மோகம் -4

 


மோகம்-4:


மித்ரன் குடுத்த பையை தன் நெஞ்சோடு அணைக்க அங்கு ஏற்பட்ட வலியில் அவள் கணவன் கொடுத்த முத்தமும், மொத்தமும் நியாபகம் வந்து அவளை கிறங்கடித்தது. 


"எனக்கு ஏன் இப்படி தோணுது..? இவங்க கூட இனி சேரக்கூடாது. என்னென்னமோ பண்றாங்க" 


என்று நினைத்துக்கொண்டே உடைமாற்றி கொண்டு வந்தாள். 


ஆனால் மதி ஒரு விஷயம் மறந்துபோனாள் அவன் தன்னை பணத்திற்காக கட்டிக்கொண்டுவந்தான் என்று பாவையவள் மறந்துவிட்டாள்.


ஒருவேளை மித்ரன் மறக்கடித்துவிட்டானோ??


அங்கு சிவகாமியோ கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.


அப்பொழுது அவரது மகள் ஹாஸ்டலில் இருந்து லீவுக்காக வந்திருந்தாள், அவள் பெயர் வான்மதி. 


"அம்மா ஏன் ஏதோ உன் தலைமேலே இடி விழுந்த மாறி உட்காந்துருக்க.. நீ இப்படி இருக்க மாட்டியே.."


"அடுத்தவங்க தலையில எப்போ கல்லை தூக்கி போடலாம் என்றுதானே பார்த்துட்டு இருப்ப.. இப்போ என்ன இப்படி இருக்க?" 


என்று வான் மதி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த பக்கமாக சென்ற ராணி காலையில் நடந்த அனைத்தையும் கூறினாள். 


வான்மதியிடம் அனைத்தையும் கூறிக்கொண்டே,


"எப்படியோ மதி நல்லார்ந்தா போதும் "என்று ராணி சொல்லவும் ,சிவகாமி ஆங்காரமாக எழுந்து "அவ எப்படி நல்லாருக்கானு நானும் பாக்குறேன்.. நாளைக்கே சென்னைக்கு போய் அவளை என்ன பண்ணுறேனு பாருங்க" என்று கத்தினாள்.


"ஏன் மா, நீ திருந்தவே மாட்டியா..?அக்கா எப்படியோ உன் தொல்லையில் இருந்து தப்பிச்சுடுச்சுனு இப்போதான் சந்தோஷப் பட்டேன்.. அதுக்குள்ள அங்க போறேன்னு சொல்ற" என்று திட்டினாள்.


வான்மதி சிவகாமியைப் போல் இல்லாமல் மதியிடம் பாசமாக இருப்பாள். அவளுக்கு வாங்கி குடுக்கிற திண்பண்டத்தில் மதிக்கும் குடுப்பாள்.


ராணி வானுவிடம் ,"உங்க அம்மா இந்த ஜென்மத்துல திருந்தாது, திருத்தவும் முடியாது.. உன் அம்மா எதாவது கோல்மால் பண்ணும்னு தெரிஞ்சுதான் அந்த நல்ல மனுசன் பத்திரத்தைக் கிழிச்சிப் போடாம கையோட எடுத்துட்டு போய்டாரு "என்றாள்.


வான்மதி , "சூப்பர் மாமா நல்லவராகவும் ,அறிவாலியாவும் இருக்கார்" என்று சிவகாமியை பார்த்து நக்கலாக கூறினாள்.


அதை கண்டு சிவகாமி மதியைப் பொருமி தள்ளினார். "அவ இங்க இருக்கிறத விட்டுட்டு எவனோ வந்தான் கல்யாணம் பண்ணினான்னு அவன் கூடவே போய்ட்டா" என்று இவர் தான் கல்யாணத்திற்கு தயாராக சொன்னார் என்பதை அக்கணம் மறந்து விட்டார் போல .


(அய்யோ சிவகாமி உனக்கு பிபி தான் இருக்குன்னு நினைச்சேன் அம்னீஷியா வேற இருக்கா)


வான்மதி சிவகாமியைப் பார்த்து,"மா அக்கா என்னமோ காதலிச்சு கல்யாணம் பண்ணின மாதிரி சொல்ற ,உன் சொத்து எல்லாத்தையும் அக்கா தான் காப்பாற்றி கொடுத்துருக்கா.. இல்லனா இந்த நேரம் நம்ம நடுத் தெருவுல தான் நிக்கனும்.. அதை மனசுல வச்சு பேசு".


இங்கு புடவையை மாற்றி வெளியே வந்தவள் அவனை பார்க்க முடியாமல் தயங்கி நின்றாள்.


மித்ரன் அவள் குனிந்த தலையுடன் தன்னை பார்க்காமல் நிற்கவும் 


"மதி இப்படி நீ என்னை பார்க்காம இருந்தா தண்டனை கிடைக்கும்.." என்று கடுமையான குரலில் கூறியவன் "என்னை நிமிர்ந்து பாரு" என்றான்.


அப்பொழுதும் அவள் நிமிராமல் இருக்கவும் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கீழுதட்டை பல்பட கடித்து இழுத்து சப்பினான். 


அவள் நிமிர்ந்து பார்க்கவும் "குட்" என்றவன் அவள் கட்டியிருந்த சாரியில் உள்ள ஸ்டிக்கர் எடுக்காமல் இருக்கவும் அதை எடுத்துக் கிழித்துப்போட்டான்.


அதை கண்டதும் தான் அவன் பத்திரத்தை கிழிக்கவில்லை என்று நியாபகம் வந்தது. 


"ஏங்க " என்று அழைத்தவள் அவன் என்னவென்று அவளை பார்க்கவும் ," பத்திரத்தை நீங்க கிழிக்கவே இல்லை" என்றாள். 


"உன் சித்தியைப் பற்றி தெரியாதா அதனால்தான் கிழிக்காம வச்சிருக்கேன்".


"அவங்கிட்ட குடுத்துடுங்க பாவம்.. நிம்மதியில்லாம இருப்பாங்க" என்றதும் அவனுக்கு வந்ததே கோவம் "அவங்களுக்கு நீ பாவம் வேற பாக்குறியா.. அவங்க உனக்கு.." ஏதோ கோபமாக கூற வந்தவன் வாயை மூடிக்கொண்டான்.


ஒரு பையை எடுத்து அவளிடம் "இந்தா இதுல மொபைல் இருக்கு.. நான் வெளியே இருக்கும்போது உனக்கு எதாவது தேவைப்பட்டா என்னை கூப்பிடு.. இதுல என் நம்பரும் ,விக்கி நம்பரும் சேவ் பண்ணி வச்சுருக்கேன் " என்றான்.


"எனக்கு மொபைல் பத்தி எதுவும் தெரியாது".


" சரி நான் வந்து சொல்லி தரேன்.. இப்போ வா கீழே போகலாம் " என்றவன் அவளை அழைத்து சென்றான்.


அவன் வந்து சோபாவில் அமர்ந்து அவளையும் தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டான்.


பின் தன் வீட்டுவேலைக்காரன் முத்துவை அழைத்து , "அண்ணா, உங்க பெரிய ஐயாக்கிட்ட சொல்லுங்க.. நாங்க வந்துட்டோம்னு.." என்று அவனை அனுப்பிவைத்தான்.


கொஞ்சம் நேரம் முன்பு மித்ரனின் அப்பாதான் அவனுக்கு அழைத்திருந்தார். பின்பு ராதாகிருஷ்ணனும் சுலோச்சனாவும் வந்தனர்.


மித்ரன் அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தான்.


அவர்கள் இருவரின் பார்வையும் எதையோ மித்ரனிடம் வேண்டியது. 


பின்பு கிருஷ்ணன் சுலோச்சனாவிடம் பேசுமாறு கண்ணை காட்டினார்.


"கண்ணா.. கல்யாணம் தான் யாருக்கும் தெரியாம நடந்துச்சு.. அதனால ஒரு நல்ல நாளா பார்த்து எல்லாருக்கும் பத்திரிக்கை குடுத்து கல்யாணம் பண்ணிக்கோபா.. நாங்களும் உன் கல்யாணத்தை பார்த்த மாதிரி இருக்கும்.. எல்லோருக்கும் தெரியபடுத்தின மாதிரியும் இருக்கும் " என்றார்.


அவன் ஏதோ ஜோக்கை கேட்டதுபோல் சிரித்தவன் , 


"வாவ் !! வாட் அ ஜோக்?? பிள்ளையோட வளர்ச்சியையே பார்க்காதவர்கள்.. கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்" 


என்று அவர்களை நக்கல் செய்தவன் பின்பு ஏதோ சொல்ல வந்தவன் கையை அழுத்தி பிடித்த மதி இரைஞ்சுதலாக அவனை பார்த்தாள்.


பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் , "சரி உங்க இஷ்டம்போல பண்ணுங்க "என்றதும் பெரியவர்கள் சந்தோஷமடைந்தனர். 


அவ்ளோதான் பேச்சு என்பதுபோல் மித்ரன் எழுந்து கொண்டான் ,அவன் எழுந்ததும் மதியும் எழுந்தாள். அவன் அவளை அழைத்து தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.


மதிக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது, 'இவரோட அப்பா அம்மா ஏதோ பண்ணிருக்காங்க.. அதனால் தான் அவங்க மேல இவர் கோவமா இருக்கார் போல ". 


"ஏன்தான் இவரு கோவப்படுறாரோ?" என்று நினைத்தவள் அவன் கதையைக் கேட்டு இவளே அவன் அப்பா அம்மாவிடம் 'ஏன் என்னோட புருஷனுக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுத்தீங்க' என்று சண்டைக்கு போக போவதை இவள் அப்பொழுது அறியவில்லை..


அங்கு நின்று எதோ யோசித்து கொண்டிருந்தவளை கண்டவன் அருகில் வந்து


"மதுக்குட்டி.. என்ன யோசிக்கிறீங்க?" என்று அவள் காது மடலை தன் அதரங்கள் உரச மென்மையாக கேட்டான். 


தன் நினைவில் இருந்து வெளிவந்தவள், "ஏன் உங்க அப்பா அம்மாட்டா பேசமாட்டுறீங்க? அவங்களும் உங்களை பாவமா பாக்குறாங்க.. வயசான காலத்துல நாம தானே அவங்கள பாத்துக்கணும்.. ஏன் நீங்க பேசமாட்றீங்க..?"


அவள் பேச பேச கோபத்தில் அவன் முகம் சிவந்தது.


அவன் முகத்தை பார்த்ததும் "ஐயோ.. கோவப்படுத்திட்டோமோ?" என்று நினைத்தவள் அவனை நெருங்கி அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து, 


"நான் எதாவது தப்பா கேட்டுடேனா " என்றாள்.


அவள் கைகளை உதறியவன் "ஆமா.. தப்பாதான் கேட்ட.. இனி என்கிட்ட அவங்கள பத்தி பேசாத.. இதுவே கடைசி முறையா இருக்கட்டும்.." என்று கத்தினான்.


அவன் கத்தியதும் இவள் பயந்து இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.


இவள் அவன் கோபமாக இருக்கிறான் என்று அங்கிருந்த கல் பென்ச்சில் சென்று அமர்ந்தாள்.


மித்ரன் சிறிது நேரம் தனியே நின்றவன் இவளை தேட அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.


அவன் வந்ததும் இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி அமர்ந்து கொண்டாள்.


"ஓ.. கோபமா மதுக்குட்டி உங்களுக்கு.. பாருடா என் மதுக்கு கோபம் கூட வருமா..?"என்று நினைத்துக் கொண்டு "மது " என்று அழைத்தான்.


உரிமை உள்ள இடத்தில்தான் நமது இன்பம் ,துன்பம் ,கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம்.


அதை மித்ரன் உணர்ந்துவிட்டான், ஏனெனில் தன்னை உரிமையுடன் கண்டிக்க, அவனை நேசிக்க, அவனிடம் கோபப்பட, அவனுக்கு அனைத்துமாக அவன் மதுக்குட்டி வந்துவிட்டாள்..


இனி வேறென்ன வேண்டும் தன் வாழ்வில் என்று நினைத்துக் கொண்டு உல்லாசமாக விசில் அடித்துக்கொண்டே மதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தோளில் சாய்ந்தான்.


அவன் தோளில் சாயவும் அவள் நகர்ந்து அமர்ந்தாள். 


"இரு டி உனக்கு இருக்கு தள்ளியா உக்காருர" என்று நினைத்தவன் அவள் மடியில் தலை வைத்து கொண்டு "இப்போ என்ன பண்ணுவ" என்று புருவத்தை ஏற்றி இறக்கி அவளை பார்த்து கண்ணடித்தான்.


"எழுந்திரிங்க".


"என்ன மதுக்குட்டிக்கு கோபமா?".


"ஏன் நீங்க கோபப்படலையா?".


"அது ஏதோ வேண்டாத நினைவுகள்.. கொஞ்சம் கோபம் வந்துடுச்சு".


அவள் தன் வாய் மேல் கையை வைத்து "அது உங்களுக்கு கொஞ்சம் கோபமா.. அப்படியே முகம்லாம் சிவப்பா மாறி... நான் பயந்துட்டேன்".


"நீ தான் நான் எது செஞ்சாலும் பயப்படுற.. அதுக்கு நான் என்ன பண்றது " என்று கேட்டுக் கொண்டே தனக்கு அருகே இருந்து அவள் முந்தானையை விலக்கி அந்த இடைவெளியில் தன் தலையை நுழைத்து தன் முகத்தோடு முந்தானையை இழுத்து மூடினான்.


அவள் வயற்றில் கடித்து முத்தமிட்டு ஜாக்கெட்டின் ஹீக்கை கழற்றி உள்ளே இருந்த திராட்சையை வெளியே இழுத்து... பாதிதான் தெரிந்தது அந்த சதையை கடித்து சப்பினான்.


அவன் முந்தானையை விலக்கியதுமே அவள் உடல் நடுங்க " ஏங்க என்னங்க இப்படி பண்றிங்க நாம வெளிய இருக்கோம்ங்க.. யாராவது வந்துரபோறாங்க.. எழுந்துறிங்க.. ஆ.. கடிக்காதிங்க கூசுது.. நான் இனிமே எதும் பேச மாட்டேங்க.. வெளிய.. ஹா.. விடுங்க" 


என்று கெஞ்சியவளிடம் 


"அப்போ நான் சொல்றத செய்றேனு சொல்லு" என்றவன் அவள் "சரி "என்றதும் தான் எழுந்தான்.


அவன் எழுந்ததும் கொக்கியைப் போட்டு உணர்ச்சியின் பிடியில் நடுங்கிக் கொண்டிருந்தவளை அணைத்து "அப்பா அம்மாவ பத்தி என்கிட்ட கேட்காத ப்ளீஸ் .. நானே உன்கிட்ட சொல்றேன் சரியா.." என்றதும் "ஹிம்ம் " என்றதும் "சரி வா சும்மா ஒரு ரவுண்ட் நடந்துட்டு வரலாம்".


அப்பொழுதே என்னவென்று சொல்லியிருந்தால் பின்னால் பிரச்சனை வந்திருக்காதோ!!!!!


அந்த தோட்டம் வெறும் புற்தரையாக மட்டுமே இருந்தது ஒரு ஓரத்தில் செடி வைக்கும் தொட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது . 


அதை பார்த்து மித்ரனிடம் "ஏன் ஒரு செடியும் வைக்காம வெறுமென விட்டுருக்கீங்க".

 

"அது ஒருநாள் கோவத்துல நான் தூக்கிப் போட்டு உடைச்சிட்டேன்..அதிலிருந்து இங்க எதுவும் வளர்க்கவில்லை.."


"நான் உங்களை ஒன்னு கேட்கவா".


"ஹிம்ம் ஓன்னு என்ன ஓராயிரம் கேளு.. இல்லை என்னையே கூட கேளு.. அடியேன் எதுவும் தர தயார்".


அவள் அவனை அதிர்ந்து பார்க்கவும் குறும்புக் கண்ணனாய் கண்ணக்குழி விழ கண்ணடித்து சிரித்தான்.


"நான் இங்க பூஞ்செடி வைக்க வா" என்று பயத்துடன் கேட்டாள்.


அவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்டியவன்" உனக்கு என்ன தோணுதோ செய்".


"ரொம்ப நன்றிங்க" என்று குதூகலமானாள்.


அவன் ஒரு புருவத்தை மட்டும் தூக்கி சிரிக்கவும்

"அழகா இருக்கீங்க " 


"உண்மையாவா"


அவன் அப்படி கேட்டதும்,அவள் வெளியே சொல்லிட்டோம் போல "ஐயோ "என்று மனதில் அலறியவள் திட்ட போறாரு போல என்று நினைத்துக்கொண்டு தலையை ஆட்டினாள்.


அவன் தலையில் தன் கையை வைத்து ஆட்டியவன் "வா உள்ள போகலாம்" என்று அழைத்து சென்றான்.


இருவரும் உள்ளே வந்ததும் மதியை சுலோச்சனா அழைத்தார்.


"மதி இங்க கொஞ்சம் வந்துட்டு போமா"


அவள் மித்ரனை பார்க்கவும் அவன் தலையசைத்ததும் தனது அத்தையிடம் சென்று

"சொல்லுங்க அத்தை".


அவர் ஏதோ அவள் காதில் சொல்ல சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.


என்னவாக இருக்கும்??


மித்ரன் அதை கேட்டு என்ன செய்வான்? 

கோபப்படுவானா?

இல்லை கொஞ்சுவானா?


(இவன் இரண்டுமே செய்வானே பார்ப்போம்)

No comments