Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 16


 மோகமுள் - 16:


எல்லாம் இவங்க இஷ்டத்துக்கு தான் நடக்குது என் இஷ்டத்துக்கு என்ன நடக்குது இதெல்லாம் எனக்கு சரியா படல இவங்க பாட்டுக்கு இவங்க இஷ்டத்துக்கு எல்லாமே பண்ணிட்டு இருக்காங்க இது என்ன விளையாட்டு திடலா எல்லாரும் வந்து விளையாட என் வாழ்க்கை டா என் வாழ்க்கையை நான் தான் தீர்மாணிக்கனும் என்று அவன் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே படிக்கட்டு ஏறி தன்னறைக்கு முன் வந்தவன் எல்லாம் இவளால இவள சொல்லணும் நான் கேட்டேனா எனக்கு வாழ்க்கை குடுன்னு இன்னைக்கு உன்னை என்ன பண்றேன்னு பாரு டி என்று உள்ளுக்குள் கருவியவன் படாரென்று கதவை திறந்தவன் தான்.


அங்கு கண்ட காட்சியை பார்த்தவன் பார்த்தப்படியே நின்றான்.


கதவு திறக்கும் சத்தம் கேட்டது தான் தாமதம் ஐயோ யாரு என்று திரும்ப எதிரில் நின்றிருந்தவனுக்கு கண்ணை சிமிட்ட கூட இஷ்டம் இல்லை போல..


நீங்க தானா நான் கூட வேற யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன் அந்த கதவை முதலில் லாக் பண்ணுங்க சார் என்று அவன் முன் வெறும் பாவாடை ரவிக்கையோடு நிற்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் ஏதோ ஆண்டாண்டு காலமாக அன்யோன்யமாக வாழ்ந்த தம்பதிகளுக்குள் இதெல்லாம் சாதாரணம் போல் ரவிக்கையின் மேல் கொக்கியை மாட்டிக் கொண்டே இவனிடம் பேச்சுக் குடுத்தாள்.


கீ கொடுத்த பொம்மை போல் அவள் சொன்னதை செய்தவன் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் அவள் முன்பு வந்து நின்று என்ன பண்ற மித்து என்கவும் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது அவனது குரல்.


இவ்வளவு மென்மையா எனக்கு பேச தெரியுமா என்று .இவளை பார்த்தா மட்டும் ஏன் எனக்கு ஒன்னுமே ஓட மாட்டேங்குது இவ ஏதோ என்னை பண்றா அதான் இப்படி தடுமாறுறேன் என்று ‘சுய அலசலில் இருந்தவனை சார் போய் குளிங்க அத்தை கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க ஜாகிங் போயிட்டு வந்து அப்படியே நிக்குறீங்க ச்சே இந்த கொக்கியை வேற போட முடியல என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வை போகும் இடத்தை கண்டதும் தான் அவளுக்கு உரைத்தது தான் எந்த நிலைமையில் நிற்கிறோம் என்று.


ஐயயோ இப்படியாடி மித்ரா சார் முன்னாடி நிக்கிறது என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் அங்கு கதிரையில் கிடந்த புடவையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டவளுக்கு அழையா விருந்தாளியாக வெட்கம் வரவே சார் போய் குளிங்க என்று அவள் குழைந்து வந்தது.


அவளை நெருங்கியவன் மேல் போர்த்தியிருந்த புடவையை பிடித்து இழுக்க அவன் இழுத்ததில் அவன் மீது நச்சென்று மோதி நின்றாள். 


என்ன மித்து சொன்ன ?


குரல் கிசுகிசுவென வெளிவந்தது.


அவளும் ஏதோ தொண்டையில் முள் மாட்டியது போல் என்ன சார் சொன்னேன் என்றாள் கிங்கினியாக.


இப்படி நெருக்கமாக நின்று கிசுக்கிசுத்து பேசுவது ஆதிக்கு பிடித்ததோ என்னவோ தன்னை மறைந்து அவளில் உறைந்து இன்னும் அவளை தன்னோடு நெருக்கிக் கொண்டு தன் இடது கையால் அவள் பின்கழுத்தைப் பற்றி தன்னை பார்க்க செய்தவன் அவள் கண்களில் ஊடுருவியவாறு என்ன டி சொன்ன 


அதுவா என்று தயங்கியவள் அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் தலையைக் குனிந்து கொண்டே கொக்கிப் போட முடியலன்னு சொன்னேன் என்று திக்கித் திணறினாள்.


இவ்வளவு நேரம் நன்றாக தான் இருந்தாள் அவன் பார்வையும் ஸ்பரிசமும் அணைப்பும் அவளை சுயமிழக்க செய்திருந்தது.


அப்பொழுது தான் குளித்திருந்ததால் அவன் பற்றியிருந்த பின்னங்கழுத்தில் முடிகளில் உள்ள நீர் சொட்ட சொட்ட மித்து பேபி நான் போட்டு விடவாடி என்று அவள் இதழை விரல்களால் வருடியவாரே கேட்க தன் பேராழிக் கண்களைப் பெரிதாக விரிக்க அதில் தொலைந்தவன் அதற்கு மேல் காத்திருக்காமல் அவள் இதழைச் சிறைப்பிடித்திருந்தான்.


அவள் இதழில் மூழ்கியவனின் கைகள் சும்மா இராமல் அவள் சொத்துக்களை பதம் பார்க்க முன்னேறியது.


அவனிடமிருந்து விடுப்பட முயன்றவளை அவள் இடையில் கைவைத்து தன்னோடு நெருக்கிக் கட்டிக் கொண்டவன் அவன் கைகள் இடையில் இருந்து சற்று மேலேறி அவள் வனப்புகளில் அத்து மீறவே அவளது உணர்வுகளும் விழித்துக் கொண்டது போல அவள் கைகள் தானாக மேலேறி அவன் சிகையில் முத்தத்திற்கு வாகாக நுழைந்துக் கொண்டது.


அவள் மேல் போட்டிருந்த புடவை எங்கு போனது என்று தெரியவில்லை.


அவள் இதழில் இருந்து பிரிந்தவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் முகம் முழுவதும் இச் மொச் என்று முத்தத்தை கொடுத்தவன் அவளை அப்படியே தன் கரங்களில் தூக்கிக் கொள்ள அவளோ முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து கொண்டவள் கைகள் அவன் கழுத்தை பற்றிக் கொண்டது.


மித்து 


ஹிம்ம் 


மித்து இங்க பாரு டி என்கவும் கண்களை திறந்து என்ன என்று அவனை பார்க்க 


மித்து என்னால முடியலடி ஷல் வீ? என்று மெத்தையைக் குறிப்பிட்டு கூற புரிந்து கொண்டவள் இதழ் துடிக்க கண்களை சரி என்பது போல் மூடி அவன் நெஞ்சில் இன்னும் இறுக்கமாக புதைந்து கொண்டாள்.


என் சுகர் க்யூப் (சக்கரக்கட்டி) டி நீ என்று மீண்டும் அவளிதழில் அவசரமாக ஒரு முத்தம் பதித்தவன் அங்கிருந்த மெத்தையில் கிடத்த அவளோ அவனையும் சேர்த்து தன்னோடு இழுக்க அவள் மேலேயே ஆதியும் வெண்புறாக்கள் மீது முகம் மோதி விழுந்தான்.


மெத்தென்று இருந்த இடத்தில் முத்தமிட்டவன் தன் மீசையால் குறுக்குறுப்பூட்ட சிலிர்த்தவள் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு ஆதி அத்தான் என்று இறுக்க அவளை விட்டுப் பிரிந்து தன் மேல் ஆடையைக் கழட்டி வீசினான்.


மீண்டும் அவள் மேல் படர்ந்து அவள் கீழ் உதட்டைக் கவ்வி இழுத்தவன் தன் கைகள் கொண்டு ரவிக்கையின் மேல் கொக்கி போடாமலிருக்க மற்ற கொக்கிக்களையும் கழட்ட கை வைக்கவும் வெளியிலிருந்து மித்ராம்மா கதவை திறடா என்று சுமதியின் குரல் கேட்கவே மாயவலை அறுந்தது போல சட்டென இருவரும் எழுந்து கொண்டனர்.


இதோ வரேன் அத்தம்மா என்று மித்ரா அப்படியே கதவருகே போக ஐயோ மேல ஒன்னும் போடாமா போறாளே என் மானத்தை வாங்க இவ போதும் போல என்று சலித்தவன் அடியே மித்து நில்லுடி என்று அவளை தடுத்து நிறுத்தியவன் அங்கிருந்த ஹேங்கரில் இருந்த தன் சட்டையை எடுத்து அவளுக்கு மாட்டி விட்டவன் அவள் தலையில் செல்லமாக தட்டி இப்போ போ என்றவாறு கண்ணாடி முன்பு ஒன்றும் தெரியாதது போல் நின்றுக் கொண்டான்.


கதவருகே சென்றவளுக்கு சற்று நேரத்திற்கு முன்பு நடந்ததை நினைத்து இன்னும் அவளால் வெளிவர முடியவில்லை உணர்ச்சி பெருக்கில் கைகள் நடுங்கியது. தன்னை சமன் படுத்திக் கொண்டு அத்தம்மா என்று கதவை திறக்க உனக்கும் ஆதிக்கும் கோவிலுக்கு போறதுக்கு புடவையும் வேஷ்டி சட்டையும் எடுத்துட்டு வந்தேன் டா ஏற்கனவே புடவை குடுத்தேன்ல அது நிரஞ்சனாவோடது உனக்கு சரியா இருக்குமா என்னன்னு தெரியலை அதான் உனக்கு தைக்க கொடுத்தது இப்போதான் வந்துச்சு.


ஆமாம் அத்தம்மா அது பத்தலை இப்போதான் போட்டுப் பார்த்தேன்.


சரி சரி இது போட்டுப்பாரு சரியா இருக்கும் இதை குடுக்கத்தான் வந்தேன் என்றவர் ஏன் மித்ரா என்னாச்சு பேயடிச்ச மாதிரி இருக்க என்கவும்


பேய் இல்லை அத்தம்மா எல்லாம் உங்க புள்ளை தான் என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டவள் அவரைப் பார்த்து திருத்திருவென முழிக்க அவள் பார்வையும் சிவந்த உதடுகளையும் கண்டவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது.


 என்னடா மித்ரா என்னாச்சு குளிச்சு இவ்ளோ நேரமாகியும் ஈரத் தலையோட இருக்க என்றவாறே அறைக்குள் வந்தவர் புடவை ஒரு புறம் கீழே கிடக்க மித்ரனின் மேல் ஆடை ஒரு புறம் கிடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு தலைமுடியை கைகளால் கோதிக் கொண்டிருந்த தன் மகனை கண்டவருக்கு அனைத்தும் புரிந்து போனது.


மனமெல்லாம் மகிழ்ச்சியாக மித்து இப்படி உட்காரு டா என்று அவளை மெத்தையில் அமர செய்தவர் அங்கிருந்த துண்டை எடுத்து தலையை துவட்டி விட்டு சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்பி ரெடியாகுங்க உங்க அம்மா வீட்லையும் பேசி கோவிலுக்கு வர சொல்லிருக்கேன் என்கவும் அம்மா அப்பா வராங்களா அத்தம்மா என்று குதித்தவள் அவரைக் கட்டிக்கொண்டு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அத்தம்மா என்று அவருக்கு கன்னத்தில் முத்தமிட அங்கிருந்த இன்னொருவனுக்கு பொசுங்கியது.


தன் மகனை ஒரக்கண்ணால் பார்த்தவர் சரிடா தங்கம் சீக்கிரமா கிளம்பி வாங்க போகலாம் என்றவர் கீழே சென்றார்.


அவர் சென்றதும் உடனே ஓடிப்போய் கதவை லாக் செய்தவள் திரும்ப ஆதி மீது மோதி நின்றாள்.


கண்ணாடி முன்னாடி தான நின்னுக்கிட்டு இருந்தாரு அதுக்குள்ள எப்படி இங்க வந்தாரு என்று அவனை நிமிர்ந்து பார்க்க என் சட்டையைக் கழட்டிக் கொடு டி என்கவும் 


இப்போ எதுக்கு சார் இதை கேக்குறீங்க போய் குளிச்சிட்டு வாங்க அந்த டிரெஸ்தான் போடணும் இது எதுக்கு என்கவும் கதவோடு அவளை சாய்த்தவன் எங்கம்மாவ எதுக்கு கிஸ் பண்ணின என்று வம்பு பண்ணினான்.


ஏனோ அவளிடம் வாயாடி வம்பிழுக்க மிகவும் பிடித்திருந்தது.


அது என்னோட அத்தம்மா நான் கொடுப்பேன் அதெல்லாம் யாரும் கேட்க முடியாது.


அப்போ அத்தம்மா பையனுக்கு என்ன கொடுப்ப என்று அவள் போட்டிருந்த சட்டை பட்டனில் கை வைக்க அவன் கைமேல் தன் கையை வைத்து 


என்ன வேணும் அத்தம்மா பையனுக்கு என்று கேட்கவும் அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன் கொஞ்சம் நேரம் முன்னாடி அத்தான்னு கூப்பிட்டல்ல அதுதான் வேணும் என்று ஹஸ்கி குரலில் கூற அதில் மயங்கியவள் அது அத்தம்மா தான் அப்படி கூப்பிட சொன்னாங்க


ஏன் பிடிக்கலையா


பிடிச்சதனால தான் கேக்குறேன் டி 


அப்போ இனி அப்படியே கூப்பிடவா


ஹிம்ம் அப்படியே கூப்பிடு


சரி அத்தான் என்றவள் அவன் உயரத்திற்கு எம்பி கட்டை விரலில் நின்றவாரு அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டவள் அவன் அசந்த நேரமாக பார்த்து அவனை தள்ளிவிட்டு தன் உடைகளை எடுத்துக் கொண்டவள் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கரெக்ட்டா இருக்கு ஆதி அத்தான் அதனால பர்ஸ்ட் லவ் பண்ணுங்க ஆதி அத்தான் என்று சிரித்தபடி பக்கத்தில் உள்ள அறையில் சென்று பூட்டிக் கொண்டாள்.


என்னது லவ்வா என்று அவள் மனசாட்சி ஆஜாராக ஆமா எனக்கு ஆதி அத்தான் வேணும் ஆமாம் நான் லவ் பண்றேன். அவருக்கு விருப்பமில்லை என்றால் விலகி போய்டுவேன் என்று தன் மனதோடு பேசியவள் எனக்கு நீங்க வேணும் அத்தான் கடைசி காலம் வரைக்கும்.


மித்ரா எனக்கு வேணும் டி இதெல்லாம் போங்கு நீ தானடி பிள்ளை பெத்து தரேன்னு சொன்ன என்று பூட்டிய கதவருகில் வந்து கேட்க நீங்க தான் ஒரு மாசம் டைம் கொடுத்திருக்கீங்களே அது அப்படியே தான் இருக்கு நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் ஆனால் இப்போ எனக்கு உங்க லவ் வேணும்னு தோணுதே அத்தான் நான் என்ன பண்ண என்று உள்ளிருந்து சிணுங்கினாள்.


லவ் தான வெளிய வாடி உனக்கு இருக்கு என்றவன் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.


குளியலறைக்குள் புகுந்தவனிடம் அவன் மனசாட்சி யாரோ டிவோர்ஸ் பண்ணிடுவேன்லாம் சொன்னனாங்க எங்க அந்த மானஸ்தன் என்று வினவ எனக்கு பிடிச்சிருக்கு மித்ரா ஏதோ பண்றா இங்க என்று நெஞ்சை தடவியவன் இப்ப என்ன அவள் என் மனைவி தானே அவ என் கூட இருக்கும் போது வேற எதுவும் எனக்கு வேண்டாம்னு தோணுது.


ஏன் இனிமே லவ் பண்ணுவேன் இன்னும் எதுவும் விளக்கம் வேணுமா என்கவும் எப்பா டேய் நான் ஒன்னும் சொல்லல டா நீ தான் மித்ராவோட அம்மா அப்பாட்ட வேற பையனை பார்த்து சல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்ன என்கவும் இருக்கலாம் ஆனா அந்த கல்யாணமும் என் கூடத்தான் நடக்கும்.


சரி சரி நீ போ நான் குளிச்சிட்டு மித்ராவுக்கு புடவை கட்டி விடணும் என்று துரத்தினான்.


குளித்துவிட்டு வெளியே வந்தவன் முகம் ப்யூஸ் போன பல்பு போல ஆகிவிட்டது.


மித்ரா புடவையெல்லாம் கட்டிக் கொண்டு தலைவாரிக் கொண்டு நின்றாள்.


அவள் பின்னால் வந்து நின்றுவன் என்ன டி புடவை அதுக்குள் கட்டிக்கிட்ட உனக்கு கட்டத் தெரியுமா


ஏன் அத்தான் நீங்க கட்டிவிடலாமென்று இருந்தீங்களா என்று நக்கலாக கேட்க 


ஆமாம் என்று சோகமாக தலையாட்டினான்.


சரி சார் அச்சோ அத்தான் புடவை அப்புறம் கட்டலாம் நீங்க சீக்கிரம் கிளம்பி வருவீங்களாம் என்று சிட்டாக பறந்து விட்டாள்.


தன் உடையை மாற்றியவன் கைகடிகாரத்தை எடுக்க கப்போர்டை திறக்க அந்த லாக்கெட்டை பார்த்ததும் இனிமே இது எனக்கு தேவைப்படாது எனக்கு என்னோட மித்து இருக்கா என்று ஜன்னலருகில் வந்து தூக்கி வீசிவிட்டான்.



மோகமுள் தீண்டும்.


மோகமுள் - 17 படிக்க இங்கே சொடுக்கவும்..

கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே.. 

உடனுக்குடன் update வரும்.. 

உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி..



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments