மாயம்-2:
டேய் விடுங்கடா எதுக்குடா இப்படி இழுத்துட்டு வரீங்க அதான் செத்துட்டேன்ல வான்னா வரப் போறேன் எதுக்கு இழுக்குறீங்க என் மேல கையை வச்சீங்க என்ன நடக்குமென்றே தெரியாது என்று திட்டியவாறே வந்தாள்.
அவளை அழைத்து வந்த நால்வருக்கும் இந்தப் பொண்ணு என்ன இப்படி தொணத்தொணன்னு பேசிக்கிட்டே இருக்கு என்று புலம்பியவாறு அவளை அங்கு இருந்த ஒரு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றவர்களைப் பார்த்து மூஞ்சியப் பாரு எரும மாடுங்க இதுல மேல இரண்டு கொம்பு வேற என்று உரக்க கத்தியவாறு யோவ் யாருடா அது என்னை இங்கு அழைச்சிட்டு வர சொன்னது எவன்டா அவன் என்று கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது தூக்க முடியாமல் ஒரு பெரிய புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அப்புத்தகத்தை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டுப் இவளைக் கண்டுக் கொள்ளாமல் போக நான் இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன் கண்டுக்காம போனா என்னடா அர்த்தம் யாருமே இங்க இல்லையா என்று எகிறிக்கொண்டிருக்க யாரோ வரும் அரவம் கேட்டது.
அங்கு வந்தவர்களைக் கண்டு எரும மாட்டு மேல் ஏறி வந்து உங்க கயிறு வச்சு என்ன இழுத்துட்டு வந்தா மட்டும் போதாது நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன நீங்க இப்போதான் ஆடி அசைஞ்சு வரீங்க என்று அதட்டினாள்.
ஐயோ ஏன் மா இப்படி எல்லாம பேசுகிறாய் என்ன நடந்தது அவர் யாரென்று தெரியாமல் பேசுகிறாய் என்று அங்கு வந்தவர்களில் ஒருவர் அவள் அருகே வந்து பேச எனக்கு எப்படி தெரியும் நீங்க யாருன்னு நான் என்ன அடிக்கடி வந்து போயிட்டு இருக்கிற மாதிரி சொல்றீங்க எங்க பூமியில் அரெஸ்ட் பண்ண வந்தா கூட பெண் போலீஸ் வருவாங்க
ஆனால் இங்க நாலு தடிமாடு பசங்கள வச்சிக்கிட்டு ஒரு பேசிக் மேனர்ஸ் கூட இல்லை அதுவும் இழுத்துட்டு வராங்க இடியட்ஸ் என்று எகிற யம்மா யம்மா கத்தாதமா என்று அவளை அடக்கப் பார்த்தார்.
யோவ் நீ யாரு உன் பேரு என்ன வந்ததுல இருந்து என்னை ஆப் பண்றதுலயே இருக்க என்று கேட்க நான் சித்திரகுப்தன் அவர் எமதர்மர் என்று கூற நீ தள்ளு என்று அவரைத் தள்ளிவிட்டு ஹலோ மிஸ்டர் எமன் நீங்க என்ன வேலை செஞ்சிருக்கீங்க தெரியுமா என்று ஆக்ரோஷமாக வினவ வா ம்மா அங்கு போய் பேசலாம் என்று அவளை அழைத்துச் சென்றார்.
ஐயோ இப்போவே கண்ணை கட்டுதே என்று தன்னுள் புலம்பியது வேறு யாரும் இல்லை சித்திரகுப்தன் மைண்ட் வாய்ஸ் தான்..
எமதர்மர் தன ஆசனத்தில் அமர்ந்தவர் இப்பொழுது சொல் பெண்ணே உன் பிரச்சனை என்னவென்று கூறு
என்னை எதுக்கு கொன்னீங்க நான் எவ்வளவு ஆசையுடன் இருந்தேன் தெரியுமா என் தேவன் நான் இல்லாம எப்படி இருப்பான் அவன் எனக்காக ஏங்கிப் போயிடுவானே என்று அழ ஆரம்பித்தவளை ரதிக்குட்டி என்ற குரல் அசைத்தது.
ரதிக்குட்டி என்று அவன் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள் தேவா தேவா என்று சுற்றும் முற்றும் தேடினாள். அங்கு இவளை அழைத்து வந்தது போலவே நால்வர் தேவனை அழைத்து வர அவனிடம் பாய்ந்து ஓடினாள்.
அவள் அருகே வரவும் அந்த நால்வரும் தேவனை விட பாய்ந்து அவனைக் கட்டிக்கொள்ள அவனும் அணைத்துக் கொண்டான்..பின் இவர்கள் இருவரையும் எமதர்மர் முன்பு நிற்க வைக்கப்பட்டனர்.
மிஸ்டர் எமன் என்னை தான் கொன்னுட்டீங்கன்னு நினைச்சேன் இப்போ என் தேவனையும் கொன்னுட்டீங்க ஏன் இதெல்லாம் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லையே எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் போச்சு என்று அழுதுக் கொண்டே கேட்க அது உங்கள் இருவரின் விதி.
இதில் நான் செய்ய எதுவும் இல்லை உங்களின் விதிப்படி இந்த நேரம் உங்கள் உயிர் பிரிய வேண்டும் என்பது விதி என் வேலையை தான் நான் செய்தேன் என்று கையை விரிக்க மிஸ்டர் எமன் நான் உங்க மேலிடத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்க ரதி விடுடா என்று தேவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அவர்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று தன்னிலையில் நின்றாள்.
அதையெல்லாம் நினைத்து சிரித்த தேவனை கண்டு என்ன தேவா எதுக்கு சிரிக்குற என்று கேட்க நீ மிஸ்டர் எமனை படுத்தியப் பாட்டை இப்போ நினைச்சாலும் சிரிப்பா இருக்கு டி ரதிக்குட்டி அவங்க உன் தொல்லை தாங்க முடியலைன்னு தான் உன்னை எப்படியாவது அங்கிருந்து துரத்தனும்னு உன்னை இங்க அனுப்பி வச்சுட்டாங்க என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.
ஏய் ரொம்ப சிரிக்காதடா அவங்ககிட்ட கேட்டா விதி சதின்னு கதை விட்டுட்டு இருக்காங்க அதான் கொஞ்சம் கோபம் வந்துடுச்சு என்கவும் அவ்வா அது கொஞ்சம் கோபமா டி அங்கயிருந்தவங்க எல்லாரும் உனக்கு பயிந்ததை நான் கண் கூடா பார்த்தேன் டி அவங்க கண்ணுல பேய் பயம் பார்த்தேன் டி என்று சிரித்தான்.
நம்ம இப்போ பேயா என்று சோகமாக வினவ நீ என் தேவதை ரதிம்மா என்கவும் அவனை அணைத்து முத்தம் வைத்தவள் இதுக் கூட நல்லாத்தான் இருக்கு தேவா என்கவும் எது இப்படி மரத்துல தலை கீழ தொங்குறதா என்று சிரிப்புடன் வினவ ம்ம் ஆமா எந்த ஒரு டென்ஷனும் இல்லாம ஜாலியா தொங்கிக்கிட்டு உன் கூட இருக்குறதே தனி சுகம் தான்.
அதுவும் நாம யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டோம்ல இன்னைக்கு அவனுக்கு டிரில் வாங்குன மாதிரி நாம மட்டும் ஜாலியா இருக்கலாம்..
ஆனால் இந்த விஷ்ணுவையும் பிரகதியையும் நினைச்சா தான் பக்குன்னு இருக்கு.. இதுங்க எப்போ சேர்ந்து நாம எப்போ வாழ்ந்து என்று பெருமூச்சு விட்டாள்.
இன்று மதியம் ஸ்டீல் பேக்டரிக்கு விஷ்ணுவும் பிரகதியும் செல்ல இவர்கள் இருவரும் வெளியே சுற்றலாம் என்று கிளம்பினர். அப்பொழுது பீனிக்ஸ் மால் சென்றதும் ரதி தேவனிடம் எனக்கு இது வேணும் அது வேணும் என்று கூற சின்னப் பொருளா எடு அப்போதான் தெரியாது என்கவும் சாக்லேட் செக்க்ஷன் குதூகலமாக ஓடினாள்.
அங்கு தனக்கு பிடித்த அனைத்து சாகலேட்களையும் சுவைத்தவள் இந்தா தேவா இதை சாப்பிடு என்று அவனுக்கும் கொடுத்தவளின் கண்கள் அங்கு ஒரு பெண்ணின் பின் தட்டிய கயவனைக் கண்டு சிவந்தது.
அந்தப் பெண் அவனை முறைத்து விட்டு தன் காலில் கிடந்த செருப்பைக் காண்பித்து விட்டுப் போக அதனை அலட்சியம் செய்தவன் அங்கிருக்கும் ஒரு கஃபேயில் சென்று கேப்பச்சீனோ ஆர்டர் செய்து அமர்ந்திருக்க தேவனை அழைத்துக் கொண்டு அந்த கஃபேக்கு சென்றாள்.
கேப்பச்சீனோ வருகிறவரை காத்திருந்த ரதி பேரர் வந்து வைத்து விட்டுப் போகவும் அந்த அவன் அதனை எடுத்து வாயில் வைக்க தன் கை விரல்களை மடக்கி ஓங்கி அவன் நடு மண்டையில் கொட்ட பட்டென்று எழுந்து தலையைத் தேய்த்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தான்.
பின் அமர்ந்து பருக வாய்க்கருகே எடுத்துக்கொண்டு செல்ல மீண்டும் கொட்ட எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்க்கவே மீண்டும் உட்கார்ந்துக் கொண்டான்.
பின் என்ன ஆச்சு யாரும் இல்லையே எனக்கு மட்டும் இப்படி தோணுதா என்று அந்த கேப்பச்சினோவை பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருக்க அவன் பின் மண்டையில் அடி வைக்க அவன் முகம் அந்த கேப்ச்சினோவில் பட எவன்டா அது என்று கத்திக் கொண்டே அவன் முகத்தை பார்த்த அனைவரும் சிரித்தனர்.
என்ன என்று பயமும் அவமானமும் சேர முகம் கறுத்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.
****
இங்கு ஸ்டீல் பேக்டரி சென்று பார்த்து விட்டு காரில் வந்துக் கொண்டிருந்தனர். டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வந்தாள் பிரகதி. பின் சீட்டில் அமர்ந்திருந்த விஷ்ணுதேவன் தன் மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க அவன் இரு புறமும் ரதியும் தேவனும் அமர்ந்துக் கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதுங்க வேலைக்கு ஆகாதுங்க போல நம்ம தான் எதாவது பண்ணனும் போல என்று நினைத்த ரதி தேவனை பார்த்து கண்ணடிக்க வேண்டாம் ரதி நாம இருக்கிறது தெரிஞ்சிட போகுது என்று கூற அட மக்கு தேவா நாம தான் யாரு கண்ணுக்கு தெரிய மாட்டோமே இப்போ நாம பேய் டா என்று கூற ஆமா இல்ல மறந்துட்டேன் ரதி என்று சிரித்தான்.
ஆனா தேவா இந்த சித்திரகுப்தன் அன்னைக்கே சொன்னார் நீங்க சில பல சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வருமென்று சொன்னார்ல இப்போ அது ரொம்ப சரியா இருக்கு தானே என்று வினவ தேவன் அவள் கூறுவது புரியாமல் பேய் முழி முழித்தான்.
டேய் தேவா என்ன இப்படி முழிக்கிற ஆனாலும் நீ பேய் ஆனதுல இருந்து உனக்கு மூலையே வேலை செய்ய மாட்டுது.. இப்போ பாரு நான் சொன்ன விஷயம் கூட புரிய மாட்டேங்குது என்று கூற பக்கத்துல உன்னை வச்சுக்கிட்டு வேற எதுவும் என்னால் யோசிக்க முடியலை ரதிக்குட்டி என்று உருகினான்.
அவனது பதிலில் உருகியவள் அவனிடம் தாவி அவனுக்கு இச்சு வைத்தாள். விஷ்ணு சட்டென்று திரும்பிப் பார்க்க ஐயோ நாம இருக்கிறது தெரிஞ்சிடுச்சா இவனுக்கு என்று அலற அதெல்லாம் இல்லடா ரதிக்குட்டி நீ எனக்கு உம்மா குடுத்தல்ல அதை உணர்ந்திருப்பான் அதான் ஏதோ மாதிரி பீலாகவும் திரும்பிப் பார்த்துருக்கான்.
ஹிம்ம் என்று சமாதானமானவள் ஆனால் நம்ம நிலைமை யாருக்கும் வரக்கூடாது தேவா இப்படி நமக்கு நாமே மாமா வேலை பாக்குறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று சோகமாக கூற தேவன் அவள் சொன்ன விதத்தில் கலகலவென சிரித்தான்.
விஷ்ணுவின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த ரதி சற்றே விஷ்ணு அருகில் சாய்ந்தமர்ந்து அவன் நெஞ்சுப் பகுதியில் தன் தேனிதழ் கொண்டு முத்தம் பதித்து தேவா என்று காதலுடன் அழைக்க விஷ்ணுவிற்கு ஏதேதோ நியாபகங்கள் வருவது போல் இருந்தது.
தேவா என்று அழைக்கும் தேன் குரல் அசரீரி போல் ஒளித்தது. அதுவும் ரதி அவன் நெஞ்சில் இதழ் பதிக்க சிலீரென்ற ஓர் உணர்வு எழுந்து இதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட தன்னை நிலைப்படுத்த பெரும்பாடுப் பட்டான்.
என்ன எனக்கு என்னமோ போல இருக்கு என்னாச்சு என்று நினைத்துக் கொண்டே தன் நெஞ்சுப் பகுதியை நீவ அவன் விரல்களில் ரதி முத்தமிட சட்டென்று தன் விரல்களை எடுத்துக் கொண்டான்.
அவன் விரல்களை எடுத்ததும் சிரித்துக்கொண்டே வா தேவா போகலாம் என்று தன் தேவனுடன் பறந்து சென்று விட்டாள். இங்கு ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த ரதி என்ன தேவா அமைதியா வர என்று கேட்க அவளிடம் பேசாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
தேவா என்று அவன் தாடையைப் பிடித்துக் தன் பக்கம் திருப்பியவள் கையைத் தட்டிவிட்டு திரும்பிக் கொண்டான். தேவா என்று அழைக்க அவன் திரும்பவே இல்லை. அவன் செய்கை அவளுக்கு அழுகையை வர வைக்க அழுகையுடன் அழைக்க அதனை தாங்க முடியாமல் ரதிக்குட்டி ஒன்னுமில்லைடா நீ அவன் மேல சாய்ந்ததும் கொஞ்சம் பொறாமை வந்துடுச்சு என்று கூற தேவா விஷ்ணு உன்னோட மறுஜென்மம் தானே அவன் நீ தான் என்று அவன் பொறாமையை ரசித்தவாறு கூறினாள்.
அது நானாகவே இருந்தாலும் நீ எனக்கு மட்டும் தான் ரதிக்குட்டி அவன்கிட்ட கூட உன்னை விட மனசு வரலை என்றவனை என்றும் போல் இன்றும் அவன் காதலில் கரைந்து அவனை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.
அவள் தன்னுடன் அவனை இறுக்கவும் அவனும் இது தான் சாக்கென்று சுகமாக அவள் நெஞ்சாங் கூட்டில் புதைந்து கொண்டான். இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க காரில் சென்று கொண்டிருந்த விஷ்ணு குழப்பத்தில் இருந்தான். எனக்கு என்னாச்சு என்று புலம்பித் தள்ளினான்.
(ஐயோ விஜய் சேதுபதி மாதிரி உன்னை புலம்ப விட்டுட்டாய்ங்களே விஷ்ணு)
சற்று நேரத்தில் அலுவலகம் வரவே அதுவரை கையில் இருந்த பைலில் தலையை நுழைத்துக் கொண்டிருந் பிரகதி பின்னால் திரும்பி சார் சார் என்று அழைத்தாள். விஷ்ணுவோ தனக்கு ஏற்பட்ட குழப்பத்தில் சுற்று புறம் மறந்து தனக்குள் மூழ்கி இருக்க பிரகதி அழைத்தும் அவனுக்கு கேட்கவில்லை.
இரண்டு மூன்று முறை சார் சார் என்று அவள் கீரை விற்பவள் போல் கூவியவள் அவன் எழாமல் தன் சிந்தனைகளிலேயே உழன்றுக் கொண்டிருக்க அவன் கையைத் தொட்டு உலுக்கவும் ஷாக்கடித்தவன் போல் துள்ளி எழுந்தான்.
அவன் துள்ளி எழுந்ததில் பயந்தவள் இரண்டடி தள்ளி முன்பு தான் அமர்ந்திருந்த சீட்டில் பயத்தில் கோழிக்குஞ்சாய் ஒடுங்கி நடுங்கியப்படி அமர்ந்திருந்தாள். இவனோ அவள் விரல் நுனிப் பட்டதும் சில காட்சிகள் தான் ஒரு பெண்ணுடன் இருப்பது போல் வந்து போக தலையைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன் நிமிர்ந்து அமர இவனை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிரகதி கண்ணில் விழ வாட் என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.. அவன் கத்தவும் ஒன்னும் இல்லை சார் ஆபிஸ் வந்துருச்சி என்கவும் ஹிம்ம் என்றவாறு இறங்கி விடுவிடுவென நடக்க பிரகதியும் இறங்கி அவன் பின்னால் அவனுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடினாள்.
அவனுக்கு இருந்த குழப்பத்தில் அன்று முழுவதும் பிரகதி தான் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள். ஏன் இதை இங்க வைத்தாய் அதை எடுத்துட்டு வா இதை எடுத்துட்டு வா இது தப்பு அது தப்புன்னு எல்லாததையும் இழுத்து அவளைத் திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் திட்ட ஆரம்பித்ததும் இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போல என்று தலையைக் குனிந்தவள் தான் அவன் திட்டி முடித்ததும் அவுட் என்ற அவன் வார்த்தைக்காக காத்திருந்தவள் போலவே தன் வேலையைப் பார்க்க சென்று விடுவாள்.
அன்று மாலை ஐந்து மணிக்கு தன் வீட்டிற்கு கிளம்பியவளைத் தடுத்து நிறுத்தி மிஸ் பிரகதி ஷார்ப் சவன் லி மெரிடியன் ஹோட்டல் வந்துருங்க என்று கூறவும் பேந்த பேந்த முழித்தாள்.. சார் என்று அவள் இழுக்க வாட் என்று தன் டையை சரி செய்தவாறு கேட்க எங்க வீட்டுல விட மாட்டாங்க சார் என்று திக்கித் திணறினாள்.
அதைக் கேட்டு கோபமானவன் மிஸ் பிரகதி ஐ ஆம் யூவர் பாஸ் ஒபே மை ஆர்டர் காட் இட் என்று அழுத்தமாக உரைக்க அவன் குரலே இதற்கு ஆம் என்று சொல்லி தான் ஆக வேண்டும் என்பது போல் வந்தது.
தன் வீட்டைப் பற்றி யோசித்தவள் எதுவும் பேசாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்க அவளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தவன் கம் வித் மீ பிரகதி என்ற கட்டளையுடன் வெளியே சென்றான்.
இவளோ ஐயோ என்ன பூகம்பம் வரப் போகுதோ என்று நினைத்தவாறு அவன் பின்னால் ஓடினாள். தன் கார் ஓட்டுநரைக் கண்களால் தடுத்தவன் தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். சார் என்றவாறு தன்னருகில் வந்து நின்றவளை கெட் இன் என்றவாறு தன் கூலர் எடுத்து போடு அவள் அப்படியே கெட் இன் பிரகதி என்று பற்களைக் கடித்தவாறு கூறினான்.
அவனை கோபப் படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் சார் பிளீஸ் டைம் ஆயிடுச்சு சீக்கிரம் போகலைன்னா வீட்டுல திட்டுவாங்க சார் என்கவும் ஷட்டப் என்ற ஒரு வார்த்தையில் அமைதியாகி விட்டாள்.
அவள் சீட் பெல்ட் போடாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு விடனுமா என்று கேட்கவும் ஹிம்ம் என்று அவன் சொன்னது புரியாமல் விழிக்கவும் ஓ நோ என்றவாறு அவளை நெருங்கி சீட் பெல்டை போட சீட்டில் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.அவள் அருகே இருந்தால் தான் சில காட்சிகள் வந்துப் போக இன்று முழுவதும் தன்னுடனே அவள் இருப்பது போல் பார்த்துக் கொண்டான்.
அதுமட்டுமில்லாமல் இன்று முழுவதும் இருந் டென்ஷனில் அவளை வருத்தெடுத்து விட்டான். அதை மனதில் வைத்துக் கொண்டு தான் பாவம் என்று நினைத்து அவளைப் பார்ட்டிக்கு அழைக்க அவள் நான் வீட்டுக்குப் போகனும் என்று ராகம் பாடக் கொதித்தெழுந்து விட்டான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை பாவம் அவள் தினமும் இவனை விட மோசமான இரு ஜந்துக்களிடம் மாட்டிக்கொண்டு வருப்படுகிறாள். சீட் பெல்டை போட்டு விட்டு வண்டியை எடுத்தவன் வேகமெடுத்தான்.
வண்டியின் மேற்கூரையில் அமர்ந்துக் கொண்டு உள்ளே நடப்பதை சுவாரசியமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தனர் ரதியும் தேவனும்.
மாயங்கள் தொடரும்...
0 Comments