நந்தனின் கண்ணம்மா -4
நந்தனின் கண்ணம்மா - 4:
ரிஷிக்கு சிறு வயதில் இருந்தே விவசாயம் மேல் ஒரு ஈர்ப்பு. அவன் அப்பாவின் சொத்து 25 ஏக்கர் இருக்கும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இவர்களின் நிலம் தான். அதில் அனைத்திலும் தென்னை மரங்கள் தான் இருக்கும்.
அவன் பொள்ளாச்சியில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி படிப்பை தேர்ந்தெடுத்தான். முதல் நாள் கல்லூரிக்கு சென்று, தனது வகுப்பு எந்த ப்ளாக்கில் உள்ளது என்று கேட்டுக் கொண்டு, தன் வகுப்பில் அமர்ந்தான்.
இரண்டு வகுப்பு முடிந்ததும், அடுத்த வகுப்பு ஆசிரியர் வரவில்லை என்பதால், அனைவரும் பக்கத்தில் அமர்ந்தவர்களிடம் பேசி கொண்டு இருந்தார்கள்.
ரிஷியும் தன் பக்கத்தில் உள்ளவனிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தவன். தன் கைப்பேசி அழைப்பதை பார்த்து எடுத்தான்.
“மாமா தான். இப்போ என்ன கால் பண்றாரு?" என்று எடுத்தவன், "சொல்லுங்க மாமா!" என்றதும், "நந்தா வீட்டுக்கு வா பா," என்றவரிடம், "என்ன மாமா ஆச்சு?" என்றான்.
"எல்லாம் நல்ல விசயம் தான். வீட்டுக்கு வா, சொல்றேன்," என்றார்.
அவன் உடனே கிளம்பி விட்டான். வந்ததும், அனைவரும் ஹாலில் உட்கார்ந்து இருந்தனர்.
"என்ன ஆச்சு?" என்றவனிடம், "நம்ம கனி இருக்காள்ல," என்று பாட்டி ஆரம்பித்ததும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல், தன் அறைக்கு சென்றான். அங்கு அவள் இல்லை என்றதும், அவள் அறைக்கு சென்று பார்த்த போது, கட்டிலில் படுத்திருந்தாள்.
"கனி! என்னடா ஆச்சு? ஏன் படுத்துருக்க? ஸ்கூலுக்கு போகளையா நீ?" என்று கட்டிலில் அவன் அமர்ந்ததும், அவள் எழுந்து அழுதுக் கொண்டே, அவன் மடியில் படுத்துக் கொண்டு இடுப்பை கட்டிக் கொண்டாள்.
"ஏன்டா அழுகுற? பாட்டி எதாவது சொன்னாங்களா?" என்று வினவியவன், அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, "நான் எதும் அவள சொல்லவில்லை," என்று பாட்டி வந்தார்.
அவர் பின்னாடி மற்ற அனைவரும் நின்றிருந்தனர்.
"நந்தா... வயிறு வலிக்குது டா!" என்றாள்.
"சரி வா, நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்," என்றான். உடனே பாட்டி, "ரிஷி, ஹாஸ்பிடல்லாம் எதும் தேவை இல்லை.
அவ பெரிய மனுஷி ஆயிட்டாடா. அதான் வலிக்குது. அதை சொல்வதற்குள் நீ மேலே வந்து விட்டாய்," என்றார்.
"சரி... வயிறு வலி போறதுக்கு ஒரு வழி சொல்லுங்க. அவ அழுகுறா பாருங்க," என்றவனை கண்டு, "இது என்ன, சுமையா வாங்கி சுமக்குரதுக்கு? அவ தான் தாங்கி ஆகனும்!" என்றார்.
"நீங்க எல்லாம் போங்க. நா பாத்துக்கிறேன்," என்றதும், பாட்டி, "சரி," என்றுவிட்டு, தன் மருமகளிடம், "அனைவருக்கும் சொல்லுமாறு" சொன்னார்.
"ஐந்தாவது நாள் தண்ணி ஊத்திக்கலாம். அப்போவே பெருசா ஒரு ஃபங்ஷன் வச்சுரலாம்," என்று தங்களுக்குள் பேசியபடி சென்றனர்.
ரிஷி தன் கைபேசியை எடுத்து, கூகுள்கிட்ட, "வயிறு வலிக்கு என்ன பண்றது?"ன்னு கூகுள் தான் தாராள பிரபு இல்லையா? நிறைய வழிமுறைகள் கொடுத்தார். அவன் அதனை பார்த்து, சமயலறையில் எல்லாவற்றையும் உருட்டி, ஒரு கஷாயம் கொண்டு வந்தான்.
"எனக்கு எதும் வேண்டாம்!" என்றவள், அவனை அமர வைத்து, மடியில் படுத்து கொண்டாள். அவளை எழுப்பி, தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு, அவள் வாயில் வைத்து குடிக்க வைத்தான்.
சுதர்சன் தன் மகளின் விழாவை அமர்க்களம் படுத்தியிருந்தார்.
தங்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்.
பொள்ளாச்சியில் உள்ள பெரிய மண்டபத்தில் விழாவை வைத்திருந்தார்.
அன்று பார்த்ததுதான் அவன் கனியை.
இந்த நான்கு நாட்களில் பார்க்கவில்லை.
பாட்டிதான் அவளை ரூமில் இருந்து வெளியே வர விடவில்லை. .
"இந்த நேரத்தில் ஆண்களை அவள் பார்க்க கூடாது" என்று சொன்னதும், அவனும் போய் பார்க்கவில்லை.
கனியை அழைத்து வந்தார்கள். அவளை நடுநாயகமாக இருந்த நாற்காலியில் அமர வைத்தனர். அவள் அமர்ந்ததும் நந்தனைத்தான் பார்த்தாள்.
அவள் ரூமில் இருந்து வெளியே வந்ததிலிருந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
முன்பு இருந்தவளுக்கும் இப்பொழுது இருப்பவளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
பாவாடை சட்டை அணியாமல், புடவை அணிந்து அழகாக இருந்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவள் அவனை பார்த்து, "என்ன?" என்று புருவம் ஏற்றி அவள் கேட்ட அழகில், அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.
பக்கத்திலிருந்தவர் அவன் தோளை தொட்டு அழைத்ததும் தான் இவ்வுலகிற்கு வந்தான்.
சுதர்ஷன்தான் அவனை மேடையிலிருந்து அழைத்தார். அவர் அழைத்ததும் மேடை ஏறி, "சொல்லுங்க மாமா" என்றான்.
ஒரு மாலையை எடுத்து அவனிடம் கொடுத்து, "இதை கனி கழுத்துல போடு" என்றார். பிறகு அவர் சொன்னதை எல்லாம் செய்தான். அவன் மாலையிடும் போது அவள் கண்களையே பார்த்தான்.
இவன் பார்க்கவும் அவள் சிரித்தாள். அதற்கு பின்பு அங்கு என்ன நடந்தது என்று கேட்டால், அவனுக்கு தெரியாது.
அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவன் கண்ணம்மாதான்.
விழாவை முடித்துவிட்டு, அனைவரும் வீட்டிற்குள் வந்து ஓய்வு எடுக்க சென்றார்கள். கனியும் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
ரிஷி தன் அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு கனியைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
"என்ன ஆச்சு? நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்?" என்று நினைத்து கொண்டு படுத்திருந்தவனை, ஒரு கரம் வந்து அணைத்துக் கொண்டு அவன் பக்கத்தில் படுத்து, அவனை கட்டிக் கொண்டது. வேறு யார்? கனி தான்.
உடனே இவன் திரும்பி, "கனி, இங்க ஏன் டா வந்த? பாட்டி பாத்தா திட்டுவாங்க. உன் ரூம்ல போய் ரெஸ்ட் எடு" என்றான்.
"போ டா. எனக்கு அங்க தூக்கமே வரல தெரியுமா? ப்ளீஸ், எனக்கு தூக்கம் வருது. தூங்கவை" என்றாள்.
அவன், அவள் ஒரு கையால் மெதுவாக தட்டி கொடுத்து, ஒரு கையால் அவள் தலையை வருடிக் கொடுக்க, சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்.
—-
"டேய் நந்தா! இன்னும் வயலுக்கு போகாம, என்னடா இந்த கிழவி கூட கடலை வருத்துட்டு இருக்க?" என்று வந்தவளை, முகம் முழுக்க புன்னகையுடன் திரும்பி பார்த்தான்.
அப்பொழுதுதான் சுதர்ஷன் அவளை கல்லூரியில் இருந்து அழைத்து வந்தார்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டிருந்தாள்.
ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.
சனி, ஜாயிறு மறக்காமல் தன் தந்தையை வந்து அழைத்து போகச் சொல்லுவாள்.
இப்பொழுது கடைசி ஆண்டு ஹவுஸ் சர்ஜன் ஆக இருக்கிறாள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள்.
அங்குதான் விஷ்ணு இவளுக்கு நண்பனாக கிடைத்தான் (பாவம், மாட்டிக் கொண்டான்). தினமும் விஷ்ணுவிடமும் ரிஷி கால் பண்ணி பேசுவான். அவளை பார்த்துக் கொள்ள வேண்டி கேட்பான்.
அப்படித்தான் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். "யார பாத்துடி 'கிழவி'னு சொல்ற?" என்றவரை பார்த்து, "நீ என்ன குமரியா?" என்றாள்.
"நான் கிழவியாவே இருந்துட்டு போறேன், அது என்ன 'மாமா'ன்னு கூப்பிடாம பேரு சொல்லி கூப்டுறது? இது என்ன பழக்கம்?" என்றவரை கண்டு, "இரு! மாமான்னு தானே கூப்பிடனும்" என்று ரிஷியைக் பிடித்துக் கொண்டு, "மாமா! மாமா! மாமா!" என்றாள்.
பிறகு, "போதுமா கிழவி?" என்று அழுத்தி சொன்னாள்.
இதையெல்லாம் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி, "வந்ததும் ஆரம்பிச்சுட்டாயா உன் அலப்பரையை?" என்றான்.
"சரி, நீ உள்ள போ. நான் வயலுக்கு போயிட்டு வரேன்" என்று விட்டு சென்றான். ரிஷி வேளாண்மையில் இளங்கலை பட்டமும், முதுகலை பட்டமும் முடித்து விட்டு AO தேர்வு எழுத படித்து கொண்டு, சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான்.
அவன் வயலுக்கு சென்று வந்ததும் தன் அறைக்கு சென்றான். "வாங்க மகாராஜா! தங்களின் வயல்வலம் (நகர்வலம், ஊர்வலம்) எப்படி இருந்தது?" என்று கேட்டாள்.
"ஓஹ்ஹ்... வரவேற்பு அமோகம்! யான் ஆனந்தம் கொண்டேன்!" என்று சிரித்தான்.
"ஒழுங்கா சாப்பிடுறது இல்ல போலயே. எனக்கு தகவல் வருது" என்றான்.
"யாரு? அந்த நெட்ட கொக்கு தானே போட்டு குடுத்தது?"
"அவன் தான், அவனே தான்!" சிரித்து கொண்டே சொன்னான்.
உடனே விஷ்ணுவிற்க்கு கால் பண்ணினாள்.
அவன் எடுத்ததும், "எரும மாடு என் சாப்பாட புடுங்கி தின்னுட்டு, பெரிய புடுங்கி மாதிரி மாமா கிட்ட போட்டு குடுத்துருக்க! நீ காலேஜ் வந்துதானே ஆகனும்? அப்போ இருக்கு உனக்கு!" என்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேக்காமல் வைத்து விட்டாள்.
"ஹே! விடுடா, அவன் பாவம்!" என்று ரிஷி, விஷ்ணுக்கு வக்காலத்து வாங்கினான்.
"அப்போ நீங்க மாமா?" என்றவள், அவன் என்னவென்று உணரும் முன்பே அவன் மீசையை நன்றாக இழுத்து, அவனுக்கு வலி குடுத்து கதவிடம் சென்றவள்.
அவனிடம், "நீங்க ரொம்ப ரொம்ப பாவம் மாமா!" என்று சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.
"கண்ணம்மா!" என்று கண்கள் மூடி கனவுலகத்துக்கு சென்றவனை கண்டு, அவன் மனசாட்சியோ, "டேய் அவ என்னமோ! உன் கன்னத்துல முத்தம் கொடுத்த மாதிரி இப்படி ஃபீல் பண்றியே!" என்று காரி துப்பியது.
அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவன் தன் கண்ணம்மாவுடன் தன் கனவுலகத்துக்கு சென்று விட்டான்.
அங்கு அவன் கண்ணம்மாவும், தன் மாமன் தன் மனதில் மன்னவனாக மாறிய தருணத்தைதான் நினைத்து கொண்டு இருந்தாள்.

Post a Comment