மோகமுள் - 48 (final)
மோகமுள் - 48:
கால் வலிக்குதாடா என்று மித்ராவின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான் ஆதீரன்.
அத்தான் எனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க சரியா என்று முடிக்கவில்லை பட்டென்று எழுந்து கொண்டவன் பால்கனிக்கு சென்று விட்டான்.
அதில் விக்கித்துப் போனவள் தன்னையே நிந்தித்துக் கொண்டு மெதுவாக எழ முயல அந்த சத்தம் கேட்டு உடனே உள்ளே வந்தவன் இப்போ எதுக்கு எழுந்திருக்குற என்று காட்டமாகக் கேட்டான்.
கைகள் என்னவோ அவள் படுப்பதற்கு வசதியாக தலையணையை வைத்துக் கொண்டிருந்தது.
எதுவும் பேசாமல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளைப் படுக்க வைக்க முயல அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள் சாரி அத்தான் என்றாள் கண்களில் கலக்கத்தோடு.
அவள் கண்களை நோக்கியவன் அவள் அருகில் அமர்ந்து தன் மேல் சாய்த்து இறுக அணைத்துக் கொண்டவன் இங்க பாரு நீ பயந்து போயிருக்கன்னு எனக்கு புரியுது.. இந்த மாதிரி நேரத்தில் இப்படி தோணுறது இயல்பு தான்.. அதுக்காக அதையே நினைச்சிட்டு இருக்கக் கூடாது… என்று தேற்றியவனுக்கு பயம் அப்பிக் கொண்டது..
அவளில்லாத ஓர் நொடி கூட அவனால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.
அவள் நெற்றியில் முத்தமிட்டு நல்ல படியா பாப்பா பிறக்கும் மித்து பீ பாசிட்டிவ் என்று அணைத்துக் கொண்டான்.
மாலை நான்கு மணியளவில் ரிசப்ஷன் நடக்கும் இடத்திற்கு அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
பெரிய மண்டபத்தை புக் செய்திருந்தனர்.. தொழில் துறை நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், தூரத்து சொந்தங்கள் என அனைவரையும் அழைத்திருந்தனர்.
மித்து மேனேஜ் பண்ணிக்குவ தானே எதும் இடுப்பு வலியிருந்தா சொல்லுடா வீட்டுலயே ரெஸ்ட் எடுத்துக்கலாம் அவ்ளோ தூரம் போக வேண்டாம் என்றபடி அவளுக்கு புடவைக் கட்டிவிட்டுக் கொண்டிருந்தான்..
அத்தான் நான் நல்லாதான் இருக்கேன்.. கண்டிப்பா போகணும்.. அப்போதானே எல்லாருக்கும் தெரியும்.. யாரெல்லாம் உங்களை கேலி செய்து சிரிச்சாங்களோ அவங்க முகத்துல கரியை பூச வேண்டாமா.. அதனால கண்டிப்பா போயே ஆகணும்.. சீக்கிரம் கட்டி விடுங்க என்று அவசரப் படுத்தினாள்.
முன்பெல்லாம் ஒரு மாதிரி மயக்குவாள்.. இப்பொழுதெல்லாம் வேறு விதமாக மயக்குகிறாள் ஆள் மயக்கி என்று முணுமுணுக்க டேய் அவள் மயக்குறாளோ இல்லையோ நீ மயங்கி போய் கிடக்கிறேன்னு சொல்லேன் .. சும்மா கீழ விழுந்தும் மண் ஒட்டலங்கிற கதையால்ல இருக்கு உன் கதை என்று அவன் மனசாட்சி வாரியது..
அனைவரும் மண்டபத்திற்கு விரைந்தனர்.
என்னை பார்த்ததும் அப்படியே நெஞ்சில கை வச்சி இந்த ஆசி பிளாட்டாகிடனும் அப்படி மட்டும் ஆகலைன்னா அப்புறம் இருக்கு அவனுக்கு என்று உள்ளுக்குள் நினைத்தப்படியே ரெடியாகிக் கொண்டிருக்க அரவமே எழுப்பாமல் மெதுவாக அறைக்குள் வந்தவன் அங்கிருந்தவர்களிடம் வெளியே செல்லுமாறு பணித்தான்.
பின் கதவை லாக் செய்தவன் அவளை நெருங்க கண்ணாடியில் அவன் உருவம் கண்டவள் ஃபிரீஸ் ஆகிவிட்டாள்.
மாமா செமையா இருக்க என்று இருக்கையில் இருந்து எழுந்தவள் அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.
சரி சரி டைம் ஆயிடுச்சு உன்னை கூப்பிட்டுப் போகத்தான் வந்தேன் பாப்பா என்று அவளைக் கண்டுக் கொள்ளாமல் அழைக்க மாமா வேற ஒன்னுமே இல்லையா என்று கேட்க அவன் ஒன்னுமில்லேயே என்று கூற அவள் முகமோ காற்று போன பலூன் போல் ஆகிவிட்டது.
அவனிடமிருந்து நகர்ந்து கொண்டவள் போ நான் வர மாட்டேன் என்று அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்துக் கொண்டாள்.
சரி பாப்பாக்கு இப்போ என்ன கோபம் என்று அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து கேட்க நான் உனக்காக தானே பார்த்து பார்த்து ரெடியானேன் நீ எதுவும் சொல்லவே இல்லை என்று குறைப்பட அடியேய் நானே என்னை கட்டுப் படுத்திக்கிட்டு இருந்தா நீ ஏன்டி என்னை உசுப்பி விட்டுட்டே இருக்க என்று அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன்,
ஆளை அசரடிக்கிற அழகுல இந்த மாமனை மயக்குறடி அதுவும் இந்த குட்டி முடியைப் பார்த்தா எனக்கு என்னென்னவோ செய்ய ஆசையா இருக்குடி .. சொல்லு என்னப் பண்ணலாம் என்று அவள் உதட்டை நெருங்க அவன் இப்பொழுது ஆரம்பித்தால் முடிக்க மாட்டான் என்று அறிந்தவள் அவன் வாயில் கை வைத்து தடுத்தவள் மாமா போகலாம் வா மாமா என்று அவனிடமிருந்து இறங்கிக் கொள்ள அவள் கைக்குள் தன்னதைக் கோர்த்துக் கொண்டவன் வெளியில் அழைத்து சென்றான்.
பின் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துகளை தெரிவித்து சென்றனர்.
ஆதி மித்ராவை விட்டு இங்கும் அங்கும் நகரவே இல்லை.
மித்து ஏதாவது வேணுமாடா.. ஜூஸ் குடிக்கிறியா.. என்று அன்பு தொல்லை செய்தான்.
நாற்காலியில் உட்கார முடியாமல் கொஞ்ச அசைந்து முகம் சுருக்கினாலும் என்னடி பண்ணுது? வயிறு வலிக்குதா? என்று ஒரே நச்சரிப்பு தான்.
ரிசப்ஷனிற்கு வந்தவர்கள் பல நல்ல உள்ளங்கள் வாழ்த்தி விட்டு சென்றாலும் சில நச்சுப் பாம்புகள் இது எப்படி சாத்தியம் என்று விஷத்தைக் கக்கவும் தவறவில்லை.
அதையெல்லாம் இருவரும் கண்டுக் கொள்ளவில்லை. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.. அதையெல்லாம் பார்த்தால் இவ்வுலகில் ஒரு நாள் வாழ்வதே கடினம் தான்.
இங்கு மேடையில் நின்றுக் கொண்டிருந்த ஆசி நிருவிடம் பாப்பா டையர்டா இருந்தா சொல்லு டி போய் ஏதாவது சாப்பிட்டு வந்து கூட பார்த்துக்கலாம் என்று கரிசனமாக கூற அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா நான் ஓகே தான் என்று புன்சிரிப்புடன் கூறினாள்.
ஆரன் சுமதியிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க ஊர்மிளா அங்கு ஆரனையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்த சாராவிடம் வந்து அமர்ந்தார்.
சாரா தன் பெற்றோருடன் வந்திருந்தாள்.. ஊர்மிளா தனக்குள் உண்டான எண்ணத்தோடு வந்து அமர்ந்தது அங்கிருந்த யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஊர்மிளாவோ அவர்களைப் பார்த்ததுமே கணக்கிட்டு விட்டார்.. பணக்காரங்க தான் போல பொண்ணும் அழகா தான் இருக்கா என்ன நம்ம நிரஞ்சன விட இரண்டு வயசு மூத்தவளா இருப்பா என்ன பண்றது பேசிப் பார்ப்போம் சிக்குனா நமக்கு லாபம் தானே இந்த காலத்துல வயசுலாம் யாரு பார்க்கிறா என்று சாராவை நிரஞ்சனுக்கு பேசலாம் எண்ணத்தோடு அமர,
சாராவின் பார்வையோ ஆரன் மேல்.
அதையெல்லாம் அவர் கவனிக்கும் நிலைமையில் இல்லை..
அவர் பக்கத்தில் வந்து அமரவும் சிநேகமாகப் புன்னகைத்தாள்.
மெதுவாக பேச்சை ஆரம்பித்தவர் அவளின் பெற்றோரையும் பேச்சுக்குள் இழுத்துக் கொண்டார்.
ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தவர்கள் கடைசியாக திருமணப் பேச்சிற்கு வரவும் உள்ளுக்குள் அவரை வருத்தெடுத்தாள்.
இதுதான் சாக்கென்று சாராவின் பெற்றோரும் எங்க கல்யாணம்னு பேச்சை எடுத்தாலே எரிஞ்சி விழுறா என்று அவளின் தாய் புலம்ப உடனே ஊர்மிளா ஏன் மா கல்யாணம் வேண்டாம்னு சொல்ற வேற யாரையும் லவ் பண்றியா என்று தூண்டில் போட சாராவின் பெற்றோரும் ஆர்வமாக அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாரா ஏதோ சொல்ல வர அந்நேரம் மித்ராவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது..
அதே நேரம் அங்கு சுமதியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாலும் இவளை பார்வையால் வருடிக் கொண்டிருந்த ஆரனுக்கும் ஆதி குறுஞ்செய்தி அனுப்பியிருக்க அதை கேட்டவன் இன்பமாக அதிர்ந்தான் என்றால் இங்கு சாரா அந்த வாய்ஸ் நோட்டை கேட்டு இருக்கையில் இருந்து எழுந்தவள் இவனை நோக்கி ஓடி வந்தாள்.
வந்தவள் அவனை நெருங்கி இதை சொல்ல உனக்கு இவ்வளவு வருசமாடா லூசு என்று அவன் நெஞ்சிலேயே அடிக்க அவளை இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கட்டிக் கொண்டான்.
டேய் எங்க ரிசப்ஷனுக்கு வந்துட்டு உங்க கல்யாணத்தை உறுதி பண்ணிட்டுப் போறீங்களா என்ற ஆசியின் குரலில் தான் இருவரும் சுற்றம் உணர்ந்து விலகிக் கொண்டனர்.
ஊர்மிளாவிற்கு தான் கண்ட பகல் கனவு சுக்கலாக உடைந்து போனதில் முகம் கூம்பி போனது..
ஆரனை நெருங்கிய ஆதி அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நானும் பார்த்தேன் இப்போ சொல்லுவீங்க அப்போ சொல்லுவீங்கன்னு ஹிம்ம்.. எங்க ஒன்னும் வேலைக்காகல.. அதான் இந்த பிளான் ..
எப்படியோ நல்லாருந்தா சரிதான் என்று ஆசீர்வாதம் செய்வது போல் கேலி பண்ண தேங்க்ஸ் டா மச்சி என்று அவனை அணைத்துக் கொண்டான் ஆரன்.
பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு விழா சிறப்பாக முடித்து வீடு வந்து சேர மணி பதினொன்றை தாண்டி விட்டது.
முகம் கசங்கி இடுப்பைப் பிடித்துக் கொண்டு இறங்கிய மித்ராவை கண்டவன் என்னடி பண்ணுது வலிக்குதா? என்று பீதி ஆனான்.
ஐயோ இல்லை அத்தான் லைட்டா இடுப்பு வலிக்குது அவ்வளவு தான் என்று மூச்சை இழுத்து விட்டுக் கூற மித்து ஒன்னும் இல்லை தானடா என்று மீண்டும் கேட்க இல்லை என்று தலை ஆட்டியவள் மெதுவாக நடக்க இரு டி வரேன் அதுக்குள்ள என்ன அவசரம் என்று காரின் கதவை அடித்து சாத்தியவன் அவளிடம் வந்து கையில் அள்ளிக் கொள்ள,
அத்தான் அந்த சோஃபால உட்காரலாமா எனக்கு இடுப்பு லைட்டா வலிக்குது என்றவளை மெதுவாக இறக்கி அமர வைக்க சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் பின் எழுந்து நடந்தாள்.. இவளைக் கண்டு இவனுக்கு தான் உயிர் போய் உயிர் வந்தது..
உடனே சுமதியை அழைத்தவன் ம்மா மித்துக்கு இடுப்பு வலிக்குதுன்னு சொல்ற வந்து பாரும்மா என்கவும் சுடு தண்ணீருடன் வந்தவர் அவளுக்கு இடுப்பில் ஒத்தடம் வைத்துக் கொண்டே அவளிடம் பேச்சுக் கொடுக்க இதமாக இருந்ததோ என்னவோ..
சிறிது நேரம் கீழே இருந்த அறையில் படுத்திருந்தாள்..
பேபி அம்மாவ கஷ்டப் படுத்தாம வந்துரு சரியா என்று தன் பிள்ளையிடம் அவள் வயிற்றை வருடியப் படி பேச அதற்கு பதில் கூறுவது போல எட்டி ஒரு உதை உதைத்தது..
நன்றாக உறக்கத்தில் இருந்தவள் ம்மா என்று வலி பொறுக்காமல் கத்தியபடி எழ ஆதிக்கு ஒன்றுமே புரியவில்லை..
அத்தான் வலிக்குது என்று மூச்சு வாங்கிக் கொண்டு வலியில் கத்த துடித்துடித்து போனான்.
உடனே சுமதியை அழைத்தவன் மித்ராவை கையில் ஏந்திக் கொண்டு வண்டியை நோக்கி விரைந்தான்.
ஆசி சத்தம் கேட்டு வர டேய் நீ நிருக்கூட இரு என்றவனுக்கு துணையாக நிரஞ்சன் ஓடி வந்தான்..
நிரஞ்சன் கார் ஓட்ட அத்தான் வலிக்குது.. முடியல என்று அவள் கதறியதைப் பார்த்து இரத்தக் கண்ணீரே வந்து விட்டது..
மருத்துவமனை வந்த ஒரு மணி நேரத்திலேயே ஆதியின் புதல்வி இவ்வுலகில் ஜனித்து விட அனைவருக்கும் ஆச்சரியம் தான்.
சுமதி கூட ஆதியிடம் முதல் பிரசவம் ரொம்ப நேரம் எடுக்குமோன்னு பயந்தேன் கண்ணா எப்படியோ சுகப்பிரசவம் அதுவும் இவ்ளோ சீக்கிரத்துல ஆயிடுச்சு.. நன்றி கடவுளே என்று கூறினார்.
மருத்துவர் உள்ளே அழைத்தும் இல்லை நான் வரமாட்டேன்.. அவள் கத்துறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை என்றவன் வெளியிலேயே நின்றுக் கொண்டான்.
குழந்தையை சுத்தப் படுத்தி விட்டு எடுத்து வந்து அவன் கையில் செவிலியர் கொடுக்க அவன் இவ்வுலகிலேயே இல்லை.
தன் பெண்ணரசியைக் கண்டதும் மெய் சிலிர்த்துப் போனான்.
அரை மணி நேரம் கழித்து மித்ராவை அறைக்கு மாற்றியதும் அனைவரும் வந்து விசாரித்துவிட்டு செல்ல தலைவியின் பார்வையோ தலைவனிடம் தான்..
அவனோ எப்போடா எல்லாரும் போவீங்க என்ற ரேஞ்சில் நின்றுக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக அனைவரும் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியேற அவளிடம் தாவியவன் முத்த மழை பொழிய ஆகரம்பித்து விட்டான்.
மித்து தேங்க்ஸ் டி என்று அவளை அணைத்துக் கொண்டவனிடம் அத்தான் உங்களுக்கு நியாபகம் இருக்கா நமக்கு கல்யாணம் ஆன முதல் நாள் உங்ககிட்ட சொன்னேனே என்று வினவ அவன் என்ன என்பது போல் அவளை பார்த்தான்.
பிள்ளை பெத்து கொடுத்ததும் போயிடுறேன்னு சொன்னேன்ல.. அதான் பாப்பா வந்துடுச்சே நான் போகவா என்று குறும்பாக கேட்க அவளை பொய்யாக முறைத்தவன் நீ தப்பா சொல்ற மித்ரா நீ எனக்கு வதவதன்னு நிறைய பிள்ளை பெத்துக் கொடுக்கிறேன்னு சொன்ன அதனால உன்னை விடுறதா இல்லை என்றவன் ரொம்ப பயந்துட்டேன் டி என்று அவள் இதழில் புதைந்து போனான்.
எட்டு மாதங்கள் கடந்திருந்தது …
பாப்பா உனக்கு பொறுமையாவே நடக்க தெரியாதா டி என்று அதட்டினான் ஆசி.
மாமா நீ ரொம்ப தொல்லை பண்றடா இப்படி படுக்க கூடாது அப்படி நடக்க கூடாது.. நான் எது பண்ணினாலும் குத்தம் சொல்லுற..
எனக்கு புரிஞ்சு போச்சு வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தங்கிற கதையால்ல இருக்கு உள் கதை..
நான் எது செஞ்சாலும் ஏதாவது சொல்ற என்று காலை தரையில் உதைக்க ஏய் பார்த்துடி என்று அதற்கும் அவன் பதற, நீ அடங்க மாட்டியாடா என்பது போல் முறைத்து வைத்தாள்.
நிருவிற்கு ஒன்பது மாதம் நெருங்கவே மருத்துவர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் சி- செக்ஷன் டேரக்டா போயிடலாம் என்கவும் சரி என்று அனைவரும் ஆமோதித்தனர்.
ஆசிக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிறக்க அந்த வீடே குழந்தைகளின் விளையாட்டு திடலானது..
ஆதி தன் தங்க மகளுக்கு வர்ணிகா என்று பெயர் சூட்டியிருந்தான்.
மெத்தையில் அமர்ந்து தன் மகளை மடியில் போட்டுக் கொண்டு வரு பேபி என்று கொஞ்சிக் கொண்டிருக்க மித்ரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அறைக்குள்ளேயே நடைப் பயின்றாள்.
என்னடி இப்போ எதுக்கு முகம் வாடியிருக்கு என்று கேள்வி அவளிடமிருந்தாலும் கவனம் தன் மகளிடம் மட்டுமே..
அத்தான் ரொம்ப பண்றீங்க தெரியுமா இதெல்லாம் ஓவரு சொல்லிட்டேன்.. என்று கத்தினாள்.
என்னடி ஓவரா பண்றேன்? என் பிள்ளைய கொஞ்சுனது தப்பா? இது அந்த கடவுளுக்கே அடுக்குமா என்று புலம்ப
அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தவள் பின்ன என்ன அத்தான் இப்போல்லாம் என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க போங்க நீங்க மாறிட்டீங்க என்று முகம் தூக்க அடியேய் அப்படி எல்லாம் ஒன்னுமில்லை டி என்று சமதானப் படுத்த பார்க்க போங்க என்று அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
ஹிம்ம் வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணனும்னு விதியிருந்தா நடக்கட்டும் என்று புலம்பியவன் அவளை நெருங்க அவளோ தள்ளி விட்டாள்.
ஏய் என்னடி வேணும்
நான் முக்கியமா அவள் முக்கியமா
ஏய் அவக்கூட போட்டி போடுற அவ நம்ம பிள்ளை டி என்கவும் இல்லை நீங்க சொல்லுங்க எனக்கு தெரிஞ்சாகணும் என்று விடாப்பிடியாக நிற்க சலித்துக் கொண்டவன் அவளை நெருங்கி அணைத்து கொண்டவன் எனக்கு உன்னை தான் பிடிக்கும் .. உன்னை மட்டும் தான் பிடிக்கும் .. என்று முத்தம் வைத்தவன் இப்படி உன்னை தீண்டிட்டே இருக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று அவளுள் புதைந்தான்.
இனி மோகமுள் தீண்டிக் கொண்டே இருக்கும்..
சுபம்..
நன்றி..
வணக்கம்…

Post a Comment