வாழ்வு -7

 


வாழ்வு - 13:


என்ன மச்சான் கல்யாணக் கலை முகத்துல குத்து டான்ஸ் போடுது போல..என்று கேட்டதும் அப்படியா தெரியுது என்றவனிடம் டேய் மச்சான் எப்பொழுது விறைப்பா இருக்குற நீ இப்போ முகம் பளிச்சின்னுதே அதான் கேட்டேன்..


அவ்ளோ வெட்ட வெளிச்சமாவா தெரியுது அதான் கடையில் எல்லாரும் என்னை அப்படி பார்த்தாங்களா என்று கேட்டவனிடம் ஹிம்ம் பாவம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு போல பித்துப் பிடிக்கிற முதல் ஸ்டேஜ்ல இருக்கன்னு அபி என்று சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தான்.


அப்பொழுது அபிக்கு போனில் அழைப்பு வரவே எடுத்துப் பார்த்தவனின் முகம் பளிச்சென பிராகாசமாக மின்னியது.. எடுத்துப் பேசியவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.


பேபி என்று ஒட்டுமொத்தக் காதலையும் குத்தகைக்கு எடுத்தவன் போல அழைக்க அவனை அதிசயமாகப் பார்த்தான்.


"ஹ்ம்ம் இப்போ வீட்டுக்கு தான் டா கிளம்புறேன்"


"..."


"ஹிம்ம் சரிடா மெதுவா போறேன்"


"...."


"ஓகே டா வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன்"


"..."


"சரிடா பாய்" என்று போனை அணைத்தவனையே பார்த்து யாருடா அந்த பேபி என்று கேட்டவனிடம் என் தியா பேபி டா என்று கூறியவன் காரில் ஏறு டா பேசலாம் என்றவன் காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான்.


பின் கல்யாண பேச்சு ஆரம்பித்தலிருந்தது முதல் அனைத்தையும் கூறினான். மச்சி முதல்ல தாத்தா கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ ரொம்ப தயங்கினேன்டா..


அப்புறம் ஹர்ஷிக்குட்டிக்கு அம்மாவ வந்தா போதும் என்று சம்மதித்தேன். எல்லோரும் தியாவோட வீட்டுக்குப் போகும் போது கூட வேண்டா வெறுப்பாதான் போனேன் ஆனால் அங்க போய் பார்த்ததும் டோட்டலா எல்லாமே மாறினா மாதிரி இருந்துச்சு..


ஐ லவ் ஹர் டா..சத்தியமா நான் இப்படி இருப்பேன்னு இன்னைக்கு தான்டா எனக்கே தெரிஞ்சிது..இப்போவே அவளை கூட்டிட்டு வந்துருனும்னு தோணுது.


என் கூடவே வச்சுக்கனும்னு தோணுது.. ஹர்ஷியும் அவகிட்ட ஒட்டிக்கிட்டா.. எல்லாத்தையும் தன் பக்கம் இழுக்குற வித்தைய தெரிஞ்சு வச்சுருக்கா டா என்று கூறியவனை பார்த்து ஹிம்ம் கண்டு பிடிச்சிட்டேன் மச்சி கன்பார்மே ஆயிடுச்சி என்றதும் என்னடா என்று கேட்டான்.


ஸ்டார்டிங் ஸ்டேஜ்னு நினைச்சேன் மச்சி..ஆனா இப்போ நீ பேசும்போது தான் தெரிஞ்சிது ஸ்டார்டிங் ஸ்டேஜ் எல்லாம் நீ கடந்துட்ட மச்சி இன்னும் கொஞ்ச நாள் போனா பித்து முத்திப் போய் சட்டையைக் கிழிச்சிக்கிட்டு தான் நிப்ப போல என்று சிரியாமல் நக்கல் அடித்தான்.


அபியின் மனசாட்சியோ சாதா பித்து இல்லை டா சந்தியா பித்து பிடிச்சுருக்குடா ஹர்ஷா…


சோ மச்சி சீக்கிரம் கல்யாணம் வச்சதும் நல்லதுக்கு தான் என்றவனை மொத்து மொத்தென்று மொத்தினான்.


நானும் ஏதோ சீரியஸா சொல்லப் போறேன்னு பார்த்தா என்ன எல்லாரும் ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க போங்கடா என்றவன் வண்டியை ஓட்டினான்.


மச்சி இதெல்லாம் சகஜம் விடுறா விடுறா என்று அவன் தோளைத்தட்டிக் கொடுத்தான்.பின் இருவரும் வீடு வந்ததும் இறங்கி அவரவர் அறைக்கு சென்றனர்.


சந்தியாவிற்கு போன் செய்து வந்து விட்டேன் என்று சொல்லவும் தவறவில்லை..


பரமன் சதா தங்குவதற்காக தங்கள் வீட்டின் பக்கத்திலேயே ஒரு வீடு கிடைக்கவும் அதற்கு வாடகை கொடுத்து விட்டு சதாவிடம் அழைத்துக் கூறினார்.


பின் இந்த பக்கம் சேகர் தன் தங்கையிடம் கால் செய்து குடும்பத்தோடு வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் கல்யாணம் என்று சொல்ல வில்லை..சொல்லி இருந்தால் அவர் கட்டியிருந்த கனவு கோட்டை மொத்தமாக இன்றே சரிந்திருக்கும்.


சர்ப்பிரைஸா இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு சும்மா வந்துட்டுப் போமா என்று கூறி வைத்தார். பின் சந்திரா அனைவரையும் சாப்பிட வருமாறு அழைத்தார்.


அனைவரும் அமர்ந்து சாப்பிட தேவி வர்ஷியை மடியில் வைத்துக் கொண்டு ஊட்டிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது வந்த ஹர்ஷா தேவியின் அருகில் இருந்த இருக்கையில் எதார்த்தமாக தான் அமர்ந்தான்.


அவன் அமரவும் தேவியிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொண்டவன் நான் ஒன்னுமே பண்ணாதப்போவே இப்படி பண்ற இரு டி உன்னை என்ன பண்றேன்னு பாரு டி என்று தன் மனதிற்குள் கருவியவன்..


அவள் புறமாக திரும்பி ஹர்ஷியைக் கொஞ்சுவது போல் அவள் கைகளை வருடுவதும் டேபிளுக்கு கீழே தன் கால்களால் அவள் கால்களை கீழிருந்து மேலாக வருடி அவளை ஒரு வழி செய்தான்.


அவள் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தது அவனுக்கு மிகவும் வசதியாகிப் போனது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


தன் அத்தை படும் பாட்டை ஹர்ஷி புரிந்து கொண்டாளோ என்னவோ ஹர்ஷாவை நோக்கி தன் கையை நீட்டினாள்..அவளை தேவியிடம் இருந்து தூக்குறேன் பேர்வழி என்று அழுத்தமாக அவளை வருடி விதிர்க்கச் செய்தான்.


அதற்கு மேல் அவளுக்கு சாப்பாடு இறங்கவே இல்லை.. ஏனோ தானோவென்று சாப்பாட்டைக் கொரித்தவள் உடனே எழுந்து கொண்டாள். பின் அனைவரும் சாப்பிட்டதும் அவரவர் அறைக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.


இங்கு தன் அறைக்கு வந்த அபி ஹர்ஷியைத் தூங்க வைக்கப் படாதப் பாடு பட்டுக் கொண்டிருந்தான். இன்றுதான் வர்ஷி ரொம்ப ஆக்டிவ்வா இருந்தாள்.. ஹர்ஷிக் குட்டி தூங்குடா.. செல்லக்குட்டி தானே அப்பா செல்லம் தானே நீங்க தூங்குங்கடா என்று அவளைத் தூங்க வைக்க செஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அவன் மனசாட்சியோ டேய் அபி நீ எதுக்கு ஹர்ஷியை இவ்ளோ சீக்கிரம் தூங்க வைக்கிறேன் எனக்கு தெரியும்.. கேடி டா நீ உன் பேபி கூட போன்ல கொஞ்சிக் குலாவ தானே தூங்க வைக்கிற.. என்று கேலி செய்தது.


ஏய் நானே ஹர்ஷி தூங்க மாட்டுறான்னு கடுப்புல இருக்கேன் ஓடிடு..என்று கூறியவன் ஹர்ஷியிடம் குட்டி மா தூங்குடா என் பட்டுல்ல செல்லம் தங்கம் என்று விதவிதமாக கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அவன் இப்பொழுது போன் செய்தாலும் ஹர்ஷியும் தியாவும் மட்டும் பேசுவார்கள்.. தான் பேச முடியாது என்ற கவலை அவனுக்கு…


அதனால் ஹர்ஷியைத் தூங்க வைத்து விட்டு பேசலாம் என்று தூங்க வைக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தான்.


இங்கு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றதும் தன் அறைக்கு செல்வது போல உள்ளே சென்று தேவி தண்ணீர் எடுக்க சமயலறைக்கு வருவதைப் பார்த்து பதுங்கியிருந்த பூனை அவளைக் கண்டதும் பாய்ந்து தன் கைகளில் அள்ளிக் கொண்டது.


பயத்தில் கத்தப் போனவளைத் தன் இதழ் கொண்டு அடக்கியவன் அப்படியே தன் அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றான். மெத்தையில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடியில் இருத்திக் கொண்டவன் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் அப்பொழுது தான் அவளை விட்டான்.


அவன் விட்டதும் தான் தாமதம் அவனிடம் இருந்து விடுப்பட முயன்று கொண்டிருந்தாள் அவளால் முயல மட்டுமே முடிந்தது. ஏய் ஜாங்கிரி இதுக்கு மேலே அசையாத நானே என்னை கட்டுப் படுத்திட்டு இருக்கேன்..என்றதும் அவன் நெஞ்சில் கை வைத்து பலமாக தள்ளினாள்.


இவ சரிப்பட்டு வர மாட்டா உன்னை என்றவன் அவளை மெத்தையில் தூக்கிப் போட்டு அவள் மேல் படர்ந்தான்.அவள் வழுவழுப்பான கன்னத்தை கடித்தவன் நானும் எவ்ளோ நாள் டி வெய்ட் பண்றது.எதுக்கு இவ்ளோ அடம் பண்ணுற உனக்கு என்ன தான் டி பிரச்சனை என்று கேட்டவனிடம் எதும் சொல்லாமல் அவன் கடித்த கன்னத்தை அழுத்தித் தேய்த்தாள்.


அதில் வெறியானவன் அவள் முகம் முழுக்க கடித்து முத்தமிட்டான்..அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டு அவளைத் தன் மீசையால் குறுகுறுக்கச் செய்தான்.


அவன் இம்சையை அதற்கு மேல் தாங்க முடியாமல் மாமா ப்ளீஸ் விடுங்க மாமா எனக்கு கூசுது என்று கூறினாள்.அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்றேன்னு சொல்லு உன்னை விடுறேன் என்றதும் ஹிம்ம் முதல்ல எழுந்திரிங்க மாமா நீங்க வெயிட்டா இருக்கீங்க...திக்கி திணறி கூறியதும் தான் எழுந்தான்.


அவளை நகர விடாமல் தன்னோடு சேர்த்து அனைத்தவன் சொல்லு உனக்கு என்ன பிரச்சனை அதுக்கு என்னை அவாய்ட் பண்ற என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.


இங்கு இப்படி என்றால் அங்கு ஒரு ஆசாமி போனில் முத்தம் கொடுத்தே போனை சூடாக்கி மூடாக்கி அது சார்ஜ் தீர்ந்து போகும் அளவுக்கு பேசி அவன் போன் சார்ஜை முழுதும் தீர்த்தப் பிறகே போனை வைத்தான்.


போனுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் எனக்கு பார்ட்னரை செட் பண்ணிக் குடுத்துட்டு நீ என்ன வேணும்னாலும் பண்ணுடு என்று கதறியிருக்கும்..


வாழ்வு சிறக்கும்...



வாழ்வு-14:


என்ன தான் உனக்கு பிரச்சனை என்று ஹர்ஷா கேட்டதும் நீங்க தான் பிரச்சனை எதுக்கு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கீங்க உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாத தூரத்தில் இருக்கீங்க அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க என்றதும் ஏய் ஜாங்கிரி நான் உன் கூட தான் இப்போ இருக்கேன் நீ தான் என்னை கண்டாலே தெறிச்சி ஓடுற… என்று கேலி பண்ணினான்.


மாமா நீங்க டாக்டருக்கு படிச்சு நல்ல வேலையில் இருக்கீங்க.. கை நிறைய சம்பாதிக்கிறீங்க உங்களுக்கு ஏத்த பொண்ணா நல்லா படிச்சப் பொண்ணா பார்த்து கட்டிக்கோங்க.. நான் உங்களுக்கு சுத்தமா கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை என்று கூறியதும் கடுப்பானவன் மேல சொல்லு என்பது போல அவளைப் பார்த்தான்.


இந்த மரமண்டைக்கு தெரியவில்லை அவன் இவள் மேல் உயிராய் இருக்கிறான் என்று...


நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு வீட்டுல சும்மா தானே இருக்கேன்.. அதுமில்லாம நீங்க எப்படி இருக்கீங்க தெரியுமா அழகா உடம்ப நல்லா கட்டுக்கோப்பா வச்சுருக்கீங்க ஆனால் நான் அப்படி இல்லைதானே குண்டா உங்களுக்கு பொருத்தம் இல்லாம இருக்கேன் என்று தன் பூசினாற் போல் இருந்த உடம்பை காட்டிக் கூறினாள்.


அவ்ளோ தானா சொல்லி முடிச்சிட்டியா என்று அவன் கேட்டதும் தலை ஆட்டியவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு என்ன உனக்கு பிடிக்குமா தேவி என்று கேட்டான். அவள் ஏதோ கூற வரவும் எனக்கு உண்மையான பதில் தான் வேணும் தேவி என்றதும் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்துக் கொண்டாள்.


அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் ஏய் பதில் சொல்லுடி என்று கடுமையாக கேட்டான். அவன் அதட்டவும் பயத்தில் கண்களைத் தோகையென விரித்தாள். சொல்லுடி என்ன உனக்கு பிடிக்குமா என்று கேட்டவன் உனக்கு பிடிக்குதோ இல்லையோ ஆனால் எனக்கு உன்னை... உன்னை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்.


நீ இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு இருக்கேன். தினமும் என்னை இங்க இருந்து என்று தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவன் இம்சை பண்ற டி .நீ என்னன்னா மொக்கையான காரணத்தைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்கிட்டு இருக்க. உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் டி நான் கூட வேற ஏதோ காரணம் இருக்கும்னு நினைச்சேன் நீ என்னன்னா நீங்க பெருசா படிச்சிருக்கேன் ஏணி வச்சாலும் எட்டாது அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருக்க...


சொல்லுடி என்னை பிடிக்காமயா நான் வந்து போறப்ப ஒளிஞ்சுருந்து என்னை திங்கிற மாதிரி பார்ப்பியே என்று அவன் கூறவும் அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தவள் தன்னை கண்டுக் கொண்டானே என்று திருத்திருவென முழித்தாள்.


அவள் தன் கொட்டைப் பாக்கு கண்களை விரித்ததும் தன் சித்தம் இழந்து பித்தம் தலைக்கேற அவளை நெருங்கியவன் வன்மையாக அவள் இதழைக் கொய்தான்.இதழ் வழியே அவள் உயிரை உறிந்து விடுபவன் போல் அத்தனை வன்மை அத்தனை அவசரம் முதலில் அதிர்ந்து அவனை விலக்கப் பார்த்தவள் அவன் இதழைக் கடிக்கவும் தன் செயலைக் கை விட்டாள்.


அவன் வேகத்திற்கு அவளால் ஈடுக் கொடுக்க முடியவில்லை அவன் கைகளில் தோய்ந்து சாயவும் தான் விட்டான். அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தலை முடியைக் கோதிக் கொடுத்தான். ஏய் ஜாங்கிரி எனக்கு நீ வேணும் டி புரிஞ்சிக்கோ ஏன் டி இப்படி பண்ற…


குண்டா இருக்கன்னு யாரு சொன்னா நான் சொன்னேனா நீ குண்டா இருக்கன்னு எனக்கு நீ இப்படி இருக்கிறது தான் டி பிடிச்சிருக்கு.. நல்லா பொசுப் பொசுன்னு டெடி பியர் மாதிரி இருக்க அப்படியே உன்னை கட்டிப் பிடிச்சு என்னென்னமோ பண்ணனும்னு தோணுது நீ என்னன்னா நான் குண்டா இருக்கேன் ஒல்லியா இருக்கேன்னு கதை சொல்லிட்டு இருக்க


இப்போ ம்ம் சொல்லு அடுத்த நிமிஷம் உன்னை தூக்கிட்டுப் போயிடுவேன்.. ஒல்லியா இருந்தா ஒன்னுமே இருக்காது நீ குண்டாவும் இல்லாம ஒல்லியாகவும் இல்லாமா செமையா இருக்க..நானே இந்த ஜாங்கிரிய எப்போ சாப்பிடலாம்னு ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன்.


இப்போ வந்து உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லிட்டு இருக்கா..நான் இவ்ளோ சொல்லியும் நான் உனக்கு வேண்டாம்னா விடு நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்..இத்தனை நாள் எப்படி உன் நினைப்போட வாழ்ந்தேனோ அப்படியே இருந்துட்டுப் போறேன்.


கடைசியா கேட்கிறேன் தேவி உனக்கு படிப்பு தான் பிரச்சனை என்றால் நான் இனி பிராக்டிஸ் பண்ணலை அப்புறம் நான் டெய்லி ஒர்கவுட் பண்றதை நிறுத்திடுறேன்..இதெல்லாம் செய்தாலாவது என்னை ஏத்துப்பியாடி ..


எனக்கு உன்னை விட எதுவுமே பெரிசில்லை டி என்று கூறியவன் அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் நான் இனி உன்னை தொந்தரவுப் பண்ண மாட்டேன் தேவி என்றவன் கதவைத் திறக்கப் போனான்.


அவளோ அவன் சொன்னதிலேயே உழன்று கொண்டிருந்தாள் தனக்காக அவன் உயிராய் நினைக்கும் வேலையையும் விடுகிறேன் என்று சொல்கிறானே.. அவளுக்கு நன்றாக தெரியும் அவன் எவ்வளவு ஆசைப்பட்டு மருத்துவத் துறையில் பணிப்புரிகிறான் என்று.


ஒர்கவுட் பண்ணாம இருந்தா என்ன ஆகும் என்று யோசித்தவளுக்கு சிரிப்பு வந்தது. கடைசியில் அவன் கதவு அருகே செல்லவும் பதறியவள் பாய்ந்து பின்னால் இருந்து அனைத்துக் கொண்டாள்.


சாரி மாமா நானும் குழம்பி உங்களையும் குழப்பிட்டேன் சாரி என்று அவன் முதுகில் சாய்ந்து தன்னோடு இறுக்கிக் கொண்டுக் கூறினாள்.மாமா சாரி மாமா..எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என்று முதுகில் முத்தம் மழைப் பொழிந்தாள்.


உண்மையா பேச்சு மாறமாட்ட தானே என்று கேட்டவன் அவள் இல்லை என்று தலையசைக்கவும் அப்போ வா தெம்பா சாப்டுட்டு நாம லவ் பண்ணலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு சமயலறைக்கு சென்றான்.


மாமா நீங்க சாப்பிடலையா என்று கேட்கவும் நீ ஒழுங்கா சாப்பிடாம எழுந்து போயிட்டியா அதான் எனக்கும் சாப்பிட முடியலை ஹர்ஷிக்கு மட்டும் ஊட்டி விட்டுட்டு நான் எழுந்துட்டேன் என்று கூறினான்.


அதில் உருகியவள் வாங்க தோசை ஊத்தி தரேன் என்று தோசைக் கல்லை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்து தோசை சுட ஆரம்பித்தாள். ஹர்ஷா சும்மா இருக்காமல் அவளிடம் ஒரு இட்லி தோசை சுடுது இந்த கண்கொள்ளா காட்சியைக் காணக் கண்கள் கோடி வேண்டும் என்று கலாய்த்தான்.


ச்சு போங்க மாமா என்று தோசையை எடுத்து பொடிப் போட்டு எண்ணெய் ஊற்றி குழப்பிக் குடுத்தாள்.அவள் கையைப் பிடித்து தன் வாயிற்குள் வைத்து பொடியுடன் சேர்த்து விரலையும் சப்புக் கொட்டிச் சாப்பிட்டான்.


ஐயோ மாமா சீக்கிரம் சாப்பிடுங்க யாராவது வந்துற போறாங்க என்றதும் ம்ம் என்றவன் அவளுக்கு ஊட்டி விட்டுத் தானும் உண்டான்.ஹ ஜாங்கிரி உனக்கு குண்டா இருக்கன்னு தோணுச்சுன்னா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதை பாலோ பண்ணினா செமையா உடம்பு குறைஞ்சிடும் என்று கூறினான்.


அவனிடம் இவளும் ஆர்வமாக என்ன அத்தான் எப்படி என்று கேட்டாள்.அவள் கேட்டதும் குறும்பாக கன்னம் குழி விழச் சிரித்தவன் அதுவா இங்க வா இந்த வாய் வாங்கு என்று தோசையைப் பிய்த்து அவளுக்கு ஊட்டினான் .


அவளுக்கு ஊட்டிவிட்ட மறுநொடி தன் இதழை அவள் பூவ்விதழில் புதைத்தவன் அவளை விட்டுப் பிரியும் போது அவள் வாயில் இருந்த தோசை இவன் வாயிற்கு இடம் பெயர்ந்திருந்தது. தன்னை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தான்.


எப்படி என்னோட ஐடியா என்று தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவனை இது தான் உங்க ஐடியாவா என்று மொத்தினாள். ஏய் என்னடி நீ எதுக்குமே ஒத்து வர மாட்டேங்கிற..நான் சொன்ன ஐடியாவ மட்டும் பண்ணினா எனக்கும் கிஸ் கிடைச்ச மாதிரியும் ஆச்சு..நீயும் உடம்ப குறைச்ச மாதிரியும் ஆச்சு என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.


போங்க மாமா என்று வெட்கப் பட்டவளை தன்னுடன் அனைத்து ஊட்டி விட்டவன் தானும் சாப்பிட்டு இருவரும் அறைக்கு சென்றனர்.


இங்கு அபி படாதப் பாடுப்பட்டு ஹர்ஷியைத் தன் நெஞ்சில் போட்ருத் தூங்க வைத்தவன் தன் பேபிக்கு கைப்பேசியில் அழைத்தான்.


"பேபி…"


"மாமா என்ன அதுக்குள்ள படுத்துட்டீங்க..சாப்பிட்டாச்சா ஹர்ஷி என்ன பண்றா.." என்று கேட்டதும் 


"ஹர்ஷி தூங்குறா பேபி" என்று தன் நெஞ்சில் படுத்திருந்தவளைக் காண்பித்தான்.


"ஓ..எப்பொழுதும் உங்க நெஞ்சில் தான் தூங்குவாளா.."


"ம்ம் இன்னும் கொஞ்ச நாள்ல்ல ஹர்ஷிக் கூட என் பேபியும் இந்த இடத்துக்குப் போட்டிப் போடுவாங்க.." என்றதும் வெட்கப் பட்டாள்.


"ஹர்ஷி எப்பொழுதும் சீக்கிரம் தூங்கிடுவாளா மாமா" என்று பேச்சை மாற்றினாள்.


"ஹிம்ம ஆமாம் பேபி…"


அடப்பாவி என்னா பொய் சொல்றான் என்று வாயில் கை வைத்தது அவன் மனசாட்சி. டேய் படுபாவி நல்லா விளையாண்டுட்டு இருந்த பிள்ளைய தூங்கு தூங்குன்னு நச்சரிச்சு தூங்க வச்சுட்டு பொய் சொல்ற என்று கடுப்பாகியது.


"நீ எப்போ பேபி இங்க வருவ" என்று திரும்ப ஆரம்பித்தான்.


அவன் மனசாட்சியோ ஐயோ ஆள விடுடா சாமி இவன் கூட இருந்தா நாம பைத்தியம் ஆகிடுவோம்..என்று புலம்பியவாறு முலையில் சென்று முடங்கிக் கொண்டது. 


இன்னும் ரெண்டு நாள் தான் மாமா என்று கூறியவளுக்கு பல முத்தங்களை வாரி இரைத்தான். இவன் உதடு பட்டதுமே போனில் சார்ஜ் லோவாக இருக்குன்னு சிவப்பு லைப் எறிந்தது.


அதையும் அவன் பொருட்படுத்தவில்லை இதுவரை மனசாட்சியைத் தான் புலம்ப விட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது அந்த வரிசையில் போனும் சேர்ந்துக் கொண்டது.


ஸ்விட்ச் ஆப் ஆனப் பிறகு தான் தூங்கினான்.அதுவும் ச்சே இந்த போன்ல சார்ஜே நீக்க மாட்டேங்குது என்ற குற்றச்சாட்டோடு…


போனுக்கு காது கேட்டிருந்தால் போடாங்க…. என்று கெட்ட வார்த்தையில் திட்டி தூக்குப் போட்டிருக்கும்...


வாழ்வு சிறக்கும்…


No comments