மாயம் செய்தாயோ மஞ்சணத்தி
மாயம் - 1:
டேய் தேவா.. மாமா பொண்ணுன்னா என்ன வேணும்னாலும் பண்ணலாமா..? அந்த எருமை அப்படி உரசுது..
இந்த பக்கியும் அவளைப் பற்றி தெரியாமல் பேபி பேபின்னு சொல்றான்..
அது பேபியாடா தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கா.. அவளைப் போய் பேபின்னு கூப்பிடுறான்.. ஒழுங்கா அவன்கிட்ட சொல்லி வை இல்லனா கடிச்சி வச்சிருவேன்…
இவன் ஒன்னுமே சொல்லாம இருக்கிறதால வர வர அவ இன்னும் நெருங்குறா.. சண்டாலி எப்பொழுதும் எனக்கு வில்லியா வரதே வேலையா போச்சி.. என்று உக்கிரமாகப் புலம்பிக் கொண்டிருக்க
அவள் பக்கத்தில் இருந்தவனோ அவள் பேசும் போது கூடவே பேசும் அவளது கண்களை ரசித்துக் கொண்டிருந்தான்.
டேய் என்னை சைட் அடிக்குறது விட்டுட்டு ஏதாவது வழி சொல்லு.. சும்மா மூஞ்ச மூஞ்ச பார்த்து பல்லை காட்டுன.. இருக்குற கோவத்துல என்ன பண்ணுவேணு எனக்கே தெரியாது பாத்துக்கோ..
இப்போவே சொல்லிட்டேன்..அப்புறம் நான் ஏதாவது பண்ண போய் ஏடாகூடாம ஆயுடுச்சுன்னா அப்பறம் என்னை கேட்க கூடாது..என்று அவனுக்கு எச்சரிக்கை போல் சொல்ல..
ஐயோ இவ செஞ்சாலும் செய்வா என்று மனதிற்குள் அலரியவன் அவளிடம் பொறுமையாக ரதி விடுடி..
அதான் நாம இருக்கோம்ல..
எங்க நீ தான் என் மூஞ்ச பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியே.. என்று கத்த.. அதற்கு சிரித்தவன் இந்த ஜென்மத்துல நீயும் நானும் சேரனும்னு விதியிருந்தா சேருவோம்..
இதுல நீ கவலைப்பட ஒன்னுமேயில்லை என்று தன் இணைக்கு ஆறுதல் கூறினான்.
அவன் கூறுவதைக் கேட்டவள் தேவா.. விதி இருந்தா என்ன..? இல்லைன்னா என்ன?? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ எனக்கு மட்டும்தான்.. நான் உனக்குத்தான்...
அதை யாராலும் மாற்ற முடியாது.. போயும் போயும் இவளுக்கு உன்னை விட்டுக் கொடுக்கவா அவ்வளவு வாதாடி நாம பூமிக்கு வந்துருக்கோம்..
போன ஜென்மத்தில் தான் நாம சேர முடியாம.. நாம் நினைச்ச வாழ்க்கை வாழ முடியாமப் போச்சு..
ஆனால் இப்போ கடவுளே நமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு... இதை எப்படி விட முடியும்
இந்த ஜென்மம் இல்லை.. இனி வரப்போகிற ஜென்மம் அனைத்திலும் நம்மை யாராலும் பிரிக்கவே முடியாது தேவா என்று உணர்ச்சிகரமாகக் கூறியவள் தானாகவே முதன்முறையாக தன் காதல் தலைவனின் பருத்த உதட்டைத் தன் செவ்விதழ் கொண்டு மூடினாள்.
அவளிடம் சும்மாவே மயங்கியிருப்பவன் அவள் உதட்டைப் பதித்ததும் அவளைத் தனக்குள் புதைத்துக்கொள்பவன் போல் தன்னுடன் இறுக்கிக் கொண்டு தாங்கள் வந்த வேலை மறந்து உலகம் மறந்து நின்றவர்களின் பக்கத்தில் இரண்டு கருமேகங்கள் மோதியதில் உண்டான பெரிய இடி சத்தம் அவர்களை கலைத்தது.
அச்சத்தத்தில் திடுக்கிட்டு அவனிடம் இருந்து நகரப் பார்த்தவளைத் தன்னுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டவன் இப்போ எதுக்குப் போற என்று இன்னும் இறுக்கிக் கொண்டவன்…
மேகம் மோதிடுச்சு அதான்டா சத்தம் என்று அவள் முதுகை நீவி விட்டவாறு ஆறுதல் அளித்தவன் சரி வாடா விஷ்ணு என்ன பண்றான்னு பார்த்துட்டு வருவோம் என்று மேகங்களைக் கிழித்துக் கொண்டு பறந்து கீழே வந்தனர்.
தன் ரதியின் வலது கரத்தைத் தன் இடது கரத்தால் பற்றியவன் கீழ் நோக்கிப் பறக்க ரதி தன் தேவனுடன் பயணிக்கும் நேரத்தை ரசித்தவாறு தங்களை கடந்து போகும் மேகங்களை அதிசயமாகப் பார்த்தவாறு கீழே வந்தனர்.
சடசடவென்று மழை பொழிய சாலை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி போயிருந்தது.. அந்த நேஷ்னல் ஹைவேயில் இருந்த நட்சத்திர விடுதியில் ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள அப்பொழுதுதான் தன் காரியதரிசியுடன் தன் பிளாக் ஆடியில் வந்து இறங்கினான் விஷ்ணுதேவன்.
அவனுக்கு பின்னால் தன் பென்ஸ் காரில் வந்து இறங்கினாள் வீணா ( இது ஒரு வீணாப் போனது)
விஷ்ணு பொறுபேற்று நடத்தும் கம்பெனியில் தன் தந்தையின் இருபத்தைந்து சதவீத ஷேர் இருப்பதால் இது தான் சாக்கென்று பசைப்போல் வந்து ஒட்டிக்கொள்ளும்.
மீட்டிங் நடக்கும் ஹாலிற்குள் வந்ததும் விஷ்ணு தன் கைக்கடிகாரத்தை சரி செய்தவாறு தன் கம்பீரக்குரலால் பிரகதி என்கவும் அப்பொழுதுதான் அனைத்து பைல்களும் சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பிரகதி என்கவும் திடுக்கிட்டு தன் கைகளில் இருந்த பைல்கள் அனைத்தையும் கீழே தவர விட்டிருந்தாள்.
அவள் தவர விட்டதும் ப்ச் என்ற சப்தத்துடன் எப்பொழுதும் இந்த பொண்ணுக்கு இதே வேலை தான் நான் இப்போ என்ன சொல்லிட்டேன் பேர் தானே சொன்னேன்..
இதுக்கு எதுக்கு பயப்படனும் என்று தனக்குள் நினைத்தவாறு அவளை நெருங்க அதுவரையில் அவர்களின் நடவடிக்கையை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ரதியும் தேவனும் ஒருவரை ஒருவர் பார்த்து ஐய் விஷ்ணு போறான் போடா போடா..
போய் பேசு அவக்கிட்ட போ போ என்று தன் மனதுக்குள் ரதி ஜெபம் போல் சொல்லிக்கொண்டே இருக்க அதனை வீணாக்குவது போல் அந்த வீணாப்போன வீணா வந்தாள்..
ஒரு பைல் கூட உன்னால ஒழுங்காப் பிடிக்க முடியாதா என்று பிரகதியை சாடியவள் விஷு பேபி ஏன் இந்த மாதிரி ஆளெல்லாம் வேலைக்கு சேத்துக்கிற என்று அவனிடம் எகிறினாள்.
ஒரு பைல் கீழே விழுந்ததுக்கு இத்தனை அலப்பறை செய்யும் அவளைப் பார்த்து காண்டானவன் தட்ஸ் நன் ஆப் யூர் பிஸ்னஸ் வீணா..
யாரை வேலைக்கு வைக்கனும் என்று நான் தான் டிசைட் பண்ணனும் இதுல நீ இண்டர் பியர் ஆகாதன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது என்று அழுத்தமாக வினவ ஒரு வேலைக்காரி முன்பு தன்னை உதாசினப் படுத்துவதைத் தாங்க முடியாமல் பிரகதியை முறைத்து விட்டு நீயே இந்த டீலிங் முடிச்சிடு நான் போறேன் என்று வெளியே சென்று விட்டாள்.
ஹேய் அவனை விட்டே உன்னை இந்த வேளையில் இருந்து தூக்க வைக்கிறேன் பாரு டி..
உன் மூஞ்சை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.. சீக்கிரம் உன்னை இங்கிருந்து துரத்தனும்..
டேய் விஷ்ணு ஒரு வேலைக்காரி முன்னாடி என்னை அசிங்க படுத்துற.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுக்கு தான்..
உன்னை கல்யாணம் பண்ணிட்டா இந்த சொத்து எல்லாம் எனக்கு தான்..
அப்பறம் இருக்கு என் ஆட்டம்.. என்று பகல் கனவு கண்டு கொண்டே சென்றாள்..
நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன??
(ஹுக்கும் போய் தொலை.. நீ இருந்தாலும் ஒன்னு இல்லனாலும் ஒன்னு.. என்னமோ நீ தான் இங்கே எல்லாத்தையும் தூக்கி நிறுத்துற மாதிரி பீலாக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…)
வீணா தன்னை திட்டியதில் கண்கள் கலங்கி நின்றிருந்தவள் அவள் சென்றதும் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
பிரகதி தன் வேலையைப் பார்க்கவும் விஷ்ணு தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன் ஏன் இந்த வீணா எப்பொழுது பார்த்தாலும் இந்தப் பெண்ணை திட்டிக்கிட்டே இருக்கா… என்று அவன் மனதில் எப்பொழுதும் எழும் கேள்வி இன்றும் எழுந்தது..
இவளை வேலைக்கு வைத்தது கூட பிடிக்கலைன்னு அவளுடைய ஆக்டிவிட்டிஸ்ல இருந்தே நல்லா தெரியுது..
எதுக்கு இந்த பொண்ணு மேல இவ்ளோ வன்மம்..
எதுக்கு தான் வீணா இப்படி பண்றாளோ என்று தன் மனதுக்குள் நினைத்தவாறு இங்கும் அங்கும் தலையை ஆட்டிக் கொண்டவனை சார் என்று அழைத்தாள் பிரகதி
சொல்லுங்க பிரகதி என்கவும் அவங்க வந்துட்டாங்கன்னு கால் வந்திச்சு சார் என்று சில பைல்களை அவன் முன்னிருந்த மேஜையில் வைத்தவள் வெளியே சென்று அவர்களை அழைத்து வந்தாள்.
பின் சிறப்பாகவே அனைத்தும் முடிவுரவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்று இரவு பார்ட்டி இருப்பதாகக் கூறி விஷ்ணுவிடம் கைக்குளுக்கி அழைத்தவர்கள் பிரகதியிடம் வரவே என்ன நினைத்தாளோ டப்பென்று இருக்கை கூப்பி அவர்களிடம் நன்றி கூற அவர்களும் இவளிடமும் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கிளம்பினர்.
அவள் அவர்கள் அவளை நெருங்கும் முன்பே எச்சரிக்கையாக கை கூப்பியதும் எவ்வளவு முயன்றும் வந்த சிரிப்பை விஷ்ணுவால் அடக்க முடியவில்லை.
இரண்டு வாரத்திற்கு முன்பு இதே போல் ஜெர்மனியில் இருந்து பிஸ்னஸ் விஷயமாகப் பேச வந்த நபர்களில் ஒருவன் கைக்கொடுக்கிறேன் என்கிற பெயரில் அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து வருட அதைக் கண்டு வெகுண்டெழுந்தவன் அவர்களின் கம்பெனியுடனான டையப்பை வேண்டாம் என்று கூறி கேன்சல் செய்தவன் அவன் கையை உடைக்கவும் தவறவில்லை.
அதை நினைத்து பயந்து தான் பிரகதி கைக்கூப்பவும் அவனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவன் சிரிப்பதைக் கண்டவள் அவன் எதற்கு சிரிக்கிறான் என்று தெரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்த்து சார் ஸ்டீல் பேக்டரிக்குப் போகனும்னு சொன்னீங்க என்று அடுத்தப் பணியைக் கூறவும் ஓ எஸ் போகலாம் என்று விடுதியை விட்டுக் கிளம்பினார்கள்.
இங்கு இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரதி தேவனிடம் ஏன் தேவா இவன் மண்ணு மாதிரி இருக்கான்..
இவனுக்கு எப்போ பீலிங்ஸ் வந்து எப்போ இவங்க இரண்டு பேரும் சேருவது..
ஐயோ எனக்கு இப்போவே கண்ணைக் கட்டுதே.. இதுல நடுவுல நடுவுல இந்த வீணாப் போறவ வேற வந்து குட்டையைக் குழப்புறா என்று புலம்ப
ரதிச்செல்லம் குழம்புன குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்.. வெயிட் பண்ணு மீன் மாட்டும் என்று கூற போடா இப்படி தான் சொல்ற அவ என்னனா வேலையிலேயே கண்ணா இருக்கா..
இவன் என்னடான்னா ஒரு அழகான பொண்ணு பக்கத்தில இருந்தும் கண்டுக்க மாட்டுறான்…
ஒரு காவி வேட்டி எடுத்துக் கட்டிக்க சொல்லுடா என்று கடுப்பில் கத்த தேவனோ மனதை மயக்கும் கண்ணன் போல் சிரித்துக் கொண்டிருந்தான்.
சிரிக்காதடா என்று இவள் எகிற கூடிய சீக்கிரமே நீ நினைப்பது நடக்கும் ரதிக்குட்டி..
இப்போ வா நாம என்ஜாய் பண்ணலாம் அவளை தன் கைகளில் அள்ளியவன் வானத்தை நோக்கிப் பறந்து சென்றான்..
டேய் தேவா முன்னாடி எல்லாம் என்னை தூக்க சொல்லுவேன்.. அப்போலாம் நான் வெய்ட்ன்னு சொல்லுவ இப்போ மட்டும் நான் வெய்ட்டா இல்லையா..
ஹே ரதிம்மா.. அது அப்போ நமக்கு கல்யாணம் நடக்கலை..
அதான் உன்னை தொட தயக்கம்.. ஆனால் அதற்குள் என்னென்னமோ நடந்து போச்சு..
ஆனால் இப்போ அப்படி இல்லையே.. என்று அவள் இடையில் அழுத்தம் கொடுக்க ச்சீ நீ நாட்டி பாய் என்று அவள் கழுத்தை கட்டி கொண்டாள்..
அவர்கள் வாழ்வில் அப்படி என்ன நடந்திருக்கும்..
மாயங்கள் தொடரும்...
No comments: