நந்தனின் கண்ணம்மா -2

 
நந்தனின் கண்ணம்மா - 2:


ரிஷி கதவைத் தட்டியதும் வந்து திறந்தவள், அவன் மட்டும் நிற்பதைக் கண்டு, "எங்க விஷுவக்காணும்? இவங்க மட்டும் நிக்குறாங்க…" என்று நினைத்துக் கொண்டு இருந்தவளை அப்படியே தள்ளி கொண்டு கதவை அடைத்ததும் தான், அவளுக்கு நினைவு வந்தது. 


"விஷ்ணுக்கு வேலை இருக்காம்… அதான் கிளம்பிட்டான்…" என்றவனை ஒரு பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் சமயலறைக்கு சென்று விட்டாள். 


"எதுவுமே சொல்லாமல் போறா… திட்டுனா கூட பரவால்ல… இவ அமைதியா இருந்து கொல்றாளே…" 


அடுப்படியில் நின்றிருந்தவளோ, அவனை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள். 


ஏதோ உணர்வு தோன்ற, திரும்பியவள் கதவருகே நின்றவனை கண்டு, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள். 


அப்பொழுது தான் பார்த்தாள். மழையில் நனைந்த சட்டையுடன் நிற்பவனை. "ஐயோ! இவங்களுக்கு சளி பிடுச்சுக்குமே…" என்று பதறியவள், அதன் பிறகு எல்லாம் மறந்தாள். 


அவனை கடந்து செல்லும் முன், அவனை கையோடு இழுத்து கொண்டு, "மாமா, மழைல நனைஞ்சிட்ட வந்து, துணிய மாத்து… உனக்கு ஈரத்தோட இருந்தா ஒத்துக்காது…" என்றவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். 


அவன் எடுத்து வந்து பையில் இருந்து ஒரு துணியை எடுத்தவள், "இந்த ரூம்ல போய் மாத்திட்டு வா மாமா… நான் உனக்கு கஷாயம் தயாரித்து வைக்கிறேன்…" என்றாள். 


இவனோ அவளையே வெறித்துப் பார்த்தான். 


அந்தப் பார்வையில் அவளுக்கான ஏக்கமும், பாசமும், தவிப்பும் இருந்தது. 


அவள் குடுத்த உடைகளை எடுத்து கொண்டு மாற்றி விட்டு வந்தவனை, "இங்க உக்காரு மாமா…" என்று அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து, அவன் தலையை துவட்டி விட்டாள். 


அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், "கண்ணம்மா, என் கூட ஊருக்கு வாடா…" என்றதும் தான் அவளுக்கு அனைத்தும் நினைவு வந்தது. 


ஒன்றும் பேசாமல் சென்றவளை, "என்ன தான் பண்றது இவளை…" என்று நினைத்து கொண்டு, அவள் பின்னால் சென்றான். 


இவனும், அவள் பக்கத்தில் நின்று கொண்டு, "கண்ணம்மா, இங்க பாருடி…" என்றவனை, அவள் கண்டுகொள்ளவே இல்லை. 


இவனுக்கு பொறுமை என்பதே கிடையாது. 


இவள் அவனை கண்டு கொள்ளாமல் வேலை செய்தவளை கண்டு, அவன் பொறுமை இழந்தவனாய், "கனிஷ்கா!" என்று கத்தினான். திடுக்கிட்டுத் திரும்பியவள், பயத்துடன் அவனை பார்த்தாள். 


அவனுக்கு அது வேதனையாக இருந்தாலும், "இவளை இப்படி தான் வழிக்கு கொண்டு வரணும்…" என்று. 


"நானும் வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன்… நான் பண்ணினது தப்புதான்… சொல்லி சாரி கேட்டேன்ல…" என்றவனை கண்டு பேச வந்தவளை, "மூச் பேசக்கூடாது!" என்று அதட்டினான். 


அவன் மனசாட்சியே, "நீ சாரி சொன்னதும் மன்னிக்குற மாதிரியாடா தப்பு பண்ணியிருக்க…" என்று கேட்டதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, "நாளை காலையில நம்ம ரெண்டு பேரும் ஊருக்கு போறோம்…" என்று சொன்னவன், என்ன என்பது போல் அவளை பார்த்தான். 


அவனை நிமிர்ந்து பார்த்து, "முடியாது… நான் அங்க வர மாட்டேன்…" என்றவள், "என்னால அங்க யாரையும் பாக்க முடியாது… அவங்க மூஞ்சில எப்படி நா முழிப்பேன்?" என்று அழுதவளைக் கண்டு, ரிஷி அவளிடம், "நான் எல்லாம் அவங்க கிட்ட சொல்லிட்டேன்… மாமா தான் உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க…" என்றதும், "அப்பா என்ன சொன்னாங்க?" என்றாள், ஒரு வித எதிர்ப்பார்ப்புடன். 


அதற்கு அவன் பதில் சொல்லும் முன், "ஹட்ச்!" என்று தும்மினான். 


அதை கண்டு போய் போட்டுக் வைத்த கஷாயத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். 


அதை ஒரு மாதிரியாக பார்த்தவன், அவன் "வேண்டாம்" என்று சொல்லும் முன்பு, அவள், "வாய் வைத்துக் குடி!" என்றாள். 


"சரி, சாப்பிடலாம்… வாங்க…" என்றவளை, "ஊருக்கு என் கூட வருவேன்னு சொல்லு…" என்றான். அதை அவள் கண்டுகொள்ளவே இல்லை. 


“உனக்கு என்னை பிடிக்கலையா கண்ணம்மா? அப்போ என்னோட சுய நினைவு இல்லாம பண்ணிட்டேன். நான் உனக்கு தாலி கட்டியது யாருக்கும் தெரியாது. நம்ம வீட்டுல இருக்குறவங்களுக்கு தான் தெரியும். உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை கழட்டிடு” என்றவனைப் பார்த்து வந்ததே கோவம்.


"உன் மனசுல என்ன தான் டா நினைச்சுட்டுருக்க? நீயா வந்து தாலி கட்டுவ? நீயாவே அவிழ்க்க சொல்ற? என் விருப்பம் என்னவென்று கேட்டீங்களா?" என்றவள் தன் ரூமில் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.


ரிஷி அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்து தலையை பின்னால் சாய்த்து கொண்டவன், "உனக்கு என்னை பிடிக்கவில்லையா கண்ணம்மா? என்னை உன்னால் கணவனாக ஏத்துக்க முடியாதா கண்ணம்மா?"


இங்கு அவளோ, "மாமா, நீ என்றால் எனக்கு உயிர்! நானே படிப்பு முடிச்சுட்டு உன்னை அப்பா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்குற முடிவுல தான் இருந்தேன். அதுக்குள்ள இப்படி யாருக்கும் தெரியாம தாலி கட்டி இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுடியே! எப்படி நான் அம்மா அப்பா முகத்தைப் பார்ப்பேன்?"


"இப்போ வந்து தாலிய கழட்டிடுன்னு சொல்ற?" என்று நினைத்து தனக்குள் கரைந்துக் கொண்டிருந்தாள்.


ஒரு முடிவு எடுத்தவனாக அவள் அறையை தட்ட கை வைத்ததும் திறந்து கொண்டது. உள்ளே சென்றதும் அழுது கொண்டிருந்தவளைக் கண்டதும், அவன் எடுத்த முடிவு சரியானது தான் என்று தோன்றியது.


அப்போது தெரியவில்லை, அந்த முடிவை கேட்டு அவன் கண்ணம்மா ருத்ர தாண்டவம் ஆட போகிறாள் என்று! 


அவனுக்கு யார் சொல்வது!!


"கனி!" என்று அழைத்தவனை பார்த்தவள், "நான் என் கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கணும் என்று ஆசை பட்டேன் தெரியுமா மாமா? ஆனா உன்னோட இந்த செயலால் இப்படி எல்லாம் மாறி போயிடுச்சு!" என்றவள், "போ இங்கிருந்து! எனக்கு உன்னை பார்க்க பார்க்க கோவம் தான் வருது!" என்றவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


அவள் பேசியதை கேட்டவனுக்கு, "தன் முடிவை இப்பொழுது அவளிடம் சொன்னால் இப்படி அழுது கரைய மாட்டாள்," என்று நினைத்து கொண்டே சிறிது நேரம் நின்றவன், அவள் அருகே சென்று, "கண்ண...!" என்று சொல்ல வந்தவன், "கனி!" என்று மாற்றி,


அவளிடம், “உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்காம இப்படி பண்ணினது தப்பு தான். என்னை மன்னிச்சிடு கனிமா. அது ஏதோ அடுத்தவன் பேச்சை கேட்டு குடி போதையில் அப்படி பண்ணிட்டேன்."


"இப்போ கூட ஒன்னும் ஆகல. நீ அந்த தாலியைத் தூக்கிப் போட்டுட்டு உன் விருப்பப்படி வேற கல்யாணம் பண்ணிக்கோ..." என்றவனை கண்டு உணர்வற்று பார்த்தவள் “மரமண்ட, நீயே கட்டலன கூட, நானே உன்ன கல்யாணம் பண்ணி இருப்பேன்!" என்று மனதில் நினைத்தவள், வெளியே அவனிடம் சொல்லி இருக்கலாம். விதி வலியது அல்லவா?


இவனை பார்த்தவள், "இனி தான் எதுவும் பேசாமல் இருந்தால் இன்னும் இவனே எதாவது கற்பனை பண்றதுகுள்ள நாமே ஊருக்கு போய் வீட்டுல பேசிக்கலாம்" என்று நினைத்து கொண்டு, அவனிடம்,

"நான் ஊருக்கு வரேன்!" என்று சொன்னவள்.

"வேற கல்யாணமா பண்ண சொல்ற உன்னை தவிக்க விடனுமே... இருடி வரேன்!" என்று நினைத்து கொண்டே, அவனிடம்,

"நான் வரேன். ஆனால் அம்மா அப்பா கிட்ட சொல்லி கல்யாணம் எனக்கு பிடுச்சவரோட நல்லா கிராண்டா பண்ண சொல்வேன்!" என்று சொன்னாள்.


அவள் அப்படி சொல்லவும், அவன் முகம் வேதனையை அப்பட்டமாக காட்டியது. 


அதை பார்த்து, "இன்னைக்கு ஒரு நாள் நல்லா அவஸ்தை படு!" என்று சிரித்து கொண்டாள்.


ஆனால் இருவருக்குமே ஊரில் அவளது பெற்றோர்கள் அதிர்ச்சித் தர போகிறார்கள் என்று அப்பொழுது தெரியவில்லை இருவருக்கும்.


கனி எழுந்து கொண்டு அவனை பார்த்து, “வாங்க, சாப்பிட போகலாம்” என்றாள். 


அவனும் ஒன்றும் சொல்லாமல் வந்து அமர்ந்தான். இருவருக்கும் சாப்பாடை பரிமாறி, அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.


இவன் சாப்பாடை அலைந்து கொண்டு இருந்தான். 


அதை கண்டு, “சாப்பிடுங்க மாமா,” என்றாள். 


அவன் அதன் பின்னர் சாப்பிட்டு எழுந்ததும், அனைத்தையும் சுத்தம் செய்து அடுக்கி விட்டு வந்தாள்.


அவன் எங்கே என்று பார்த்தாள்; அவன் பால்கனியில் நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தான்.


அதை கண்டு, “ஐயோ பீல் பன்றாரு போல... ஹிம்... பண்ணட்டும், பண்ணட்டும்,” என்று அவள் போன் எடுத்து கொண்டு ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து விஷ்ணுக்குக் கால் செய்தாள்.


முதல் ரிங்கிலேயே எடுத்தவனை, “இதெல்லாம் உன் வேலைதான்னு தெரியுது. ஐயோ! கண்டு பிடுசுட்டாளே படுபாவி. இவ கைல மாட்டுனா, காலி பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பாள்,” என்று நினைத்து கொண்டு இருந்தவனை கலைத்து, “நான் நாளைக்கு ஊருக்கு போறேன்,” என்றதும், “இப்போவாச்சும் இந்த முடிவு எடுத்தியே,” என்று மனதில் நினைத்தவன், “ஓகே கனி, பாத்து போய்ட்டு வா,” என்றான்.


“நாளைக்கு மார்னிங் நீ இங்க வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றவள், “ஓகே பை,” என்று கட் பண்ணி விட்டு தன் மாமனை காண சென்றாள்.


இங்கு விஷ்ணு, “என்ன காரணம் சொல்லி இவகிட்ட இருந்து தப்பிக்கலாம்?” என்று யோசித்தபடி இருந்தான்.


தன் மாமனை காண வந்தவள், அவனை பின்னால் இருந்து அணைப்பது போல் நின்று கொண்டு, “வானத்தில் அப்படி என்ன தான் பார்த்து கொண்டிருந்தான்?” என்று பார்த்தாள்.


பின்னால் அவள் மூச்சுக்காற்று பட, இவன் அவளை திரும்பி பார்க்கும் போது, இவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். 


அந்த கண்களில் தொலைய விரும்பிய மனதை அடக்கி கொண்டு, “போய் தூங்கு கனி,” என்றான்.


“நீங்களும் வாங்க மாமா,” என்றவள், அவனுக்கு ஒரு தலையணையும் போர்வையும் எடுத்து கொடுத்தாள். அதனை வாங்கி கொண்டு கீழே படுக்கப் போனவனை, “மாமா கட்டில்ல படுக்களாம். இடம் நிறையவே இருக்கு,” என்றாள்.


“இல்ல கனி. நான் கீழ படுத்துக்குறேன்,” என்று கீழே போர்வையை விரித்தான். 


அதை கண்டு, அவளும் வேறு பக்கம் போர்வையை விரிப்பதை பார்த்து, “பிடிவாதம், பிடிவாதம்,” என்று நினைத்து கொண்டு, “கனி மேலப் படு,” என்றான்.


அவள் அதை காதில் வாங்கவே இல்லை. 


அவன்தான் பிறகு அவளிடம், “சரி வா, நானும் மேலேயே படுக்கிறேன்,” என்றதும் தான், மேலே வந்து படுத்துக் கொண்டாள். அவனும் படுத்ததும், அவள் பக்கம் இருந்த லைட் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டு படுத்துக் கொண்டாள்.


சிறிது நேரம் கழித்து, அவனை திரும்பி பார்த்தவள், அவன் சீரான சுவாசத்தால் ஆழ்ந்து தூங்குகிறான் என்று தெரிந்ததும், இவள் போர்வையை விலக்கி மெதுவாக வந்து, அவன் போர்வையை எடுத்து தானும் உள்ளே சென்று, அவன் நெஞ்சில் தலை வைத்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


தூக்கத்தில் அவனும் இவளை அணைத்துக் கொண்டான். 


அவன் அணைத்ததும், இவள் அவன் நெஞ்சில் முத்தமிட்டு தூங்கி போனாள். காலையில் ரிஷிதான் முதலில் கண் விழித்தான்.


No comments