மோகமுள் -47




 மோகமுள் - 47:


நிரு என்னடி வெட்கமெல்லாம் வருது என்று அந்த நேரத்தில் அதிசயித்து அவளை மேலும் சிவக்க வைத்தவனை அடி வாங்க போற மாமா நீ என்று தன் வெட்கம் மறைக்க அவனிடமே தஞ்சம் புக அணைத்துக் கொண்டவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.


உனக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதெல்லாம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு டி என்று அங்காலயிக்க


நான் என்ன பண்றது நீ தான் வர வைக்கிற என்று முகத்தை தலையணையில் புதைத்துக் கொள்ள சரி சரி ரொம்ப வெட்கப் படாதா டி எப்படி இருந்துச்சு மாமனோட பெர்பார்மன்ஸ் என்று கேட்க உண்மையை சொல்லவா பொய் சொல்லவா என்று புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க அதில் மயங்கியவன் மீண்டும் ஒரு முத்தம் வைத்தான் அவள் இதழில் அழுத்தமாக..


உண்மையை சொல்லுடி 


உண்மையை சொல்லுனும்னா இன்னொரு முறை பண்ணு அப்போதான் சொல்வேன் என்கவும் இவனுக்கு கண்ணா இன்னொரு லட்டு திண்ண ஆசையா என்பது போல் இருக்க விடுவானா அவளில் புதைந்து கொண்டான்.


இரவு முழுக்க இதே தான் நடந்து கொண்டிருந்தது..


அவன் பெர்பார்மன்ஸ் எப்படி என்று கேட்க இன்னொரு முறை என்று அவள் சொல்ல இதுவே தொடர்ந்தது..


கூட்டுக் களவாணிகள் சாப்பாடு நேரம் தவிர்த்து அறைக்குள்ளேயே அடைக் காக்க நிரஞ்சன் கூட பார்த்து டேய் பேபி வந்ததும் தான் வெளியே வருவீங்களா இல்ல அதற்கும் வர மாட்டீங்களா என்று கிண்டல் பண்ணி சிரிக்க நிருவை இழுத்து கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டான் ஆசி..


மூன்று மாதத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேனிற்கு மித்ராவை அழைத்து சென்று வந்த ஆதி தன் அன்னையிடம் ஸ்கேனை காட்டி இது காலு இது கை மூக்கு என்று தன் குழந்தையை விவரித்துக் கொண்டிருக்க அவன் சந்தோஷத்தை பார்த்த மித்ரா என்றும் போல் இன்றும் அகமகிழ்ந்து போனாள்.


அவள் வேண்டுவது எல்லாம் ஆதி நலமாக எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பது மட்டுமே தனக்கு கூட இது வேண்டும் அது வேண்டும் என்று கடவுளிடம் கேட்க மாட்டாள்.. அவள் வேண்டுவது எல்லாம் தன்னவனின் முகத்தில் வாடாத புன்னகையும் மன நிறைவான வாழ்க்கையையும் குடு என்று தான் வேண்டுகிறாள்.


ஆதியை பொறுத்த வரையில் மித்ரா தன்னுடன் இருந்தால் போதும் தனக்கு அனைத்தும் கிடைத்தது போலாகும் என்ற நினைப்பில் இருப்பான்.


அவனின் தேவை அனைத்தும் இந்த தேவதை பெண் தான்..


அவள் மட்டும் அன்று திருமணம் செய்ய முன்வரவில்லை என்றால் இந்த நேரம் அவன் வாழ்க்கை இவ்வாறு பூத்து குலுங்கி இருக்காது..


அவளை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை அலுவலகத்திற்கும் வர வேண்டாம் என்று கட்டளை விதித்திருந்தான்.


அவனுக்கு தான் அந்த முன்னூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் கிடைத்திருக்க அவ்வ பொழுது அலுவலகத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தான்.. மற்ற நேரங்களில் வீட்டிலிருந்த படியே கட்டளைகளைப் பிறப்பிப்பதோடு சரி..


மித்ரா எனக்கு போர் அடிக்கிது என்று கத்திய போது வா நானும் உன் கூட இருக்கேன் உனக்கு என்ன பண்ணனும் தோணுது எதுவும் விளையாடலாமடி மித்ரா என்று அன்பு தொல்லை செய்வான்..


பிரக்னன்சியில் ஹார்மோன்ஸ் மாற்றங்களால் ஏற்படும் மூட் ஸ்விங் நேரத்தில் அவனை ஒருவழி ஆக்கி விடுவாள். 


அப்பொழுதும் பொறுமையாக அவளை கையால்வதில் அவனுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் அந்தளவுக்கு ஆதி தேர்ச்சி பெற்றிருந்தான்..


பிரேமாவும் தாமோதரனும் அவ்வபோது வந்து மகளை பார்த்து செல்வதோடு சரி.. ஆதியே அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைக் கண்டவர்கள் மனம் நிறைந்து போயினர்.


****


ஆறு மாதங்கள் கழித்து ..


நிருவிற்கு முடி நன்றாகவே வளர்ந்திருக்க இப்படியும் அப்படியும் தலையை ஆட்டியபடி முடிகள் காற்றில் அசைந்தாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்த ஆசி பாப்பா என்னோட ஆபீஸ் பைல் இங்க ஒன்னு வச்சிருந்தேன் பார்த்தியா என்று தேடிக் கொண்டிருக்க


அவளோ அவனை முறைத்துப் பார்த்தவள் நேத்து வந்ததும் வராததுமா கையில் வச்சிருந்த பைலை பறக்க விட்டு என் மேல வந்து விழுந்தப்போ தெரிஞ்சிருக்கணும் இப்போ வந்து என்கிட்ட கத்துற இதெல்லாம் நியாயமே இல்லை என்றவள் அங்கு எடுத்து வைத்திருந்த பைலை எடுக்க போக,


வயிறு பிரட்டவே வாயைப் பொத்தியவாரு அங்கு பைலை தேடிக் கொண்டிருந்த ஆசியை இடித்து விட்டு குளியலறைக்குள் ஓடினாள்.


இவள் ஓடுவதைக் கண்டு என்னவோ ஏதோவென்று அவள் பின்னே சென்றவன் அவள் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கவும் அவள் தலையைப் பிடித்துக் கொண்டவன் அவள் சோர்வுடன் தலையை நிமிர அவளுக்கு வாயைத் துடைத்து விட்டு அழைத்து வந்தான்.


ஒரு முறை வாந்தி எடுத்ததற்கே அவளால் கண்களை திறக்க முடியவில்லை.. மாமா என்னை அங்க படுக்க வையேன் தலை சுத்துது என்று கூற ஏய் பாப்பா என்னடி ஆச்சு தலை எதும் வலிக்கிதா என்று பதற


அதெல்லாம் எதுவுமில்லை ஒரு மாதிரி வயிறை பிரட்டி வாந்தி வரது போல இருக்கு தலை சுத்துது நிக்க முடியலை வேற ஒன்னுமில்லை கொஞ்ச நேரம் படுத்திருந்து எழுந்தா சரியா போயிடும் என்று படுக்கையில் சோர்வாக சாய்ந்தவளை கண்டு மனது பிசைய எதையாவது திங்க தெரியாம தின்னுட்டியா டி என்று கேட்க அந்த நிலையிலும் அவனை முறைக்க தவறவில்லை.


ஒழுங்கா சாப்பிட்டால் தானே ஏதோ இவள் தான் புதுசா டிசைனிங் பண்ற மாதிரி சாப்பிடாம கூட வேலை வேலைன்னு இருந்தா உடம்பு இப்படி தான் படுத்தும் என்று அவளுக்கு என்ன ஆனதோ என்ற அச்சத்தில் கடித்தான்..


இப்பொழுது நிரு பேமஸ் டிசைனர் அதுவும் அவள் மித்ராவிற்கு டிசைன் செய்து கொடுத்த மெட்டர்னிட்டி கவுன் தான் டிரெண்டிங் அதிலிருந்து இவளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு அதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததை கண்டு தான் தன் உடலை கவனிக்கவில்லையோ என்று கத்தினான்..


அவன் கத்திக் கொண்டேயிருக்கும் போதே சட்டை செய்யாமல் டேய் மாமா அந்த தண்ணியை எடு என்று கேட்க புளுப்புறுவென்று அவளை திட்டிக் கொண்டே தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.


தண்ணீர் குடித்ததும் மீண்டும் குமட்டிக் கொண்டே உள்ளே ஓடினாள் இவனும் பின்னே சென்றவன் அவளை மீண்டும் அழைத்து வந்தவன் பாப்பா எதுக்கு ரிஸ்க் வா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோம் எனக்கு பயமா இருக்கு என்று கூறியவனை இழுத்து தலையணை கொண்டு மொத்தியவள்,


நான் நேத்து வாங்கிட்டு வர சொன்னது எங்கடா என்று கேட்ட அது எதுக்குடி இப்போ என்று கேட்க எங்க வச்சிருக்க எடுத்து தா என்றவள் அதனை வாங்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.


நேற்று தான் ஆசியிடம் இரண்டு மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்றும் பிரக்னன்சி கிட் வாங்கி வரக் கூறினாள்..


அதனை தான் இப்பொழுது எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள்.


நிரு வெளியே வந்து மெத்தையில் படுத்திருந்த ஆசியினருகே அமர என்னடி ஒன்னுமில்லை தானே என்று அசால்ட்டாக கேட்க இரண்டு கோடு பல்லிளித்ததை அவனிடம் காட்ட கருவிழி இரண்டும் தெரித்து விடும் அளவிற்கு கண்களைத் திறந்தவன்,


எப்படி டி என்று அதிர்ச்சியாக வினவ


எப்படியா என்ன கேள்விடா இது.. பெர்பார்மன்ஸ் எப்படி எப்படின்னு கேட்டே இதோ உன்னோட கேள்விக்கு இதுதான் பதில் என்று அவனை மொத்தியவள் பாப்பா பாப்பான்னுட்டு வந்து என் மேல விழுந்து இந்த வேலை பண்ணி வச்சிருக்க என்று பிராண்டி வைக்க சரி சரி நல்லது தான் டி நடந்துருக்கு என்று அவளை அணைத்துக் கொண்டான்.


என்ன மாமா நாளைக்கு ரிசப்ஷன வச்சிக்கிட்டு இப்போ இதை சொன்னா எல்லாரும் சிரிப்பாங்க என்று வருத்தமாகக் கூற ஹேய் இதைக் கேட்டா எல்லாரும் சந்தோஷப் படுவாங்க டி .. இதுல வருத்தப்படுவோ அசிங்கப்படவோ என்ன இருக்கு நீ எதும் அதிகமா யோசிக்காத என்று அணைத்துக் கொள்ள


இல்ல நாளைக்கு வரவேற்பு வச்சிக்கிட்டு அதான் யோசிக்கிறேன்.


ஆம் திருமணம் மருத்துவமனையில் நிகழ்ந்ததால் நிருவின் உடல் தேறியதும் வரவேற்பு வைத்து அனைவருக்கும் அறிவித்து விடலாம் என்ற முடிவில் இருக்க மித்ராவிற்கும் ஒன்பதாவது மாதம் நடப்பதால் காலையில் அவளுக்கு வளைகாப்பும் மாலையில் ஆசி நிருவிற்கு வரவேற்பு வைத்து விடலாம் என்று அனைவரும் ஒன்று கலந்து பேசி முடிவாக, வெளியே அனைத்து ஏற்பாடும் நடந்துக் கொண்டிருந்தது..


சரி வா போய் சொல்லலாம் என்று ஆசி அழைக்க மாமா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. நான் வெளியில வரல என்று தயங்கி நிற்க அட வாடி என்று அவளை தள்ளிக் கொண்டு வெளியே வந்தான்.


அங்கு அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தனர்.. ஊர்மிளா வாசு என அனைவரும் வந்திருக்க இருவரும் நடுவில் வந்து நிற்க என்னடா என்பது போல் பார்த்தனர்.


இப்பொழுதெல்லாம் ஊர்மிளா மித்ராவை எடுத்தெறிந்து பேசுவதில்லை முன்பு போல் இல்லாமல் அமைதியாக இருந்தார்.


ம்மா பாப்பா என்று கேட்க ஹிம்ம் நிருக்கு என்னடா என்று சோர்ந்து போய் நிற்கும் அவளிடம் வர ம்மா பாப்பாக்கு பாப்பா வரப் போகுது என்று கூற சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போயினர் வீட்டினர் அனைவரும்..


வாழ்த்துகள் என்று அனைவரும் வாழ்த்த அப்போது தான் நிருவிற்கு முகமே தெளிந்தது..


சரி டா போய் செக் பண்ணிட்டு வரலாம் வாங்க என்று ஆதி மித்ராவை தவிர அனைவரும் புறப்பட ஐயோ எல்லாரும் எதுக்கு நாங்க போயிட்டு வரோம் வந்து என்னன்னு சொல்றோம் என்று இருவர் மட்டும் மருத்துவமனைக்கு கிளம்ப அவங்க சொல்ற எல்லாவற்றையும் தெளிவா கேட்டுட்டு வாங்கப்பா என்று வழியனுப்பி வைத்தனர்.


இங்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர் ஏன் இவ்ளோ நாளா செக் பண்ணாமா இருந்தீங்க என்று கடிந்தவர் குழந்தைங்களுக்கு இரண்டு மாதம் ஆகுது அதுவும் ட்வின்ஸ் என்று கூற ஆசிக்கும் இரட்டிப்பு சந்தோஷம்..


பின்னர் மருத்துவரிடம் நிருவிற்கு ஆக்சிடன்ட் ஆனதில் இருந்து சர்ஜரி என அனைத்தையும் கூற அவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு வீடு திரும்பினர்.


வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கூற சந்தோஷ சாரல் இதமாக வீசியது.. 


அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறியதும் ஆதியும் நிரஞ்சனும் பார்த்த பார்வையில் ஆசியோ ச்சீ போங்க என்று வெட்கப்பட டேய் டேய் நடிக்காதடா என்று அவனை கிண்டலடித்தனர்.


இங்கு தன் அறையில் ஆதி மித்ராவிற்கு கால்கள் சற்று வீக்கமாக இருக்க வெந்நீர் ஒத்தடம் கொடுத்தவன் அவளை எழுப்பி தன்னுடன் அனைத்தவாரு மொட்டை மாடிக்கு நடைப்பயில அழைத்து சென்றான்.


இதமான பாடலை ஒலிக்க செய்தவன் மித்ரா நிறைமாத வயிற்றோடு மெதுவாக நடக்க அவளுக்கு ஈடுக்கொடுத்தபடி தானும் மெதுவாக நடந்தவன் மித்ரா எல்லா பொண்ணுங்களும் எனக்கு இது வேணும் அது வேணும்னு கேட்பாங்க நீ ஏன் டி எதுவுமே கேட்க மாட்டேங்குற என்று வினவ 


எனக்கு எப்போதும் என் கூட நீங்க வேணும் அத்தான்.. நீங்க சந்தோஷமா இருக்கணும் என்னோட ஆசை எல்லாம் அது மட்டும் தான் என்று சொல்வதற்குள்ளே அவளுக்கு மூச்சு வாங்கியது..


மித்து எப்படி பிள்ளை பெக்கப் போற எனக்கு அதை நினைச்சாவே பயமா இருக்கு டி .. அந்த வலியை நீ எப்படி தாங்குவ.. வலிக்குமே என்னடி பண்றது என்று இவனுக்கு இப்பொழுதே வயிற்றில் புளியைக் கரைத்தது..


அவள் வயிற்றில் இருந்த குழந்தையிடம் குனிந்தவன் முத்தமிட்டு குட்டி அம்மாவுக்கு வலிக்காமா உடனே அப்பாக்கிட்ட வந்துருங்க என்று மீண்டும் ஒரு முத்தம் ஓகே ப்பா என்று உள்ளிருந்து குழந்தை எட்டி உதைத்து சைகை செய்தது..


அடுத்த நாள் காலை அழகாகவே விடிந்தது..


வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு வைத்திருந்தனர். நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்திருந்தனர்.


பிரேமாவும் தாமோதரனும் தங்களால் முடிந்த மட்டும் மித்ராவிற்கு நான்கு பவுனில் தங்க வளையல்களும் அவளுக்கு கொடுக்க வேண்டிய சீரும் சிறப்பாகவே செய்திருந்தனர்.


ஊர்மிளா எப்பொழுதும் போல ஒட்டாமல் தான் நின்றுக் கொண்டிருந்தார்.


எப்பா மாப்பிள்ளை தம்பி வந்து நலங்கு வையுங்க அன்று ஒரு வயதான பெண்மனி அழைக்க அதுவரை அவளிடமிருந்து பிரிக்க முடியாத கண்களை விலக்கி அவரைப் பார்த்தவன் மித்ராவை நெருங்கினான்..


அவளும் பட்டு வேஷ்டியில் அழகு கூடிப் போயிருந்த தன்னவனை தான் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்..


ஏன் டி அப்படி பார்க்கிற என்றான் கிசுகிசுப்பாக அவள் காதருகே குனிந்து.


நான் பார்ப்பேன் யாரு என்ன சொல்ல முடியும் என்றவள் உங்களை இப்போ அப்படியே கடிக்கணும்னு தோணுது அத்தான் என்ன செய்வேன் நான் என்று கேட்க அவள் கன்னத்தில் சந்தனத்தை எடுத்து பூசியப்படியே அடியேய் அப்படி எதுவும் பண்ணிடாதடி மானம் போயிடும் என்று கூறியவன் அவளுக்கு தான் வாங்கியிருந்த வைர வளையல்களை அணிவித்து நெற்றி முத்தமிட்டு விலகிக் கொண்டான்.


அதற்கே அங்கு இருந்த இளவட்டங்கள் ஆஹா ஓஹோ என்று கோரசாக கத்த ஐயயோ முத்தத்துக்கே இப்படி கத்துதுங்கேளே அவ கடிச்சு வச்சிருந்தா என் நிலைமை என்று நினைத்தவன் தலையை உளுக்கிக் கொண்டான்.


அனைத்து சம்பிராதாயங்களும் முடிய மித்ராவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது போல் முடிவாக பேச மித்ராவிற்கு அவனை விட்டுப் போக கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. அதனை கேட்ட ஆதிக்கு திக்கென்று இருந்தது.. இது என்ன புது கதை இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்ற ரீதியில் அதிர்ந்து விழித்தான்.


ம்மா வேண்டாம்மா நான் இங்கேயே இருக்கேன் ப்ரோஜெக்ட் வேற போயிட்டு இருக்கு நான் அங்க வந்துட்டா அவர்களுக்கு கஷ்டமா போயிடும் என்று ஏதோ காரணம் சொல்ல வேண்டுமே என்று கூறினாள்.


சிவகாமியும் கணேசனும் வந்திருந்தனர். நந்தினி வரவில்லை.. சிவகாமி பிரேமாவிடம் பிரேமா அதான் அவள் இங்கேயே இருக்க தானே விரும்பப்படுறா சம்பிரதாயத்துக்கு அழைச்சிட்டு போயிட்டு திரும்ப கொண்டு வந்து விடு.. அப்படி உனக்கு பாத்துக்கணும்னு ஆசையா இருந்தா நீ இங்க தங்கி இருந்து பிள்ளையை பார்த்துக்கோ..


புள்ளைத்தாச்சி புள்ளையை ஏங்க விடாதா என்று கூற சரி என்று ஒப்புக் கொண்டார்.


பின் மித்ராவை அழைத்து சென்று விட்டு சம்பிரதாயத்துக்கு கொஞ்சம் நேர வீட்டில் இருக்க வைத்து ஆதியின் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.


அவள் வந்ததும் தான் ஆதிக்கு மூச்சே வந்தது..


என்ன மச்சான் கொஞ்ச நேரத்துல ஃபியுஸ் போன பல்பு போல இருந்த இப்போ மீண்டும் பிரகாசமா டாலடிக்கிற என்று நிரஞ்சனும் ஆரனும் அவனை வாரினர்.


அதெல்லாம் இருக்கட்டும் நீ எப்போ தான் சாராகிட்ட லவ்வ சொல்ல போற என்று வினவ மச்சான் அதை நினைச்சாவே பயமா இருக்குடா.. ஐ லவ் ஹெர் சோ மச் டா பட் என்று நிறுத்தியவன் ஐ நீட் ஹெர் பார் மை எண்டையர் லைப் டா எங்க நான் லவ் சொல்ல போய் அவள் வேண்டாம்னு சொல்லிடுவாளோன்னு பயமா இருக்குடா என்றான்.


மச்சான் ரியலி ஐ லவ் சாரா டா அவள் இல்லன்னா நான் இல்லடா என்று அவன் கூறியதை ரிக்கார்ட் செய்து கொண்டவன் மித்துவிற்கு அதனை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.


இங்கு அறையில் மித்துவிற்கு நகைகளைக் கழட்ட உதவிக் கொண்டிருந்த சாராவிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் மித்ரா.


சாரா எப்போ கல்யாணம் பண்றதா உத்தேசம்.. இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படியே இருக்கிறதா ஐடியா என்று கேட்க மித்து என்று தயங்கியவள் பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அது சரியா தவறான்னு கூடத் தெரியல என்று கூற,


ஹேய் சூப்பர் யாரு அந்த லக்கி சார்ம் என்று மித்ரா கேட்க நம்ம ஆரன் தான் என்று கூற என்னது நம்ம ஆரன் அண்ணாவா இது எப்போதுல இருந்து நடக்குது என்று கேட்க அது ரொம்ப நாளாவே நடக்குது தான் ஆனால் அவன்கிட்ட சொல்ல ஏதோ தடுக்குது..


அதான் வீட்டுல கேட்டும் கல்யாணத்துக்கு சம்மதிக்காம தள்ளிப் போட்டுட்டே வரேன் என்று கூறியவள் மித்து ஐ லவ் ஆரன் .. அவன் இல்லனா நான் கடைசி வரைக்கும் இப்படியே இருந்துருவேன் அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை என்று கண்களில் கண்ணீருடன் கூற மித்ரா அவள் பேசியதை சேமித்து ஆதிக்கு அனுப்பி வைத்தாள்.


மோகமுள் தீண்டும்..


No comments