மோகமுள் -38
மோகமுள் - 38:
அத்தான் மீட்டிங்கிற்கு எல்லாம் ரெடியா இருக்கு எல்லாரும் வந்துட்டாங்க நீங்க வந்து ஸ்டார்ட் பண்ணினா கரெக்ட்டா இருக்கும் என்றபடி மித்ரா வர,
சரி வாடா போகலாம் என்றவன் அவளை அழைக்க நீங்க போங்க அத்தான் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன் வெளிய தான் அத்தம்மா மாமா எல்லாரும் இருக்காங்க என்றவள் பின் நினைவு வந்தவளாக ஆசி போரூர் பிரான்ச் வரைக்கும் போயிட்டு வரேன்னு சொன்னாங்க அவங்க வந்துட்டாங்களான்னு மட்டும் கொஞ்சம் செக் பண்ணுங்க அத்தான் ஒரு பைவ் மினிட்ஸ்ல நான் வந்துடறேன் என்று அங்கிருந்த பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.
இங்கு வெளியில் வந்த ஆதி தன் தம்பிக்கு அழைத்தான்.
அண்ணா வந்துட்டேன் என்று ஆசியின் குரல் பின்னால் கேட்க என்னாச்சுடா மித்ரா போரூர் பிரான்ச் போய் இருக்கிறதா சொன்னா ஏதாவது பிரச்சனையா என்று கேட்டபடி மீட்டிங் நடக்கவிருக்கும் அறைக்கு விரைந்தனர் அனைவரும் .
இல்லண்ணா ரொம்ப பெரிய பிரச்சினை எதுவும் இல்ல
இந்த மணி சூப்பர்வைசர் ஏதோ அங்க வேலை செய்றவங்ககிட்ட பிரச்சனை பண்ணினதா அங்கிருந்த மேனேஜர் எனக்கு கால் பண்ணினார்.
அதான் போய் பாத்துட்டு வந்தேன் அவனை வேலையை விட்டு தூக்கிட்டேன் அண்ணா என்று கூறினான்.
ஏன் என்பது போல் ஆதி பார்க்க ஆசீ அவன் பதில் கூறும் விதமாக அவன் அங்க இருக்கிற நார்த் இந்தியன்ஸ்க்கு ஒழுங்கா சம்பள பணம் கொடுக்கிறது இல்ல போல இதை தட்டி கேட்ட அந்த பசங்களுக்கும் அவனுக்கும் இன்னைக்கு வாக்குவாதம் ஆகி அடிதடி வரைக்கும் போயிருச்சு அண்ணா அதான் போய் பாத்துட்டு வந்தேன்..
நான் போய் என்ன ஏதுன்னு விசாரிக்க போனேன் அவன் ஓவரா பேசுறான் அதான் வேலையில் இருந்து தூக்கிட்டேன் என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தான்.
அவன் ரொம்ப நாளாவே சரியில்லடா தூக்கிட்டல்ல விடு பாத்துக்கலாம் என்று கவனக்குறைவாக விட்டதுதான் தவறோ.
இங்கு மித்ரா மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்ல விரைந்தவளின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வரவும் என்னவென்று பார்க்க ஐந்து எண்கள் உடைய இலக்கங்களில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
என்ன இது புது நம்பரா இருக்கு என்று யோசித்தவாரே அதனை திறந்து பார்க்க அதிலிருந்த செய்தியை கண்டு அதிர்ந்தாள்.
இந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட்குள்ள நீங்க வராதீங்க அப்படி மீறி வந்தீங்க அப்படின்னா நடக்கப்போற எதுக்கும் நான் பொறுப்பில்லை அதுக்கப்புறமும் ஏதாவது ஆச்சுன்னா என் கையில எதுவும் இல்ல..
அப்படி இந்த ப்ராஜெக்ட் எடுத்துதான் ஆவேன் என்று முனைப்போடு இருந்தால் நிறைய உயிர் போகும் என்று அத்தோடு முடிந்திருந்தது அந்த குறுஞ்செய்தி.
அந்த இலக்கத்தை எடுத்து ட்ருகாலரில் போட்டு பார்க்க அப்படி ஒரு இலக்கமே இல்லை என்று வர இவளுக்கு இது என்னடா புது தலைவலி என்று நினைத்தவள் மீட்டிங்கிற்கு வர சொல்லி ஆதி அழைக்கவே அங்கு செல்ல அந்த குறுஞ்செய்தி வந்ததை மறந்தே விட்டாள்.
இங்கு மீட்டிங் அறையில் ஆதியின் குரல் கணீரென்று ஒலித்தது.
மனது சந்தோஷமாக இருந்தால் அனைத்தும் சுகமாகவே நடக்குமாம் அதுபோலத்தான் இங்கும் இரண்டு வாரம் முன்பு வரை மனதை அழுத்தி இருந்த பாரம் அனைத்தும் பனிக்கட்டி போல கரைந்து போகவே அவனுக்கு மனம் லேசாகி இருந்தது.
அதன் பிறகு தான் எதிலும் தன்னை முழு கவனத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. அதற்கு காரணம் மித்ரா என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பங்குதாரர்களிடம் இந்த ப்ராஜெக்ட் பத்தி விரிவாக கூறினான்..
அவன் பேச பேச மித்ராவிற்கு அவனை விட்டு கண்களை இங்கும் அங்கும் திரும்ப முடியவில்லை.
நடுநாயகமாக நின்றிருந்தவன் அந்த வட்ட மேசையின் முன் நின்று பேச ஆரம்பித்தான்.
இது கவர்மெண்ட் ப்ராஜெக்ட் என்று உங்களுக்கே தெரியும் இந்த ப்ராஜெக்ட்டுக்கு ஏகப்பட்ட காம்பெடிஷன் இருக்குன்னு நல்லாவே தெரியும் சோ நம்ம பெஸ்ட் கொடுப்போம்.
முன்னூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் இது நமக்கு மட்டும் கிடைச்சிடுச்சுன்னா இது ஒரு மைல் கல் போல தான் சோ இந்த ப்ரோஜெக்ட் பத்தின டீட்டையில்ஸ் எல்லாமே கான்ஃபிடென்ஷியலா தான் வச்சிருக்க போறேன்.. எதாவது அப்ஜக்ஷன் இருந்துச்சுன்னா எனக்கு தயங்காம சொல்லுங்க என்று கூறினான்.
சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்து வரவே அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
மித்ராவும் ஆதியும் பின்னர் வருவதாக கூறவே மற்ற மூவரும் வீட்டிற்கு சென்றனர்.
இங்கு தன் அலுவலக அறைக்குள் ஆதியுடன் மித்ராவும் உள்ளே வந்தவள் மேசை மீது இருந்த பைலை எடுத்து ஏதோ பார்க்க அவளை அப்படியே இடையூடு கையிட்டு பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன் என்ன மிஸஸ் மன்மதன் பார்வை எல்லாம் பலமா இருந்துச்சு.. என்று தன் தாடையால் அவள் கன்னம் தேய்த்து அவள் கழுத்து வளைவில் குட்டி முத்தம் பதிக்க இவளுக்கு அடிவயிற்றில் காதல் தீ பற்றிக் கொண்டது.
அவளை தன்னை நோக்கி திருப்பியவன் எதுக்கு டி அப்படி பார்த்த என்றான் அவள் முக வடிவை அளந்து கொண்டே
நா.. நான்.. நானா? நான் எங்க பார்த்தேன் நான் யாரையும் பார்க்கலை என்று சிவந்த முகத்தை மறைக்க மீண்டும் திரும்பி நின்றுக் கொண்டாள்.
இன்னும் அவளோடு ஒட்டி அவளை தன்னோடு இருக கட்டிக் கொண்டவன் அவள் வாசம் நுகர்ந்து தன் நுரையீரல் முழுக்க சேமித்து கொண்டவன் யூ ஆர் கில்லிங் மீ மித்ரா என்று அவள் இடையில் கைகள் விளையாட அவன் முகமோ கழுத்து வளைவில் புதைந்து கொண்டது.
சற்று நேரம் அப்படியே அவன் அணைப்பில் நின்றவள் அத்தான் என்றாள் ஹஸ்கி குரலில்.
மகுடிக்கு கட்டுப் பட்ட பாம்பு போல ஹிம்ம் என்றானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அவன் தான் பேசவில்லை ஆனால் அவன் கைகளும் உதடுகளும் அவள் உடலில் பல கதை பேசிக் கொண்டிருந்தன..
இதற்கு மேல் தாங்காது என்று உணர்ந்தவள் அத்தான் வீட்டுக்கு போகலாமா என்றாள் தன் உடலில் அத்துமீறிய அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தப்படி.
அவளுடன் இழைந்து கொண்டே நோ மித்ரா அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாது என்றவன் வார்த்தைகள் தேனில் ஊறியது போல கரக்கரப்புடன் வந்தது.
இங்கு எப்படி அத்தான் என்றாள் ஒருவித நடுக்கத்துடன்.
அதனை உணர்ந்து கொண்டவன் சரி வா போகலாம் என்று அவளை வீட்டிற்கு தள்ளிக் கொண்டு சென்றான்.
காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆதிக்கு கால் வந்தது அதனை எடுத்து காதில் வைக்க என்ன மச்சான் புது பொண்டாட்டி கூட இருக்கவும் எங்க நினைப்பெல்லாம் உனக்கு சுத்தமா இல்ல தானே என்று அந்த பக்கம் வீர் கேட்க டேய் மச்சி அப்படியெல்லாம் இல்லடா உன்னை மறக்க முடியுமா டா என் வாழ்க்கையில் விளக்கேத்தி வச்ச விடிவெள்ளி டா நீ என்று கூறியவன் வெட்கத்தில் பிடரி முடியை கோதினான்.
சரி சரி வெட்கப்படாதடா யாராவது பார்த்து பயந்துட போறாங்க என்று அவனை கலாய்த்தான்.
பக்கத்தில் இவன் அளப்பறை தாங்க முடியாத மகேன் அவனிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கியவன் எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும் எல்லாம் ஓகே தானே என்று கேட்க எல்லாமே ஸ்மூத்தா போகுது மச்சான் தேங்க்யூ சோ மச் டா. உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன் டா என்று கூறினான் உணர்ச்சிவசப்பட்டு.
அந்தப் பக்கம் இருந்த வீர் ரொம்ப பொங்காத ஃபீலிங்கஸ கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு ஒழுங்கா சீக்கிரம் எங்களுக்கு சிங்கக்குட்டி மாதிரி ஒரு பையனும் மான்குட்டி போல ஒரு பொண்ணும் வேணும் இல்லன்னா மித்ராவை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவோம் என்று மிரட்ட சீ போங்கடா என்று அழகாக வெட்கப்பட சரி சரி சும்மாதான் மச்சி எப்படி இருக்கீங்கன்னு கேட்க தான் கால் பண்ணினோம் டேக் கேர் மச்சி பாய் என்ஜாய்
ஓகேடா பாய் என்று அவன் கைபேசியை அனைத்து வைத்தான்
பக்கத்தில் அமர்ந்து இருந்த மித்ரா குறுகுறுவென அவனை தான் வைத்த கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
அவளை திரும்பி பார்த்தவன் என்னடி மித்து அத்தானை இப்படி அடிச்சு சாப்பிடுற மாதிரி பாக்குற என்று கேட்க இல்லத்தான் உங்கள பார்த்தா கடிச்சு சாப்பிடணும் போல தான் இருக்கு அவ்ளோ அழகா இருக்கீங்க அத்தான் என் கண்ணே பட்டுடும் போல வீட்டுக்கு போனதும் சுத்தி போட சொல்லணும் முதல்ல
என் அத்தான் இவ்வளவு அழகா பிறந்து தொலைச்சீங்க பாருங்க இப்போ எனக்கு தான் பிரச்சனை என்று கூற அவளை என்ன என்பது போல் சிரிப்புடன் பார்த்தான்.
நீங்க சிரிச்சு சிரிச்சு மயக்குறீங்க அத்தான் நான் தான் உங்ககிட்ட நேரம் காலம் தெரியாம விழுந்து கிடக்கிறேன் நீங்க என்னை ரொம்ப டெம்ப் பண்றீங்க அத்தான் என்று குறை வேறுபட்டுக் கொண்டாள்.
ஆமா ஏதோ உனக்கு பிரச்சனைன்னு சொன்னியே என்ன பிரச்சனை அதை சொல்லவே இல்ல என்று கேட்க ஆமா நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க உங்கள பாதுகாப்பதே எனக்கு பெரிய விஷயமா போயிடும். அதுவும் ஆபீஸ்ல ஒர்க் பண்ற பாதி பொண்ணுங்க கண்ணு உங்க மேல தான்
யாரு எப்போ பார்ப்பாளுங்கன்னு நான் பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா யூ ஆர் டிரைவிங் மீ கிரேஸி அத்தான்.
இனிமேலும் யாராவது உங்களை சைட் அடிச்சா அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும் அத்தான் என்கவும் வீடு வரவும் சரியாக இருந்தது
உன்னோட இன்னொரு முகத்தை அப்புறம் பார்க்கலாம் இப்போ வீடு வந்துடுச்சு இறங்குடி நான் என்னோட இன்னொரு முகத்தை காமிக்கிறேன் என்றபடி இறங்க உள்ளுக்குள் அதிர்ந்து ஐயோ என்றவள் வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை,
உள்ளே வந்ததும் நிரூ ஆதியை பிடித்துக் கொண்டாள்.
ஆதி மாமா வீட்ல இருந்து ஒரே போர் தெரியுமா எங்கேயாச்சும் வெளியே போகலாமா என்று ஆசையாக கேட்க போகலாம் டா ஈவினிங் ரெடியா இருங்க போகலாம்..
அவன் உடனே ஒத்துக் கொண்டதும் குதூகலமானவள் இந்த ஆசி சரியான கஞ்சம் மாமா எங்கேயுமே என்னை அழைச்சிட்டுப் போக மாட்டேங்குறான் சரியான சோம்பேறியா இருக்கான் என்று கூற அங்கு அவளை முறைத்துக் கொண்டிருந்த ஆசியை பார்த்து கண்ணடித்தாள்.
தனியா சிக்குடி என் கையில கைமா தான் இன்னைக்கு என்று உதடு அசைக்க இவளும் வெயிட்டிங் என்று பதிலுக்கு பறக்கு முத்தம் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
இங்கு தங்கள் அறைக்குள் வந்தவர்கள் யார் முதலில் நெருங்குவது என்று தங்களுக்குள்ளே போட்டி போல
இவள் வேலைக்கு ஆக மாட்டாள் ரொம்ப பாடா படுத்துறா கொஞ்சமாவது நெருங்குகிறாளா என்று இவன் நினைத்துக் கொண்டிருக்க இந்த பக்கம் மித்ரா என்ன இன்னும் எதுவுமே பண்ணல என்று யோசித்தவள் மெதுவாக தலையை தூக்கி திரும்பி பார்க்க அவனும் அவளை தான் உஷ்ணக் கொதிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்
அவன் பார்வையே அவளை படபடக்க வைக்க அதனைப் போக்க அவனிடமே தஞ்சம் அடைந்தாள்.
அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவன் அவளை தன் ஆளுகைகள் கொண்டு வந்து என்னடி டெம்ப்டிங்கா இருக்கு கடிச்சு சாப்பிடுவேன் அது இதுன்னு சொன்ன இப்ப எதுவும் பண்ணாம இருக்க எல்லாமே சும்மா பீலாவா என்று அவளை சீண்ட அத்தான் என்று முறைக்க சிங்கத்திற்கு பிடரி சிலிர்த்தது.
என்னடி நீ மொறச்சாலும் அதுதான் உண்மை. சும்மா வாய் தான் உனக்கு ஆனா செயல் ஒன்னும் தரமா இல்லையே என்று மீண்டும் அவளை சீண்ட அப்புறம் என்ன நடந்திருக்கும் ஒரு மான்குட்டி சிங்கத்தை வேட்டையாடிடுச்சு.
தான் கட்டிலில் ஆளுமை செலுத்துவதை விட அவள் ஆளுமையில் விரும்பி விழுந்தவன் ருசி கண்ட பூனையானான்.
இனி அவளை விடுவானா மொத்தமாக கொள்ளையிட்டுக் கொண்டான்.
பிற்பகல் 3 மணி போல நால்வரும் கிளம்பி வெளியே சென்றனர்.
முதல் ஒரு மாலுக்கு செல்ல அங்கு தனக்கு தேவையான அனைத்தையும் நிரு வாங்கி குவித்தவள் ஆசியை பாவமாக பார்த்து வைத்தாள்.
அவள் பார்வையைக் கண்டு கொண்டவன் பாப்பா உனக்கு என்ன வேணுமோ எல்லாமே வாங்கிக்கோ என்றான் அதன் பிறகு சும்மா இருப்பாளா அந்த மாலையே ஒரு அலசு அலசிக்கொண்டிருந்தாள்.
இங்கு மித்ராவோ அங்கிருந்த பளிங்கு சிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
அனைத்தும் பளிங்காலானது..
பார்ப்பவரின் கண்களை கவரும் வண்ணம் இருக்க அங்கிருந்த ஒரு சிலையை வருடி கொடுக்க என்னடி புடிச்சிருந்துச்சுன்னா எடு என்கவும் அந்த சிலையை அவனிடம் காண்பித்தவள் அத்தான் இது நீங்க இது நான் இதுபோல எப்பொழுதும் நாம் பிரியாமல் இருக்கணும் என்று உணர்ச்சி வசப்பட மித்து எனக்கு பிரச்சனையே இல்ல இப்படி கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறதுக்கு கசக்கவா செய்யும் என்று அவளை இடம் பொருள் ஏவல் பார்க்காமல் அணைக்க வர அவன் செயலை கண்டு அதிர்ந்தவள் ஐயோ அத்தான் என்று விலகி நின்று கொண்டாள்.
என்னடி நீ தானே எப்பொழுதும் இப்படி இருக்கணும்னு சொன்ன என்று அந்த சிலையை காட்டிக் கேட்க ஆமா தான் சொன்னேன் அதுக்குன்னு இப்படியா வெளியே எப்படி அத்தான் கூச்சமா இருக்குல்ல எல்லாரும் பாப்பாங்க என்று சிணுங்கினாள்.
சரி சரி வா அதை எடுத்துக்கோ என்று அந்த சிலையை பேக் பண்ண சொல்லிவிட்டு வந்தவன் எங்க இந்த ரெண்டு வானரமும் எங்கேயாவது அடிச்சுட்டு நிக்க போகுதுங்க என்று சொல்லி வாயை மூடவில்லை அங்கு இரண்டு பேரும் பிராண்டிக் கொண்டுதான் இருந்தனர்.
எதுக்குடா அந்த பொண்ண பார்த்த என்று எரிச்சலாக கேட்க பாப்பா அந்த பொண்ணு பார்க்க அழகா இருந்தா அதான் பார்த்தேன் என்றவனை பார்த்து முறைத்தாள்.
அழகை ஆராதிக்க கத்துக்கோடி என்று கண்ணடித்தான்
ஏன்டா எரும மாடு நான் இருக்கும் போது இப்படி சைட் அடிக்கிற அப்போ நான் இல்லாத போது என்னவெல்லாம் பண்ணுனியோ என்று அவனை அடி மொத்தினாள்.
அவர்கள் இருவரையும் பிரித்து விட்ட ஆதி டேய் ரெண்டு பேரும் இங்க வந்தும் உங்க சேட்டையை ஆரம்பிச்சிட்டீங்களா என்று சலித்துக் கொண்டவன் மித்ராவிடம் திரும்பி இவங்க ரெண்டு பேரையும் இங்கேயே விட்டுட்டு வா மித்ரா நாம ஃபுட் கோர்ட் போகலாம் என்று முன்னாள் நடக்க அத்தான் எனக்கு ஐஸ்கிரீம் என்று மித்ரா அவன் பின்னால ஓட எனக்கும் என்று இருவரும் சண்டையை மறந்து அவர்களை பின்தொடர்ந்தனர்.
அங்கு சென்று அனைவரும் ஐஸ்கிரீமை அடித்து பிடித்து ஒருவாறு சாப்பிட்டுவிட்டு வெளியே வர மூவரையும் இங்கேயே நிற்குமாறு விட்டுவிட்டு ஆதி பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றான் வண்டியை எடுத்து வருவதற்காக..
அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது ஏதோ தங்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டிருக்க இவர்களை நோக்கி வேகமாக ஒரு கார் வரவே அனைத்தும் சில நொடிகளில் நடந்து முடிந்திருந்தது..
மோகமுள் தீண்டும்…

Post a Comment