மோகமுள் -43




 மோகமுள் - 43:


மித்ரா தன் வீட்டிற்கு எப்படியோ வந்து சேர்ந்தவள் தன் அறைக்குள் சென்று முடங்கியவள் தான் தாமோதரனும் பிரேமாவும் எவ்வளவு கேட்டும் வாயைத் திறக்கவேயில்லை.


அழுது அழுது சோர்ந்து போனவளுக்கு நாள் தள்ளி போயிருப்பது வேறு நினைவுக்கு வந்து வதைத்தது..


இந்த நேரத்துல எவ்வளவு சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் எனக்கே நியாபகம் இல்லை ஆனால் என் ஆதி கரெக்டா சொல்றாரு என்று தன் கணவனின் நினைவில் கண்கள் கரைந்தது..


குட்டி இந்த அம்மா ரொம்ப கெட்ட அம்மா அப்பாவை எவ்ளோ கஷ்டப்படுத்திட்டு வந்துட்டேன் பாரு அப்பா ரொம்ப நல்லவங்க அவங்க இப்போ என் மேல ரொம்ப கோபமா இருப்பாங்க இனிமேல் அப்பா அம்மா முகத்துல கூட முழிக்க மாட்டாரு..


போச்சு எல்லாம் போச்சு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணிருக்கேன் ஐயோ தாங்க முடியலையே இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சா நீயும் என்னை வெறுத்துடுவியா என்னை மன்னிச்சிடு குட்டி பாப்பா நான் பண்ணினது தப்பு தான் ஆனால் இப்படி பண்ணலன்னா அந்த சைத்தான் இவங்க யாரையும் சும்மா விடமாட்டேன்னு சொல்றான்..


நிரு சித்திக்கு ஆக்ஸிடன்ட் ஆனதுக்கு காரணமே இவன் தான்.. எனக்கே இன்னைக்கு தான் தெரியும் இதெல்லாம் ரகுவீர் தான் பண்ணிருக்கான்னு.. நான் என்ன பண்ணுவேன் குட்டி ஏற்கனவே அப்பாக்கு நடந்த விபத்து கூட இவன் தான் பண்ணிருக்கான் போல..


நான் உங்க அப்பாவை விட்டுப் போகலைன்னா இன்னும் நிறைய உயிர் பலியாகும்னு சொன்னான்..


எனக்கு அப்பாவும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும் அதுக்காக நான் கெட்டவளாகவே இருந்துட்டு போறேன் நீ வெளியே வந்ததும் அப்பா கூட போய் இருந்துக்கோ அப்பா பாவம் தனியா கஷ்டப்படுவாரு.. நீ கூட இருந்தா அவர் சந்தோஷமா இருப்பாரு என்று ஏதேதோ பிதற்றியவள் தன் பேச்சினை குடும்பமே கேட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் அப்படியே அசதியில் தூங்கியிருந்தாள்..


***


இங்கு மித்ரா சென்ற அடுத்த நொடி நடந்த அனைத்தையும் கிரகிக்கவே அங்கிருந்தவர்களுக்கு நேரம் எடுத்தது.. சுமதியால் நம்பவே முடியவில்லை. ஆதியும் ஆசியும் முக இறுக்கத்தோடு அமர்ந்திருந்தார்களே தவிர வேறு எதுவும் பேசவில்லை..


எனக்கு அப்போதே சந்தேகம் இருந்துச்சு இவள் எப்படி நம்ம ஆதியை கட்டிக்க சம்மதிச்சான்னு பாவி இப்போ உண்மை வெளியே தெரிஞ்சுடுச்சுல்ல அதான் ஓடிட்டா பொய்க்காரி.. கல்யாணம் செய்ததே பொய் என்று சொல்றவ குழந்தை மட்டும் ஆதிக்கு பிறந்ததாவா இருக்க போகுது என்று சொல்லி முடிக்கவில்லை..


அத்தை !! ஊர்மிளா !! என்ற கண்டனக் குரல்கள் வரிசையாக வர வாயைக் கப்பென்று மூடிக்கொண்டார். 


அண்ணிய பற்றி அப்படியெல்லாம் பேசாதீங்க என்று ஆசி ரௌத்திரமாக உரைக்க, ஆதியோ ஆசி விடு என் மித்ராவை பற்றி எனக்கு தெரியும் அவள் கேரக்டரை அசிங்கப்படுத்த இங்க யாருக்கும் உரிமையில்லை என்று ஊர்மிளாவை கண்டனப் பார்வை பார்த்தான்..


இல்ல ஆதி அவளே தான் ஒத்துக்கிட்டாளே இதெல்லாம் பணத்துக்காக தான் பண்ணினேன்னு என்று நிறுத்த அவள் சொன்னா நீங்க நம்பலாம் நான் நம்பணும்னு அவசியம் இல்லையே என்றவன் உள்ளுக்குள் பைத்தியம் என்று செல்லமாக வைது கொண்டான் தன் லூசு மித்ராவை..


அவளுக்கு என்னை காதலிக்க மட்டும் தான் தெரியும் அத்தை என்றவன் உங்களுக்கு அவ பத்தினின்னு நிருப்பிக்கணும்னு எனக்கும் அவசியம் இல்லை அவளும் நிருபிக்க தேவையில்லை.. என்றவன் எனக்கு எல்லாமே தெரியும்.. ஏன் இப்படி நடந்துக்குறான்னும் தெரியும் என்றான்.


அங்கு நடக்கும் அனைத்தையும் சமையல் கட்டிலிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ருக்மணியிடம் நேரே சென்றவன் கொஞ்சம் வெளியே வரீங்களா என்று அழைக்க அவருக்கோ வேர்த்துக் கொட்டியது தான் செய்த திருட்டுத்தனம் அம்பலமானதில்.


ஐயா என்று அதற்கு மேல் அவரால் எதுவும் பேசவில்லை..


பேசாதே என்பது போல் கையை நீட்டி தடுத்தவன் உங்களுக்கு ஏதாவது கஷ்டமென்றால் என்கிட்ட சொல்லிருக்கலாமே எதுக்கு இப்படி பண்ணினீங்க என்று கேட்க ஐயா என்னை மன்னிச்சிருங்க என் பொம்பளை பிள்ளையைக் கடத்தி வச்சி என்னை ஒரு வாரமா உயிரோட கொன்னுட்டான்.


உங்களுக்கு துரோகம் பண்ண மனசு ஒத்துக்கலைன்னாலும் என் பிள்ளை அவன் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கே சாமி நான் என்ன பண்ணுவேன் என்று கதற கண்களை மூடித் திறந்தவன் உங்க பொண்ணு எந்த சேதாரமும் இல்லாம உங்க வீட்டுல போய் விட்டாச்சு.. அவங்க பத்திரமா இருக்காங்க என்றவன் காலிலேயே விழுந்து விட்டார் அந்த பெண்மனி .


ஐயா சாமி என்னை மன்னிச்சிருங்க என்று கதற நீங்க ஒரு பத்து நாள் லீவ் எடுத்துக்கோங்க அக்கா அப்பறம் வேலைக்கு வரலாம் என்று கூறியவன் ஆசியைப் பார்க்க ஒரு காசோலையை தன் தமயனிடம் நீட்டினான்.


ஆதி அதனை வாங்கி ருக்மணி கொடுக்க வேண்டாம் ஐயா என்னை திரும்ப வேலைக்கு வர சொன்னதே பெருக என்று கையெடுத்து கும்பிட பரவால்லக்கா என்று அந்த காசோலையை அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தான்.


ஆசியோ ஆதியிடம் வந்து அண்ணா அவனை தூக்கியாச்சு என்று கூற நம்ம பழைய இரும்பு குடோன்ல கட்டிப்போட சொல்லு.. நைட் போய் அவனை பார்த்துக்கலாம் என்றவன் தன்னிடம் உள்ள ஒரு ஹார்டிஸ்கை எடுத்து தனது மடிக்கணினியில் தன் வீட்டினருக்கு போட்டுக் காட்டினான்..


மித்ராவிடம் ரகுவீர் போனில் மிரட்டியது அதற்கு அவள் ஒப்புக் கொண்டது என அனைத்தும் அதில் பதிவாகியிருக்க கேட்ட அனைவரும் அதிர்ந்து போயினர்.


இப்பொழுது வீட்டில் தன் குழந்தையுடன் புலம்பியதையும் லைவாகக் கேட்ட அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..


ஆதி கண்ணா போய் மித்ராவை பாருப்பா அழுவுறா என்று சுமதி கூற நான் அவக்கிட்ட பேச மாட்டேன் ம்மா இவ்ளோ நடந்தும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல ம்மா அப்போ என் மேல அவளுக்கு நம்பிக்கையே இல்லையா என்று சிறுபிள்ளை போல முறுக்கிக் கொள்வது இவன் முறையானது ..


ஆதி மித்ரா பாவம்டா நமக்கு ஏதாவது ஆயிடும்னு பயந்து போய் தான் உன்கிட்ட சொல்லாம விட்டுருப்பா என்று சுமதி கூற ஒருவாறு சமதானமாக தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவன் அவளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தா தான் சரிப்படுவா என்கிட்ட எப்படி மறைக்கலாம் அப்போ நான் அவ்ளோ தானா என்று மீண்டும் வேதாளம் போல் முருங்கை மரம் ஏறிக் கொண்டான்.


அப்போ நிரஞ்சனாவிற்கு நடந்த விபத்து? என்று சக்கரவர்த்தி கேட்க அப்பா எனக்கு நடந்த விபத்துக்கும் அவன் தான் காரணம் நிரஞ்சனாவிற்கு நடந்த விபத்துக்கும் அவன் தான் காரணம் என்று உண்மையை உடைக்க கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.


என்னப்பா சொல்ற என்ற சுமதி நெஞ்சில் கைவைத்து அமர்ந்து விட்டார்.


ஆமாம்மா இப்போ போட்ட ஸ்கெட்ச் கூட எனக்கு தான் ஆனால் அதுல நிரஞ்சனா தெரியாம மாட்டிக்கிட்டா.. என்று சொல்லி முடிக்க


இதெல்லாம் அவன் வேலைதான்னு உனக்கெப்படி ஆதி தெரியும் என்று வினவ எனக்கு ஆக்ஸிடன்ட் ஆனது பிரேக் பிடிக்காம இல்லப்பா அது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி தான் உங்ககிட்ட சொன்னா பயப்படுவீங்கன்னு தான் நான் சொல்லல. இந்த விஷயம் எனக்கும் மித்ராவுக்கும் ஆசிக்கும் மட்டும்தான் தெரியும் .


என்னோட ஆக்ஸிடன்ட் நடந்த இடத்தல இருந்த சிசிடிவி ஃபூட்டேஜ் ஒரு டிடெக்டிவ் கிட்ட கொடுத்தோம் அந்த வண்டி நம்பர் எல்லாம் வச்சு அது ரகு தான் பண்ணிருக்கான்னு இப்போ ஒரு வாரம் முன்னாடி தான் தெரிஞ்சுது.. ஏற்கனவே அவன் மேலதான் சந்தேகம் இருந்தது அதனால நம்ம எல்லாருக்கும் யாருக்கும் தெரியாம ஷேடோ போட்டிருந்தேன்..


மால் போன அன்னைக்கு நாங்க தான் கூட இருக்கோம்னு ஷேடோ வேணாம்னு நான் தான் சொன்னேன் அதுக்குப் பிறகு தான் இப்படி ஆயிடுச்சு..


நிருக்கு ஆக்ஸிடண்ட் ஆனதில் இருந்து மித்ராவோட நடவடிக்கை சரியில்லை அவள் ஏதோ என்கிட்ட மறைக்கிறான்னு மட்டும் தெரிஞ்சது.. ஏற்கனவேஅவளோட பாதுகாப்புகாக அவள் போட்டுருக்கிற செயின் லாக்கெட்ல ஜி.பி.எஸ் வாய்ஸ் ரிக்கார்டர் இருக்குற மாதிரி எனக்கு தெரிஞ்ச ஆளுங்ககிட்ட ரெடி பண்ணி தர சொல்லிருந்தேன்.. 


மித்ராக்கு தெரியாம எப்பொழுதும் அவ கழுத்துல இருக்கட்டும்னு போட்டு விட்டேன் பார்த்தா இவ்ளோ நடந்துருக்கு.. இதுல என்ன பியூட்டின்னா மித்ராவுக்கு ரகுதான் பேசுறான்னு தெரியாது.. என்று கூறினான்.


வாங்க நாமும் ஒரு சுருள் படம் பார்த்துட்டு வரலாம்..


மீட்டிங் நடந்த அன்று வந்த குறுஞ்செய்தியை மித்ரா மறந்து போயிருக்க நிரஞ்சனா விபத்து நடந்ததும் அந்த இரவு வீட்டிற்கு சென்ற போதுதான் அவளுக்கு அந்த குறுஞ்செய்தி நினைவே வந்தது..


ஐயோ இதை எப்படி மறந்தேன் அத்தான் வந்ததும் இதை சொல்லணும் இந்த மெசேஜ் வந்த பிறகு தான் நடந்திருக்கு ஒரு வேளை யாராவது வேணும்னே பண்ணியிருந்தா என்ன பண்றது என்று ஆதி எங்கே என்று தேட குளியலறையில் சத்தம் கேட்டது..


உடை மாற்றலாம் உள்ளறைக்கு செல்ல அப்பொழுது தான் அந்த போன் கால் வந்தது.. ஆனால் இந்திய எண் கிடையாது.


கிட்டதட்ட பத்து எண்களுக்கு மேல் திரையில் ஒளிர்ந்தது.. யார் என்று யோசித்தவள் மனது ஏதேதோ கற்பனை செய்து கரங்கள் நடுங்கியவாறு அந்த அழைப்பை ஏற்க அந்த பக்கத்தில் இருந்து ஒரு குரல் .. ஏதோ கம்பியூட்டர் வாய்ஸ் போல ஒலித்தது…


ஹலோ என்றாள் யோசனையுடன்.


என்ன மிசஸ் ஆதீரன் சௌக்கியமா ரொம்ப நல்லா இருக்கீங்க போலவே என்றான் நக்கலாக..


ஏய் யாரு பேசுறது.. ஹலோ யாருங்க நீங்க..


உங்க புருஷனுக்கு வச்ச பொறியில் வேறு ஒரு மான் வந்து சிக்கிடுச்சே என்று அந்த பக்கம் இருந்த குரல் கொக்கரித்தது..


என்ன சொல்றீங்க? யாரு நீங்க? எதுக்கு இப்படி பண்றீங்க? என்றாள் பதட்டத்துடன்..


நான் யாருங்கிறது இருக்கட்டும் .. என்ன அந்த பொழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்களா என்றான் ஒருவித கோர சிரிப்புடன்..


ஏய் இப்போ நீ யாருன்னு சொல்ல போறியா இல்லையா.. ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்லனா என் புருஷன் உன்னை உருத்தெரியாமா அழிச்சிருவாரு என்று தன்னை தேற்றிக் கொண்டு மிரட்டினாள்.


ஏய் என்ன தைரியம் இருந்தா நீ என்னையே மிரட்டுவே என்று அந்த பக்கத்தில் இருந்த கர்ஜிக்க இவளுக்கோ உள்ளுக்குள் ஆட்டம் கண்டது..


என்ன சொன்ன ஹான் உன் புருஷனால என்னை எதுவும் பண்ண முடியாது.. ஏற்கனவே உன் புருஷனுக்கு ஆக்சிடண்ட் ஆனதுக்கு காரணமே நான் தான்.. நீ போய் சொல்லு ஆனால் அதுக்கு முன்னாடி உன் புருஷன் உயிரோடு இருக்கணுமே என்று கொடூரமாக சிரித்தான்.


என்ன சொல்ற நீ எனக்கு ஒன்னுமே புரியல..


ஏய் உன் புருஷனை முன்னாடி கொல்ல ட்ரை பண்ணினதும் நான் தான் இந்த முறையும் அவனுக்கு தான் ஸ்கெட்ச் போட்டேன் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு அந்த பொண்ணு வந்து மாட்டிக்கிச்சு ச்சு ச்சு என்று உச்சுக் கொட்டினான்.


பட் இதுவும் நல்லா தான் இருக்கு சாவடிச்சு விளையாடுறது என்று சைக்கோ போல் பேசினான்.


ப்ளீஸ் யாரையும் எதுவும் பண்ணாத யாரு நீ? உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு நான் வாங்கி தரேன் என்று கெஞ்சினாள்.


பணமா எனக்கா? என்கிட்ட இல்லாத பணமா என்று கொக்கரித்தான்.


பணம் வேண்டாம்னா வேற என்ன வேணும் எதுக்கு இப்படி பண்ணுற ப்ளீஸ் எங்களை விட்டுரு என்று கதறினாள்.


கெஞ்சியும் பார்த்து விட்டாள் கதறியும் பார்த்து விட்டாள் எதற்கும் அவன் இறங்கவில்லை..


அந்த கவர்மண்ட் பிரோஜக்ட்டுக்கு கோட் பண்ற அமௌண்ட் எவ்ளோன்னு தெரியனும் 


சரி அதை நான் சொல்லிடுறேன் என்று இடையில் பேச


ஹேய் நான் இன்னும் சொல்லி முடிக்கலை பொறுமையா கேளு உன் அன்பான ஆருயிர் கணவனை விட்டுப் பிரியணும் என்கவுமே இவளுக்கு உயிரே போனது போலானது..


அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றதும் ஏய் இருக்கியா என்று அந்த பக்கத்தில் இருந்து அவன் கத்த நீ என்ன சொல்ற என்று அதிர்ந்தாள்.


ப்ச் உனக்கு எல்லாம் விளக்கமா தான் சொல்லனுமா உன் புருஷனை டிவோர்ஸ் பண்ணனும் அவங்க குடும்பத்தோட உனக்கு ஒட்டும் இருக்கக் கூடாது உறவும் இருக்கக் கூடாது என்ன புரியுதா.. இதெல்லாம் இப்போவே பண்ணனும்னு அவசியம் இல்லை..


ஒரு நாள் நானே நேரில் வருவேன் அன்னைக்கு உன் புருஷன் கிட்ட உன்னை பணத்திற்காக தான் கல்யாணம் பண்ணினேன் இதுவரைக்கும் உன் கூட இருந்ததெல்லாம் பொய் உன்னை ஏமாத்திட்டு இருந்தேன்னு சொல்லணும் இல்லன்னா எல்லாரையும் கூண்டோட கைலாசம் அனுப்பிடுவேன் ..


இதுல எதாவது கோல்மால் பண்ணினன்னு தெரிஞ்சது அவ்ளோதான் என்று துண்டித்திருந்தான்.


மித்ராவிற்கோ திக்பிரமை பிடித்தது போல் இருந்தாள்.. தன்னவன் இல்லாத ஒரு வாழ்க்கையை அவளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.


அடுத்து என்ன நடக்குமோ என்று கதிகலங்கி போய் நிற்கவும் ஆதி வரவும் சரியாக இருந்தது..


அவளின் முகமாற்றத்தைக் கண்டு கொண்டவன் என்ன மித்ரா ஏன் இன்னும் தூங்கல அடிப்பட்டிருக்கு பாரு வா வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று அவளை தடவிக் கொடுத்து தூங்க வைத்தான்..


இதற்கிடையில் தான் ஆதி வீட்டில் வேலை செய்யும் ருக்மணியின் மகளைக் கடத்தி வைத்து அங்கு நடக்கும் அனைத்தும் அவனுக்கு தெரியப் படுத்தும் படி மிரட்டினான்.


நிரஞ்சனாவிற்கு ஆக்சிடண்ட் ஆனதிலிருந்து மனது ஏனோ உறுத்திக் கொண்டே இருக்க ஆசியிடம் இதனை பற்றி பேசும் போதுதான் ஆதிக்கு டிடெக்டிவ் டீமிடம் இருந்து ஊர்ஜிதம் ஆனது .. அனைத்திற்கும் காரணம் ரகு தானென்று..


அதன் பிறகு தான் மித்ராவின் வாக்கெட்டில் உள்ள டிவைஸ் நியாபகம் வரவே அதனை பார்த்து அனைத்தையும் தெரிந்து கொண்டான்.


இந்த விஷயம் அனைத்தும் ஆதி ஆசி இருவருக்கும் மட்டும்தான் தெரியும்..


ஆதியும் மித்ரா தன்னிடம் விஷயத்தைக் கூறுவாள் என்று எதிர்ப்பார்த்திருக்க அவளோ வாயே திறக்கவில்லை.


அதன் பிறகு தான் பொறுக்க முடியாமல் அவனே கேட்க ஆரம்பித்தான். அப்போதும் அவள் வாயைத் திறக்கவில்லை..


இந்த ஒரு வாரமும் ரகுவீர் மித்ராவை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தான் என்பது தான் சரி.


ஒரு ஒரு நொடியும் யாருக்கு என்ன நடக்குமோ என்று யோசித்து யோசித்து செத்து பிழைத்தாள்.


ஒரு வாரமாக சரியான உறக்கம் இல்லாமல் உணவு இல்லாமல் இருக்க அதனை கண்டு ஆதி அதட்டவும் தான் ஏதோ பேருக்கு சாப்பிடுகிறேன் என்று கொறிப்பாள்..


இதெல்லாம் பார்த்த ஆதி இதற்கு விரைவாக முடிவு கட்ட வேண்டும் என்று தனக்கு தெரிந்த அரசியல்வாதி ஒருவர் மூலம் டெண்டர் நடத்தும் கமிட்டியிடம் சென்று ஒரு வேண்டுகோள் வைத்தான் முதலில் அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..


ரகுவீர் இவ்வாறு பிளாக் மெயில் செய்வதையும் கூறி தன்னிடம் இருந்த ஆதாரங்களையும் அவர்களிடம் காண்பித்து தான் கோட் செய்த அமெளண்டை விட இன்னும் குறைவாக ஒரு அமெளண்டை போட்டுக் கொடுத்தவன் போலியாக ஒரு அறிவுப்பு செய்யுமாறு வேண்டினான்.


அதிலும் ரகுவீருக்கு கிடைப்பது போல முதலில் கூற வேண்டும் என்று கூற அந்த கமிட்டி மெம்பர்களும் ஒத்துக் கொண்டனர்..


இவை அனைத்தையும் தன் குடும்பத்தாரிடம் கூறிய ஆதி அடுத்த வாரம் தான் ஒரிஜினல் அனென்ஸ்மெண்ட் இருக்கு அதுக்கான மெயில் எல்லாருக்கும் இன்னைக்கு அனுப்பிடுவாங்க என்று விளக்கினான். 


அவ்ளோதான் என்பது போல் எழுந்து கொண்டவன் சரி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று கிளம்ப மச்சான் மித்ராவ பார்க்க போக மாட்டே தானே என்று கிண்டலாக நிரஞ்சன் கேட்க,


நான் ஏன் அவளைப் போய் பார்க்கணும். அவள் தானே என்னை விட்டுப் போனாள். அவளா வந்தா வரட்டும் இல்லன்னா என்று நிறுத்த உடனே நிரஞ்சன், தங்கச்சி வரலைன்னா நீ அங்க போயிடுவ அப்படி தானே மச்சி என்று சிரித்தான்.


நானெல்லாம் அவளை பார்க்க போக மாட்டேன் என்றவனோ அடுத்த அரை மணி நேரத்தில் மித்ரா வீட்டில் போய் தான் நின்றான்..


(ஏன் மச்சீஸ் என்னோட ஹீரோஸ் மட்டும் இப்படி இருக்கானுங்க)


மோகமுள் தீண்டும்…


No comments