மோகமுள் -44
மோகமுள் - 44:
தூக்கத்தில் இருந்த மித்ராவிற்கு மீண்டும் இரத்தம் தோய்ந்து கிடந்த நிரஞ்சனா கனவில் வரவே ஐயோ என்று அலறியவள் நான் தான் காரணம் போச்சு போச்சு என்று கண்களை இறுக மூடிக்கொண்டவள் அவள் பாட்டிற்கு பிதற்ற ஈசி ஈசி மித்து ஒன்னும் இல்லை தூங்கு நிருக்கு ஒன்னுமில்லை என்று அவளை ஆதி தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவள் தலையை வருடி விட அத்தான் என்று அவன் மணம் நாசியில் நுழையவே அவனை உணர்ந்து ஆசுவாசமானவள் அவன் நெஞ்சில் பல முத்தமிட்டு அவன் அணைப்பு தந்த பாதுகாப்பில் மீண்டும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள்.
சற்று நேரம் பொறுத்து தூக்கத்தில் இருந்து விழித்தவள் அவன் வாசம் அவனது இருப்பை உணர்த்தக் கண்களைத் திறக்காமலே அத்தான் என்று தன் பக்கத்தில் கைகளால் துழாவ அங்கு வெறுமையாக இருக்கவும் படக்கென்று கண் விழித்தாள்.
அப்பொழுது தான் அவளுக்கு தன் வீட்டில் இருப்பது நியாபகம் வந்தது..
மெத்தையைப் பார்க்க யாருமில்லை என்றதும் நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு அத்தான் உன்கிட்ட பேசவே மாட்டாரு இதுல எங்கிருந்து இங்க வீட்டுக்கு வந்து உன்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்குவாரு அதெல்லாம் இனி கனவுல தான் நடக்கும் ரொம்ப அலையாத என்று அவள் மனசாட்சி இடித்துரைக்க,
ஆமாம் மித்ரா உனக்கு இது தேவைதான் இதுல உனக்கு கிஸ் ஹக் எல்லாம் தேவையா என்று தனக்கு தானே முணுமுணுக்க க்கும் என்ற ஆதியின் குரல் வரவே ஐய் அத்தான் என்று அவன் இருப்பை உணர்ந்து கொண்டவள் உள்ளுக்குள் குதூகலித்தபடி உடனே பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.
அவள் நினைப்பை பொய்யாக்காமல் ஆதி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்..
அத்தான் என்றவாரு அனைத்தையும் மறந்து அவனை நெருங்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்களோ சிவந்து போயிருந்தது..
போச்சு இன்னும் கோபமா இருப்பாங்களோ என்று கண்களின் சிவப்பை தவறாக புரிந்து கொண்டாள்.
அவளுக்கு எங்கே தெரிய போகிறது .. அவள் மேல் உள்ள காதல் ஓவர் ப்ளோ ஆகியதில் தலைக்கேறிய மோகத்தில் கண்கள் சிவந்திருக்கிறது என்று..
அத்தான் என்று நெருங்க என்ன என்ற ஒரு வார்த்தையில் அவளை தள்ளி நிருத்தினான்..
அவன் குரலில் கடுமையை வரவழைக்க வெகு சிரமப் பட்டான்.. அதில் வெற்றியும் கண்டான்.
அவனின் என்ன என்ற கடுமையான குரலிலே அவளின் நடை ஸ்விட்ச் போட்டது போல நின்றிருக்க அனைத்தும் அவளுக்கு நியாபகம் வர ரகு சொன்ன அனைத்தும் நியாபகம் வந்து தொலைத்தது..
அவனை இனிமேல் நீ பார்க்க கூடாது பேசக் கூடாது என்று அசரீரீ போல் காதில் ஒலிக்க ஐயோ இப்போ எதுக்கு இங்க வந்தீங்க இங்க இருந்து முதல்ல போங்க என்று பதட்டமானாள்..
ஹேய் ஷ் இப்போ எதுக்கு இப்படி கத்துற உன் கூட உறவு கொண்டாடவோ பாசப்பயிர் வளர்க்கவோ நான் இங்க வரலை அதை முதல்ல புரிஞ்சுக்கோ நான் வந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் உனக்கு டேட் தள்ளி போயிருக்குல்ல அது குழந்தை தானான்னு செக் பண்ணனும் ஒருவேளை அது என் குழந்தையா இருந்தா நீ சொன்னது போலவே டிவோர்ஸ் பண்ணிட்டு குழந்தையைப் பெத்து கொடுத்துட்டு போயிட்டே இரு..
உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டோம் என்று கற்பாறை போல இறுகிய முகத்துடன் கூறினான்.
அவன் கூறியதை கேட்டதும் அவளுக்கோ முனுக்கென்று கண்களில் கண்ணீர் துளிர்த்தது..
அப்போ உங்களுக்கு நான் வேண்டாமா அத்தான் என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி கொண்டாள்.
அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் ப்ச் இந்த நீலிக்கண்ணீர் வடிக்கிறதெல்லாம் அப்பறம் இருக்கட்டும் இப்போ கிளம்பு என்று அவள் கண்ணீர் கண்டு பதறிய உள்ளத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் காய்ந்தான்..
(தண்டனையாம் மக்களே.. எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்க்கலாம் இந்த தண்டனை படலம்)
அவளோ மூக்கை உறிந்து கொண்டு சரி நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க நான் டிரெஸ் மாத்திட்டு வரேன் என்றவளிடம் நான் ஏன் போகணும் என்னையே நீ வெளியே போக சொல்றியா முடியாது நான் போக மாட்டேன் நீ இவ்ளோ சீன் போடுற அளவுக்கெல்லாம் அங்க ஒன்னும் இல்லை எல்லாம் ஏற்கனவே பார்த்தது தான் என்று கடுவன் பூனையாக விழ கடித்து குதறும் ஆசை வந்தது மித்ராவிற்கு ..
(ஹி ஹி நாங்க கோபம் வந்தா கடிச்சு கடிச்சு விளையாடுவோம்)
அவனோ அந்த இடத்தை விட்டு ஒரு இன்ஞ் கூட அசையாமல் சட்டமாக அமர்ந்து கொள்ள சண்டையில இருக்கோமே அதான் சொன்னேன் எனக்கென்ன வந்துச்சு எனக்கு வெட்கம் மானம் ரோஷம் எதுவும் என் புருஷன் கிட்ட நான் ஏன் பார்க்கணும் என்பது போல அவன் முன்பே உடையை மாற்ற அவனுக்கு தான் கஷ்டமாகி போனது..
ராட்சசி கொல்றாளே என்று பார்வையை விலக்க நினைத்தான் தான் ஆனால் முடியவில்லை.. எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே பண்ணுவா என்று வாய்குள் அவனால் முனக மட்டும் தான் முடிந்தது..
அவள் சுடிதார் எடுத்து அணிவதை கண்டவன் ஹேய் ஸ்கேன் எடுக்கனும்னு சொல்வாங்க ஒழுங்கா புடவை கட்டிக்கிட்டு வா இதெல்லாம் நான் உனக்கு சொல்லணுமா என்று அதற்கும் கடித்து வைத்தான்..
ஒரு புடவை கட்டுறதுக்கு இவ்வளவு நேரமா என்று அவள் மேல் இருந்த பார்வையை விலக்காமல் கடிந்தான்.
வாய் தான் கடிந்தது.. ஆனால், மனமோ எப்போதடா அவளை தள்ளிட்டு போகலாம் எப்போ எல்லாம் கிடைக்கும் ஒரு வாரமாக பட்டினி கிடந்தவனுக்கு எப்போ எப்போ என்று மனம் ஆளாய் பறந்தது..
நன்றாக தான் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாள் அங்கு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை போலும்..
ச்சே ஒரு புடவை கட்ட தெரியுதா உனக்கு என்று எழுந்தவன் அவளை நெருங்கி அவள் கட்டியப் புடவையையும் அவிழ்த்து விட்டவன் கைகள் தனக்கு பிடித்த இடங்களைத் தாராளமாக தொட்டுத் தழுவியது.
அவன் கைகளில் அவளோ அவஸ்தையாக நெளிய எதுக்குடி இப்படி நெளியுற ஒரு இடத்துல ஒழுங்கா நிக்க மாட்டியா என்று திட்டித் திட்டி ஒரு வழியாக பல சில்மிஷம் செய்து தன் பல நாள் கனவான சேலை கட்டி விடுதல் படலத்தை நிறைவாக முடித்துக் கொண்டவன் மீண்டும் அவளை முறைத்து பார்த்து வா டைம் ஆச்சு என்று வெளியில் சென்றான்..
சென்றானா இல்லை இல்லை ஓடினான்.. கிட்னி பிடுங்க கூப்பிடுவாள் என்று ஓட்டம் பிடித்தான்.
வந்ததுமே மித்ராவின் பெற்றோரிடம் அனைத்தையும் கூறியிருந்தவன் அறையை விட்டு வெளியில் வந்து நாங்க கிளம்புறோம் மாமா என்று அவர்களிடம் விடைப்பெற போயிட்டு வாங்க மாப்பிள்ளை என்று சந்தோஷமாக அனுப்பி வைக்க அப்பா அம்மாக்கு எதுவும் தெரியாது போல என்று மித்ரா நினைத்துக் கொண்டாள்.
அவர்களோ பேரப் பிள்ளை வரப் போகும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
***
ஆதி காரில் வரும் போது எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டுவதில் கவனமாய் இருந்தான்.. ஏதோ பாட்டை முணுமுணுத்து கொண்டு சாலையில் கவனமாக இருக்க மித்ராவோ இனிமேல் எப்போது பக்கத்தில் இருப்பது போல் வாய்க்கும் என்று நினைத்தவள் அவன் அருகாமையை வெகுவாக ரசித்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன் என்ன இங்க பார்வை என் முகத்துல தேனா வடியுது என்று தன் சிரித்த முகத்தை காட்ட என்கிட்ட மட்டும் சிடுசிருன்னு விழுறார் என்று முகத்தை கோணிக் கொண்டாள்..
அத்தான் என்று மெதுவாக அழைத்தாள்..
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றதும் அவன் கையைப் பிடிக்க அவள் உதறியது போலவே அவனும் அவள் கையிலிருந்த தன் கையை உதறினான்.
அதில் கோபம் வரப் பெற்றவள் என்ன ரொம்பத்தான் கோபப் படுறீங்க என்று அவனிடம் எகிறியவள் அவன் அதிர்ந்து பார்க்கும் போதே நான் என்ன பொம்மையா அவன் என்னடான்னா நான் சொன்னதை செய் இல்லைன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்னு பயம் காட்டுறான்..
நீங்க என்னடான்னா ஏன் இப்படி பண்ணிருப்பான்னு யோசிக்காம என்கிட்ட கோபப்படுறீங்க.. அவன் மிரட்டினதை வெளியவும் சொல்ல முடியாமா உங்ககிட்டையும் சொல்ல முடியாமா நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும் போங்க நான் உங்களுக்கு வேண்டாம்ல விடுங்க நான் யாருக்கும் வேண்டாம் என்று கதற அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் வண்டியை விரட்டினான் அன்று தாங்கள் இருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு..
அவன் அணைத்ததும் விடுங்க ஒன்னும் வேண்டாம் என்று திமிற ஏய் அமைதியா உட்கார போறியா இல்லையாடி என்று மீண்டும் ஒரு அரட்டு போட அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
அத்தான் நான் உங்க கூட இருக்கிறது தெரிஞ்சா அவன் ஏதாவது பண்ணிடுவான் வேண்டாம் ப்ளீஸ்.. அவன் ஏதாவது பண்ற வரைக்கும் பார்த்துட்டு இருக்குறதுக்கு நான் என்ன சொம்பையாடி என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே என்று கர்ஜிக்க அவள் வாயே திறக்கவில்லை..
கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் இறங்கு என்றவன் அவள் இறங்கவும் உள்ளே அழைத்து சென்றான்.. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து ஏதாவது சாப்பிடுறியா என்றபடி தன் கைப்பேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.
எனக்கு எதுவும் வேண்டாம் நீங்களே சாப்பிடுங்க என்று நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் அவன் ஆர்டர் செய்திருந்த ஐஸ்கிரீம் வரவே அதனை வாங்கியவன் சோபாவில் அமர்ந்து கொண்டு என்னா வெயிலு சப்பா ரொம்ப சூடா இருக்கே என்று பக்கவாட்டில் அமர்ந்திருந்தவளை நோட்டம் விட்டுக் கொண்டே ஐஸ்கிரீம் பாக்ஸை பிரிக்க
அத்தான் என்று அவனிடம் நெருங்கி அமர என்ன என்று பார்த்தான்..
எனக்குத்தானே வாங்குனீங்க என்று ஆசையாக கேட்க
இல்ல என்னோட குட்டி பாப்பாவுக்கு என்றான் வெடுக்கென்று..
ப்ச் உன் பார்வையே சரியில்லை நான் ரூமுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன் என்று காரியமே கண்ணாக அறைக்குள் போக இவளும் அது தெரியாமல் அவன் பின்னாலேயே சென்றாள்..
ஆதி அங்கிருந்த டேபிளில் பாக்ஸை வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள பின்னே வந்தவள் அவன் வரும் முன் அனைத்தையும் சாப்பிட்டு முடிக்க வேண்டுமென்று அரக்க பறக்க வாயில் போட்டு சப்புக் கொட்டி சாப்பிட அவள் கடைசி கவளம் எடுக்கவும் ஆதி கதவு திறக்கவும் சரியாக இருந்தது..
என்ன டி பண்ணி வச்சிருக்க அதுக்குள்ள காலி பண்ணிட்டியா என்று அதிர்ந்து போனான்.
அவளோ சாவதானமாக இல்ல அத்தான் இதோ கடைசி வாய் இருக்கு என்று அதையும் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டு சிரிக்க, அந்த சிரிக்கும் உதட்டை நொடி நேரத்தில் சிறைப் பிடித்திருந்தான் தன் இதழ்கள் கொண்டு..
இருவரின் இதழ் சூட்டிலும் அந்த பனிக்கூழ் உருகியது.. அவர்களும் அந்த நிலையில் தான் இருந்தனர்.
எப்பொழுதும் இருக்கும் மென்மை தொலைந்து போய் முற்றும் முழுதாக வன்மையாக அவள் இதழைக் கொய்திருந்தான்.
அவன் வன்மையில் தன்னை தொலைத்தவள் அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டாள் முத்தத்திற்கு வாகாக..
இன்றே கடைசி நாள் என்பது போல அவள் இதழைப் பற்றியவன் விடவேயில்லை.. கைகள் மட்டும் சும்மாவா இருக்கும் .. இடை வருடி தன் இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் மேலும் அவள் இதழில் புதைந்து போனான்..
அவனிடமிருந்து மூச்சு வாங்க பிரிந்தவள் மூச்சை ஆழ இழுத்து விட்டு தன்னை சமன்படுத்திக் கொள்ள அந்த நொடி நேர பிரிவை கூட தாங்க முடியாமல் அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன் அவள் தோல் வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்..
அவன் அணைப்பில் இருந்த படியே அவனை என்ன பண்ணீங்க அத்தான் என்றாள் கிசுக்கிசுப்பாக ..
நான் யாரையும் எதுவும் பண்ணல
சும்மா சொல்லாதீங்க எனக்கு தோணுது நீங்க ஏதோ அவனை பண்ணிட்டீங்க சொல்லுங்க என்று அவன் நெஞ்சில் கைகளால் கோலம் போட்ட படியே கேட்க இப்போ மட்டும் என்ன என் மேல உனக்கு நம்பிக்கை என்று கேள்வியாகப் பார்க்க
உங்க மேல நம்பிக்கை இல்லன்னு நீங்களா நினைச்சுக்கிட்டா எப்படி அத்தான்? அவன் பணம் படைச்சவன் அத்தான் உங்ககிட்டையும் இருக்கு தான் நான் இல்லன்னு சொல்லல அந்த நேரத்துல என்ன பண்றதுன்னே எனக்கு தெரியலை அவன் யாருன்னும் தெரியலை..
வாய்ஸ் கூட ஏதோ கம்யூட்டர் வாய்ஸ் போல தான் இருந்துச்சு உங்ககிட்ட சொல்லுவேன்னு சொன்னதுக்கு உங்களை ஏதாவது பண்ணிடுவேன்னு சொன்னான். எனக்கு அப்போ தோணினது எல்லாம் உங்க யாருக்கும் எதுவும் ஆகக் கூடாதுன்னு தான்..
என்னை நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நம்பிக்கை இருந்ததுனால தான் அப்படி பேசினேன் அதை வைத்தே நீங்க கண்டு பிடிச்சிடுவீங்கன்னு எனக்கு உங்க மேல கடலளவு நம்பிக்கை இருந்துச்சு அதான் அப்படி பேச சொன்னதும் நானும் பேசினேன்.
அதை வச்சு தானே கண்டு பிடிச்சீங்க என்று கேட்க அவனோ சிரித்துக் கொண்டு அவளை கைகளில் ஏந்தியவன் ஒரு வாரம் கணக்கு பாக்கி இருக்கு அதை முதல்ல நேர் பண்ணு அப்போ தான் சொல்லுவேன் என்றபடி மெத்தையில் கிடத்தி தானும் அவளை அணைத்தபடி படுத்தான்.
நான் இருந்த டென்ஷன்ல உங்களை கவனிக்கவே இல்லை அத்தான் என்றாள் வருத்தமாக..
சரி சரி டைம் ஆகுது அதுக்கு சேர்த்து இப்போ கவனி என்று மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டான்.
அத்தான் நானா நோ என்று சிணுங்க முடியவே முடியாது சீக்கிரம் டைம் ஆகுது என்று சத்தம் அதிகமாக வர விழுந்து கவ்விக் கொண்டாள்.
கண்கள் கிறங்கி போக உயிரும் உடலும் சிலிர்க்க ஒரு சங்கமம் இனிதாக அரங்கேறியது…
வட்டங்கள் கூடிக் கொண்டே போனதே தவிர நின்றப்பாடில்லை..
அத்தான் இப்போவாச்சும் சொல்லுங்க அவனை என்ன பண்ணுனீங்க என்று காதை கடிக்க இன்னும் எதுவும் பண்ணலை இனிமே தான் பண்ணனும் என்கவும் அத்தான் நம்ம பாப்பா வந்த நேரம் எதுவும் பண்ணாதீங்க என்று கூற சரி என்று உடனே ஒத்துக் கொண்டான்.
அந்த டேபிள் மேல கவர் இருக்கு பாருடி அதுல கிட் இருக்கு வா செக் பண்ணுவோம் என்று எழும்ப இருங்க நான் பார்த்துட்டு வரேன் என்று ஆர்வமாக ஓடியவளை அவனும் பின்தொடர்ந்தான்.
இரண்டு கோடுகள் காமிக்க மித்து நான் அப்பா ஆயிட்டேன் டி என்று அவளை தூக்கி சுத்த அத்தான் நான் ஆசையா கன்சீவா இருக்கேன் அத்தான்னு சொல்லலாம்னு இருந்தேன் நீங்க என்னடான்னா நான் அப்பா ஆகிட்டேன்டின்னு நீங்க சொல்றீங்க என்று முகம் சுருக்க
அடியேய் டேட் தள்ளிட் போனதையே மறந்து போனவள்லாம் பேச வே கூடாது என்று கூற சரி சரி வாங்க ஹாஸ்பிட்டல் போவோம் என்று அவனை அவசரப் படுத்த வீர் கிட்ட பேசிருக்கேன் ஆறு மணிக்கு அப்பாயின்மன்ட் போகலாம் என்று கூறினான்.
நீங்க எல்லா விஷயத்துலையும் கரெக்டா இருக்கீங்க நான் தான் இப்படி இருக்கேன் என்று வருத்தத்துடன் கூற
ஆமாம் வா இன்னும் ஒரு வார கணக்கு அப்படியே தான் இருக்கு என்று அவளை இழுக்க,
ஏதே ஐயயோ உடம்பு என்னத்துக்கு ஆகுறது ஏற்கனவே நாலு ரவுண்ட் போயாச்சு என்று வாயில் கைவைக்க நீ தான் டி நாலு ரவுண்ட் முடிச்சிருக்க நான் இன்னும் தொடங்கவே இல்லையே என்றவன் ஆழிப் பேரலையாக அவளை சூழ்ந்து கொண்டான்.
மோகமுள் தீண்டும்..

Post a Comment