மோகமுள் -39





 மோகமுள் - 39 :


தங்களை நோக்கி வேகமாக வந்த காரை பார்த்த நிரஞ்சனா அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவாறு யூகித்தவள் தன் பக்கத்தில் இருந்த இருவரையும் தன் பலம் மொத்தத்தையும் கொண்டு பக்கவாட்டில் தள்ளிவிட்டிருந்தாள்.


என்ன என்று உணரும் முன்பே வேகமாக வந்த வண்டி அவளை இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டது.


இடித்த வேகத்தில் சற்று தொலைவில் அவள் தூக்கி எறியப்பட்டு இருக்க அனைத்தும் நொடி நேரத்தில் நடந்து முடிந்திருந்தது..


அதற்குள் அங்கு அக்கம் பக்கம் இருந்த மக்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.


சிலர் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க என்று கத்தினர். போச்சு அந்த பொண்ணு பேச்சு மூச்சில்லாம இருக்குறதை பார்த்தா ஸ்பாட் அவுட் போலவே என்று முணுமுணுத்தனர்.


சிலர் அடிப்பட்டு விழுந்தவர்களிடம் சென்றனர்.


நிரஞ்சனா தள்ளிவிட்ட வேகத்தில் தடுமாறி விழுந்த ஆசீக்கு நொடியில் நடந்த சம்பவத்தை கிரகிக்கவே அவனுக்கு நேரம் எடுத்தது. 


எழுந்தவன் தலையை உதறிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கு ரத்த வெள்ளத்தில் இவனை பார்த்தவாறு கிடந்த நிரஞ்சனாவை கண்டவன் ஐயோ பாப்பா என்று அவளை நோக்கி ஓடினான்.


அவளை நெருங்கியவன் பாப்பா என்று அவளை தன் மடியில் ஏந்திக்கொண்டு ஐயோ ரத்தம் டி பாப்பா பாப்பா என்று கதற நிருவின் கைகள் அவன் முகத்தை வருடிய அடுத்த நொடியில் தோய்ந்து கீழே விழுந்தது.


அவளோ தன்னவனின் நிலையைக் கண்டவள் கண்கள் சொருக மயக்க நிலைக்கு சென்று இருந்தாள்.


இடது பக்கமாக விழுந்த மித்ராவிற்கு கையில் அடிபட்டு மயக்கத்திற்கு சென்று இருக்க அங்கிருந்த மக்களில் சிலர் அவளுக்கு முகத்தில் தண்ணீரை தெளித்து அவளை எழுப்ப முயற்சித்தனர்.


கண்களை திறந்த அவளுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை.. கண் விழித்தவளின் காதில் ஆசீ கதறும் சத்தம் கேட்கவே தன்னை சூழ்ந்திருந்தவர்களை ஒதுக்கிவிட்டு அவனிடம் ஓடி வர அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிரஞ்சனாவை பார்த்து நிரு என்று அப்படியே மயங்கி சரியவும் ஆதி காரை எடுத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது..


அங்கு கூட்டமாக இருக்கவும் என்னவென்று பார்த்தவன் நொடியில் நிலைமையை புரிந்து கொண்டு ஆசீ மடியில் கிடந்த நிருவை தூக்கவும் ஆசீ மனம் பேதலித்தது போல நிருவை விட மறுக்க அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவன் அவன் அதிர்ந்த பார்வையை கண்டு வேதனையுற்றவன் நேரம் குறைவாக இருக்கவே டேய் போய் கார் கதவை திறந்து வை என்று கர்ஜித்தவன் ஆசீ மடியில் கிடந்த நிருவை தூக்கிக்கொண்டு கார் நோக்கி விரைந்தான்.


உடனே எழுந்த ஆசீ கார் கதவை திறந்து உள்ளே ஏறிக்கொண்டு ஆதி நிருவை பின் சீட்டில் படுக்க வைக்கவும் அவளை தன் மடியில் ஏந்தி கொண்டவன் ஒன்னும் இல்ல உனக்கு ஒன்னும் இல்ல ஒன்னும் ஆகாது நான் எதுவும் ஆக விட மாட்டேன் பாப்பா என்று அவளிடம் ஜெபம் போல பிதற்றிக் கொண்டே இருந்தான்.


நிரஞ்சனாவை பின் சீட்டில் படுக்க வைத்தவன் அங்கு மயங்கி கிடந்த மித்ராவை தூக்கி முன் சீட்டில் சாய்வாக அமர வைத்தவன் காரை மருத்துவமனைக்கு விரட்டினான். 


அங்கு பக்கத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றில் நிறுத்தியவன் நிருவை தூக்கிக்கொண்டு உள்ளே விரைந்தான். 


ஆசிக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை அங்கிருந்த அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார் என்று விட்டனர்..


மீண்டும் தன் காருக்கு விரைந்தவன் மித்ராவை நெருங்கி அங்கிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளிக்க மெதுவாக கண்களைத் திறந்தவளுக்கு சற்று முன் பார்த்த காட்சி நினைவு வரவே உடலில் ஏற்பட்ட நடுக்கத்துடன் அஃ .. அத்.. அத்தான் நிரு நிரஞ்சனா இரத்தம் என்று கதறிக்கொண்டு தேம்ப ஒன்னும் இல்ல ஹாஸ்பிடலுக்கு வந்துட்டோம் ஒன்னும் ஆகாது டாக்டர் பாத்துட்டு இருக்காரு ரிலாக்ஸ் கொஞ்சம் அமைதியா இரு பயப்படாத நிருவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஆறுதல் வார்த்தைகள் கூறி அவளை ஆசுவாசப் படுத்தினான்.


அவள் உடலில் ஏதேனும் அடிபட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தவன் அவள் இடது கையில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருக்க அவளை இழுத்து வா போகலாம் என்று மருத்துவமனைக்குள் அழைத்து சென்றான்.


அங்கு எப்படி விட்டு சென்றானோ அப்படியே கொஞ்சம் கூட அசையாமல் திக்ராமை பிடித்தது போல் நின்று கொண்டிருந்த ஆசீயை பார்த்து வேதனையுற்றவன் மித்ராவை அழைத்து சென்று பரிசோதித்து காயத்திற்கு மருந்து போட்டு அழைத்து வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர செய்துவிட்டு தன் தம்பியிடம் வந்தான். 


டேய் ஆசி என்று அவன் தோள் மேல் கை வைக்க அண்ணா பாப்பா போச்சு எவ்வளவு ரத்தம் கொஞ்சம் கூட வலி பொறுக்க மாட்டாளே ண்ணா என்ன ணா இப்போ பண்றது.. முகம் ஃபுல்லா ரத்தம் எப்படி தாங்க போறான்னு தெரியல வலிக்கும் ண்ணா என்று கதறினான்.


டேய் ஒன்னும் ஆகாது பயப்படாத இந்த மாதிரி நேரத்தில தான் மனசை திடப்படுத்திக்கிட்டு தைரியமா இருக்கணும்..


இங்க பாரு நிருக்கு எதுவும் ஆகாது என்று அவனைத் தேற்றி அமர வைப்பதற்குள் ஆதி படாதபாடு பட்டு போனான்.


ஆசீ நிருக்கு ஒன்னும் ஆகாது இப்படி நீ அழுதுட்டு இருக்குறத பாத்தா அவளே எழுந்து வந்து உன்னை அடிப்பாள். 


சின்ன புள்ள போல அழாதடா கண்ணை தொடை வா இங்க வந்து உட்காரு என்று இருக்கையில் அமர வைத்தவன் தன் வீட்டிற்கு அழைத்து மருத்துவமனைக்கு வருமாறு கூறினான்.


என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தெரியவில்லை அந்த மருத்துவமனையின் பெயர் மட்டும் சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்து விட்டான்.


நிரஞ்சனுக்கு அழைப்பு விடுக்க.. அவனுக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.


பிறகு தன்னை சமன்படுத்திக் கொண்டவன் நிரஞ்சனுக்கு எவ்வாறு சொல்வது என்று யோசித்து சற்று தன்னை திடப் படுத்திக் கொண்டு மீண்டும் நிரஞ்சனுக்கு அழைப்பு விடுத்தான். 


டேய் எப்படி மாமா இருக்க என்று வழக்கமான துள்ளலுடன் ஆரம்பிக்க இங்கு இவனுக்கோ வார்த்தைகள் பஞ்சமாகி போனது.


டேய் ஆதி இருக்கியா என்று நிரஞ்சன் வினவ இருக்கேன்டா நிரஞ்சா.. என்றவன் சற்று நிறுத்தி நம்ம நிருக்கு என்றவன் குரல் நடுக்கத்துடன் வர டேய் ஆதி என்னடா ஆச்சு நிருக்கு என்ன என்று பதட்டமானான் அந்த பக்கம்.


டேய் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு டா கொஞ்சம் அத்தை மாமாவை அழைச்சிட்டு வாடா அவங்க கிட்ட எதுவும் இப்போ சொல்லாத கூட்டிட்டு வாடா இன்னும் எதுவும் சொல்லல டா செக் பண்ணிட்டு இருக்காங்க நீங்க வாங்கடா என்றவனுக்கு அந்த பக்கத்தில் இருந்து பதில் வராது போகவே மச்சான் என்று ஆதி அழைக்க அந்தப் பக்கம் இருந்து நிரஞ்சன் மச்சான் நிருக்கு ஒன்னும் இல்ல தானடா என்று கேட்டவனுக்கு உடல் எல்லாம் நடுக்கமுற்று வேர்த்து வடிந்தது.


டேய் நீங்க வாங்க அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்று அதற்கு மேல் பேச முடியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.


வெளியே வந்த டாக்டர் ஆதியிடம் நெருங்கி பேஷண்ட்க்கு நீங்க என்ன வேணும் சார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நான் அவங்க ஹஸ்பண்ட் தான் டாக்டர் என் வைஃப் எப்படி இருக்கா என்று ஆசீ கேட்க ஆதி அவன் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.


ஒஹ்.. ஓகே வெல் உங்க வைஃப் தலையில் அடிபட்டு இருக்கு மூலையில் ரத்தக் கசிவு இருக்கா என்னன்னு பாக்குறதுக்காக ஸ்கேன் எடுக்க அனுப்பி இருக்கோம் அதை பாத்துட்டு தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு நர்ஸ் ஓடி வந்து சார் அவங்க சீட்டி ரிப்போர்ட் என்று நீட்ட தன் மூக்கு கண்ணாடியை ஏற்றி அந்த சீட்டி ஃபிலிமை வாங்கி லைட் வெளிச்சத்தில் பார்த்தார்.


சார் மூளையில் ரத்தக்கசிவு இருக்கு உடனடியாக ஆபரேஷன் பண்ணி ஆகணும் இல்லனா டேஞ்சர் அவங்க உயிருக்கே ஆபத்து என்று கூறியவர் உடனே அங்கிருந்த செவிலியரிடம் கன்சென்ட் வாங்கிடுங்க..


தியேட்டரை ரெடி பண்ண சொல்லுங்க குயிக் என்று துரிதப்படுத்தியவர் டியூட்டி டாக்டர் இங்க வர சொல்லுங்க என்றவர் ஆசியின் தோலை தட்டி விட்டு உள்ளே விரைந்தார். 


அங்கு வந்த டியூட்டி டாக்டர் ஹஸ்பண்ட் யார் சார் என்று கேட்க நான் தான் என்று ஆசியின் குரல் சுரத்தே இல்லாமல் ஒலித்தது.


அவனுக்கு மூளையில் ரத்தக்கசிவு என்று சொன்னதும் அவன் உலகம் நின்று விட்டது. சார் அவங்களுக்கு மூளைல ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதுனால எப்போ வேணாலும் அவங்க உயிருக்கு ஆபத்து வர நிறையவே வாய்ப்பு இருக்க.. சோ ஆபரேஷன் பண்றதுக்கு சம்மதம் அப்படின்னு சைன் மட்டும் பண்ணுங்க சார் என்று நீட்ட அவனுக்கு கைகள் நடுங்கியது.


நிரு பாப்பா இந்த மாமா கிட்ட வந்துடு ப்ளீஸ் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு உனக்கே தெரியும் தானே வந்துடு ப்ளீஸ் என்கிட்ட வந்துடு என்று மனதிற்குள் ஜபித்துக் கொண்டே அந்த படிவத்தில் கையெழுத்து போட்டான்.


இங்கு அதற்குள் சுமதியும் சக்கரவர்த்தியும் வந்து இருக்கவே சோர்ந்து போய் அங்கு சேரில் அமர்ந்திருந்த மித்ராவை நெருங்கியவர்கள் என்னம்மா ஆச்சு என்று அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மித்ராவை கேட்க அத்தமா நம்ம நிரு.. நிரு என்று தேம்பியவள் அவ்வளோ ரத்தம் உடம்பு ஃபுல்லா ரத்தம் ஆயிடுச்சு எங்க ரெண்டு பேரையும் தள்ளி விட்டுட்டா ஆனா அவளுக்கு இப்படி ஆயிடுச்சு அத்தமா? என்று கதறினாள்.


முகம் எல்லாம் சிவந்து அமர்ந்திருந்த ஆசியை நெருங்கியவர் ஆசிக் கண்ணா என்று அவன் தோளில் கை வைக்க அப்பா நிருப்பா என்று அவரைக் கட்டிக் கொண்டு கதறினான்.


ஆபரேஷன் தியேட்டரில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.


இங்கு குடும்பமே இடிந்து போய் அமர்ந்திருந்தனர்.


சுமார் ஒரு நான்கு மணி நேரத்திற்கு பிறகு வந்த மருத்துவர் ஆசியினருகே நெருங்கி அவங்க கண் திறக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்.. ஐ சி யூ ஷிப்ட் பண்ணினதும் அவங்களை பார்க்கலாம்..


இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது கோமா ஸ்டேஜ்க்கு போகவும் வாய்ப்பு இருக்கு சோ கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம் எங்களால முடிஞ்ச அளவுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டோம் இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரம் போனாதான் ஏதுவா இருந்தாலும் சொல்ல முடியும்..


அதுவரைக்கும் அவங்க ஐசியூல அப்சர்வேஷன்ல இருப்பாங்க நீங்க பார்க்கணும்னா டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா போய் பாத்துட்டு வாங்க என்று சென்றுவிட்டார். 


உணவில்லாமல் உறக்கமில்லாமல் அங்கேயே பழியாக கிடந்தனர்.


அந்த நேரம் தான் ஊர்மிளா நிரஞ்சன் வாசு மூவரும் பதறி கொண்டு ஓடி வந்தனர் இவர்களை நோக்கி.


ஆதி என்னடா ஆச்சு என் பொண்ணுக்கு ஆசி நீ எங்கடா போன என் பிள்ளையை விட்டுட்டு உன்னை விட்டு நகர மாட்டாளே.. என்னடா ஆச்சு என்று இருவரையும் பிடித்து கதறினார் ஊர்மிளா.


அத்தை என்றவனுக்கு வார்த்தை வரவில்லை..


ஐயோ பாவி மக நான் அப்பவே சொன்னேன் என்கூட ஊருக்கு வாடின்னு கேட்டாளா என் பேச்சை.. வரமாட்டேன் மாமா கூட தான் இருப்பேன்னு அடம் பிடித்து இருந்தாளே இதுக்கு தான் இருந்தியாடி இப்படி அடிபடுறதுக்கா இங்கேயே இருந்த என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறியவரை தேற்றப் படாத பாடு பட்டுப்போனார் சுமதி.


என் நிரு பாப்பாவுக்கு எதுவும் ஆகாது… ஆக விடமாட்டேன் அப்படி ஏதாவது ஆகி போனா என்ன விட்டுப் போயிட்டா நானும் அவ கூடவே போயிடுவேன் என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் கூறிய ஆசியைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போயினர்..


அதன் பிறகு ஊர்மிளா எழுந்து வந்தவர் அவனை நெருங்கி நீங்க ரெண்டு பேரும் வாழ வேண்டிய புள்ளைங்க கண்ணா அப்படி எல்லாம் பேசாத நிரஞ்சனாவுக்கு எதுவும் ஆகாது என்று ஆசிக்கு தைரியம் கூறியவர் அவன் கையை கெட்டியாக இறுக்கிப்பிடித்தவாறு அவன் அருகில் அமர்ந்து கொண்டார்.


சற்று நேரத்தில் ஒரு செவிலியர் வந்து பேஷண்ட ஒவ்வொருத்தரா போய் பாருங்க என்று கூறிவிட்டுச் சென்றார்.


ஆசி அமர்ந்த இடத்தை விட்டு நகரவே இல்லை..


ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்டு வந்தவர்கள் கண்களில் கண்ணீர் ஆறென பெருகியது.


ஐயோ நான் பெத்த மகளே உன்னை இந்த நிலைமையிலா நான் பார்க்கணும்.. கடவுளே என்னை எதுக்கு இன்னும் உயிரோட வச்சிருக்க என்று தன் மகளை பார்த்துவிட்டு வந்த ஊர்மிளா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ,


ஆதி ஆசியை நெருங்கி டேய் ஆசி போய் பாப்பாவ பார்த்துட்டு வா என்று அவனிடம் கூற நான் போக மாட்டேன் என்பது போல் ஒரு தலையைசைப்பு மட்டும் தான் வந்தது.


டேய் என்று அவனை நிரஞ்சன் இழுக்க நான் போக மாட்டேன் எனக்கு பயமா இருக்கு நான் போக மாட்டேன் என் நிருவ அந்த நிலைமையில் பார்க்க எனக்கு சக்தி இல்ல வேண்டாம் என்று அவன் திட்டவட்டமாக மறுத்தான்.


டேய் போய் பாத்துட்டு பேசிட்டு வாடா என்று மீண்டும் இழுக்க நடைபிணமாக எழுந்தவன் அவன் உயிர்ப்பை தொலைத்து இருந்தான்.


நடுங்கும் கரங்களால் அந்த கதவை தள்ளியவனுக்கு அங்கு கண்ட காட்சியை பார்த்து ஐயோ என்றவனுக்கு சத்தம் வராமல் இருக்க தன்னை கட்டுப்படுத்த வாயில் கை வைத்தவன் தன் நிருவின் நிலைமை கண்டு கதறி தீர்த்தான்.


அங்கு மொட்டை அடிக்கப்பட்டு தலையில் கட்டு போடப்பட்டிருக்க வாயிலும் மூக்கிலும் டியூப்புகள் சுவாசத்திற்காக சொருகி இருந்தார்கள்.


வாடி வதங்கிய கொடி போல் வேர் அறுந்த மரம் போல் படுத்திருந்தவளை கண்டு நெஞ்சம் பதைபதைத்து போனது.


அவள் கைகளை மெதுவாக பற்றி வலிக்குமோ என்பது போல் மென்மையாக வருடி கொடுத்தான்..


பாப்பா ஒழுங்கா என்கிட்ட வந்துடுடி விளையாடாத.. நீ இல்லன்னா நான் இருக்க மாட்டேன்னு உனக்கு தெரியும்ல ப்ளீஸ் எனக்காக வந்துடு நீ வரலனா நானும் உன் கூடவே வந்துருவேன் என்று கண்கள் கலங்கியபடி தன்னை வெகுவாக கட்டுப்படுத்திய படி அவளிடம் பேசிக் கொண்டிருக்க அவள் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது.


அதனை கண்டதும் சற்று நம்பிக்கை பெற்றவன் ஹேய் நான் பேசுறது கேக்குதாம்மா.. அழுது என்னை ஏமாத்த பாக்காத ஒழுங்கா வந்துடு என்று அவளிடம் பேசியவன் கொஞ்ச நேரம் அங்கு அவள் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க ஒரு செவிலியர் வந்து சார் ரொம்ப நேரம் இங்கே இருக்க கூடாது சார். 


அப்புறம் வந்து பார்க்கலாம் இப்போ கிளம்புங்க என்று கூற உடனே எழுந்து கொண்டவன் வெளியில் வந்தான். 


அவன் வந்ததும் ஆதி மற்றவர்களை நோக்கி நானும் ஆசியும் இங்க இருந்து பார்க்கிறோம். நீங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்க என்று கூற ஆதி நீ எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போடா நானும் ஆசியும் இங்க இருக்கோம் என்று நிரஞ்சன் கூறினான். 


மித்ராவும் சோர்வாக இருக்கவே சரி என்று விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான். 


இருந்த இரண்டு நாட்களும் அப்படியே கழிய இன்று மருத்துவமனைக்கு வந்த ஊர்மிளா அனைவர் முன்பும் நிரு கண் முழிச்சிட்டா டாக்டர் கிட்ட கேட்டு நான் சிங்கப்பூர் கூட்டிட்டு போறேன் இங்க வேண்டாம் என்று ஊர்மிளா கூற ஆசி அவரையே சிறிது நேரம் பார்த்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக ஆதியிடம் சொல்லிக் கொண்டு வெளியில் சென்றான். 


அவன் சென்ற சிறிது நேரத்தில் நிரஞ்சனா கண் விழித்து விட்டதாகவும் இன்னும் சற்று நேரத்தில் தனியறைக்கு மாற்றுவதாகவும் ஒரு செவிலியர் வந்து கூறிவிட்டுச் சென்றார்.


நிரஞ்சனாவை சற்று நேரத்தில் அரைக்க மாற்றிவிட்டு ஒரு செவிலியர் அவங்க கிட்ட எதுவும் பேச்சு கொடுக்காதீங்க நீங்க உணர்ச்சிவசப்பட்டு அவங்கள எமோஷனல் ஆக்காதீங்க என்று அவர் வெளியில் சென்று விட்டார்.


அனைவரும் உள்ளே வந்ததும் அவள் தேடியது என்னவோ ஆசியை தான் அவன் இல்லாமல் போகவே சுமதியை கேள்வியாக பார்த்தாள்.


அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவர் கொஞ்சம் வெளியே போயிருக்கான் வந்துருவான் என்றவர் நெருங்கி அவள் நெற்றியை வருடி கொடுத்தார்.


நேற்றே வாயில் மூக்கில் இருந்த டியூப்பை அகற்றி இருந்தனர்.


எப்படி இருக்க தங்கம் ஏதாவது பண்ணுதா என்று பரிவுடன் கேட்க கையால் தன் கழுத்தில் கை வைத்து வலிக்குது என்பது போல் முகம் சுளித்தபடி சைகை செய்ய சரியாகிவிடும் என்று அவளை தேற்றினார். 


வாசு மகள் தலையில் இருந்த கட்டினை வருடியவர் துக்கத்தை அடக்கி கொண்டார்.


நிரு நாம ஊருக்கு போயிடுவோமா என்று ஊர்மிளா மகளிடம் கேட்க அவள் ஏன் என்பது போல் கேள்வியாக அவரை பார்க்க அந்த நேரம் பார்த்து ஆசி வந்தவன் அவளை தான் பார்த்தான்.


அவளும் அவனைதான் மேலிருந்து கீழ் வரை நோக்கினாள்.


அவளை நெருங்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கண்களாலே விசாரித்தவனை அவள் பார்த்தாளே தவிர எதுவும் அவளால் பேச முடியவில்லை.


அம்மா அப்பா என்னை மன்னிச்சிடுங்க என்றவன் அவர்கள் எதுவும் புரியாமல் என்ன என்று பார்க்கும் பொழுதே அத்தை மாமா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த தாலி கயிற்றை எடுத்து நிருவின் கழுத்தில் அணிவித்தவன் ஊர்மிளாவை நோக்கி என் பொண்டாட்டி இங்க தான் இருப்பா அவளை நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்..


நீங்க உங்க ஊருக்கு போகணும்னா நீங்க போங்க என்று கூறினான்..


அதற்குமேல் ஊர்மிளா எதுவும் பேசவில்லை..


மோகமுள் தீண்டும்..


No comments