நந்தனின் கண்ணம்மா -5
நந்தனின் கண்ணம்மா - 5:
கனி தன் கல்லூரிக்கு முதலில் செல்லும் போது சிறிது படபடப்புடன் தான் உள்ளே சென்றாள்.
அப்பொழுதுதான் விஷ்ணு அவளை பார்த்தபடி இருந்தான்.
தனியே நின்று கொண்டு திருவிழாவில் தொலைந்து போன சிறு பிள்ளைதனமான அந்த முக பாவத்தில், தன் தோழியாய் அவளை ஏற்றுக் கொண்டான்.
விஷ்ணுவிற்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை.
இவனுக்கு ஒரு தங்கை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது உண்டு.
அதனால், அவளை தன் தோழியாக, தங்கையாக ஏற்று கொண்டு, அவளிடம் "ஹலோ" என்றான்.
அவளோ "யார் நீ?" என்ற பாவத்தில் அவனை ஏறிட்டாள்.
"நான் இங்க புதுசா சேர்ந்திருக்கேன். எனக்கு கிளாஸ் எங்க இருக்குன்னு தெரியல," என்று அவளிடம் சும்மா சொன்னான்.
“அப்பாடி ஒரு பக்கீ சிக்கிருக்கு விட கூடாது” என்று நினைத்து கொண்டு, "நானும் அதைத்தான் தேடுறேன்," என்று அவனிடம் பேசியபடி, கிளாஸ் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டார்கள்.
அன்றிலிருந்து விஷ்ணுவும் அவளும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
முதல் வாரம், இவளை ரிஷி பார்க்க வந்திருந்தான். அவன் ஹாஸ்டல் உள்ளே வந்து, அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லவும், இவளுக்கு வார்டன் அவளை வர சொல்லி தகவல் அனுப்பினார்.
இவள் வரும் போது, இரண்டு பெண்கள் தங்களுக்குள் பேசி கொண்டே சென்றதை கேட்டு, வெளியே நின்றிருந்த ரிஷியை பார்த்ததும் வந்ததே கோபம்.
அவனிடம் வந்து, பொரிந்து தள்ளிவிட்டாள். "உன்னை யாரு இங்க வர சொன்னா? அம்மாவ வர சொல்ல வேண்டியது தானே?" என்று கத்தினாள்.
"என்ன அம்மணி, வந்ததும் கத்துறாங்க," என்று நினைத்து கொண்டு, அவளிடம் "என்னடா, என்ன ஆச்சு? உன்ன ஒரு வாரம் பார்க்காம இருந்தது. இப்போதானே முதல் தடவை. அதான், இன்னைக்கு லீவு தானே, அதான் வந்தேன்," என்று அவன் சொன்னதும், அவளுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
அது ஏன் என்று அவள் அப்பொழுது யோசிக்கவில்லை.
"சாரி நந்து, எதோ டென்ஷனா இருந்துச்சு, அதான் கத்திட்டேன்," என்றாள். அப்பொழுது விஷ்ணு, அவன் அப்பா அம்மாவுடன் தன் தோழியை பார்க்க வந்தான்.
அவனை கண்டதும், "ஹே ஹாய் டா," என்று அவள் அவனை விட்டு, அவனின் பெற்றோர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது ரிஷி, அவனிடம் வந்து பேச்சு கொடுக்க, சிறிது நேரத்தில் இருவரும் கைப்பேசி எண் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டனர்.
சிறிது நேரம் இருந்து விட்டு, அவர்கள் கிளம்பி சென்றதும், ரிஷி கனியிடம் "சரி டா, நான் போய்ட்டு வரேன்," என்றவனை, "நீ வர வேண்டாம். நான் இனி வார வாரம் வரேன் ஊருக்கு. சரியா?" என்றாள்.
"சரி, பத்திரமா இருந்துகோ டா," என்று விட்டு சென்றவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.
அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தவள், அவன் தன் கண்ணில் இருந்து மறைந்த பிறகு தான் தன் அறைக்கு சென்றாள்.
அடுத்த நாள் காலையில், கிளாஸ் பிரேக்கில் விஷ்ணுவுடன் பேசி கொண்டிருந்தபோது, அந்த இரண்டு பெண்கள் இவர்களை கடந்து சென்றனர். அப்பொழுது அவர்களை இவள் ஏன் முறைக்குறா என்று நினைத்து கொண்டு அவளிடம் கேட்டான்.
நேற்று தான் அவர்கள் பேசி சென்றதை அவனிடம் சொன்னாள்.
"ஹே, சூப்பரா இருக்கான் டி! மரத்தில ஒரு கால் வச்சு, ஸ்டைலா ஹீரோ மாதிரி போஸ் கொடுத்துட்டு, எவ்ளோ அழகா இருக்காங்க!" என்றாள் ஒருத்தி.
அதை கேட்டதும், வேற யாரோ என்று நினைத்து வந்தவள், அங்கு ரிஷிதான் மரத்தில் ஒரு கால் பின்னாடி மடக்கி வைத்து, ஒரு கால் தரையில் ஊன்றி கொண்டு போன் நோண்டி கொண்டிருந்தான்.
"என் மாமன தாக சொன்னீங்களா டி?" என்று நினைத்து கொண்டு, "இவன் எதுக்கு இங்க வந்து, அடுத்தவ கொல்லிக் கண்ணுலாம் இவன் மேல படுது!" என்று தான் அவனை வந்ததும் திட்டினாள்.
இதையெல்லாம் விஷ்ணுவிடம் கூறி கொண்டிருந்தாள்.
"ஹே, நீ அவரை லவ் பண்றியா?" என்று கேட்டான். அப்பொழுது தான் அவளும் யோசித்தாள்.
"ஆமா, நான் ஏன் அவ்ளோ கோவப்பட்டேன்?" என்று அவள் யோசித்து கொண்டே அவள் இடத்திற்கு சென்றுவிட்டாள்.
"இதுக்கு தான் இந்த லவ் பண்றவங்க கூட ப்ரெண்டா இருக்க கூடாது! அப்படி இருந்தா ஒன்னு, அதுங்க தனியா பேசுங்க! இல்ல, கூட இருக்குறவன தனியா பேச விட்டுடுவாங்க!" என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டான்.
இதை அவன் ரிஷியிடம் முன்பே சொல்லி இருந்தால், இந்த அளவுக்கு இருவரும் வருந்தும் நிலைமை வந்திருக்காது.
நந்தன் வெளியே சென்று விட்டு, அப்பொழுதுதான் உள்ளே வந்தான்.
மாமாவுடன் யாரோ ஒருவர் பேசி கொண்டிருந்தார். அவன், அவர்கள் ஏதோ தொழில் பற்றி பேசுகிறார்கள் என்று நினைத்து கொண்டு, தன் அறைக்கு சென்றான்.
வந்தது வேறு யாருமில்லை.
கனியின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனுடைய அப்பா தான் அவர்.
அவர், சென்னையில் பெரிய பணக்காரர் எனவும், கனியை தன் மகன் ஒருதலையாக விரும்புகிறான் எனவும், "நீங்க சம்மதிச்சா இருவருக்கும் திருமணம் செய்து வைத்து, மேல்படிப்பிற்கு இருவரையும் லண்டன் அனுப்புவதாக," சொன்னார்.
ஆனால் சுதர்ஷன், அவரிடம் தன்மையாக மறுத்தார்.
"இப்போ என் பொண்ணுக்கு கல்யாணம் நாங்க பண்ணலங்க! அதும் இல்லாம லண்டன்ல என் பொண்ணை விட்டுட்டு, இங்க எங்களால் இருக்க முடியாது," என்றதும், அவர் கிளம்பிவிட்டார்.
இதை அரைகுறையாக கேட்ட அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்கள் பேசியதை, தன் மாமா கனிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார் என்று நினைத்து கொண்டு, தன் நிம்மதி இழந்தான் ரிஷி.
ஆறு வருட படிப்பையும் முழுமையாக முடித்து விட்டு, "மாமாவ கல்யாணம் பண்ணி கொண்டு ஜாலியா இருக்கலாம்," என்று நினைத்தவள், தன் தந்தையுடன் வீட்டிற்கு வந்தாள்.
ரிஷி, அப்பொழுது தன் மாமாவிடம் கேட்டிருந்தால், அனைத்தையும் சொல்லியிருப்பார்.
ஆனால் அவன், "என் கண்ணம்மா எனக்கு மட்டும்தான்! வேற யாருக்கும் தரமாட்டேன்!" என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
அவள் வருவது தெரிந்து, அவன் வயலில் உள்ள தோப்பு வீட்டில், தன் நண்பன் கதிருடன் இருந்தான்.
"என்னடா, ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு? இவ்ளோ நேரம் நீ இங்க இருக்க மாட்டியே?" என்று கேட்டதும், "மனசு சரியில்ல டா," என்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
கதிர், அங்கிருந்த பானையில் இருந்த கள்ளை எடுத்து, அவனிடம் நீட்டி, "இதை குடிச்சா எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் டா," என்றான்.
இங்கு வீட்டிற்கு வந்தவளுக்கோ, தன் மாமனை காணாமல் வயலிற்கு புறப்படவளை பாட்டி தான் தடுத்து நிறுத்தினார்.
"அவனுக்கு எதாவது வேலையா இருக்கும். வந்துருவான். நீ உள்ள போ," என்றவர், அவளை அழைத்து சென்றார்.
ரிஷி, அங்கு இருந்த அனைத்து கள்ளையும் குடித்து விட்டு, இரவு அனைவரும் தூங்கிய பிறகு வந்தான்.
வந்தவன், தன் அறைக்கு சென்று, தன் அம்மாவின் தாலிகொடியை எடுத்துக்கொண்டு, கனி அறைக்கு சென்றான்.
அவள் நன்றாக தூங்கி கொண்டிருந்தவளை நெருங்கி, அவள் கழுத்தில் அந்த தாலி கொடியை அணிவித்தான்.
ஏதோ தோன்ற, கண் விழித்தாள். முதலில் கண்டது — கண்கள் சிவந்து, தலை கலைந்து நிற்கும் தன் மாமனை தான்.
"என்ன மாமா, ஏன் இப்படி இருக்க? இவ்ளோ நேரம் என்ன பண்ணின? ரொம்ப வேலையா?" என்று தூக்க கலக்கத்தில் பேசிக் கொண்டிருந்தவளை, அணைத்து கொண்டு, "நீ எனக்கு மட்டும்தான் கண்ணம்மா!" என்றான்.
அப்பொழுது அவன் மேல் இருந்து வந்த வாசனை, அவளுக்கு கொமட்டியாக இருந்தது.
"தள்ளு மாமா! குடிச்சுருக்கியா?" என்றவள், அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு அதிர்ந்துபோனாள்.
"மாமா, இது எப்படி? என்ன மாமா பண்ணி வச்சிருக்க?" என்று கேட்டவளுக்கு, அவன் பதில் சொல்லவில்லை.
என்றதும், திரும்பிப் பார்த்தாள் அவன் மட்டையாகி கிடந்தான்.
அதற்கு மேல் இங்க இருந்தால், "மாமா வைத்தான் தப்பா நினைப்பார்கள்.அம்மா அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது?" என்று நினைத்து கொண்டு, விஷ்ணுவிற்கு கால் பண்ணினாள்.
அதன் பிறகு, அவனிடம் பேசி விட்டு, தன் துணிகள் கொஞ்சம் எடுத்து கொண்டு,
"என்னை தேட வேண்டாம்" என்று எழுதி வைத்து விட்டு, விஷ்ணுவின் துணையோடு கொல்கத்தாவிற்கு வந்தாள்.
வரும் பொழுது, தன்னுடைய சிம் கார்டையும், விஷ்ணுவின் சிம் கார்டையும் தூக்கி போட்டு விட்டாள்.
மாமா கிட்ட பேச கூடாது என்று வாக்கு வாங்கி கொண்டாள்.
தன் தோழி படும் பாட்டை பார்க்க முடியாமல், மூன்று மாதங்கள் தேடி களைத்தவனுக்கு, விஷ்ணு கால் செய்து, ரிஷியிடம் தங்கள் இருப்பிடம் சொல்லி வர வைத்தான்.
முன்பு நிகழ்ந்த அனைத்தையும் நினைத்து பார்த்தவன் தன் தோளில் சாய்ந்து தூங்கும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
விமானம் தரையிறங்கியதும் அவளை எழுப்பி அழைத்து வந்தான்.

Post a Comment