புயல் -9
மோகம்-17:
ரகுவும் சசியும் தங்களுக்குள் பேசி சமாதானம் ஆகிவிட சசி தன் கணவனிடம் வாங்க மாமா போய் தமிழைப் பார்த்துட்டு வருவோம் பாவம் அவள் நமக்காக பேசப் போய் அடி வாங்கிட்டா ஏன் தான் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்களோ எதுக்கெடுத்தாலும் உங்களுக்கு கை தான் நீளும் இதெல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க நீங்க அடிச்சா நாங்க வாங்கிட்டு சும்மா இருக்கனுமா நீங்க அடிச்ச அடிக்கு நாட்களும் திருப்பிக் கொடுத்தா என்னப் பண்ணுவீங்க நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்னு நினைச்சு தானே எங்களை அடிக்கிறீங்க என்று முதலில் இருந்து ஆரம்பிக்க அவள் நாங்க திருப்பி அடித்தால் என்ன செய்வீங்க என்று கேட்டதிலேயே மிரண்டிருந்தவன் யம்மா பரதேவதை நான் இனி உன் மேலே கையே வைக்கலை போதுமா வா இப்போ போகலாம்..
என் சசிக்குட்டி வர வர ரொம்ப வைலன்ஸா மாறிட்டே வராங்க வா வா வெளியே போகலாம் என்று அவளை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.அவனுடன் வரும் போது அவனுக்கு மட்டும் கேட்கும் படி குசுகுசுவென என் மேல இனி கையே வைக்க மாட்டீங்களா அப்புறம் எப்படி என்று நிறுத்தி ஒரு மாதிரி அவனைப் பார்த்துக் கேட்க ஹே அதுலாம் அப்போ வைப்பேன் அதெல்லாம் கண்டுக்கக் கூடாது இது என்ன டி புதுசு புதுசா பாயின்ட் பிடிக்கிற ஐயோ முதுலுக்கே மோசமா போயிடும் போலையே ஏய் சசி உன்னை உங்கம்மா வீட்டுல இருக்க விட்டது ரொம்ப தப்பா போச்சு..
நீ அங்க இருந்தப்போ இப்படிலாம் பேச மாட்டியே இப்போ இங்க வந்து மாறிட்ட முதலில் ஊருக்கு கிளம்பு என்று அவளிடம் கூறியவாறு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.அது அப்புறம் பார்த்துப்போம் நீங்க முதலில் சாப்பிடுங்க என்று அவனுக்கு பரிமாறினாள் அவள் பரிமாறியதும் நீயும் சாப்பிடு இங்க தான் யாருமில்லையே வா வா என்று தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் அவளுக்கு சாப்பாடு எடுத்து வைத்து விட்டு ரெண்டு நாளா ஒழுங்கா வே சாப்பிடலை இப்போ தான் பசியே தெரியுது நீ பக்கத்துல இருந்தாலே எல்லாமே அமிர்தமா தெரியுது டிஎன்று இவன் டைலாக்கா அடிச்சி விட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த பார்த்தி மாமா காஞ்ச மாடு கம்மங்கொல்லையைப் பார்த்தா என்ன பண்ணுமோ அதுதானே நீங்க பண்றீங்க என்று கிண்டலடித்து விட்டு மொட்டை மாடிக்கு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
சசியால் சிரிப்பை அடக்க முடியலை மாமா அவன் எதை சொன்னான் என்று மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். ரகு ஏய் அவன் சின்னப் பிள்ளை டி அவன் அந்த அர்த்தத்துல சொல்லிருக்க மாட்டான் என்று தன் மனைவியிடம் கூறினான். அதற்கு சசி அவன் எந்த அர்தத்ததில் சொன்னான்னு தெரியலை ஆனால் நான் வேற அர்த்தத்தில் தான் எடுத்துப்பேன் என்று அவனைக்கண்டு வெட்கத்துடன் சிரித்தாள்.
(எது அவனா சின்னப்பிள்ளை அந்த சின்னப்பிள்ளை என்ன பண்ணுதுன்னு கொஞ்சம் பாருங்க )
பார்த்தி மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு தன் மனம் கவர்ந்தவை சுவற்றில் சாய்ந்தவாறு சைட்டடித்துக் கொண்டிருந்தான்.அவன் மனமோ தன் மனம் கவர்ந்தவளிடம் எப்போ புஜ்ஜி என்னை பார்ப்ப என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
(ஐயோ உன்னைப் போய் சின்னப் பிள்ளையென்று இந்த உலகம் நமவுதுடா ஆனால் நீ "என்ன மட்டும் லவ் யூ பண்ண புஜ்ஜின்னு பாட்டுப்போடுவப் போலையே)
இங்கு ரகுவும் சசியும் சாப்பிட்டு விட்டு தமிழிடம் வர அவள் அப்பத்தாவின் புடவையை மடித்துக் கொண்டிருந்தாள். தமிழ் என்று சசி அழைக்கவும் திரும்பியவள் அங்கு இருவரும் நிற்க வாங்க அக்கா வாங்க அண்ணா சாப்பிட்டீங்களா என்று இருவரிடமும் கேட்டாள். ஹிமம நாங்க சாப்பிட்டோம் ம்மா நீ சாப்பிட்டாச்சா கதிர் எங்கே என்று கேட்க நாங்க சாப்பிட்டோம் அண்ணா அவர் வெளியே போயிருப்பார் இல்லைனை எங்க ரூமில் இருப்பார் என்று கூறினாள்.
எப்படி கேட்பது என்று தெரியாமல் முழித்தவர்கள் பின்பு ஒருவாறு தமிழிடம் தமிழ் கதிரைத் தப்பா எடுத்துக்காத சசி மேல் இருந்த பாசமும் உன்னை யாரும் எதும் சொல்லக் கூடாதுன்னு தான் அவன் அடிச்சிருப்பான் அவன் அடிச்சது தப்புத்தான் நான் இல்லைனு சொல்லலை இருந்தாலும் இந்த முறை எங்களுக்காக அவனை மன்னிச்சிடு எங்களால் தான் உங்கக் குள்ள சண்டை வந்தது எங்களுக்காக மன்னிச்சிடு தமிழ் அவன் கிட்டப் பேசாம இருக்காத என்று கூறிவிட்டு வெளியே வந்தனர்.
சுந்தரம் சோபாவில் அமாத்திருக்க அப்பா அண்ணா எங்கே ஆளை காணோம் என்று சசி கேட்க களத்துல வண்டி மாட்டிக்கிச்சும்மா அதான் கதிரு பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான் என்று சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்க தமிழ் அதைக் கேட்டப் படியே வெளியே வந்தாள்.
அது எப்படித்தான் இந்த பெண்களுக்கு தன் கணவனை பற்றி யாரேனும் எங்காவது பேசினால் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவர் (காது அவளோ ஷார்ப்பு)
தமிழ் வெளியே வந்ததும் அவளை ஓரக் கண்களால் பார்த்தபடியே தன் கணவனிடம் வாங்க நாம களத்துக்குப் போயிட்டு வருவோம் என்று அழைக்க நானும் வரேன் க்கா என்று அவர்களுடன் தமிழும் கிளம்பிச் சென்றாள்.
ஒரு பத்து நிமிடம் நடந்து சென்றால் அவர்களது கல் அறுக்கும் இடம் வந்து விடும் அங்கு வந்து தமிழ் தன் ஆஸ்தான இடமான ஊஞ்சலில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.அங்கு ஒரு மூலையில் கல் அறுக்கும் நபர்கள் தங்குவதற்காக தனித்தனி ஓட்டு வீடுகள் இருந்தன. அதற்கு சற்று பக்கத்தில் ஒருவர் மண்ணை வெட்டி போட்டுக் கொண்டிருந்தார்.
அதன் அருகே ஒருவர் மண்வெட்டி வைத்துக் கொண்டு மண்ணை தள்ளி மோடாக வைத்து நடுவில் குழிப் பறித்து தண்ணீரைப் பைப்பை அதில் போட தண்ணீர் நிரம்பியதும் ஒருவர் அதனை கால்களால் மிதித்து பக்குவப் படுத்த பக்கத்தில் ஏற்கனவே இருந்த மண்ணை எடுத்து கற்களாய் அறுத்துக் கொண்டிருந்தனர்.
வலது புறம் ஏற்கனவே அறுத்த கற்களை சூளையிட்டு சுட்டக் கற்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.. அவ்வாறு கற்களை ஏற்றிச் சென்ற டிராக்ட்டர் ஒன்று சகதியில் மாட்டியிருந்ததைத் தான் கதிர் எடுக்க வந்திருந்தான். ஒருவாறு சிலக் கற்களையும் பலகைகளையும் முட்டுக் கொடுத்து விட்டு கதிர் டிரைவர் இருக்கையில் அமர அப்பொழுது தான் தமிழ் கவனித்தாள் அவன் சட்டையை அணியாததை…
உடனே இறங்கியிருந்த கோபம் சுர்ரென்று ஏறியது இவரு எதுக்கு சட்டைப் போடாம வெறும் பனியனோடு இருக்கச் சொன்னது இப்போ யாரு அழுதா இவரோட ஆர்ம்ஸை பார்க்கலைன்னு ச்சே (அடி கண்பார்ம்) என்று மூசு மூசு வென மூச்சு விட்டாள். இதை எதையும் அறியாத கதிர் ஆக்ஸிலேட்டரை அழுத்தி ஸ்டியரிங்கை ஒடித்து திருப்ப அவன் எலிக்குட்டியைப் பார்த்து மெய் மறந்தாள்.
பின் ஒருவாறு வண்டியை எடுத்து விட்டு டிரைவரிடம் சிலவற்றை பேசி விட்டு வந்தவன் அப்பொழுது தான் பார்த்தான் மாமானும் தங்கையும் வந்திருப்பதை வாங்க வாங்க என்ன இந்தப் பக்கம் ஏன் வெயிலில் வந்தீங்க என்று கேட்க இது யாருக்குப்பா இந்த கரிசனம் எங்களுக்கா இல்லை உங்க பொண்டாட்டிக்கா என்று ரகு நக்கலாக கேட்டான்.
என்ன தமிழ் வந்துருக்காளா எங்க என்று ஆச்சரியத்துடன் கேட்டான். தமிழ் அமர்ந்திருந்த ஊஞ்சல் முந்திரி மரங்கள் இருந்த இடத்தில் இருந்ததால் சுலபத்தில் அவளைக் கண்டுக் கொள்ள முடியவில்லை. அவன் ஆச்சரியத்துடன் கேட்க சரி சரி சண்டைப் போட்டுக்காதீங்க நாங்க ஊருக்குக் கிளம்புறோம் அதை சொல்லிட்டுப் போகத்தான் வந்தோம் என்று கூற ஏன் மாமா இன்னும் கொஞ்ச நாள் போகலாமே என்று கேட்க இல்லை மாப்பிள்ளை கடையைப் பார்த்துக்க ஆள் இல்லை.
உங்க வரவேற்புக்கு வரும் போது ரெண்டு மூணு நாள் இருக்குற மாதிரி வரோம் நீ வீட்டுக்கு வரும் போது தமிழை அழைச்சிட்டு வந்துரு என்று விட்டு இருவரும் கிளம்பினர். இருவரும் கிளம்பியதை தூரத்திலிருந்து பார்த்தவள் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தாள். இருவரும் அவளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட தமிழ் மீண்டும் சென்று ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டாள்.
பின்னே வந்த கதிர் தமிழ் என்று கூப்பிட அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.அவள் முகத்தைத் திருப்பவும் ஹே அம்மு என்னைப் பாருடி என் செல்லக்குட்டி இல்ல (அதான் நீயே இல்லைன்னு சொல்லிட்டியே கதிரு மாட்டிக்கிட்டான்) என்று அவள் முன் வந்து அழைக்க அவள் ஏதும் பேசாமல் அந்தக் கயிற்றில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
அவன் மெதுவாக ஊஞ்சலை ஆட்டியவாரே தமிழு மன்னிச்சிடு டி என்று மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தான் அவள் அப்பொழுதும் அசையாமல் இருக்கவும் இவள் இப்படியெல்லாம் சொன்னால் கேட்க மாட்டாமல் என்று நினைத்தவன் அவளை தள்ளிக் கொண்டு அந்த ஊஞ்சலில் அமர்ந்தான் அவளை நெறுக்கி இடித்தவாறு அமர அவனை முறைத்தவள் கண்டதென்னவோ அவன் பனியன் அணிந்து சட்டை அணியாமல் இருந்ததைத்தான்.
(வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு…)
என்ன இது என்று அவனை சுட்டிக் கேட்க இது என்ன.? பனியன் இதுக் கூட தெரியாதா என்று பெரிய ஜோக்கை சொன்னவன் போல் சிரிக்க அவள் முறைக்கவும் சற்று அடங்கியவன் அது ரொம்ப வெயிலா இருந்துச்சு தமிழ் கசகசன்னு இருந்துச்சு சட்டையைக் கழட்டிட்டேன் என்று கூற இங்க இத்தனை பேரு இருக்கங்க அறிவில்லை உங்களுக்கு அவுத்துப் போட்டுட்டு சுத்துறீங்க என்று அவனை கத்தினாள்.
தமிழ் இதிலென்ன இருக்கு என்று அம்மா இருக்காமல் வாயை விட ஓஹ் வீட்டுக்கு வாங்க தெரியும் என்று முறைத்தவாறு கூறியவள் விறுவிறுவென அவனை கண்டுக் கொள்ளாமல் நடந்து சென்று விட்டாள். டேய் கதிரு உனக்கு யாரும் ஆப்பு ரெடிப் பண்ண வேண்டாம் அதெல்லாம் நீயே நல்லா வச்சு செய்ய பிளான் போட்டுக் கையிலேயே கொடுக்குற…
ஐயோ போச்சே ஏற்கனவே சந்திரமுகியா இருந்தா இப்போ பத்ரகாளியா மாறிப் போறாளே போச்சு என்னக் காத்துருக்கோ என்று மனதிற்குள் அலறியவாரே அன்றைய கணக்கை முடித்து விட்டு வீடு வர இரவு ஏழு மணி ஆகிவிட்டது..
அவன் வந்ததும் அவன் அலறிய அலறலில் நமக்கு ஏதோ சொல்ல வரான் என்னன்ன கேளுங்க மக்களே..
பொண்டாட்டி புருஷன் காலில் விழுந்தா அது முதலிரவு
புருஷன் பொண்டாட்டி காலில் விழுந்தா அது சண்டையின் முடிவு படலம்
ஆக அனைவரும் காலில் விழுந்துருங்க (சிரிக்க மட்டுமே)
மோகம் மையம் கொள்ளும்…
மோகம்-18:
ரகுவும் சசியும் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரிடமும் ஊருக்கு கிளம்புவதாகக் கூற ஏன் மாப்பிள்ளை இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாமே என்று சுந்தரம் வினவ வரவேற்புக்கு வரும் போது ரெண்டு நாள் இருக்குற மாதிரி வரோம் மாமா இப்போ அங்க கடையில் ஆள் இல்லை அதான் நான் போக வேண்டிய கட்டாயம் என்று தன் நிலைமையைக் சசியிடம் திரும்பியவர் ஆத்தா புருஷன் பொண்டாட்டிக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும் இப்படி கோவிச்சுக்கிட்டு வரக் கூடாது சரியா…
உங்கக்குள்ளையே சுமூகமா பேசி முடிச்சிக்கனும் புரியுதா என்று தன் அறிவுரையை வழங்க ஹிம்ம் சரிப்பா என்று தலை ஆட்டியது ரகுவின் தலை உருளுவது உறுதி என்று சொல்லாமல் சொல்வதைப் போல் இருந்தது. ஆஹா இவ என்ன இப்படி பூம் பூம் மாடு போல தலையை ஆட்டுறா வீட்டுலப் போயும் தொடருமா போச்சு அனுபவிடா ரகு… என்று தன் மனதிற்குள்ளே தான் அடிவாங்கப் போகும் நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
இருவரிடமும் வரவேற்புக்கு வந்துடுங்க மாப்பிள்ளை நான் பத்திர்க்கை எல்லாம் அடிச்சிட்டு சம்மந்தியைப் பார்க்க வரேன் என்று வழியனுப்பி வைத்தனர். இவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் தமிழ் வந்து சேர்ந்தாள் வந்தவள் நேரே அப்பத்தா அறைக்கு செல்ல அப்பத்தா அவளிடம் சமாதானமாக பேசி உன்னால அவனை மன்னிக்க முடியலைன்னா அவன் மேல் கோபம் இருந்துச்சுன்னா ஒரு அடிக்கூட அடிச்சிரு கோபம் போயிடும் என்று கதிரை அடிக்க பிளான் போட்டுக் கொடுத்தார்.
(அப்பத்தா நீங்க தான் அடிக்க சொன்னதா.. அதானே பார்த்தேன் எங்க தமிழு பச்சை மண்ணு அவளாவது அடிக்கிறதாவது..)
ப்போ அவன் வர நேரம் ஆச்சு போய் குளிச்சிட்டு உன் அறைக்குப் போ என்கவும் சரி அம்மாயி என்று தங்கள் அறைக்கு வந்து விட்டாள். வரட்டும் உங்கப் பேரன் கதிரு என் கையில சிக்கி பதராப் போகப் போறான் என்று வாய்விட்டு சொல்ல அவள் மனசாட்சி என்ன டி பொசுக்குன்னு அவன்னு சொல்லிபுட்ட என்று கேட்க ஹிம்ம் என் புருஷன் நான் என்னா வேணா பண்ணுவேன்..
அடிப்பேன் உதைப்பேன் மேல ஏறி குத்துப் பாட்டுக்குக் கூட டான்ஸ் ஆடுவேன் நீ மூடிக்கிட்டுப் போ வந்துட்டா வக்காளத்து வாங்க போடி என்று விரட்டியவள் அத்தை பொம்பளைங்க அங்க வேலை செஞ்சுட்டு இருக்கும் போது சட்டையை அவுத்துப் போட்டுட்டு நிக்கிறான் ஒருத்தி கண்ணு போல இருக்குமா எவளாவது பார்த்தா என்னாகுறது..
ஏன்டா கழட்டினன்னு கேட்டா வெயிலா இருந்துச்சு மழையா இருந்துச்சுன்னு பாவமா மூஞ்சியை வச்சிக்கிட்டு சொல்றது இப்படிலாம் சொன்னா நான் இவன் கூட பேசிடனுமா.. எல்லாரு முன்னாடியும் அடிக்கிறான் பெரிய இவன் மாதிரி.. எருமை ஒன்னுமே தெரியாம கையை நீருறது என்ன பழக்கம் வரட்டும் இன்னைக்கு என்கிட்ட செமத்தையா வாங்கிக் கட்டிக்கப் போறான் வாடா என்று அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
இங்கு தமிழ் வேகமாக இவனிடம் கத்திவிட்டு செல்ல பின்னாடியே செல்லப் போனவனை தம்பி என்று அங்கு கல் அறுக்கும் நபர் தடுத்து நிறுத்தினார்.. தம்பி இன்னைய கணக்கு இன்னும் எழுதுல தம்பி வாங்க என்கவும் தோ வரேன் போங்க என்று அவரைப் பின் தொடர்ந்தான்..
இன்று அவர்கள் அறுத்தக் கற்களைக் கணக்குப் பண்ணி நோட்டில் எழுதி வைத்து விட்டு எங்கெங்கு லோடு போயிருக்கு என்று விபரம் அறிந்துக் கொண்டவன் வீட்டிற்குக் கிளம்பினான்.. ச்சே மதியமே போய் சமாதானம் படுத்தியிருந்தா கொஞ்சமாச்சும் உக்கிரம் கம்மியா இருந்துருக்கும் அடியும் கொஞ்சம் கம்மியா கிடைச்சிருக்கும் என்று மனதில் நினைத்தவாறு கிளம்பினான்.
(கதிரு உன் நிலைமையை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுடா நீ எப்போ போயிருந்தாலும் உனக்கு தமிழ் பேயோட்டனும்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும் சொல்லு நானே நினைச்சாலும் முடிய மாட்டேங்குது பாரேன்.. நம்புடா கதிரு)
கதிர், தமிழ் அப்பத்தா அறையில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தவன் அறையின் கதவை சாற்றி விட்டு சட்டை பட்டனை கழட்டிக் கொண்டே திரும்ப சட்டென்று தமிழ் அவன் முன்பு வந்து நிற்க அவள் வந்து நிற்பாள் என்று எதிர்ப்பார்க்காதவன் சற்று பின்னால் நகர்ந்து கண்களை விரித்தவாறு நிற்க அப்புறம் என்ன அமுக்கு டு முக்கு அமால் டுமால் தான்…
அவன் கண்களை விரித்தவாறு பின்னால் நகரவும் கொத்தாக அவன் சட்டைக் காலரைப் பிடிக்கவும் கதிரு நீ இன்னைக்கு செத்தடா என்று நினைத்துக் கொண்டே அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.. என்ன கண்ணை விரிக்கிற எதிர்ப்பார்க்கலையா அங்க அவ்வளவு பேரு முன்னாடி சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு நிக்குற இப்போ என்னாச்சு கை அப்படியே ஸ்டக் ஆகி நிக்குது ஹிம்ம் என்று குரலை உயர்த்தி மிரட்டினாள்…
கதிர் அவள் ஒருமையில் பேசியதில் அதிர்ச்சியாகப் பார்க்க இன்னும் அவளை தூண்டியதோ அவன் செயல் ஹிம்ம் சொல்லு எதுக் இவ்வளவு பெரிய அதிர்ச்சி என்ன டா இவ இப்படியெல்லாம் பேசுறான்னு ஷாக்கா இருக்கா என்று வில்லிப் போல் சிரித்துக் கொண்டே அவன் சட்டைப் பட்டனை ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டே அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.
முழுவதாகக் கழட்டி விட்டு சட்டையை உருவியவள் அங்கப் போய் சட்டையைக் கழட்டுவியா எவளாவது பார்த்துட்டான்னா என்ன ஆகுறது இன்னைக்கு எவ எவ கொள்ளிக் கண்ணெல்லாம் பட்டுச்சோ என்று கூறிக் கொண்டே அவன் கையில் நறுக்கென்று கிள்ள ஆஹ் என்று கத்தி துள்ளினான்.
என்ன டி இப்படி எல்லாம் பண்ற என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ஹிம்ம் இதுவும் பண்ணுவேன் இதுக்கு மேலேயும் பண்ணுவேன்டா இப்போ என்னாங்குற என்று சரமாரியாக அவனை வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு அவனை திணறடிக்க ஒருவன் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவது ஒரு அடி அடிச்சதுக்கு இப்படியா என்று மனதிற்குள் நொந்துக் கொண்டான்.
கதிரின் நிலைமை வெளியில் வாய் விட்டுக் கூட சொல்ல முடியாது அவ என்னை கிள்ளிட்டா அடிச்சிட்டா என்று புகார் கூட யாரிடமும் கூற முடியாமல் தமிழிடம் மாட்டித் தத்தளித்துக் கொண்டிருந்தான்.. அவனை அவளிடமிருந்து காப்பாற்றுவது போல அறைக் கதவைத் தட்டினார்கள். யப்பா தப்பிச்சேன் டா சாமி என்று நினைப்பதற்குள் தப்பிச்சுட்டன்னு நினைக்காத நைட் ரூமுக்கு வந்து தானே ஆகனும் வா அப்போ வச்சிக்கிறேன் உன்னை என்று மிரட்டி விட்டு கதவை திறக்க செல்ல கதிரின் முகம் பேயறைந்தது போலானது..
தமிழ் கதவை திறந்ததும் வெளியே அப்பத்தா நின்றுக் கொண்டிருக்க இவளைக் கண்டதும் சாப்பிட வாங்க தமிழு என்கவும் இப்போ தான் அம்மாயி வந்தாங்க அவங்க குளிச்சிட்டு வருவாங்க நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம் நீங்கப் போய் சாப்பிடுங்க என்று கூறவும் இதை கேட்ட கதிர் இப்போ மட்டும் வாங்க போங்கன்னு மரியாதை யம்மா என்று அதிசயித்தான்.
டேய் கதிரு இப்போ சாப்பிட வெளியே போறேன்னு கூட எஸ்கேப் ஆக முடியாது ஓடிடு என்று யோசிக்க உடனே அவன் மூலையில் மணியடிக்கவும் ஐயோ அம்மா என்று மனதிற்குள் அலறியவாறு துண்டை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வெளியே ஓடி விட்டான்..இவன் விறு விறுவென வேகமாக செல்வதைக் கண்ட அப்பத்தா இவன் ஏன் இப்போ பேயறைஞ்சாப் போல இப்படி ஓடுறான் என்று கேட்டுக் கொண்டே சென்றார். அதைக் கண்டு ஆமா அம்மாயி பேய் தான் அறைஞ்சிடுச்சு என்று கிளுக்கி நகைத்தவாறு அறையின் உள்ளே சென்றாள்..
இங்கு குளிக்க வந்தவன் எவ்வளவு நேரம் தான் குளிக்க முடியும் இதில் அவன் சென்று வெகு நேரமாகியும் அவன் வராததால் தமிழ் வந்து அத்தான் (இன்னைக்கு செத்தான்) என்று அழைக்கவும் பகீரென்று இருந்தது.. தோ வரேன் தமிழ் நீ போ நான் வரேன் என்று அவளை அனுப்பி வைத்தவன் உடை மாற்றிக்கொண்டு வந்தான்.
இவன் வரவும் சாப்பாடை இருவருக்கும் அறைக்கே எடுத்து வர அவளிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து அவளிடமிருந்து சாப்பாடு அடங்கிய தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு வாய் வைத்திருப்பான் என்னடா அமைதியாயிருக்கு என்று அவளை நிமிர்ந்து பார்க்க அங்கே காளியாக உருமாறி கதிரை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்..
ஐயோ போச்சு இப்போ எதுக்கு முறைக்கிறா ஒன்னும் புரியலையே என்று திருத்திருவென விழித்தவன் அவள் பார்வை அவனையும் தட்டையும் மாறி மாறி பார்க்க ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்டப் போக முகத்தை திருப்பவும் ஏய் தமிழ் சாரிடி என்று அவள் வாயருகே சாதத்தை கொண்டு செல்லவும் வள் முறைக்கவும் உன் காலுல கூட விழுறேன் டி இந்தா சாப்பிடு முறைக்காத எனக்கு பயமாயிருக்குல்ல என்று பரிதாபமாக விழிக்க சிரிக்க முயன்ற உதட்டை இழுத்துப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்தாள்..
உடனே அவளுக்கு ஊட்டியவன் தானும் உண்டு கை கழுவ அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தவள் அவனிடம் ஒன்றும் பேசாமல் தரையில் பாயை விரித்து படுத்துக் கொண்டாள். அவள் செயலைப் பார்த்தவன் ஏய் தமிழ் ஏன் கீழே படுக்கிற மேல படு இன்னும் கோபம் போகலையா சாரி டி நான் அடிச்சிருக்கக் கூடாதுதான் என்னை மன்னிச்சிடு நீ எல்லார் முன்னாடியும் அப்படி பேசவும் வேற யாராவது எதாவ சொல்லிடப் போறாங்கன்னு தான் அடிச்சிட்டேன்.
இதே மாமா அதாவது சொல்லியிருந்தா சண்டை பெருசாயிருந்துருக்கும் அதான் டி புரிஞ்சிக்கோ இல்லைனா நீ எப்படி சொல்லலாம் என் பொண்டாட்டியை என்று அவரும் நான் உனக்கு பரிஞ்சி பேசிக்கிட்டுப் போயிருந்தா இந்நேரம் பெரிய சண்டையாகி இருக்கும் தமிழு என்று விளக்க அவள் இவன் பக்கம் திரும்பாமல் ஒருக்களித்துப் படுக்க பின்னோடு வந்து அவளுடன் ஒட்டி உரசியவாறு படுத்துக் கொண்டான்.
நகருங்க இப்போ எதுக்கு கீழே வந்தீங்க போய் மேலே போய் படுங்க என்கவும் இல்லை தமிழ் தனியாப் படுத்தா பேய் வந்து கூடப் படுத்துக்கும்னு என் தமிழ் தான் சொன்னதா நியாபகம் என்று அவள் சொன்னதையே அவளிடமே திரும்பக் கூறினான்.
அவனை முறைத்தவள் மேலே ஏறி படுங்க என்று கூறவும் அப்போ நீயும் மேல வா எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு என்று கண்களில் குறும்புடன் கூறவும் அதே குறும்புடன் அவனை பார்த்தவாறு எழுந்தவள் அப்போ கொஞ்ச முன்னாடி என்கிட்ட சொன்னீங்கல்ல அதை பண்ணுங்க என்று கூறவும் அவன் என்ன சொன்னோம் என்று திருத்திருவென விழிக்கவும் அவனையும் தன் கால்களையும் மாறி மாறி பார்க்க உடனே நின்றுக் கொண்டிருந்தவள் கால்களைப் பிடித்தான் இப்பொழுது அதிர்ச்சியாக் நிற்பது அவள் முறையானது…
மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment