் திருப்பியவன் என்ன பஸ்ட் டே கொண்டாடலாமா என்று அவளை அதிரடியாக ஆக்கிரமிக்க அவன் செயலில் அதிர்ந்த பார்வையுடன் அவனை நோக்க அவளை அப்படியே தன் கையில் ஏந்தி கொண்டவன் அவள் பார்வையைக் கண்டு என்ன நீ தானடி கேட்ட பர்மிஷன் கிராண்டெட் அதுக்கப்புறம் நான் ஏன் வெயிட் பண்ணனும் என்று அவளை ஆக்டோபஸாக ஆக்கிரமித்துக் கொண்டான்.
நீ அழகா இல்லன்னு யாரு டி சொன்னா.. தினமும் உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு படுற பாடு இருக்கே அதை வார்த்தைகளால சொல்ல முடியாது செயலில் தான் காட்ட முடியும் காட்டட்டுமா?
எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்குன்னு காட்டட்டா? காட்டுனா நீ தாங்குவியா அதெல்லாம் நினைச்சு தாண்டி நானே தள்ளி இருந்தேன் என்று கிசுகிசுப்பாக கூறியபடியே அவள் இதழில் புதைந்து கவி பாடினான்..
அவன் முத்த கவியில் தன்னை மொத்தமாக அவனிடம் அர்பணிக்க முன் வந்தவள் அவன் தன் உடலில் செய்த மாயத்தில் மாமா என்று மயக்கமாக அழைத்தவள் அவன் முகம் முழுக்க முத்த மழை பொழிய அவள் செயலில் கிறங்கியவன் அவளை மெத்தையில் கிடத்தி அவள் இதழை வன்மையாக சிறைப்பிடித்தான்.
கண்களை இருக்கமாக மூடிக் கொண்டவளின் இமைகளில் முத்தம் பதித்து கண் திறக்க செய்தவன் அவளுடன் இரண்டறக் கலந்தான்.
மோகமுள் தீண்டும்..

Post a Comment