புயல் -7
மோகம்- 13:
இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு அடர்ந்த காட்டின் வழியே சென்று இதற்கு மேல் வண்டி செல்லாது என்பது போல் ஓங்கி வளர்ந்த மரங்களும் கற்பாறைகளும் இருக்க அனைவரும் வண்டியை விட்டு இறங்கினர். கதிரிடம் ஏன் அத்தான் வேற வழியில்லையா இந்த வழியாகத்தான் போகனுமா என்று கேட்க ஒரு பத்து நிமிஷம் நடந்துப் போனா கோவில் வந்துடும் டா வா என்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தன் அன்னையிடம் இருந்த பூஜை சாமான் அடங்கியப் பையை வாங்கிக் கொண்டான். தமிழ் கால் வலிக்குதுன்னா சொல்லுடா தூக்கிக்கிறேன் என்கவும் தமிழைப் பார்த்து சசியும் பார்த்தியும் ஹிம்ம் ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க கதிரை முறைத்தாள்.
கதிர் அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஏய் தமிழ் உனக்கு கால் வலிக்குமேன்னு தான் டி தூக்கிக்கிறேன்னு சொன்னேன் மத்தப்படி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை என்கவும் என்னு தூக்க மாட்டீங்களா இருங்க உங்களை என்று அவனை முறைத்தவள் ஏன் துரை சாருக்கு என்னை தூக்குறத விட உங்களுக்கு அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை இருக்கு என்று இவனிடம் குசுக்குசுவென பேசிக்கொண்டே வர கீழே கிடந் கல்லை பார்க்கத் தவறிவிட்டாள்.
அங்கு கிடந்த சிறு கல்லில் காலை இடித்துக்கொள்ள ஆஹ் என்று அலறி வலியில் துடித்துக் கீழே விழப் போனவளை இடது கையில் அவளை விழாமல் பிடித்துக் கொண்டான். அவள் அருகில் வந்த அப்பத்தா கீழே பார்த்து வரக்கூடாதா தமிழ் என்று கடிந்துக்கொண்டே அவள் காலை ஆராயக் கீழே குனியவும் இரு அப்பத்தா நான் பார்க்கிறேன் என்று தான் கையில் வைத்திருந்த பையைப் பார்த்தியிடம் கொடுத்து விட்டு அவள் காலைப் பார்க்க பெருவிரல் சிவந்திருந்தது. காலை அசைக்க முடியவில்லை என்று தமிழ் கூற ஐயா கதிரு காலை உருவி விடுப்பா என்று அப்பத்தா கூறவும் அவன் காலை உருவி விட ஆஹ் வலிக்குது வலிக்குது வேண்டாம் விடுங்க என்று அவன் கையைத் தட்டிவிட்டாள். இரு டி உருவி விட்டாதானே சரியாகும் கொஞ்சம் வலி பொறுத்துக்க என்று கோபமாக அதட்டவும் அதில் கோபமானவள் அம்மாச்சி வலிக்குது என்னால நடக்க முடியாது போல என்று கூறினாள்.
அப்பத்தா உடனே கதிரிடம் கதிரு பிள்ளையைத் தூக்கிட்டு வா நாங்க முன்னாடி போறோம் என்று அனைவரும் கிளம்ப கதிர் அவள் காலில் வேறு எங்காவது அடிப் பட்டிருக்கிறதா என்று பார்த்து அவளை மெதுவாகக் காலை அசைக்க சொன்னான். ஆனால் அவளால் காலை அசைக்க முடியவில்லை.ஆஹ் அத்தான் அசைக்க முடியலை என்று கீழே தன் காலருகில் குனிந்திருந்தவனின் தோளில் தன் முகத்தைப் புதைத்தாள். கொஞ்சம் பொறுத்துக்கோ தமிழ் சாரிடி என்கிட்ட பேசிக்கிட்டே வந்ததுலதான் கவனிக்காம இடிச்சிக்கிட்ட என்று அவள் காலை கைகளால் தேய்த்து விட அத்தான் வாங்க கோவிலுக்கு போவோம் எல்லாரும் போயிட்டாங்க என்கவும் எழுந்தவன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
அவன் தன்னை தூக்கியதும் உள்ளுக்குள் சிரித்தவள் எப்படி தூக்க வச்சேன் பார்த்தீங்களா என்று உள்ளுக்குள் அவனிடம் உரையாடினாள். தன்னை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தூக்கிக் கொண்டு நடந்தவனைக் கண்டு காதல் பெருக்கெடுக்க தன்னருகில் இருந்த அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க தமிழ் சும்மா வா கோயிலுக்கு போயிட்டிருக்கோம் கன்னத்தை எச்சல் பண்ணாத என்கவும் அவளுக்கு வந்ததே கோபம் எச்சலா இருங்க என்று உடனே அவன் கழுத்தில் தன் நாவால் கோடிழுத்தாள்.
அவள் எச்சில் ஈரத்தின் குளுமையில் தன்னுள் பல மின்னல்கள் உருவாக அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கினான்.அவன் தன்னை இறுக்கவும் அத்தான் என்று அவன் காதருகில் சென்று அத்தான் எனக்கு கால் நடக்க முடியும் அடிப்பட்டதுல வலி இருந்துச்சு தான் ஆனா நடக்க முடியும் என்கவும் தன் கைகளில் அழுத்தம் கொடுத்தவாரே எனக்கும் அது தெரியும் டி என்று சிரித்துக் கொண்டே கூற அத்தான் என்று அதிர்ச்சியாக விளித்தாள்.
என்னடி அத்தான் பொத்தான்னுட்டு வா அப்படியே ஓடிப்போயிடலாம் வா வா என்று வந்த வழியே திரும்பி நடக்க ஐயோ அத்தான் வாங்க போகலாம் அங்க எல்லோரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க வாங்க வாங்க என்று அவனிடமிருந்து இறங்குவதற்காக திமிறினாள். ஓய் தமிழு ஆடாம அசையாம இருடி எல்லாம் என் மேல உரசி எங்கேயோ கூட்டிட்டுப் போகுது..
நீ தானே சூடேத்திவிட்ட அதை நீ தானே தணிக்கனும் வாடி வா என்று அவளிடம் கண்ணடித்தவாறு கூற ஐயோ நானே போய் மாட்டிக்கிட்டேனே என்று வாய்விட்டே புலம்ப ஆமா ஆடு தானே வந்து என்னை வெட்டு வெட்டுன்னு சொன்னா நான் சும்மா விடுவேனா என்று கேட்க வாங்க அத்தான் அங்க எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க. அட இரு தமிழ் வாடி போகலாம் என்று வேண்டுமென்றே அவளைத் தூக்கிக் கொண்டு போவது போல பாசாங்கு செய்ய ஐயோ என்று அலறினாள். விளையாண்டது போது என்று நினைத்தவன் கோயில் நோக்கி நடக்க இறக்கி விடுங்க அத்தான் நான் நாந்து வரேன் என்று இறங்க வந்தவளை கோவில் நெருக்கும் போது இறக்கி விடுறேன் டி அதுவரையும் என்கிட்டையே இரு என்று தூக்கிக்கொண்டு நடந்தான்.
கோவில் நெருங்கவும் இறக்கி விட்டவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அக்கோவிலைக் கண்டதும் அத்தான் இது ஐயனார் கோவிலி என்று கேட்டதும் கருப்பசாமி கோவில் டா பெரிய கருப்பு சின்ன கருப்பு ரொம்ப சக்தி வாய்ந்த சாமி என்று விளக்கினான். ஒஹ் என்று அவன் சொல்வதைக் கேட்டவாரே சுற்றிப் பார்த்தாள். அங்கு பொங்கல் வைக்கும் இடத்தில் அனைவரும் கூடியிருக்க அவர்களிடம் சென்று நின்றுக் கொண்டாள்.
அப்பொழுது தான் பார்த்தாள் ரகு வந்திருக்க வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க என்று விசாரிக்க கதிரும் தன் தங்கையின் கணவனைப் பார்த்து எப்போ வந்தீங்க மாமா என்று விசாரித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க அப்பத்தா தமிழை அழைத்தார். முத்து வந்து பொங்கல் வைடா என்று சொல்லவும் அவர்கள் சொன்னபடி அனைத்தையும் செய்தாள்.
பின் சாமிக்குப் படையலிட்டு கொஞ்ச நேரம் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்திருக்க அப்பத்தா கதிரிடம் தெப்பக்குளத்துக்கு தமிழை அழைச்சிட்டுப் போயிட்டு வாப்பா என்று கூறினார். இருவரும் குளத்திற்கு வர அங்கு ஏற்கனவே சசியும் ரகுவும் எதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் இவர்களைக் கண்டதும் சிரித்து விட்டு மண்டபத்திற்கு செல்ல கதிர் பார்த்தானோ இல்லையோ சசியின் கண்கள் கலங்கியிருந்ததை தமிழ் பார்த்தாள்.
என்னாச்சு என்று யோசனையிலே தங்களைக் கடந்து போன சசியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் சிறிது அங்கிருந்து விட்டு அனைவரும் கிளம்பி வீட்டிற்கு வர ரகு கிளம்புவதாக சொல்லவும் தமிழ் அக்கா நீங்க போகலையா அண்ணா கிளம்புறாங்க போங்க எவ்வளவு நாள் தான் இங்கேயே இருக்குறது என்று கூற சசி ரகுவைப் பார்க்கவும் அவள் இங்க இருக்கட்டும் என்ற ரகுவிடம் இன்னும் எவ்வளவு நாள் தான் இங்க இருப்பாங்க என்று ஒரு மாதிரி தமிழ் கூறவும் ரகுவிற்கு சுள்ளென கோபம் வர சசி கிளம்பு என்று சத்தத்தை உயர்த்தவும் கதிர் எதையும் அறியாமல் தமிழை என்ன வாய் நீள்து என்ன நினைச்சிட்டு இருக்க வீட்டு மாப்பிள்ளைக்கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது என்று அனைவரின் முன்பும் கோபத்தில் அடித்து விட்டான். அவன் அறைந்ததும் தன் அத்தானா தன்னை அடித்து விட்டான் என்று நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்து கண்கள் கலங்க அதிர்ந்து பார்த்தாள்.
மோகம் மையம் கொள்ளும்...
மோகம்- 14:
சசியின் கண் கலங்கியிருந்ததைப் பார்த்தவள் ஏன் அக்கா இப்படி இருக்காங்க என்னாச்சுன்னு தெரியலையே ஏதோ பிரச்சனை இருக்கு எப்பொழுதும் இருக்கிறது போல இல்லை அவங்க இந்த முறை வீட்டுக்கு வந்ததுல இருந்து சந்தோஷமாகவே இல்லை பேருக்கு சிரிச்சிட்டு இருந்தாங்க இப்போ அண்ணா கூட பேசிட்டு இருக்கும் போது ஏன் கண் கலங்கிப் போறாங்க அண்ணா முகத்துலையும் சிரிப்பு இல்லையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டிருந்தவளைக் குளத்தில் இருந்தத் தண்ணீரை வாரி அவள் மேல் தெளித்து அவள் சிந்தனையைக் கலைத்தான்.
என்ன டி யோசனை எல்லாம் பலமா இருக்கு ஏதோ வச்சு செய்ய போறப் போல (ஆமா ஆமா உனக்கு கும்மாங்குத்து கன்பார்ம்) என்று கிண்டலாகக் கேட்கவும் அப்படிலாம் ஒன்னும் இல்லை அத்தான் என்றதும் என்னாது ஒன்னும் இல்லையா என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட நான் கீ ஏதோ யோசிக்கவும் ஆஹா பிள்ளை ஏதோ நல்லதா நாலு யோசிச்சு வச்சிருப்பா இன்னைக் கலைக் கட்டப் போகுதுன்னு நினைச்சா இப்படி சொல்ற (ஆமா ராசா உனக்கு தான் இன்னைக்கு நல்லா வெயிட்டா இருக்கு கதிகலங்காம இருந்தா சரிதான்)
அத்தான் நான் வேற விஷயம் யோசிச்சேன் என்கவும் ஹே நம்மைப் பற்றி நினை டி என்று அவள் சிந்தனையைத் தன் பக்கம் திருப்பியவன் அவளிடம் விஷயம் என்னவென்று கேட்டிருக்கலாம் அடிப்படாமலாவது இருந்திருப்பான்.
(ஹிம்ம் விதி யாரை விட்டது அடி வாங்கனும்ன இருந்தா அதுக்கு நம்ம என்னப் பண்ண முடியும்)
பின் இருவரும் சற்று நேரம் குளத்தில் உள்ள தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடி விட்டு வர அனைவரும் வண்டியை நோக்கிச் சென்றனர்.ரகுவும் வண்டியில் ஏற சசி முன்னாடி இருந்த இருவர் அமரும் இருக்கையில் பிள்ளையை வைத்துக் கொண்டு அமர அதைக் கண்டும் காணாதது போல் ரகு பின்னாடி சென்று அமர்ந்துக் கொண்டான்.
சசியன் குழந்தை தூங்கவும் வடிவாம்பாள் அவனை வாங்கித் தன் மடியில் போட்டுக் கொண்டார். சசி தனியே அமர்ந்திருக்க தமிழ் கதிரிடம் அத தான் நான் அக்கா கூட உட்காருறேன் நீங்க அண்ணா கூட உட்காருங்க என் கவும் மூஞ்சை சுளித்தான்.பின் அவனிடம் கெஞ்சி அவளை சமாதானம் செய்து அவனை பின்னாடி அமர சொல்லித் தான் சசியுடன் அமர்ந்துக் கொண்டாள்.
இரண்டு மணி நேரப் பயணம் என்பதால் அனைவரும் தூங்கியிருக்க கதிரும் ரகுவும் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க சசியைத் திரும்பிப் பார்த்தாள்.அவள் ஜன்னல் புறம் திரும்பித் தன் முந்தானையில் கண்ணீரைத் துடைத்தவாறு இருக்க மெதுவக அவளது கையை எடுத்து தன் கையில் பொதிந்து வைத்துக் கொண்டாள். தமிழ் சசியின் கையைத் தட்டிக் கொடுக்கவும் ஆறுதலாக இருந்தது போலும் மடைத் திறந்த வெள்ளம் போல் தன் மனதில் இருந்த அனைத்தையும் தமிழிடம் கொட்டி விட்டாள்.
தமிழ் மாமாக்கும் எனக்கும் ஒரு மாதமா சண்டை தான் போயிட்டிருக்கு.. ஒரு மாதத்துக்கு முன்னாடி ஏதோ மீட்டீங்னு கிளம்பிப் போனவர் வரும் போது குளிச்சிட்டு வந்தார். அப்போ எதும் நான் கேட்டுக்கலை. அப்புறம் அதுவே வாரத்துக்கு ஒரு முறைன்னு ஆச்சு எனக்கு பயமா இருந்துச்சு அன்னைக்கு மீட்டீங்கு போனார் அதனால ஏன் குடிச்சீங்கன்னு நான் எதுவும் கேட்கலை ஆனால் வாரம் ஒரு முறை அதுவே தொடிவும் எனக்கு பயம் வந்துடுச்சு அதனால அவர்க்கிட்ட சண்டை போட்டேன்.
அவர் அப்போ ஓகே நான் இனி குடிக்கலைன்னு சொல்லிட்டு அப்புறம் அதுப்போலவே குடிச்சிட்டு வரவும் எனக்கு கோபம் வந்துடுச்சு நான் எதுக்கு குடிக்கிறீங்கன்னு திட்டினேன். குடிப் போதையில் என்னப் பண்றோம் எது பண்றோம்னு தெரியாம கோபத்தில் என்னைப் அடிச்சிட்டார். அதுக்கப்புறம் நான் அவர்க்கிட்ட பேசவே இல்லை. அவரும் எதும் பேசாம போய் படுத்துட்டார்.
அடுத்த நாள் காலையில் எழுந்து நான் பேசாம இருந்ததும் கெஞ்சினார்.நான் அவர்கிட்ட பேசலை எனக்கு கோபம் கோபமா வந்துச்சு அப்போதான் கோவிலுக்குப் போகனும்னு அம்மா கால் பண்ணினாங்க நான் கிளம்பி வந்துட்டேன் என்று அனைத்தையும் கூறினாள்.
இது உங்க அத்தை மாமாக்கு தெரியுமா அக்கா என்று தமிழ் கேட்கவும் இல்லை முத்து தெரியாது இவரும் எதுவும் சொல்லலைப் போல என்கவும் அண்ணா எப்படிக்கா உங்ககிட்ட அன்பா என்று இழுக்கவும் அதெல்லாம் நானென்றால் அவருக்கு உயிர் முத்து நான் இல்லாம அவரால் இருக்க முடியாது பாவம் நான் இல்லாம ரெண்டு நாளில் இளைச்சிப் போயிட்டார் என்று வருத்தத்துடன் கூறினாள்.
ஹிம்ம் விடுங்கக்கா பார்த்துக்கலாம் எல்லாம் சரியாப் போயிடும் என்று அவளுக்கு ஆறுதல் அளித்தவள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். அனைவரும் வீட்டிற்கு வரவும் ரகு சசியைப் பார்த்துக் கொண்டே தன் அத்தை மாமாவிடம் கிளம்புறேன் என்று கூறவும் சசி தன்னுடன் வருவாள் என்று எதிர்ப்பார்த்தான் அவள் அசையவே இல்லை முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது தமிழ் வந்து அக்காவையும் அழைச்சிட்டுப் போங்க எவ்வளவு நாள் இங்கேயே இருப்பாங்க என்று கேட்கவும் தன் மனைவியை எப்படி சொல்லலாம் அவளுக்கென்ன தங்குவதற்கா இடமில்லை அங்கு கடல் போல வீடிருக்க இந்தப் பெண் இப்படி பேசுது.. இதற்கெல்லாம் சசி தானே இடம் கொடுத்தது என்று சுள்ளென கோபம் மூள வா போகலாம் என்று சசியிடம் குரலை உயர்த்தினான்.
அங்கு கூடியிருந்த அனைவரும் தமிழை அதிர்ந்து பார்க்க இதனை கேட்டுக் கொண்டிருந்த கதிர் எதையும் ஆராயாமல் அவள் கன்னத்தில் பளாரென அறை விட்டான்.அவன் அறைந்ததை நம்ப முடியாமல் அவனை கண்கள் கலங்க பார்க்க சுந்தரம் கதிரிடம் இது என்ன பொம்பளை பிள்ளை மேல கையை வைக்கிறது என்று அதட்ட அங்கு நிற்க முடியாமல் தன்னறைக்கு சென்று விட்டாள்.
பின் சசி ரகு குடித்த விஷயத்தை மறைத்து அங்கு இருந்தவர்களிடம் எனக்கும் மாமாக்கும் சின்ன சண்டை என்று விளக்கியவள் அதான் தமிழ் இப்படி பேசியிருப்பா. இப்படி பேசினா கோபத்துல என்னை அழைச்சிட்டுப் போயிடுவாருன்னு நினைச்சுத்தான் அப்படி பேசியிருப்பா என்று கூறினாள்.
ஐயோ இது தெரியாம நான் வேற அடிச்சிட்டேனே பாவம் தமிழ் வலிச்சிருக்கும் என்று தன்னறைக்கு செல்ல விழய தமிழே வெளியே வந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது அழுதிருக்கிறாள் என்று முகமெல்லாம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தது. கதிரைக் கண்டுக் கொள்ளாமல் நேரே ரகுவிடம் சென்று அண்ணா என்னை மன்னிச்சிருங்க..நான் அப்படி பேசி இருக்கக் கூடாது தான். ஆனால் அப்படி பேசலைன்னா நீங்க அக்காவை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்க மாட்டீங்க அதான் அப்படி பேசினேன் சாரி அண்ணா என்று அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.
ரகுவும் புரிந்துக் கொண்டு ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா பரவாயில்லை நீ வருத்தப்படாத என்று கூறினான்.பின் தன் அத்தை மாமாவிடம் திரும்பியவள் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க என்று கேட்க அப்பத்தா அவளை அனைத்துக் கொண்டு என் ராசாத்தி நீ வாடா நாம போவோம் என்று தன்னறைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் அறைக்கு தமிழை அழைத்து செல்வதைப் பார்த்து ஐயோ போச்சு என்று உள்ளுக்குள் அதிர்ந்தான். தமிழ் சார் டி வா டி என்கிட்ட வந்துருடி ரூமுக்கு என்று மனதிற்குள் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு அவனை ஏமாற்றாமல் தன்னறைக்கு வந்தவளிடம் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சாரி தமிழ் என்று கேட்கவும் அவனிடமிருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தவள் விட்டாளே ஒரு அறை இப்பொழுது அதிர்ந்து பார்ப்பது கதிரின் முறையானது.
கோபப்படுவாள் என்று தெரியும் ஆனால் அவள் அடிப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை..
(இதுக்கெல்லாம் ஜோசியமாய்யா பார்க்க முடியும்)
(ஐயோ எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே.. ஹி ஹி ஹி…)
மோகம் மையம் கொள்ளும்...

Post a Comment