புயல் -8

 



மோகம்- 15:

கதிர் அறைந்ததும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவள் சுந்தரம் கதிரை அதட்ட அனைவரின் முன்பும் தன்னை அறைந்து விட்டானென்று சுயப்பட்ச்சாதாபம் எழ உடனே தன் அறைக்கு சென்று விட்டாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மடை திறந்த வெள்ளம் போல் பொலப்பொலவென கண்ணீர் கொட்ட ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் ரகுவிடம் மன்னிப்பு வேண்டி தன் அத்தை மாமாவிடமும் மன்னிப்பு வேண்ட அப்பத்தா தமிழிடம் வந்து நீ வா டா ராசாத்தி நாம போவோம் என்று தன்னறைக்கு அழைத்து செல்ல கதிருக்கு ஈரக்கொலையே நடுங்கியது.

ஏற்கனவே தான் அடித்ததால் அவள் அழுது கன்னம் சிவந்திருந்ததைப் பார்த்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை இதில் அப்பத்தா வேற அவளை அவர் அறைக்கு அழைக்க இவளும் பின்னாடியே செல்ல போசசு என்று மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.

ஐயோ அப்பத்தா கூடவே போய்ட்டாலே நம்ம ரூமுக்கு வர மாட்டாளா ஹே அம்மு சாரி டி வந்து குடி அத்தான் பாவமில்லையா நான் உன்னை மத்தவங்க யாரும் எதும் சொல்லிடக் கூடாதுன்னு தான் டி நான் முந்திக்கிட்டேன் என்னை மன்னிச்சிடு டி ப்ளீஸ் சாரி டி என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

(மன்னிப்பு கேட்டாலும் ஆப்பு இருக்கு கதிரு…)

அப்பத்தா தமிழிடம் சாப்பிட வா தமிழ் என்று அவளை அழைக்கவும் வேண்டாம் அம்மாச்சி என்று அவர் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவர் சரி நீ படுத்திருடா நான் இதோ வந்துடுறேன் என்று அவளைத் தலையணையில் படுக்க வைத்தவர் வெளியே வந்தார்.

அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க ரகுவும் சசியும் அவர்கள் அறையில் இருந்திருக்க கதிர் அப்பத்தா அறையையே பார்த்தவாறு கைகளைப் பிசைந்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்.அவனை பார்த்த அப்பத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு போக அவரை அசைய விடாமல் பிடித்துக் கொண்டவன் அப்பத்தா தமிழ சாப்பிட வை அப்பத்தா அவ பசித் தாங்க மாட்டா அப்பத்தா என்று கெஞ்சினான்.

நீங்கதான் அவ்வளவு தைரியமா அடிக்க தெரிஞ்ச உங்களுக்கு சங்பாடு கொடுக்க தெரியாது போய் நீயே கொடு உன் பொண்டாட்டி தானே எல்லார் முன்னாடியும் அடிப்ப ஆனால் இதை உன்னால பண்ண முடியாதா இதுக்கு மட்டும் என்கிட்ட கேக்குற எனக்கு எதுவும் தெரியாது.. எனக்கு பசிக்குது நகரு நகரு என்று அவனை தள்ளிவிட்டு தான் போய் அமர்ந்து சாப்பிட அமர்ந்தார்.

கதிர் தமிழ் இருக்கும் அறையையே பார்த்துக் கொண்டிருக்க வடிவாம்பாள் வந்து சாப்பிடு கதிரு என்று அழைக்கவும் ம்மா தமிழ் சாப்பிடலை ம்மா என்று பாவமாகக் கூற ஏதோ கூ வந்தவரை அப்பத்தி அவர் கையைப் பிடித்து தடுத்தார். பின் வடிவாம்பாளும் எதும் கண்டுக் கொள்ளவில்லை.

இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தவன் மனதில் இப்போ போனா திட்டுவா பரவால்ல நான் பண்ணினதுக்கு அவ திட்டினாலும் வாங்கிக்கனும் ச்சே சாரி தமிழ் என் செல்லக்குட்டி டி நீ உன்னை எப்படி நான் அடிச்சேன் என் அம்முக்குட்டி நீ என்று அனைத்துக் குட்டிகளையும் போட்டு தன் மனதிற்குள்ளே புலம்பித் தள்ளினான்.

(நீ எத்தனை குட்டிகள் போட்டு கொஞ்சி கெஞ்சினாலும் இப்போதைக்கு நீ குட்டிப் போட மாட்ட அது கன்பார்மா எனக்கு கண்கூடா தெரியுது..)

ஆர அமர அப்பத்தா சாப்பிட்டு விட்டு வேண்டுமென்றே கதிர் பக்கத்தில் வந்து ஏப்பம் விட அப்பத்தா அப்பத்தா ப்ளீஸ் அப்பத்தா எனக்கு பயமா இருக்கு அப்பத்தா அவ திட்டுவா அவளை சாப்பிட வச்சிடு அப்பத்தா என்று கெஞ்ச அதிர்ந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு ஏது உனக்கு பயமா இருக்கா என்ன ஏதுன்னு விசாரிக்காம பொம்பளை பிள்ளை மேல அத்தனை பேர் முன்னாடி கைவைக்க பயமில்லை இதுக்கு பயமா இருக்கா என்று அவனை அதட்ட தன் தப்பை உணர்ந்தவன் நான் பண்ணினது தப்பு தான் அப்பத்தா என்னை மன்னிச்சிடு என்று அவரிடம் மன்னிப்பை வேண்டினான்.

அவன் மன்னிப்பு கேட்கவும் நானா அடி வாங்கினேன் அவளை தானே அடிச்ச அவக்கிட்ட போய் மன்னிப்பு கேளு அதை விட்டுட்டு என்கிட்ட கேட்கிற என்கவும் சரி அப்பத்தா நான் பேசிக்கிறேன் அவக்கிட்ட நீ சாப்பாடு மட்டும் கொண்டு போ அப்பத்தா என்று வேண்டினான்.

நான் வரும் போதே அவளை கூப்பிட்டேன் அவள் வேண்டாம் பசிக்கலைன்னு சொல்லிட்டுப் படுத்துட்டா இதுக்கு மேல ஊட்டியா விட முடியும் என்று வேண்டுமென்றே பட்டும்படாமல் பேச என் பொண்டாட்டிக்கு நானே சாப்பாடு கொடுத்துக்கிறேன் என்று அவரிடம் வீரவசனம் பேசியவன் சமையலறைக்கு சென்று சாதத்தை அள்ளிப் போட்டு எடுத்து வந்தான்.

அதுவரை தான் அவன் வீரமெல்லாம் அந்த அறையை நெருங்க நெருங்க ஐயோ செமையா திட்டப் போறா என்று நினைத்துக் கொண்டே சென்றவன் மனதில் எழுந்த தே ஒரு கற்பனை. ஒருவேளை தமிழ் இப்போ கோபமா இருக்குறதால பருத்திவீரன் படத்துல பிரியாமணி கோபத்துல தட்டு நிறைய சாப்பாடு போட்டு சாப்பிடுற மாதிரி சாப்பிடுவாளோ ச்சீ ச்சீ அப்படிலாம் நம்ம தமிழ் சாப்பிட மாட்டா நினைச்சாலே கோரமா இருக்கே என்று அப்படியும் இப்படியும் அந்த அறைக்குள் செல்வதற்குள் பலவாறு யோசித்தப்படி சென்றான்.

(தட்டுல நிறையப்போட்டு சாப்பிடுறாளோ இல்லையோ உன்னை முட்டிக்கு முட்டித் தட்டாமா விட மாட்டா..)

மோகம் மையம் கொள்ளும்…

மோகம் -16:

எவ்வளவு தான் தைரியசாளியாக இருந்தாலும் தன் பக்கம் தவறு என்று வரும் பொழுது சிறிது ஆட்டம் காணத்தான் செய்யும் .அதுவும் அவள் கண்கள் கலங்கி முகம் சிவந்து தன்னை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் சென்றதை நினைத்து கதிக்கலங்கிப்போனான்.கடவுளே அவளை அடிச்சது தப்புதான் ப்ளீஸ் ப்ளீஸ் எப்படியாவது அவளை என் கூட பேச வச்சுடு கடவுளே என்று சிறுப்பிள்ளை போல் கடவுளிடம் வேண்டியவாறு அப்பத்தாவின் அறையை அடைந்தான்.

அப்பொழுது அங்கு வந்த பார்த்தி சும்மா இருக்காமல் ஒரு கிளாஸில் பாயாசம் குடித்தவாறு வந்தவன்கதிரைப் பார்த்து அண்ணா பாயாசம் குடிக்குரியா என்று ஒரு மிடறு பாயாசத்தை விழுங்கியவாறு கேட்க ஏற்கனவே தமிழ் என்ன சொல்வாள் என்று பயத்தில் இருந்தவன் இவன் இவ்வாறு கேட்கவும் அவனிடம் திரும்பி பாயாசம் வேண்டாம் கொஞ்சம் பாய்சன் இருந்தா கொடு என்று கடித்தவன் மனுஷன் இருக்குற நிலைமை புரியாம வந்துதான் பாயாசம் பாதரசம்னுட்டு என்று முனுமுனுத்தவன் அறையின் உள்ளே சென்றான்.

இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசிட்டு போகுது இந்த அண்ணன் ஹிம்ம் கல்யாணம் ஆனாலே இப்படி தான் விவகாரமா பேசுவாங்க போல என்று பாயசத்தை ரசித்து ருசித்துக் குடித்தவாறு சென்றான்.இங்கு அறைக்குள் பயந்தபடி வந்தவன் தமிழ் அந்த பக்கமாக திரும்பி படுத்திருக்கவும் அவனுக்கு வசதியாகி போனது,உணவு அடங்கிய தட்டை அங்கிருந்த மேசை மீது வைத்தவன் மெதுவாக கதவை சதம் வராமல் சாற்றி வைத்தவன் தமிழின் பின்னோடு வந்து படுத்து தன்னோடு அவளை அணைத்துக் கொண்டு தமிழ் சாரி டி உன்ன நான் அடிச்சுருக்கக் கூடாது என்னை மன்னிச்சிடு டி என்று அவள் பின் கழுத்தில் சிறு சிறு முத்தங்கள் வைத்தவாறு அவளிடம் தான் மன்னிப்பை யாசித்தான்.

அவன் செயலுக்கு எந்த ஒரு எதிர் வினையும் இல்லாமல் போக அவளை தன் பக்கம் திருப்பினான்.அவள் அமைதியாக அழுதுக் கொண்டிருந்தாள்,, இவன் அவன் திருப்பவும் ஒன்றும் பேசாமல் எழுந்தவள் வெளியே போக முற்பட சட்டென்று சுதாரித்தவன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். ஹே தமிழ் ப்ளீஸ் டி அப்போ இருந்த கோவத்துல ஏதோ தெரியாம அடிச்சுட்டேன் மன்னிச்சிடு டி என்று மீண்டும் மன்னிப்பு வேண்ட அவள் அவனை கண்டுக் கொள்ளவே இல்லை அவன் கைப் பிடியில் இருந்த தன் கையை விடிவித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தாள் .

அவன் எவ்வளவு சொல்லியும் அவன் ஒரு அவன் முகத்தை பார்க்கவும் இல்லை அவனிடம் ஒரு வாரிதி பேசவும் இல்லை.சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் என் கூட பேச வேண்டாம் தமிழ் அது நான் செஞ்ச தப்புக்கான தண்டனையா எடுத்துக்கிறேன் நீ ஏன் சாப்பிடாம இருக்க சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன் தமிழ் சாப்பிடு என்று அவளிடம் சாப்பாடு அடங்கிய தட்டை எடுத்துக் கொடுக்க அதை வாங்காமல் யாருக்கு வந்த விருந்தோ என்று எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதுவரை அவர்களே தங்களுக்குள் பேசி சமாதானம் ஆகட்டும் என்று வெளியே நின்றிருந்த அப்பத்தா ஒன்றும் தெரியாதது போல் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தவர் தன் பங்கிற்கு கதிரை சாடினார்.நீ அடிச்சா வாங்கிக்கணும் நீ சாப்பிடுன்னு சொன்னா சாப்பிடனுமா என்று அவனை சாட கதிருக்கு தலை குனிவதை தவிர என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவன் அவ்வாறு நின்றது தமிழுக்கு பிடிக்கவில்லை போலும் உடனே அவன் கையில் வைத்திருந்த தட்டை வாங்கிக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டாள். அவள் பின்னே செல்லப் போனவனைத் தடுத்து நிறுத்திய அப்பத்தா கதிரு பொம்பளைப் பிள்ளையை அடிக்கிறது ஆண்மைக்கு அழகில்லை. தன்னை நம்பி வந்தவளை கடைசி வரைக்கும் கண் கலங்காம பார்துக்குரவங்க தான் ஆம்பளை.

அத்தனை பேருக்கு முன்னாடி அடிச்சியே அவளோட மனநிலையை கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தியா..? நம்மை விட்டால் அவளுக்குன்னு யாரு இருக்காங்க சொல்லு நீயும் அடிச்சா அவள் தனிமையை உணர மாட்டாளா ப்போ அவளை சமாதானப் படுத்து இப்போக் கூட நீ தலை குனிஞ்சி நின்னது பிடிக்காமத்தான் தட்டை வாங்கிட்டுப் போனாள். ப்போ அவ மனசு நோகாம பார்த்துக்கோ என்று அவனை அனுப்பி வைத்தார் .

( எல்லாம் சொன்ன நீங்க அவன் உடம்பு நோகாம பார்த்துக்கோன்னு சொல்லலையே அப்பத்தா ) 

அவன் தமிழை தேடி வெலுஎ வந்ததும் பார்த்தது அவளை சிரிக்க வைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்த பார்த்தியைத் தான்.தமிழு அண்ணா வருது சாப்பிடு என்று கூறியவன் அவள் இவனை கண்டுக் கொள்ளாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளை நீ இப்போ சாப்பிடலன்னா அண்ணா உனக்கு ஊட்டி விடும் சொல்லி தான் உனக்கு ஹே அது தானே நீயும் மனசுல நினச்சுட்டு இருந்த ஒஹ் இத வச்சு ஒரு ரொமான்டிக் ஸீன்ஓட்டலாம்னு இந்த ரைட்டர் பிளான் போடும் அதுக்கு விடாத தமிழு உன் கோவத்தை இழுத்து பிடி என்று இவன் பாட்டுக்கு ஏதேதோ உளற அவனை முறைத்தாள்.

அதற்கேற்றார் போல் கதிரும் அவள் அருகில் வந்தவன் தமிழ் நான் ஊட்டி விடுறேன் சாப்பிடுறியா என்று தட்டில் கையை வைக்க போக அவனை முறைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டாள். அவள் சாப்பிட ஆரம்பித்ததும் தானும் சாப்பிட அமர்ந்தான் .

பார்த்தி சும்மா இராமல் அண்ணா ரசம் நல்லாருக்கு போட்டு சாப்பிடு என்று கூறியதும் கதிர் ஏதோ சொல்ல வரவும் அதைக் கண்ட பார்த்தி இரு இரு நானே சொல்றேன் ரசத்துக்கு விஷமே பரவாயில்லைன்னு சொல்லுவ எதுக்குப்பா விடு விடு நான் கிளம்புறேன் நீங்க இப்போ அடிச்சிப்பீங்க அப்புறம் கடிச்சிப்பீங்க நான் நடுவுல புகுந்தா என் மண்டை தான் உருளும் எதுக்கு தான் பாட்டுக்கு பேசிக் கொண்டே சென்று விட்டான்.

பார்த்தி சென்றதும் ஹாலில் யாரும் இல்லாதது கதிருக்கு வசதியாக போய் விட்டது போலும் அவளை பார்த்தவாறே சாப்பிட்டு முடித்தவன் அவள் சாப்பிடும் வரை அங்கேயே அமர்ந்திருந்தான்.அவளோ எலி கொரிப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக கொரித்துக் கொண்டிருந்தாள்.

பின் ஒருவாறு சாப்பிட்டு முடித்தவள் அவன் பின்னால் வருவது தெரிந்தும் அவனை கண்டுக் கொள்ளாமல் அப்பத்தா அறைக்குள் சென்று விட்டாள். அவள் அந்த அறைக்குள் சென்றதும் ஐயோ போச்சு கதிரு அப்போ நம்ம ரூமுக்கு வர மாட்டாளா இது தான் என் தலைல நானே மண்ணள்ளி கொட்டிக்குறதா போச்சு முழுசா கிடைக்கலனாலும் ஏதோ கொஞ்சமாவது முன்னாடி கிடைச்சுது அதா வச்சி ஓட்டலாம்னு பார்த்தா அதுக்கும் நானே வேட்டு வச்சுக்கிட்டேனே அனுபவி அனுபவி அடிச்சதுக்கு அனுபவி என்று நாடு ஹாலில் நின்றுக் கொண்டு தனியே புலம்பி கொண்டிருந்தவனை சுந்தரம் அழைத்தார்.

சுந்தரம் அழைக்கவும் என்னப்பா என்றவாறு சென்றவனிடம் கதிரு அங்க களத்துல செங்கல் எதுனா வண்டி மாட்டிக்கிச்சாம் வாப்பா என்னனு பார்த்துட்டு வரலாம் என்று அழைத்தார்.நீங்க வீட்டுல இருங்கப்பா நான் போய் பார்த்துட்டு வரேன் என்று அவரை வீட்டில் இருக்க சொல்லி விட்டு களத்திற்கு சென்று விட்டான்.

மழை பெய்ததால் சகதியாயிருக்க அதில் வண்டி மாட்டியிருந்தது அதனை அங்கிருந்த வேலை ஆட்களுடன் சேர்ந்து வண்டியை எடுக்கும் வேலையைப் பார்த்தான்.

இங்கு வீட்டில் ரகு சசியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் ஹே சசிம்மா மன்னிச்சுக்கோ டி நான் இனிமே குடிக்கவே மாட்டேன் நம்ம வீட்டுக்கு வா டி நீ இல்லாம எனக்கு வீட்டுல இருக்கவே பிடிக்கலை ப்ளீஸ் டி என்று அவள் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான் .

போங்க நான் உங்ககிட்ட பேச மாட்டேன் நீங்க என்ன அடிச்சுட்டீங்கள்ள எவ்வளவு வலிச்சுது தெரியுமா என்று அன்று அடித்தது இன்றும் வலிப்பது போல் தான் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கண்கள் கலங்கியவாறு கூற அதைக் கண்டு உருகியவன் ஹே சசிக் குட்டி சாரி டி வலிக்குதா என்னை மன்னிச்சிடு டி அன்னைக்கு ஏதோ தெரியாம குடி போதைல என்னையே அறியாம அடிச்சுட்டேன் டி சாரி சரியா..

ஒன்னும் வேண்டாம் போங்க நீங்க இப்போ இப்படி தான் சொல்லுவீங்க அங்க போனா குடிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? நான் வர மாட்டேன் என்று கூற செல்லம் சாரி டி வலிச்சுதா என்று அவள் கன்னத்தில் மொச்சு மொச்சுன்னு முத்தங்கள் பல இட்டவாறு அவளை தனக்கு தெரிந்தவாரு சமாதானம் செய்தான்.

அவள் ஒருவாறு சமாதானமாகி சிரிக்க ஹே நாலு நாளா காஞ்சி போயிருக்கேன் எதாவது பார்த்து செய் டி போங்க போங்க அதெல்லாம் முடியாது என்னை அடிச்சதுக்கு தண்டனை அனுபவிங்க என்று தான் மகனை கைக்குள் தூக்கிக் கொள்ள ஹே பையனை கொடு டி நான் வச்சுக்குறேன் என்று வாங்கியவன் அவன் காதில் ஏதோ கூறினான் .

அவனோ தன் பொக்கை வாயை பிளந்தவாறு தன் தந்தையை பார்த்து சிரித்தான்.அந்த சிரிப்பு அவனுக்கு எதுவோ சிவது போல் இருந்தது அது என்னவென்றால் டேய் தகப்பா நீ நினைக்கிறது நடக்க நான் விட மாட்டேன் என்ன பண்ணுவ என்று சவால் விடுவது போல் அவனை பார்த்து சிரித்தான் .

அதைக் கண்டு டேய் உனக்கு பழி வாங்க வேற நேரமே இல்லையா டா தூங்கு டா என் செல்ல குட்டி பட்டுக்குட்டி என்று கொஞ்சியவாறு அதைக் கண்டு டேய் உனக்கு பழி வாங்க வேற நேரமே இல்லையா டா தூங்கு டா என் செல்லக்குட்டி பட்டுக்குட்டி என்று கொஞ்சியவாறு அவனை ஒருவாறு தூங்க வைத்தவன் அங்கிருந்த கட்டிலில் பாதுகாப்பாக படுக்க வைத்தவன் தன் மனைவியை நெருங்கியவன் எப்படி தூங்க வச்சேன் பாத்தியா என்று அவளை பார்த்து சிரித்தான்.

ஐயோ ரொம்ப பெரிய உலக சாதனை தான் என்று கிண்டல் செய்ய என்னையே கிண்டல் பண்ணுவியா என்று அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தவன் கிண்டல் பண்ணுவியா என்று கிள்ளி வைத்தான்.

மாமா கிள்ளாதீங்க கிச்சு கிச்சு பண்றீங்க ஹா ஹா என்று சிரித்தவாறு அவனை அணைத்துக் கொள்ள தன் வேலையைத் தொடங்கி விட்டான்.

இங்கு கதிர் வண்டியை சகதியில் இருந்து எடுக்க அவனையே உற்று பார்த்தபடி இருந்தாள்.

மோகம் மையம் கொள்ளும்...

No comments