மோகமுள் - 31:
தன் அறைக்கு வந்தவன் பார்த்தது என்னவோ சிறிதாக இதழ் பிளந்து போர்வையை இறுக்கி அணைத்த படி தூங்கும் மித்ராவை தான்.
என்ன ஏசி கூட போடாம இப்படி சுருட்டிகிட்டு இருக்கா என்ன ஆச்சு ஏதும் ஃபீவர் வந்திருச்சா என்று அவளை நெருங்கி கழுத்தில் கை வைத்து பார்க்க சில்லென்று தான் இருந்தது.
உடல் சில்லென்று இருந்தவளுக்கோ சூடான கரம் கழுத்தடியில் படவும் அந்தக் கதகதப்பு அவளுக்கு வேண்டும் போல் தோண அவனை உணர்ந்து கொண்டவள் மெல்ல விழி மலர்த்தி அத்தான் எல்லாத்தையும் கழட்டிட்டு இங்க வாங்க என்று இருகரம் நீட்டி அழைக்க ஏதே என்று ஜெர்க்கானான் .
ஏய் மித்ரா என்னடி ஆச்சு உனக்கு தூக்கத்துல எதுவும் உளராத கீழே எல்லாரும் இருக்காங்க டைம் ஆச்சு வா சாப்பிட்டுவிட்டு டேப்லெட் போடு என்று அவள் நீட்டிய கையைப் பிடித்து இழுக்க நோ எனக்கு பசிக்கல நீங்க இங்க வாங்க என்று தன் பக்கத்தில் இடத்தை தட்டி காண்பித்து வாவென்று அழைத்தாள்.
அடங்கியிருந்த மோகம் சுறுசுறுவென தலைக்கேற உடலோ கணத்து போக மித்துமா என்னடி பண்ற என்றான் மந்தகாச சிரிப்புடன்.
இப்போ என்ன அத்தான் ரொம்பத்தான் சலிச்சுக்கிறீங்க இங்க வந்து என் பக்கத்துல படுத்தா என்னவாம் அப்படியே உங்களை ரேப் பண்ண போற மாதிரி அதிர்ச்சியாகுறீங்க.
ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க அத்தான் புருஷனுக்கு தன் பொண்டாட்டி சொல்றதுதான் வேதவாக்கு தெரியுமா? ஆனால் நீங்க என்னோட பேச்சையே கேட்க மாட்டேங்கிறீங்க என்று மூக்கை சுருக்கி அழுத் தயாரானவளை இப்ப என்ன அங்க வரணும் அவ்வளவுதானே அதுக்கு ஏண்டி சிணுங்குற என்று அவளை நெருங்கினான்.
நோ இப்படியே வரக்கூடாது இந்த கோட் சர்ட் எல்லாமே கழட்டிட்டு வாங்க எனக்கு உடம்பு எல்லாம் ஜில்லுனு இருக்கு நீங்க சூடா ஹாட்டா இருக்கீங்க வாங்க எனக்கு அது வேணும் என்று மீண்டும் அழைக்க வர வர ரொம்ப அடம் பண்ற மித்ரா என்றபடி தன்னுடைய ஆடைகளைக் களைந்தான்.
நான் கோவமா இருக்கேன் என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள அடியேய் இதெல்லாம் ஓவரு இங்க திரும்புடி என்ன பக்கத்துல படுக்க சொல்லிட்டு அந்த பக்கம் திரும்பி படுத்துக்கிட்டா என்ன அர்த்தம் என்று அவளை தன் பக்கமாக திருப்பி தன்னோடு சேர்த்து அணைத்துவன் அவள் நெற்றியில் முத்தம் பதிக்க என்ன மித்ரா இவ்வளவு ஜில்லுனு இருக்க.
அதான் அத்தான் எனக்கு குளிருது அதனாலதான் ஏசி கூட போடாம படுத்திருந்தேன். அவளின் சில்லென்ற உடல் உரச படுத்துகிடக்க வேதியல் மாற்றம் நிகழ ஹார்மோன்ஸ் எக்கு தப்பாக எகிற கண்களில் அவனுக்கு சிகப்பேறிக் கொண்டது.
இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் அவளை எழுப்பும் நோக்கில் சரி சாப்பிட்டு டேப்லெட் போடணும் வரியா கீழ தான் எல்லாரும் இருக்காங்க நான் வேற நீ அங்க கீழே இல்லாததும் உங்க அப்பா அம்மா கிட்ட எதுவுமே பேசாம அப்படியே மேல வந்துட்டேன் வா அவங்க ஏதாவது தப்பா நினைச்சுக்க போறாங்க கீழ போயிட்டு சாப்பிட்டு வந்தரலாம் என்று அழைக்கவும் கொஞ்ச நேரம் இப்படியே இருங்க அத்தான் அப்புறம் போகலாம் என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவன் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து நைஸ் ஸ்மெல் என்றாள் போதையாக.
அடி வாங்க போற மித்ரா நீ அவளோ கண்ட கனவினில் தன்னை தான் பிடிக்கும் என்று கூறியதில் இருந்து இந்த உலகில் இல்லை மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
என்றும் இல்லாத திருநாளாய் இன்று அவனை நிரம்பவே தேடினாள் அதனால் தான் இப்படி தன்னையும் மீறி அவனிடம் ஒட்டிக் கொண்டு அத்துமீறுவது.
அவனுக்கோ அவளின் சில்லென்ற உடலின் குளிர்ச்சி அவனுக்குள் இறங்கி இன்னும் சூட்டை அதிகப்படுத்த படாதப்பாடு பட்டுப் போனான்.
அவன் பேச்சைக் காதிலே வாங்கவில்லை அவள்.
அத்தான் இந்த பனியன் மட்டும் எதுக்கு போட்டு இருக்கீங்க இதையும் கழட்டுங்க எனக்கு ஃபுல்லா உங்க ஸ்மெல் வேணும் இது வேண்டாம் கழட்டுங்க என்று அடம் பிடித்தாள்.
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன் அடியேய் உனக்கு இன்னைக்கு என்னடி ஆச்சு ஒரு மார்க்கமா பேசிட்டு இருக்க தலையில் அடிபட்டு எதுவும் கோளாறு ஆயிடுச்சா என்றவன் அந்த ஆடையையும் கழட்டி விட்டான்.
அவனையே அவள் குறுகுறுவென்று பார்க்க அவள் பார்வை தந்த அவஸ்தையில் நெளிந்தவன் ஏன்டி அப்படி பாக்குற என்ன பேண்டையும் கழட்டனுமா என்கவும் ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம் என்னோட அத்தான் இவ்ளோ அழகா இருக்காரு இல்ல அதான் உத்து உத்து பார்க்கிறேன் என்றவள் அவன் நெஞ்சில் இருந்த முடிகளை கைகளால் வருடிக் கொண்டிருக்க மித்ரா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் டி.
நானும்தான் அத்தான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன சொல்லணும் சொல்லு என்கவும் இல்ல நீங்க சொல்லுங்க அத்தான்.
இல்ல இல்ல நீ சொல்லு நீதான் ஃபர்ஸ்ட் நீ சொல்லு என்று மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
அட யாராவது சொல்லுங்கப்பா.
பின் இருவரும் ஒரு சேர நந்தினி வந்து இருந்தா என்கவும் உடனே ஆதி இங்க வந்தாளா என்றான் ஆத்திரத்துடன்.
அத்தான் கோபப்படாதீங்க அவள் உங்களை பார்க்க வந்தாளாமே ஆபீஸ்க்கு என்று அவனை பார்க்க ஆமா வந்திருந்தா முதல்ல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டேன் அப்புறம் ஏதோ அர்ஜென்ட் வேலை விஷயமா பேசணும்னு சொன்னதும் சரி வேலை எதுவும் கேட்டு வந்திருப்பான்னு நினைச்சு தான் நான் வர சொன்னேன்.
ஆனால் அவ வந்து நான் உங்கள லவ் பண்றேன் ஐ லவ் யூ இப்போ மித்ரா கிட்ட சொன்னா கூட உங்களை விட்டு போயிடுவா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னா எனக்கு கோவம் வந்துருச்சு திட்டி அனுப்பிட்டேன் என்றான் இன்னும் குறையாத ஆத்திரத்துடன்.
உனக்கு எப்படி இப்படி ஒரு தங்கச்சி என்று கடுப்பாக வினவ ஐயோ அத்தான் அவள் நல்ல பொண்ணு தான் உங்க மேல உள்ள லவ்வுல அப்படி சொல்லி இருப்பாளோ என்னவோ என்றாள் சிரிக்காமல்.
என்ன என்னை பார்த்தா உனக்கு கேனக் கிறுக்கன் மாதிரி தெரியுதா அவள் தானே எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சு நிறைந்த சபையில நான் வேண்டாம்னு அவமானப்படுத்திட்டு போனாள் இப்ப எதுக்கு வந்து இருக்கா என்றான் ஆத்திரமாக.
சரி சரி கூல் கூல் அத்தான் ஏற்கனவே ஹாட்டா இருக்கீங்க என்று சிரித்தாள்.
உனக்கு சிரிப்பா இருக்கா நியாயமா பார்த்தா இந்த விஷயத்துக்கு நீ கோபப்படனும் என் புருஷனை எப்படி இன்னொருத்தி லவ் பண்றேன்னு சொல்லுவா அதையும் கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்றியா என்று என் முடிய பிடிச்சு ஆட்டி என்கிட்ட சண்டை போட்டு இருக்கனும் ஆனா நீ என்னடான்னா கேட்டுட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க என்றான வெறுமையாக.
என் மேல உனக்கு கொஞ்சம் கூட அன்பு இல்ல பாசம் இல்ல லவ்வும் இல்லை எதுவுமே இல்லை என்று குறைபாட்டுக் கொண்டான்.
சரி இப்ப என் தங்கத்துக்கு எதுக்கு கோபம் என்று கன்னத்தில் முத்தம் பதித்து வேற என்ன சொன்னாள் என்று கேட்க நான் அவளதான் லவ் பண்றேன்னாம் இப்ப கோவமா இருக்கிறதுனால திட்டுறேன்னு சொன்னாள்.
நான் உன்னை ஒன்னும் லவ் பண்ணல எனக்கு எப்பொழுதும் பிடிச்ச ஒரே பொண்ணு அது என் மித்ரா மட்டும்தான் அவளை தான் நான் லவ் பண்றேன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டேன்.
அவள் பக்கம் குனிந்து நான் கரெக்டா ஆ.. ம்ம்.. அவன் வார்த்தைகள் அவள் இதழ்களுக்குள் மடிந்து போனது.
அவன் தடித்த இதழ்களைக் கடித்து தன் உதட்டுக்குள் இழுத்துக்கொண்டவள் செயலை நேரம் போக போக தனதாக்கிக் கொண்டான்.
அவள் இதழ் சுவை தந்த போதையில் தன்னை மறந்தவன் தன் பக்கத்தில் படுத்திருந்தவளைத் தூக்கி தன் மேல் போட்டுக்கொண்டவன் விடாமல் தன் முத்தத்தை தொடர்ந்தான்.
இரு இதழ்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்க தன்னை கட்டி அணைத்து இருந்த அவளின் கைகளை விளக்கி விட்டவன் கைகள் அவள் மேலாடையை கழட்ட பரபரத்தது.
மூச்சு முட்ட முத்தமிட்டுக்கொண்டே அவள் மேல் ஆடையின் மீது கை வைக்க அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்தவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு விட மறுக்க அவள் இதழை கடித்து முத்தமிட அவள் கையை விளக்கிக் கொள்ள அவள் மேலாடை குள்ளே கையை நுழைத்து அவள் பட்டு போன்ற மெல்லிடை வருட அவள் உடலோ துடித்துடித்தடங்க தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவள் இதழை விட அவன் முகம் பார்க்காமல் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.
அவள் காது மடலை உரசிக் கொண்டே மித்ரா என்றான் ஹஸ்கி குரலில்.
அவன் கைகள் என்னவோ பூவை விட மிருதுவான அவள் இடையில் தான் மேலும் கீழும் வளம் வந்து கொண்டிருந்தது.
அவன் நெஞ்சில் இருந்தபடியே எப்ப நடந்துச்சு இந்த அதிசயம்?
எது ? என்றான் மோகனமாக.
அதான் அத்தான் நீங்க லவ் பண்றன்னு சொன்னீங்களே என்று அனைத்தும் அவன் மேலிருந்து கொண்டே தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தை நிமிர்த்தியவன் எப்போன்னு தெரியலை மித்ரா என் நெஞ்சில் நீக்கமற நிறைஞ்சி போயிட்ட .
உன்ன தான் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிச்சிருக்கு நீ என்று தெரியாமலே உன்னை பிடிச்சு போச்சு என்றவன் அன்று மாலில் அவளை பார்த்தது முதல் நந்தினி தான் அந்தப் பெண் என்று தவறாக நினைத்துக் கொண்டு கல்யாணம் வரைக்கும் வந்தது அனைத்தையும் கூறினான்.
அப்ப என்னோட லாக்கெட்ட திருடினது நீங்க தானா?
ஆமா உன் லாக்கெட்டைத் திருடினதும் நான் தான் உன் இதயத்தை திருடினதும் நான்தான் என்றவன் அவளை பக்கத்தில் நகர்த்தி படுக்க வைத்து விட்டு எழுந்தான்.
எங்க போறீங்க என்று அவன் கைபிடிக்க இருடி வரேன் இவ வேற பொசுக்கு பொசுக்குன்னு இழுத்து இழுத்து படுக்க வச்சுக்கிறா என்று சுகமாக சரித்துக் கொண்டவன் அங்கிருந்த கபோர்டை நெருங்கி அதிலிருந்து லாக்கெட்டை எடுத்தான்.
கோவில் சென்று வந்த அன்றே தன் வீட்டு வேலையாட்களிடம் தேட சொல்லி எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.
நமக்கு கல்யாணம் ஆனதும் இது நந்தினியோடதுன்னு நினைச்சு இந்த லாக்கெட் எனக்கு எதுக்கு என்று தூக்கி வீசிட்டேன்.
அப்புறம் கோவில்ல நிருக்கிட்ட நீ பேசும் போது தான் அந்த குரல். நான் கேட்ட அதே கிசுகிசுப்பான குரல் அப்புறம்தான் உன்னிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டேன்.
அப்புறம் இது என்னோட மித்ரா உடையது தானே என்று தேட சொல்லி எடுத்தும் வச்சுக்கிட்டேன் என்றவாறு மீண்டும் அவள் அருகில் படுத்து அணைத்துக் கொண்டான்.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவ எதுக்கு இங்க வந்தா ஏதாவது உன்கிட்ட சொன்னாளா?
அக்காவோட புருஷன்னு கூட பாக்காம எப்படி வந்து பேசுறா பாரு என்று இன்னும் ஆத்திரம் குறையாமல் திட்டினான்.
உங்கள விட்டு போக சொன்னாள். நான் போயிட்டா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்கன்னு சொன்னாள் என்றவள் அவன் கோபமாக ஏதோ பேச வரவும் ஆனால் இந்த அத்தானுக்கு என்னைத்தானே பிடிச்சிருக்கு அப்புறம் எப்படி நான் உங்களை விட்டுட்டு போவேன் நீங்களே போக சொன்னாலும் உங்களை விட்டு போக மாட்டேன் அத்தான் லவ் யூ என்று அவன் முகம் முழுக்க முத்தமிட லவ் யூ சோ மச் மித்துமா அவனும் அவளை இறுக்கி கட்டிக் கொண்டான்.
என் வாழ்க்கையில கிடைச்ச வரம் நீ என்று நா தழுதழுக்க கூறியவன் உன்னை ஏன் நான் போக சொல்ல போறேன் என்று சொன்னவனுக்கு அப்பொழுது தெரியவில்லை தானே அவளை வீட்டை விட்டு போக சொல்லுவான் என்று.
அத்தான் நான் டாக்டர்கிட்ட போயிட்டு வரட்டா என்றாள் தயங்கியபடி.
ஆமாம் மித்ரா நாளைக்கு டிரெஸ்ஸிங் பண்ண போகணும் நாளைக்கு காலையில போயிட்டு வந்துரலாம் என்கவும் அது இல்ல அத்தான் குழந்தைக்கு என்று நிறுத்த அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று உடனடியாக மறுத்தான்.
ஏன் அத்தான் வேண்டாம்னு சொல்றீங்க நான் சும்மா போய் டீடெயில்ஸ் மட்டும் கேட்டுட்டு வரேன் என்கவும் வேண்டாம்னு சொன்னா வேண்டாம் மித்ரா அதை பற்றி பேசாத நான் போய் ஃபுல் பாடி செக்அப் பண்ணிட்டு வரேன் சரியா கொஞ்சம் பொறுத்துக்கோ இயற்கையா வர்ற மாதிரி இருக்குமா இந்த செயற்கை முறையில எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல மித்ரா என்ன கட்டாயப்படுத்தாத..
சரி அத்தான் என்றவன் அதன் பிறகு அதை பற்றி அவனிடம் பேசவில்லை.
அவன் கைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தவன் வா மித்ரா கீழே போலாம் அம்மா தான் கூப்பிடறாங்க என்று எழுந்து கொள்ள அவளும் எழுந்து கொண்டாள்.
டி-ஷர்ட் ஒன்றை எடுத்து மாட்டியவனின் வயிற்றில் தன் வெண்டை பிஞ்சு விரல்களால் கிள்ளி அவனை துள்ள விட்டவள் சிட்டாக வெளியில் ஓடி வர உன்னை இருடி வரேன் என்று அவளை துரத்திக் கொண்டு வர இருவரின் சிரிப்பு சத்தம் கேட்க அனைவரும் மேலே பார்க்க அமைதியாகிவிட்டனர்.
தன் தந்தையிடம் வந்தவள் சாரி ப்பா சும்மாதான் படுத்திருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் என்று கொஞ்சி சொகுசாக அவர் மீது சாய்ந்து கொண்டாள்.
அவள் பின்னே வந்த ஆத் வாங்க மாமா வாங்க அத்தை சாரி பிரெஷ்ஷாகிட்டு வர போனேன் தப்பா எடுத்துக்காதீங்க என்றான்.
மித்து இடையில் புகுந்து என்ன காணும்னு தானே மேல வந்ததா சொன்னீங்க என்று சொல்லி அவன் மானத்தை வாங்கினாள்.
நீ ஒருத்தி போதும்டி என் மானத்தை வாங்க என்று நினைத்தவன் இருடி உனக்கு இருக்கு என்றபடி அவளை முறைத்துப் பார்த்தான்.
சரி வாங்கப்பா சாப்பிடலாம்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆதியின் அருகில் தான் மித்ரா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
ஆதி சும்மா விடுவானா அவள் இடது கையால் அவள் இடையில் வருடி அழுந்த கிள்ள உணவை வாயில் வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் கத்தவும் முடியாமல் அவனை விட்டுடேன் என்று பரிதாபமாக பார்த்தாள்.
அவனோ அவளை விரக தாபத்தோடு பார்த்தவன் பெருமூச்சு விட்டான்.
மோகமுள் தீண்டும்…
படித்து விட்டு தங்களின் கருத்துகளைக் கீழே பதியவும்
comments please
2 Comments
Nice sis
ReplyDeleteThank you sis
Delete