வாழ்வு -5

 



வாழ்வு - 9:


அபி தியாவிடம் பேச வேண்டும் என்றதும் அனைவரும் அவன் ஏதாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவானோ என்று உள்ளுக்குள் பயந்தனர்..


சதா சந்தியாவிடம் உன் அறைக்கு அழைச்சிட்டுப் போய் பேசிட்டு வாடா சந்தியா..என்றதும் சந்தியாவிடம் இருந்த ஹர்ஷியை வாங்கிக் கொண்டார் சந்திரா..


அவரிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு வாங்க.. என்று அபியைத் தன் அறைக்கு அழைத்து சென்றாள்.உள்ளே சென்றதும் அவன் கதவை லாக் பண்ண எதுக்கு கதவை சாத்துறீங்க என்று படப்படப்புடன் கேட்டாள்..


கொஞ்சம் உன்கிட்ட பேசனும் பேபி என்றவன் அவள் அறையை பார்த்தான்.. 


ஏது நீ பேசப்போறியா நம்பிட்டோம்டா கதவு திறந்து இருந்தாலே சாக்லேட்ட அவள் வாய் வழிய சாப்பிட்ட.. இப்போ கதவை மூடி என்ன பண்ணப் போறியோ..


சுவற்றில் அர்ஜூன் புகைப்படம் மாட்டியிருந்தது.. அவளிடம் அர்ஜூன் ரொம்ப நல்லவன் பேபி என்றவன் ஆனால் இவ்ளோ நல்லவன்னு இப்போதான் தெரியும்…என்று மனதுக்குள் கூறிக் கொண்டான்.


ஆமாம் அஜி அத்தான் ரொம்ப ரொம்ப நல்லவங்க எனக்கு எல்லாமே அவங்கதான் என்று கூறியவள் தான் பேசியது அபத்தம் என்று அவருக்கே தோண ஐயோ இவர் கிட்ட போய் இப்படி சொல்றோமே என்று சங்கடப்பட்டவள் அவனை பார்த்தாள்..


அவனோ அவளை நோக்கி வந்தவன் ம்ம் நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன் என்னை மாமான்னு கூப்பிடுன்னு..சீக்கிரம் ட்ரைப்பண்ணு பேபி இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்.. உடனே கூப்பிட முடியாதுதான் ஆனால் எனக்காக கொஞ்சம் சீக்கிரம் ட்ரைப் பண்ணு..


அப்புறம் உன் அஜி அத்தான் உனக்கு யாரு உன் மனசுல அவனோட இடம் என்ன என்று எனக்கு தெரியும் அதனால் நீ தாராளமா தயங்காம என்கிட்ட அவனை பற்றி பேசலாம் சரியா.. பட் வெளிய மத்தவங்ககிட்ட பேசக்கூடாது..அவங்களுக்கு எதுவும் தெரியாது சரியா..என்றதும் அவன் சொன்னது புரியவில்லை என்றாலும் தலையை ஆட்டினாள்..


இங்க வந்து உட்காரேன் என்று மெத்தையில் அமர்ந்து அவளையும் அழைத்தான்..அவன் அருகில் வந்தவள் இல்லை நான் நிற்கிறேன் என்ன பேசணும் சொல்லுங்க என்றதும் அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தினான்..


அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து தான் வாங்கி வந்த சாக்லேட்ஸை அவளிடம் எடுத்துக் கொடுத்தான்..அவள் அவனை ஆச்சரியமாக பார்க்கவும் உனக்கு பிடிக்கும்னு சொன்னல்ல அதான் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினான்..


இவ்வளவும் எனக்கா என்று கேட்டாள் இதை வாங்கத்தான் கடைக்குப் போனீங்களா என்றதும் "ம்ம்" என்றான்.அவள் கையை எடுத்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன் பேபி என்னோட பழைய லைப் பற்றி உனக்கே தெரியும் தாத்தா சொல்லிருப்பாங்க என்று அவள் முகத்தைப் பார்க்கவும் ம்ம் என்று தலையை ஆட்டினாள்..


அவள் போனப்பிறகு நான் ரொம்ப கஷ்டப் பட்டேன் பேபி ஹர்ஷிய வச்சிக்கிட்டு என்னால் ஒன்னும் பண்ண முடியலை.. ஹர்ஷி பாலுக்கு அழும் போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.. ஐயோ என் பிள்ளை இப்படி அழுகுதேன்னு ரொம்ப வேதனையா இருக்கும்..


நான் எத்தனை இரவு அழுதுருக்கேன் தெரியுமா பேபி என்று கண் கலங்க கூறினான்..அவளுக்கும் கண் கலங்க அவன் கையைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினாள்..


வீட்டுல என்னை கல்யாணம் பண்ண சொல்லி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.. ஆனால் என்னால முடியலை..கல்யாணம் என்றாலே வெறுப்பு தான் வந்துச்சு. 


இன்னொரு காரணம் நான் அப்போ இருந்த மனநிலைக்கு யாரையும் நம்ப முடியலை.. எனக்கு என் மேலேயே வெறுப்பு வந்துச்சு..


எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம் என்று நினைச்சேன் பேபி..


அப்புறம் நேற்று தாத்தா வந்து பேசினாங்க பேபி.. உனக்கு மனைவி வேண்டாம் அதெல்லாம் சரிதான் ஆனால் ஹர்ஷிக்கு அம்மா வேணும் என்று சொன்னார்..


நானும் அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்..அவங்ககிட்ட அப்போ வரப்போற பொண்ணு ஹர்ஷிக்கு மட்டும் அம்மாவா இருந்தா போதும் என்று வீட்டுல சொன்னேன்..


அப்புறம் இன்னைக்கு காலையில் கூட தாத்தா இங்க வர சொன்னப்ப ஆர்வமே இல்லாமதான் வந்தேன் பேபி ஆனால் ஹர்ஷிக்குட்டி உன் நெஞ்சில சாஞ்சிக்கிட்ட நீங்க ரெண்டு பேரும் ஏதோ சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தப்போ நான் எப்படி உணர்ந்தேன்னு எனக்கே சொல்ல தெரியலை பேபி…


நீங்க பேசும்போது நானும் அதுல கலந்துக்கனும்னு ஆசையா இருந்துச்சு.. உன்னை பார்த்ததும் ஏதோ இனம் புரியாத இதம் இங்க நான் உணர்ந்தேன் பேபி என்று தன் நெஞ்சை தொட்டுக் காண்பித்தான்..


அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே என் வாழ்க்கை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சேன் பேபி..ஆனால் இனிமே தான் என் வாழ்க்கையே ஆரம்பிக்க போகுதுன்னு நீயும் என் பொண்ணும் சொல்லாம சொன்னீங்க…


என் பழைய வாழ்க்கை நரகம் பேபி அதை பற்றி பேச வேண்டாம்..உன் கூட வாழப் போற வாழ்க்கைதான் நிஜம்..நான் கொஞ்சம் பேராசைக்காரன் பேபி எனக்கு லவ் அதிகமா டன் டன்னா வேணும்..


 எனக்கு எல்லாமும்மா நீ வேணும் பேபி..என் கூட கடைசி வரையிலும் இருப்பியா பேபி என்று கண்களில் ஏக்கத்துடன் கேட்டான்..


அவள் அவனிடம் கண்கள் கலங்க "ம்ம்" என்றவள் அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்…


அபி சந்தியாவிற்கு தனக்கு விவாகரத்து ஆனது அனைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.. 


தியாவோ மனைவி இறந்து போனதுல ரொம்ப வருத்தத்தில் இருக்கார் என்று நினைத்துக் கொண்டு அவனை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்..


சிறிது நேரத்தில் தன்னை சமன் படுத்திக் கொண்டு சோகம் போய் லவ்வர் அபி வந்துட்டான்..


அப்பொழுதுதான் உணர்ந்தான் தான் இருக்கும் இடத்தை ஐய் என்று உள்ளுக்குள் குதூகலித்தவன் அவள் இடையைத் தன் கைகளால் வலைத்துக் கொண்டு அவள் நெஞ்சில் இன்னும் ஆழப் புதைந்தான்..


(டேய் அபி உன்னை வச்சிக்கிட்டு முடியலைடா..)


அவன் அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவள் தன்னிடம் இருந்து அவனை விலக்கினாள்..அவன் இன்னும் புதைய ஏங்க விடுங்க என்றதும் காது கேட்காதவன் போல் இருந்தான்..


மாமா எனக்கு ஒரு மாதிரி இருக்கு எழுந்திரிங்க என்றதும் பட்டென்று எழுந்தவன் பேபி இன்னொரு தடவை அப்படி கூப்பிடேன் என்று கூறினான்.


அவள் தள்ளியமர்ந்து கொண்டு முடியாதது என்று தலையை ஆட்டினாள்..சரி நீ கூப்பிட வேண்டாம் நானே உன்னை கூப்பிட வைப்பேன்.என்றவன் இப்போ எதுக்கு தள்ளி உட்காருற என்று அவள் உணரும் முன்னரே அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்..


அவன் செயலில் அதிர்ந்தவள் விடுங்க விடுங்க என்று அவனிடம் இருந்து திமிறினாள். பேபி அமைதியா கொஞ்சம் நேரம் இருந்தினா நானே விட்டுடுவேன் இல்லை நான் இப்படிதான் பண்ணுவேன்னு பண்ணினா உன்னை விடவே மாட்டேன்.என்று அவள் காது மடலில் தன் உதடு உரச மீசை முடி குத்த கூறவும் சிலிர்த்தாள்..


அவன் பக்கம் திரும்பி இப்போதானே சோகமா நல்லவங்களா இருந்தீங்க..இப்போ உடனே கெட்டவங்களா மாறிட்டீங்க என்றதும் அவள் தன் செயலுக்கு குடுத்த விளக்கத்தில் சிரித்தவன் ஓ இப்படி எல்லாம் பண்ணினா கெட்டவங்களா…


அப்போ நான் உனக்கு மட்டும் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன் பேபி என்று இன்னும் தன்னுடன் அவளை இறுக்கிக் கொண்டவன் இப்போ இன்னும் கெட்டவனா ஒன்னு செய்யப் போறேன் என்றதும் அதிர்ந்து அவனை திகிலுடன் பார்த்தாள்... 


அவர் அதிர்ந்த கண்களை விரித்துப் பார்க்க அந்த கண்களில் முத்தமிட்டவன் அவள் உதட்டைப் பார்த்து தன் விரல்களால் வருடியவன் அவள் கீழுதட்டை இழுத்தவன் பேபி நீ லிப்ஸ்டிக் போடுவியா என்று கேட்டதும் அவன் கையைத் தன் உதட்டில் இருந்து எடுத்தவள் இல்லை அதெல்லாம் போட மாட்டேன்..என்று கூறியவள்..


இலவச இணைப்பு செய்தியாக அவனிடம் குளிர் காலத்துல எனக்கு உதடு வரண்டு போய்டுமா அப்போ மட்டும் லிப் பாம் போடுவேன் என்று கூறியதும் இப்போ குளிர் காலம் இல்லையே பேபி அப்புறம் ஏன் வரண்டு போயிருக்கு என்று அவள் உதட்டை வருடிக் கொடுத்தவன் அங்கிருந்த சாக்லேட்டில் ஒன்றை எடுத்து பிரித்தான்…


அவன் மனசாட்சியோ டேய் சாக்லேட் சாப்டுறேன் என்ற பேரில் அவளுக்கு முத்தம் கொடுத்து இருக்கிற எல்லாத்தையும் உறிஞ்சி எடுத்தா வரண்டு போகாமா என்ன பண்ணும்..என்று அவனை சாடியது.


தியாவோ அதான் ஏன் வரண்டு போச்சுன்னு தெரியலை என்று தன் நாவால் ஈரப் படித்திக் கொண்டு நான் அப்புறம் லிப் பாம் போட்டுக்கிறேன் என்று கூறவும் அவள் எச்சில் ஈரத்தில் மினுங்கிய உதட்டைப் பார்த்தவன் நீ அப்புறம் போட்டுக்கோ இப்போ நான் உனக்கு கோக்கோ லிப் பாம் போட்டுவிடுறேன் என்று கூறினான்..


பாதி உருகிய நிலையில் இருந்த சாக்லேட்டை பிரித்தவன் தன் விரலில் எடுத்து அவள் செர்ரி பழ நிறத்தில் இருந்த உதடுகளில் தடவி கோக்கோ நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தான்..


சாக்லேட் சாப்பிடும் ஆசையில் தன் நாக்கை நீட்டி சுவைப் பார்க்க அதற்கு மேல் அவன் சும்மா இருப்பானா உதடோடு உதடு சேர்த்துக் கவ்விட்டான்…


வாழ்வு சிறக்கும் ….


வாழ்வு :10


பட்டுப் போன்ற இதழில் உருகிய சாக்லேட்டை தடவியதும் அதை பார்த்து ஆசையாக ருசிக்க எண்ணியவள் தன் நாவை வெளியே நீட்டியது மட்டும் தான் அவளுக்கு தெரியும்.. அது எப்படி அவன் வாயிற்குள் சென்றது என்று அவளுக்கு தெரியாது. உதட்டில் தடவி யிருந்த சாக்லேட்டை சுத்தமாக வழித்து எடுத்து விட்டான்.


அபி அவள் சிவப்பு நிற ஸ்டராபெர்ரி நாவை சுவை பார்க்க வெளியே நீட்ட அவன் மூளையில் பல மின்னல்கள் உற்பத்தியானதை உணர்ந்தான். அதன் பிறகு சும்மாவா இருப்பான் அந்த ஸ்டராபெரியை அப்படியே விழுங்கினான். உதட்டில் இருந்த சாக்லேட்டை சுத்தமாக வழித்து எடுத்தப் பின்னே தான் ஓய்ந்தான்.


சற்று நேரத்திற்கு அவள் இதழில் மூழ்கி இருந்தவன் அவள் மூச்சு விட சிரமப் படவும் அவளை விட்டான்.தியா பேபி சாக்லேட் சாப்டுறியா என்று அவளிடம் கேட்டுக் கொண்டே சாக்லேட்டைப் பிரித்தான். டேய் சாக்லேட் அவளுக்கு வாங்குனியா இல்லை நீ சாப்பிட வாங்குனியா என்று அவன் மனசாட்சி அவனை வாரியது.


இந்த சாக்லேட்டையும் அவன் தனக்கு தராமல் சாப்பிட்டு விடுவான் என்று அவன் பிரித்துக் கொண்டிருந்த சாக்லேட்டை பட்டுடன்று அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மனு மாமா எனக்கு சாக்லேட் வாங்கினேன்னு சொல்லிட்டு நீங்க தான் சாப்பிட்டீங்க இந்த சாக்லேட் எனக்கு தான் என்று பிரித்து தன் வாயில் போட்டுக் கொண்டாள்.


சிறு பிள்ளை போல முகத்தில் ஈஷிக் கொண்டு சாப்பிட்டவளை பார்த்ததும் ஹர்ஷி போலவே தெரிந்தாள். க்கும் இவன் ஒருத்தன் இப்போதான் ரொமான்ஸ் மன்னன் போல அத்தனையும் பண்ணினான்.. இப்போ உடனே அப்பா மோடுக்கு மாறிட்டான்.. இவன் எப்போ எப்படி மாறுவான்னு தெரியலையே கடவுளே என்று அவன் மனசாட்சி சலித்துக் கொண்டது.


அவள் அருகில் சென்று தன் கைக்குட்டையால் அவள் உதட்டருகில் ஒட்டியிருந்த சாக்லேட்டைத் துடைக்கப் போனான். இவள் சும்மா இருந்துருக்கலாம் அவன் சாக்லேட்டை தான் தன்னிடம் இருந்து பிடுங்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அவனிடம் இருந்து பின்னாடி நகர்ந்தவள்.. அவனை பார்த்து தர மாட்டேன் என்பது போல கையில் இருந்த சாக்லேட்டை அவனிடம் காட்டிப் பழிப்புக் காட்டினாள்.


அவள் அப்படி செய்யவும் ஒரு நொடியில் அவளை நெருங்கியவன் அவளை சுவற்றோடு சாய்த்தவன் அவள் மேல் தன் மொத்த உடலும் உரசுமாறு சாய்ந்தவன் தன்னை அதிர்ந்து நோக்கும் கண்களைப் பார்த்துக் கொண்டே அவள் கையில் இருந்த சாக்லேட்டை அவளிடமிருந்து பறித்தவன் முன்பாவது உதட்டில் மட்டும் தான் பூசினான்.


இப்பொழுது முகம் முழுக்கப் பூசினான்.அவன் மனசாட்சியோ ஏன் மா சும்மா இருக்காம நீ பண்ற சின்ன விஷயம் கூட அப்படியே அவனை மாத்திடுது இப்போ திரும்பவும் ஆரம்பிக்கிறான் ரெண்டு பேரும் ஏதோ பண்ணுங்க என்று வெட்கப்பட்டு ஒளிந்துக் கொண்டது.


அவன் அவளிடம் பிரிந்த பொழுது அவள் முகம் முழுக்க அவன் எச்சிலில் மினுமினுத்தது.அவள் காதோரம் தியா பேபி முகத்தை கழுவிட்டு வாடா கீழேப் போகலாம் என்றதும் சுயநினைவிற்கு வந்தவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் குளியலறைக்குள் நுழைந்தாள்.


இன்னைக்கே ரொம்ப பண்ணிட்டோமோ என்று யோசித்தவனிடம் டேய் உன் மனசாட்சியா இருக்குறதுக்கு மருதமலை பக்கம் போய்டலாம்னு இருக்கேன் உன் ரவுசு தாங்க முடியலைடா உனக்குள்ள இப்படி ஒரு அந்நியனா சத்தியமா என்னால முடியலைடா நிறுத்திக்கோ இதோட இல்லைன்னா மனசாட்சிய மருதமலைக்கு அனுப்பிய பட்டம் தான் உனக்கு கிடைக்கும். 


எவனாவது ஒரு பொண்ண பார்த்த அன்னைக்கே இப்படி பண்ணுவானா இவ்வளவு தாங்காதுடா என்று கூறவும் அபிக்கு வெட்க வெட்கமாக வந்தது.


கன்றாவியா இருக்கு ஆளை விடுடா சாமி.. வெட்கப்பட்டு என்னை வெறி ஆக்காத என்று கடித்துவிட்டுச் சென்றது..


அவள் முகம் கழுவி வந்ததும் தானும் சென்று முகம் கழுவி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.


பின்பு அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். ஹர்ஷி தேவியின் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள் அவள் தலையைத் தடவி முத்தமிட்டாள் சந்தியா.. 


அதை பார்த்த அபிமன்யு பொண்ணுக்கு மட்டும் முத்தம் கொடுக்குறா எனக்கு குடுக்க மாட்டுறா என்று குறைப்பட்டவனை பார்த்து அவன் மனசாட்சி முறைத்து என்னமோ நீ அவளுக்கு முத்தம் குடுக்காத மாதிரியே பேசுற பாரு நீ அங்க இருக்கடா..முத்தம் மட்டுமா குடுத்த விட்டா மொத்தமும் முடிச்சிருப்ப சரியான கேடி டா நீ என்று பெருமூச்சு விட்டது.


என்ன தான் இருந்தாலும் அவ குடுக்குற மாதிரி வராதுல்ல என்று வழிந்தான். ஆஹான் அடச்சீ வாயை மூடு வழியுது கருமம் கருமம் என் தலை விதி உன் கூட குப்பைக் கொட்டனும்னு என் தலையில் எழுதியிருக்கு.


பின்பு அனைவரும் கிளம்பினர் சந்தியாவிடம் அபிமன்யு ஒரு தலையசைப்புடன் விடைப் பெற்றான்.அவனது வீட்டார்கள் அபி சந்தியாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பவில்லை என்று வருத்தப் பட்டனர்.


கல்யாணம் ஆனா சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டனர். அவர்கள் வந்த வண்டியில் ஏறியதும் தாத்தா நீங்க கிளம்புங்க என் மொபைல் மறந்து வச்சிட்டேன் அதை எடுத்துட்டு என் கார்ல பின்னாடியே வரேன் என்றதும் சரிப்பா என்று விட்டு கிளம்பினர்.


உள்ளே வந்தவன் சந்தியாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சதாசிவத்திடம் தாத்தா என் மொபைலை ரூம்லையே வச்சிட்டு வந்துட்டேன் என்று ஒன்றும் தெரியாதது போல சந்தியாவை பார்க்க சதாசிவம் சந்தியாவிடம் திரும்பி சந்தும்மா தம்பி போன் உன் ரூம்ல இருக்குப் போல எடுத்துக் குடுடா நான் போய் பிள்ளைகளைப் பார்த்துட்டு வரேன் என்று விட்டுக் கிளம்பினார்.


வாங்க.. எங்க வச்சுருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே படி ஏறினாள். இவன் சதாசிவம் வெளியே சென்றதும் படியில் ஏறிக் கொண்டிருந்தவளைத் தன் கைகளில் அப்படியே ஏந்தினான்.


திடீரென்று தூக்கவும் பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் தோளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.நான் உன்னை பிடிச்சிருக்கேன் பேபி பயப்படாத கண்ணை திற என்றதும் கண்களைத் திறந்தவள் கீழே இறக்கி விடுங்க என்றதும் அவள் அறைக்குள் சென்று இறக்கி விட்டான்.


அவன் மொபைலை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை என்றதும் உங்க போனை காணுமே எங்க வச்சீங்க என்று கேட்டவளிடம் இங்கதான் இருக்கு என்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்துக் காட்டியவனைப் பார்த்து அதிர்ந்தாள்.


தன்னை அதிர்ந்து பார்த்தவளைக் கண்டு பேபி எனக்கு வேணும் என்று மொட்டையாகக் கூறினான். என்ன வேணும் என்று கேட்டவளிடம் ஹர்ஷிக்கு மட்டும் குடுத்த எனக்கு குடுக்க மாட்டுற என்று சொன்னதும் இவன் எதை பற்றி பேசுகிறான் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.


ஆனால் அபியின் மனசாட்சி அவன் எதை சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டு அட முத்தத்துக்கு செத்தவனே என்று காரித்துப்பியது அதையெல்லாம் அவன் ஒரு பொருட்டாகவே எண்ணவே இல்லை.


கொக்குக்கு மீன் மேலேயே கண் இருக்குமாம். இங்கும் இந்த நெட்டைக் கொக்கு எப்பொழுது இந்த மீனை விழுங்கலாம் என்று ஒற்றைக் காலில் நின்றுக் கொண்டிருக்கிறது..


அவன் என்ன கேட்கிறான் என்று தெரியாமல் திருத்திருவென விழித்தவளிடம் ஹர்ஷிக்கு முத்தம் கொடுத்தல்ல எனக்கும் குடு பேபி என்று கேட்டதும் ஙே என்று விழித்தாள்.


பேபி நீ குடுத்தா நான் கிளம்புவேன்ல எனக்கு நீ குடுக்கனும்னு ஆசையா இருக்கு என்று ஏக்கமாக கேட்டதும் அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டவள் நெற்றியில் முத்தமிட்டாள். போதுமா என்று அவனிடம் கேட்க வேறு செய்தாள்.


தேங்க்ஸ் பேபி என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். அவன் கிளம்பவும் வாசல் வரை வந்து அனுப்பி வைத்தாள்.


அபி தன் வீட்டிற்கு வந்ததும் பரமன் அவனிடம் வந்து ஒரு பேப்பரை நீட்டி இது சந்தியாவோட நம்பர் அபி சதா கொடுத்தான். அந்த பொண்ணுக்கிட்ட பேசுப்பா இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு உன்னை நம்பிதானே அந்த பொண்ணு வருது 


ரெண்டு பேரும் பேசி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கோங்க என்று விட்டுச் சென்றார். பாவம் அவர் இருவரும் பேசிக் கொள்ளவில்லையே என்ற கவலை.


அபியின் மனசாட்சியோ ஐயோ தாத்தா இவன் சும்மாவே கண்ணுல ஹார்ட்டு வாயில ஹார்ட் விட்டுட்டு இருக்கான். இதுல போன் நம்பர் வேற குடுத்துருக்கீங்க என்று கதறியது.


தன் கையில் இருந்த அவள் கைப்பேசி எண் பார்த்துக் குதூகலித்தவன் தன் அறைக்கு சென்றான்…


வாழ்வு சிறக்கும்...

No comments