மோகமுள் - எபிலாக்
எபிலாக்…
ஐந்து வருடங்கள் கழித்து …
ராகவனின் வீடு..
இந்த ஆறு வருடங்களாக அந்த வீடு வீடாகவே இல்லை..
தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் ராகவன் கூட இப்பொழுதெல்லாம் வெளியில் செல்வதையே நிறுத்தியிருந்தார்.
தன் மகன் படுத்த படுக்கையாக கிடக்க பெற்றோரும் நடைப்பிணமாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தனர்..
அதுவும் அவனை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு காரணமே அவர்கள் உண்ண உறங்க காரணம்.. அவர்களை விட்டால் அவனுக்கு வேறு நாதி இல்லை.. பணம் எவ்வளவு தான் கொட்டிக் கிடந்தாலும் அது இருந்து என்ன பயன்?
நான்கு வருடங்களாக கோமாவில் இருந்தான்.. இரண்டு வருடங்களுக்கு முன் கண் விழிக்க இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யவில்லை.. படுத்த படுக்கை தான்..
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில் உண்ணாமல் உடம்பு இளைத்து எலும்புகள் துறுத்தி நிற்க கண்கள் இரண்டும் குழி விழுந்து சவரம் செய்யாமல் அழகு முகம் கறுத்து போய் என்னவோ போல் இருக்க இப்படித்தானே அவனுக்கும் இருந்திருக்கும் என்ற நினைப்பு தான்.
தன்னையே நிந்தித்து கொண்டான்..
இவர்களும் சொந்தத்தில் பெண் பார்க்க இவனை யார் கட்டிப்பா? என்ற கேள்வி தான் முதலில் தொக்கி நின்றது..
பணம் சொத்து அனைத்தும் எழுதித் தருகிறோம் என்று சொல்லியும் யாரும் வரவில்லை.. கடைசி வரை அவன் காலம் இவ்வாறு தான் போகனும் என்றால் யார் என்ன செய்ய முடியும்..
(இவனை வச்சு ஒரு கதை எழுதலாமா என்ற யோசனையில் ரைட்டர்)
***
நந்தினிக்கு தூரத்து சொந்தத்தில் இருந்து இரண்டு வருடம் முன்னர் மாப்பிள்ளை வரன் வரவே கணேசன் அவனிடம் கேட்க நந்தினியும் உங்க இஷ்டம் என்று விட்டாள்.
அவளுக்கு ஒரு வயதில் ரித்விகா என்ற மகள் உண்டு..
ஏதாவது விசேஷ நாளில் மித்ராவை பார்ப்பதோடு சரி.. அதுவும் பொது விசாரிப்பு போல மட்டும் இருக்கும்.. ஆதி அதிலெல்லாம் தலையிடுவதில்லை..
சிங்கப்பூரில் உள்ள ஸ்டீல் கம்பெனியின் ஓனர் பரத்வாஜ்ஜின் ஒரே புதல்வியை தான் நிரஞ்சன் கட்டியருக்கிறான். வாசு அனைத்தையும் விசாரித்து யோசித்து தான் பெண் பார்க்கும் படலத்தையே தொடங்கினார்.
ஏனென்றால் அவருக்கு தான் தெரியுமே தன் மனைவியைப் பற்றி..
சிலரெல்லாம் மாறவே மாட்டார்கள் அந்த வரிசையில் தான் ஊர்மிளாவும் பணம் மட்டுமே பிரதானம்.. மற்றவை எல்லாம் அதற்கு பிறகு தான்.. அதில் விதிவிலக்கு தன் குடும்பம் மட்டுமே..
ஆசியின் ரிசப்ஷன் முடிந்த இரண்டு மாதத்திலே ஆரனுக்கும் சாராவுக்கும் வெகு விமர்சியாக இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்தனர்.. இருவருமே இத்தனை வருடமாக சொல்லாத காதலை இப்பொழுதெல்லாம் அடிக்கடி சொல்லி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்கின்றனர்.
***
ஆதி வீட்டில் சக்கரவர்த்தி இரண்டு பேரப்புள்ளைகளை கையில் வைத்துக் கொண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற மூவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
என்னாது மூணா என்று கேட்டது எனக்கும் கேட்கிறது..
வாங்க இவங்க எல்லாரும் யாரு போட்ட குட்டின்னு பார்க்கலாம்..
ஆசி உறுதியாக இருந்தான் நமக்கு இரு குழந்தைகள் போதும் என்பதில்..
முதல் பிரசவமே சி - செக்ஷனில் முடிய இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று உறுதியாக இருந்தவன் பெர்பார்மன்ஸ் எப்படி டி என்று கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை..
இப்பொழுது நிரு தான் வடிவமைக்கும் ஆடைகளைக் கொண்டு ஒரு பெரிய பொட்டிக் வைத்திருக்கிறாள்..
ஆசி அவளுக்கும் ஆதிக்கும் உறுதுணையாகவும் அதே சமயத்தில் ‘நிறைய ப்ரோஜக்டில் ஈடுபாடு கொண்டு நிர்வகிக்க நீயே இதெல்லாம் பாருடா என்று அவன் பொறுப்பில் பாதியைத் தள்ளி விட்டான்.
ஆசி போல் ஆதிக்கு அந்த கட்டுப்பாடு எதுவும் இல்லை போலும்..
இந்த ஐந்து வருடத்தில் மேலும் இரண்டு ரிலீஸ் பண்ணி அடுத்து லோடிங் ..
மித்து பிரசவ அறைக்குள் போவதும் தெரியாது வருவதும் தெரியாது..
வலியில் அவள் கத்தும் போது பதறி பின் அவளைத் தீண்டி திணறடிப்பான்..
ஆக மொத்தத்துல வதவதன்னு ஒரு ஊரை உருவாக்காம விடமாட்டான் போல..
இப்போ பிள்ளைகளை விட்டுட்டு நால்வரும் எங்கே என்று பார்த்தால் கால்ஷீட் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க மக்களே.. தங்கள் இணைகளுடன் அவ்ளோ பிசியாம் மக்களே..
இதை நாங்க நம்பணும்? என்று கேட்டது புரியுது..
நம்பித்தான் ஆகணும்..
அதனால நாம கிளம்பலாம்..
மீண்டும் அடுத்த கதையில் சந்திக்கலாம்..
வர்ட்ட்ட்டா மாமூ டுர்ர்ர்ர்ர்…

👌👌🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌
ReplyDeleteThank you sis
Delete