வாழ்வு -4
வாழ்வு - 7:
அவன் தருணிடம் சொல்லவும் என்ன சின்ன பிள்ளைப் போல தருண் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு ஐயோ என்று நினைத்தவள் இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் அமரவும் அவளிடம் வந்த தருண் பிளீஸ் சந்தும்மா நீங்க எவ்ளோ நாள் எனக்கு ஊட்டி விட்டுருக்கீங்க நானும் அப்பாவும் ஊட்டி விடுறோம் என்று அவள் தாடையைப் பிடித்துப் பாவமாக கேட்டான்..
சரிடா தருக்குட்டி வாங்க அம்மாக்கு ஊட்டுங்க என்றதும் குஷியாக அப்பா வாங்க என்று அபியைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான்.
பின் அபி தட்டில் சாப்பாடை பரிமாறி பிசைந்தான்... தருணிடம் திரும்பி தருண் அம்மாக்கு பர்ஸ்ட் நீங்கதான் வாங்க ஊட்டுங்க என்றதும் குதூகலித்தவன் தன் பிஞ்சுக் கைகளில் சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.
தான் ஊட்டி விட்டதும் அபியிடம் திரும்பி அப்பா இப்போ நீங்க என்று கூறியதும் தான் அவளுக்கு ஊட்டி விட்டான்.. அவளுக்கு ஊட்டி விடும் போது அவன் விரல்கள் அவள் உதட்டில் பட்ட நொடி இவ்ளோ சாஃப்ட்டா இருக்கு என்று உள்ளுக்குள் ஜொள்ளினான்..
தருண் சந்தியாவிற்கு இரண்டு வாய் ஊட்டியவன் தன் கைகளைக் கழுவிக் கொண்டு நான் உங்களுக்கு ஊட்டிவிட்டத எல்லாருக்கிட்டையும் சொல்லிட்டு வரேன் என்று குடுகுடுவென்று அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் வெளியே சென்றதும் குஷியாகிப் போன அபி அவளுக்கு ஊட்டி விடுகிறேன் என்று அவள் உதட்டை ஒவ்வொரு தடவையும் வருடிக் கொண்டும் சதைப் பற்றான கீழ் உதட்டை இழுத்தும் உதட்டின் வரிகளை விரல்களால் வருடிக் கொண்டிருந்தான்.
சந்தியா ஹர்ஷியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவனிடம் படாதப்பாடுப் பட்டுக் கொண்டிருந்தாள்…சந்தியாவோ அவனிடம் எதுவும் சொல்ல முடியாமல் மறுத்தும் கூற முடியாமல் அமர்ந்திருந்தாள்.
தட்டில் சாதம் ஒரு கவளமே இருக்க அதை பார்த்த சந்தியா அப்பாடி முடியப் போகுது என்று அவள் பெருமூச்சு விடும் அளவுக்கு அபியின் சேட்டை இருந்தது..
கடைசிக் கவளத்தையும் அவளுக்கு ஊட்டியவன் அவளுக்கும் ஒரு படி மேலே போய் அவளுக்கு தண்ணீர் எடுத்துக் குடிக்கத் தெரியாதது போல தண்ணீரை
எடுத்துப் புகட்டினான்.
பின் தண்ணீரை பக்கத்தில் வைத்து விட்டு அவனுக்கு அவள் துடைத்து விட்டது போலவே அழுத்தமாக மிக அழுத்தமாக அந்த சுலை இதழ்களைத் தன் விரல்கள் கொண்டுத் துடைத்தான்.
டேய் அபி இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலை...நேற்று பெரிய இவன் மாதிரி தாத்தாக்கிட்ட வீராப்பா பேசின... இப்போ அப்படியே உல்டாவா எல்லாம் செய்ற... இங்க என்னடா நடக்குது என்று கேள்வி எழுப்பியது…
நான் என்ன தாத்தாக்கிட்ட பேசினேன் என்று தான் எதுவும் பேசாதது போல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இல்ல இல்ல பூசணிக்காய், பரங்கிக்காய், சொரக்காய் எல்லாவற்றையும் மறைத்தான்.
டேய் பொய் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டடா...அப்போ உறுதியா நான் நினைச்சது தான் என்று அவன் மனசாட்சி சொல்ல நீ என்ன நினைச்ச என்று கேட்டான்.
இந்த காதல் கத்திரிக்காய் வரும் போது இலவச இணைப்பா பொய் சொல்ற பழக்கமும் கூட சேர்ந்து வந்துருமாம்...என்று கூறியது.
நான் சந்தியாவ அப்போ லவ் பண்றேனா என்று கேட்டதும் அப்படி தான் சிம்டம்ஸ் எல்லாம் சொல்லுது... கூடிய சீக்கிரம் உனக்கு டிரிட்மண்ட் பண்ண கீழ்பாக்கத்துல ஹர்ஷாக்கிட்ட (அபியின் நண்பன்) சொல்லி ஒரு பெட்டை புக் பண்ண சொல்லனும் என்று அவனை கேலி செய்தது.
ச்சே ஓடு என்று முறைத்து தன் மனசாட்சிய அடக்கியவன் இங்கு தன் தியா பேபியைப் பார்த்தான்.
அவளோ தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு இவனை நோக்கி தான் வந்தாள். உடனே தன் கையைக் கழுவியவன் ஹர்ஷியை வாங்க அவளை நோக்கிக் கையை நீட்டினான்.
ஹர்ஷியோ நான் வரமாட்டேன் என்று தலையை ஆட்டி அவள் தோள் வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.அதை பார்த்து சிரித்தவன் ஹர்ஷிக்குட்டிக்கு அப்பா வேண்டாமா என்று கேட்டதும் தன் இரண்டு பற்கள் தெரிய அவனைப் பார்த்து சிரித்து அவனிடம் கையை நீட்டித் தாவினாள்..
தன் மகளை வாங்கிக் கொண்டு சந்தியாவைப் பார்த்தான்.அவள் அவனை நிமிர்ந்து பார்த்து ஏதோ சொல்ல வரவும் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
(ஏன் டா நீ வேற பட்டு பட்டுன்னு கண்ணாடிக்கிற புள்ளை பயப்படுது பாரு…)
அவன் கண்ணடிக்கவும் தலையைக் குனிந்து கொண்டவள் தரையைப் பார்த்துக் கொண்டே வாங்க பிள்ளைகளப் போய் பார்த்துட்டு வருவோம் என்றதும் ம்ம் என்று கூறியதும் அவள் முன் சென்றாள்.
அப்பொழுதுதான் கவனித்தான்... அவள் தலைமுடியைப் பார்த்தான் கருகருவென்று இடுப்பைத் தாண்டி வளர்ந்திருந்தது..
அவள் நடக்கும் போது அதுவும் ரிதமாக அசைய அந்த தலை முடியா நான் இருக்கக் கூடாதா என்று நினைத்த மறுநொடி அவன் மனசாட்சி ச்சீ வழியாத வாயத் தொடை என்றதும் ஹி ஹி ஹி என்று அசடு வழிந்தவன் அவள் பின் சென்றான்.
அங்கு பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்ததும் அவளை கண்ட அனைவரும் சூழ்ந்து கொண்டனர்..அபி வந்ததும் அவனை அறிமுகப் படுத்தினாள்.
அந்த குழந்தைகள் அவனை அப்பா அப்பா என்கவும் அவர்களின் பாசத்தில் காற்றில் கரைந்து போனான்.அவனிடம் வந்து அனைவரும் வந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க என்றதும் திருத்திருன்னு விழித்தவனைக் கண்டு சந்தியா பிள்ளைகளிடம் அப்பா உங்களுக்கு என்ன பிடிக்கும்னு என்கிட்ட கேட்டாங்க செல்லங்களா சாக்லேட்ஸ்னு சொன்னதும் நிறைய வாங்கி இருக்காங்க
என்கிட்ட தான் வெயிட் பண்ணுங்க எடுத்துத் தரேன் என்று தன் கைப்பையில் உள்ள சாக்லேட்ஸை எடுத்துப் பிள்ளைகளிடம் குடுத்தாள்.
அனைவரும் அபியிடம் வந்து தாங்க்ஸ் ப்பா என்று கூறியதும் அவனுக்கு கலங்கி விட்டது. அவன் உணர்ச்சிவசப்படவும் அவன் கைகளைத் தன் கரங்கள் கொண்டு அழுத்தி ஆறுதல் படுத்தினாள்.
ஜெயா அபி அருகில் வந்து ப்பா இந்த பாப்பா ரொம்ப அழகா இருக்கு நான் தூக்கவா என்கவும் அவளிடம் ஹர்ஷியைக் கொடுத்தான்.சிறிது நேரம் ஹர்ஷியைக் கொஞ்சியவர்கள் நாங்க வெளியே பாப்பா கூட விளையாடுறோம் என்றதும் அவன் தலையசைக்கவும் பிள்ளைகள் அனைவரும் விளையாட சென்றனர்.
தருண் மட்டும் சந்தியாவைப் பார்த்துக் கொண்டே நிற்கவும் தருக்குட்டி நீங்க விளையாடப் போகலையா என்று அபி கேட்டான்.
இல்லை என்று தலையாட்டியவன் சந்தியாவைப் பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே தன்னிடம் அவனை அழைத்தவள் தன் பையில் இருந்த டைரி மில்க் சாக்லேட்டை எடுத்தவள் அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கி ஆர்வத்துடன் பிரித்தவன் பாதியைத் தன் வாயில் போட்டுக் கொண்டு சுவைத்தவன் மீதியை சந்தியாவிடம் கொடுத்து தாங்க்ஸ் சந்தும்மா என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே ஓடி விட்டான்.
தருண் சென்றதும் மீதி சாக்லேட்டை ஆசையாக எடுத்து வாயில் போட்டதும் அவளுக்கு நியாபகம் வந்தது அபி இருக்கிறான் என்று. ஐயோ இவருக்கு தராமா நான் மட்டும் வாயில் போட்டுக் கொண்டேனே என்று வருந்தியவள்…
அவனிடம் திரும்பி சாரிங்க எனக்கு இந்த சாக்லேட் என்றால் ரொம்பப் பிடிக்கும் ஆசையா இருந்துச்சா அதான் அப்படியே சாப்டுட்டேன்..அப்புறம் உங்களுக்கு வாங்கித் தரேன் என்றதும் எனக்கு இப்போ வேணும் என்றான் பிடிவாதமாக.
அவன் கேட்கவும் என்கிட்ட இப்போ வேற சாக்லேட் இல்லையே என்று கையை விரித்துத் தலையை சரித்து கூறிய பாவத்தில் சொக்கியவன் அவள் கன்னத்தை நோக்கி கையை நீட்டினான்..
அவள் தன் கன்னத்தில் கை வைத்து பார்த்தவள் தருண் முத்தமிட்ட போது அவன் வாயில் ஒட்டியிருந்த சாக்லேட் அவள் கன்னத்தில் ஒட்டியிருந்தது..
அதை தடவியவள் தருண் முத்தம் கொடுத்தான்ல அப்போ ஒட்டிருச்சுப் போல என்று தன் கையைக் கொண்டு சென்று துடைக்கப் போனவளைத் தன் கைக் கொண்டு தடுத்தவன் அவளை நெருங்கி அவள் உதட்டைப் பதித்தான்.
அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை தன் நாவால் கன்னத்தில் இருந்த சாக்லேட்டை நக்கி எடுத்தான்... தான் செய்த செயலில் வாயில் வைத்திருந்த சாக்லேட்டை சாப்பிடாமல் கண்களை இறுக மூடி அதிர்ச்சியில் இருந்தவளின் உதட்டை சிறை செய்திருந்தான்.
சாக்லேட் சாப்பிடுகிறேன் என்று அவள் உதட்டை மென்று கொண்டிருந்தான்..அவன் மனசாட்சியோ டேய் நீ ரொம்ப மோசம்டா என்கவும் அதைக் கண்டுக் கொள்ளாமல் அவள் இதழில் மூழ்கினான்..
வாழ்வு சிறக்கும்….
வாழ்வு - 8:
இதழெனும் மலரில் தேன் எடுத்துக் கொண்டிருந்த வண்டு ஒரு சொட்டுக் கூட விடாமல் இன்றே மொத்தமும் வேண்டும் என்பது போல அந்த மலரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது…
அவள் கன்னத்தில் ஒட்டி இருந்த சாக்லேட்டைப் பார்த்ததும் தன் நாவால் துடைக்க எழுந்த ஆவலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..உடனே அச்செயலை தன் நாவுக் கொண்டு செயல் படுத்தியிருந்தான்..
மீசை முடிக் குத்த அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் நாவால் சுவைப் பார்த்தான். மீசை முடிக் குத்த அவன் சூடான எச்சில் தன் கன்னத்தில் படவும் அதிர்ந்து அவனை பார்த்த பாவனையில் சொக்கியவன் அவள் இதழைச் சிறை செய்தான்..
அவள் வாயில் கரைந்த நிலையில் இருந்த சாக்லேட்டை தன் நாவால் வழித்து சாப்பிட்டவன் அவள் உதட்டை தன் பற்களால் கடித்து நாவால் உத்தடமிட்டுப் புதுக்கவிதை ஒன்றை அவள் இதழில் படைத்துக் கொண்டிருந்தான்..
அவன் கையோ அவள் இடையூடு கையிட்டு அவள் புடவை மறைக்காத வழவழப்பான இடையில் தன் கைகளால் வருடித் தன் இடையோடு சேர்த்தணைத்துக் கொண்டது...
சந்தியாவோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டு புதிதாக எழுந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் அவன் சட்டையைத் தன் கைகளால் இறுக்கிப் பிடித்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து தேன் அருந்தியது போதும் என்று நினைத்தானோ என்னவோ அவளை விட்டுப் பிரிந்தவன் தன் மேல் உடல் உரச சாய்ந்து நின்று கொண்டிருந்தவளை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்…
அவனுக்கே தன் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.அவளைப் பார்த்து முழுதாக ஒரு மூன்று மணி நேரம் கடந்திருக்காது அதற்குள் அவள் தான் தனக்கு எல்லாம் என்பது போலும்…
அதும் அவளைக் கண்டு எழும் தன் உணர்வுகளை அடக்க தெரியாமல் அவளைப் படாதப் படுத்துகிறேன்... நானா இது என்று நினைத்துக் கொண்டிருந்தான்…
அவன் மனசாட்சியோ டேய் நீ அவளைப் பார்த்ததில் இருந்து நீ நீயாவே இல்லை உனக்கு ஏதோ ஆயிடுச்சு என்று கேலி பண்ணியது..ஆனாலும் தியா பேபி ரொம்ப அழகு டா அபி என்று ஜொல்லியது…
ஏய் அவ என்னோட பேபி என்று தன் மனசாட்சியுடனே சண்டைக்குப் போனான். டேய் உன் ரவுசு தாங்க முடியலடா நான் போறேன் போ என்று தன் இடத்தைக் காலிப் பண்ணியது.
சந்தியாவோ அவன் தோளில் சாய்ந்து மூச்சு வாங்கியவள் சிறிது நேரத்தில் அவனுக்கே உரிய ஆண்மை வாசனை அவள் நாசியை நிறைக்க திடுக்கிட்டு அவனிடம் இருந்து விலகினாள்..
அவள் விலகியதும் தன்னிடம் இருந்து பொம்மையைப் பறித்துக் கொண்டது போல் பாவமாக அவளை அவன் பார்க்க...அவளோ அவனுக்கும் ஒரு படி மேல் போய் கேட்டாலே ஒரு கேள்வி…
எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க..நான் தாத்தா கிட்டயே சொல்றேன் பாருங்க..அஜி அத்தான் கூட கன்னத்தில், நெற்றியில் தான் குடுப்பாரு ஆனால் நீங்க இங்க குடுக்குறீங்க என்று கண்கள் கலங்க அவன் இதழ் முத்தத்தில் சற்று தடித்து போய் இருந்த இதழ்களைத் தொட்டுக் காட்டினாள்…
அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவன் அப்படியே நின்றவன் தான்...அவளோ தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவனை கண்டுக் கொள்ளாமல் வெளியே சென்று விட்டாள்..
அபியோ அதிர்ச்சியில் இருந்தவன் நான் நினைக்கிறது உண்மையா...அவன் மனசாட்சியோ அவனை பார்த்து பேபின்னு சொன்னியே உன் ஆளு உண்மையாவே பேபி தான்டா என்று கொக்கரித்துச் சிரித்தது..
ஏய் நீ கொஞ்சம் வாய மூடு நானே ஒன்னும் தெரியாத பிள்ளைக் கிட்ட போய் இப்படி நடந்துக்கிட்டேன்னு கஷ்டமா இருக்கு நீ மூடிக்கிட்டு போ...என்றவன் ஐயோ தியா பேபி சாரிடா என்று மானசீகமாக கூறினான்.
டேய் அபி உன் பாடு படு திண்டாட்டம் தான் இவளை வச்சுக்கிட்டு என்ன பண்றது...இப்படி இருந்தா அவ்ளோதான் என்று அவன் தலையில் கை வைக்க அவன் மனசாட்சி திரும்பவும் வந்து அபி நீ உன் பொண்ணுக்கு தானே டா அம்மா தேடின... உனக்கு தான் மனைவியா இருக்க தேவையில்லைனு தாத்தாக்கிட்ட வீர வசனம் எல்லாம் பேசுனா…
இப்போ இப்படி ஒரு சின்ன பிள்ளைக் கிட்ட விழுந்து கிடக்கிறயே உன் கெத்து என்ன ஆகுறது என்று கேட்கவும் ஏய் நீ என்னோட மனசாட்சி தானா...ஒரு தடவையாவது எனக்கு சப்போர்ட் பண்றியா என்று கேட்டவன் சந்தியாவை தேடினான்…
அந்த அறையில் இல்லை என்றதும் தன் சட்டை அவள் இறுக பற்றியதில் கசங்கி இருக்கவும் அதை ஒரு சிரிப்புடன் நீவி விட்டவன் அறையை விட்டு வெளியே வந்தான்...
அங்கு பிள்ளைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க சந்தியா அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துக் கொண்டு தன் மடியில் இருந்த ஹர்ஷியிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்..
அதைக் கண்டு அவனுக்கு ஆசையாக இருந்தது.
(நீங்க நினைக்கிற ஆசை இல்லைப்பா…)
அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்து தானும் அதில் ஐக்கியமாக எண்ணி அவர்களை நோக்கி சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தான்..
அருகில் யாரோ அமரும் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள் அவனை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு தள்ளி அமர்ந்தாள்…
அவள் தள்ளி அமரவும் அவள் அருகில் தோள்கள் உரச நெருங்கி அமர்ந்து அவள் தள்ளி அமராமல் இருக்க அவள் தோளில் தன் கைகளைப் போட்டுக் கொண்டு தன்னுடன் நெருக்கினான்..
அவனிடம் விடுப்பட முயன்று தோற்றவள் அவனை பார்த்து விடுங்க..என்றதும் சாரி தியா பேபி தெரியாம அப்படி பண்ணிட்டேன் என்று கூறிக் கொண்டிருந்தவனை பாதியில் நிறுத்தி விடுங்க அபிப்பா எனக்கு வலிக்குது என்றதும் ஷாக்காவைன் ஐயோ இது வேறயா என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டான்…
அவன் மனசாட்சி கரெக்டா ஆஜராகி இதுக்கே உன் தியா பேபிக்கு வலிக்குதாம் டா அபி..அதெல்லாம் விட்டு தள்ளு... உன்னை எப்படி கூப்டா ஆ...ஆன்...அபிப்பா. ஹா ஹா என்று அவனை பார்த்து நக்கல் செய்தது…
ச்சே நீ வேற நடுவுல நடுவுல நச்சரிச்சிட்டு இருக்க பே... என்றவன் தியாவிடம் திரும்பி பேபி சாரிடா...இனிமே பண்ணும் போது உனக்கு வலிக்காம உன்கிட்ட சொல்லிட்டு கிஸ் குடுக்கிறேன் சரியா என்றவன் என்னை அபிப்பான்னு இனி நீ கூப்பிடக் கூடாது…
இனிமே என்னை மாமான்னு தான் கூப்பிடனும் சரியா என்றதும் அவனை அதிர்ந்து பார்த்தவளிடம் அப்புறம் இந்த மாதிரி அடிக்கடி கண்ணை விரிக்கக் கூடாது சரியா..
நீ இப்படி விரிச்சு விரிச்சு பார்த்து அப்புறம் நான் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்... அதனால இப்படி அடிக்கடி பண்ணாத பேபி என்று அவளை நெருங்கியவனின் போன் அழைத்தது.
போனை எடுத்து பார்த்தவன் தாத்தா என்றதும் சொல்லுங்க தாத்தா அபி வாப்பா வீட்டுக்கு பாப்பாவ கூட்டிட்டு என்று கூறியதும் சரி தாத்தா இதோ வரோம் என்று விட்டு போனை அனைத்தான்..
பேபி வீட்டுக்குப் போலாமா தாத்தா கூப்பிடுறாங்க என்று அவளிடம் கூறியதும் "ம்ம" என்று தலையை ஆட்டியவள் ஹர்ஷியைத் தூக்கிக் கொண்டு எழுத்தாள்.
அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டவன் வா பேபி போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு பிள்ளைகளிடம் வந்தவன் குட்டீஸ் நாங்க வீட்டுக்குப் போயிட்டு வரோம் என்று அவர்களிடம் கூறினான்..
ஓகேப்பா என்று பிள்ளைகள் விடைக் கொடுத்ததும் இருவரும் கிளம்பினர்...கேட்டை தாண்டியதும் அவள் கைகளில் தன் கையைக் கோர்த்துக் கொண்டவன்..
அவள் கையை விடுவிக்க முயலவும் பேபி பிளீஸ் பேபி வீட்டுக்குப் போற வரைக்கும் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கிறேன் பேபி என்கவும் அமைதியாகி விட்டாள்…
அவள் அமைதியாகவும் அவன் இன்னும் அவள் விரல்களோடு தன் விரல்களைக் இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டான்...இந்த பயணம் இன்னும் நீளக்கூடாதா என்று ஏங்கினான்..எவ்வளவு மெதுவாக நடந்தும் வீடு வந்து விட்டது…
அவளிடம் குழந்தையைக் கொடுத்தவன் நான் இங்க பக்கத்துல கடைக்குப் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.
இவள் உள்ளே வரவும் எங்கேடா தம்பி வரல எங்கே அவன் என்று சந்திரா கேட்டார். பக்கத்துல கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு என்று சொன்னதும் சரி நீ வாடா இங்க வந்து உட்காரு என்று அவளை அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார் சந்திரா…
சிறிது நேரத்தில் வந்தவன் பரமன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..பின் இருவரிடமும் வெள்ளிக் கிழமை கல்யாணம் வச்சுக்கலாம் என்று சொன்னதும் இன்னும் மூணு நாள் இருக்கா என்று பெருமூச்சு விட்டான்…
அவன் மனதை அறிந்தது போல் பரமன் இந்த வெள்ளிக் கிழமையை விட்டா இன்னும் ஒரு மாதம் கழிச்சு தான் முகூர்த்த நாள் இருக்காம் அபி அதான் இப்போவே வச்சிட்டோம் என்று கூறியதும் அப்பாடி எப்படியோ சீக்கிரம் தேதியைக் குறிச்சாங்களே என்று சந்தோஷப் பட்டான்…
உள்ளுக்குள் மட்டுமே வெளியே விறைப்பாக தனக்கு ஒன்னும் தெரியாதது போலவே அமர்ந்திருந்தான்...டேய் நடிக்காதேடா உன்னோடு முடியலை என்று அவன் மனசாட்சி அலுத்துக் கொண்டது..
பரமன் கிளம்பலாமா என்று பொதுவாக கேட்கவும் தாத்தா நான் கொஞ்சம் தனியா சந்தியா கிட்ட பேசணும்..என்றதும் அதிர்ந்தனர் அனைவரும் அவன் ஏதாவது செய்து குழப்பி விட்டுடுவானோ என்று பயந்தனர்…
(ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அபி தியாக்கிட்ட குப்புற கவுந்து கிடக்கான்..அவனா எழுந்தா தான் உண்டு…)
ரூமுக்கு போய் என்ன பண்ண போறான்னு தெரியலையே…
அபி என்ன பண்ணியிருப்பான்..
வாழ்வு சிறக்கும்...
.jpeg)
Post a Comment