மோகமுள் -40
மோகமுள் - 40 :
இரண்டு வாரங்களாக தன் அறையில் தான் முடங்கிக் கிடக்கிறாள்.
என்ன செய்கிறாள் ஏது செய்கிறாள் உயிரோடு இருக்கிறாளா என்று கூட எவரும் அவளை எட்டி பார்க்கவில்லை
பசித்தால் தானே சமையலறைக்குச் சென்று சாப்பிடுவாள் எப்பொழுது தூங்குவாள் எப்பொழுது விழிப்பாள் என்று எதுவும் அவளுக்கு உரைக்கவில்லை ஏன் இன்று என்ன தேதி கிழமை என்று கூட அவளுக்கு நினைவில்லை அந்த நிலையில் தான் இருந்தாள் நந்தினி.
முதலில் கோபப்பட்டு தன் அறைக்கு சென்றவள் யாரிடமும் பேசவில்லை அறைக்குள்ளேயே வீம்பாக இருந்து கொண்டாள் அவங்க தானே என்னை திட்டுனாங்க அவங்களே என்கிட்ட வந்து பேசட்டும் நான் ஏன் பேசணும் அவங்கதான் என்னை அடிச்சது அவர்களே வந்து பேசட்டும் தனக்குள்ளே சங்கல்பம் எடுத்துக் கொண்டாள்.
ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் கணேசனும் சிவகாமியும் அவள் அறை பக்கமே வரவில்லை.
இவளும் இரண்டு நாட்களாக உண்ணாது உறங்காது இருந்தவள் தன் தாய் தந்தை இன்னும் தன்னிடம் வந்து பேசவில்லை என்று உறுத்த ஆரம்பித்தது.
ஒரு வேளை சாப்பாடு சாப்பிடாமல் படுத்தால் கூட என்னடா ஆச்சு என்று பரிவாக கேட்கும் அம்மா இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்தும் வரவில்லை.
இரவு நேரத்தில் தூக்கம் வராமல் இருந்தால் தன் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுக்கும் தன் தந்தையும் தன்னை தேடி வரவில்லை என்றதும் அவளுக்கு மனம் கேட்கவில்லை.
அவளும் இரண்டு நாட்களாக தன் தாய் தந்தை முன்பு சென்று இப்படியும் அப்படியும் அவர்கள் பார்வை வட்டத்தில் படுமாறு நின்று பார்த்தாலும் அவர்களிடம் பேச சென்றாலும் அவளை கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதுவே அவள் மனதை நிரம்பவே பாதித்திருந்தது.
சிறுவயதில் இருந்து செல்லமாக வளர்ந்தவள் இப்பொழுது தனியாக விடப்படவும் ஏதோ திக்கு தெரியாத காட்டில் விட்டது போல் ஆனாள்.
தன் தாய் தந்தை தன்னிடம் எவ்வளவு அன்பும் பரிவும் பாசமுமாக இருப்பார்கள் என்று தெரிந்தவள் இப்பொழுது தன்னை கண்டுக் கொள்ளாமல் அவர்கள் பாட்டிற்கு தங்கள் வேலையைப் பார்த்து கொண்டிருந்தது அவள் மனதை நிரம்பவே பாதித்தது
சுய அலசலில் ஈடுபட்டவள் தன்னால் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று தன் தவறை உணர்ந்து கொண்டாள்.
தன் தாயை நெருங்கியவள் அவர் கைகளைப் பற்றிக் கொள்ள சிவகாமியோ உடனே அவள் கையை உதறித் தள்ளினார்.
ம்மா என்று அதிர்ச்சியாக அவரை ஏறிட்டு பார்க்க யாருடி உனக்கு அம்மா.. என்னை இனிமேல் அம்மான்னு கூப்பிடாத என்று அந்த இடத்தை விட்டு நகர ப்ளீஸ் மா இங்க பாருமா நான் இனிமேல் அந்த மாதிரி பண்ண மாட்டேன் ப்ளீஸ்மா என்கிட்ட பேசுமா எனக்கு உங்களை விட்டால் யாருமா இருக்கா எனக்கு வேற யாருமே வேணாம்மா நீங்க மட்டும் போதும்மா..
இனிமேல் உங்க பேச்சைக் கேட்டு நடந்துக்கிறேன் ஒழுக்கமா இருக்கேம்மா என்று தன் அன்னையை கட்டிக் கொண்டு கதறி தீர்த்தாள்.
அவள் கதறி அழுவதை கண்ட சிவகாமிக்கு தாங்கவில்லை நந்துமா உன் நல்லதுக்கு தான்டா சொல்றேன் நீ அந்த மாதிரி பண்ணலாமா தப்பு தானே நம்ம தான் அந்த பையன் வேணாம்னு சொல்லிட்டு வந்தோம்..
அது அதோட முடிஞ்சி போச்சு.. அந்த பையனும் வேற வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு நல்ல படியா இருக்கும் போது அதை கெடுக்கிற மாதிரி நம்ம செயல் இருந்தா அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா.. அந்த பையன் வேற யாரையோ கட்டலை உன் அக்காவை தான் கட்டிருக்கான்.
அப்படி இருக்கும் பொழுது இப்ப அவன் உன்னோட அக்காவோட புருஷன் அது தப்பில்லையா? அதனால தான் கோபம் என்னோட வளர்ப்பு பொய்யாயிடுச்சே அப்படிங்கிறது தான் என்னால இன்னுமும் தாங்கிக்க முடியல என்று சிவகாமியும் கதறினார்.
உன்னோட வளர்ப்பு எல்லாம் தப்பில்லம்மா நான் தான் கொஞ்சம் புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன்மா சாரிமா நான் இனிமேல் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன் ம்மா என்கிட்ட பழைய மாதிரி பேசும்மா நீஎன்ன சொல்றியோ அதையே கேக்குறன் ம்மா என்று தன் தாயை அணைத்து கொண்டாள்.
அங்கு ஹாலில் இவர்களின் பேச்சை கேட்டப்படி அமர்ந்திருந்த கணேசனிடம் வந்தவள் அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா ப்ளீஸ் பா என்கிட்ட பேசுங்கப்பா நீங்க பேசலனா நான் யாருகிட்டபா போய் பேசுவேன் நான் தப்பு ப்பா நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புப்பா ப்ளீஸ் ப்பா சாரி ப்பா என்னை மன்னிச்சிடுங்க ப்பா நான் இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் ப்பா உங்க பேச்சு கேட்டு நான் நடந்துக்கிறேன் நான் தப்பு நான் ரொம்பவே தப்பு என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி தீர்த்தாள்.
அவள் தன் கைகளாலே கன்னம் கன்னமாக தன்னை அறைந்து கொண்டு அழ அதனை பார்க்க சகிக்காமல் கணேசன் தன் மகளை நெருங்கி அவள் கையை பற்றி கொண்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
நந்துமா நடந்து போனத விடுடா அதை மாற்ற முடியாது இனிமேல் நடக்க போறத நல்லபடியா நாம மாற்றலாம் உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் நீ எங்க தப்பா போயிடுவியா அப்படிங்கிறது தான் எங்களோடவருத்தமே வேற ஒன்னும் இல்ல இனிமே இந்த தவறை நீ பண்ணாம இருந்தாவே போதும் டா நாங்க ரொம்ப சந்தோஷமா இருப்போம்..
உனக்கு என்ன செய்ய விருப்பமோ அதையே பண்ணு படிக்கிறியா படி உனக்கு எப்போ கல்யாணம் பண்ணனும்னு தோணுதோ அப்போ என்கிட்ட சொல்லு மாப்பிள்ளை பார்க்கிறேன் இல்லை உனக்கு பிடிச்ச பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..
நீ நல்லபடியா இருந்தாலே போதும்டா எங்க மனசு நிறைஞ்சு போயிடும்.. என்று தந்தையாக அறிவுரை கூற அப்பா நான் காலேஜ் போறேன் ப்பா.. படிக்கிறேன் ப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் என்று தன் மனதை அவரிடம் கூறியவள் சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு தன் அறைக்கு வந்தவள் தன் கைப்பேசியை எடுத்து மித்ராவிற்கு சாரி என்று குறுஞ்செய்தி போட்டவளுக்கு அப்பொழுது தான் மனது லேசானது போல் இருந்தது.
இங்கு மருத்துவமனையிலோ ஆசி யாரையும் நிரஞ்சனா பக்கமே விடவில்லை அவனே அனைத்தும் அவளுக்கு செய்தான். யாராவது நான் கொஞ்ச நேரம் பாத்துக்கிறேன் நீ போய் ஓய்வெடு என்று சொன்னால் கூட நான் என் பொண்டாட்டிய பாத்துக்குறேன். நீங்க உங்க வேலைய பாருங்க என்பது போல் அவளிடம் நெருங்கவே விடவில்லை யாரையும் ..
நிரஞ்சனாவும் அவ்வப்பொழுது சலித்துக் கொள்வாள் என்ன மாமா இப்படி பண்ற என்று.. ஆனால் அவனோ அவள் பேச்சை காதிலேயே வாங்க மாட்டான்..
அந்த நவீன வசதி கொண்ட அறையில் ஆசியும் நிரஞ்சனாவும் மட்டுமே இருந்தனர் அனைவரும் வெளியே சென்றிருக்க நிரு ஆசீயை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன் என்ன பாப்பா வேணும் ஏதாவது குடிக்கிறியா ஜூஸ் போடவா என்று நகர பார்க்க அவன் கையை விடாமல் பிடித்துக் கொண்டவள் இங்க உட்காருங்க கொஞ்சம் பேசனும் என்று அவன் அமர்வதற்கு இடம் ஒதுக்கி தள்ளிப் படுத்துக் கொண்டாள்.
என்ன பேசனும் அதெல்லாம் அப்புறம் பேசலாம் இப்போ எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ற பேசாம படுத்து தூங்கு என்று கட்டளையிட தன் தொண்டையை வருடிக் கொண்டவள் தண்ணி வேணும் என்கவும் உடனே தண்ணீரை எடுத்து வந்தவன் அவளுக்கு மெதுவாகப் புகட்டினான்.
பசிக்குதா ஜூஸ் போடவாடி என்ற படியே அவள் அணிந்திருந்த உடை விலகியிருக்க அதனை சரிப் படுத்தியபடியே இவளிடம் கேட்டான்.
பசிக்கல நீ வா மாமா இங்க வந்து உட்காரு என்றாள் விடாப்பிடியாக.
அவனும் அவள் பக்கத்தில் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டவன் ஹிம்ம் சொல்லு பாப்பா என்ன பேசனும் உனக்கு தொண்டை வலிக்குதுன்னு சொல்ற அப்பறம் எதுக்கு இப்படி பண்ற இதுல இருமல் வேற வருது பயமா இருக்கு டி கொஞ்சம் அமைதியா படுத்து ரெஸ்ட் எடு டி நீ உடம்பு தேறுன பிறகு எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசு நான் கேட்கிறேன்..
அவன் தொண்டை தண்ணி வற்ற கத்திய வன் பேச்சைக் கண்டு கொள்ளாதவள் உதட்டை இப்படியும் அப்படியுமாக சுழித்துக் கொண்டாள்.
அவள் உதட்டு சுழிவில் கவரப் பட்டவன் தன் கலவரத்தை அடக்க பெறும்பாடு பட்டுப் போனான்.
தன் அவஸ்தையை அவளிடம் மறைக்க தன் பிடரி முடியைக் கோதித் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் பாப்பா தூங்குடி என்று பேச்சை மாற்றினான்.
மாமா எதுக்கு எனக்கு தாலி கட்டின .. அதுவும் என்னோட சம்மதம் இல்லாம கட்டியிருக்க என்று பெரிய பாராங்கல்லை அவன் தலையில் திக்கித் திணறி போட்டாள்.
ஏய் பாப்பா என்னடி இப்படி சொல்ற அப்போ உனக்கு விருப்பமில்லையா என்றான் அதிர்ச்சியாக.
அவளோ ஒன்றும் பேசாமல் அவனை அழுத்தமாக பார்த்திருந்தாள்.
பாப்பா அத்தை உன்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போறதா சொன்னாங்க அதான் தாலி கட்டிட்டா நீ என்னோட பொண்டாட்டி ஆயிடுவல்ல அப்புறம் என்னை கேட்காம எதுவும் பண்ண முடியாதுல்ல அதான் தாலி கட்டினேன் என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தான்.
ஒஹ் அப்போ தாலி கட்டினா தான் நான் உன் பொண்டாட்டியா மாமா..
அப்படி இல்ல டி
என்ன அப்படியில்லை.. ஹான் எங்க அம்மா கூப்பிட்டா நான் உடனே போயிடுவேனா என்று அவனை முறைக்க
ஹேய் சாரி டி உன்னை கேட்காம தாலி கட்டினத தப்பு தான் பாப்பா என்னை மன்னிச்சிடு உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே என்று பரிதவிப்புடன் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
மாமா எனக்கு மொட்டையெல்லாம் அடிச்சு உடம்புல பாதி இடத்துல காயம் இருந்தும் நான் உனக்கு வேணுமா பாரு இந்த காயம் ஆறி முடி வளருவதற்கு இன்னும் நாளாகும். நான் பார்க்கவே அசிங்கமா இருப்பேன் இருந்தும் நான் வேணுமா என்று கண்கள் கலங்க அவனிடம் கேட்க
அவள் கலங்கிய கண்களை துடைத்து விட்டவன் ஹேய் பாப்பா எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பேசுற முடிதானே போச்சு அதுக்கு போய் புலம்புற எனக்கு ரெண்டு நாளை உயிரே இல்லை தெரியுமா நீ இல்லாம நான் இருக்க மாட்டேன் உனக்கு ஏதாவது ஆச்சுனா நானும் உன் கூட வந்துருவேன்னு இங்க எல்லாரையும் பயமுறுத்தி வச்சிருந்தேன்.
அதான் நீ வந்துட்டியே இப்போ எதுக்கு அந்த பேச்செல்லாம் விடு ரெஸ்ட் எடு சும்மா இருந்தா இப்படித்தான் ஏதாவது யோசிப்ப தூங்கு என்று அவளை சாய்வாக படுக்க வைத்தான்.
அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள் மாமா மத்தவங்கெல்லாம் எங்க யாரையும் காணும் என்று வினவ நான் தான் எல்லாரையும் வீட்டுக்குப் போக சொன்னேன் .. நிரஞ்சன் சாப்பாடு வாங்க போயிருக்கான் … ஏன்டா என்னாச்சு என்று கேட்டபடி அவள் பக்கத்தில் வந்து அமர மாமா இன்னைக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சா அப்போ இன்னைக்கு தானே நமக்கு பர்ஸ்ட் நைட் என்று அவன் டீ ஷர்ட் காலரை நோண்டியபடி வினவினாள்.
பாப்பா தூங்கு என்று அதட்டினான்..
அந்த அதட்டல் அவளுக்கா அல்ல அவன் பேயாட்டம் போட்ட உணர்வுகளுக்கா அது அவனுக்கு தான் வெளிச்சம்..
மாமா இதுவே எனக்கு இப்படி ஆகலைன்னா இந்நேரம் நீ இப்படியா உட்காந்துருப்ப..
நான் மதுங்கும் பூனையாகவும் நீ பாயும் புலியாகவும் இருந்துருப்போம் தானே..
ஆனால் இப்போ எல்லாமே அடியோட மாறிப் போச்சு என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள்.
நிரு அமைதியா தூங்கு என்றான் தன் அவஸ்தையை மறைத்தபடி..
நான் தூங்கனும்னா எனக்கு கிஸ் வேணும் அப்போதான் தூங்குவேன் என்று சிறு பிள்ளையாக அடம்பிடித்தாள்.
ஏய் அதெல்லாம் ஒன்னும் வேண்டும் முத்தம் கொடுத்துட்டு அப்பறம் எப்படி சும்மா இருக்க முடியும் என்று முன்பாதியை சத்தமாக கூறியவன் பின் பகுதியை தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
இப்போ முத்தம் தரப்போறியா இல்லையா என்று அவளும் தன் பங்கிற்கு கத்தினாள்.
ஏய் இப்போ ஏன் டி இப்படி அலப்பறை பண்ற அமைதியா இரு தொண்டை வலிக்கும் என்றான் கரிசனமாக
உன் கரிசனம் யாருக்கு வேணும் முத்தம் தான் வேண்டும் என்பது போல எனக்கு முத்தம் வேணும் தா இல்லனா தூங்க மாட்டேன்..
பாப்பா வர வர சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிற ராங்கிதனம் பண்ற.. திமிரு ஜாஸ்தியாயிடுச்சு என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறினான்.
ஆமாம் ஜாஸ்தியாதான் இருக்கு அதை அடக்கத்தான் கூப்பிடுறேன் நீ அப்படியே ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற..
ஏய் நிரு ஏன் டி இப்படி அடம்பிடிக்கிற
நான் என்ன அடம்பிடிக்கிறேன் ஹான் சொல்லு என்ன அடம்பிடிக்கிறேன் உன்கிட்ட என்ன கேட்டேன் ஐஸ்வர்யாராய அழைச்சிட்டு வான்னு கேட்டேனா இல்ல அமித்தாபச்சனோட அம்மாவை கூப்பிட்டுவான்னு கேட்டனா ஒரு முத்தம் தானே உன்னை கேட்டேன் அதுக்கு இவ்வளவு பிகு பண்ணிக்கிற ரொம்பதான் பண்ற நீ எப்போ எனக்கு வந்து முத்தம் தரியோ அப்பதான் நான் தூங்குவேன் என்று சட்டமாக படுத்துக் கொண்டாள்.
ஐயோ இவ வேற என் அவஸ்தை புரியாம இப்பதான் இப்படி பண்ணனுமா வர வர இவளுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு ஒரு முத்தம் தான்னு ஆரம்பிச்சுட்டு இவ படுத்து தூங்கிடுவா அதுக்கப்புறம் படாதபாடு படப்போவது நான் தானே என் அவஸ்தை இவளுக்கு எப்ப தான் புரியப்போகுதோ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் அவளை தடுமாற்றத்தோடு பார்த்தான்.
மாமா இங்க பாரு உதடு எவ்வளவு வரண்டு போய் இருக்குன்னு நீ ஏன் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற நீ முத்தம் கொடுத்தால் அது சாஃப்டா ஆயிடும் தெரியுமா என்று ஒன்றும் தெரியாத பிள்ளை போல் அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக ஏய் நான் முத்தம் கொடுத்தா தான் அது ஈரப்பதமா ஆகணும்னு அவசியம் இல்ல நீ தண்ணி குடி அதெல்லாம் தானாக தன்னால ஆயிடும் என்று அதட்டினான்.
இப்ப என்னங்கற இப்போ முத்தம் தர முடியுமா முடியாதா ஒரு முத்தம் தானே கேட்டேன்… இப்ப கொடுக்க முடியுமா கொடுக்க முடியாதா ஒழுங்கா வந்து குடு என்று மிரட்டினாள்.
ச்சே ஒரு முத்தத்தை கூட இவ்வளவு மிரட்டி வாங்க வேண்டியது இருக்கு.. இவன் எப்போ எல்லாத்தையும் பண்ணி நான் பிள்ளை பெக்குறது.. என்று வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.
நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப பண்றடி நீ என்னை சீண்டி விட்டுட்டு வேடி பார்க்கிறதே வேலையா வச்சிருக்க இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாருடி என்று அவளருகே வர அவளோ வா வாவென்பது போல தன் கைகளை விரித்தாள்..
அவள் கைகளுக்குள் புகுந்து கொண்டவன் அவளை மெதுவாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் வைக்க அவளுக்கோ சப்பென்றாகப் போனது.
ஐயயே என்னாது இது.. இந்த முத்தம் கேட்கல.. இங்க கேட்டேன் என்று தன் இதழை சுட்டிக் காட்டியவள் அவன் இதழ்களை நெருங்கினாள்.
ஏய் டிரிப்ஸ் ஏறுது டி பார்த்து..
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கோப்பரேட் பண்ணு.. என்று அவன் இதழ்களை மெல்ல தன் இதழ்கள் கொண்டு பற்றிக் கொள்ள இருவருக்கும் படப்படவென பட்டாம்பூச்சிகள் ரெக்கை கட்டிப் பறக்க அந்த உயிர் முத்தத்தில் ஆழ்ந்து போயினர்.
கண்கள் கிறங்க அவனிடமிருந்து பிரிந்தவள் மாமா வா பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம் என்று அழைக்க போடீங்க வந்துட்டா பர்ஸ்ட் நைட் செகண்ட் நைட்னு தலையில் அடிப்பட்டதும் கழண்டுடுச்சு போல என்று வெளியில் பறந்து விட்டான்..
சிறிது நேரத்தில் நிரஞ்சனுடன் ஆசீ அறைக்குள் வரவே உதட்டில் உறைந்து போன வாடாத புன்னகையுடன் உறங்கி இருந்தாள்.
அவளுக்கு பெட்ஷீட்டை போர்த்தி விட்டவன் நிரஞ்சனிடம் திரும்பி நிரஞ்சா நீ வீட்டுக்கு போடா அதான் நிரு தூங்குறால்ல நான் பார்த்துக்கிறேன் ஏதாவதுன்னா உனக்கு போன் பண்றேன் சரியா..
சரிடா பாத்துக்கோ நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்றேன் என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
அனைத்தையும் சரி பார்த்துக்கொண்ட ஆசி நிரஞ்சன் சென்றதும் கதவை லேசாக சாத்திவிட்டு பக்கத்தில் இருந்த படுக்கையில் படுத்து கொண்டான்.
சற்று நேரம் பொறுத்து செவிலியர் உள்ளே வர எழுந்து கொண்ட நிரஞ்சனா செவிலியரிடம் இந்த ட்ரிப்ச கழட்டிடுங்க அக்கா எனக்கு வேண்டாம் நான் தூக்கத்துல கையை அசைச்சுட போறேன் என்று கூற அந்த செவிலியரும் சரி மா என்று அந்த ட்ரிப்ஸ் ஏறிய டியூப்பை கழட்டிவிட்டு நீ தண்ணி மட்டும் குடிச்சுக்கோ சரியா என்று விட்டு வெளியில் சென்று விட்டார்..
மெதுவாக எழுந்து வந்தவள் ஆசி படுத்திருந்த பெட்டை நோக்கி வந்தவள் அவன் கைவளைவில் தலை வைத்து அவனை அணைத்தவாறு படுத்து கொண்டாள்.
தன் பக்கத்தில் அரவம் கேட்கவே கண் விழித்தவன் நிரஞ்சனா தன் பக்கத்தில் படுத்திருக்கவும் என்னடி பண்ற அங்க போய் படு தலை வலிக்க போகுது என்ன நெனச்சுக்கிட்டு இருக்க உனக்கு நடந்திருக்கிறது எவ்வளவு பெரிய ஆபரேஷன் தெரியுமா? கொஞ்சமாச்சும் பேஷன்ட் மாதிரி நடந்துக்கோடி ஏன்டி இப்படி பண்ற என்று கடிந்து கொள்ள மாமா இன்னைக்கு ஃபஸ்ட் நைட் தான் நம்ம கொண்டாடல அட்லீஸ்ட் இப்படியாவது படுத்துக்கலாம்ல என்று கெஞ்ச சரி வா இந்த பெட் உனக்கு சௌகரியமா இருக்காது அந்த பெட்லயே படு நான் உன் கூட படுத்துகிறேன் வா என்று அவளை அழைத்துக்கொண்டு அவள் படுத்திருந்த பெட்டில் படுக்க வைத்து தானும் அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டான்…
மோகமுள் தீண்டும்…

Post a Comment