மோகம்-23:

தீனா அன்று சென்னைக்கு செல்ல புறப்படும் பொழுது கதிர் அவனை அடித்து மிரட்டியதில் கோபமானவன் உன்னை எதாவது பண்ணியே ஆகனும் டா என்னையே அடிக்கிற என்று பல்லை கடித்தவன் அவனை கொல்லும் வெறியோடு தன் பண்ணை வீட்டில் தங்கிக் கொண்டவன் சரியான நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்..

கதிரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்தவன் தமிழும் கதிரும் தமிழ் வீட்டில் வந்து தங்கவும் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று மூச்சு முட்டக் குடித்து விட்டு அவர்கள் இருந்த வீட்டிற்கு தீ வைத்தான்..

தீ வைத்துவிட்டு அவர்கள் படும்பாட்டை பார்த்து ரசித்தவன் பின் வாசல் வழியாகக் கதிர் வரவும் ச்சே தப்பிச்சுட்டானே என்று வருத்தப்பட்டான்.. தன்னை யாரும் பார்த்து விடக் கூடாது என்று அங்கிருந்த பெரிய மரத்தின் பின் நின்று மறைந்துக் கொண்டு தமிழ் அழுவதைப் பார்த்து ரசித்தான்..

அவன் தீ வைத்து விட்டு வரும்பொழுது அவனுடைய பர்ஸ் கீழே விழுவது கூடத் தெரியாமல் ஓடி மறைந்துக் கொண்டான்.. கதிர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது காலில் அந்தப் பர்ஸ் தட்டுப்பட தன் சட்டைப் பையில் எடுத்து வைத்துக் கொண்டான்.

கதிர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு செல்ல பார்த்தி கதிரை அழைத்துக் கொண்டு செல்வதைக் கண்டவன் குதூகலத்துடன் தன் பண்ணை வீட்டிற்கு சென்று மட்ட மல்லாக்க படுத்து தன் செயலை வீரத் திர செயல் என்று தானே புகழ்ந்துக் கொண்டிருந்தவன் அப்பொழுது தான் தன் பர்ஸ் இல்லை என்று உணர்ந்தான் அதனை தேட தமிழ் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்..

ஐயோ போச்சு மாட்டிப்போம் போலையே என்று திக் திக் மனதுடன் வீட்டை நெருங்கியவன் அங்கு வந்த வழி முதற்கொண்டு அனைத்தும் அலசியவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றதும் அவனை பயம் பிடித்துக் கொண்டது.

ஐயோ போச்சு இந்த விஷயம் மட்டும் எங்கப்பனுக்கு தெரிஞ்சிது அவ்வளவு தான் என்னை கொல்லாம விட மாட்டான் என்று பயத்துடன் கதிர் வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினான்.

அங்க தான் யாராவது எடுத்துருக்கனும் ஐயோ எப்படியாவது தப்பிக்கனும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு தானே வலையில் சிக்கப் போகிறோம் என்று தெரியாமல் போனது..

வீட்டின் பின்புறமாக வந்து செடிகள் பின் மறைந்து நின்றவன் ஏதோ பூச்சி கடிக்கவும் காலை உதற செடிகள் அசைந்து ஆடி காட்டிக் கொடுத்தது.

அப்பொழுது தான் வெண்ணீர் போட்டுக் கொண்டிருந்த தமிழ் ஏதோ சலசலப்பு வரவும் திரும்பிப் பார்க்க யாரும் இல்லை என்று உள்ளே சென்று கதிருக்கு துடைத்துவிட்டு அவன் சட்டையை எடுத்து வந்தாள்..

சட்டையில் கைவிட்டுப் பார்க்க ஒரு பர்ஸ் இருக்கவும் இது அத்தானேட பர்ஸ் இல்லையே இது யாரோடு என்று திறந்து பார்க்க போட்டோவில் தீனா பல் இளித்துக் கொண்டிருந்தான்.. அதை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தவள் முன்பு யாரோ நடந்து வருவது போல சத்தம் வந்தது வீட்டிற்கு தீ வைத்தது என்று அனைத்தையும் கணக்குப் போட்டவள் இந்த நாயி தான் வீட்டுக்குத் தீ வச்சிருக்கு..

வச்சிட்டு ஓடும போது பர்ஸை மிஸ் பண்ணிருக்கனும் அதனை அத்தான் எடுத்து வச்சிருக்கனும் நீ தான் செடிக்கு பின்னாடி நிக்கிறியா வாடா மவனே என் அத்தான் இப்படி வலியில் இருக்குறதுக்கு நீ தான் காரணமா உன்னை என்னப் பண்றேன்னு பாரு என்று ஒன்றும் தெரியாதது பர்ஸை உள்ளே வைத்தவள் அடுப்பருகே சென்றாள்..

இவள் அடுப்பருகே செல்லவும் இது தான் தக்க தருணம் போய் எடுத்துட்டு வந்துடுடலாம் என்று ஓடி வர அதற்காகவே காத்திருந்தவள் எரிந்துக் கொண்டிருந்த விறகை எடுத்து அவனை அதை வைத்தே கையிலும் காலிலும் அடித்தாள்..

தன் மீது நெருப்பு படவும் ஆஹ் என்று அலறித் துடித்தவாறு ஓடினான்.அவன் ஓடவும் அவனை நோக்கி அந்த விறகை விட்டெறிய அது காலில் படவும் தடுக்கி விழுந்தவன் வலியில் துடிக்க அவனை அடித்து வெளுத்து வாங்கினாள்..

ஏன்டா நாயே என்ன தைரியம் இருந்தா என் புருஷனை பழி வாங்க எங்க வீட்டுக்கே தீ வைக்குற அப்படி மோகரதா இருந்தா என் புருஷன் கிட்ட நேரடியா மோதிருக்கனும் இப்படி கோழை மாதிரி முதுகுல சொருகிற….

நீ தான் பொட்டப் பயலாச்சே நீ அப்படி தான் பண்ணுவ ஆம்பிளையா இருந்தா என் புருஷன் கிட்ட ஒத்தைக்கு ஒத்தையா நின்னு சண்டைப் போடு சாவு டா நாயே என்று அவனை அடித்து தரத்தரவென இழுத்து வந்தவள் அங்கிருந்த தூணில் சேர்த்து கையையும் கால்களையும் கட்டி போட்டு அவன் கன்னத்தில் பளார் பளாரென நான்கு அறை அறைந்து விட்டு நாளைக்கு உன்னை இந்த ஊர்க்கராங்க முன்னாடி அசிங்க படுத்துறேன்…

எங்க வீட்டுக்கே வர நடுராத்திரியில் திருடன் மாதிரி ச்சீ உன்னைவிட்டு வச்சதே உன் அப்பா முகத்துக்காகத்தான் என் மாமன் படுத்துக் கிடக்குறது உன்னால தான் உன்னை இனியும் சும்மா விடத் தயாரில்ல ராத்திரி முழுக்க இங்கயே கிட என்று விட்டு அங்கு ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே இல்லாமல் தண்ணீர் எடுத்து சென்று குளித்து விட்டு வந்தாள்..

தீனாவோ பேயறைந்தது போல் நின்றான். இதில் நெருப்பு பட்ட இடம் வேறு திகுத்திகுவென எரிந்தது. போச்சு நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ என்று பயந்தவாறு அந்த இருட்டை வெறித்துக்கொண்டிருந்தான்.

இங்கு உள்ளே தன்னறைக்கு வந்த தமிழ் முகத்தில் அதுவும் காட்டாமல் கதிர் அருகில் படுக்க என்ன டி இருக்கானா செத்துட்டானா என்று கேட்கவும் அசால்ட்டாக ஹிம்ம் இருக்கான் இருக்கான் என்று அவன் கையிலிருந்த கட்டை வருடிக் கொடுத்தவள் அவனை அனைத்துக் கொண்டு அதுவும் பேசாமல் படுத்திருந்தாள்.

அவள் உடல் நடுங்குவதை கதிர் உணர்ந்தான்..ஏய் ஒன்னும் இல்லை டி இன்னும் நாலு நாளுல சரியா போய்டும் எதுக்கும் இப்போ பயப்படுற என்று கேட்க வெகுண்டெழுந்தவள் உனக்கென்ன நீ காயம் பட்டு இப்படி வந்து படுத்துக்கிட்ட மூஞ்சைப் பாரு நான் கேட்டேனா என் பொருள் வேணும் புக்ஸ் வேணும்னு ஏன் இப்படி என்னை கொல்லுற…

நீ பாட்டுக்கு என்னை தள்ளி விட்டுட்டு வீட்டுக்குள்ள போற உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் என்னப் பண்ணுவேன் உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கு நீ இல்லாம நான் மட்டும் என்னப் பண்ணுவேன் என்னைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா நீ உள்ள போயிருக்க மாட்ட தானே..

என் மேல உனக்கு பாசமே இல்லை இப்பக் கூட பாரு நான் எவ்வளவு பேசுறேன் நீ எதாவது பேசுறியா அப்படியே மூஞ்ச மூஞ்ச பாக்குற உனக்கு ஒன்னுமே தோணலையா ஜடமா நீ போச்சு ஜடத்தைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன் ஜடம் ஜடம் என்று பேசிக் கொண்டே போனாள்.

அவள் பேசப் பேச சிரிப்புடன் அவளைப் பார்த்தானே தவிர எதும் பேசவில்லை.. என்னா அலுச்சாட்டியம் பண்றா என் தமிழ் என் செல்லக் குட்டி என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். இங்கு இவள் தோரணமாக கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்தாள் வார்த்தைகளால்….

உனக்கு உடம்பு முழுக்க திமிரு பெரிய ஹீரோன்னு நினைப்பு அப்படியே நெருப்புல பாயுற ஓடிப் போயிடு இனி என்கிட்ட வந்த உன்னை சாவடிச்சிடுவேன் என்று அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.. இப்போ நீ என்ன பண்ற நீ தானே அணைச்சுப் பிடிச்சிருக்க என் கவும் ஹிம்ம் அது நான் பிடிப்பேன் ஆனால் நீ என்னை தொடக் கூடாது…

நான் என்ன வேணா பண்ணுவேன் உன் வேலையைப் பாரு என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கண்களை மூட அவனை என்னடி பண்ணின அப்படி அலறுறான்.. நான் கூட வீட்டுல இருக்குறவங்க எழுந்து வந்துருவாங்களோன்னு பயந்துட்டேன்…

சும்மா நாலு அடி அடிச்சேன் அவ்வளவுதான்.. அவனால தானே என் புருஷன் இப்படி படுத்துக் கிடக்கிறான் அந்த நாயை நான் சும்மா விட்டுடுவேனா அதான் கொஞ்சம் அடிச்சி தூணுல கட்டி வெச்சிருக்கேன் என்று கூற உனக்கு தைரியம் ஜாஸ்தி டி என்று அவள் மேல் கைப்போட எருமை மாடு கையை எடு என்கவும் என்ன மரியாதை தேயுது என் கவும் அதெல்லாம் அப்படி தான் தூங்குங்க என்று அவன் முடியைக் கோத அதில் மயங்கியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.

நகருங்க தாடி குத்துது இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க என்று அவன் முடியைப் பிடித்திழுத்து முகத்தை தள்ள ஏய் விடு டி என்று அவளை ஒரு கையால் பிடித்து தன்னுடன் பிணைத்தவன் படுடி வாசமா இருக்க என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து தன் நுரையீரல் முழுக்க அவள் வாசம் நிரப்பியவன் அங்கேயே வாசம் செய்தான்.

அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை அவளும் அவனை அணைத்துக் கொண்டு தூங்கினாள்.

காலையில் வடிவு தான் எழுந்து பின் கட்டிற்கு செல்ல முதலில் அவனை பார்க்கவில்லை.. பின் முகம் கழுவிட்டு வரும் பொழுது திரும்ப இவன் சிறிது முனகலுடன் தலையைத் தொங்கப் போட்டவாறு இருக்க அதிர்ந்தார்.

உடனே உள்ளே ஓடியவர் சுந்தரத்தை அழைக்க அப்பொழுது தான் அனைவரும் எழுந்து வந்தவர்கள் இவர் அழைக்கவும் என்னவோ ஏதோ என்று பதறிப் போய் பார்க்க தீனா தலையைத் தொங்கப் போட்டவாறு முனகிக் கொண்டிருந்தான்..

இவர்கள் கூட்டமாகப் பின் கட்டில் நிற்கவும் தமிழ் எழுந்து வந்தவள் சாவதானமாக முகத்தைக் கழுவி விட்டு வர வடிவு தீனாவிடம் யாரு தம்பி இங்கன உன்னை கட்டி வச்சது என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்க இவன் கிட்ட என்ன கரிசனமா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க போங்க போய் பஞ்சாயத்தைக் கூட்டுங்க…

டேய் பார்த்தி இங்க என்ன ஷோவா காமிக்கிறாங்க அதிர்ச்சியா கேள்வியா பார்த்துட்டு இருக்க என்று கேட்கவும் எய் தமிழ் இது உன் வேலை தானா என்று கேட்க டேய் நகருடா நான் மாமாக்கு முகம் கழுவி விடனும் பல்லு தேய்ச்சி விடனும் எனக்கு எகப்பட்ட வேலை இருக்கு…

நீ என்னடான்னா தேவை இல்லாமா பேசி என் டைமை வேஸ்ட் பண்ற போய் பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லிட்டு வா என்று உள்ளே சென்று விட்டாள்.. 

இவள் சொல்வது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அனைவரும் திகைத்து நிற்க தமிழ் சென்று கதிரை வெளியே அழைத்து வந்தாள்…

மோகம் மையம் கொள்ளும்...

மோகம்-24:

தன் அறைக்கு சென்று கதிரை அழைத்து வந்தவள் அங்கு இன்னும் நின்றுக் கொண்டிருந்தவர்களைக் கண்டு முறைக்க பார்த்தி தோ போயிட்டேன் ஆனால் என்ன சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுறது என்று கேள்வியுடன் நோக்க ஹிம்ம் என் புருஷன் அதான் உங்க அண்ணன் இப்படி படுத்துக் கிடக்க இந்த நாயிதான் காரணம் அதாவது நாங்க இருந்த வீட்டுக்கு தீ வச்சது இந்தப் பரதேசி தான் என்று பார்த்தியிடம் கூறியவாறு தீனாவை முறைத்தாள்..

டேய் என்றவாறு பார்த்தி அவனை அடிக்கப் போக சார் நீங்க ரொம்பபபப.. லேட் அதெல்லாம் குடுத்துட்டோம் நீ போய் பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லிட்டு அவங்க அப்பா பெரிய பண்ணைக் கிட்டயும் சொல்லிடு என்று கூறவும் ஐயோ நான் தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கதறினான்..

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் தம்பி இது நீ தெரியாமப் பண்ணிட்டேனு சொல்றீங்க இதை குழந்தை கூட நம்பாது.. என் பிள்ளைக உசுருக்கு எதாவது ஆயிருந்தா என்னப் பண்றது பார்த்திபா நீ போய் பஞ்சாயத்தைக் கூட்டுப்பா இங்க சரி வரலைன்னா போலீஸ்க்கு போவோம் என்று சுந்தரம் கூறினார்.

பின் தீனா கதிரிடம் என்னை விட்டுற சொல்லுங்க அண்ணா இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க நான் நீங்க இருக்குற பக்கம் கூடத் தலைவச்சுப் படுக்க மாட்டேன் தயவு செய்து இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க இது தான் முதலும் கடைசியும் என்று கேட்க அவனை ஒரு பார்வை பார்த்தவன் தமிழிடம் கண்ணைக்காட்ட அவள் அவனை அழைத்துச் சென்றாள்..

அனைவரும் தங்கள் வேலையைப் பார்க்க சென்று விட்டனர்.. போச்சு அப்பாவுக்கு தெரிஞ்சு வெட்டிக் கூடப் போட்டுடுவார் ஐயோ என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே என்று அடுத்து வந்த ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் கழிந்தது…

அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சுது சங்கு தான் போச்சு ஐயோ ஏன்டா இப்படி பண்ணினா தண்ணி அடிச்சா என்ன பண்றன்னு கூட தெரியாமப் பண்றியே போச்சு எப்படியும் ஜெயிலு தான் போச்சு என்று நினைத்துக் கொண்டிருக்க அவனைக் களவாட ஒருத்தி வந்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் அறிய வாய்ப்பில்லை…

பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குக் கிளம்பியப் பார்த்தியைத் தடுத்த சுந்தரம் தலைவர் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி பண்ணை கிட்ட சொல்லு பார்த்தி வீட்டுக்கு ஒரே புள்ள அது தடமாறிப் போனாலும் பெத்தவங்களுக்குப் பிள்ளை தானே என்கவும் அப்பா உங்கப் பிள்ளையைக் கொல்லப் பார்த்துருக்கான்னு அவனுக்குப் போய் பாவம் பார்க்கிறீங்க என்கவும் நான் பண்ணைக்காகத் தான் டா பார்க்கிறேன் நீ போய் பண்ணைக் கிட்ட சொல்லு…

சரி ஏதோ பண்ணுங்க ஆனால் இது தமிழுக்கு தெரிஞ்சா நான் உங்களை தான் கை காட்டுவேன் நீங்க தான் அவளை சமாளிக்கனும் இப்போவே சொல்லிட்டேன் என்று விட்டுக் கிளம்பினான். இங்கு கதிருக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவள் என்ன இன்னும் பஞ்சாயத்துல இருந்து ஆள் யாரும் வரலை இந்தப் பார்த்தி சொன்னான்னா இல்லையா…

வரட்டும் ஊர விட்டு ஓட வைக்கனும் இல்லை ஜெயில்ல போய் களி திங்கட்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தவளை தமிழ் என்று அழைக்க ஹிம்ம் என்ன சொல்லுங்க என்று விரைப்பாகக் கேட்கவும் ஐயோ இப்போவே டெரரா தான் இருக்கா நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டா இன்னைக்கே எனக்கு பால் ஊத்திருவா போலையே…

ஹிம்ம் பாரேன் உனக்கு வருங்காலத்துல நடக்குறதெல்லாம் முன்கூட்டியே தெரியுது என்று அவனது மனசாட்சிக் கொக்கரித்து சிரித்தது…

அம்மு என்கவும் ஹிம்ம் சொல்லுங்க என்கவும் அவன் தமிழ் என்று அழைக்க யோவ் இப்போ பேச வந்த விஷயத்தை சொல்லப் போறியா இல்லையா என்னமோ லவ் பண்ற பொண்ணுக்கிட்ட ப்ரோபோஸ் பண்ணப் போற மாதிரியே தயங்கி தயங்கி இழுத்துட்டு இருக்க என்று எண்ணையில் பொறிந்த கடுகாய் படப்படவென பொறிந்தாள்…

தமிழ்… அவள் முறைக்கவும் நான் சொல்லப் போறதைக் கேட்டுக் கோபப் படாதா தமிழ் தீனா ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் அவன் கொலைப் பண்ற அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை கூட இருக்கிற பயலுங்கக் கூட சேர்ந்துக்கிட்டுப் பொம்பளைப் பிள்ளைக கிட்ட சேட்டை பண்ணுவான் அதை ரைட்டுன்னு சொல்ல வரலை….

ஆனால் இப்போ பஞ்சாயத்தைக் கூட்டினா பண்ணை உயிரையே விட்டுருவாறு அசிங்கம் அது ஒரே பிள்ளை வேற ஏற்கனவே இவன் இப்படி தறுதலையா சுத்துறதைப் பார்த்து என்கிட்டையே நிறைய முறை புலம்புவாரு…

எனக்காக இந்த ஒரு முறை அவனை மன்னிச்சிடு தமிழ் என்கவும் அவள் கையிலிருந்த தட்டு பறந்து சென்று சுவற்றில் மோதிக் கீழே விழுந்தது..

ஏய் தமிழ் கோபப்படாதடி என்று இவன் கூற அவள் எதுவும் பேசாமல் கையை அவன் முன் நீட்டி நிறுத்துமாறு சைகை செய்ய அங்கு தீனா அலறும் சத்தம் இவர்கள் காதை வந்து அடைந்தது…

தமிழ் சத்தம் கேட்டு வெளியே செல்ல ஹே என்னையும் கூட்டிட்டுப் போ தமிழ் என்று கத்தவும் நீ யார்..? என்பது போல் பார்த்து விட்டு சென்று விட்டாள். ஐயோ போச்சு திரும்ப வேதாளம் முருங்கை மரம் எறிடுச்சு சுத்தம் என்று வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான்..

இங்கு பண்ணையார் தீனாவை கட்டி வைத்திருந்த இடத்திற்கு வந்தவர் அவனை அடித்து வெளுத்தார்.. என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க உன்னை என் பிள்ளைன்னு சொல்லவே வெட்கமா இருக்குடா.. எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான் டி ஒரே பிள்ளைன்னு பார்த்து பார்த்து வளர்த்தா நீ என்னடான்னா ஊருல இருக்கிறவன சீண்டிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வம்பிழுத்துக்கிட்ட ச்சி சொல்லவே நா கூசுதுடா …

இப்பவே உன்னை வெட்டிப் போடனும்னு தான் வெறி வருது ஆனால் ஒத்தைப் பிள்ளையா போயிட்டியே ஓங்குன கை கூட ஒரு படிக்கு மேல உன்னை நோக்கி வரலை டா பெத்த பாசம் தடுக்குது ஏன் டா இப்படி பண்ற உனக்கு என்ன குறை வச்சேன் என்று கதற சுந்தரம் சங்கடமாக உணர்ந்தவர் வாங்க பண்ணை உள்ளப் போய் பேசலாம்..

அவரை உள்ளே அழைத்து சென்றவர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த ஏற்கனவே இவன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு வெளிய தலைக்காட்ட முடியலை சுந்தரம் இதுல இது வேற சேர்த்துச்சுன்னா கொலைக்காரன்னு பட்டமே கொடுத்துருவாங்க என்று தன் மனக்குமுறலை வெளியிட்டார்..

இங்கு பார்த்திபன் தீனாவின் கட்டை அவிழ்த்து விட தன் தாயின் உதவியுடன் ஹாலிற்கு நடந்து வர இதனை எல்லாம் பார்த்த தமிழ் பார்த்தியை முறைத்தாள்.. ஐயோ அம்மா பேய் என்று மனதிற்குள் அலறியவாறு எங்க இந்த அண்ணனை காணும் ஐயோ போட்டுத் தள்ளிட்டாளா என்றவாறு கதிர் அறைக்கு சென்றான்..

இங்கு கதிர் மெதுவாக சுவற்றைப் பிடித்தவாரு வந்துக் கொண்டிருக்க என்ன அண்ணா உன் ரூம் குள்ளேயே நொண்டி விளையாண்டுட்டு இருக்க அதுவும் தனியா என்று நக்கலாகக் கூறியவாறு அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டான்…

அட நீ வேற ஏன்டா ஏற்கனவே ஜங்கு புங்குன்னு ஆடுவா இப்போ நான் சலங்கை வேற கட்டி விட்டுட்டேன் இனி என் கதி அதோ கதிதான் என்று கூற வா வா இனிமே தான் இருக்கு ஆட்டமே இதுக்கு சோர்ந்து போயிட்டா எப்படி என்று கிண்டல் செய்து சிரிக்க ஏன்டா நீ சிரிக்க மாட்டா இரு நீயும் கல்யாணம் பண்ணுவல்ல அப்போ நானும் சிரிப்பேன்…

அது நடக்கறப்போ சிரிச்சிக்கோ நீ வா ராசா உனக்கு கோவில் கட்டணும்னு தமிழ் சொல்லிக்கிட்டு இருந்தா வா போகலாம் என்கவும் டேய் அவ இருக்குற கோவத்துக்கு எனக்கு சமாதிக் கட்டாம இருந்தா சரி என்று தன் மனதில் எழுந்தப் பீதியை வெளிப்படையாகவே கூறினான்.

கதிர் வெளியே வரவும் அவனிடம் சென்று கையெடுத்துக் கும்பிட்டவர் கதிரு அவன் சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளைய்யா அது எங்கயாவது போய் உயிரோட இருக்கட்டும் இனி அவனால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராம பார்த்துக்குறது என் பொறுப்பு இந்த ஒரு முை மன்னிச்சிடுயா என்று மன்றாடினார்.

கதிர் தமிழைப் பார்க்கவும் இங்க என்னப் பார்வை அதான் நீயே முடிவெடுத்துட்டியே இப்போ வந்து பெரிய இவன் போல பாக்கு என்று பார்வையாலே அவனை எரிக்கவும் அவன் பார்வை சென்ற இடத்தை தொடர்ந்து தானும் பார்த்த பண்ணை உடனே தமிழிடம் சென்று தாயி எனக்காக அவனை இந்த ஒரு முறை மன்னிச்சிடும்மா….

அவன் பண்ணிசை சரின்னு சொல்லலை ஆனால் எனக்காக இந்த ஒரு முறை கருணை காட்டும்மா தண்ணியில்லா காட்டுக்கு அவனை அனுப்பிடுறேன் என்கவும் உடனே தீனாவின் தாய் தன் முந்தானையை விரித்துப் பிடித்தவாறு என் பிள்ளையை எங்கையாவது அனுப்பி வச்சிடுறேன் போலிஸ்க்கு போக வேண்டாம்மா உன்கிட்ட மடிப்பிச்சையா கேட்கிறேன் இது தான் முதலும் கடைசியும் என்று மன்றாடினார்.

தீனாவிற்கு தன் தாயும் தந்தையும் இந்த நிலையில் நிற்பதற்கு தான் தானே காரணம் என்று தன்னையே வெறுத்தான்…

இவர்கள் இருவரும் தன்னிடம் இவ்வாறு கேட்கவும் அவர்கள் கையை இறக்கிவிட்டு கூட்டிட்டுப் போங்க உங்கப் பையனை என்று விட்டுத் தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அந்தப் பொண்ணு மன்னிச்சாலும் என்னால மன்னிக்க முடியாது.. என்று கம்பீரமானக் குரல் கேட்கவும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.. யாரு இந்தப் பொண்ணு என்று அனைவரும் கேள்வியாகப் பார்க்கவும் தீனாவும் கேள்வியாகத்தான் பார்த்தான்.

அவனுக்கும் யாரென்று தெரியவில்லை நேரே தீனாவின் முன் வந்தவள் அவன் சட்டை காலரைப் பிடித்து உலுக்கியவள் ஏன்டா எனக்கு தாலிக் கட்டி அங்க குடும்பம் நடத்திட்டு இங்க வந்து அடுத்தவனை கொலை வேற பண்றியா…

இன்னும் என்னலாம் செய்வ என்று அவனை உலுக்க அதிர்ந்தான். யாருங்க நீங்க உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே என்று கேட்கவும் ஒஹ் உனக்கு நியாபகமில்லையா அதெப்படி நியாபகமிருக்கும் ஒரு நாளைக்கு ஒரு பொண்ணு கூட இருந்தா என்று கூறவும் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்…

தன்னை அதிரிந்து பார்த்த பெற்றவர்களை நோக்கி அப்பா நான் அப்படியெல்லாம பண்ணலைப்பா என்னை நம்புங்க இந்தப் பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது இந்தப் பொண்ணு பொய் சொல்லுது என்று கூப்பாடு போட நம்பத்தான் யாரும் இல்லை..

ஓகே அங்கிள் இனி உங்கப் பையனை பார்க்கனுமென்றால் இந்த அட்ரெஸ்க்கு வாங்க என் வீட்டுல எனக்கு புருஷனா இருப்பார்…

ஆனால் இனி தான் உங்க பையன் அவர் வாழ்க்கையில் நிறைய சந்திக்க போகிறார் என்று விட்டு கார்ட்ஸ் என்று குரல் கொடுக்க நாலு தடியன்கள் வர பேக் ஹிம் என்று விட்டு முன்னால் போக தீனாவை குண்டுக்கட்டாகத் தூக்கி சென்றனர்…

மோகம் மையம் கொள்ளும்….

( இது அடுத்த கதை ஹி ஹி இதுவே இன்னும் முடிக்கலையாம்னு சொல்றது என் காதுல கேக்குது பட் இது கொஞ்சம் டிப்ரண்டான கதை "கண்ணில் தெறிக்குதடி காதல் மின்னல்" கதையின் தலைப்பு….)