வாழ்வு -6

 


வாழ்வு - 11:



அபி சந்தியாவிடம் கொஞ்சிக் குளாவுவது பரமனுக்குத் தெரியவில்லை..அவர் இருவரும் இன்னும் சரியாகக் கூடப் பேசிக் கொள்ளவில்லையே என்ற கவலையில் தான் சதா குடுத்த மொபைல் நம்பரை அபியிடம் குடுத்துப் பேசுப்பா என்று குடுத்தார்.



நம்பர் வாங்கியவனுக்கோ குஷியாக இருந்தது எப்படி இந்த இரண்டு நாட்களை நெட்டித் தள்ளுவது என்ற யோசனையில் இருந்தவனிடம் நம்பரைக் கொடுத்தால் துள்ளாமல் என்ன செய்வான்.



அதும் தான் முத்தம் கேட்டதும் எதுவும் யோசிக்காமல் பட்டென்று கன்னம் நெற்றி என்று குடுத்தவள் மனதில் தான் நுழைந்து விட்டோம் என்று தெரிந்ததும் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.



டீனேஜ் பையன் போல அவளை நம்பரை வாங்கிக் கொண்டு தன் அறைக்குப் பாய்ந்து ஓடினான்.அவள் நம்பரை தன் கைப்பேசியில் பேபி என்று பதிந்துக் கொண்டு கால் பண்ணப் போகும் சமயம் அவன் கடையில் இருந்து கால் வந்தது.



அதனை பேசி விட்டு வைத்தவன் ஹர்ஷி என்ன செய்கிறாள் என்று பார்க்க தன் தங்கையின் அறைக்கு சென்றான்.அவள் தூங்கவும் தன் அறைக்கு வந்து உடையை களைந்து விட்டு கையில்லா பனியனும் சாட்ஸும் போட்டுக் கொண்டு சந்தியாவிற்கு அழைத்தான்.



அவன் கிளம்பியதும் கதவை சாத்திவிட்டு தன் அறைக்கு வந்து மேசையின் மீதிருந்த சாக்லேட்டில் ஒன்றை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே அர்ஜூன் புகைப்படத்தின் முன்பு வந்தவள் அத்தான் அவங்க எனக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தாங்க தெரியுமா..



அவங்க என்னென்னமோ பண்றாங்க அத்தான்..எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு..அவர் ஏக்கமா ஏதாவது கேட்டா எனக்கு குடுக்கனும் போல இருக்கு. அவர் எதுக்குமே ஏங்கவே கூடாதுன்னு தோணுது.. லவ் பண்றவங்க கிட்ட தானே இப்படி எல்லாம் இருப்பாங்க..நானும் அவருக்கு முத்தம் எல்லாம் குடுத்தேன் அப்போ நானும் அவரை விரும்புறேனா அத்தான்.



ஒரு நாளுல ஏதோ எல்லாம் மாறிப் போனது போல இருக்கு அத்தான்..என்னோட கஷ்டத்தில் எப்போழுதும் என் கூடவே இருந்திருக்கீங்க இனிமேலும் என்கூடவே இருந்து பார்த்துக்கோங்க அத்தான்.



ஹர்ஷிக் குட்டி செம க்யூட் அத்தான் என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தவள் தன் மொபைலில் இருந்த வந்த ஒலியில் அதை எடுத்துப் பார்த்தாள்.



அபிதான் கால் பண்ணியிருந்தான் புது நம்பராக இருக்கவும் யாரு இது புது நம்பரா இருக்கு என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு மெசேஜ் வந்ததற்கான ஒலி வந்ததும் அதை என்னவென்று பார்த்தாள்.



பேபி என்று அந்த குறுஞ்செய்தியில் வந்ததுமே அது அபிமன்யு என்று தெரிந்துகொண்டாள். இங்கு அபி அவளுக்கு கால் பண்ணியவன் புது நம்பர் என்றதால் அவள் அட்டெண்ட் பண்ணாமல் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு கட் பண்ணியவன் எஸ்எம்எஸ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினான்.



வாட்ஸ்அப் ஓபன் பண்ணு பேபி..என்று குறுஞ்செய்தி வரவும் செயலியைத் தரவிறக்கம் செய்து அவனுக்கு ஹாய் என்று அனுப்பினாள்.



அவள் குறுஞ்செய்தி அனுப்பியவுடன் கண்ணுல ஹார்ட் விடுற பொம்மையா அடுச்சித் தள்ளினான்.அப்புறம் வாயில விட்டான்..அதில் எத்தனை ஹார்ட் எந்த கலர் என்றெல்லாம் பார்க்கலை அவன் பாட்டுக்கு அனைத்தையும் அனுப்பினான்.



டேய் அபி இப்போ முத்தம் குடுக்க முடியலைன்னு தானே இப்போ இதெல்லாம் அனுப்புற என்று கேட்டதும் என் மனசாட்சின்னு உன்னை சொல்றதுல தப்பே இல்லை கரெக்ட்டா சொல்ற என்று கூறிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான்.



(அதான் ஹார்ட் விடுற வேலை…)



அவன் அனுப்பிய ஹார்ட்ஸை பார்த்து இவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல அவ்வளவு குமிஞ்சிக் கிடந்தது. வாட்ஸ்அப்புக்கு மட்டும் உயிரில் இருந்தால் நீங்க ரெண்டு பேரும் ஒன்னாவே இருங்க என்று புலம்பித் தள்ளியிருக்கும்.



இவன் அலப்பறையைத் தாங்க முடியாமல் வாய்ஸ் கால் பண்ணினாள்.அவனாவது அதை அட்டெண்ட் பண்ணுவது அதனை கட் பண்ணி வீடியோ கால் போட்டான்.அதை அட்டெண்ட் பண்ண அவளுக்கு கூச்சமாக இருந்தது.



முதல் கால் கட்டாகி இரண்டாவது முறை போட்டான் அது கட்டாகப் போகும் சமயத்தில் அட்டெண்ட் பண்ணினாள்.இவள் திரையைப் பார்க்காமல் தலையைக் குனிந்துக் கொண்டு இருக்கவும் பேபி என்று அழைத்தான்.



அவன் அழைத்ததும் நிமிர்ந்து திரையைப் பார்த்தவளுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் சத்தம் தான் கேட்டது..


அங்கு அவன் மனசாட்சியோ டேய் அபி ஆனாலும் நீ ரொம்ப மோசம் இவ்ளோவா காஞ்சி போயிருக்க இந்த போனுக்கு மட்டும் கண் இருந்தா கண்ணீர் வடிச்சிருக்கும் டா உன் முத்த மழையில் என்று கேலி செய்தது.



ஒரு வழியாக முத்தம் கொடுத்து முடித்தவன் பேபி நீ எப்போ இங்க வருவ..நீ என் கூடவே இருக்கனும்னு தோணுது பேபி என்று கூறியதும் எதும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்தாள்.



ஏதாவது பேசுடா தியா..என்றதும் ஹர்ஷி எங்கே என்றதும் அவள் தேவி ரூம்ல தூங்குறா. நீ இங்க வந்த பிறகு நம்ம கூட தான் இருப்பா என்று குதூகலமாக கூறினான். பேபி உன் ரூம்ல சாக்லேட் சாப்பிட்டப்போ என்னை கூப்பிட்டல்ல அப்படி கூப்பிடேன்.



அவள் யோசிப்பதைப் பார்த்ததும் மாமான்னு கூப்பிட்டல்ல என்று அவனே எடுத்துக் கொடுத்தான்.அவள் சிறிது தயங்கி வெட்கப் பட்டுக் கொண்டே மனு மாமா என்று அழைத்தாள்.



லவ் யூ பேபி லவ் யூ சோ மச் என்று கூறியவன் திரும்ப முத்தம் குடுக்கிறேன் என்று போனை ஈரம் பண்ணினான்.அப்பொழுது தான் அவனை உற்றுப் பார்த்தாள் அவன் வெறும் பனியன் மட்டும் அணிந்திருப்பதை.



நீங்க வீட்டுல இப்படி தான் இருப்பீங்களா என்று கேட்டதும் எப்படி பேபி என்று புரியாமல் கேட்டவனிடம் இந்த மாதிரி வீட்டுல இருக்கும் டிரெஸ் பண்ணுவீங்களா என்று கேட்டாள்.



ஹிம்ம் ஆமாம் டா ஏன் என்று கேட்டதும் சும்மா தான் கேட்டேன் என்றாள்.அவள் கேட்டது அபிக்கு புரிந்தது ஆனால் அதை பற்றி இப்பொழுது பேசினால் தன்னால் இங்கு இருக்க முடியாது என்று தெரிந்ததனால் அமைதியாக இருந்தான். 



அவன் மனசாட்சியோ நீ வந்த பிறகு அவன் டிரெஸ் போட்டுட்டாலும்.. எனக்கென்னமோ இவன் ஆதிவாசியா மாறிடுவான்னு தோணுது..பையன் படு ஸ்பீடா இருக்கான் என்று நக்கல் செய்தது.



சரி பேபி ஹர்ஷி எழுந்ததும் உனக்கு கால் பண்றேன் சரியா என்றவன் இச்சு இச்சுன்னு முத்தம் கொடுத்துட்டு அணைத்தான்.பின் அவள் போனை அனைத்து விட்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்கு சென்றாள்.



அங்கு சென்று பிள்ளைகளுடன் சிறிது நேரம் விளையாடியவள் சாப்பிட்டு விட்டு தாத்தாவை வீட்டிற்கு அழைக்க அவர் பிறகு வருகிறேன் என்று கூறியதால் சரி என்று வீட்டிற்குள் வந்தாள்.



தன் அறைக்கு வந்ததும் அபியின் நியாபகம் வரவே இப்போ சாப்பிட்டுப்பாங்களான்னு தெரியலையே என்று யோசித்தவள் அவனுக்கு அழைத்தாள்.



அவள் அழைப்பைப் பார்த்து சந்தோஷம் அடைந்தவன் ''ஹலோ பேபி" என்று கூவினான்.



"சாப்ட்டாச்சா மாமா" என்று கேட்டாள்.



"இன்னும் இல்லைடா இனிமே தான் சாப்பிடனும் கடையில இருக்கேன்..நீ சாப்டியா" என்று கேட்டான்.



"ஹிம்ம் நான் இப்போ தான் சாப்பிட்டேன்..கரெக்ட் டைம்க்கு சாப்பிடுங்க உடம்பு என்னத்துக்கு ஆகுறது.." என்று கடிந்துக் கொண்டாள்.



"தோ..இப்போ சாப்பிடப் போறேன்" என்று அவசரமாகக் கூறினான்.



" வீட்டுக்கா கிளம்புறீங்க.."



"நான் கடைக்கு வந்தா வெளியே தான்டா சாப்பிடுவேன்..அதிகமா மதிய நேரம் ஹோட்டல் சாப்பாடு தான்டா.." என்றதும் கோபமானவள்



"மாமா இனி வீட்டுல சாப்பிடுங்க இல்லைனா டிரைவர் அண்ணாவா கடைக்கு சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்லுங்க.." என்றதும்



 "சரிடா அதான் இன்னும் ரெண்டு நாள்ல்ல நீ வந்துடுவல்ல நீ பார்த்துக்க மாட்டியா.." என்று கேட்டான்.



"ஹ்ம்ம் சரி மாமா..ஆனால் இப்போ வெளியே போய் சாப்பிட வேண்டும் எவ்ளோ நேரம் ஆனாலும் பரவா இல்லை வீட்டுல போய் சாப்பிடுங்க சரியா..தேவி நம்பர் தாங்க நான் ஹர்ஷிக்கிட்ட பேசனும்.." என்றதும் 



"நான் உன் வாட்ஸப்க்கு அனுப்புறேன் டா..நான் தான் இப்போ வீட்டுக்குப் போறேன்ல உனக்கு கால் பண்றேன் நாம பேசலாம்.."



"சரி மாமா பார்த்து மெதுவா கார் ஓட்டுங்க ஸ்பீடா போகாதீங்க..வீட்டுக்குப் போயிட்டுக் கால் பண்ணுங்க " என்றதும்



"ஒகே பேபி.." என்று வீட்டிற்கு கிளம்பினான்.



தன் மேல் உள்ள அக்கறையால் உரிமையுடன் திட்டியவளை உயிரில் பொதிந்துக் கொண்டான்.



வாழ்வு சிறக்கும்...



வாழ்வு - 12:


 வீட்டிற்கு வந்தவன் காரில் இருந்து இறங்கியதும் சந்தியாவிற்கு அழைத்து நான் வீட்டுக்கு வந்துட்டேன் பேபி என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தான்.


மதிய நேரத்தில் அவனை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவர்கள் பார்த்த பார்வையிலேயே தெரிந்துக் கொண்டேன். போனை அனைத்து தன் சட்டை பையில் போட்டவன் அம்மா பசிக்கிது சாப்பாடு எடுத்து வைங்க நான் பிரெஷ் ஆகிட்டு வரேன் என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.


 கடையில் இருந்து வீட்டிற்கு வந்த சேகர் ஏய் சந்திரா. என்ன டி உன் பிள்ளை அதிசயமா மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்துருக்கான் என்று கேட்டார்.


அவனே இப்போதான் வந்துருக்கான்..வாயை மூடுங்க நானே புள்ளை வெளியே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறானே என்ற வருத்தத்துல இருந்தேன்..ஆமா அது என்ன என் பிள்ளை.. நீங்க இல்லாம எங்க எனக்கு மட்டும் தனியா பிள்ளை வந்துது என்று கேட்டவர் அபி வருவதைப் பார்த்து அவனுக்கு பரிமாற சென்றார்.


பிள்ளையைக் கண்டதும் தன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பாதியிலே நிறுத்தி விட்டு போன மனைவியைக் கண்டு பிள்ளை என்றால் இந்த பொண்ணுங்க உருகுறாங்கப்பா என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.


நீங்களும் வாங்க சாப்பிட என்று குரல் கொடுக்கவும் அவரும் சாப்பிட சென்று அமர்ந்தார். பரமனும் சாப்பிட வந்தவர் தன் பேரனை அந்த நேரத்தில் எதிர்ப்பார்க்காதவர் என்ன அபி அதிசயமா இருக்கு என்றபடி வந்து அமர்ந்தார்.


வெளியே சாப்பிடக் கூடாதுன்னு மேலிடத்து ஆடர் தாத்தா என்று கூறினான். எந்த மேலிடம் என்று அவர் கேட்டதும் ஐய்யோ மாட்டிக்கிட்டோம் என்று நினைத்தவன் இப்பொழுது வாயைத் திறந்தால் நம்ம மாணம் போய்டும் என்று நினைத்தவன் அம்மா தான் தாத்தா சொன்னாங்க…


வெளியே சாப்பிடாதப்பா என்று சந்திரா எப்பொழுதோ சொன்னதை இப்போழுது பின்பற்றுவது போல் கூறி எப்படியோ சமாளித்தான்.


அவன் மனசாட்சியோ டேய் நீ அம்மா பேச்சக் கேட்டுட்டாலும்.. ஜஸ்ட் மிஸ்.. இல்லனா இந்நேரம் உன் மாணம் ஏரோபிளேன் பிடிச்சு ஏதேன்ஸ் போயிருக்கும்.. ஹாஹா என்று அவனைப் பார்த்துக் கொக்கரித்துச் சிரித்தது.


பின் சாப்பிட்டு முடித்ததும் பரமன் அபியிடம் அபி கல்யாணத்துக்கு தேவையான உடைகள் எல்லாத்தையும் நாளைக்கு வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லுப்பா..அப்புறம் சந்தியாவ கூட்டிக்கிட்டு கடைக்கு போய் எடுத்தாலும் எடுங்க இல்லை என்றால் வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லிப் பாருங்க என்றதும் அங்கு ஒருவனுக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா என்றது போல் இருந்தது.


இவன் லட்டு மட்டுமா சாப்பிடுவான்..ஐய்யோ இவன் சும்மாவே ஆடுவான் இதுல அவன் கால்ல சலங்கை வேற கட்டுறீங்களே..இப்போ ஜங்கு புங்கன்னுல்ல ஆடுவான்..என்று அவன் மனசாட்சிப் புலம்பித் தள்ளியது.


சந்தியாவை பார்க்க எப்படியோ ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சு என்று சந்தோஷத்தில் இருந்தான்.அப்பொழுது அவன் நாயகியே குறுஞ்செய்தி அனுப்பியிருக்க என்னவென்று பார்க்க கால் மீ என்று அனுப்பி இருந்தாள்.


உடனே தன் தங்கையின் அறைக்கு சென்று அவளிடம் தன் மொபைலை நீட்டியதும் உங்க அண்ணி பேசணுமாம் தேவி என்று கூறினான்.பின் அவனிடம் இருந்து போனை வாங்கியவள் ஹர்ஷியைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு வீடியோ கால் போட்டாள்.


ஹர்ஷி போனை பார்த்ததும் அதை பிடுங்க தன் பிஞ்சுக் கரங்களை நீட்டி அதனை பறிக்க முயன்றாள். திரையில் சந்தியா தெரியவும் ஹர்ஷிக் குட்டி.. என்று அவள் குரலைக் கேட்கவும் மா.. மா.. என்று துள்ளிக் குதித்தாள்.


பின் போனை பிடித்துக் கொண்டு திரையில் இருந்தவளை உற்றுப் பார்த்தாள் எதிரே இருந்த தன் அப்பாவிடம் கையில் இருந்த போனை நீட்டி பா.. ம்மா.. மா .. என்று கூறினாள்.


தான் மெத்தையில் அமர்ந்துக் கொண்டு ஹர்ஷியைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.அவர்கள் பேசட்டும் என்று தேவி வெளியே சாப்பிட வந்தாள். வெளியே இருந்த அனைவரிடமும் அண்ணி தான் பேசுறாங்க என்று கூறினாள்.


ஹர்ஷி சாப்பிட்டாளா மாமா என்று கேட்டாள் ஹிம்ம் சாப்பிட்டா அவளுக்கு டைமுக்கு தேவி சாப்பிடக் குடுத்துடுவா என்று கூறினான்.பின் தாயும் மகளும் பேச அவன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஹர்ஷியிடம் பேசிக் கொண்டிருந்தவள் தங்களை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து என்ன மாமா அப்படி பார்த்துட்டு இருக்கீங்க என்றதும் ஒன்னும் இல்லை டா நீங்க பேசுங்க நாம நைட் பேசலாம் என்று கூறினான்.


ஐயோ பகல் நேரத்துலயே இவன் அலப்பறை தாங்க முடியலை இதுல நைட் பேசப்போறியா டேய் அபி இதுக்கு மேல முடியாது டா அபி என்று கதறியது அவன் மனசாட்சி.


பின் ஒருவாரு ஹர்ஷிக்கு தூக்கம் வரவே தன் தந்தையின் மேல் சாய்ந்தவாறு தூங்கியப் பின் சரிடா பேபி நான் நைட் போன் போடுறேன் என்று போனை அனைத்தான்.


பின் ஹர்ஷியைத் தேவியிடம் விட்டுவிட்டு வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினான்.


அபி கடைக்கு கிளம்பியதும் இங்கு சேகர் பரமனிடமும் சந்திராவிடமும் யாரெல்லாம் கல்யாணத்துக்கு வர சொல்றது...என்று கேட்டதும் கோகிலாவ மட்டும் வர சொல்லுவோம் வேற யாரையும் அழைக்க வேண்டாம். சதாகிட்ட பேசும் போதும் அவங்க சைடு யாரும் வர மாட்டாங்க என்று தான் சொன்னான்..என்று பரமன் கூறினார்.


என்ன எல்லாரும் முக்கியமா பேசிட்டு இருக்கீங்க போல என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் ஹர்ஷா.


ஹர்ஷா வேறு யாரும் இல்லை கோகிலாவின் மகன்..சேகரின் தந்கை தான் கோகிலா பரமனுக்கு இரு மக்கள்..கோகிலாவிற்கு இரண்டு மக்கள் பெரியவன்தான் ஹர்ஷா மருத்துவனாக பணிபுரிகிறான். இரண்டாவது ரேவதி என்ற பெண்ணும் உண்டு.


ஹர்ஷா வந்ததுமே தேவி உள்ளே சென்று விட்டாள் அவள் உள்ளே செல்வதை பார்த்து கடுப்பான ஹர்ஷா இரு டி குள்ளச்சி உன்னை சும்மா விட்டு வச்சதால தானே முகத்தை திருப்பிக்கிட்டுப் போற என்று மனதுக்குள் கருவியவன் தன் தாத்தா அத்தை மாமாவிடம் சென்று நலம் விசாரித்தான்.


"எப்படி இருக்கீங்க தாத்தா"


" டேய் ஹர்ஷா வா வா " என்று தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.


"நானே உனக்கு போன் போடனும்னு நினைச்சேன்.. நீயே வந்துட்ட" என்று கூறினார்.


"தாத்தா இங்க என்ன நடக்குது தினமும் போன் பண்ற அபி எனக்கு போனே பண்ணலை..அவன் அப்செட்டா இருந்தாதானே பண்ண மாட்டான் அதான் என்னவோ ஏதோன்னு பதறிப் போய் வந்தேன்" என்று பதற்றத்துடன் கேட்டான்.


(அவன் ஒரே லவ் மூட்ல சுத்திக்கிட்டு இருக்கும் போது நாமலாம் அவன் கண்ணுக்கு தெரியாது..)


ஒன்னும் ஆகலை ஹர்ஷா அபிக்கு ஒரு பொண்ணு பார்த்தோம் இன்னும் ரெண்டு நாள்ல்ல கல்யாணம் அதான் அந்த டென்ஷன்ல உனக்கு கால் பண்ணாமா இருந்திருப்பான்.. என்று கூறினார் சந்திரா.


ஓ..இப்போ கடையில் தானே இருக்கான் அத்தை.. நான் போய் அவனை பார்த்துட்டு வரேன்.


 அத்தை கல்யாணம் முடியிற வரைக்கும் இங்க தான் இருப்பேன் என் ரூம கிளீன் பண்ணி வைங்க அத்தை நான் அபிக் கூட வரேன் என்று தன் நண்பனைப் பார்க்க சிட்டாக பறந்து விட்டான்.


ஆம் நண்பன் தான் அத்தை மகன் என்பதை விட இருவரும் நெருங்கிய நண்பர்கள்.. இருவருக்கிடையே எந்த ஒளிவு மறைவும் இருக்காது. அபிக்கு விவாகரத்து ஆனது கூட ஹர்ஷாவிற்கு தெரியும்.


அவனிடம் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள சொல்லி எவ்வளவு முறையோ சொல்லி பார்த்தான்..ஆனால் அவன் மசியவே இல்லை. 


அபி கடைக்கு வந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை அவன் எதிரே வந்தவன் கட்டி பிடித்து கொண்டான். டேய் விடுடா பட்டப் பகல்ல அதுவும் கடை முன்னாடி இப்படி கட்டிப் பிடிக்கிற வெட்கங் கெட்டவனே என்னை விடுடா.. கீழ்ப்பாக்கத்துல இருந்து அப்படியே வந்துட்டியா என்று நக்கல் செய்தான்.


ஆமாடா நான் கீழ்ப்பாக்கத்துல இருந்து தான் வந்தேன். ஆனால் இங்க ஒருத்தன் பித்துப் பிடிச்சுத் திரியுறான் அவனிடம் என்னன்னு விசாரிச்சிட்டுப் போக தான் வந்தேன் அவனை வாரினான்.


மச்சி..என்று அவனை அபி கட்டிப் பிடித்துக் கொண்டான்.


டேய் மச்சான் உன் தங்கச்சி கட்டிப் பிடிச்சாக்கூட நான் சந்தோஷப் படுவேன். நகரு டா இந்த ஹர்ஷா எப்பொழுதும் என் தேவிக்கு மட்டும் தான்..என்று கூறினான்.


ஓ..உங்க தேவிய பார்க்காமயா இங்க வந்துருப்ப அங்க ஒரு அட்டடென்ஸ் போட்டுட்டு தானே இங்க என்ன பார்க்க வந்துருப்ப என்று கேட்டான்


ஹிம்ம் ஆமாம் டா என்று வழிந்தான்.


அதானே பார்த்தேன்.. எலியாவது ஜட்டி போட்டுட்டு ஓடுறதாவது என்றவன் வழியாதடா என்றான்.


(உன்னை விட வா அபி... இரு தியாவ கூப்பிட்டு வரேன்)


வாழ்வு சிறக்கும் …

No comments