நந்தனின் கண்ணம்மா -8




 நந்தனின் கண்ணம்மா - 8:


ரிஷி தூக்கத்தில் தன் கைகளை கொண்டு கனி படுத்திருந்த இடத்தை துழாவினான். 


அவள் இல்லை என்றதும் எழுந்தமர்ந்தவன் தான் காண்பது கனவோ என்பது போல் தன் கண்களை தேய்த்து விட்டு பார்த்தான்.


பார்த்தவன் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான். 


ஏனென்றால் கனி அனைத்து உணவகளையும் அங்கிருந்த டிபாயில் அனைத்தையும் அடுக்கி வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.


அவன் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டு “எல்லாம் உன்னால் தான் மாமா, நீ தான் சாப்பிட விடாம என்ன ஸ்வாஹா பண்ணிட்டு தூங்கிட்ட.”


“எனக்கு பசிச்சிது, அதான் குளிச்சுட்டு கீழ போய் சாப்பாடு எடுத்து வந்தேன், அங்க சாப்பிட ஒரு மாதிரி இருந்துச்சு. அதனால் இங்கு எடுத்துட்டு வந்துட்டேன்”.


“நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, இல்லனா நான் எல்லாத்தையும் காலி பண்ணிடுவேன்.”


ரிஷி அங்கிருந்த துண்டை தன் தோளில் போட்டுக் கொண்டு, அவள் கன்னத்தை வருடி விட்டு, "குளிச்சுட்டு வரேன்" என்று சென்றான்.


பின்பு இருவரும் கீழே இறங்கி வந்தனர்.


ரிஷி தன் அத்தையிடம், "தாத்தா பாட்டி எங்கே?" என்றான். அவர்கள் தோட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.


"சரி அத்தை, நாங்க ரெண்டு பேரும் தோப்பு வீட்டுக்கு போயிட்டு இரண்டு நாள் தங்கிட்டு வரோம், மாமா கிட்ட சொல்லிடுங்க அத்தை."


"சரி டா, சாப்பாடு குடுத்தனுப்புவா?"


"இல்லை அத்தை, அங்க சமைக்க தேவையான எல்லா பொருட்களும் இருக்கு" என்றான்.


"சரி பார்த்து போயிட்டு வாங்க" என்று தன் மகளின் தலையில் கை வைத்து வருடி விட்டு “பார்த்து போய்ட்டு வாங்க” என்றார்.


பின்பு வெளியே வந்தவர்கள், தோட்டத்தில் இருந்த பெரியவர்களிடம் கூறி விட்டு வெளியே வந்தனர்.


இங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் தோப்பு வீடு இருந்தது.


ரிஷி தன் இருசக்கர வாகனத்தை எடுத்து கனியை அழைத்து சென்றான்.


கனி அந்த இனிய பயணத்தை ரசித்து கொண்டே, தன் மாமனிடம், "என்ன மாமா, டயர்டா இருக்கா? பேசாம வரீங்க, இரவும் பகலும் அயராது உழைத்து சோர்ந்து போய்ட்டீங்களா?" என்றவள்.


அவன் தோளில் வைத்திருந்த கையை அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.


தன் கழுத்தை வளைத்திருந்த அவள் கையை பிடித்து, தன் இதழில் பொதிந்து கொண்டான்.


வீடு வந்ததும் இருவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டனர். 


பின்பு ஆறு மணியளவில் எழுந்தவன், "சாப்பிட சிம்பிளான டிஷ் எதாவது பண்ணிட்டு, இருடா நான் வந்துடுறேன்."


இருவரும் சேர்ந்து உண்டு, வெளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு பல கதைகள் பேசி கொண்டிருந்தனர். 


சிறிது நேரம் கழித்து, அவன் நெஞ்சில் தன் கைகளால் வருடியவள், "டயர்டா இருக்கா மாமா?" என்றாள்.


“அதெல்லாம் இல்லடா, உன்ன தான் தூங்க விடாம தொல்லை பண்ணிட்டேன்”.


“சரி வாங்க மாமா, உள்ள போகலாம்” என்று அவனை அழைத்து சென்று, கட்டிலில் படுத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.


சிறிது நேரம் கழித்து சின்ன சின்ன முத்தங்கள் அவன் நெஞ்சில் இருந்து ஆரம்பித்து, அப்படியே அவன் முகத்திற்கு வந்தாள். 


அவன் உதட்டை சுண்டி இழுத்தவள், அவன் கண்களை பார்த்துக் கொண்டே, அவன் மேல் ஏறி, அவன் இடுப்போடு தன் இடுப்பை வைத்து தேய்த்து, அழுத்தம் கொடுத்து, அவன் உதடுகளை சிறை செய்தாள்.


அவள் முத்தம் கொடுக்க ஆரம்பித்ததும், அவன் அந்த இனிய இன்பத்தில் மூழ்கி கொண்டிருக்கும் வேளையில், அவன் மையத்தை அழுத்தி தேய்க்கவும், அவன் இந்த உலகத்திலேயே இல்லை.


அவளிடம் இருந்து தன் உதட்டை பிரித்தவன், "வேண்டாம் டா கண்ணம்மா, தூங்கு, உன்ன நான் தூங்கவே விடலை. இப்போ தூங்கு" என்றான்.


எனக்கு தூக்கம் வரல, மாமா, நீங்க சும்மா இருங்க, நான் நீங்க சொல்லி குடுத்ததெல்லாம் சரியா பண்றேனான்னு பார்பீங்களாம், ஓகே வா?" என்றவள் அவன் பேச இடம் கொடுக்காமல், அவன் இதழோடு தன் இதழை வன்மையாக பொருத்தி கொண்டாள்.


ரிஷி அவள் உறங்க வில்லை என்று தான் தன்னை கட்டுபடுத்தி கொண்டு இருந்தான். ஆனால் அவன் கண்ணம்மா அவன் கட்டுப்பாட்டை எல்லாம் கரையுடைத்தாள்.


பின்பு இருவரும் வேகமாக வேர்க்க விறுவிறுக்க சொர்கம் சென்று வந்தனர்.


“மாமா’ என்று தன் நெஞ்சில் ஆராய்ந்து கொண்டிருந்தவனை அழைத்தாள்.


"ம்ம்" என்று இன்னும் அவன் கன்றுகுட்டிப் போல் முட்டி வராத அமுதத்தை உண்டவன்போல் மயக்கத்தில் முட்டிக்கொண்டிருந்தான்.


இரண்டு வாரம் கழித்து, விஷ்ணு தான் பணியாற்றிய மருத்துவமனையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தான்.


அப்பொழுது, மேகனா சோகமாக வெளியே வந்தாள். அவள் தன்னிலையில் இல்லை என்று பார்த்தப்பொழுதே தெரிந்தது.


தனக்குள் சிரித்தவன், அவளை வழிமறித்து தடுத்து நிறுத்தினான். ஏதோ யோசித்துக்கொண்டே வந்தவள், தன் முன்னால் யார் வழி மறித்து நிற்பது என்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு கோபம் வந்தது.


"என்ன சார், வேணும்? எதுக்கு வழியை மறைத்து நிக்குறீங்க? நகருங்க!" என்றதும், அவன் அப்படியே நிற்கவும், இவள் அவனை சுற்றிக்கொண்டு சென்றாள் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு.


விடுதியில் இருந்து தன் பேகை எடுத்துக்கொண்டு ரயில்வே நிலையத்திற்கு சென்றாள். அவளை பின்தொடர்ந்தான் விஷ்ணு.


தன் சீட்டில் அமர்ந்தவள், சிறிது நேரம் கழித்து தன் அருகில் யாரோ அமரவும் திரும்பி பார்த்தாள்.


பார்த்தவள் அதிர்ந்தாள். 


விஷ்ணு தான் அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.


அவள் எழுந்து வெளியே செல்ல பார்க்க, அவள் கையைப் பிடித்திழுத்து தன் மடியில் அமர்த்திக் கட்டிக்கொண்டான்.


அவன் இழுத்ததும், அதிர்ந்தவள்; அடுத்து அவன் செய்த செயலில் பயத்தில் உடல் நடுங்கியது.


அவள் பின்கழுத்தில் தன் தாடையால் உரசியவன், "என்ன மேகி, உடம்பு இப்படி நடுங்குது? என்ன ஆச்சு?" என்று இன்னும் வயிற்றோடு இறுக்கினான்.


அவனிடம் இருந்து விலக எவ்வளவோ முயன்றாள், ஆனால் அவள் முயல மட்டுமே முடிந்தது.


"அமைதியா இருந்தினா ஊரு போய் சேருர வரைக்கும் சேதாரம் இல்லாமல் போகலாம். இல்லனா அதுக்கப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை. எப்படி வசதி?" என்று கேட்டதும், நல்லபிள்ளையாக அமர்ந்துகொண்டாள்.


அவள் அமைதியானதும் தான் பேச ஆரம்பித்தான்: "மேகி, நான் சொல்றதைக் கேட்டுக் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணு."


கனிஷ்காவும் அவனும் சந்தித்தது; பின் நண்பர்கள் ஆனது; அவளை தன் தங்கையாக நினைத்தது; பின் அவள் வாழ்க்கையில் நடந்தது — கல்யாணம் முடிந்தது வரைக்கும் அவளிடம் கூறியவன்: "உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேகி. பட் கனி கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு வேற எதைப் பற்றியும் யோசிக்க முடியலை. அதான் நீ அத்தனை தடவை வந்து புரோபோஸ் பண்ணும் போதும், நான் கண்டுக்கொள்ளவே வில்லை. பட் இப்போ எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு. அப்புறம் என்ன? இனி நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்," என்றான்.


அவன் அசந்த நேரமாக பார்த்து, அவனிடம் இருந்து பிரிந்தவள், "சாரி மிஸ்டர் விஷ்ணுவர்தன், நீங்க ரொம்ப காலம் தாழ்த்திட்டீங்க. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க; நாளைக்கு எனக்கு கல்யாணம். அதுக்குத்தான் போய்டிருக்கேன்."


"ஓ… சூப்பர்! அது எப்படி? நான் இருக்கும்போது இன்னொருவனை எப்படி நீ கல்யாணம் பண்ணுவேன்னு பார்க்கிறேன்," என்றான்.


அவன் சொன்னதைக்கேட்டுப் பயந்து விழிக்கும்போதே, அவள் அதரத்தை சிறைசெய்திருந்தான்.


சிறிது நேரம் கழித்துவிட்டவன், பிறகு ஒன்றும் சொல்லாமல் தன் இடத்தில் படுத்துக்கொண்டான்.


பின் இவள் தன் ஊருக்கு செல்லவும், பேரதர்ச்சி அவளுக்குக் காத்திருந்தது. அவள் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் உறங்கினாள்.


பின் தூக்கம் கலைந்து எழுந்தவள், குளித்துவிட்டு தன் அறையில் இருந்த சன்னல் வழியாக தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது, அவள் அறைக்கு வந்த அவள் தாய்: "மாப்பிள்ளை வந்துருக்காரு டா, மேகனா. உன்கிட்ட பேசனுமாம்."


"வர சொல்லுமா?"


உள்ளே வந்தவனைக் கண்டு அதிர்ந்தாள்.


"பேபி, என்ன இவ்ளோ ஷாக்?" என்று கேட்டுக்கொண்டே வந்தவன், அவளை அணைத்துக்கொண்டான்.


அவன் அணைத்ததும் நினைவுக்கு வந்தவள், அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.


அவளைத் தன்னிடம் இருந்து பிரித்துக் கண்களைத் துடைத்தவன், "அழாத பேபி," என்றதும், அவள் நிப்பாட்டுவதுபோல் தெரியவில்லை என்றதும், அவள் உதட்டைச் சிறைசெய்தான்.


அவள் தன் முகத்தோடு அவன் முகத்தை அழுத்தினாள். அதில் மோகம், தலைக்கேற வன்மையாக அவளை இறுக்கினான்.


தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போய், மெத்தையில் அமர்ந்து, “மேகி முன்பு சொன்னது தான்டா, இப்பொழுதும் சொல்றேன்”. 


“நான் உன்னை அவாய்டு பண்ணினது தப்புதான் டா. அப்போ கனி அவ ஹஸ்பண்டை விட்டு பிரிஞ்சி இருந்தா டா” என்று கனி நந்தனின் வாழ்க்கையில் நடந்தது, அவர்கள் பிரிந்திருந்தது என அனைத்தையும் கூறினான்.  


“அவளை பத்திரமா மாமா கையில் ஒப்படைச்சிட்டு, தான் என் வாழ்க்கையைப் பார்க்கனும்னு நினைச்சேன் டா... கனி எனக்கு தோழி என்பதை விட, என்னுடைய தங்கையா தான் அவளை பார்க்கிறேன். மேகி, உன்னை அவாய்டு பண்ணினதுக்கு என்னை மன்னிச்சிடு டா”.  


"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா. ஐ லவ் யூ சோ மச்..." என்றவன், அவளுக்கு முத்தமிட்டான். இப்போதான் அவங்க ஒன்னு சேர்ந்துட்டாங்க. "சோ, என்னால இனி வெயிட் பண்ண முடியாதுன்னு தான் அப்பா அம்மா கிட்ட பேசி, உங்க அம்மா அப்பாகிட்டையும் பேசி, சம்மதம் வாங்கிட்டேன். இப்போ கல்யாணமும் நடக்கப் போகுது..." என்று தன்னுடன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டே, குதூகலமாகக் கூறினான்.  


"லவ் யூ, விஷ்ணு..." என்று அவன் இதழில் புதைய, அவளது செயலைத் தனதாக்கிக் கொண்டான்.  


மறுநாள், இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு கனியின் குடும்பத்தார் அனைவரும் வந்திருந்தார்கள். மேகியிடம் வந்த கனி, "ஒரு வாரம் முன்னாடி திடுதிப்புனு வந்து, 'கல்யாணம்னு சொல்றான்'..." என்று கூறினாள்.  


பின், அனைவரும் தங்களின் திருமண பரிசுகளை கொடுத்து, அவர்களை வாழ்த்தி விட்டு, தங்கள் வீட்டிற்கு சென்றனர்.  


இரவும் வந்தது. மேகி படப்படப்பாக அமர்ந்திருந்தாள். விஷ்ணு உள்ளே வந்ததும், எழுந்து நின்றாள். உள்ளே வந்தவன் தன் ஷர்ட்டை பரபரவென அவிழ்த்தான், அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே.  


அவன் பார்வையில் தலை குனிந்தவள், பயத்தில் உடல் நடுங்கியது. தன் கைகளை இறுக மூடி, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.  


"மேகி, இங்க பாரு..." என்று தனக்கு முதுகு காட்டி நின்றவளைத் தன்னை நோக்கி திருப்பினான். அவள் திரும்பாமல் அடமாக நிற்கவும், அவன் உஷ்ண மூச்சு அவள் முதுகில் பட்டு, அவளை சூடாக்கியது.  


அதை பொறுக்க முடியாதவள், திரும்பி தன் முகத்தை அவன் வெற்று மார்பில் புதைத்துக் கொண்டாள். பிறகென்ன? அங்கு மன்மதன் ஆச்சி செய்ய, மோகக் கடலில் மூழ்கி, தத்தளித்து, திருப்தியுடன் கரையை அடைந்தனர்.  


அங்கு, கனியும் நந்தனும் சம்சார சாகரத்தில் மூழ்கி, தங்களை தொலைத்து, பின் மீண்டு வந்தனர்.  


..அனைத்தும் சுபம்..


..முடிவுற்றது..

No comments