மோகமுள் -36
மோகமுள் -36:
காரில் சென்று கொண்டிருந்த ஆதி மித்ராவை திரும்பி பார்த்தவன் அவள் அமைதியாக இருக்கவும் மித்து என்று அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் பொதிந்து கொண்டவன் என் மேல ஏதாவது கோபமா?
இல்ல அத்தான் எனக்கு என்ன கோபம் அதெல்லாம் ஒன்னும் இல்லை இதை வேற எப்படி டீல் பண்றதுன்னு எனக்கு தெரியல ஏன்னா நந்தினி சொல்லி புரிய வைக்கிற ரகம் இல்லை நீங்க பண்ணினது தான் சரி அதுக்கு என்ன பண்ண முடியும் விடுங்க பார்த்துக்கலாம் என்று நிம்மதியாக அவன் தோல் சாய்ந்து கொண்டாள்.
இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவள் வீட்டின் முன் நிறுத்தியவன் இறங்கு மித்ரா என்று தானும் இறங்கினான்.
அத்தான் அத்தம்மாக்கிட்ட சொல்லிட்டீங்களா நாம இங்க வரோம் என்று கேட்க பேசிட்டேன் ஒரு வேலையா போயிட்டு அப்படியே உங்க வீட்ல இருந்துட்டு சாயுங்காலம் வருவோம்னு சொல்லி இருக்கேன் என்றான்.
ஓகே அத்தான் என்று சந்தோஷம் அடைந்தவள் அம்மா என்று கத்திய படியே உள்ளே ஓடினாள்.
அந்த நேரம் அங்கு அவளை எதிர்பார்க்காத பிரேமா என்னடி? என்ன ஆச்சு? இந்த நேரத்தில் வந்திருக்க, என்னாச்சு? என்று பதறிப் போய்விட்டார்.
அவள் பின்னால் வந்த ஆதியை அவர் கவனிக்கவில்லை.
ஏன்? நான் வரக்கூடாதா? அத்தான் கூட தான் வந்தேன் என்று முறைத்து பார்க்க ஆதியை கண்டவர் அடடா வாங்க மாப்பிள்ளை என்றவர் தன் மகளிடம் ஏன்டி வரோம்னு முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே ஏதாவது செஞ்சு இருப்பேன்ல என்று குறைப்பட்டு கொண்டார்.
அப்பா வேற ஆஃபிஸ் போயிட்டாரு டி இரு அவரை லீவு போட்டுட்டு வர சொல்றேன் என்று தன் கைப்பேசியை எடுக்க நகர ஐயோ அத்தை அதெல்லாம் வேண்டாம் சும்மாதான் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தோம் அதான் இங்க வந்துட்டு போகலாம்னு வந்தோம் மாமாவை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும் வேண்டாம் விடுங்க என்றவன் உரிமையாக அங்கு சோபாவில் அமர்ந்து கொண்டு டிவியை ஆன் பண்ண அதில் மகிழ்ந்தவர் மித்ராவை கையோடு இழுத்துக் கொண்டு சமையல் கட்டிற்கு சென்றார்.
ஆதிக்கு காபி போட்டுக்கொண்டே தன் மகளை ஆராய்ச்சியாக பார்த்தவாரே என்னடி மித்ரா நைட் தூங்குனியா ? இல்லையா? கண்ணு இப்படி செவந்து போய் இருக்கு என்று பூடகமாக கேட்க மித்ராவிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை.
உடனே தலையைக் குனிந்து கொண்டவள் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்கவும் அவள் செய்கையை வைத்தே கண்டுக் கொண்டவர் அவள் தலையை வருடியவாரு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா போதும் சாமி என்று முகம் வருடியவர் போ போய் இந்த காஃபிய மாப்பிளை கிட்ட கொடு நான் மதியத்துக்கு சமச்சி வைக்கிறேன்.
மாப்பிள்ளைய உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ ரெண்டு பேரும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் மதிய சாப்பாட்டுக்கு உங்களை எழுப்பி விடுறேன் என்று அவளை அனுப்பி வைத்தார்.
அங்கு ஆதி சோபாவில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருக்க ஆதியிடம் வந்தவள் அத்தான் இந்தாங்க காஃபி என்று நீட்டினாள்.
அவன் குடித்ததும் அத்தான் மேல வரிங்களா என்னோட ரூமுக்கு போகலாம் என்று அழைக்க வரேன் மித்து போகலாம் என்று அவனும் எழுந்து கொண்டான்.
மித்ராவை அழைத்த பிரேமா மித்து மாப்பிள்ளைக்கு மாத்திக்க அப்பாவோட லுங்கி ஒன்னு புதுசா இருக்கும் அதை எடுத்துக் கொடு அதை கட்டிக்கட்டும்.
சரி என்று விட்டு தன்னறைக்கு வந்தாள்.
ஆதியோ அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தவன் தான் தூக்கம் வருதுடி நான் தூங்குறேன் என்றவாரு குப்புற படுத்துக்கொள்ள அத்தான் இந்த டிரஸ் கழட்டுங்க இதோட எப்படி தூங்குவீங்க இன்னும் ஏசி கூட போடல என்று ஏசியை ஆன் செய்தவள் அவனிடம் தான் கொண்டு வந்த லுங்கியை நீட்டி இதை மாத்திக்கிட்டு அப்புறம் தூங்குங்க இல்லனா கசகசன்னு இருக்கும் என்றவள் அவன் கையில் திணித்தாள்.
ஹே நான் இதெல்லாம் போட மாட்டேன் டி என்பது போல் எந்த பிகுவும் பண்ணாமல் அவள் முன்பே தான் அணிந்திருந்த ஆடையை கழட்டி விட்டு அவள் கொடுத்த லுங்கியை போட்டுக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.
தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவளை இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்து அணைத்தபடி தூங்குடி என்று விட்டு மித்ராவை அணைத்து கொண்டான்.
அவளும் அவன் அணைப்பு தந்த இதத்தில் சுகமாக துயில் கொண்டாள்.
அவர்களாக எழுந்து வரட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த பிரேமா மணி மூன்றாகியும் கீழே இருவரும் வரவில்லை என்றதும் அவரே சென்று கதவை தட்டினார்.
இதோ வந்துட்டேன்மா என்று மித்ராவின் குரல் வரவே சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுங்கப்பா என்று விட்டு கீழே சென்றார்.
பத்து நிமிடங்களில் இருவரும் கீழே இறங்கி வர அவர்களை அழைத்து வந்து உணவை பரிமாறினார் பிரேமா.
சாப்பிட்டு முடித்ததும் இருவரும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார்.
சிறிது நேரம் போகவே அலுவலகத்தில் இருந்து தாமோதரன் வரவே இருவரையும் அங்கு எதிர்ப்பாராதவர் ஆனந்த அதிர்ச்சியடைந்து அடடா வாங்க வாங்க என்று வரவேற்றவர் ஏன் பிரேமா என்கிட்ட முன்னாடியே சொல்லல தெரிஞ்சிருந்தா நேரமா வந்திருப்பேன்ல என்று மனைவியிடம் கோபித்துக் கொண்டார்.
உடனே ஆதி இல்ல மாமா நீங்க ஆபீஸ்ல இருக்கிறதா சொன்னாங்க அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று நாங்க தான் சொல்ல வேண்டாம்னு சொன்னோம் என்று கூறினான்.
சற்று நேரம் பேசி இருந்து விட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
அத்தான் நாம கிளம்பிட்டோம்னு அத்தம்மா கிட்ட சொல்லிட்டீங்களா? என்று வினவ ஒஹ் சொல்லிட்டேன் என்றபடி விசிலடித்தபடி சாலையில் கண்கள் பதித்தபடி கூறினான்.
அவன் மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அவன் மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தார் போன்று இல்லாமல் போகப் போவதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என்ன ஆதி கண்ணா ஒரே ஹாப்பி மூடுல இருக்கீங்க போல என்ன விசேஷம் என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு கேட்க அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தவன் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மித்து எனக்கு எல்லாமே கிடைச்சது போல இருக்கு எல்லாம் உன்னால தான் ஐ அம் சோ ஹாப்பி நான் மட்டும் அன்னைக்கு உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தால் நான் சரியாகி இருக்க மாட்டேன் மித்து.
அதையே நினைச்சு நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாகி கண்டிப்பா பைத்தியம் ஆகி இருப்பேன்.
அத்தான் என்ன இது என்று அவன் வாயில் ஒரு அடி வைக்க அவள் கையைப் பிடித்து கொண்டு ஒரு ஆண்மகனுக்கு நீ ஆண்மை இல்லாதவன் என்று சொல்லும்போது எவ்வளவு வலிக்கும் தெரியுமா மித்து அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாதுடி அந்த வேதனை இருக்கே சொல்லில் அடக்க முடியாது அதற்கெல்லாம் ஆணாக பிறக்கணும்.
சரி இப்போதான் எல்லாம் சரியாயிடுச்சு இப்ப எதுக்கு அதை பற்றி பேசிக்கிட்டு இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கேன் அதை அனுபவிக்கணும் என்று அவளை இழுத்து அணைத்தபடி வண்டியை தங்கள் இல்லம் நோக்கி செலுத்தினான்.
இருவரும் வீட்டிற்கு வந்ததும் ஆதி தன் அன்னையை கண்டதும் அவரை கட்டி அணைத்துக் கொண்டவன் விடவே இல்லை அவன் உதடுகளோ தேங்க்ஸ் மா என்ற வார்த்தையை மட்டும் விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது.
மகன் வந்ததும் எதுவும் பேசாமல் கட்டி அணைத்ததும் முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்னவோ ஏதோவென்று பதறியவர் ஆதி கண்ணா என்னாச்சுப்பா என்று அவன் முகத்தை பார்க்க முயல அவனோ பிரியமாட்டேன் என்பது போல அவரை அணைத்த பிடியை தளர்த்தவே இல்லை.
அவன் முதுகை வருடி கொடுத்தவாரு மித்ராவை நோக்கி என்னம்மா ஆச்சு? என்றவாறு பார்க்க அவளோ வெட்கத்தில் தலையை கீழே குனிந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் அவரிடம் இருந்து பிரிந்தவன் அம்மா எனக்கு எல்லாமே சரியாயிடுச்சுமா என்று சந்தோசத்தில் கத்தினான்.
ஆதி கண்ணா என்று அணைத்து கொள்வது இப்பொழுது சக்கரவர்த்தியின் முறையானது.
முதலில் சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை அவன் கண்கள் கலங்கி மிகுந்த மகிழ்ச்சியில் கத்தியது புத்திக்கு எட்ட அறிந்த விடயத்தில் இன்பமாக அதிர்ந்தார்.
உடனே அங்கு நின்றிருந்த மித்துவை சென்று தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவர் அவள் கன்னம் வழித்து என் குலத்தை தழைக்க வைத்த செல்லமே நீ மட்டும் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா என் புள்ளை நிலைமை இன்னைக்கு என்ன ஆகி இருக்குமோ என்று அவளை கட்டிக்கொண்டார்.
அண்ணா என்று ஆசியும் தன் அண்ணனை வந்து அணைத்து கொண்டான்..
ஐ ஆம் சோ ஹாப்பி பார் யூ அண்ணா என்றபடி அணைத்துக் கொள்ள அங்கு சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
இங்கு நந்தினி வீட்டில் கணேசன் உடைந்து போய் அமர்ந்திருந்தார். சிவகாமியும் தன் மகளின் வருகைக்காக ஆங்காரமாக காத்திருந்தார்.
எப்பொழுதும் போல ஒரு நாலு மணி அளவில் நந்தினி துள்ளல் நடையுடன் வீட்டிற்கு வர, எப்பொழுதும் தான் வந்ததும் காஃபி எடுத்துட்டு வரவாமா என்று பாசமாக தினமும் அழைக்கும் தாய் இன்று அமைதியாக இருக்க, அவரிடம் சென்று அம்மா ஒரு காஃபி போட்டுத்தாமா என்று நெருங்கி கேட்கவும் விட்டாரே ஒரு அரை.
செவில் கிழியும் அரை.
ஒட்டு மொத்த நம்பிக்கையையும் உடைத்த பரிசுக்கு கொடுத்த அரை.
இதுவரை தன்னை கடிந்து கூட பேசாத தாய் அரைந்ததை உணர்ந்து அதிர்ந்தவள் தன் இடது கன்னத்தில் கை வைத்தவாறு கண்கள் கலங்க தன் அன்னையைப் பார்த்தாள்.
அம்.. அம்மா என்ற அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது என்ன டி அம்மா என்னை அப்படி கூப்பிடாத. என்ன காரியம் பண்ணி வச்சிருக்க என்று அவள் முழங்கையை பிடித்து இழுத்து தன் கணவர் அருகே வந்தவர் பாருடி அந்த மனுஷன் எப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்காருன்னு பாருடி எல்லாம் உன்னால சீ நினைக்கவே அறுவருப்பா இருக்கு என்று அவளை பிடித்து தள்ள பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தாள்.
தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தவள் அவர் ஒன்றும் பேசாமல் விட்டத்தைப் பார்த்தவாறு ஈசி சேரில் படுத்திருக்க அப்பா அம்மா என்னப்பா அடிக்கிறாங்க நான் என்ன பண்ணினேன் என்னப்பா ஆச்சு எதுக்கு இப்படி பண்றமா என்று தன் தந்தையில் ஆரம்பித்தவள் தாயிடம் முடித்தாள்.
அவள் முதுகில் மீண்டும் நான்கு அடி வைத்தவர் ஆத்திரம் தீராமல் இன்னும் நீ என்னடி பண்ணனும் அதான் உன்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பெருசா பண்ணிட்டியே எங்க மானத்தை இப்படி வாங்கிட்டியே புள்ள இல்லன்னு கோவில் கோவிலா ஏறி இறங்கி தவமாய் இருந்து பெத்த புள்ள இப்படி கழிசடையாய் இருக்கும் என்று நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலையே சொல்லுடி ஏன் இப்படி பண்ணின உனக்கு நாங்க என்னடி குறை வச்சோம் எதுக்குடி உன் புத்தி இப்படி போகுது படிச்சவ தானே நீ என்று மீண்டும் அவளை போட்டு அடிக்க ஒரு கட்டத்தில் அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் அவர் கையை தடுத்து பிடித்து அம்மா இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி போட்டு அடிக்கிற நீ இவ்வளவு கோபப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணினேன் சொல்லிட்டு அடி என்று கத்தினாள்.
கணேசன் எதுவுமே பேசவில்லை சிவகாமி தன் கணவரை ஒரு முறை பார்த்தவர் மித்ராவோட புருஷன் ஆபீஸ்க்கு நீ போனியா என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
இவங்களுக்கு எப்படி தெரியும் என்று முதலில் அதிர்ந்தவள் பின் ஒன்றும் தெரியாதது போல நான் ஏன் அங்க எல்லாம் போக போறேன் என்று கூறினாள் திடமாக.
அப்போ நீ மித்ரா வீட்டுக்கும் போகல அப்படித்தானே என்று கேட்க இல்லை என்று ஒரு வித பதட்டத்துடன் கூறினாள்.
தன் மகள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்த சிவகாமி தன் கணவனிடம் திரும்பி ஏங்க இவ காலேஜ் போன வரைக்கும் போதும் இவ படிச்சு கிழிச்சதும் போதும் இவளை சும்மா விட்டு வச்சா இருக்கிற கொஞ்சநஞ்ச மானத்தையும் வாங்கிடுவா சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க முதல்ல இவளுக்கு கல்யாணத்தை முடிக்கணும் என்று அவளை பார்த்துக்கொண்டே கூறினார்.
அம்மா இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று உடனடியாக மறுத்தாள்.
ஏன் இப்ப கல்யாணம் வேண்டாம்னா என்ன அர்த்தம் என்று கேட்க எரிச்சலாக அம்மா நான் படிக்கணும் நான் காலேஜ் போவேன் என்று அவருடன் மல்லுக்கு நிற்க எதுக்கு நீ காலேஜ் போறேன்னு எனக்கு தெரியாதா பிரண்ட்ஸ் பார்க்க போறேன்னு அடுத்தவ புருஷனை போய் பார்ப்ப அதெல்லாம் நாங்க தாங்கிக்கிற அளவுக்கு சக்தி எங்களுக்கு இல்லம்மா நீ இனிமே காலேஜ் போக தேவையில்லை.
அவ்வளவுதான் சொல்லிட்டேன் இதுக்கு மேல ஏதாவது பேசினா கரண்டிய பழுக்க காட்சி காலில் இழுத்து விட்டுடுவேன். அப்புறம் எப்படி போறேன்னு நான் பாக்குறேன்.
ஆத்திரமாக தன் அன்னையை நோக்கியவள் ஆதி எனக்கு பார்த்த மாப்பிள்ளை தானே இப்ப அவர பார்த்ததுல என்ன தப்பு இருக்கு அவர் என்னை புடிச்சு போய் தானே கல்யாணம் நடக்க இருந்துச்சு அப்புறம் அந்த குறை இருக்க போய் தானே நாம வேண்டாம் என்று சொல்லிட்டு வந்தோம் அந்த நேரம் பார்த்து இந்த மித்ரா அவர கட்டிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் அவரு என்னதான் லவ் பண்றாரு தாலி கட்டிட்டதால அவ கூட இருக்காரு இல்லன்னா அவர் என்னை நினைச்சுட்டு தானே இருந்திருப்பாரு என்று ஆதி தனக்குத்தான் என்று ரீதியில் கூற,
அவள் முடியை பிடித்த சிவகாமி ஏய் அவர் உன் அக்காவோட புருஷன் டி அவருக்கு அந்த குறை இருக்குன்னு நீ தானே விட்டுட்டு வந்த? வேண்டாம்னு விட்டுட்டு வந்த அப்புறம் என்ன இப்போ திடீர்னு என்று கேட்டவர் இது தப்பு நந்தினி நான் சொல்லனும்னு உனக்கு அவசியமில்லை நீ சின்ன பிள்ளை இல்லை ஒழுங்கா படிச்சு முடிச்சு நாங்க பாக்குற பையனுக்கு கழுத்தை நீட்டுற வழிய பாரு இல்ல நான் இப்படித்தான் அலைவேன்னு நீ சொன்னா இனி நீ எங்களுக்கு பொண்ணே இல்ல என்று கதறினார்.
முகத்தை அழுந்த துடைத்து கொண்டவர் உன்னை பெக்காம நான் மலடி பட்டமே வாங்கி இருக்கலாம் டி என்றவரை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
கணேசனிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை அவரை காண்பித்து பாருடி அந்த மனுஷன் எப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கிறார் பாரு..
உன்னால இன்னும் என்னென்ன அவமானம் படனுமோ தெரியல.
உங்க பொண்ண எங்க வாழ்க்கையில தலையிட வேண்டாம்னு சொல்லுங்க என்று அந்த பையன் வீடு தேடி வந்து சொல்லிட்டு போறான்டி உன் புத்தி ஏன்டி இப்படி போகுது என்று மீண்டும் தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவர் ஓய்ந்து போய் அங்கிருந்த தூணில் சாய்ந்த அமர்ந்து கொண்டார்.
நந்தினி அழுது கொண்டே தன்னறைக்குள் சென்றவள் தான் அதன் பிறகு கீழே இறங்கி வரவில்லை இவர்களும் என்ன ஏது என்று பார்க்கவில்லை..
மோகமுள் தீண்டும்…

Post a Comment