மாயம் - 3 :
வாகனத்தின் மேல் அமர்ந்து உள்ளே நடப்பதை உல்லாசமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரதியும் தேவனும் தங்களின் கைகளில் உள்ள கயிறு ஒளிரவும் சட்டென்று மேல் நோக்கி பறந்து சென்றனர்.
நடு வானில் இவர்களுக்காக சித்திரகுப்தன் காத்துக்கொண்டிருந்தார். அவரிடம் இருவரும் வர ரதி அவரைப் பார்த்து ஹேய் சித்து எப்படி இருக்கீங்க என்று வந்தவுடனே குசலம் விசாரிக்க என் பெயர் சித்து அல்ல சித்திரகுப்தன் உன் தொல்லை இல்லாமல் இத்தனை நாள் நன்றாக இருந்தேன் இனி என்னாகப் போகிறதோ பார்க்கலாம் என்று அவளுக்கு பதில் அளித்தார்.
ஹூக்கும் நான் உங்களுக்கு தொல்லையா என்று எகிறிக் கொண்டு வர தேவனை பாவமாகப் பார்த்தார்.. தேவன் ரதியைப் பிடித்து தன்னுடன் அணைத்துப் பிடித்தவன் ரதி சும்மா இரு என்று அவளை அடக்கியவன் நீங்க சொல்லுங்க என்கவும் உங்க வேலை எந்தளவில் இருக்குன்னு மேலிடத்தில் இருந்து என்னை பார்த்து விட்டு வரச் சொல்லி ஆணை வந்தது என்று கூறினார்.
இப்பொழுது தான் கொஞ்சம் தொடங்கி இருக்கு என தேவன் கூற சரி சீக்கிரம் உங்க வேலையை முடிங்க என்று கூறிவிட்டு திரும்ப சித்து சித்து என்று அழைத்தவள் அவர் இவள் பக்கம் திரும்பவும் மிஸ்டர் எமன் மிஸஸ் எமன் எப்படி இருக்காங்க அப்புறம் ஷிவ்வும் பாருவும் எப்படி இருக்காங்க அவங்களைப் பார்க்கனும் போல இருக்கு அங்க இருந்தா இந்நேரம் விநாயகர் எனக்கு விதவிதமா உணவெல்லாம் கொடுத்திருப்பார்.
அதுமட்டுமில்லாம முருகன் அவர் மயிலில் என்னை ஏற்றி சுற்றிக் காட்டியிருப்பார். நீங்க அவங்ககிட்ட போய் சொல்லுங்க நான் சீக்கிரமே வந்துடுவேன்னு என்று கூற ஐயோ இப்பொழுது தான் அவர்கள் அனைவரும் நிம்மதியாக இருப்பதாகக் கூறினார்கள் அதற்குள்ளாகவே நீ வருகிறேன் என்கிறாயே அவர்கள் என்னை அனுப்பி வைத்ததே நீ பொருமையாக நிதானமாக உன் வேலையெல்லாம் முடித்து விட்டு வரனும் என்று தான் அவர்களின் ஆசை.
விநாயகர் தன் உணவில் பங்கு கேட்பதற்கு நீ அங்கு இல்லாததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கொழுக்கட்டைகள் லட்டுகள் அனைத்தையும் ஆனந்தமாக ரசித்து ருசித்து உண்டுக் கொண்டிருக்கிறார். முருகப் பெருமான் தன் இரு மனைவிகளுடன் உன் தொல்லை இல்லாமல் சந்தோஷமாக பவனி வருகிறார்.
ஆக மொத்தத்தில் சொர்கம் சுந்திரவனம் போல் காட்சியளிக்கிறது. நீ பொறுமையாக உன் வேலைகளை முடித்துக் கொண்டு வந்தால் போதுமானதாகும் என்று கூறியவர் சட்டென்று அவள் எதேனும் கூறுவதற்கு முன் மறைந்தார்.
அவர் கூறியதைக் கேட்ட ரதி சித்து என்று கோபமாகக் கத்தினாள். தேவனோ தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் வர சிர்த்துக் கொண்டிருந்தான்.
டேய் தேவா என்னடா இப்படி சிரிக்கிற என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ரதிக்குட்டி சத்தியமா பாவமா மட்டும் மூஞ்சை வைக்காதடி.. நீ செஞ்ச வேலையெல்லாம் அப்படி.. கொஞ்சநஞ்சமா பண்ணின ஒரு துளி பயமில்லாம அவங்களை அந்த பாடுப்படுத்தினால் அவங்களும் தான் என்ன செய்வாங்க என்று மீண்டும் சிரித்தான்.
நீயும் அவங்கக் கூட சேர்ந்து என்னை ஓட்டுற போ நான் பேச மாட்டேன் என்று கோபித்துக் கொள்ள அவளை சமாதானப் படுத்தி விஷ்ணு பிரகதி இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்..
விஷ்ணு பிரகதியை நகரத்தின் பெரிய மாலிற்கு அழைத்து வந்திருந்தான்.. பார்க்கிங் ஏரியாவில் தன் காரைப் பார்க் செய்தவன் பிரகதி இறங்காமல் இருக்கவும் என்ன மேடம் கனவு கண்டு முடிச்சிட்டீங்களா தூக்கிட்டுப் போகனுமா என்று கேட்கவும் ஏற்கனவே பயத்தில் இருந்தவள் நடுங்கியவாறு இறங்கினாள்.
அவள் பயந்தது போலத்தான் அவள் தங்கியிருக்கும் வீட்டிலும் நடந்தது.. ஸ்கூல் விட்டு வந்த பிரகதியின் தங்கையிடம் தன் கீச்சுக் குரலில் சொர்ணாக்கா போல் இருந்தவள் எங்கடி உன் அக்காக்காரி இன்னும் வீட்டுக்கு வரலை எவன் கூட போயிருக்கா அந்த சிறுக்கி சோறு போடுறதே பெருசு.. வரட்டும் இன்னைக்கு அவளை உண்டில்லைன்னு பண்றேன்.
என் அக்கா ஒன்னும் சும்மா உட்கார்ந்து சாப்பிடலை அவ சம்பாரிக்கிற எல்லா பணத்தையும் கொடுத்துட்டு தான் நாங்க இங்க இருக்கோம் என்று அவள் அத்தையிடம் சண்டையிட்டுத் திரும்ப அவள் முன் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்துக் கொண்டு நின்றிருந்தான் அவள் அத்தை ரத்தினம் பெற்ற மகன் வினித்.
என்ன சின்னக்குட்டி வாய் நீளுது என்று இளித்துக்கொண்டே கேட்க ச்சீ என்று முறைத்து விட்டுத் தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.என்ன ம்மா இவ இப்படி பேசிட்டுப் போறா இப்போவே இந்த பேச்சு பேசுறவ இன்னும் இவளை இங்கு வச்சிருந்தா அவ்வளவு தான் நாம நினைக்குறது எதுவும் நடக்காது என்று எதையோ யோசித்து குள்ளநரியின் தந்திரத்துடன் கூறினான்.
இருடா நமக்கும் காலம் வரும் அதுக்குத்தான காத்துக்கிட்டு இருக்கேன் அப்போ இந்தச் சின்னக் கழுதையைப் பார்த்துக்கலாம் என்று குரூரமாகக் கூறவும் அம்மா இப்போவே அவளைப் பேக் பண்ணனும் அதான் நமக்கு இருக்குற ஒரே வழி என்கவும் அப்போ அவளை ஏதாவது ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டு நம்மை வேலையைப் பார்க்கலாம் என்று கூறினாள்.
ம்மா சூப்பர் ஐடியா இது தான் கரெக்ட் சான்ஸ் அவளை வித்துடலாம்.. அவளை மட்டும் நம்ம வித்துட்டோம்னு வச்சுக்கோ அப்புறம் லட்சாதிபதிதான் என்று எக்காளமிட்டுக் கூற அங்கு அதுவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தேவன் என் பொண்டாட்டியை விற்க நீ யாருடா நாயே என்று கோபத்துடன் அங்கு மேல் கட்டி வைத்திருந்த ஊஞ்சலை அவிழ்த்து விட கீழே நின்றிருந்த வினித் தலையிலேயே விழுந்தது.
அம்மா என்று அலற ஐயோ ஐயோ என் புள்ளை என் புள்ளை என்று கூப்பாடு போட சத்தம் கேட்டு வெளியே வந்த பிரகதியின் தங்கை பிரபாவதி வெளியே எட்டிப் பார்த்து விட்டு அவன் மண்டையில் ரத்தம் வருவதைப் பார்த்து அலட்சியமாக மீண்டும் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
இங்கு மாலிற்கு அழைத்து வந்தவன் பார்ட்டிக்கு போட நல்லதா ட்ரெஸ் எடுத்துக்கோங்க பிரகதி அப்பறம் உங்களுக்கு மேக்கப் ஐட்டம்ஸ் ஏதும் வேணும்னாலும் எல்லாத்தையும் வாங்கிடுங்க.
நாம டேரெக்டா பார்ட்டி நடக்கிற ஹோட்டல் போய்டுவோம் அங்கேதான் ரூம் புக் பண்ணிருக்கேன் அங்க போய் ட்ரெஸ் மாத்திக்கலாம் சரியா என்றவன் அவளை எடுக்குமாறு கண்களால் சைகை செய்தான்.
அவள் அப்படியே காதில் ஏதும் விழாதது போலவே நின்றுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இன்று இரவு வீட்டிற்கு சென்றதும் என்ன நடக்கும் என்ற பயம் அவள் மனதை ஆக்கிரமித்திருக்க அவன் சொல்வது எதுவும் அவள் காதில் விழவில்லை.
அவள் பெரும்பாலும் வேலை முடிந்ததும் பஸ் பிடித்து வீட்டிற்கு ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுவாள். அதிலும் சில நாட்களில் வேலை அதிகமாக இருந்தால் சற்று தாமதமாக வந்தாலும் பிரகதியின் அத்தை ரத்தினம் எவன் கூடடி போய் கூத்தடிச்சுட்டு வர உனக்கு இவ்வளவு கொழுப்பா இவ்வளவு நேரம் கழுச்சி வந்தா யாரு வீட்டு வேலைகளை பார்க்கிறது என்று பேயாட்டம் போடுவார்.
அதை சமாளிக்கவே இவளுக்கு போதும் போதுமென்றாகி விடும்.இன்னைக்கு நாம பார்ட்டி முடிச்சுட்டு தான் போகணும்னா எப்படியும் பத்து மணிக்கு மேல ஆகுமே என்ன பண்றது எப்படி சமாளிக்குறது.
பிரபா வேற ஸ்கூல் முடிஞ்சு வந்துருவாளே பசி தாங்க மாட்டா நான் போனாதான் சமைக்கவே முடியும் அத்தை எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க இப்போ எப்படி இங்கிருந்து போறது என்று தனக்குள் உழன்று கொண்டிருக்க இவன் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை.
என்ன இந்த பொண்ணு அப்பப்போ இப்படி வேற உலகத்துக்கு போய்டுது என்று நினைத்தவன் ஹலோ மிஸ் பிரகதி என்று அவளை அழைத்தவாறு அவள் முகத்தருகே சொடக்கிட்டான்.
அவன் சொடக்கிட்ட சத்தத்தில் ஏதோ கனவுலகத்தில் இருந்து விழிப்பவள் போல ஹான் என்ன சார் என்றவள் அவன் அவளை முறைக்கவும் ஐயையோ போச்சு ஏதோ சொல்லிருக்காறு நான் கவனிக்கலை போல அதான் முறைக்குறாரு இப்போ என்ன பண்றது என்று கைகளை பிசைந்தவாறு அவனை பாவமாக பார்த்து வைத்தாள்.
அவள் தன்னை பாவமாக பார்க்கவும் அவனுக்கு சிரிப்பு வர பார்த்தது. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவன் வெளியில் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட நான் என்ன சொன்னேன் பிரகதி என்று கடுமையாக முகத்தை வைத்து கொண்டு கேட்க அவள் என்னவென்று சொல்வாள் எதுவும் சொல்லாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.
அவளை அப்படி பார்க்க அவனுக்கு பிடித்திருந்ததோ என்னவோ அவனும் அவளை அப்படியே பார்த்தப்படி இருந்தான்.
சார் எந்த மாதிரி ட்ரெஸ் பார்க்குறீங்க என்ற பணிப்பெண் குரலில் நினைவுக்கு வந்தவன் அங்கு தன்னை பார்த்தபடி நின்றிருந்த பிரகதியிடம் பார்ட்டிக்கு தேவையான எல்லாம் வாங்குங்க பிரகதி என்றவன் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவளிடம் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தவன் தான் அதன் பிறகு அங்கு அப்படி ஒருத்தி இருப்பதையே மறந்தவனாக தன் அலைப்பேசியில் மூழ்கி விட்டான்.
இவளோ என்ன அங்க போய் உட்காந்துட்டாரு என்று யோசிக்கவும் ஏன் பிரகதி உனக்கு ட்ரெஸ் எடுத்து கொடுக்கணுமா என்று அவள் மனசாட்சி ஆஜராக ஐயோ நான் அப்படியெல்லாம் நினைக்கல.
இப்போ நான் வீட்டுக்கு போய் ஆகணும் நேரத்துக்கு போகலைன்னா அவ்ளோதான் அத்தை என் தோலை உருச்சி உப்பு கண்டம் போட்டுருவாங்க என்று தான் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தவள் குக்கூ குக்கூ என சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.
அங்கு சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் தான் மணி ஆறு என காட்டியது. அதனை கண்டதும் குக்கூ சத்தம் மாறி அவளுக்கு சங்கு ஊதுவது போலவே கேட்டது ஐயோ பிரகதி மணி இப்போவே ஆறு ஆயிடுச்சு இந்நேரத்துக்கு வீட்டுல இருக்கணும் இல்லைன்னா அவ்வளவுதான் போச்சு என்று நினைத்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து யாரிடமோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவனிடம் ஓடிவந்தாள்.
சார் என்று அழைக்கவும் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அதனை அனைத்து பாக்கெட்டில் போட்டவன் ஹிம்ம் சொல்லுங்க பிரகதி போலாமா ட்ரெஸ் எடுத்தாச்சா உங்களுக்கு தேவையான ஐடெம்ஸ் எல்லாம் வாங்கிட்டீங்களா என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டு கொண்டே சென்றான்.
சார் என்று தினறியவள் ஹ்க்கும் என்று சத்தமிட்டு தொண்டையை சரி செய்து கொண்டவள் சார் நான் வீட்டுக்கு போகணும் நான் வீட்டுக்கு லேட்டா போனா திட்டுவாங்க சார் ஏற்கனவே லேட் ஆகிடுச்சு என்று கூறினாள்.
ஏனோ அவனுக்கு அவள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னது பிடிக்க வில்லை போலும் மிஸ் பிரகதி என்ன சின்ன பிள்ளை போல வீட்டுக்கு போகணும்னு சில்லியா சொல்லிட்டு இருக்கீங்க..
(டேய் தேவா அவ நேரத்துக்கு வீட்டுக்கு போகலைன்னா அவ அத்தைக்காரி சல்லி சல்லியா பேர்த்து எடுத்துடுவா இது தெரியாம சில்லி பல்லின்னு சொல்லிட்டிருக்க)
சார்… என்று அவள் ஏதோ கூற வர
லுக் மிஸ் பிரகதி நான் கொடுத்த வேலை இன்னும் முடியலை என் கூட நீங்க பார்ட்டி வரீங்க நாம ரெண்டு பேரும் போறோம் அவ்வளவுதான் டாட் என்றவன் தன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.
போச்சு இன்னைக்கு சாவு உறுதி என்று நினைத்தவளுக்கு அத்தை தன்னை கேவலமாக சொல்லி திட்டுவது போல் நினைத்து பார்த்ததற்கே இவளுக்கு மலுக்கென்று கண்ணீர் உடைப்பெடுத்தது.
போய் ட்ரெஸ் எடுங்க பிரகதி என்றவன் அவளை பார்க்க அவளோ தலையை கீழே குனிந்தவாறு நிமிராமல் நிற்கவும் அவனே சென்றவன் கையில் அகப்பட்ட ஸாரியை பில் போட கொடுத்தவன் சில மேக்கப் ஐடெம்ஸ் வாங்கி கொண்டு அவளின் அனுமதியின்றி அவள் கையை பிடித்திழுத்தப்படி அங்கிருந்த லிஃப்டை நோக்கி சென்றான்.
வெளியில் இருந்து பார்த்தவர்கள் அனைவருக்கும் அவளை பலவந்தமாக இழுத்து போவது போல்தான் தெரியும்.
ஆனால் அவனுக்கு தானே தெரியும் இந்த பார்ட்டிக்கு பிரகதியை அழைத்து செல்லவில்லை என்றால் அங்கு வரும் வீணா இவனை அவளுடன் ஆட அழைப்பாள்.
அவளை இன்று தவிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இல்லையென்றால் அவள் தலையில் ஏறி ஆடுவாள் ஏற்கனவே அவள் பிக்கல் பிடுங்களினால் தான் அவளை தவிர்க்க எண்ணுகிறான்.
அதுமட்டுமல்லாமல் ஏனோ இன்று பிரகதி தன்னுடன் இருக்க வேண்டுமென அவனது மனம் அனத்தி கொண்டே இருந்தது.
அதனால் தான் அவளை வலுக்கட்டாயமாக தன்னுடன் இருக்கும்படி கட்டளையிட்டான். அவள் என்னவென்றால் வீட்டுக்கு போகணும் என்று அதே பல்லவியை பாடிக் கொண்டிருக்க கடுப்பாகி தானே அவளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கினான்.
அவளை இழுத்து கொண்டு லிஃப்டில் நுழைய லிஃப்டில் இருந்த மின்விளக்கு மினுக்மினுக்கென்று இவர்களை பார்த்து கண்ணடித்தது.
ஏதோ யோசித்து கொண்டே அவளை இழுத்து வந்தவன் அதனை கவனிக்க தவறினான்.
முதல் தளத்தை அடைய அதற்குரிய பொத்தானை அமுக்கி அவளுடன் நிற்க நடுவிலேயே கிடுகிடுவென குலுங்கி மின்விளக்கு அணைந்து லிப்ட் நின்றுவிட்டது.
லிப்ட் அதிர்ந்து நிற்கவும் அந்த பயத்தில் தன் கையை இறுக பற்றியிருந்தவனை பற்று கோலாக நினைத்து கொண்டவள் அவனை இறுக அணைத்து கொண்டாள்.
அவள் தன்னை அணைக்கவும் ஏதேதோ எண்ணங்கள் சுழன்று அடிக்க அவள் தேகத்தின் குளுமை அவனுக்குள்ளும் பாய சிலிர்த்தான்.
தன்னை அறியாமலே அவளை தன்னுடன் இறுக்கி கொண்டவன் ரதி ரதிக்குட்டி ஒன்னுமில்லைடா நான் தான் இருக்கேனே ஒன்னுமில்லை என்றவாறு அவள் தலை முதுகு என கைகள் கொண்டு வருடி விட அவனுள் பல நினைவுகள்..
அவனும் அவளுமாய்..
ரதியும் தேவனுமாய்..
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அணைத்து கொண்டு நின்றிருந்தனரோ..
திடீரென மின்விளக்கு ஒளிர்ந்து லிப்ட் சடாரென கீழே செல்லவும் ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டவன் தன்னை இன்னும் பயத்தில் இறுக பற்றி கொண்டிருந்தவளை விட்டு கைகளை சிறிதும் தளர்த்தவில்லை.
அவன் மூளைக்குள் பல எண்ணங்கள் சுற்றி சுழன்று அடித்தாலும் அதனை தள்ளி வைத்தவன் இன்று தான் முதல் முறை அவளை பார்ப்பது போல் மேலிருந்து கீழ் வரை எதிரில் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை மேய்ந்து கொண்டிருந்தான்.
லிப்ட் கதவு திறக்கவும்
ரதி ரதி..
ஹிம்ம்..
ரதிக்குட்டி கதவு திறந்துருச்சு போகலாம் வா என்று அவளை தன்னிடமிருந்து பிரிக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவளோ அவனை இன்னும் நெருக்கி கட்டிக்கொண்டவள் அவன் வாசத்தை முகர்ந்து நுரையீரல் முழுக்க நிரப்பி கொண்டவள் எனக்கு பயமா இருக்கு தேவா நான் இப்படியே இருக்கேன் என்று கூறியவாறு அவனை மீண்டும் இறுக்கி கொண்டாள்.
சரி வா காருக்கு போகலாம்
ஹிம்ம் வேண்டாம் என்கவும் ரதி நாம லிஃப்டில் இருக்கோம் டி வா எல்லாரும் பாக்குறாங்க பாரு என்கவும் தான் ஹிம்ம் போ என்று சிணுங்கியவாறு அவனிடமிருந்து பிரிந்தவள் அப்பொழுதும் அந்த மோன நிலையில் இருந்து வெளியில் வரவில்லை.
ஏற்கனவே அவனுடன் பழகியவள் போல அவன் கைகளை தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டவள் அவனை உரசியவாறு ஒரு வித மோன நிலையிலே நடக்க அதனை குலைக்கவே அவள் கைப்பேசி அழைத்தது.
கைப்பேசி அழைத்ததும் நிதர்சனத்துக்கு வந்தவள் தன் கை யாரிடமோ சிக்கியிருப்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஹேய் ரதி என்ன ஆச்சு என்று அவள் தோலை பிடித்து உளுக்கியவனிடம் இருந்து பிரிந்தவள் சாரி சார் என்று கூறி நகர்ந்து கொண்டவள் தன் கைப்பேசி ஓயாமல் அடித்து கொண்டே இருக்கவும் அதனை எடுத்து உயிர்பித்தாள்.
அந்த பக்கம் என்ன சொன்னார்களோ கண்களில் கண்ணீர் தேங்க தன் பக்கத்தில் நின்று கொண்டு தன்னையே பார்த்து கொண்டிருந்தவனை கண்டவள் சார் சார் ஏ ஆர் ஹாஸ்பிடல் போகணும் சார் ப்ளீஸ் நான் போகணும் சார் என்னை விடுங்க சார் என்று கெஞ்சியவள் என் பட்டு என் பட்டு என்று அழ ஓகே கூல் வா ரதி நானே அழைச்சுட்டு போறேன் என்றவன் அவளை அழைத்து கொண்டு சென்றான்.
மாயங்கள் தொடரும்...
No comments: