ஒரப்பார்வையில் உயிர் கொய்கிறாய் - 1
ஓரப்பார்வையில் உயிர் கொய்கிறாய்…
உயிர்-1:
ஐயோ எப்போ போகும் இந்த பஸ் இப்படி ஆமை வேகத்துல போனா இன்னைக்கும் அந்த ப்ரொபஸ்ஸோர் கிட்ட மண்டகாபடி வாங்கணுமா..
கடவுளே இதென்ன தினமும் இதே ரோதனை.. என்ற படி தன் கைப்பையை பிடித்து இழுத்தாவாரு புலம்பி கொண்டிருந்தாள்.. கல்லூரி போகும் மாணவி..
தினமும் காலையில் இதே பொழப்பா போச்சு இவனுங்களுக்கு.. எப்போ இந்த ட்ராபிக் கிளியர் ஆகி எப்போ ஆபிஸ் போயி கிழுஞ்சுது என்று ஒவ்வொருவரும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த காலை நேரம் அது..
இது ஒரு பக்கம் இருந்தாலும் எப்பொழுதும் போல் சென்னை மாநகரம் காலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது..
இங்கு வீட்டில் அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலைகளுக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவ்வீட்டின் இளவரசி ஆருத்ரா அப்பொழுது தான் குளித்து விட்டு வந்தவள் சாப்பிட்டு விட்டு வந்து உடை மாற்றி கொள்ளலாம் என்று தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்..
ம்மா சீக்கிரம் வா ம்மா காலேஜ் கிளம்பனும் என்றவாறு வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்..
அவள் வந்து அமரவும் அவளது தந்தை ராதா கிருஷ்ணன் வந்து அமர்ந்தார்..
அவரை தொடர்ந்து ஆருவின் அண்ணன்மார்கள் மூவரும் வந்து அமர்ந்தனர்..
மூவரும் ஒரு சேர ஹாய் குட்டிமா என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் காலேஜ் கிளம்பிட்டீங்க..
ஹிம்ம்.. இன்னைக்கு வைவா இருக்கு அண்ணா.. அதான்.. சீக்கிரமா கிளம்புறேன் என்று கூறிக் க்கொண்டு இருக்க ஹிம்ம் பேசினது போதும் சாப்பிடுங்க என்று அனைவருக்கும் இட்லியை எடுத்து வைத்தார் சாரதா..
ம்மா எனக்கு ரெண்டு போதும் .. என்கவும் ஹேய் குட்டிமா நல்லா சாப்பிடு..
மருத்துவம் படிச்சுட்டு இப்போ நீயே இப்படி சாப்பிட்டா.. உலகம் என்ன சொல்லும்..என்று அவள் அண்ணன் ஒருவன் கூற ஆக்சுவலி ப்ரோ நான் அதிகமா சாப்பிட்டு போய் அந்த மேடம் என்னை கேள்வி கேட்கும் பொழுது தூங்கி விழுந்தேன்னு வச்சுக்கோ…
என் கதை கந்தல்.. அப்பறம் மார்க்கும் வராது.. ஒன்னும் வராது..
வளர்ற பிள்ளை நல்லா சாப்பிடு டா என்று அனைவருக்கும் மூத்தவன் கூற ஹிம்ம் இன்னும் ஒன்னு வை சதா என்று தன் அன்னையிடம் கூறியவள் அதையும் பிச்சு வாயில் போட்டு விழுங்கியவள் எழ..
கண்ணு இங்க வா தலை கூட ஒழுங்கா துவட்டளை என்ன பிள்ளையோ என்று அவளிடம் வந்து துண்டால் அவள் தலை முடியை உலர்த்த..
அவள் கழுத்தில் மஞ்சள் கறை இருக்க என்ன ஆரு நீ மஞ்சள் போட்டு குளிக்க மாட்டியே..
அப்பறம் எப்படி இந்த கறை.. என்று விலக்கி பார்க்க..
(ஒஹ் மை காட்..
மஞ்சள் கயிறு உடன் மஞ்சள்..
அப்படினா தாலி..தானே ஐயோ போச்சு.. தெரிஞ்சி போச்சு..
வசமா மாட்டிக்கிட்டா ஆரு..)
இப்பொழுது மீதம் இருக்கும் ஐவரும் அவளை மொத்த போறது உறுதி..
வாங்க .. வாங்க.. இங்க ..
ரொம்ப முக்கியமானவங்களை மீட் பண்ணுவோம்..
இங்கு இதற்கெல்லாம் காரணமான இரண்டு நபர்களும் தங்கள் உலகில் எதுவும் நடவாதது போல தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்..
டேய் தேவா.. என்ன டா இது காலையிலேயே இப்படி மட்டை ஆகி கிடக்கிற..
அங்க ஏதோ ஆரு வீட்டுல பிரெச்சனை ஆயிடுச்சாம் டா..
பாவம் டா அந்த பொண்ணு.. இனி அவளை நீ தான் பார்த்துக்கணும்..
நீயே இப்படி சுய நினைவு இல்லாம கிடந்தா.. அவளை யாருடா பாக்குறது..
நீயே பார்த்துக்கோ.. எனக்கு யாரும் வேண்டாம்..
போடா.. எவ டா அவ.. ஆரு சோறுன்னுட்டு..
எனக்கு அப்படி யாரையும் தெரியாது..
போடா.. இங்கிருந்து..என்று தன் நண்பனை தள்ளி விட்டவன் தெருவோரம் பறந்து வந்த என் பைங்கிளி டா அவ..
நான் வச்ச கண்ணை எடுக்காம பாக்கிறதுக்குள்ள போயிட்டா டா மச்சான்..
நான் வேண்டாம்னு என்னை விட்டுட்டு போயிட்டா..
எப்படி டா.. என்னை விட்டு போக அவளுக்கு மனசு வந்துச்சு..
நான் அவளை எவ்வளவு நம்பினேன் தெரியுமா டா..
கடைசில என்னை நம்ப வச்சு கழுத்தை துடிக்க துடிக்க அருத்துட்டா டா.. என்று கதறினான்..
டேய் நேரம் தெரியாம குடிச்சுட்டு நிக்குறியே.. இது உனக்கே நல்லாருக்கா..
பாவம் டா.. அந்த பொண்ணு.. உன்கிட்ட வந்து மாட்டனும்னு அதுக்கு விதி போல..
அவங்க வீட்டுல அந்த பெண்ணை அடுச்சுட்டாங்க டா..
நீங்க பண்ணிய தப்புக்கு அவள் தண்டனையை அனுபவிக்குறா..
என்று கத்த அவன் கூறுவது எதையும் கண்டுக்காமல் அவன் பாட்டுக்கு போதையில் உளற பக்கத்தில் வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் மேல் ஊற்றினான்..
அவன் தன் மேல் தண்ணீர் ஊற்றியதும் கொஞ்சம் போதை தெளிந்தவன்.. தலையை உதறி கையை தலையில் வைத்து கொண்டான்..
சற்று போதை தெளியவும் நேற்று நடந்தது அனைத்தும் நியாபகம் வர வந்த கோபத்தில் பக்கத்தில் இருந்ததை அனைத்தையும் எடுத்து தூக்கி போட்டு உடைக்க ஆரம்பித்தான்…
டேய் லூசு பயலே என்ன டா பண்ணுற.. டேய்.. டேய்.. என்று அவன் தூக்கி போடும் பொருள்களில் இருந்து தப்பித்து கொண்டே அலறினான்..
டேய் பிரபா நாயே.. உங்க ரெண்டு பேரால அந்த பொண்ணு அவங்க வீட்டுல அடி வாங்கிட்டு தெருவுல நிக்குது..
நீ என்னடான்னா உன் சோக கதையை நெனச்சுக்கிட்டு இங்க குடிச்சுட்டு உருண்டுட்டு இருக்க..
உங்க போதைக்கு அந்த பொண்ணு ஊறுகாயா..
நல்லா இருக்கு டா.. உங்க நியாயம்..
அவ என்னடான்னா நேத்து வரைக்கும் உயிர் தோழின்னு இணை பிரியாமல் சுத்திட்டு எனக்கு தெரியவே தெரியாதுன்னு அண்ட புழுகு ஆகாச புழுகு..
அவ வாய துறந்தாலே பொய் தான் வரும் போல.. செய்யுறதெல்லாம் அவ செஞ்சுட்டு இப்போ பழியை அந்த பொண்ணு மேல போட்டுட்டு போறா..
இந்த மாதிரி பொண்ணை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை..
போயும் போயும் உனக்கு அவள் தான் கிடைச்சாளா.. இதுல பைங்கிளியாம் ச்சீ போடா..
டேய் வாடா அந்த பொண்ணு இப்போ என்ன பண்ணுது எங்க போச்சுன்னு கூட தெரியல..
போய் பாரு டா..என்ன தான் இருந்தாலும் நீ தாலி கட்டிய பொண்ணு டா அவ..
அவ இந்த நிலைமைக்கு வர காரணமே நீங்க ரெண்டு பேரும் தான் டா..
அவங்க வீட்டுல அந்த பெண்ணை யாரும் நம்பல போல..
நான் பாக்கும் போது வெளிய நின்னுக்கிட்டு அழுதுட்டு இருந்துச்சு..
அவ அழுறதை பார்த்துட்டு ஈவு இரக்கமே இல்லாம பார்த்துட்டு அப்படியே போறா டா..
அவள் எல்லாம் என்னை பொறுத்த வரைக்கும் பெண்ணே இல்ல டா..ச்சீ என்று காரி உமிழாத குறையாக அவளை கழுவி கழுவி ஊற்றினான்..
இங்கு இவன் கழுவி ஊற்ற அவள் சொகுசாக குளுகுளு ஏசி காரில் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு அதில் பாட்டு கேட்டு கொண்டு அவள் பாட்டுக்கு எதுவும் நடவாதது போல தன் உலகத்தில் எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருந்தாள்..
இங்கு அவளை பார்க்க வந்த இருவரும் அவள் வீட்டு முன் வண்டியை நிப்பாட்ட அந்த தெருவே நிசப்தமாக இருந்தது…
டேய் இங்கதான் டா அந்த பொண்ணு நின்னு அழுதுட்டு இருந்துச்சு..
எங்க டா அதுக்குள்ள போச்சு.. ஐயோ பாவம் டா அந்த பொண்ணு வீட்டுல உள்ளவங்க தன்னை நம்பலைன்னு ஏதாவது தப்பா பண்ணி தொலைக்க போகுது..
இந்த பாவமும் நமக்கு வேண்டாம் டா.. பெண் பாவம் சும்மா விடாது டா..
வாடா அந்த புள்ளைய போய் தேடுவோம்.. பாவம் எதாவது தப்பா முடிவெடுத்துட போகுது டா..
வாடா என்று அழைக்க தேவா டேய் வா வான்னா எங்க வரது.. அவ எங்க போனான்னு எனக்கு எப்படி தெரியும்..
அந்த பெண்ணை முன்ன பின்ன கூட எனக்கு தெரியாது.. நானே நொந்து போய் இருக்கேன்.. இதுல எவளோ செத்தா எனக்கென்ன டா..
போடா அங்குட்டு உன் பேச்சை கேட்டு வந்தேன் பாரு என்று அவனை தள்ளிவிட்டு பைக் அருகில் செல்ல ஐயோ இவன் ஏன் இப்போ இப்படி பண்றான்..
லூசு பய.. என்று மனதில் நினைத்தவன்..
(ராசா கொஞ்சம் அவனுக்கு கேக்குற மாதிரி வெளியே சொல்லு பார்ப்போம்.. ஹாஹாஹா செவுளு அவலாயுடும்னு பயம்…)
டேய்.. உனக்கென்னன்னு எப்படி 0டா போக முடியுது உன்னால..
அவ என்னதான் இருந்தாலும் நீ தாலி கட்டிய பொண்ணு டா.. இனி அவ உன்னோட பொறுப்பு டா..
எவளோ ஏமாத்திட்டான்னு இந்த பொண்ணை பழி வாங்காத டா..
பாவம் டா.. அந்த பொண்ணு.. அவ பண்ணின ஒரே தப்பு அந்த சனியனுக்கு பிரெண்டா இருந்தது தான்..
அவன் யோசிப்பதை கண்டு அய்யயோ இவனை யோசிக்க விட்டா காரியம் கெட்டுடும்..
வாடா வாடா வந்து வண்டியை எடு டா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..
அந்த பொண்ணு என்று கூறியதை விட பொண்டாட்டி என்ற வார்த்தை அவனிடம் நன்றாகவே வேலை செய்தது..
அவனை மேலும் யோசிக்க விடாமல் அவனை அங்கிருந்து கிளப்பினான்..
இப்போ அவளை எங்க போய் தேடுறது.. என்று தேவா கேட்க அவ காலேஜ் போடா..
நேற்று நடந்ததை திரும்பவும் நினைவு கூர்ந்தவன் ச்சே எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கோம்.. என்று ஒரு மனம் கூற இன்னொரு மனம் அவள் ஏன் நடுவுல வந்தா என்று போட்டு கொடுத்தது…
இங்கு ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு தேடி கொண்டிருக்க இங்கு அப்பா நீங்க கூடவா என்னை நம்பலை..
என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா.. அம்மா நீயும் என்னை நம்பல.. அண்ணன்னுங்க கூட என்னை நம்பலை..
இதை என்னால தாங்கவே முடியலை.. எல்லாம் முடிஞ்சி போச்சு.. அந்த துரோகி இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியல..
அவங்க அண்ணன் வந்ததும் அப்படியே மாத்திட்டா..
கடவுளே எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை.. ப்ளீஸ் என்னை உன்கிட்ட கூப்டுகோ..
அவள் பாட்டிற்கு எதை எதையோ நினைத்துக்கொண்டு எதிரில் என்ன வருகின்றது என்று பார்க்கவில்லை.
எதிரில் படு வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அதை அவள் கவனிக்கவில்லை.
டமார் என்று ஒரு பெருஞ்சத்தம்..
உயிர் கொய்வாள்…

Post a Comment