மோகமுள் -37
மோகமுள் - 37:
அன்று காலையிலேயே ஆதி மிகவும் பரபரப்பாக இருந்தான்.
அப்பொழுது தான் குளியலறையில் இருந்து அவனை நோட்டம் விட்டுக் கொண்டே தலையை துவட்டியவாறு வந்த மித்ரா என்ன அத்தான்? என்ன ஆச்சு? காலையிலேயே இவ்வளவு அவசரம் எதுக்கு? என்ன ஆச்சு? என்றவாறு அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.
இந்த ஒரு மாதத்தில் அவள் நெற்றியில் இருந்த காயம் ஆறி வடுவாக மாறி இருந்தது.
அதனை வருடி விட்டவன் சாரிடா பேபி என்று தானும் அணைத்துக் கொள்ள தினமும் இது நடக்கும் செயல் என்பது என்பதால் ஓகே டா பேபி என்று அவனை போலவே கலாய்த்தாள்.
அவனை அண்ணார்ந்து பார்த்து இதை நீங்க விட மாட்டீங்களா அத்தான் அந்த காயம் ஆறி போய் ரொம்ப நாள் ஆச்சு இன்னும் அதை பார்க்கும் போதெல்லாம் சாரி சாரின்னு எப்பாஹ் எத்தனை சாரி என்று சலித்துக் கொண்டவளின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன் தொடர்ந்தான்.
இன்னைக்கு ஆரனும் சாராவும் ஜெர்மனியில் இருந்து வராங்க நான் போய் பிக்கப் பண்ணிட்டு வரேன்.
வா உன்னை ஆஃபீஸ்ல விட்டுட்டு நான் அப்படியே ஏர்போர்ட் போயிட்டு வரேன் என்றவன் அவளை கிளம்பு கிளம்பு என்று அவசரப்படுத்தினான்.
அத்தான் நான் இப்படியேவா வர்றது என்று பாதி சேலை கட்டியும் கட்டாமல் அவனிடம் காட்டி கேட்க எனக்கு பிராப்ளம் இல்லடி என்று அவளுடன் இழைய ஆஹா ஆபீஸ்க்கு மட்டையை போடலாம்னு பிளானா நோவே அத்தான்.
இன்னைக்கு அந்த கவர்மெண்ட் ப்ராஜெக்ட் பற்றி நம்ம கம்பெனி ஷேர் ஹோல்டர்ஸ் கிட்ட பேசணும் முக்கியமான மீட்டிங் இருக்கு கிளம்புங்க வாங்க போகலாம் என்று அவசரமாக புடவையைக் கட்டிக் கொண்டவள் அவனை இழுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
இப்படித்தான் இரண்டு வாரமாக அவளுடன் பசைப் போட்டது போல ஒட்டிக் கொள்வான். அவனை சரிக்கட்டி அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகி விடும்.
அங்கு அனைவரும் ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க உன்னால் தான் லேட் என்பது போல் ஆதியை மித்ரா முறைத்தாள்.
அதையெல்லாம் அவன் கண்டுக்கொள்ளவில்லை.
யாருக்கு தெரியாமல் அவள் இடையில் கிள்ளி துள்ள விட்டவன் அவள் முறைக்கவும் பதிலுக்கு ஒற்றை கண்ணடித்து அவளை சிவக்க வைத்தான்.
இவர்களும் சென்று அங்கு அமர்ந்தார்கள்.
சக்கரவர்த்தி ஆதியிடம் என்னப்பா இன்னைக்கு ஏதோ மீட்டிங்ன்னு சொன்ன என்று விவரம் கேட்க ஆமாம்பா நீங்களும் அம்மாவும் வந்துருங்க என்றவன் ஆசியை பார்த்துக்கொண்டே முன்னூறு கோடி பிராஜெக்ட் கவர்மெண்ட் பிராஜெக்ட் ப்பா.
ஆசீ கிட்ட தான் கொடுக்கலாம்னு இருக்கேன் என்று சொல்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசிக்கு புரை ஏறியது.
அண்ணா அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்டா ? நான் எப்படி அண்ணா ? வேண்டாம் அதெல்லாம் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்று அவன் முடித்துக் கொள்ள ஆசீ தைரியமா பண்ணுடா நாங்க தான் இருக்கோம்ல என்று அவனை ஊக்கப்படுத்த நோ அண்ணா வேண்டாம் இது சரிப்பட்டு வராது நீங்க பண்ணுங்க நான் கூட உங்களுக்கு ஹெல்புக்கு இருக்கேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.
சரி மீட்டிங் மதியம் பன்னிரண்டு மணிக்கு எல்லா போர்ட் ஆஃப் மெம்பர்ஸ் வராங்க கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும் கவர்மெண்ட் ப்ராஜெக்ட் வேற சோ நமக்கு கிடைச்சா நம்ம இண்டஸ்டிரியை இன்னும் டெவலப் பண்ணலாம் என்று ஆதி கூற எல்லாம் கிடைக்கும் ப்பா உன்னோட உழைப்பு போடு கண்டிப்பா கை மேல பலன் கிடைக்கும் என்று சுமதி கூறினார்.
சரிமா நாங்க கிளம்புறோம் என்று சாப்பிட்டதும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
இங்கு தன் அறையில் கிளம்பி கொண்டிருந்த ஆசியிடம் வந்த நிரஞ்சனா ஏன் மாமா பண்ண மாட்டேன்னு சொன்ன ? மாமா தான் உன்னை எடுத்து பண்ண சொல்றாங்கல்ல என்று கேட்க அவளை ஏன் என்பது போல் கூர்மையுடன் பார்த்தான்.
அவங்களே இப்பதான் சந்தோஷமா இருக்காங்க அவங்க கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும் அவங்க இந்த ப்ராஜெக்ட் பண்ணினா அவங்களால ப்ரீயா இருக்க முடியாது எப்பொழுதும் வேலை வேலைன்னு இருப்பாங்க அதுக்கு தான் சொன்னேன் என்று கூற அட ஆமாம் பாப்பா நான் இதை பற்றி யோசிக்கல பாரேன்.
சரி சரி நான் பார்த்துக்கிறேன் என்று கூற சொன்னால் மட்டும் பத்தாது செய்யணும் அவங்க வெளியே போகவே இல்ல நாம தான் ஏதாவது பண்ணி வெளியே கூட்டிட்டு போகணும் அதுக்கு ஐடியா பண்ணு மேன் நீ .
எருமை கணக்கா வளர்ந்து இருக்கியே தவிர உனக்கு மூளை வளரல என்று வார அடிங்க என்ற அவளை விரட்டினான் அவன் கையில் சிக்காமல் அங்கும் இங்கும் ஓடி அவனுக்கு போக்கை காட்டிக் கொண்டிருந்தவள் தடுக்கி விழப் போக ஹேய் நிரு பாத்துடி என்று ஒரு எட்டில் வந்து தாங்கி பிடித்துக் கொண்டவன் சேட்டை சேட்டை என்று அவள் தலையில் செல்லமாக கொட்டியவன் அவள் சிவந்த கன்னத்தில் முத்தம் பதித்து சரி வரியா ஆபீஸ்க்கு போயிட்டு மீட்டிங் முடிச்சிட்டு வந்துரலாம் என்று அவளை கூப்பிட நீயே அங்க போய் சும்மா தான் இருக்க போற நான் எதுக்கு என்று அவனை மோசமாக டேமேஜ் செய்தாள்.
அவள் கன்னத்தில் கடித்து அவளை அவற விட்டவன் இருடி மீட்டிங் முடிச்சுட்டு வந்து உன்னை வச்சுக்கிறேன் என்று மிரட்ட வச்சுக்கறதுனா இப்பவே வச்சுக்கோ அப்புறம் எல்லாம் நான் உனக்கு கிடைக்க மாட்டேன் என்று விளையாட்டாக கூறினாள்.
ஆனால் அது உண்மையில் நடக்கப்போவது இருவருமே அறியவில்லை.
வெளியே செல்ல முற்பட்டவனை இழுத்து அணைத்து கொண்டவள் மாமா நான் பேஷன் டிசைனிங் தான் முடிச்சு இருக்கேன் அது உனக்கே தெரியும் அடுத்து என்ன பண்ணலாம்னு ஐடியா சொல்லுடா என்று கேட்கவும் அவளுடன் சென்று அங்கிருந்த சோபாவில் அவளை அமர்த்தி தானும் அமர்ந்து கொண்டவன் சொல்லு பாப்பா என்ன பிளான் பஸ்ட் உன்னோடதை சொல்லு என்று சீரியஸ் மோடுக்கு மாறி கேட்க எனக்கு என்ன பிளான் ? ஒன்னும் இல்லையே இந்த ரெண்டு வருஷமா நீ பேசாததால நான் ஒண்ணுமே பண்ணல அப்படியே இருந்துட்டேன் இப்பதான் ஏதாவது பண்ணனும்னு தோணுது.
நீங்க எல்லாரும் ஆபீஸ் போயிடுறீங்க எனக்கு போர் அடிக்குது அதான் ஏதாவது பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு அதுக்குத்தான் உன்கிட்ட கேக்குறேன் என்று என்ன பண்ணலாம் என்று அவன் முகம் பார்க்க ஒரு முடிவு எடுத்தவனாக சரி மீட்டிங் முடியட்டும் ஈவினிங் ரெடியா இரு நான் வந்ததும் வெளியே போகலாம் உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக்கலாம் ஃபர்ஸ்ட் நீ இங்க வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் டிரஸ் டிசைன் பண்ணி கொடு.
அப்புறம் என்ன பண்ணலாம்னு சொல்றேன் என்றவன் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான். இங்கு மித்ராவை அலுவலகத்தில் இறக்கி விட்டவன் மீட்டிங்கு தேவையானது எல்லாம் சரியா இருக்கான்னு பாரு மித்ரா நான் போயிட்டு அவங்கள அழைச்சிட்டு வந்துடறேன் என்று வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.
இங்கே ஏர்போர்ட் வந்தவன் தன் நண்பர்களின் வருகைக்காக காத்திருந்தான். சற்று நேரத்திலேயே ஆரனும் சாராவும் வர இவனை பார்த்ததும் சட்டென்று நெருங்கியவர்கள் ஆதி நீ வரேன்னு சொல்லவே இல்ல என்று இரு பக்கமும் இருவரும் அணைத்து கொண்டனர்.
அவர்களை தானும் அணைத்துக் கொண்டவன் சும்மா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் வந்தேன் என்றவன் சரி வாங்க போயிட்டே பேசுவோம் என்று அவன் கார் அருகே சென்றனர்.
அப்புறம் ஜெர்மனி ட்ரிப் எப்படி போச்சு ரெண்டு பேருக்கும் … போன விஷயம் என்ன ஆச்சு என்று படி சாலையில் கவனத்தை பதித்தான்.
மச்சான் எல்லாத்தையும் பற்றி பேசிட்டோம் இன்னும் டூ வீக்ஸ்ல சைன் பண்ண வரதா சொல்லி இருக்காங்க என்று கூறினான்.
டேய் ஆதி அப்படியே இவன் ரொம்ப சின்சியர் சிகாமணி மாதிரி ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் என்று சொல்றான் எதுவுமே பண்ணல டா இவன்.
போற வர பொண்ணுங்க ஒருத்திய விட்டு வைக்கல டா இவன் எப்ப பார்த்தாலும் சாரா அங்க பாத்தியா அந்த வெள்ளச்சி எப்படி இருக்கா பாரேன் இந்த நெட்டச்சி ஏன் இவ்வளவு வளர்ந்து இருக்கா ஏன் இந்த பொண்ணு வளரவே இல்லைன்னு என்ன ஒரு வழி படுத்திட்டான் டா இவன் என்று அங்காலாயத்தாள்.
ஆரனோ ஆடு திருடியவன் போல் திருத்திருவென விழிக்க ஆதியோ ஒரக் கண்ணால் அவனைப் பார்த்து சிரித்தவன் என்ன மச்சி இப்படி கழுவி ஊத்துறா ? உன் ப்ராஜெக்ட் புட்டுக்குச்சா என்று கேட்க மச்சான் ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனதோட விளைவு தான் இந்த பொறாமை புஸ்வானமா பொறியுது என்று கூற ஒரு மாதம் ஓயாம வேலை பார்த்து இருக்கேன்னு சொல்லு என்று ஆதி சிரிக்க ஆமா மச்சி இப்பதான் தீ பிடிச்சிருக்கு இனிமேதான் பத்திகிட்டு எரியப் போகுது என்று இவர்களுக்குள் பேசிக்கொள்ள ஒன்றும் புரியாதவள் என்னங்கடா என்னை விட்டு ஏதும் ரகசியம் பேசுறீங்க என்று மூக்கை நுழைக்க இதெல்லாம் பசங்க சமாச்சாரம் நீ இதுல தலையிடாதே என்கவும் ஆமா பெரிய புடலங்காய் பசங்க சமாச்சாரம் சரிதான் போடா கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும் அப்போ உன்னை பார்த்துக்கிறேன் என்றவள் ஆதியிடம் திரும்பி,
ஆமா உன் மேரேஜுக்கு வரலன்னு கோவமா ஒரு போட்டோஸ் கூட எங்களுக்கு அனுப்பல மேரேஜ் முன்னாடி அந்த பொண்ணு போட்டோ மட்டும் தான் அனுப்பினே அதுக்கப்புறம் எதுவுமே காட்டல.. ஏதாவது கேட்டாலும் அப்புறம் அப்புறம்னு சொல்லிட்டே என்ற ஆதியிடம் கேட்க சொல்றேன் நீங்களே நேரில் பார்க்க தான போறீங்க அதுக்குள்ள பறக்காத ..
என் கல்யாண விஷயம் இருக்கட்டும் அப்பா அம்மா உன் கல்யாண விஷயத்தை பற்றி பேச்சை எடுத்தாலே வேணாம்னு சொல்றியாம் என்ன விசேஷம் யாரையாவது லவ் பண்றியா என்று தூண்டில் போட்டு பார்த்தான்.
அதெல்லாம் ஒன்னும் இல்லையே இப்போ கல்யாணம் வேண்டாம்னு தோணுது அவ்வளவுதான் ஏன் அவங்க உன் கிட்ட சொன்னாங்களா எதுக்கு இப்படி எப்ப பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம்னு ச்சே என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து கொள்ள மச்சான் என்ன உன் ப்ராஜெக்ட் ஊத்திக்கிச்சு என்ற ஆதி கொக்கரித்து சிரிக்க டேய் என்ன நீ கல்யாணம் பண்ணிட்டேன்னு ஜாலில பேசுறியா?
எங்க இவக்கிட்ட லவ்வ சொன்னா ஏதாவது நெகட்டிவா சொல்லிடுவாளோனு பயமா இருக்குடா அதான் எப்படியாவது புரிய வைக்க முயற்சி பண்றேன் மசிய மாட்டேங்குறாளே..
நீ என்னத்த புரிய வச்ச.. சரி நீங்க ரெண்டு பேரும் தனியா போனா ஏதாவது தேறுவீங்கன்னு பார்த்தேன் எப்படி போனீங்களோ அப்படியே வந்து நிக்கிறீங்க இது வேலைக்கு ஆகாது என்று சலித்து பின்னால் சாராவிடம் திரும்பியவன் ஏன்டி இப்போ மூஞ்ச உம்முன்னு தூக்கி வச்சிருக்க பெரியவங்க அப்படிதான் சொல்லுவாங்க உனக்கு வயசு ஆகுதுல்ல என்று நிதர்சனத்தை எடுத்துக் கூற அதை எல்லாம் அவள் கேட்கவில்லை..
எனக்கு என்ன வயசு ஆகிடுச்சு உங்க வயசு தானே ஏதோ நீ கல்யாணம் பண்ணிட்ட அதான் இப்படி பேசுற இதுக்கு முன்னாடி நீயும் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன ஆளு தானே நீ ஏதோ உன் ரதியை பார்க்க போய் அவளோட லவ்வுல விழுந்து கல்யாணம் பண்ணிட்டே..
ஆனா ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நீ பண்ற அட்வைஸ் இருக்கே எப்பாஹ் தாங்க முடியல என்று அவனை வாரினாள்.
ஆமா இந்த மன்மதனுக்கு ஏத்த ரதிதான் என்று புன்னகை பூத்தான்.
டேய் இப்படி எல்லாம் பண்ணாதடா அப்புறம் என்னோட மோனாலிசாவோட ஞாபகம் வரும் அப்புறம் தவிச்சு போயிடுவேன் என்று சொல்ல பின்னால் இருந்தவளுக்கு முகம் மாறிவிட்டது அதனை கவனித்திருந்தால் இந்நேரம் ஆரன் பத்து குட்டி போட்டிருப்பான்.
அப்படியே ஆதியின் அலுவலகம் வந்திருக்க வாங்க என் ரதியைப் பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம் என்று உள்ளே அழைத்து வந்தான்.
அங்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதற்காக வந்திருந்த சுமதியும் சக்கரவர்த்தியும் இவர்களை கண்டதும் நலன் விசாரித்தனர்.
வாங்கப்பா எப்படி இருக்கீங்க போன வேலை எல்லாம் சுமூகமா முடிஞ்சுதா என்று விசாரித்தனர்.
பின்னர் ஆதி அவர்களை தன் அலுவலக அறைக்கு அழைத்து சென்றான்.
அப்பொழுது மூவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க மித்ரா வழக்கம் போல கதவை தட்டாமல் உள்ளே வர அதை கண்ட சாரா உனக்கு அறிவே இல்லையா கதவை தட்டாம உள்ள வர என்று திட்ட ஆரம்பிக்க சாரா என்று அவளை தடுத்து நிறுத்தியவன் மித்து அருகே சென்று அவ ரூமூக்குள்ள வரத்துக்கு அவ ஏன் கதவை தட்டிட்டு வரணும் என்று கேட்க இருவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
என்னோட வைஃப் மித்ரஹாசினி ஆதீரன் என்ற படி தோளோடு அணைத்துக் கொண்டு கூற என்ன மச்சி சொல்ற? என்று ஆரன் கேட்க அன்று திருமணத்தில் நடந்த அனைத்தையும் கூறினான்.
அதனை கேட்டதும் ஆதியை வந்து அணைத்துக் கொண்டான்.
மச்சி ரொம்ப கஷ்டப்பட்டியாடா நாங்க அந்த சமயத்துல உன் கூட இருக்க முடியல சாரிடா என்று வருந்தினான்.
இப்போ எல்லாமே நார்மல் தான் ஒன்னும் இல்ல இதுக்கு எதுக்கு வருத்தப்படுற எல்லாம் சரியாயிடுச்சு என்று கூறினான்.
ஆதி கூறியதை கேட்டதும் சாரா எந்த மாதிரி உணர்ந்தாள் என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்.
மித்ராவின் மேல் ஒரு நன்மதிப்பு ஏற்பட்டது உண்மை.
உடனே மித்ராவை நெருங்கியவள் ஐ அம் சாரி மித்ரா அண்ட் தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்று அவளை அணைத்துக் கொள்ள ஐயோ மேம் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று கூற வர நோ டோன்ட் கால் மீ மேம் மித்ரா என்றவள் அவளிடம் இருந்து பிரிந்து கொண்டு ஃபிரண்ட்ஸ் என்று கையை அவள் பக்கம் நட்பு பாராட்ட நீட்ட மறுக்காமல் கையைப் பிடித்துக் கொண்டாள்.
பின் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் சரி அப்படியே நாங்க கிளம்புறோம் அப்புறம் வீட்டுக்கு வரும் என்று இருவரும் கிளம்பினர்.
மோகமுள் தீண்டும்..

Post a Comment