மோகமுள்-41




 மோகமுள் - 41:


ஒரு வாரம் ஓடியிருந்தது..


மாமா எனக்கு ஒன்னுமில்லை இப்போ எதுக்கு இப்படி தூக்குற பாரு எல்லாரும் இருக்காங்க அவங்க முன்னாடி தூக்கிட்டுப் போற என்று ஆசியின் காதில் கடிந்து கொண்டிருந்தாள்.


மேடம் நீங்க தானே ரெஸ்ட் ரூம் போகணும்னு சொன்னீங்க அதான் தூக்கிட்டு வந்தேன் என்று அவள் கேள்விக்கு பதில் கொடுத்தபடியே அவளை மெதுவாக இறக்கி விட்டவன் அவளை பார்த்து கண்ணடித்தான்..


மாமா நீ வெளியே போ அவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க எனக்கு கூச்சமா இருக்கு என்று நெளிந்தாள்.


ஹேய் இது என்னடி கொடுமையா இருக்கு இது எல்லாம் புதுசு இல்லையே இந்த ஒரு வாரமா இதெல்லாம் நடக்கிறது தானே அப்பறம் என்ன புதுசா பண்றது போல வெட்கப்படுற என்று சட்டமாக நின்று கொண்டான்.


டேய் மாமா போடா வெளியில என் மானத்தை வாங்காதடா என்று கெஞ்சினாள்.


முடியவே முடியாது நான் நீ வராம இந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்..


நேரம் பார்த்து பழி வாங்குற பார்த்தியா


ஆமாம் அப்படியே வச்சிக்கோ டி .. சீக்கிரம் ஆச்சா?


ஹிம்ம் ஆச்சு ஆச்சு என்று கூறவும் மீண்டும் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.


ஆசி கையில் இருந்த நிரஞ்சனாவிற்கு அனைவரும் தன்னை கேலியாக பார்ப்பது போலவே இருந்தது..


எல்லாம் இவனால தான் மங்குஸ் நான் அவனை வச்சு செஞ்சதுக்கு நேரம் பார்த்து நல்லா பண்றான் என்று அவன் இடையில் நறுக்கென்று கிள்ளினாள்.


கிள்ளவா செய்ற இரு டி உன்னை என்று அவளை செல்லமாக முறைத்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தன் தமயனிடம் வந்தான்.


அண்ணா இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றதா நேற்று ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் சொன்னாங்க.. நீங்க இங்க பார்த்துக்கோங்க நான் போய் கேட்டுட்டு வரேன் என்று வெளியே செல்ல போக,


நீ இங்க நிரு கூட இரு ஆசி நான் போய் கேட்டுட்டு வரேன் என்று ஆதி வெளியில் செல்ல அங்கு போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த மித்ரா இவனை கண்டதும் அவனை அங்கு எதிர்பார்க்காதவள் போல வேர்த்து விதிர்விதிர்த்து போனாள்.


என்ன ஆச்சு மித்து .. ஏன் இப்படி வேர்த்து போய் இருக்கு உள்ள போய் கொஞ்ச நேரம் ஏசியில உட்காரு என்றபடி அவளை நெருங்கி தன் கைக்குடையால் அவள் முகத்தை துடைத்து விட்டான்..


அவன் செயலைக் கண்டு குற்றவுணர்ச்சி மேலோங்க கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்த அதில் வெற்றியும் கண்டாள்.


அவனுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவள் விலகி நிரு இருந்த அறைக்கு சென்றாள்..


ஆதியும் இந்த ஒரு வாரமாக அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்..


யாரிடமும் ஒட்டாமல் எந்நேரமும் அந்த போனையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பாள்.


ஆதியிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவாள்..


அவனும் அந்த ஆக்ஸிடன்ட் நடந்ததிலிருந்த அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று அவளை அவள் போக்கிலேயே விட்டான்.


ஆதியும் சரி மற்றவர்களும் சரி அதிகமாக அவளை எதற்கும் தொந்தரவு செய்யவில்லை..


***


ஆசி டிஸ்சார்ஜ் இன்னைக்கு பண்ணிடுவாங்கலாம் டா ப்ராஸஸ் எல்லாம் முடிய இன்னும் கொஞ்சம் நேரம் ஆகுமாம் என்று கூறியவன் சரி திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி நாங்க முன்னாடி வீட்டுக்குப் போறோம்டா நீங்க டிஸ்சார்ஜ் ஆனதும் வாங்க என்று விட்டு வீட்டினரிடம் கூறி தேவையான பொருட்களை மட்டும் வைத்து விட்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.


நிரஞ்சன் ஆசியிடம் டேய் நான் போய் பில்லிங் செக்ஷன் போயிட்டு என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று வெளியில் சென்று விட்டான்.


அவன் சென்றதும் உடனே கதவை பூட்டியவன் கதவின் மேல் சாய்ந்து கொண்டு நிருவை பார்த்த பார்வை இருக்கே அப்பப்பா என்ன பார்வை அது.. ஆளை ஆட்கொள்ளும் பார்வை..


அவன் கதவை லாக் பண்ணும் போதே அதனை கண்டு எதுக்கு இப்போ கதவை பூட்டுறான் என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்த்த பார்வையில் ஐயயோ என்ன இவனோட பார்வையே சரியில்லையே..


என்ன இப்படி பார்த்து வைக்கிறான் என்று உள்ளுக்குள் அரண்டவள் மாமா என்னாச்சு எதுக்கு கதவை லாக் பண்ணி வச்சிருக்க என்று எச்சில் விழுங்கிய படியே கேட்டு வைத்தாள்.


ஹிம்ம் உன்னை ஸ்வாகா பண்ணத்தான்.. என்று அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கினான்.


என்னாது என்று ஜர்க்காகி உடனே கட்டிலில் இருந்து எழுந்து கொண்டவள் மாமா இன்னும் எனக்கு எதும் சரியாகலை ப்ளீஸ் இந்த மாதிரி பார்க்காத எனக்கு ஏதோ பண்ணுது..


ஹேய் நிருக்குட்டி நீ தானே சொன்ன கல்யாணம் ஆகிடுச்சு ஆனால் பர்ஸ்ட் நைட் நடக்கலன்னு ரொம்ப வருத்தப்பட்டல்ல அதான் நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன் என்று அவளை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்து வைத்தான்.


என்ன மாமா முடிவு எடுத்துருக்க என்றவளுக்கு வெறும் காற்று தான் வந்தது..


என்னடி தொண்டையில் கிச்கிச்சா என்றவன் அவளை நெருங்கி பாப்பா ஒரு டீப் கிஸ் அடிச்சா கிச் கிச் சரியா போகும் டி என்றான் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டே…


ஐயோ மாமா அதெல்லாம் அப்பறம் கிஸ் அடிக்கலாம் ஆமாம் ஏதோ முடிவு எடுத்துருக்கேன்னு சொன்னியே அது என்ன மேட்டர் சொல்லு என்று பறக்க,


அவளை பார்த்து உதட்டுக்குள்ளே சிரித்தவன் மேட்டர் தான்டி மேட்டரே என்கவும்


ஹான் என்று ஜர்க்காகி நிற்க நீ தானே பர்ஸ்ட் நைட் கொண்டாட முடியலன்னு சொன்ன அதான் பர்ஸ்ட் டே கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் என்ன பர்ஸ்ட் டே கொண்டாடிடலாமா எப்படி என்னோட ஐடியா என்றவன் அவள் கண்களுக்கு நம்பியார் போலவே தெரிந்து தொலைத்தான்.


ஐயோ மாமா நான் சும்மா சொன்னேன் .. எனக்கு பயமா இருக்கு அதெல்லாம் வேண்டாம் என்று அவனிடமே தஞ்சம் புகுந்தாள்.


சரி உனக்கு வேண்டாம் ஆனால் எனக்கு வேணுமே என்று அவளை தன்னுடன் மேலும் இறுக்கினான்..


அவன் அணைப்பில் இருந்து கொண்டே மாமா வீட்டுக்கு போகணும்ல நான் டிரெஸ் சேஞ் பண்ணனும் நீ கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு நான் டிரெஸ் மாத்திட்டு உன்னை கூப்பிடுறேன் என்று அவனை கதவருகே தள்ள,


ஏய் இந்த ஒரு வாரமா நான் தான் எல்லாமே பண்ணினேன் அது என்ன இன்னைக்கு மட்டும் என்னாச்சு என்னை வெளியே போக சொல்ற நோ நான் போக மாட்டேன் நான் இங்கே தான் இருப்பேன்.. என்று அடமாக நின்று கொண்டான்.


மாமா போடா எனக்கு கூச்சமா இருக்கு என்று அவனை தள்ள ஹிம்ம் அவளால் ஒரு இன்ஞ் கூட அவனை அசைக்க முடியவில்லை. 


அவனை தள்ளி சோர்ந்து போனவள் அங்கிருந்த மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டாள்.


ஒரு சிரிப்புடன் அவளை நெருங்கியவன் ஓய் என்கிட்ட என்னடி உனக்கு புதுசா வெட்கம் என்று அவள் கன்னத்தை வருடியபடியே கேட்க 


ஹான் நான் என்ன பண்றது அதுவா வருது நீ ஏன் அப்படி பார்த்து வைக்கிற உன் பார்வைதான் என்னை ஏதோ பண்ணுது என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள சரி சரி நான் பார்க்கலை போதுமா எழுந்துக்கோ வேற டிரெஸ் போட்டுக்கலாம் என்று அவளை எழுப்பினான்.


ஹிம்ம் அப்போ நீ கண்ணை மூடு இவ்ளோ நாளா நல்ல பிள்ளையா இருந்துட்டு இப்போ இப்படி பேட் பாயா மாறுவன்னு நான் என்ன கனவா கண்டேன் என்று அவனுடன் வளவனத்துக் கொண்டே இருக்க,


ஏன்டி நீயும் தான் இப்போ கிரீன் பேபியா மாறிட்டா நான் அதுக்கு ஏதாவது சொன்னேனா என்று கேட்க தன்னை குனிந்து பார்த்தவள் அவன் சொன்னது போலவே பச்சை பிள்ளையாய் அவன் முன் நிற்க வெட்கம் பிடுங்கி தின்றது.


ஐயோ மாமா என்று வெட்கம் கொண்டு அவனையே அணைத்துக் கொண்டாள்.


ஹிம்ம் சரி சரி என் மூட் மாறுவதற்கு முன்னாடி டிரெஸ் போட்டுடலாம் என்று உடையை போட்டு விட்டவன் சும்மாவா இருந்துருக்கும் ..


உடை அணிந்து முடிவதற்குள் இருவருக்கும் கண்களில் பூச்சிப் பறந்தது..


என்னடி இப்படி இருக்க என்று அவன் கண்கள் அவள் உடலில் அங்கும் இங்கும் அலைமோதியது.


இந்த விதி இப்படி என் கையைக் கட்டி போட்டுடுச்சே என்று போலியாக வருந்தினான்..


அவளில் பிடித்த இடத்தை வருடிக் கொண்டே..


அவன் கையைத் தட்டி விட்டவள் என்ன வேலை பாக்குற நீ என்று பொய்யாக முறைக்க முயல் ஆனால் அவனுக்கு அவள் கண்கள் கிறங்கி வேறு கதை சொல்ல ஆணவன் உன்மத்தம் கொண்டான்.


சரி சரி ரொமான்ஸ் போதும் என்பது போல கதவு தட்டப்பட்டது.


உங்க அண்ணன் வந்துட்டான் டி என்று அவசரமாக ஒரு முத்தம் அவள் இதழில் பதித்தவன் கதவை திறந்தான்.


மச்சான்.. டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாராம் டா இந்த கட்டை பிரிச்சிட்டு வேற டிரெஸ்ஸிங் மாத்திட்டு வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க.. பில்லிங் ஆதி முடிச்சிட்டு தான் போயிருக்கான்..


சோ டிரெஸ்ஸிங் முடிச்சிட்டா வேலை முடிஞ்சது கிளம்பலாம்..


சரி ஓகே டா என்றவன் மனதில் வேறு எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது..


இந்த ஆக்சிடென்ட் தற்செயலா நடந்ததா இல்லை யாராவது பிளான் பண்ணி நடந்ததா என்பது தான் ஆசியோட சந்தேகமே…


இதனை பற்றி ஆதியிடம் பேசிய போது கூட எனக்கும் அந்த டவுட் இருக்குடா நான் ஏற்கனவே ஒரு டிடெக்டிவ் கிட்ட பேசி இருக்கேன் அந்த ஆக்சிடென்ட் நடந்த இடத்துல இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ் நமக்கு கிடைத்து விட்டது..


அதை அவங்ககிட்ட கொடுத்துருக்கேன் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் எனக்கென்னமோ இது பிளான் பண்ணி நடந்த மாதிரி தான் என்னோட இன்ஸ்டிங்ட் சொல்லுது பார்க்கலாம் நீ அதை பற்றி எல்லாம் வொரி பண்ணிக்காத நான் அதை பார்த்துக்கிறேன்..


நீ பாப்பாவை மட்டும் பார்த்துக்கோ என்று ஆதி சொன்னது தான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது..


சற்று நேரம் கழித்து டாக்டர் வரவே நிருவின் தலையில் இருந்த கட்டை பிரித்தனர்..


ஆசி நிருவை நெருங்கியவன் அவள் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டான்..


அவள் ட்ரெஸ்ஸிங் பிரித்த பொழுது ஆசி அங்கு பார்க்க நேரிட பெரிய தழும்பு கிட்டத்தட்ட ஒரு 15 தையல்களுக்கு மேல் போட்டிருந்தனர் அதைக் காண காண அவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆத்திரம் எழுந்தது..


 உன்னோட இந்த நிலைமைக்கு காரணமானவர்களை நான் சும்மா விடமாட்டேன்.. என் பாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா அந்த கஷ்டத்தை அவங்களையும் பட வைப்பேன் கண்டிப்பா அவங்கள நான் சும்மா விடவே மாட்டேன் என்று ஆசி தன் மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டான்.


நிருவின் காயத்தை ஆராய்ந்த டாக்டர் அதை கிளீன் செய்து விட்டு மீண்டும் ஒரு பேண்டேஜ் அணிவித்து ஆசியிடம் ஹலோ யங் மேன் காயம் நல்லா ஆறிட்டு வருது ஒருவாரம் கழிச்சு வாங்க தையல் எப்படி இருக்குன்னு பாத்துட்டு காயம் ஆறி இருந்தா தையலை பிரிச்சு விடலாம் அதுக்கப்புறம் டிரெஸ்ஸிங் மட்டும் பண்ணினால் போதும் யுவர் வைஃப் இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் சோ கவலைப்பட வேண்டாம் ..


வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க இன்னும் ஒரு வாரத்துக்கு காரம் கம்மியா கொடுங்க நான்வெஜ் எதுவும் வேண்டாம் மற்றபடி எல்லாமே சாப்பிடலாம் நோ ரெஸ்ட்ரிக்சன்ஸ் சியர் அப் கூடிய சீக்கிரம் எல்லாமே சரியா போயிடும் என்று டாக்டர் வெளியே சென்று விட்டார்..


பின்னர் அனைத்து பிராசஸையும் முடித்துக் கொண்டு தங்கள் வீடு வந்து சேர்ந்தனர் மூவரும்..


ஆசியும் நிருவும் வீடு வந்ததும் அவர்களை வெளியே நிற்கச் சொன்னார் சுமதி..


பின்பு ஆரத்தி தட்டை எடுத்து வந்து இருவருக்கும் ஆளம் சுற்றி உள்ளே போகுமாறு பணித்தார் ..


நிருவிடம் வந்த சுமதி நீ இருக்கிறதுக்கு உன் ரூம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் டா அங்க போய் இருந்துக்கோ என்று கூற ஆசிக்கு வந்ததே கோபம் அம்மா இப்போ அவ என் பொண்டாட்டி நிரு என் ரூம்ல தான் இருப்பா இனிமே நாங்க ரெண்டு பேரும் அங்க தான் இருப்போம் இப்படி எல்லாம் ஒரு சின்ன பிள்ளைகளை பிரிக்க பார்க்காத ம்மா என்று கடுப்புடன் கூறினான்..


அதனைக் கேட்ட அனைவரும் கொள்ளென சிரித்தனர்..


டேய் ஆசி நீ இப்படி சொல்லுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும் அதனால தான் நிருவோட திங்ஸ் எல்லாத்தையும் உன்னோடு ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டேன் நீ ரூமுக்கு வந்தா தானே உனக்கு தெரியும் ஒரு வாரமா வீட்டு பக்கமே வரவேயில்லை அப்பறம் எங்க அதெல்லாம் உனக்கு தெரியும்.. ஹாஸ்பிட்டலே ஒரு வாரமா கதின்னு கடந்தா இப்படித்தான் என்று அனைவரும் பார்த்து சிரிக்க,


இப்பொழுது வெட்கப்படுவது ஆசியின் முறையானது..


 சரி சரி மனுஷனை ரொம்ப ஓட்டாதீங்க என் பொண்டாட்டிக்கு டயர்டா இருக்கும் நாங்க போறோம் என்று தன் அறைக்கு நிருவை தூக்கிக்கொண்டு செல்ல,


டேய் ஏன்டா எப்ப பாத்தாலும் அவளை பட்டு பட்டுன்னு தூக்குற பாத்துடா பிள்ளைக்கு ஏதாவது ஆயிட போகுது என்று வேண்டுமென்று சுமதி அவனை ஓட்ட ம்மா என்னம்மா இப்படி பண்ற சும்மா இருமா கொஞ்சம் போய் ஏதாவது ஜூஸ் எடுத்துட்டு வாமா நிருக்கு பசிக்கும் என்று வேலையை ஏவினான்..


டேய் இப்ப எதுக்குடா அவளை ரூமுக்கு தூக்கிட்டு போற இங்கேயே இருக்கட்டும் ஒரு வாரமா அந்த ரூம்லேயே தான் அடைஞ்சு கிடந்தா கொஞ்சமாச்சும் ஃபிரியா அவளை விடுடா இங்கே ஹால்ல இருக்கட்டும் நிரும்மா நீ டிவி பாரு , இப்ப நைட் டிபன் சாப்பிட்டு அப்பறமா ரூமுக்கு போகலாம் சரியா என்று விட்டு நைட் சமையல் பற்றி வேலையாட்களிடம் கூறச் சென்றார் …


அவள் அமருவதற்கு ஏதுவாக குஷனை வைத்தவன் இப்படி உட்காரு பாப்பா ஓகேவா என்று அவளிடம் கேட்டுக் கொண்டவன் நான் போயிட்டு கொஞ்சம் ரெப்ரஷ் ஆயிட்டு வரேன் அத்தை கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று விட்டு தன் அறைக்குள் சென்றான் ..


நிருவை நெருங்கிய ஊர்மிளா எதுவும் வலிக்குதா நிரு ஒரு வாரமா இந்த ஆசி உன்கிட்ட எங்க யாரையுமே நெருங்கவே விடல இப்போவாச்சும் விட்டானே அப்பப்பா என்று தன் மருமகனின் புராணம் பாடினார்..


ஆக்சிடென்ட் ஆனதில் உடலெங்கும் காயத்தோடு மொட்டை அடிக்கப்பட்டிருந்த தன் மகளை இனி ஆசி திருமணம் செய்வானா என்ற சந்தேகத்தில் தான் இதற்கு மேல் இங்கு வைத்திருக்க வேண்டாம் என்று நினைத்து சிங்கப்பூருக்கு நான் கூட்டிட்டு போறேன் என்று ஊர்மிளா கூறினார்..


ஆனால் ஆசியோ அவள் எப்படி இருந்தாலும் நான் நிருவை விட மாட்டேன் என்பது போல் அவர் நினைப்பை அன்றே பொய்யாக்கி இருந்தான்.


இங்கு அனைவரும் சாப்பிட அமர ஆசி குளித்து வந்தவன் நிருவை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அவளை அமர வைத்து தோசையும் சட்னியும் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு சட்னியில் தோசையை தோய்த்து ஊட்டி விட்டான்..


அவள் சாப்பிட்டு முடித்ததும் தானும் உண்டு முடித்ததும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தங்கள் அறைக்குள் இருவரும் நுழைந்து கொண்டனர்…


இங்கு தங்கள் அறையில் மித்ரா யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவள் ஆதி வரும் அரவம் கேட்டு உடனே கைப்பேசியை அனைத்து விட்டாள்..


டேய் மித்ரா என்ன இன்னும் தூங்காம இருக்க வா வந்து தூங்கு நாளைக்கு அந்த டெண்டர் விஷயமா ஆபீஸ் போகணும்ல என்று ஆதி அவளுக்கு நினைவு படுத்தினான்.


ஹிம்ம் என்று தலையாட்டியவள் மெத்தையில் வந்து படுத்துக் கொள்ள ஆதியும் லகுவான உடைக்கு மாறியவன் மெத்தையில் வந்து படுக்க அவனை நெருங்கியவள் 


அத்தான் என்னை நீங்க நம்புறீங்க தானே என்று உள்ளம் துடிதுடிக்க முகம் கசங்க கேட்டாள்..


உன்னை நம்பாம நான் வேற யாரை நம்ப போறேன் மித்து தூங்கு என்று கூற அவனை அணைத்துக் கொண்டு தூங்குவது போல் கண்களை மூடி கொண்டாள்..


அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு என்கிட்ட ஏதாவது சொல்லணுமா மித்து என்று பூடகமாக கேட்டான்..


ஒன்னும் இல்லை அத்தான் தூக்கம் வருது என்று அவனை விட்டு விலகிப் படுத்துக் கொண்டாள்.


அவளையே கண் இமைக்காமல் பார்த்தவன் கண்களை நித்திரா தேவி தழுவிக் கொண்டாள்.


மித்ரா தூக்கத்தில் கைகளையும் கால்களையும் அசைத்து என்னால தான் என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு சாரி நிரு என்னை மன்னிச்சுடு என்னால தான் எல்லாமே என்னால தான் என்று தூக்கத்தில் கண்களில் கண்ணீர் வழிய கதறி பதறி எழுந்த அமர்ந்தாள்..


அவள் சத்தம் கேட்டு விழித்த ஆதி மித்ராவை அணைத்து கொண்டவன் ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல மித்ரா தூங்கு என்று அவளை அணைத்து கொண்டு தட்டிக் கொடுத்தவனுக்கு கைமுஷ்டிகள் இறுகியது..


என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மித்ரா என்று மானசீகமாக தன்னவளிடம் கேட்டவனுக்கு பதில் தான் கிட்டவில்லை.


மோகமுள் தீண்டும்..

No comments