மோகமுள் -45
மோகமுள் - 45:
வாசு ஊருக்கு கிளம்பி கொண்டிருக்க நிரஞ்சன் அறைக்கு உள்ளே வந்தவன் ம்மா நீயும் அப்பா கூடவே கிளம்பு என்கவும் டேய் நிருவை பார்த்துக்கணும்டா எப்படி அவளை விட்டுட்டுப் போறது என்று கேட்க அதெல்லாம் ஆசி நல்லாவே பார்த்துக்கு நான் நீ இங்க இருந்து என்ன பண்ண போற? டிக்கெட் புக் பண்ணிட்டேன் என்றான்.
ஏங்க இதெல்லாம் என்னன்னு கேட்க மாட்டீங்களா? நிரு எப்படி தனியா சமாளிப்பா என்று ஆதங்கமாக கேட்க டிக்கெட் போட சொன்னதே நான் தான் நீ என் கூடவே கிளம்பு என்றார் அவரும்..
புள்ளை எப்படி தனியா பார்த்துப்பா என்றார் கவலையுடன்..
உனக்கு உன் பொண்ணுன்னா மட்டும் வலிக்குதுல்ல அதுப்போல தான் எல்லாருக்கும் இருக்கும் … உன்னை என்னை விட ஆசி நிருவை நல்லாவே பார்த்துக்குறான்.. அவளை விட்டு நகரவே மாட்டேங்குறான் அப்பறம் என்ன உனக்கு கவலை..
நீ இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் கிளம்பு முதல்ல.. ஆதி அந்த பொண்ணை கூட்டிட்டு வரத்தான் போயிருக்கான் எப்படியும் உன் வாய் சும்மா இருக்காது.. அந்த பொண்ண எதாவது நீ சொல்ல போய் உறவுக்குள்ள விரிசல் வரக்கூடாது.
நீ சொன்ன வார்த்தைக்கெல்லாம் ஆதி பொறுமையா போறான்னா உன் மேல உள்ள மரியாதையால பாசத்துல தான்.. உன்னை தூக்கி எரிந்து பேச அவனுக்கு ஒரு நொடி போதும்.. ஆனால் அவன் அதை பண்ணல.. உன் மரியாதையே நீயே கெடுத்துக்காத..
அதான் கிளம்பு.. நிரஞ்சனிடம் திரும்பியவர் நீ இங்க இருந்து பார்த்துக்கோ தம்பி.. ஏதாவதுன்னா உடனே கூப்பிடு என்றவர் உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன் டா.. நீ யாரையாவது லவ் எதும் பண்றியாப்பா என்று வினவ ப்பா இப்போ எதுக்கு அவசரமா எனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம் ப்பா என்று அவன் மறுக்க
இல்ல தம்பி இப்போ பார்க்க ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும் என்கவும் ஆமா ஆமா நல்லா பணக்கார பெண்ணா பார்க்கணும் என்றார் ஊர்மிளா வாயெல்லாம் பல்லாக.
எப்போ பார்த்தாலும் பணம் பணமுன்னு இருக்காத ஊர்மி.. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.. உனக்கு எத்தனை முறை சொன்னாலும் உரைக்க மாட்டேங்குது.. சொல்லி சொல்லி சலிச்சி போயிட்டேன்.. என் பிள்ளைக்கு புடிச்சா பொண்ணாதான் பார்ப்பேன் என்றவர் கிளம்பு என்று அவசரப் படுத்தினார்.
ஊர்மிளா புலம்பிக் கொண்டே மனதே இல்லாமல் கிளம்பினார்.
இங்கு ஆசி அறையில்..
நிரு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஏய் இப்போ எதுக்குடி சண்டைக்காய் போல முகம் சுண்டி இருக்கு என்றான் குரல் உயர்த்தி..
ஐயோ சார் உங்க முன்னாடி எப்படி இருக்கணும்னு ஒரு அட்டவணை போட்டுக் கொடுத்துடுங்க சார்.. அதுப்போலவே இருக்க பழகிக்கிறேன்.. என்று கூற
ஏய் உனக்கு என்னடி பிரச்சனை தலையில் அடிப்பட்டு எதும் மூளை குழம்பிருச்சா என்று அவள் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.
அவள் கையைத் தட்டி விட்டவள் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்துக் கொண்டாள்.
அவள் முதுகோடு கட்டி அணைத்தவன் பாப்பா என்னடி ஆச்சு? என் இப்படி பண்ற? எதும் வலிக்குதா ? டாக்டர்கிட்ட போகலாமா? என்று அவள் தோள் வளைவில் முகத்தை குத்த வைத்து கேட்க
சண்டை சமாதானம் ஆனப்போது நாம என்ன பேசிக்கிட்டோம் மாமா
என்ன பேசிக்கிட்டோம் என்றான் கேள்வியாக
ஒஹ் உனக்கு அதுவே நியாபகம் இல்லையா நீ என்கிட்ட செத்தடா இன்னைக்கு என்று தன் தோள்பட்டையில் இருந்த அவன் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தவள்
உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்ல என்றாள் மிரட்டலாக..
ஆமாம் பேசினோம் தான் அது எதுவும் மாறலையே என்றான் யோசனையாக.
அப்பறம் இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்ச.. எவ்ளோ நடந்துருக்கு பாவம் மித்ரா.. என்று வருத்தப்பட்டாள்.
பாப்பா எனக்கே அண்ணா காலையில தான் டி சொன்னாங்க.. இந்த ஒரு வாரமா உன்னை விட்டு நான் எங்கேயும் போகலை.. எனக்கு ஆக்சிடன்ட் ஆனதுல சந்தேகமா இருக்குன்னு மட்டும் தான் சொன்னேன்.
ஆனால் இவ்ளோ நடந்துருக்குன்னு இன்னைக்கு தான் தெரியும்..
அவன் எவ்ளோ வேலை பண்ணி வச்சிருக்கான் .. மனுஷனா அவன்? தொழில்ல ஜெயிக்கணும்னா இந்த மாதிரி குறுக்கு புத்தில தான் ஜெயிக்கணுமா? அண்ணனுக்கு ஆக்சிடண்ட் ஆனதுல இருந்து அண்ணியை மிரட்டி உன்னை ஆக்சிடண்ட் பண்ணி டெண்டர் அமௌண்ட் மாற்றி ச்சே அவனை எல்லாம் சும்மாவே விடக் கூடாது என்றான் கர்ஜினையாக..
சரி சரி மாமா கோபம் வேண்டாம் எதுக்கு அவன் கூட பிரச்சனை என்று கூற
அவனால எவ்ளோ பிரச்சனை தெரியுமா உன்னை இரத்த வெள்ளத்துல பார்த்தது இன்னும் என்னால மறக்க முடியல என்றான் அந்நாள் நினைவில் கை கால்கள் நடுக்கமுற்று ..
அதான் ஒன்னும் ஆகலையே விடு மாமா என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள
அவளை இறுக்கமாக தன்னுடன் அணைத்துக் கொண்டவன் முடியாது நீ அனுபவிச்ச வலியும் வேதனையும் அவனும் அனுப்பவிக்கணும்.. அநியாயம் பண்றவங்களுக்கெல்லாம் கடவுள் வந்து தண்டனை கொடுப்பாருன்னு எதிர்ப்பார்த்தா ஒன்னும் நடக்காது..
எவ்ளோ ஆசை ஆசையாய் அன்னைக்கு ஷாப்பிங் பண்ணினோம்.. இப்போ பாரு இப்படி படுத்து கிடக்கிற எல்லாத்துக்கும் காரணம் அவன் தான்.. அவன் மட்டும் தான்.. என்று ஆத்திரம் தீராமல் கர்ஜித்தான்.
அவன் அணைப்பில் இருந்தவளோ ஆமாம் மாமா எவ்ளோ ஜாலியா இருந்துருக்கும் தெரியுமா இப்போ பாரு நமக்கு கல்யாணம் ஆகியும் இப்படி உன் கையைக் கட்டிப் போட்டுட்டாங்களே என்றாள் அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு..
அவன் அப்பொழுதும் கோபத்தின் விளைவான சீரலான மூச்சுடன் அவளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க ஆஹ் ஐயோ வலிக்கு தே என்று கத்த என்னடி ஆச்சு எங்க டி வலிக்குது பாப்பா இங்க பாரு என்று தன் மார்பில் சாய்ந்திருந்தவள் முகத்தை நிமிர்த்த
தன் இடப்பக்க நெஞ்சில் அவன் கையை வைத்து அழுத்திக் கொண்டு இங்க தான் வலிக்குது.. ஐயோ இப்படி கல்யாணம் ஆகியும் என் மாமாவ கட்டப் பிரம்மச்சாரியா வச்சிருக்கியே கடவுளே.. அதை நினைச்சா தான் மாமா எனக்கு நெஞ்சு வலிக்குது என்று கண்ணடித்தாள் குறும்புடன்.
பொய்யா சொல்ற இப்போ உன்னை அலற விடுறேன் பாருடி என்று உள்ளுக்குள் சங்கல்பம் எடுத்தவன் ஆமா பாப்பா எனக்கு ஒரே ஸ்ட்ரஸ் என்றவன் அவளை ஒரு மார்கமாக பார்த்து வைக்க எதிரில் இருந்தவளுக்கோ அந்தப் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் அவனை விலக்க முனைய அவன் கைகளோ அழுத்தமாகப் படிய
கருந்திராட்சை கண்களோ தெறித்து விடும் போல இமைகளை விரிக்க
என்னடி அடிப்பட்டிருக்கு எதுவும் பண்ண மாட்டேங்கிற தைரியம் தானே என்றான் அவள் கண்களை உற்று நோக்கியப்படி..
மாமா கையை எடு என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சே வரவில்லை.
முடியாது என்பது போல் தலையை ஆட்ட மாமா என்ன பண்ற என்று எச்சில் விழுங்கினாள்.
நான் என்ன பண்றேன் இன்னும் ஒன்னுமே பண்ணலையே டி அதுக்குள்ள இப்படி நடுங்குற ஹிம்ம் என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவனை தன்னோடு சேர்த்து இறுக்கினாள்.
அவள் இதழில் ஆழ புதைந்தவன் லேசாக கடித்து இப்படிலாம் டெம்ட் பண்ணி விடாத டி அப்பறம் உனக்கு தான் கஷ்டம் நானே எவ்ளோ கண்ட்ரோலா இருக்கேன் தெரியுமா தெரியல இப்போ தான் ஏதேதோ தோணுது அதனால கொஞ்சம் தள்ளியே இரு டி என்றான் அவள் இதழை வருடியப்படியே
அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருக்க இந்த காயம் மட்டும் ஆரட்டும் டி அப்பறம் இருக்கு மாமா உனக்கு சொல்லி தரேன் என்று அவள் நெற்றியில் மெதுவாக முட்ட இவளுக்கு இப்பொழுதே பீதியானது..
****
அத்தான் சொல்லுங்க.. எப்படி கண்டு பிடிச்சீங்க என்று ஆதியை நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ ஆடிய ஆட்டத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான்..
ஏய் சும்மா நொய்யு நொய்யின்னு கொசு மாதிரி காதுல வந்து சத்தம் போட்டுக்கிட்டு வந்து படுடி என்று அவளை தன் பக்கத்தில் இழுத்துப் போட்டவன் அவள் மேல் வசதியாக கால்களை போட்டுக் கொண்டு விட்டத் தூக்கத்தை தொடர்ந்தான்.
சிறிது நேரம் பொறுத்தவள் அவன் சீரான மூச்சுக் காற்றில் ஏறி இறங்கிய மார்பில் தலை வைத்துக் கொண்டு அவன் மீசையைப் பிடித்து இழுக்க ஸ்ஸ் ஏய் மித்து அடி வாங்க போற நீ என்றவன் கண்களைத் திறக்காமலே கொஞ்ச நேரம் மனுஷன தூங்க விடுறியா டி .. என்று கடிந்தான்..
அத்தான் எதுக்கு இப்போ சஸ்பென்ஸ் வைக்கிறீங்க சொல்லுங்க அத்தான் என்று கெஞ்சினாள்.
சொல்ல மாட்டேன் டி என்கிட்ட நீ சொல்லாம மறைச்சேல்ல நான் மட்டும் எதுக்கு சொல்லணும் என்றான் பிடிவாதமாக..
அத்தான் ப்ளீஸ் சொல்லுங்க ச்சே இதை கூட சொல்ல மாட்டேங்கிறீங்க விடுங்க நீங்க ஒன்னும் கட்டிப் பிடிக்க வேண்டாம் என்று அவனிடமிருந்து நகர முற்பட தன் கரடி பொம்மையை விடாமல் அணைத்துக் கொண்டான்.
அவளை அணைத்த படியே எல்லாம் உன் லாக்கெட்ல வச்ச ரெக்கார்டர் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன் என்று அனைத்தையும் கூறினான்.
அத்தான் எனக்கே தெரியாம வச்சிருக்கீங்க என்கிட்ட சொல்லவே இல்லை என்று அவனை அடி மொத்தி விட்டாள்.
சரி சரி அடிச்சது போதும் மீதிய வீட்டுல போய் பார்த்துக்கலாம் இப்போ நேரம் ஆச்சு ஹாஸ்பிட்டல் கிளம்பு என்று எழுந்து கொண்டவன் அவளையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.
உங்களுக்கு சலிக்கவே செய்யாதா அத்தான் என்று அங்காலயத்தாள்.
அதற்கும் அவனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே வந்தது.
இருவரும் விஜயன் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றனர்.
அவர்களை நெருங்கிய ரிசப்ஸனிஷ்ட் வீர் சார் வெளியே கொஞ்சம் வேலையா போயிருக்காங்க.. உங்களை டாக்டர் கயல்விழி மேம் கைனக்காலஜிஸ்டை பார்க்க சொன்னாங்க.
வாங்க சார்.. என்று முன்னால் செல்ல இருவரும் அப்பெண்ணை பின்தொடர்ந்தனர்.
அங்கு சென்று ஸ்கேன் செய்து பார்க்க ஆதியை அழைத்த மருத்துவர் அந்த கருப்பும் வெள்ளையுமாக இருந்த திரையில் சிறியதாக வட்ட வடிவில் இருந்ததை காண்பித்து இது தான் பேபி என்று காண்பிக்க அவனுக்கு ஏற்பட்ட உவகையில் பேச்சே வரவில்லை..
ஓகே மிஸ்டர் ஆதி அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க.. இனிமேல் சத்துள்ள ஆகாரமா எடுத்துக்கனும் கொஞ்சம் மெடிசன்ஸ் எழுதி தரேன் அதை ரெகுலரா எழுத்துக்கோங்க.. இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்கணும்.. டிராவல் எதுவும் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
அனைத்தையும் தெளிவாகக் கேட்டுக் கொண்டவன் மித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
காரில் இருந்த மித்ரா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஆதியோ சந்தோஷத்தில் விசிலடித்துக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
தன் தலையில் இருந்து கையை எடுத்தவள் அத்தான் எதுக்கு இப்போ இவ்ளோ மெதுவா வண்டியை ஓட்டுறீங்க என்றவள் குரலில் காரம் தூக்கலாகவே இருந்தது.
ஏய் மித்து வயித்துல பாப்பா இருக்குடி அதான் மெதுவா போறேன் என்று விளக்கம் கொடுக்க ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
இப்போ நீங்க சீக்கிரம் போகலன்னா நான் இறங்கி நடந்து போறேன் என்று முறுக்கிக் கொண்டவள் மாட்டு வண்டி கூட உங்ககிட்ட தோத்து போயிடும் அத்தான் அந்தளவுக்கு நீங்க மெதுவா போறீங்க உங்களோட என்னால முடியலை என்று தலையில் கை வைத்துக் கொண்டாள்.
சரி சரி இப்போ எதுக்குடி இப்படி கோபப்படுற பாப்பாக்கு ஆகாது என்று கூற முறைத்தாள்.
அவளது முறைப்பில் ஹி ஹி என்று சிரித்து வைத்தவன் ரொம்ப ஓவரா போறோமோ என்று நினைத்தவன் வாயை இறுக பூட்டிக் கொண்டான்.
வீடு வந்ததும் இறங்காமல் நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்டவன் ஏய் மித்து இறங்குடி என்னாச்சு ஏன் அப்படியே உட்காந்திருக்க என்று அத்தான் என்று கையைப் பிசைந்தாள்.
என்னடி உள்ள போகலாம் வா என்று அழைக்க அத்தான் எல்லாரும் என்னை தப்பா நினைச்சிருப்பாங்க தானே எப்படி நான் அவங்க முகத்துல முழிக்கிறது என்று யோசிக்க திருவை தவிர அனைவரும் வெளியே இவளை அழைக்க வந்து விட்டனர்.
அவர்களைக் கண்டதும் சட்டென கண்களில் நீர் துளிர்க்க ஒரு வித நடுக்கத்துடன் காரிலிருந்து இறங்க என்ன மித்து அதுக்கு இந்த அழுகை இந்த மாதிரி நேரத்துல அழக் கூடாது வா உள்ள போகலாம் என்று சுமதி அழைத்து செல்ல
ஆசி, “வாழ்த்துகள் அண்ணா” என்று தமயனை கட்டியணைத்திட சக்கிரவர்த்தியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
சோபாவில் அமர்ந்திருந்த நிரு இவளை கண்டதும் சந்தோஷத்தில் எழுந்து கொண்டவள் எழுந்த வேகத்தில் சற்று தள்ளாட உடனே ஆசி வந்து தாங்கி கொண்டான்.
ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த மாதிரியா டி இருக்க எல்லாத்தலையும் அவசரம் என்று கடிந்து கொண்டவன் மற்றவர்களை பார்த்து சிரித்து கொண்டான்.
நிரு என்று மித்து அவள் அருகில் வந்து அணைத்துக்கொண்டாள்.
ஹேய் மித்து வந்து உட்காரு குட்டி பேபி என்ன சொல்றாங்க.. நான் சித்தி ஆகிட்டான் இந்த ஓசி மணி சித்தப்பா ஆகிட்டான் என்று குதூகலித்தவள் ஆதியிடம் திரும்பி அப்பறம் மாமா அப்பா ஆகிட்டீங்க என்ன ட்ரீட் நல்லா பெருசா வைக்கணும்..
என்னை ஏமாத்தினீங்க பேபி வெளியே வந்ததும் உங்களை போட்டுக் கொடுத்து உச்சா போக வச்சிடுவேன் பார்த்துக்கோங்க என்று போலியாக மிரட்டல் விடுத்தாள்.
வாலு என்ன வேணும் சொல்லு என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன் உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.. எல்லாம் உனக்குத்தான் என்று ஆசியை சிரிப்புடன் பார்த்தபடியே கூறினான்..
மச்சான் அப்போ நான் மாமா ஆகிட்டேனா என்று நிரஞ்சன் குதிக்க உடனே நிரு நீ தான் ஏற்கனவே மாமா வேலை பார்த்துட்டியே என்று அவனை கலாய்த்தாள்.
அத்தம்மா என்று சுமதியிடம் திரும்பியவள் அந்த மாதிரி பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க அத்தம்மா.. என்று மன்னிப்பை யாசிக்க மித்தும்மா அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம் உன்னை நாங்க யாரும் சந்தேகப்படல உன்னை பற்றிய புரிதலும் உன் மேல நம்பிக்கையும் அளவுக்கு அதிகமாகவே இருக்கு.
அதனால அதை பற்றி யோசிக்காமல் இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா இருக்கணும் சரியா என்று ஆறுதலாக கூறினார்.
சரி சரி வாங்கப்பா சாப்பிடுங்க டைம் ஆச்சு என்று சுமதி அழைக்க அனைவரும் அங்கு சென்றனர்.
நான் உனக்கு ஓசிமணியா டி என்று அவள் கையில் கிள்ள அத்தை இங்க பாருங்க இவன் கிள்ளுறான் என்று சுமதியிடம் போட்டுக் கொடுத்தாள்.
ஏன்டா உடம்பு சரியில்லாத புள்ளைக்கிட்ட உன் வாலுத்தனத்தை காட்டுற.. இனிமே ஏதாவது பண்ணா சொல்லுடா என்றவர் அடுத்து அவர் கூறியதில் சாப்பிட்டு கொண்டிருந்த ஆசிக்கு புரையேறியது என்றால் நிருக்கு சாப்பாடே இறங்கவில்லை.
நிரும்மா நீ தனியா தூங்க வேண்டாம் டா நான் உன் கூட படுத்துக்கிறேன் என்று சுமதி கூற
அவள் ஏன் மா தனியா இருக்கப் போறா நான் தான் கூட இருப்பேனே
இல்லடா நீ அப்பா கூட படுத்துக்கோ
நான் நிருக்கூட படுத்துக்குறேன் என்று திட்டவட்டமாக கூற மாதாஜி நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன் இப்படி சின்னஞ்சிறுசுகக்குள்ள இடை சொருகலா வரியே இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா என்று புலம்பி தள்ள ஆதி அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்.
அவன் சிரிப்பை விழி அகட்டாமல் பார்த்த மித்ரா தன் மனப் பெட்டகத்துள் சேமித்துக் கொண்டாள்.
அவள் பார்வையைக் கண்டு கொண்டவன் கண்களாலே என்னவென்று வினவ, அவளும் ஒன்னுமில்லை என்பது போல தலை அசைத்தாள்.
மோகமுள் தீண்டும்…

Post a Comment