புயல் -2

 



மோகம் :3




தீனா 25 வயது நிரம்பிய இளைஞன் சென்னையில் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன் என்று மிதப்பாக கூறிக்கொண்டு திரிவான் .




ஆனால் தான் முன்பு படித்த நான்கு வருட பொறியியல் கல்லூரியில் வைத்த பதினெட்டு அரியர்களைக் கிளியர் பண்ணாமல் தன் இஷ்டம் போல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.




 ஆனால் வெளியில் தான் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் தான் இன்னும் வேலைக்கு செல்லவில்லை என்று கேட்பவரிடம் பொய்யாக கூறுவான். 




ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று யாரும் இவன் பேச்சை நம்ப போவதில்லை என்று. 




அவனை பற்றி அந்த ஊர் மக்களுக்கு நன்றாக தெரியும் அவனிடம் விசாரிப்பது கூட அவன் அப்பா பண்ணையாருக்காக தான். 




ஏனென்றால் அங்குள்ள மக்களில் பாதி நபர்கள் அவர்களின் பண்ணைகள், வயல்களில் தான் வேலை பார்கிறார்கள் . 




.தீனாவிற்கு இல்லாத கெட்டப்பழக்கமே இல்லை என்று சொல்லலாம். மதுவிலிருந்து மாதுவரை அனைத்தும் உண்டு. 




முதலில் இவனுக்கு இருக்கும் இந்த பழக்கம் பண்ணைக்கு தெரியாது. ஒரு நாள் குடி விட்டு தள்ளாடிக்கொண்டே வந்த பொழுது பார்த்து விட்டார். 




அப்பொழுது இந்த பழகத்தை இனிமேலும் தொடர்ந்தால் இந்த வீட்டிலும் உனக்கு இடமில்லை சொத்திலும் பங்கில்லை என்றார். 




அதனால் கொஞ்ச நாள் அடக்கி வாசித்தவன் நேற்றிரவு தன் நண்பனுடன் முட்ட முட்ட குடித்து விட்டு வரும் போது முத்தமிழ் வீட்டைக் கடந்து போகையில் அவள் அம்மா இறந்தது நியாபகம் வர அவள் மட்டும் தான் வீட்டில் இருப்பாள் என்று தெரிந்து கொண்டு அவள் வீட்டுக் கதவைத் தட்டினான்.




அன்று கதிரின் அப்பத்தாக்கு இடுப்பு வலி இருந்தது அதனால் கதிரிடம் "அய்யா கதிரு போய் முத்தமிழ இங்க கூட்டிட்டு வாயா எனக்கு இடுப்பு வலிக்குது அலைய முடியலை நீ போய் அழைச்சிட்டு வாயா" என்று அனுப்பி வைத்தார்.




 அதே நேரம் முத்தமிழின் வீட்டுக் கதவைப் படபடவென தட்டிக் கொண்டிருந்தான்தீனா .




முத்தமிழ் யாரு இப்படி கதவைத் தட்டுறது என்று நினைத்துக்கொண்டு கதவருகில் வந்து தாழ்ப்பாளில் கை வைக்கப் போக தீனாவின் குரல் கேட்டது. 




திடுக்கிட்டு கையை எடுத்தவள் பயந்து இரண்டடி பின்னால் சென்றாள்.தீனாவோ "ஏய் கதவைத் திறடி என்ன டி பண்ற இப்போ திறக்குறியா இல்லை கதவை உடைக்கவா " என்று கத்தி கொண்டு வேகமாக கதவைத் தட்டினான். 




தமிழுக்குப் பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனே கதிர் நியாபகம் தான் வந்தது.




"அத்தான் வாங்க அத்தான் இன்னைக்கு கூட வீட்டுக்குக் கூப்டீங்க நான் தான் வரலை சாரி அத்தான் வந்து என்னை அழைச்சிட்டு போங்க அத்தான்" என்று மனதுக்குள்ளே வேண்டினாள்.




அப்பொழுது பைக் சத்தம் கேட்கவும் தீனா போய் மறைந்து கொண்டான். ஏனென்றால் அந்த ஊரில் கதிரிடம் மட்டும் ராயல் என்பீல்டு பைக் இருந்தது.




அந்த வண்டியின் சத்தம் கேட்கவும் கதிர் தான் வருகிறான் என்று தெரிந்து கொண்டு மறைவில் ஒளிந்து கொண்டான்.




அதுவரை அழுது கொண்டிருந்தவள் காதில் பைக் சத்தம் விழவும் கண்ணை துடைத்தாள். 




"தமிழ்" என்று கதவைத் தட்டவும் அவன் குரலை கேட்டதும் சிறிதும் அவள் தாமதிக்கவில்லை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல கதவைத் திறந்து கொண்டு சென்றாள். 




தன் முன்னால் நின்றவனை இறுக அணைத்துக் கொண்டு "அத்தான் ..அத்தான் .." என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்.




அவள் திடீரென்று அணைக்கவும் ஒன்றும் புரியாமல் "தமிழ் என்ன ஆச்சு எதுக்கு அழுகுற " என்று உள்ளே அழைத்தப் போனான்.




அவள் கண்களைத் துடைத்து அவளுக்கு தண்ணீரைக் கொடுத்தான். இன்னும் தேம்பிக் கொண்டே இருக்க "ஒன்னும் இல்லை தமிழ் என்ன ஆச்சு அம்மா நியாபகம் வந்துருச்சா" என்று கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவள் கண்கள் திரும்ப அழுகையை ஆரம்பிக்க "ச்சு என்ன ஆச்சு அழுகாத " என்று அவள் கண்களைத் துடைத்து விட்டு அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு "என்ன ஆச்சு சொன்னாதானே தெரியும்" என்றான்.




அவள் இன்னும் அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்கவும் "தமிழ் இப்போ அழுகையை நிறுத்திட்டு சொல்லப்போறியா இல்லையா" என்று கடுமையாக கேட்கவும் அவனை விட்டு தள்ளி நின்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை கண்டுக் கொள்ளாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.




அவன் பக்கத்தில் வரவும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள். 




"ஓ உனக்கு கோபமெல்லாம் வருமா" என்று நினைத்தவன் அவள் அருகில் போய் அமர்ந்தான். 




"ஏய் தமிழ் இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்க" என்றதும் தான் தாமதம் அவனை பார்த்து " கல்யாணம் பண்ணின பொண்டாட்டி தனியா இருக்காளேன்னு அக்கறை இருக்கா.. நீங்க வீட்டுக்கு நான் வரலைன்னு சொன்னாலும் இழுத்துட்டுப் போயிருக்கலாம்ல ..நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா அந்த பெரிய பண்ணையோட பையன் கதவை தட்டினான் தெரியுமா வெளிய வாடி இல்லனா கதவை உடைப்பேன்னுலாம் சொன்னான் ...சரி அதெல்லாம் விடுங்க நான் அழுதேன்ல என்ன சமாதான படுத்தாம என்கிட்ட கத்தி கோபமா பேசுறீங்க..." என்று அவனிடம் பொரிந்து தள்ளியவள் "கொஞ்சமாச்சும் பொண்டாட்டின்னு அக்கரை இருக்கா உங்ககிட்ட இப்படி இருந்தா ஒரு சக்கரையையும் எதிர்பார்க்க முடியாது போல ஜடம் ஜடம்..." என்று திட்டி தான் அவனுக்கு பொண்டாட்டி என்பதை நிருபித்தாள்.




அதுவரை அவள் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தவன் அவள் ஜடம் என்கவும் "யாருடி ஜடம் நானா "என்றவன் அவள் முகத்தை பற்றி அவள் இதழை வன்மையாக சிறை செய்தான்.




அவள் தன்னிடம் கோபம் கொண்டதும் சுவரஸ்யமாக அவளைப் பார்த்து அருகில் அமர்ந்தவன்.




அதன்பிறகு அவள் பேசிய பேச்சில் அதிர்ந்தான். 




இவள் இப்படி கூட பேசுவாலா அமைதின்னுல்ல நினைச்சேன் என்று நினைக்கவும் அவன் மனசாட்சியோ டேய் கதிரு அவ உன் பொண்டாட்டியா மாறிட்டா உன்னை புருஷனா ஏத்துக்கிட்டா அதான் கோபப்படுறா தன்னை கூட்டி போகவில்லையே என்று உரிமை இருக்குற இடத்துல தான் கோபத்தையும் காமிப்பாங்க .




அதன்பிறகு அவள் ஜடம் என்று தன்னை சொல்லவும் பொங்கி எழுந்துவிட்டான்.




அவன் தன் இதழை சிறை செய்வான் என்று சத்தியமாக அவள் நினைக்கவில்லை.




" சும்மா இருந்த சிங்கத்தை தூண்டி விட்டுட்டோம் போல " என்று நினைத்தவள் அவனிடம் இருந்து விலக எத்தனித்தாள் . 




ஆனால் அவன் விடவில்லை. 




அவனோ அவள் உதட்டில் நின்று நிதானமாக வந்த தேனை ஒரு சொட்டு விடாமல் பருகிக்கொண்டிருந்தான்.




சிறிது நேரம் கழித்து விட்டவன் அவ்வளவு நேரம் இருந்த மென்மை மறைய "நீ வீட்டுலையே இரு என் பொண்டாட்டிக்கிட்டேயே வாலாட்டிட்டு எப்படி அவன் இந்த ஊருல இருக்கான்னு பாக்குறேன்" என்று அவளிடம் சொன்னவன் கிளம்பவும் அவன் கையைப் பிடித்து தடுத்தவள் "வேண்டாம் அத்தான் வாங்க வீட்டுக்குப் போலாம் இப்போ எதுவும் பிரச்சனை வேண்டாம் ப்ளீஸ்" என்று கெஞ்சவும் "சரி கெளம்பு நாளைக்கு வந்து துணியெல்லாம் எடுத்துக்கலாம்". 




"வா போலாம் வீட்டுக்கு" என்றவன் வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து அமர சொன்னான்.


மோகம் : 4


அவன் வண்டியில் அமர சொன்னதும் இருங்க ஒரு நிமிஷம் என்று அவனிடம் கூறியவள் உள்ளே சென்று தன் உடைகளில் இரண்டு செட் எடுத்துக்கொண்டு வந்தாள்.


அவள் முகம் சிவந்து இருக்கவும் அவளை பார்க்க பாவமாக இருந்தது அவள் அழுததால் முகம் சிவந்தது என்று நினைத்து கொண்டு தன்னையே கடிந்து கொண்டான் முன்பே அவளை தன்னுடன் அழைத்து சென்றுருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.


தமிழ் போய் முகத்தை கழுவிட்டு வா..பாரு அழுததுல முகமெல்லாம் சிவந்து போய்டுச்சு என்று கூறியதும் அவன் வண்டியின் கண்ணாடியில் தன்னை பார்த்தவள் முகம் சிவந்து உதடு லேசா வீங்கியிருக்க முடிகள் கலைந்து ஓவியமாக இருந்தாள்.


அட மக்கு சாம்பிராணி அத்தான் நீங்க பண்ணினதுல முகம் சிவந்து போச்சு இது கூட இன்னும் தெரியல என்று இருங்க இப்படி இருந்தா ஒன்னும் வேலைக்காகாது என்று நினைத்தவள்..


தன்னை கண்ணாடியில் பார்த்து விட்டு அவனை தன் குண்டு கண்களால் முறைத்து நறுக்கென்று அவன் தொடையில் கிள்ளினாள்.அவள் கிள்ளியதில் மெதுவாக அலரியவன் ஏன் டி கிள்ளின ஆஆ என்று அவள் கிள்ளிய இடத்தை பரபரவென தேய்த்து விட்டான்.


வலிக்குதா ச்சு ச்சு என்று உச்சுக் கொட்டியவள் முத்தம் குடுக்கிறேன்னு கடிச்சு வச்சுருக்கீங்க நான் எப்படி இப்போ எல்லார் முன்னாடியும் போய் என் முகத்தைக் காட்டுவேன். நான் உங்ககிட்ட முத்தம் கேட்டேனா என்று முறைத்தவள் வண்டியில் ஏறாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.


 வீட்டுக்குப் போக வேண்டாம்.. நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன் என்று கூறியவளை அதெல்லாம் ஒன்னும் தெரியலை 

நீயா ஏதாவது கற்பனை பண்ணி பார்த்தா அப்படி தான் தெரியும் பேசாம வண்டியில் ஏறி உட்கார்.


அவள் அமர்ந்ததும் தமிழ் இந்த மாதிரி வெளியே மத்தவங்க முன்னாடி என்னைக் கேட்காமத் தொடக் கூடாது சரியா என்று கூறியவனிடம் ஏன் தொடக் கூடாது எதுக்கு தொடக் கூடாது நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீங்க தானே என் புருஷன் நீங்க தானே என் கழுத்துல தாலிக் கட்டினது அப்போ உங்க மேல எனக்கு முழு உரிமை இருக்கு அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது என்று அவனிடம் எகிறினாள்.


எனக்கு குளிருது சீக்கிரம் வண்டியைக் கிளப்புங்க நான் வீட்டுல சமாளிச்சுக்குவேன் என்ன இந்த அம்மாயிதான் கண்டுப் பிடிச்சிடும் பார்த்துக்கலாம் என்று கூறி பிடிமானத்திற்கு வண்டியின் பின்புறம் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டாள்.


கதிரோ இவ என்ன இப்படி பேசுறா கிள்ளக் கூடாத இடத்துல கிள்ளி மனுஷனப் பாடாப் படுத்திட்டு அப்படி தான் பண்ணுவேன்னு சொல்றா ஐயோ இவக்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைனா தினமும் கிட்னிப் புடுங்கக் கூப்பிடுவாப் போல என்று மனதிற்குள் அலறியவன் அவள் கம்பியைப் பிடித்துக் கொண்டு அமரவும் ஏமாற்றமடைந்தான் 


தமிழ் வண்டியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு அவனை கொஞ்சம் கூட உரசாமல் கவனமாக அமர்ந்திருந்தாள். தமிழ் நம்ம ஊரு ரோடு பத்திதான் நல்லா தெரியும்ல நல்லா கெட்டியா என்னைப் பிடிச்சுக்கோ என்று கூறியதும் எதுக்குப்பா வீண் வம்பு உங்களுக்கு தான் நான் தொட்டா பிடிக்காதே.. நீங்க தானே சொன்னீங்க வேண்டாத பொண்டாட்டி கைப் பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்று ஏற்ற இறக்கத்துடன் கூறினாள்.


அடிப்பாவி நீ என் மேல கை வச்சாலே என்னால என்னை கட்டுப் படுத்த முடியலை அதனால வெளியே மேல கை வைக்காதன்னு சொன்னது தப்பா இப்படி முதலுக்கே மோசம் பண்றா என்று மனதிற்குள் கதறியவன் நான் உன்னை ஒன்னுமே சொல்ல மாட்டேன் தமிழ் என்று கூறியதும் தனக்குள் சிரித்துக் கொண்டவள் வெளியே ஒன்னும் தெரியாதது போல அவனிடம் அப்போ நான் உங்களை இனி தொடலாம் தானே என்று கேட்டதும் ம்...ம் என் தோளைப் பிடிச்சுக்கோ என்று வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் .


தமிழ் பிடிச்சுக்கோ போலாமா என்று கேட்டதும் அவன் இடுப்பைத் தன் கைகளால் இறுக்கிக் கொண்டு முகத்தை அவன் முதுகில் பதித்துக் கொண்டு அவன் மேல் தன் மென்மைகள் உரச இறுகக் கட்டிக் கொண்டவள் போலாம் அத்தான் என்று கிசுக்கிசுப்பாகக் கூறினாள்.


அவள் தன்னை கட்டி அணைப்பாள் என்று கனவா கண்டான். இருவருக்கும் கல்யாணம் நடந்த தே கனவு போல் இருக்கு இதுல இவள் இப்படி பண்ணினால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்.


 டேய் கதிரு வீடு போய் சேருற வரைக்கும் நல்லப் படியா போய் சேரனும் இந்த குட்டிப் பிசாசு என்னை ஏதோ பண்ணுறா இவக்கிட்ட தனியா மாட்ட கூடாது எனக்கு என்னன்னமோ தோணுது என்று புலம்பியவன் தன்னை மிகச் சிரமப்பட்டு வண்டியைக் கிளப்பினான்.



இங்கு இவர்கள் வண்டியில் கிளம்பியதும் இருளில் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவன் வெளியில் வந்தான்.அவன் முகம் பழிவெறியில் பளப்பளத்தது.


அவன் கையில் உள்ள தன் போனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து குரூரமாக சிரித்தான்..டேய் கதிர் என்னையா அடிச்ச இப்போ உன்னை ஊரு முன்னாடி தலை குனிய வைக்கிறதுக்கு செ மேட்டர் கிடைச்சிருக்கு என்று முத்தமிழ் கதிரை அணைத்தப்படி இருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கூறினான்.


அடப் பொசக் கெட்டப்பயலே அவன் பொண்டாட்டி அவன கொஞ்சிறா.. நீயா வாலண்டியரா போய் மூக்கு உடைப்பட்டு வரப்போற அதை நினைச்சா எனக்குச் சிரிப்பா வருது என்று சிரித்தது விதி.


இரண்டு வருடத்திற்கு முன்பு தங்கள் பண்ணையில் வேலை செய்ய வந்த ஒரு சிறு பெண்ணிடம் பேசி தப்பான இடங்களில் தொடவும் அதை கதிர் பார்த்து யாருக்கும் அந்த விஷயம் வெளியே தெரியாமல் அந்த பெண்ணிடமும் யாரிடமும் சொல்ல வேண்டாம் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியவன் அன்றிரவே தீனாவை சரமாறியாக அடித்து வெளுத்து வாங்கினான்.


உன் அப்பாவுக்காக பார்க்கிறேன் இல்லை தொலைச்சுக் கட்டிடுவேன் என்று எச்சரித்தவன் காலால் ஒரு உதை விட்டுவிட்டு சென்றான். அடுத்த நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் பிள்ளையைப் படிக்க வைங்க என்று கூறியவன் அந்த பெண்ணிடம் அவள் படிப்புப் பற்றி விசாரித்தான் .


அவள் பெயர் மாதவி என்றும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருப்பதாகக் கூறினார் அவளின் தாயார். நான் பணம் கட்டுறேன் ம்மா நீங்க பிள்ளையைப் படிக்க வைங்க என்றதும் எங்க தம்பி இவளோட அப்பா சம்பாரிக்கிற பணத்தை எல்லாம் குடிச்சே அழிக்கிறான்.


ஒத்தப் பைசா வீட்டுல வைக்க முடியலை எங்க வச்சாலும் எப்படியாவது கண்டு பிடிச்சு எடுத்துக் குடிக்கிறார் நான் பணம் குடுக்க முடியாதுன்னு சொன்னா அடிக்கிறான் நான் என்ன தம்பி பண்ண முடியும் நானும் பொம்பளை பிள்ளைய பெத்து வச்சுருக்கேன்..என்று தன் கஷ்டத்தை அவனிடம் கூறிக் கொண்டிருந்தார்.


சரி ம்மா நான் அப்பாவ பேச சொல்றேன் நீங்க பாப்பாவ வெளிய வேலைக்கு அனுப்பாதீங்க பிள்ளை படிக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றான்.


அன்று இரவே மாதவியின் அப்பா தன் மனைவியிடம் வந்து ஒரு ஐயாயிரம் பணத்தைக் கொடுத்து இனி நான் குடிக்க மாட்டேன் புள்ள சுந்தரேசன் ஐயா செங்கல் சூலைக்கு வேலைக்குப் போறேன் நாளையிலிருந்து..என்று கூறியதும் அவரின் மனைவிக்கு ஆச்சரியம்.


எப்படி இது சாத்தியம் அவர்கள் சொன்னதும் புரிந்துக் கொண்டார் போல என்று நினைத்தார்.ஆனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை கதிர் வாயால் பேசியதை விட அவரிடம் அவன் கை தான் அதிகமாக பேசியது என்று..


தன் கணவனின் மாற்றத்தை எண்ணி இப்போவாச்சும் உனக்கு புத்தி வந்துச்சே என்று விட்டு உள்ளே சென்றாள்.



தமிழ் அவன் முதுகில் சாய்ந்துக் கொண்டு அவனுடனான பயணத்தை வெகுவாக ரசித்தாள் அவனிடம் அத்தான் மெதுவா போங்க என்று கூறினாள். அவனிடம் நான் இதுப் போல வண்டியில் போனதே இல்லை அத்தான் இன்னைக்கு உங்கக்கூட போறது அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கு என்று கூறினாள்.


நாளைக்கு என்ன டவுனுக்கு ஸ்பீடா கூட்டிட்டுப் போறீங்களா என்று கேட்டதும் ம்ம் போலாம் தமிழ் என்று கூறினான்.


அவனும் அவள் கூறியதும் மெதுவாக வண்டியைச் செலுத்தினான் அந்த பயணத்தை ரசித்தான். அந்த குட்டிப் பிசாசு தன் வசியக் குரலால் அவனைக் கட்டிப் போட்டிருந்தாள்.


இருவரும் இந்த பயணம் இப்படியே நீளாதா என்று ஏங்கினர். எவ்வளவு மெதுவாக வண்டியை செலுத்தியும் வீடு வந்து விட்டது. வீடு வந்ததும் இறங்கியவள் அவன் வண்டியை நிறுத்தி வருவதற்காக உள்ளே செல்லாமல் வெளியே நின்றாள்.


கதிரின் வண்டியின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர்.வடிவாம்பாள் ஆளம் சுற்றி முத்து வலது காலை எடுத்து வச்சு உள்ளே போடா இதோ வரேன் என்று ஆளத்தைக் கொட்ட வெளியே சென்றாள்.

No comments