மோகமுள் -42





 மோகமுள் - 42:


காலையிலேயே ஆதியின் வீடு பரப்பரப்பாக இருந்தது.. அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. 


நிரு கூட ஆசியின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவனை முணுமுணுவென்று வசை பாடிக் கொண்டே கை கால்களை அசைத்துக் கொண்டிருந்தாள்..


ஆசியோ சும்மா இல்லாமல் பிசியோதெரப்பி என்ற பெயரில் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தான்..


வாசு மகளின் உடல்நிலை தேறும் வரை இங்கேயே இருப்பதாக கூறியும் அதற்கு ஊர்மிளா ஒத்துக் கொள்ளாமல் அவ நல்லாதான் இருக்கா மாப்பிள்ளை பார்த்துக்குவாரு நானே சும்மா வேடிக்கை தான் பார்த்துட்டு இருக்கேன் நீங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க முதல்ல ஊருக்கு கிளம்புற வழியைப் பாருங்க என்று காலையிலேயே தன் கணவனை ஊருக்கு கிளப்பிக் கொண்டிருந்தார்.


இன்று டெண்டர் அனௌன்ஸ் பண்ணுவதாக ஆதி நேற்று இரவே கூறியிருக்க சிறப்பு பூஜை கோவிலில் சொல்லியிருக்க சுமதியும் சக்கரவர்த்தியும் காலையிலேயே கோவிலுக்கு சென்றிருந்தனர்.


இங்கு ஆதி அறையிலோ ..


அப்போது தான் குளித்துவிட்டு வந்த ஆதி இன்னும் எழாமல் படுத்துக் கொண்டிருக்கும் மித்ராவை கண்டவன் அவளிடம் நெருங்கி மித்தும்மா எழுந்துருடா டைம் ஆச்சு என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க அவளிடம் அசைவில்லை.


அவள் தூங்கவில்லை என்று அவனுக்கு தான் தெரியுமே..


அவளை விட்டு எழுந்தவன் அங்கிருந்த மேஜே மீது வேண்டுமென்றே இடித்துக் கொண்டு ஐயோ என்று கத்த உடனே என்னவோ ஏதோவென்று பதறி எழுந்தவள் அவனிடம் வந்தாள்.


அவன் கால்களை தேய்த்து விட்டவள் அத்தான் பார்த்து நடக்க மாட்டீர்களா என்று கடிந்தவள் வலிக்குதா என்று அவனை நிமிர்ந்து பார்க்க ஆமாம் ரொம்ப வலிக்குது.. என்று உள்ளர்த்தத்தோடு கூற,


அவன் பார்வையில் என்ன கண்டாளோ அவள் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.


அவள் தாடையைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவள் கண்களில் கலந்தவன் மித்ரா எதுவும் என்கிட்ட சொல்லணுமா டி என்று கேட்டான்.


அவளோ இல்லை என்று தலையசைத்தவள் நான் போய் குளிச்சிட்டு வரேன் அத்தான் என்றவள் அவன் பதிலை எதிர்ப்பாராமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன் அலுவலகத்திற்கு போடும் உடையை எடுத்து வைத்தான்.


உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று தலை வாரிக் கொண்டிருக்க அப்பொழுது தான் குளித்துவிட்டு வெளியில் வந்தாள் மித்ரா..


கண்ணாடி வழியே அவளை பார்த்து கொண்டிருந்தவன் அவள் நடையில் தள்ளாட்டம் தெரியவே அவள் சுவற்றை பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ள நினைக்க அதற்குள் ஆதி அவளை தன் கைகளில் பூச்செண்டாக தாங்கிக் கொண்டான்..


மித்தும்மா என்னடா பண்ணுது என்று பதறிப்போய் கன்னம் தட்டினான்.


அத்தான் தலை சுத்துது. என்னால நிக்க முடியல என்று அவன் மேல் சாய அவளை தாங்கியிருந்த கைகள் சட்டென்று அள்ளிக் கொண்டது..


அவளை ஏந்தி வந்து மெத்தையில் படுக்க வைத்தவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் புகட்டினான்.. 


என்னடா பண்ணுது என்று கரிசனையாக கேட்க இப்போ ஓகே தான் அத்தான் ஒன்னுமில்லை வாங்க கிளம்பலாம் டைம் ஆகுது என்று எழுந்து கொண்டவளைப் பிடித்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் அவள் செவ்விதழைக் கவ்விக் கொண்டான்..


அவனின் கைகளோ அவளின் அடிவயிற்றை அர்த்தமாக அழுத்தமாக வருடியது..


குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு மறந்திருக்கலாம் ஆனால் தன்னவளைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்திருப்பனுக்கு தெரியாதா தன் உயிர் அவள் உயிரில் ஜனித்தது.


ஒரு வாரம் தன்னை கண்டுக் கொள்ளாமல் சுற்றியவளுக்கு நீண்ட நெடிய இதழ் முத்தம்..


அவன் முத்தத்தில் கண்கள் கிறங்கி கைகள் தன்னால் அவன் சிகைக்குள் வாகாக புதைந்து கொண்டது..


அவளிடமிருந்து தன்னை பிரித்து கொண்டவன் அவள் முகம் முழுக்க எண்ணிலடங்கா முத்தங்கள் பதிக்க மூச்சு திணறிப்போனாள்..


அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாமல் போகவே தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அவள் பட்டுப் போன்ற முடியைக் கோதிக் கொடுத்தான்.


அவள் காதுகளில் மீண்டும் ஒரு முத்தம் பதித்தவன் மித்து ஏதாவது என்கிட்ட சொல்லணுமாடா என்று மீண்டும் ஒருமுறை கேட்க ஒன்னுமில்லை என்ற அதே பதில் அவளிடமிருந்து வரவே சரி மித்ரா கிளம்பலாம் டைம் ஆச்சு என்று அவளை விலக்கினான்.


அதுவரையில் பாதுகாப்பாக உணர்ந்தவள் அவன் விலக்கியதும் அதுவரை இருந்த இதம் தொலைந்து பயம் அப்பிக் கொண்டது..


இருவரும் கிளம்பி கீழே வர கோவிலில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தை இருவருக்கும் வைத்து விட்ட சுமதி சிரித்த முகத்துடன் நல்ல செய்தியோட வாங்கப்பா என்று இருவரையும் அனுப்பி வைத்தார்..


அனைவரும் இருவரையும் மனதார வாழ்த்தி அனுப்பினர்..


மித்ராவிற்கு அதையெல்லாம் ஏற்க முடியாமல் குற்றவுணர்ச்சி கொல்லாமல் கொன்றது..


தன் முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க அரும்பாடு பட்டாள்..


****


இங்கு டெண்டர் நடக்கும் அலுவலகத்தில் அனைவரும் கூடியிருந்தனர்.


மித்ராவிற்கு மிகவும் படப்படப்பாக இருந்தது.. ஆதியோ அதற்கு நேர்மாறாக கூலாக அமர்ந்திருந்தவன் அங்கு வந்து முன் இருக்கையில் அமர்ந்த ரகுவீரை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன் திரும்பிக் கொண்டான்..


ரகுவீர் கண்களில் ஒருவித ஒளியுடன் வந்து முன் இருக்கையில் அமர்ந்தவன் தனக்கு பக்கத்து வரிசையில் அமர்ந்திருக்கும் ஆதியை ஏளனமாகப் பார்த்து வைத்தான்.


என்ன மிஸ்டர் ஆதி இன்னைக்கு உங்க நாள் இல்லை போலவே என்று நக்கலாகக் கேட்க அவனை ஏறிட்டவன் இதழ் வளைத்து கேலியாக சிரித்தவன் பரவால்ல மிஸ்டர் ரகுவீர் ஹேவ் அ குட் டே என்று வாழ்த்தியவன் நேராக அமர்ந்து கொண்டான்..


ஒஹ் உங்களுக்கு நடக்கப் போறது முன்னாடியே தெரியுமா ஏன் கேக்குறேன்னா எனக்கு தான் இந்த ப்ராஜெக்ட் கிடைக்கப் போகுது சோ இது என்னோட டே தான் என்று எகத்தளாமாக கூறியவன் இனிமேல் உனக்கு அழிவு தான் ஆதி என்று முணுமுணுத்துக் கொண்டான்..


சிறிது நேரத்திலேயே டெண்டர் யாருக்கு கிடைத்திருக்கிறது என்று அறிவித்தனர்..


இந்த முன்னூறு கோடி ரூபாய் ப்ராஜெக்டோட டெண்டர் ராகவ் இண்டஸ்ட்ரிஸ் கிடைத்திருக்கிறது என்று அறிவிக்கப்பட அனைவரும் ரகுவீருக்கு வாழ்த்துகள் கூறினர்..


ஆதியும் அவனை வாழ்த்தியவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.


மித்ரா அங்கு நடந்ததை கண்டு சிலையாகி இருந்தவள் ஆதியிடம் ஓடினாள்..


அவனை நெருங்கியவள் அத்தான் என்று அழைக்க கண்டுக் கொள்ளாமல் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.


காரில் ஏறியவள் அத்தான் என்று ஏதோ சொல்ல வர அவன் கையைப் பிடிக்க தட்டி விட்டவன் எதுவும் பேசாத மித்ரா ரொம்ப கோபத்துல இருக்கேன் அமைதியா இரு என்று வண்டியை வீட்டிற்கு விரட்டினான்..


ஆதியோ எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருந்தான்..


எங்கு அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வண்டியை ஓட்டினான்.


வீட்டிற்கு வந்ததும் அனைவரும் இருவரின் முகத்தைக் கண்டதுமே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்டனர்.


தலையைத் தாங்கிய படி ஆதி அமர்ந்து கொள்ள அவனை நெருங்கவே மித்ராவிற்கு பயமாக இருந்தது..


மித்ராவிடம் நெருங்கிய சுமதி என்னாச்சும்மா ஏன் இப்படி இருக்கான் ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கலையா என்று கேட்க ஆமா அத்தை என்று மட்டும் பதில் கூறினாள்..


சரி விடு ஆதி கண்ணா இதுக்கா இப்படி உடைந்து போய் உட்கார்ந்து இருக்க இந்த ப்ராஜெக்ட் இல்லைன்னா வேற ப்ராஜெக்ட் கிடைக்க போகுது அதுக்கு ஏன் இப்படி இடிஞ்சு போன மாதிரி உட்கார்ந்து இருக்க ஒன்னும் இல்ல போ போய் பிரஷ் ஆயிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று கூறிக் கொண்டே இருக்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று நிமிர்ந்தவனின் கண்கள் ரத்தமென சிவந்திருந்தது அவன் கொண்ட சினத்தில்.. 


அந்த நேரம் பார்த்து என்றும் இல்லாத திருநாளாய் ரகுவீர் ஆதி வீட்டிற்கு வருகை தந்தவன் கைகளில் ஸ்வீட் பாக்ஸோடு உள்ளே நுழைந்தான்..


உள்ளே வந்தவன் ஆர்ப்பாட்டமாக அனைவருக்கும் வணக்கம் வைத்து என்ன ஆதி என்கிட்ட தோத்து போயிட்டேன்னு இவ்ளோ சோகமா இருக்க.. ஆனால் நான் உன்னை ஜெயிச்சிட்டேனே அதான் நான் அந்த குஷியில் இருக்கேன் 


இந்தா இனிப்பு எடுத்துக்கோ என்று அவனை நெருங்கி மேலும் சினம் மூட்ட தன் கைமுஷ்டிகளை இறுக்கிக் கொண்டு பொறுமை காத்தான்..


நானும் பல முறை உன்னை தோற்கடிக்கிறதுக்கு என்னென்னமோ பண்ணி பார்த்தேன் ஆனால் எல்லாத்தையும் உடைச்சிக்கிட்டு மீண்டும் மீண்டும் மேல வந்துகிட்டே இருந்தே .. அதுவும் என்னை கீழே தள்ளி நீ மேலே வந்தது தான் நீ பண்ணின பெரிய தப்பு..


அதான் இந்த முறை வேற மாதிரி ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன் அதையும் சக்சஸ்ஃபுல்லா நடத்தி முடிச்சிட்டேன் அதனால தான் இந்த ப்ராஜெக்ட் என் கையில இருக்கு.. இதே மாதிரி உன்னை தொழில்ல ஜெயிச்ச நான் உன்னை வாழ்க்கையிலும் ஜெயிப்பேன்.


என்னோட வாழ்க்கை லட்சியம் என்ன தெரியுமா? உன்னை கீழே தள்ளிட்டு நான் மேல வர்றதுதான் நீ நிம்மதியா இருக்கவே கூடாது எப்ப பார்த்தாலும் எங்க அப்பா ஆதி இப்படி பண்றான் ஆதி அப்படி பண்றான்னு ஒரே டார்ச்சர்


இந்த டெண்டர் எப்படி என் கைக்கு வந்ததுன்னு உனக்கு தெரியுமா எல்லாம் உங்க ஆளுங்க சொல்லித்தான் இல்லன்னா எனக்கு எப்படி இந்த டெண்டர் கிடைக்கும் வாய்ப்பே இல்லை நான் கோட் பண்ணினது வேற அமௌன்ட் அதை அனுப்பியிருந்தா எனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை இந்த முறையும் எனக்கு நாமம் தான் கிடைச்சிருக்கும்..


ஆனால் நீ கோட் பண்ணின அமௌன்ட் விட கம்மியா ஜஸ்ட் ஒரு ரூபா கம்மியா பண்ணினேன் கடைசியில அது எனக்கு கிடைச்சிடுச்சு நான் நெனச்சது போலவே அது எனக்கு கிடைச்சிருச்சு என்று அந்த வீடே அதிர கத்தி சிரித்தான்.


சரி நேரா விஷயத்துக்கு வருவோம் …


உன் மண்டைக்குள்ள ஓடுறது எனக்கு நல்லாவே தெரியும்..


யாரு எனக்கு உங்க டெண்டர் அமௌன்ட் சொன்னதுன்னு தெரியுமா என்று கேள்வி கேட்டவன் அனைவரையும் ஒரு முறை பார்த்து வேற யாரும் இல்லை உன்னோட தர்ம பத்தினி தான் எனக்கு நீ கோட் பண்ணின அமௌன்ட் சொன்னது


ஏற்கனவே நீ குடும்ப வாழ்கையில் ஜீரோ .. இப்போ தொழில் துறையிலும் புட்டுக்கிச்சா எனக்கு அதுதான்டா வேணும் நீ ஒன்னும் இல்லாம நிக்கனும் அதுதான் என்னோட ஆசை லட்சியம் எல்லாமே.. என்று அந்த வீடே அதிரும்படி கர்ஜித்தான்.


ஆதி எதுவும் பேசவில்லை மேலே சொல் என்பது போல் பார்வையை ரகுவீரை விட்டு விலக்கவில்லை.


ஒரு மனுஷன் வெளியில ஆயிரம் மனுஷங்களை பாப்போம் ஆனா அவங்க எல்லாம் நமக்கு உண்மையா இருக்கணும்னு நாம நினைக்க மாட்டோம் பட் தன் கூடவே இருக்கிற தன் லைஃப் பார்ட்னர் நமக்கு உண்மையாய் இருக்கணும்னு நினைப்போம் இல்லையா..


கடைசில அதுவும் உனக்கு கொடுத்து வைக்கல உன் தர்ம பத்தினி அதான் உன் பொண்டாட்டி உனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்கா அதுவும் என்னால தான்.. சூப்பர் ஐம் சோ ஹாப்பி ஆதி எனக்கு இன்னைக்கு தான் நல்லா தூக்கம் வரும் ஓகே பாய் காய்ஸ் நான் என்ஜாய் பண்ண போறேன் என்று ஒரு பெரிய அணி குண்டை போட்டு விட்டுக் கிளம்பி விட்டிருந்தான்..


ரகுவீர் கூறிய விஷயத்தில் அனைவரும் ஆடிப் போயிருந்தனர். யாருக்கும் பேச்சே வரவில்லை அனைவரும் மித்ராவை குற்றம் சாட்டும் பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஆதி மித்ரா அருகே நெருங்கியவன் சொல்லு மித்ரா என்ன நடந்துச்சு அவன் சொல்றது உண்மையா என்று கேட்க அதுவரை மௌனமாக இருந்தவள் அவன் பிடித்திருந்த கையை அவனிடமிருந்து உதறி விலகி நின்றுக் கொண்டவள் ஆமா அவன் சொல்றது உண்மைதான் நான்தான் அந்த டெண்டருக்கு கோட் பண்ண அமௌன்ட் அவனுக்கு லீக் பண்ணினேன் என்று எந்த வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் உள்ளம் மருத்து போய் ஜடம் போல் கூறினாள்.


அவள் தோள்பட்டையை பிடித்து உலுக்கியவன் எதுக்குடி இப்படி பண்ணின என்று ஆத்திரம் தீராமல் அவளை உலுக்கி எடுத்தான்.


அவளோ எதுவும் பேசாமல் மரம் போல் நின்றாள். 


சொல்லுடி உன்னை தானே கேக்குறேன் எதுக்கு இப்படி பண்ணுன என்று மீண்டும் கேட்க ஏன்னா எனக்கு உன்னை பிடிக்காது நான் ரகு ஓட ஆள் ஆரம்பத்தில் இருந்தே ரகுவீர் பணம் அதிகமா தரேன்னு சொன்னான் அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன், நல்லவ போலவே உங்க எல்லார்கிட்டயும் பழகினேன்.


நான் நினைத்தது போலவே நீங்களும் என்னை நம்புனீங்க இப்போ நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு நான் கிளம்புறேன் இனிமே நான் ஏன் இங்க இருக்கணும் என்றவள் வெளியில் செல்ல போக அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்திய ஆதி அப்போ எல்லாம் பொய்யா மித்ரா என்று மீண்டும் கேட்க ஏய் ச்சீ ஒரு முறை உனக்கு சொன்னா புரியாதா திரும்பத் திரும்ப சொல்லணுமா ஆமா இப்ப சொன்னது தான் நிஜம் இவ்வளவு நாள் இருந்தது பொய் போதுமா என்று கண்களில் கண்ணீர் வழிய கூறியவள் அவன் கைப்பிடியில் இருந்து தன் கையை உதறிவிட்டு வெளியே சென்றாள்..


அவன் வாழ்க்கையில் இருந்தும் விலகி செல்ல முடிவெடுத்து விட்டாளோ..


அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவள் கையைப் பற்றி அவளது அடிவயிற்றில் வைத்து நம்ம குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்லு டி என்று கர்ஜிக்க அதிர்ந்தவள் தேதியை அவசரமாக கணக்கு பண்ண நாள் தள்ளி போயிருப்பதை உணர்ந்தவளுக்கு தன் ஆதியின் உயிர் என்று நினைக்கும் போதே கண்களில் இருந்து கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்தது.


அவன் கையை உதறியவள் கண்களைத் துடைத்து கொண்டு டிவோர்ஸ் பேப்பர் அனுப்புறேன் கையெழுத்து போடுங்க எனக்கு டிவோர்ஸ் வேணும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


அழுதுக் கொண்டே வெளியில் வந்த மித்ராவை அங்கேயே நின்றிருந்த ரகுவீர் தடுத்து நிறுத்தியவன் சூப்பர் நான் பேச சொன்னது போலவே அவனை தூக்கி எறிஞ்சி பேசிட்டியே வெல்டன் சூப்பரா நடிக்கிற என்று இளித்து வைத்தான்.


ச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா .. த்தூ நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. நான் என்ன பாவம் பண்ணினேன் உனக்கு.. எதுக்கு இப்படி பண்ற என்று விம்மினாள்.


ஆதி .. எல்லாத்துக்கும் ஒரே பதில் ஆதி அவன் தான் எல்லாத்துக்கும் காரணம் அவனால நான் பட்ட அவமானங்கள் ஏராளம்.. அவனை நிம்மதியாகவே இருக்க விட மாட்டேன் அதற்காக தான் உன்னை பகடைகாயா மாத்துனது..


ஏன்னா அவனோட பலமும் நீ தான் பலவீனமும் நீ தான் உன்னை வச்சு விளையாண்ட விளையாட்டுல ஜெயிச்சும் காட்டிட்டேன் என்று கொக்கரித்தான்.


இனிமேதான் அவனுக்கு அழிவு காலம்.. 


நீ சொன்னதை நான் செஞ்சிட்டேன் வீட்டை விட்டுப் போக சொன்ன கிளம்பிட்டேன் இதுக்கு மேல அவங்களை எதுவும் பண்ணாத பிளீஸ் என்று அவனிடம் கெஞ்சினாள்..


அது நீ நடந்துக்கிறதை பொறுத்து தான் இருக்கு என்னை ஏமாத்திட்டு அவன் கூட பேசவோ மீண்டும் அவன் கூட உறவு கொண்டாடுறது தெரிஞ்சது அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியது வரும் என்று மிரட்டினான்.


ஐயோ இல்ல இல்ல அவங்க யாரையுமே நான் பார்க்க மாட்டேன். அவங்க யாருக்கிட்டயும் பேசவும் முயற்சி செய்ய மாட்டேன் அவர்களை எதுவும் பண்ணிடாத நீ செஞ்ச வரைக்கும் போதும் அவங்களை விட்டுடு.. என்று அவனிடம் மன்றாடினாள்.


நான் அமைதியாக இருக்கிறது. உன் கையில தான் இருக்கு.. ஏதாவது கோல்மால் பண்ணினன்னு தெரிஞ்சது மொத்த குடும்பத்தையும் க்ளோஸ் பண்ணிடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றவன் மீண்டும் வந்து ஆமாம் நீ தான் ஆதிக்கூட இனி வாழப் போறதுல்லன்னு முடிவாயிடுச்சு..


எங்க வீட்டுக்கு வரியா என் ரூம் ஃப்ரியா தான் இருக்கு என்று இளித்து வைக்க ச்சீ நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல த்தூ என்று காறி உமிழ்ந்து விட்டு தன் வீட்டிற்கு விரைந்தாள்..


மோகமுள் தீண்டும்..

No comments