நந்தனின் கண்ணம்மா -6
நந்தனின் கண்ணம்மா - 6:
கோயம்புத்தூர் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
இருவரும் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு வந்ததும் வெளியே சுதர்ஷன் தான் காருடன் நின்று கொண்டிருந்தார்.
இவர்களை கண்டதும் ஒன்றும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
தன் தந்தை தன்னிடம் பேசவில்லை என்று கண் கலங்கியவளை இங்கு எதும் பேச வேண்டாம்; கனி வீட்டிற்கு போய் பேசி கொள்ளலாம் என்று அவளை காரில் ஏற சொன்னான்.
இருவரும் ஏறி அமர்ந்ததும் காரை எடுத்தார். ஒரு மணி நேரம் பயணம்; மூவரும் அவரவர் சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தனர்.
வீடு வந்ததும் இறங்கியவர்களை கண்டு நிரு தன் மகளின் அருகில் வந்து கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.
அவரை தடுக்க வந்த, நந்தனை கண்டு "நீ என்கிட்ட பேசாதே" என்றார்.
சுதர்ஷன் தான் அவரை அமைதி படுத்தி வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம் என்று உள்ளே அழைத்து சென்றார்.
இவளை கண்டதும் முகத்தை திருப்பிய தாத்தா பாட்டி இருவரையும் கண்டு "பிளீஸ் மன்னித்து விடுங்கள் பாட்டி, எனக்கு என்ன பண்றது என்று தெரியவில்லை, உங்க முகத்துல எப்படி விழிப்பது என்று நினைத்து கொண்டு கிளம்பி விட்டேன்" என்றவள் தன் அப்பாவிடம் சென்று "பிளீஸ் அப்பா என்னை புரிஞ்சுக்கோங்க, என் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, மாமா வேற இப்படி பண்ணிட்டாங்க."
என்னால் அப்போ எதுவும் யோசிக்க முடியல," என்றவள் தன் அன்னையிடம் சென்று "அம்மா," என்றாள். நிருவோ தான் அடித்ததில், மகளின் கன்னம் சிவந்து கண்டி இருப்பதை பார்த்து அவள் கன்னத்தை தடவி கொடுத்து, "எந்த பிரச்சனைகளுக்கும் வீட்டை விட்டு போறது தீர்வாகாது.நீ வீட்டை விட்டு சென்றதும் நாங்கள் பட்ட துன்பம் எங்களுக்கு தான் தெரியும்."
அப்பொழுது தான் ரிஷி அனைத்தையும் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டதும் அப்பா அவனை அடித்து விட்டார் என்று அவர் சொன்னதும் அப்போது தான் தன் மாமன் எங்கே என்று தேடினாள்.
அவன் வீட்டிற்குள் இல்லை என்றதும் அவள் பார்ப்பதை கண்டு, "அவன் இங்கு வர மாட்டான்; கனி உன்னை கண்டு பிடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவேன்" என்று நம்ம தோப்பு வீட்டில் போய் தங்கி கொண்டான் என்று சொன்னவரை கண்டு நான் தான் வந்துடேன். பின்பு ஏன் வரவில்லை என்று கேட்டதும், "இந்த மூணு மாசத்துல அவன்கிட்ட யாரும் நாங்க பேசல; அந்த கோவமா இருக்கும்" என்றார்.
அப்பா, "வாங்கப்பா மாமா வா அழைச்சுட்டு வரலாம்" என்றாள். அப்பொழுது தன் மகளை நோக்கி, "உனக்கு அவன் தாலி கட்டியதில் விருப்பமா, கனி?" என்று கேட்டார்.
அவர் கேட்டதும் தன் மனதில் உள்ள அனைத்தையும் சொன்னவள்; தன் பாட்டி பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.
அவரோ, "நீ இங்கு வீட்டில் இரு; நாங்க போய் அவனை கூட்டிட்டு வரோம்" என்றார்.
"சரி," என்று தன் அறைக்கு சென்றாள்.
இங்கு தோப்பு வீட்டில் கட்டிலில் படுத்திருந்தவன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் வெளியே வந்தான்.
அனைவரும் இறங்கியதும் சுதர்ஷன் வந்து அவனை வண்டியில் ஏற சொன்னார்.
"இல்லை மாமா நான் வரல," என்றவனை கண்டு, "நான் உன்ன அடிசுட்டேன்னு கோவமா இருக்கியா, நந்து?" என்றதும் இவன் பதறி, "அப்படி இல்ல மாமா, நான் தான் எல்லா தப்பும் பண்ணினேன்; என்னை அடிக்க எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு மாமா."
அவனது அத்தை அப்போ கார்ல ஏறு; வீட்டுல போய் பேசிக்கலாம் என்றதும் எதும் பேசாமல் ஏறினான். தாத்தா பாட்டியிடம் மன்னிப்பு கேட்டான்.
"முடிந்து போனதை விட்டு தள்ளுடா; இனி நடக்க போவது என்னவென்று பார்ப்போம்." கனி காணவில்லை என்றவுடன் அவள் மேல் உள்ள பாசத்தில் தான் அப்படி நடந்து கொண்டோம் என்றனர்.
அவன் வீடு வந்ததும் அவனது அத்தை, "சரி ரூம்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா; சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றாள். கனியும் அமைதியாக வந்து இவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு விட்டு சென்று விட்டாள்.
பின்பு இவனும் தன் அறையில் போய் கதவடைத்து கொண்டான்; அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
இரவு உணவின் போது சுதர்சன் தன் மகளிடம், "கனி, நீயும் ரிஷியும் அவன் ரூமில் சாப்டுட்டு வெயிட் பண்ணுங்க; கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு," என்றார்.
தன் ரூமில் கனி இருந்ததும் உள்ளே போகாமல் வெளியே கதவருகே நின்றவனை கண்டு, "ஆமா, இதுவரைக்கும் ஒண்ணா ஒரே ரூம்ல இருந்ததே இல்லை. பாரு, நான் இருக்குற ரூம்ல இவங்க இருக்க மாட்டாங்களோ," என்று நினைத்து கொண்டு, "எப்படி இருந்தாலும் நீ என்கிட்ட மாடிக்கிட்ட, இனி யாராலும் உன்னை என்னிடம் இருந்து காப்பாத்த முடியாது," என்று மனதில் நினைத்துக் கொண்டவளுக்கு தெரியவில்லை அவள் தான் அவனிடம் மாட்டிகொண்டாள் என்று.
பொள்ளாச்சியில் உள்ள அந்த பெரிய மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.
ரிஷி மணமேடையில் கம்பீரமாக அமர்ந்து ஐயர் சொன்னதை செய்து கொண்டிருந்தவன்; ஐயர் பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ என்றதும் நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே கனி அழகாக பட்டுடுத்தி மணப்பெண் அலங்காரத்துடன் அழகு தேவதையென வந்தாள்.
அவள் தன் பக்கத்தில் அமர்ந்ததும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் நேற்று நடந்ததை நினைத்து பார்த்தான்.
கதவருகே நின்றவனை அழைத்து கொண்டு சுதர்சன் உள்ளே சென்றார்.
அப்பொழுது நந்து, "நான் இதுவரைக்கும் உங்க ரெண்டு பேருக்குமே எந்த குறையும் வச்சது இல்ல; நானே உங்க திருமணத்தை பற்றி கனியின் படிப்பு முடிந்ததும் பேசலாம் என்று இருந்தேன்."
ஆனால் அதுக்குள்ள எல்லாம் இப்படி மாறிடுச்சு என்று சொன்னதும் ரிஷி தலை குனிந்தான்.
"ரிஷி நடந்ததெல்லாம் மறந்துடு," என்றவர் இருவரிடமும், "நான் எது செய்தாலும் உங்க நன்மைக்கு தான் என்று நம்புறீங்களா?” என்றார்.
இருவரும் "ஆமாம்" எனவும்; அப்போ, "நாளை காலையில் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்," என்றதும் கனி தன் மனதுக்குள் தந்தையை கொஞ்சி கொண்டாள்.
ரிஷிக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கனியை நினைத்து எதோ சொல்ல வந்தவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு "ஓகே பா," என்றாள்.
அவர் அறையை விட்டு வெளியேறியதும் அவன் கையை விட்டவள் தொப்பென்று அங்குள்ள சோஃபாவில் அமர்ந்தவள்; பக்கத்தில் வந்தவன், "மாமா, கிட்ட சொல்ல வேண்டியது தானே; எதுக்கு என் கைய பிடித்து தடுத்து நிறுத்தின?" என்றதும்,
"இந்த கல்யாணத்துல விருப்பம்; அதனால் தான் எதும் சொல்லல," என்று அவன் மேல் தான் கொண்ட காதலையும், அதை தன் அப்பாவிடம் கூறியதையும் சொன்னாள்.
அதை கேட்டதும் ரிஷி, "இவ்வுலகிலேயே இல்லை." கண்ணம்மா என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
"ஆமாம் மாமா, ஐ லவ் யூ; எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும்."
"நான் உனக்கே, உனக்கு மட்டும் தான். என்னை கட்டிக்கோ மாமா?" என்றதும், "இதை நீ சொல்லவும் வேண்டுமா கண்ணம்மா?" என்றவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டு அவள் அதரங்களை சிறை செய்தான்.
இவன் இப்படி செய்வான் என்று அவள் நினைக்கவில்லை; அவனை விலக்க பார்த்தாள்; அவளால் முடியவில்லை என்றதும் அவளும் அந்த முத்தத்தில் ஆழ்ந்து போனாள்.
சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன்; அவள் முகத்தை பார்க்க வெட்கத்தில் சிவந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"கண்ணம்மா, இது கனவில்ல தானே; நான் ரொம்ப பயந்துட்டேன்; கண்ணம்மா, எனக்கு நீ கிடைக்காமல் போய் விடுவாய்," என்று அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
பின்பு தன் அறைக்கு செல்ல போனவள் கரத்தை பிடித்து நிறுத்தினான்.
"இங்கேயே படுத்துக்கலாம் கண்ணம்மா," என்றான்.
அவள் கன்னத்தை வருடியவாறு, "இல்ல மாமா, பாட்டி என் ரூமில் படுக்க சொன்னாங்க," என்றாள்.
"சரி; போய் தூங்கு," என்றான்.
கனி தன் அறையில் விளக்கை அணைத்து விட்டு அப்பொழுது தான் படுத்தாள். சிறிது நேரத்தில் தூங்கி போனவள்.
இடையில் ஒரு கரம் ஊர்ந்து அவளை இழுத்து தன்னுடன் அணைத்து கொண்டது.
அவள் காதோரம் தன் உதடுகள் உரச "கண்ணம்மா," என்றான்.
கனி "ஹ்ம்ம்," என்றாள் தூக்கத்திலேயே.
அவள் கீழுதட்டை தன் அதரங்களால் சிறைப்பிடித்தவனின் செயலில் அவள் தூக்கம் பறந்தோட அவனை தள்ளி விட்டு விலகி, "என்ன மாமா இங்க இருக்க; உன் அறைக்கு போ," என்றாள்.
அவளை இழுத்து தன் கரத்துக்குள் கொண்டு வந்தவன் “அங்க தூக்கம் வரவில்லை, கண்ணம்மா. தலையணை கல் போல் இருக்கிறது. கொல்கத்தாவில் நான் தலை வைத்து தூங்கிய இடம் நல்ல சாஃப்ட் ஆ இருந்துச்சு கண்ணம்மா” என்றான்.
“அதுக்காக கொல்கத்தா போய் தலையணை எடுத்துட்டு வர முடியுமா, மாமா?” என்றவள் அவனிடம், “போய் படுத்து தூங்கு, மாமா. காலையில் சீக்கிரம் எழனும்” என்றதும் அந்த தலையணை இங்கு தான் இருக்கு என்றவனை புரியாமல் பார்த்தவள் அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு அவனை தலையணையால் அடித்தாள்.
சிறிது நேரம் கழித்து தலையணையை கீழே போட்டவளை நெருங்கி, “ஒன்னும் பண்ண மாட்டேன், கண்ணம்மா. கட்டி பிடிச்சுட்டு மட்டும் தூங்கிக்கிறேன்,” என்று அவளை இழுத்து, அவள் நெஞ்சில் முகம் புதைத்து படுத்து கொண்டான்.
அவன் சூடான மூச்சு காற்று அவள் நெஞ்சில் பட, அவளுக்கு இனிய இம்சை ஆனது.
அவனோ படுத்ததும் தூங்கி விட்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் உட்சந்தலையில் முத்தமிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

Post a Comment