புயல் -4

 


மோகம்-7:


கதிர் மேல் சாய்ந்துக்கொண்டு ஹே நான் தான் ஜெயிச்சேன் ஹே சூப்பர் என்று தான் வென்றதில் ஆர்பரித்துக்கொண்டிருந்தாள் முத்தமிழ்.. அவள் சிரிப்பில் அங்குள்ள அனைவரும் கலந்துக்கொள்ள தன் மேல் சாய்ந்துக்கொண்டு சிரிக்கும் தன் தமிழையே கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தான்.


தன் மேல் அவள் மேனி உரச உரச தன்னில் பல மின்னல்கள் உருவாகுவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவளுள் இது போல எந்த மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. தன் தம்பி தங்கையைப் பார்த்து கன்னங்குழி விழ சிரித்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து அக்குழியில் விரும்பியே விழுந்தவன் அவளை அப்படியே எங்காவது தூக்கிட்டுப் போய்விடலாம் போல் இருந்தது அவனுக்கு.


இங்கு ஒருவன் தன்னை பார்த்து உருகிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் கிளுக்கி நகைத்துக் கொண்டிருந்தவள் தன் அத்தை அழைத்ததும் சமையலறைக்கு சென்றாள். அவள் செல்வதையே இன்னும் கொஞ்ச நேரம் உட்காந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்துடன் பார்த்தான்.


( எதுக்கு உரசி உரசி தீ பிடிக்கவா.. ரொம்ப காஞ்சிபோய் இருக்க போலவே..)


உள்ளே வந்தவளிடம் முத்து இந்த சாப்பாட்டையெல்லாம் அங்கு சாப்பிடுற மேசையில் எடுத்துவச்சு மாமனுக்கு சோத்தைப் போடுமா.. அடுப்பாங்கறையில் நின்னது கசகசன்னு இருக்கு.. நான் போய் மேலுக்கு ரெண்டு வட்டா ஊத்திட்டு வந்துடுறேன் என்று கூறியவாறு குளிக்க பின் கட்டிற்கு சென்றார் வடிவு.


தமிழ் சட்டை பாவாடை போட்டிருந்ததால் பாவாடையைத் தூக்கிக் காலில் தடுக்காதவாறு இடுப்பில் சொருகியவள் ஒவ்வொரு பதார்த்தத்தையும் ஹாலில் உள்ள மேசையில் எடுத்து வந்து வைத்தாள்.


அவள் பாவாடையை மேலே தூக்கி சொருகியிருந்த தினுசில் அம்மாதுவின் தந்த நிறக் கால்கள் அவனுக்கு காட்சியளித்து கண்களைக் கவர்ந்தன. வந்து என்னை தொட்டுப்பார் என்று அழைப்பு விடுக்கும் கால்களைக் கண்டு தன்னை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்.


அவள் வேலை செய்வதைப் பார்த்து சசியும் உதவ இருவரும் எடுத்து அடுக்கி வைத்தனர். ஆனால் இந்த கொக்கு தன் கெண்டை மீனை எப்பொழுது கொத்தி தின்னலாம் என்று அவள் தனியே மாட்டும் நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தது.


அங்கு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்த பார்த்தியையும் கதிரையும் இரு பெண்களும் சாப்பிட வருமாறு அழைத்தனர். பார்த்தி தனக்கு பசியில்லை என்றும் நான் அம்மா அப்பா சாப்பிடும்போது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு ஏதோ வேலையிருப்பதாக தன் அறைக்குள் புகுந்துக்கொண்டான்.


கதிர் வந்து கதிரையில் அமர சசி தமிழிடம் முத்து நீ அண்ணனுக்கு சாப்பாட்டை போடு நான் குழந்தைக்கு பால் குடுத்துட்டு வரேன் என்றவள் தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றாள்.


நீங்க சாப்பிடுங்க அத்தான் என்று அவனுக்கு தட்டை எடுத்து வைத்து சாதம் பரிமாற வே இன்னைக்கு மோர்க்குழம்பா சூப்பர் என்று கூற தமிழ் தன் கலங்கிய கண்களை மறைக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.


நீயும் சாப்பிடு தமிழ் என் கூடவே என்று அவளை அழைத்தான். நான் கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிடுறேன் அத்தான் நீங்க சாப்பிடுங்க என்று அழுகையை அடக்கிய குரலில் கூற அவள் குரலில் தெரிந்த தடுமாற்றத்தில் தமிழ் என்னாச்சு என்று அவள் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான்.


அவன் இழுப்பிற்கு வந்தவள் ஒன்னுமில்லை அத்தான்.. சாம்பார் ஊத்தினேன் இல்லையா அது கையில் பட்டுருக்கு போல அதை கண்ணில் வச்சதும் ஏற்பட்ட எரிச்சலில் கண்கலங்கிடுச்சி என்று சமாதானம் கூறினாள். அவன் பார்வையே நான் நீ கூறியதை நம்பவில்லை என்று பரைசாற்ற அவளை கண்கள் இடுங்க பார்த்தான்.


அவன் தன்னையே பார்க்கவும் அடக்கி வைத்திருந்த கண்ணீர பொலபொலவென அது பாட்டுக்கு இறங்க ஆரம்பித்தது. அவளை இழுத்து தன் மடியில் அப்படியே அமர வைத்துக் கொண்டவன் அவள் தன்னை பார்க்கும் படி முகத்தை திருப்பி என்னடா ஆச்சு இறை வார்த்தைக்கே வலிக்குமாறு மிக மிருதுவாகக் கேட்டான்.


தமிழ் அழுதுக்கொண்டே அத்தான் அத்தான் என்று தேம்பியவள் அம்மா அம்மா என்று அழுகியினூடே திணற தமிழ் ஒன்னுமில்லைடா அம்மா எங்கேயும் போகலை நம்ம கூட தான் இருக்காங்க நீ வேண்டுமென்றால் பாரு நமக்கு பாப்பாவா வந்து பிறப்பாங்க என்று அவளுக்கு ஆறுதலாக கூறி அவள தலை முடியைக் கோதிக்கொடுத்தான்.


நமக்கு அம்மா பாப்பாவா பிறப்பாங்களா அத்தான் என்று எதிர்ப்பார்ப்புடன் வினவினாள். கண்டிப்பா தமிழ் பாப்பா பிறக்கும் அதும் அததையே பிறப்பாங்க என்று கன்னம் கிள்ளி முத்தமிட்டவாறு கூறினான். அம்மாக்கு இந்த மோர்க்குழம்புன்னா ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவாங்க அதான் அதை பார்த்ததும் அம்மா நினைப்பு வந்துடுச்சு என்று மூக்கை உறிஞ்சியவாறு தன் அத்தானின் தோளில் சாய்ந்துக்கொண்டு அவன் சட்டையில் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.


அவளை அப்படியே இறுக்கி எழ விடாமல் பிடித்தவன் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் வா என் கூடவே சாப்பிடுடா என்று சாதத்தை பிசைந்து அவளுக்கு ஊட்ட ஐயோ அத்தான் யாராவது பார்த்துட போறாங்க என்று குசுகுசுவென மெலிதான குரலில் கூறினாள். யாரு பார்த்தா நமக்கென்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டுறேன் எவனும் எதுவும் கேட்க முடியாது என்று அவளுக்கு ஊட்டினான்.


அதில்லை அத்தான் இது ஹால்.. சசிக்கா, பார்த்தி இல்லனா வீட்டுல யாராவது பார்த்துட்டா என்ன நினைப்பாங்க என்று கேட்க எதுவும் நினைக்க மாட்டாங்க ஓ உனக்கு இப்போதான் இது ஹால்னு தெரியுதா கொஞ்ச நேரம் முன்னாடி மேடம் என்ன பண்ணுனீங்க என்று அவள் இதழை வருடியவாறு கேட்க ஐயோ அத்தான் என்று அவன் வாயைப் பொத்தியவள் சாப்பாடை சீக்கிரம் ஊட்டுங்க என்று அவசரப்படுத்தினாள்.


அவன் அப்பொழுதுதான் அவளை இன்னும் நன்றாக தன் மடியில் தனக்கு வாகாக அமர வைத்தவன் ஒரு கவளம் எடுத்து அவள் வாயை திறந்தும் கண்டுக்கொள்ளாமல் தன் வாயில் போட அதை சுண்டு காண்டானவள் அத்.. ஏதோ கூற வர அவள் வார்த்தைகள் அவன் வாயோடு முடிந்துவிட்டது.


அவள் ஏதோ சொல்ல வர.. அவளை பேச விடாமல் தன் இதழ் கொண்டு அவள் செர்ரி இதழை தன்வசப்படுத்தியவன்.. அது தந்த தேன் சுவையில் அவள் அதரத்தை மென்று தின்றுவிடுபவன் போல்.. கீழுதட்டை விழுங்கி.. நாவால் வருடி.. கடித்து சப்பியவன்.. அவள் தோய்ந்து தன் மேல் சாயவும் "ப்ச்" என்ற சப்தத்துடன் அவளிடமிருந்து பிரிந்தவன்.. "தமிழ்" என்று கரகரத்த குரலில்.. தன் மேல் சாய்ந்தவளை.. தலைமுடி கோதி அவள் உச்சியில் முத்தம் பதித்து தன்னுடன் அணைத்துக்கொண்டான்.


அவன் தன் இதழை சிறைப்பிடிக்கவும் முதலில் அதிர்ந்தவள்.. பின் அவன் செயலில் கிறங்கி தன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள் என்பது போல் அவன் செயலுக்கு இணங்கியவள் தன் வயிற்றில் பல பட்டாம்பூச்சிகள் பறக்க அந்த உணர்வுகளை தாங்க முடியாமல் அவன் மீது சாய்ந்தாள்.


"என்ன தமிழ் ஒரு முத்ததுக்கே இப்படி சோர்ந்து போற..? இன்னும் நிறைய இருக்கு.. அதெல்லாம் எப்படி தாங்குவ..?" என்று தன் நாக்கால் அவள் காது மடலை வருடியவாறு கேட்டான். அதில் பிடறி மயிர் சிலிர்க்க "அத்தான்..!" என்று கிறக்கமான குரலில் கண்கள் சுகத்தில் பாதி மூடியிருக்க அவன் முகத்தை பற்றி இழுத்தாள்.


அவனை இழுத்து அவன் முகம் பார்த்தவள்.. "அதெல்லாம் நான் தாங்குவேன்.. நீங்க அதை பற்றி கவலைப்படாதீங்க.. அதுவும் இப்போ குடுத்த முத்தம் செமையா இருந்துச்சு.." என்று அவன் சட்டை காலரை மடித்து தூக்கி அதனுடன் விளையாடியவாறு அவன் கண்களை பார்க்காதவாறு அவனிடம் கூறினாள்.


அவள் தான் குடுத்த முத்தத்தை பற்றி பேசவும் அவள் எப்படி தன்னை மனதில் கணவனாக இவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொண்டாள் என்று ஆச்சரியமாக நினைத்தவன் அவளிடம் "ஓ..! அப்படியா..? எல்லாத்துக்கும் மேடம் தயாரா இருக்கீங்களா..? அப்போ ஒரு டிரய்லர் பார்த்துடுவோமா நைட் ஷோக்கு..?" என்று அவள் இடுப்பில் சொருகியிருந்த பாவாடையை அவள் இடை வருடியவாறு எடுத்து விட இவள் ஷாக்கடித்தவள் போல அவன் கைகளில் துள்ளினாள்.


நேரம் ஆவதை உணர்ந்து யாராவது வர வாய்ப்பிருப்பதால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் "அத்தான்.. சாப்பிடுங்க.. அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம்" என்று எழப்போக அவளை அமர்த்தி அவள் போதும் போதும் என்று அவனிடம் கூப்பாடு போடும் வரை ஊட்டி விட்டு தானும் உண்டு எழுந்துக்கொண்டான்.


அனைவரும் சாப்பிட வர கதிர் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து எதுவோ எழுதிக் கொண்டிருந்தான். அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாற வடிவு "நீ சாப்டியா டா முத்து..?" என்று தமிழிடம் வினவ "நானும் மாமாவும் சாப்பிட்டோம் அத்தை.. நீங்க உட்காருங்க.. நான் எல்லாருக்கும் பரிமாறுறேன்.." என்று தன்னவன் கொடுத்த இதழ் முத்தம் நியாபகம் வர கன்னம் சிவந்து அதை மறைக்க பெரும்பாடு பட்டவள்.. அனைவருக்கும் உணவை எடுத்து வைத்தாள்.


சுந்தரேசன் தன் பெண்ணிடம் "சசி.. மாப்பிள்ளை வரலையாடா..?" என்று கேட்கவும் "அவர் நாளைக்கு வருவாறு ப்பா.." என்று மென்று முழுங்கினாள். அவள் திருத்திருவென விழித்ததை யாரும் பார்க்கவில்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள். சுந்தரேசனும் "சரிம்மா நானும் சாயுங்காலம் ஒரு போன் போட்டு சொல்லிடுறேன்" என்று தன் உணவில் கவனமானார்.


ஆனால் தமிழ் தன் மாமா கேட்டதற்கு சசி மென்று முழுங்கி பதில் சொல்வதை பார்த்தவள் ஏதோ விஷயம் இருக்கு என்று மனதில் நினைத்தவள் சசியிடம் இதை பற்றி பேசவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.


பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க சுந்தரேசன் தன் அம்மாவிடம் வரவேற்பு எப்பொழுது வைக்கலாம் என்ற பேச்சை எடுத்தார். அதற்கு நாளைக்கு முதலில் நம்ம குலதெய்வ கோவிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துருவோம்யா அதுக்கு அடுத்த ஏதாவது நல்ல நாள் இருந்துச்சுன்னா அந்த நாளே வரவேற்பு வச்சுடலாம். அப்புறம் பிள்ளையும் காலேஜ் போகனுமில்லை என்று தன் மகனிடம் கூறினார்.


தன் அப்பத்தா கூறியதைக் கேட்டு கதிர் மனதுள் வெகுவாக அதிர்ந்தான். ஐயோ தமிழ் அப்போ ஹாஸ்டல் போயிடுவாளே அவளில்லாம நான் எப்படி இருப்பேன் என்று மனதிற்குள் புலம்பியவன் தமிழை ஏக்கமாக பார்த்தான்.


அவளும் அப்பொழுது அதை தான் நினைத்துக்கொண்டிருந்தாள் ஐயோ காலேஜ் போகனுமா அப்போ அத்தான் கூட இருக்க முடியாதா என்று தன் அத்தானோடு இருக்க முடியாதோ என்ற வருத்தத்தில் மூஞ்சை தொங்க போட்டுக்கொண்டு திரிந்தாள்.


( ஆக மொத்தம் ரெண்டும் வேலையை மறந்துட்டு தன் இணையின் நினைப்புல தான் சுத்திட்டு இருக்குங்க.. அச்சோ)


கதிர் பக்கத்தில் அமர்ந்த சுந்தரேசன் தன் மகனை அழைத்தவர்.. அவன் காது கேளாதவன் போலவே அப்படியே பிள்ளையார் போல் அமர்ந்திருக்க "கதிரு.. கதிரு.." என்று உரக்க கத்தி அவனை உலுக்கினார்.


அவன் தான் தன் பொண்டாட்டியைப் பிரிந்து இருக்க வேண்டுமா..? அது அவனால் முடியாதே..! அதற்கு என்ன செய்யலாம்..? என்று தன் மனதுடன் தீவிர ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தானே.. அவனுக்கு மைக்செட் போட்டு அதில் எட்டூருக்கு கேட்குமாறு கத்தினாலும் இப்பொழுது அவன் காதில் விழாது அவ்வளவு சோகத்தில் இருந்தான்.


வெகுவாக யோசித்துக்கொண்டிருந்தவனை உலுக்கவும் "ஹான்" என்ற ஒலியுடன் ஏதோ கனவுலகில் இருந்து விழிப்பவன் போல திருத்திருவென விழித்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தன் தந்தை அழைக்கவும் "என்னப்பா" என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டான்.


"என்னப்பா..? என்னாச்சு..? எதை பற்றி இவ்வளவு தீவிரமா யோசிச்சிட்ருக்க..?" என்று வினவவும் என்ன சொல்வதென்று யோசித்தவன் கையிலிருந்த நோட்டை காண்பித்து "கல்லு கணக்கு எழுத்திட்ருக்கேன் ப்பா.. அதான் அதை பற்றி யோசிட்டுருந்தேன்.." என்று ஏதோ காரணம் சொல்ல வேண்டுமே என்று கூறினான்.


"சரிப்பா.. போய் கிளம்பி வா.. நாளைக்கு கோவிலுக்கு போறதுக்கு கொஞ்சம் பூஜைக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கனும்.. நாம போய் வாங்கிட்டு வந்துருவோம்.." என்று கூறவும் "நீங்க ஏன் ப்பா அலையுறீங்க..? லிஸ்ட் குடுங்க.. நானும் பார்த்தியும் போய் வாங்கிட்டு வந்துருவோம்" என்று கூறினான்.


உடனே அப்பத்தா அங்கு வந்தவர் "கதிரு.. முத்துவோட டிரெஸெல்லாம் அங்க அந்த வீட்டுல இருக்கு.. நாளைக்கு கோயிலுக்கு கட்டிட்டு போறதுக்கு நல்ல புடவையா எடுத்துட்டு வா.." என்று கூறினார்.


"எனக்கு புடவை எப்படி எடுக்கனும்னு தெரியாதே அப்பத்தா" என்று முழித்தவனிடம் "அதெல்லாம் உன் பொண்டாட்டிக்கு நீ எடுத்துட்டு வா" என்று அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இங்கு தன்னறைக்கு சட்டை மாற்ற வந்தவனிடம் "நீங்க எனக்கு புடவை எடுத்துட்டு வாங்க அத்தான்.. அது எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.." என்று கண்ணில் காதல் தெறிக்க அவனிடம் கூற "ஹ்ம்ம் சரி டா எடுத்துட்டு வரேன்" என்று சட்டையை மாற்றிக் கொண்டு சென்றான்.


இவர்கள் இங்கு சந்தோஷத்துடன் இருக்க அங்கு ஒரு குள்ளநரி எப்பொழுதும் தன் மேல் கதிர் பாயக்கூடும் என்ற பயத்தில் சென்னைக்கு தப்பி செல்ல தன் இல்லாத மூளையை வைத்துக்கொண்டு எப்படி தப்பலாம் என்று யோசனையில் இருந்தது..


விட்டு விடுவானா கதிர்..?


மோகம் மையம் கொள்ளும்..


மோகம் 8:


 கதிர் பார்த்திபனுடன் சென்று நாளை குல தெய்வக் கோவிலுக்கு செல்ல பூஜைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.சாமிக்கு துணிகள் எடுத்துக் கொண்டு தமிழுக்கு புடவை எடுக்க புடவை செக்க்ஷனுக்கு சென்று ஒவ்வொரு புடவையாய் பார்த்துக் கொண்டிருக்க கதிர் பார்த்தியிடம் பார்த்தி நீ போய் அப்பாவுக்கு உனக்கு எனக்கு எல்லாருக்கும் வேஷ்டி சட்டை எடுத்துட்டு வா உனக்கு வேஷ்டி வேண்டாம்னா பேண்ட் எடுத்துக்கோ நான் புடவை எடுத்துட்டு வரேன் என்று அவனை அனுப்பி வைத்தான்.


பார்த்தி சென்றதும் உடனே தன் கைப்பேசியை எடுத்து தமிழுக்கு அழைத்தான். இரண்டு ரிங்கிலே எடுத்தவள் சொல்லுங்க அத்தான் என்கவும் தமிழ் உனக்கு என்ன கலர் டா பிடிக்கும் என்று கேட்க பேபி பிங்க் கலர் பிடிக்கும் அத்தான் என்று கூறினாள்.


ஓ சரிடா என்று இவன் வைக்கப் போக ஏன் அத்தான் எதுக்கு என்று கேட்டாள் புடவை எந்த கலரில் எடுக்குறதுன்னு தெரியலைடா அதான் கேட்டேன் என்கவும் ஹிம்ம் அப்படினா எனக்கு எல்லாக் கலரிலும் வேணும் அத்தான் என்று விளையாட்டுக்கு கூற அப்போ நான் ஆண்டியாதான் போகனும் என்று சிரித்துக் கொண்டே கூறி சரிடா நான் எடுத்துட்டு வரேன் என்று வைத்தான்.


போனை அனைத்து பாக்கெட்டில் போட்டவன்

ஒவ்வொரு புடவையாக எடுத்துப் பார்த்தவன் எது தமிழுக்கு பொருத்தமாக இருக்குமோ அனைத்தையும் எடுத்தான்.. பின் தமிழுக்கு எடுத்து விட்டு தன் அம்மா தங்கை அப்பத்தா என அனைவருக்கும் எடுத்தவன் வர பார்த்தியும் சட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தான்.


கதிரைக் கண்டு என்ன அண்ணா செம பர்சேசிங் போல வாங்கி குமிச்சிருக்க என்று கிண்டலடிக்கவும் இல்லடா பார்த்தி அவக்கிட்ட புடவை இருக்கா என்னன்னு தெரியலை அதான் ஒரு பத்து புடவை வாங்கினேன் என்று கூறவும் அண்ணா அப்பத்தா ஒரு புடவை தான் எடுக்க சொன்னுச்சு நீ பத்து புடவை எடுத்துருக்க தெய்வமே நீங்க எங்கேயோ போய்டீங்க…


சரி சரி ஓட்டாதடா.. தமிழுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா நாம தான் எடுத்துக் கொடுக்கனும் என்றவாறு பில் போடும் கவுண்டரில் பில் போட்டு விட்டு அனைத்தையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். வரும் வழியில் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கவும் கதிரைப் பார்த்தி ஓட்டி எடுத்துவிட்டான்.


கதிர் வண்டியை நிறுத்திப் பூ வாங்கவும் பார்த்தி நமட்டுச் சிரிப்பு சிரிப்பதைப் பார்த்து டேய் எதுக்கு இப்போ சிரிக்கிற நான் என் பொண்டாட்டிக்கு வாங்குறேன் அதுக்கெதுக்குடா சிரிக்கிற போடா என்று அவனை அதட்டினான். அண்ணா பூ மட்டும் தானா இல்லை இந்த அல்வா எதும் இருக்கா என்று பார்த்தி சிரித்துக் கொண்டே கேட்டான்.பார்த்தி சிரிக்க சிரிக்க கதிருக்கு கூச்சமாக இருந்தது.


(அல்வால்லாம் பழைய மேட்டரு லட்டு ஜாங்கிரி தான் புது மேட்டரு..)


பின் வீடு வந்து சேர மாலை ஆறு மணியாகவும் அனைவருக்கும் வாங்கியதைக் கொடுக்க எதுக்குப்பா எங்களுக்கெல்லாம் என்று கேட்டவர்களிடம் புதுத்துணி எப்போவாச்சும் தானே எடுக்குறோம் இதுல என்ன இருக்கு நாளைக்கு கோவிலுக்கு வேற போகனும்ல அதான் எடுத்தேன் என்று கூறினான்.


 வரவேற்புக்கு எல்லாருமா போய் சேர்ந்து எடுத்துக்கலாம் என்கவும் சரிப்பா என்றனர்.பின்பு தமிழுக்கு வாங்கிய புடவைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர் பின் இரவு உணவை முடித்துக் கொண்டு வர தமிழ் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கதிர் குளிப்பதற்காக தோட்டத்து பக்கம் சென்றான்.


கதிர் மட்டும் கொல்லை புறம் குளிக்க செல்வதைப் பார்த்தப் பாட்டி கதிர் அறைக்கு வர அங்கு முத்தமிழ் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க ஏட்டி கூருக்கெட்ட சிறுக்கி என் பேரை முதுகுல சவாரி செய்வேன்னு சொன்னா மட்டும் பத்தாது செயலில் காட்டணும்.. உனக்கெல்லாம் வாய் மட்டும்தான் டி எட்டூருக்கு கிழியும் செயலில் ஒன்னும் இல்லையே என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கிழுத்தார்.


என்ன கிழவி நீ சொன்னாலும் சொல்லலைனாலும் உன் பேரன் மேல சவாரி செய்றது உறுதி நீ வேணும்னா பார்த்துக்கிட்டே இரு நான் சொன்னது செய்து காட்டுவேன் என்று சவால் விட்டாள்.


நீ சவால் விடுறதுலாம் இருக்கட்டும் என் பேரன் குளிக்கப் போயிருக்கான் போ போய் என்னன்னு கவனி மசமசன்ன உட்காந்துருக்கா என்று தோளில் தாவாங்கட்டையை இடித்தவாறு கூற ஹூக்கும் ஆமா இவங்க பேரன் ரெண்டு வயசு குழந்தை குளிக்க வைக்கனுமாமில்லை என்று ஏற்ற இறக்கத்துடன் இழுத்துக் கூற ஏய் இப்போ விட்டாக் கூட என் பேரன் பத்து மாசத்துல ரெட்டைப் புள்ளையைப் பெத்துக் கொடுப்பான் டி என்று பெருமையாகக் கூறினார்.


வெட்கமாக இருந்தாலும் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தால் அவள் தமிழ் இல்லையே.. ஆமா ஆமா உன் பேரன் நான் இல்லாம எப்படி பத்து மாசத்துல பெத்துப்பாரு என்று கூறிவிட்டு சிட்டாக கொல்லை புறம் நோக்கிப் பறந்து விட்டாள். அப்பத்தாவோ அடியாத்தி நீ பொழைச்சுப்படி விவரம்தான் என்று நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.


பின் கட்டிற்கு வந்த தமிழ் கதிரைத் தேட அவன் பெரிய அண்டாவில் தண்ணீர் ஊற்றி விறகு அடுப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று நகருங்க அத்தான் நான் எரிய விடுறேன் என்று கூற நான் விறகு வச்சுட்டேன் தமிழ் அதுப்பாட்டுக்கு எரியும் நீ உள்ளப் போ எதுக்கு பணியில் இப்போ வெளியில் வந்த உள்ளப் போ நான் குளிச்சிட்டு வரேன் என்று கூறி அவளை உள்ளே அனுப்பப் பார்த்தான்.


அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான் நான் இருக்கேன் என்று அங்கிருந்த துணி துவைக்கும் கட்டையில் அமர்ந்தாள். அப்பொழுது சில்லென்று காற்று அடிக்கவும் கைகளைத் தேய்த்தவாறு கட்டிக்கொண்டவள் கதிர் தோளில் கிடந்த தேங்காய்ப்பூ துண்டை இழுத்து தன்னை போர்த்திக் கொண்டாள்.


இதுக்குதான் சொன்னேன் உள்ளேப் போன்னு சொல்ற பேச்சையே கேட்கிறது இல்லை என்றவாறு கடிந்துக் கொண்டவனை தாய் எவ்வளவுதான் திட்டினாலும் குழந்தை சிரிக்குமே அதுப்போல தமிழும் ஹிஹி என தன் பற்களைக் காட்டி சிறுபிள்ளைப் போல் சிரிக்க தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பின்னாலிருந்து தன்னுடன் அப்படியே அணைத்துக் கொண்டான்.


அவன் தன்னை அணைத்ததும் அதிர்ந்தது என்னவோ தமிழ் தான் ஐயோ அத்தான் யாராவது வந்துரப் போறாங்க நகருங்க என்று அவனை தள்ள தமிழ் உனக்கு குளிரும் அதான் கட்டிப் பிடிச்சிருக்கேன் இப்போ குளிரலை தானே என்று கேட்க குளிரலை அத்தான் நீங்க நகருங்க வெளியே என்ன காரியம் பண்றீங்க என்று கேட்க நீ தான தமிழ் சொன்ன பொது இடமெல்லாம் பார்க்கக் கூடாதுன்னு என்று அவள் கூறியதையே அவளிடம் கூறினான்.


அவனிடம் இருந்து விடுப்பட முடியாமல் அவனை திசைத்திருப்ப அத்தான் தண்ணி கட்டுடுச்சு போங்க போய் குளிங்க வாங்க நான் தண்ணி எடுத்து வைக்கிறேன் என்று விலக இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தவன் அவளை விட்டான்.


அவள் தண்ணியைத் தூக்கப் போகவும் இரு தமிழ் நான் தூக்கிக்றேன் இந்தப் பக்கம் வா நெருப்பு பக்கத்துல போகாத என்று அவளை விலக்க இருங்க அத்தான் நான் உதவி பண்றேன் என்று கூற நீ உதவி செய்ய வேற இருக்கு என்று கண்ணடித்தான்.


மோகம் மையம் கொள்ளும்...

No comments