மழை- 9:
தன் சாக்கி பேபியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவன் நாளை அவளை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் காற்றில் பறந்து கொண்டிருந்தான்.அவன் கனவில் டூயட் பாடிக்கொண்டிருக்க அறையின் கதவு தட்டப்படவும் வாடா மகேன் கதவு திறந்துதான் இருக்கு என்று கூறினான்.
உள்ளே வந்த மகேன் என்னடா வீரி முகத்துல இவ்ளோ வெளிச்சம் தவ்ஸண்ட் வாட்ஸ் பல்பு போல் இவ்வளவு பிரைட்டா எரியுது என்று வினவவும் எழுந்து வந்தவன் அவனை கட்டி அணைத்து விடுவித்தவன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கால் பெரு விரலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் செயலைக் கண்டு டேய் டேய் வீரி என்னடா பண்ற என்னாச்சுடா இது ஆம்பிள பிள்ளை பண்ற வேலையாடா நீ பண்ணின வேலைக்கு இந்நேரம் தண்ணி வந்துருக்கும் டைல்ஸ் போட்டுருக்கிறதும் தப்பிச்சோம் என்னடா ஆச்சு என்று வினவ நாளைக்கு அத்தை வராங்கடா என்று வெட்கத்துடன் கூற ஹிம்ம் ஆமா அதுக்கென்ன என்று கேட்டவன் ஓ அத்தை பொண்ணுங்க வராங்க என்று தானே எடுத்துக் கூறியவனிடம் ஹிம்ம் என் கன்னிக்குட்டியும் வருது ஜாலி என்று சிறுபிள்ளைப் போல் துள்ளிக் குதிக்க கன்னுக்குட்டியா அது எதுக்குடா வீடு குடிப்போக மாடு தானே கூட்டிட்டுப் போவாங்க
( இது ஒரு நல்ல கேள்வி)
இவங்க புதுசா கன்னுக்குட்டி கூட்டிட்டு வராங்களா.. என்று கேட்கவும் டேய் மரமண்டை மகேன் அந்த கன்னுக்குட்டி இல்லைடா என் கன்னுக்குட்டி டா என்னோட சாக்கிப் பேபி டா என்று கூற ஏது உன் பேபியா இது எப்போ என்னடா சொல்ற அதுவும் எனக்கு தெரியாம என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
(ஹூக்கும் கெடா வெட்டி பூசை போட்டதுக்கப்புறம் வந்து கேளு.. அவன் இருக்கிற வேகத்துக்கு விட்டா இந்நேரம் ரெண்டு பிள்ளை பெத்துருப்பான்)
அது அது டேய் மகேன் நம்ம அத்தை பொண்ணு என்கவும் யாரு செளமியாவா என்று பதட்டமாகக் கேட்டான்.அவன் அப்பொழுதுதான் தான் ஏன் இவ்வளவு பதட்டமாக உணர்கிறோம் என்று உணரவில்லை. இல்ல மகேன் சாஹித்யா டா என்று வெட்கப் பட்டுக் கொண்டே கூறினான்.
எப்படி டா அதுவும் சாஹித்யாவா.. எப்படி..? லவ் பண்றியா டா ..? என்று குழப்பத்துடன் கேட்க ஹிம்ம் ஆமா டா மூணு வருஷமா என்று கூறவும் என்னாது மூணு வருஷமா சொல்லவே இல்லை போடா பேசாதா என்று கோபமாகக் கூறவும் டேய் டேய் மகேன் நான் மட்டும் தான்டா லவ் பண்றேன் அவ இல்லைடா என்று வருத்தமாகக் கூறவும் என்னாது நீ மட்டுமா என்று அதிர்ந்து நோக்கினான்.
நீ தான்டா என்னை என் கன்னுக்குட்டியோட சேர்த்து வைக்கனும் ப்ளீஸ் டா என்று அவனிடம் கெஞ்சவும் டேய் உண்மையா இது லவ் தானா இல்லை சும்மா பிளர்ட்டா என்று அவனை ஆராயும் கண்களும் பார்த்துக் கேட்கவும் டேய் யப்பா சாமி உண்மையா லவ் பண்றேன் டா என் கன்னுக்குட்டி எனக்கு வேணும் நீ என்னடான்னா இப்போ வந்து உன் புலன் விசாரனையைத் தொடங்குற..
இதுல அப்பா அம்மா வேற நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே குடும்பத்து பெண்களைத்தான் பார்த்து முடிவுப் பண்ணனும்னு சொல்றாங்க அவங்கதான் அப்படின்னா நீ ஏதோ காவி வேட்டி கட்டிக்கிட்டு இமயமலை போறவன் போல தாடியை வளர்த்துக்கிட்டு சுத்திட்டு திரியுற நீ இப்படி இருந்தா எனக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான் என்றவாறு தலையில் கைவைத்து அமர்ந்தான்.
அவன் பேசுவது அனைத்தையும் கேட்டவன் சிறிது நேரம் யோசித்து விட்டு எதுவும் பேசாமல் சரி வீரி நான் கொஞ்சம் லேப் வரைக்கும் போயிட்டு வரேன் என்று விட்டு கிளம்ப அதுவரையிலும் அவனை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவன் ஏதாவது சாதகமாக கூறுவான் என்று பார்த்திருக்க அவனோ ஒன்றும் பேசாமல் போனதும் சப்பென்றாகி விட்டது.
இவ்வளவு நேரம் சொன்னேன் எதாவது சொல்லிட்டுப் போக வேண்டியது தானே அழுத்தம் அம்புட்டு அழுத்தம் எருமை என்று திட்டியவன் ஹூக்கும் ஜல்சா பண்ண ஆளே இல்லையாம் ஆனால் மருந்து மட்டும் புதுசு புதுசா ட்ரை பண்ணுவான் என்று புலம்பிக் கொண்டிருந்தவன் எதையோ நினைத்து அம்மாமாமா...என்று அலறி ஐயோ இவன் இப்படியே இருந்துட்டா நானும் காவி வேட்டிக் கட்டிக்கிட்டுத்தான் அலையனுமா கடவுளே காப்பாத்து..என்று வேண்டிக் கொண்டவன் நம்மள கடைசி வரைக்கும் எவனும் கல்யாணம் பண்ணி செஞ்சுரி அடிக்கவிட மாட்டாய்ங்க போலவே..
(கல்யாணமே ஆகலையாம் இதுல செஞ்சுரியைப் பற்றி பேச வந்துட்டான் போடா அங்குட்டு.. கடைசி வரைக்கும் கனவு கண்டுட்டே இரு..)
ஏய் கன்னுக்குட்டி எனக்கு நீ வேணும்டி என்று தன்னவளுடன் பேச (சாரி டா பூரி ச்சீ வீரி அவளுக்கு கேட்காது நெட்வொர்க் பிராப்ளம்) அலைப்பேசி அவனை கலைத்தது. எடுத்துப் பேசியவன் ஒகே ஐ வில் பி தேர் இன் பைவ் மினிட்ஸ் என்று பதிலளித்தவன் தங்கள் மருத்துவமனைக்கு கிளம்பினான்.
கிளம்பி கீழே வரவும் தன் அம்மாவிடம் ம்மா நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன் ஒரு அப்பாய்ண்மண்ட் இருக்கு என்று கூறவும் சரிப்பா பார்த்து பத்திரமா போயிட்டு வாப்பா என்று பல முறை கூறி அவனை அனுப்பி வைத்தார்.
இங்கு மகேன் தன் லேபில் தான் தயாரித்த மருந்தை பரிசோதித்துக் கொண்டிருந்தான். இது போல் புது விதமான மருந்து தயாரித்தால் மனிதர்கள் உடம்பில் பரிசோதிப்பதற்கு முன்பு விலங்குகளுக்கு செலுத்தி அதனை சோதனை செயல்வர் இதில் நான்கு பேஸ்கள் இருக்கும்..
பேஸ் ஜீரோ என்பது தயாரித்த மருந்தை ஏதேனும் ஒரு விலங்குக்கு செலுத்தி பரிசோதிப்பது ஆகும். பேஸ் ஜீரோவில் கூண்டிலிருந்த ஒரு ஆண் குரங்கை தேர்ந்தெடுத்து அதற்கு தான் தயாரித்த மருந்தை உட்செலுத்தி பெண் குரங்கு இருந்த கூண்டில் விடவே அது அதனை பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருக்க போச்சா இதுவும் எங்கு தப்பு நடந்தது என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த கூண்டைப் பார்த்தான்.
அமைதியாக இருந்த ஆண் குரங்கு ஐந்து நிமிடங்கள் கழித்து தன் உடம்பை உதறி சிலிர்த்தவாறு தன் எதிரில் இருந்த பெண் குரங்கை கண்டதும் தாவிச் சென்று தன் இணையுடன் வேகமாக சேர சக்ஸஸ் எஸ் என்று கூப்பாடு போட்டு தன் சந்தோஷத்தை வெளிக்காட்டினான்.
உடனே லேபில் அணியும் உடைகளைக் கலைந்து விட்டு சுத்தமாகி தன் தம்பியிடம் கூற மருத்துவமனைக்கு சென்றான்.. அப்பொழுது தான் ஒரு பேஷண்டை அவன் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூற அவன் அறையில் சென்று அமர்ந்தான்.
பின் பேஷண்டை பார்த்து விட்டு வந்தவனிடம் ஓடிச் சென்று வீரி என்று கட்டி அணைத்தவன் சக்ஸஸ் டா ரிசல்ட் நல்லாவே இருந்தது என்று தன் சந்தோஷத்தை பகிற சூப்பர் டா மகேன் என்று வீர் மகேனை அணைத்துக் கொண்டான்.
அப்போ கண்டிப்பா இன்னைக்கு செம டிரீட் இருக்கு என்று வயிற்றைத் தடவியவாறு கூற அப்பொழுது நர்ஸ் ஒருத்தி வந்து டாக்டர் உங்களை தேடிக்கிட்டு அனிதா டாக்டர் வராங்க என்றதும் தான் தாமதம் ஐயோ இது ஒரு தொல்லை டா விடாது போல என்று வீரிடம் புலம்பிய மகேன் அங்கிருந்த பெர்சனல் அறைக்குள சென்று விட்டான்.
வீர் தன் சூழலும் நாற்காலியில் அமர்ந்தவன் கதவு தட்டப்படவும் எஸ் கமின் என்கவும் உள்ளே வந்தவள் வீரை தவிர மற்ற இடங்களை அனைத்தையும் பார்த்தாள்.. ஹலோ எக்ஸ்கியூஸ் மீ டாக்டர் அனிதா உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு என்ன பார்க்க வந்துருக்கீங்க என்று அழுத்தமாக வினவ அது அது மகேந்திரன் டாக்டர் இங்கே வந்ததா சொன்னாங்க என்று பதிலளித்தாலும் அவள் கண்களோ மகேனை சுற்றும் முற்றும் சல்லடைப் போட்டு சளித்துக் கொண்டிருந்தது.
இங்க யாரும் இல்லை டாக்டர் அனிதா அப்படி பார்த்தே ஆக வேண்டுமென்றால் அவருடைய கேபினில் இருப்பார் என்று கூறியவன் அப்படி என்ன விஷயமாக மகேனை பார்க்கனும் என்று கூர்மையாக அவள் கண்களைப் பார்த்தவாறு வினவ அது அது வந்து டாக்டர் என்று திக்கித் திணற லுக் மிஸ் அனிதா இது ஹாஸ்பிட்டல் இங்க நீங்க டாக்டர் போய் உங்க வேலையைப் பாருங்க
உங்களுக்காக பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க நீங்க என்னடான்னா இங்க பொறுப்பே இல்லாம சுத்திட்டு இருக்கீங்க போங்க போய் வேலையைப் பாருங்க கெட் லாஸ்ட் என்று கத்த உள்ளுக்குள் கோபமாக இருந்தாலும் இருடா உனக்கு இருக்கு என்று மனதுள் கருவியவள் வெளியே சாரி டாகடர் என்று கூறியவள் வெளியே சென்று விட்டாள்.
டேய் மகேன் வாடா போயிட்டா என்று கூறவும் அவன் வெளியே வந்தான். ஏன்டா இவளுக்கெல்லாம் பயந்து ஒளியிர இதுல இவ என்னை பண்றான்னு பார்க்க ஒரு நர்ஸ வேற வச்சிருக்க.. என்று பொரிந்துதள்ள டேய் வீரி இவளுக்கு யாரு பயந்தா இவள் வர வர ஓவரா பண்றாடா அதான் கோபம் வந்து கை நீட்டிடுவேனோன்னு பயம் அதான் இப்படி என்கவும் சரி சரி கிளம்பலாம் என்று இருவரும் தங்களின் வீட்டிற்கு கிளம்பினர்.
வீட்டுக்கு வந்ததும் தன் அம்மாவிடம் மருந்து ட்ரையில் சக்ஸஸ் ஆனதைக் கூற அவர் தன் மகனை வாழ்த்தி ஸ்வீட்ஸ் செய்ய சமயலறைக்குள் சென்று விட்டார்.
குரங்குக்கு உதவுறவன் தான் கூடப் பிறந்தவனுக்கு உதவ மாட்டானா இது யாரோட மைண்ட் வாய்ஸாக இருக்கும் வேற யாரு நம்ம வீரி தான்.. ஒன்னுமே தெரியாத புள்ளை பூச்சி போல் வேண்டுமென்றே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தான்.
தன் மகன் கண்டுபிடித்த மருந்து முதல் கட்ட பரிசோதனையில் வெற்றிப் பெற்ற செய்தி கேட்டதும் தலைகால் புரியவில்லை. அவனின் எத்தனை நாள் உழைப்பு அது.. அந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஸ்வீட்ஸ் செய்து எடுத்து வந்தவர் மகேனுக்கு ஊட்டி விட்டு வீருக்கும் ஊட்டி விட்டார்.
வீரோ தன் மனதுக்குள் சக்ஸஸ் ஆயிடுச்சிங்குற குஷியில நம்ம விஷயத்தை மறந்துடுவானோ ஐயோ நான் எவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் இவன் என்னடான்னா லட்டு ஜாங்கிரியை இதுவரை பார்க்காதது போல இப்படி சாப்பிடுறான்..ஏன்டா என் வயித்தெரிச்சலை வாங்கிக் கொட்டிக்கிற என்று உள்ளுக்குள் புலம்ப அதுவரையும் அவனை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தவன் அவனிடம் என்னடா வீரி லட்டு சாப்பிடல சாப்பிடு செமையா இருக்கு என்று எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.
போடா கிராதகா என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவன்னு பார்த்தா இப்படி உட்கார்ந்து தின்னுட்டு இருக்கான் ச்சே இந்த அமெரிக்கன் அர்னால்டை எப்படியாவது கவுக்கனுமே என்று அவனை பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..
நிமிர்ந்து பார்த்த மகேன் அவன் பார்வையை உணர்ந்தாலும் வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதது போல என்னடா வீரி எனி ப்ராபளம் என் லட்டுன்னா அப்படி சாப்பிடுவ இப்போ ஏன் என்னோட மூஞ்ச மூஞ்ச பார்க்கிற வயிருல எதாவது பிரச்சனையா இல்லை கேஸ் டிரபுளா என்று சிரித்துக் கொண்டே அவன் மானத்தை வாங்கினான்.
மகேன் கூறியதைக் கேட்ட ஐஸ்வர்யா அடக்க முடியாமல் சிரிக்க வீர் இருவரையும் முறைத்தான். வீர் முறைப்பதைக் கண்ட ஐஸ்வர்யா இதுக்குத்தான் நான் முன்னாடியே சொன்னேன் பூரி சாப்பிடாதன்னு கேட்டியா இப்போ உன் வயிரும் பூரிப் போல உப்பிட்டு நிக்குது என்று அவளும் ஓட்ட வீர் காண்டாஸ்ட்டான்.
ஓய் என்னடி உலகழகி வாய் ஓவரா இருக்கு இரு என் மச்சான் கிட்ட சொல்லி உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ள வைக்க சொல்றேன் என்றதும் ஹூக்கும் நீ ரொம்ப லேட்டு அதெல்லாம் உன் மச்சான எப்போவோ அரெஸ்ட் பண்ணி என் கைக்குள்ள வச்சிக்கிட்டேன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது பூரி ச்சீ வீரி என்று அவன் தலையைக் கலைத்து விட்டு தன் அறைக்கு ஓடி விட்டாள்.
ஏய் நில்லுடி ஓடாத என்று துரத்த ஏன் ஓடி வர முடியலையா இதுக்கு தான் அதிகமா சாப்பிடக் கூடாது என்றவாறு தன் அறை கதவை சாத்திவிட்டாள். ஓய் வெளிய வாடி என்று கத்த முடியாதுடா என்று உள்ளேயிருந்து பதில் கொடுத்தாள்.
டேய் விடுறா வா வந்து சாப்பிடு என்று மகேன் அழைக்க ஒருத்தி பேசிப் பேசியே சாவடிக்கிறா ஒருத்தன் பேசாம சாவடிக்கிறான் ஐய்யயோ இதுங்க கூட எப்படி என் காலத்தை ஓட்டுவேன் கடவுளே என்று புலம்பியவாறு சோஃபாவில் அமர்ந்தான்.
வீரின் அருகில் அமர்ந்த ஜெயா நாளைக்கு ஊருல இருந்து எல்லாரும் வராங்கடா எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா எனக்கு பேசுறதுக்கு ஆள் கிடைச்சிடுவாங்க தனியா இருக்குற எவ்வளவு போர் தெரியுமா என்று கூறியவர் தன் மகன்களை நோக்கி ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோங்கடான்னு சொன்னா எவனும் என் பேச்சையே கேட்க மாட்டுறீங்க..
காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணினோமா பிள்ளைக் குட்டியைப் பெத்து போட்டோமான்னு இல்லாமா எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்கிறதா பிளான் பண்ணிருக்கீங்க எனக்கும் ஆசை இருக்காதாடா என்று வருத்தமாகக் கேட்கவும் இப்போ கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம் என்று மகேன் கேட்டதும் இங்கு ஒருவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுவது போல் இருந்தது.
டேய் எருமை மாடு என் ஆசையில் மண்ணாளி போடவே வரிஞ்சிக் கட்டிக்கிட்டு வருவியாடா டேய் வீரி இவன் இருக்குற வரைக்கும் உனக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான் என்று மனதிற்குள் புலம்பியவன் தன் அன்னையிடம் யம்மா அவனுக்கு கல்யாணம் வேண்டாம்னா விடு ம்மா நான் பண்ணிக்க ரெடி என்றதும் ஆமாம்மா பொண்ணு கூட பார்த்து வச்சிட்டான் என்று மகேன் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.
அதெப்படிடா கண்ணா பெரியவன் இருக்கிறப்ப உனக்கு பண்ண முடியும் என்கவும் எம்மோவ் உனக்கு ரெட்டைப் பிள்ளை பிறந்துச்சு நியாகம் இருக்கா ஜஞ்சு செகண்ட் முன்னாடி பிறந்தா அவன் பெரியவனா இதென்ன போங்கு போங்க போங்க நான் இந்த ஆட்டத்துக்கே வரலை என்று தன் கைக்கால்களை உதறினான்.
அப்பொழுது தான் தன் ஆஃபிசில் இருந்து வந்த விஜயன் இங்க என்ன இவ்வளவு ரணகளமா இருக்கு ஏன் வீர் என்று சு என்கவும் அவனை முந்திக் கொண்டு ஹிம்ம் உங்க பிள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்கனுமாம் என்று கிண்டலாகக் கூறினார்.
அட என்னடா நீ என் மகனா இருந்துக்கிட்டு பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க இந்நேரம் பொண்ண பார்த்தோமா கல்யாணம் பண்ணினோமான்னு இல்லாம நீங்க ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க டா என்று கூற யாரு நான் ஸ்லோவா நானெல்லாம் பொண்ணு பார்த்துட்டேன் இவன் தான் கல்யாணம் வேணாம் எனக்கு காவி வேட்டி தான் வேணும்னு அடம் பிடிக்கிறான் என்று உளறிவிட்டான்.
என்னது பொண்ணு பார்த்துட்டியா என்று ஜெயாவும் விஜயனும் அதிர்ந்து கேட்க அப்பொழுதுதான் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தான். ஐயோ போச்சு இப்படி சொதப்பிட்டியே வீர் என்று மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.
சரி சமாளிப்போம் என்று தனக்கு கூறிக் கொண்டவன் ஹூக்கும் ஏன் ம்மா நீ வேற எனக்கு யாரு ம்மா மாட்டுவா இப்போல்லாம் பொண்ணுங்க உஷார் ஆயிட்டாங்க அது ஏதோ ஃப்லோல வந்துச்சு நீ வேற என்று சலிப்புடன் கூற என்னடா கண்ணா இப்படி சொல்லிட்ட உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு தர எத்தனை பேரு ரெடியா இருக்காங்க தெரியுமா என்று பெருமையாக விஜயன் கூற என் பிள்ளைங்க அழகென்ன படிப்பென்ன இப்போ நீங்க ஹிம்ம்னு சொல்லுங்க உடனே உங்களுக்குப் பிடிச்சது போல பொண்ணு நான் பார்க்கிறேன் என்று கூற ஹிம்ம் சரி சரி பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறி மகேனை பார்த்துக் கண்ணடித்தான்.
என்ன வீரி இன்னைக்கு உன் முகத்துல தனி தேஜஸ் தெரியுது என்ன காரணம் அப்படியே ஆளை அசரடிக்கிற அழகுல கிளம்பி இருக்கியே என்ன விசேஷம் கொஞ்சம் என்னன்னு சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்குவோம் இல்லையா..
தன் புடவை முந்தானையை சரி செய்து கொண்டே வந்த ஐஸ்வர்யா தன் தமையனின் விஷ்வரூபம் கண்டு இவன் அவ்ளோ நல்லவன் இல்லையே என்று நினைத்துக் கொண்டே அவனிடம் கேட்டாள்.
அட உலகழகி ஐஸ்வர்யாவா நீங்க.. இந்த புடவையில பார்க்க உள்ளூர் கிழவி போலவே இருக்கீங்களே என்ன ஒரு அதிசயம் இந்த அதிசயத்தை பார்க்க கண் கோடி வேண்டுமே வாங்க வாங்க வந்து இந்த கிழவியை பார்த்துட்டு போங்க என்று அவளை கிண்டல் செய்ய இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் போடா வீங்கி போன பூரி ஆளையும் தலையும் பாரு எண்ணையில் பொரிச்செடுத்த பூரிப் போல இருக்க.. நீ என்னை சொல்றியாடா என்று அவனை அடிக்க துரத்த அப்பொழுதுதான் தன் அறையில் இருந்து வெளியே வந்த மகேனை கண்டவன் சாமி மகேந்திரானந்தா என்னை இந்த பேயிடமிருந்து காப்பாற்றும் காப்பாற்றி தொலையும் என்று அவனை சுற்றி ஓடிக்கொண்டே கத்தினான்.
டேய் காலையிலே உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா என்று சிரித்தவன்
அவ உன்னை துரத்துராளா இல்லை நீ அவளை துரத்துரியா கொஞ்சம் ரெண்டுபேரும் என்னை சுத்துறத நிறுத்துங்கடா உங்க சண்டையில என்னை நடுவுல உருட்டுறீங்க என்று தன்னை மையமாக வைத்து சுற்றி ஓடிக்கொண்டிருந்த தன் தம்பி தங்கையை பார்த்துக் கூறினான்.
அவர்களிடம் கத்தி பார்த்தான் கதறி பார்த்தான் இருவரும் கேட்கும் நிலைமையில் இல்லை ஐயோ இதுங்க நடுவுல மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே என்று தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டான்.
அவன் அமர்ந்ததும் இரண்டு வானரமும் ஒன்றாக சேர்ந்து கொண்டு அவன் ஜெல் தடவி அடக்கி வைத்திருந்த முடியை கலைத்து விளையாடினர்.
விஜயனும் ஜெயாவும் தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தவர்கள் மகேன் இருந்த கோலத்தைக் கண்டு என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் பிள்ளைய என்று ஜெயா கேட்டுக் கொண்டே வந்தவர் இருவரிடமும் ரெண்டு பேரும் சேர்ந்து பிள்ளையை என்ன பண்ணி வச்சிருக்கீங்க நகருங்க
மகேன் எழுந்து பிள்ளையா ம்மா பெத்து வச்சிருக்கீங்க ரெண்டு வானரமும் என் முடியை என்ன பண்ணி வச்சிருக்குங்க பாருங்க என்று தன் தலையை காட்ட என் அழகு ராஜாவை என்ன பண்ணி வச்சிருக்கீங்க என்று போலியாக கடிந்தவாறு மகேனின் தலைமுடியைக் கோதிக் கொடுத்தார்.
உங்களுக்கென்ன இன்னும் சின்ன பிள்ளைன்னு நினைப்பா நேரமாச்சு அவங்க எல்லாம் வந்துருவாங்க சீக்கிரம் கிளம்புங்க என்கவும் அவங்க இங்க வராங்களா ம்மா இல்ல அப்படியே நேரா அங்கே போயிடுவாங்களா என்று வீர் கேட்க
ஆமா கண்ணா இங்க வந்துட்டு தான் அங்கே போவாங்க.. நாம எல்லாரும் சேர்ந்து தான் அங்கு போறோம்.
ஏன்மா திடீர்னு பிளான் மாத்துனீங்க என்று மகேன் கேட்க
"சாணு தான் போன் பண்ணி நாங்க எல்லாம் அங்கேயே வரோம் அத்தை அப்புறம் ஒன்றாக சேர்ந்து போகலாம் என்று சொன்னான்" என்று தன்னிடம் சாணக்கியன் கூறியதை அனைவரிடமும் கூறினார்.
மகேனிடம் திரும்பி கண்ணா நீ போய் முகத்தை திருத்திட்டு வாப்பா என்று அனுப்பி வைத்தவர் மற்ற இருவர் தலையிலும் கொட்டி என் பிள்ளையை ரெண்டு பேரும் என்ன பண்ணி வச்சுறுக்கீங்க என்று செல்லமாக வைதவர் வாசலை ஆசையாக பார்த்து கொண்டிருந்தார்.
மழை பொழியும் ...
No comments: