மோகம் -19

 




மோகம்-19:


மித்ரன் தன்னை அறைந்தான் என்பதை நம்ப முடியாமல் தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கண்கள் கலங்க அவனை பார்த்தாள். 


தன் முன்னே கண்கள் சிவக்க கை முஷ்டிகள் முறுக்கி தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் ருத்ர மூர்த்தியாய் நின்று கொண்டிருந்தவனைப் பயத்துடன் பார்த்தாள்.


அவள் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்து முகம் அருகே நெருங்கி 


"எப்படி டி என்னை விட்டுட்டு போக உன்னால யோசிக்க முடிஞ்சிது..."


"எவ்வளவு தைரியம் இருந்தா அதை என்கிட்டயே வந்து சொல்லுவ... நீ யாருடி என்ன வேற ஒரு கல்யாணம் பண்ண சொல்ற.."


"இதுவரைக்கும் உன்னை எதாவது ஒரு வார்த்தை சொல்லிருப்பேனா.. உன்னை என் நெஞ்சுக்குள்ள பொத்திவச்சு பார்த்துக்கிட்டேனே... என்னைக்கோ பட்ட சூட்டு காயத்துக்கு நீ அனுபவிச்ச வலிய நினைச்சா இப்பொழுதும் என்னால தாங்க முடியலடி.."


"எப்படி டி உன்னால இப்படி சொல்ல முடிஞ்சுது அப்போ என்னை விட்டு தனியா உன்னால இருக்க முடியுமாடி... ஆனால் என்னால் உன்னைவிட்டு இருக்க முடியாதேடி..."


"அப்படி என்கூட நீ இருந்தா நான் செத்துட்டு போறேன் அதை பத்தி எனக்கு கவலை இல்லை… எனக்கு நீ வேணும் இருக்குற கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருந்துட்டு போறேன்..." என்று அவளிடம் கத்தினான்.


"நீங்க என்னை சொத்தைக் காமிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க " என்று வார்த்தையை விட்டாள்.


அதை கேட்டதும் இறுகியவன்  


"இனி நீயே வந்தாலும் எனக்கு நீ வேணாம்" என்றவன் வெளியே செல்ல போக அவனை தடுத்த சிவகாமி 


"மாப்பிள்ளை அவள் ஏதோ முட்டாள்தனமா பேசுறா அவளைக்கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை " என்று அவனிடம் கூறி மதியிடம் 


"மதி கிளம்பு மாப்பிள்ளை கூட போ இங்க இருந்து என்ன பண்ணப்போற லூசுப் போல பேசாம கிளம்பு" என்றதும் அழுது கொண்டு நின்றாள் .


மித்ரன் அவளை திரும்பி பார்த்து விட்டு வேகமாக கிளம்பிவிட்டான் தடுக்க தடுக்க.


அவன் சென்றதும் மதி அழுது கொண்டே தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். 


"சாரி அத்தான் உங்களுக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது அதான் இப்படி பேசினேன்" என்று கதறினாள்.


இங்கு நடந்த எதும் தெரியாமல் ராணியும் விக்கியும் இவர்களை அழைக்க மது வீட்டிற்கு வரவும் மித்ரன் காரை காணவில்லை.


விக்கி "எப்படி சொல்லாம போகமாட்டேனே என்ன ஆச்சு" என்று உள்ளே நுழைந்தான்.


அங்கே சிவகாமி தான் இருந்தார். 


"எங்க மா மித்ரனும் மதுவும் கிளம்பிட்டாங்களா" என்று கேட்டதும் மது பேசியதையும் மித்ரன் கோபப்பட்டு வண்டி எடுத்துக் கிளம்பி விட்டதையும் சொன்னார்.


ராணியும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உடனே மதுவின் அறைக்கு சென்றார்கள்.


கதவை தட்டியதும் அழுத முகத்துடன் கதவை திறந்தவள் ராணியைப் பார்க்கவும் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள்.


இருவரும் உள்ளே வந்து கதவை சாத்திவிட்டு அவளைக் கட்டிலில் அமர வைத்து 


"ஏன் இப்படி பண்ணின'' என்று கேட்டதும் மது அன்று நிவேதா தன்னிடம் கூறியதையும் பின் சிறுவயதில் இருந்து தாயைப் பிறக்கும் போதே கொன்றுவிட்டாள் என்று அனைவரும் கூறியதையும் அவர்களிடம் கூறினாள்.


"எனக்கு பயமாக இருக்கு ராணி நான் அவர் கூட இருந்தா அவருக்கு எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு அதான் அத்தான்கிட்ட அப்படி பேசிட்டேன்". 


"அத்தான் ரொம்ப கஷ்டப் படுவாங்க ராணி. என்னைவிட்டுட்டு அவங்களால இருக்க முடியாது அதான் என் மேல கோபம் வர மாதிரி பேசினான் " என்று கூறினாள்.


"என்ன மதி இப்படி சொதப்பி வச்சுருக்க ...மித்து அண்ணா உன்னை எவ்ளோ காதலிக்குறாங்க தெரியுமா" என்று மித்ரன் சிவகாமியைச் சொத்தை காட்டி மிரட்டியதற்கு ஆறு மாதத்திற்கு முன் நடந்தவற்றை கூறினாள்.


ஆறு மாதத்திற்கு முன்பு…


அப்பொழுது மதுவின் கிராமத்திற்கு படம் எடுக்க திரைப்படக்குழு முழுவதும் வந்திருந்தது.


அந்த படம் முற்றிலும் கிராமிய சாயலைக் கொண்ட படம் என்பதால் வயல் வெளிகள் சார்ந்த இடத்தில் எடுக்க வேண்டும் என்பதால் அனைவரும் வந்திருந்தனர். 


அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மித்ரன் தான் தன் பினான்ஸ் கம்பெனி மூலம் பணம் குடுத்திருந்தான். 


இங்கு படம் எடுப்பார்கள் என்றதும் அந்த ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 


அப்பொழுது தான் சிவகாமி மதுவிடம் 


"ஏய் எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு கத்திரிக்கு களைய வெட்டு" என்று அதட்டிவிட்டு சூட்டிங் பார்க்க கிளம்பிவிட்டார் தன் அல்லக்கைகளுடன்.


அன்று தான் முதல் நாள் படத்தின் முதல் ஷாட் எடுக்கப்போகிறார்கள். 


இங்கு ஊர்மக்கள் அனைவரும் ஒரு படம் எடுக்க இத்தனை பேர் வேலை செய்வாங்களா என்று அதிசயமாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். 


அன்று தயாரிப்பாளர் மித்ரனிடம் பேச வேண்டும் என்று அழைத்ததால் அவனும் வந்திருந்தான். 


மது வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு ராணியுடன் வயலுக்கு வந்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது அவர்கள் வந்து கொண்டிருந்த பாதையில் தான் மித்ரன் காரை நிறுத்தியிருந்ததால் ஏதோ டாக்குமெண்ட் எடுக்க வந்தவன் இவர்கள் பேசுவதைக் கேட்டான்.


ராணி மதியிடம் 


"மதி நம்ம ஊருல படம் எடுக்குறாங்களாம்டி... வாடி போய் பார்த்துட்டு வருவோம் " என்றதும் 


"இல்லடி நீ போய் பார்த்துட்டு வாடி நான் அங்க வந்தது சித்திக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் என்னை உண்டில்லன்னு பண்ணிடுவாங்க..."


"காலையில் எங்கயோ கிளம்பி போனாங்க இன்னும் வரலை எங்க போனாங்கன்னு தெரியலை" என்று கூறினாள்.


"அது வேற எங்க போயிருக்கும் நல்லா தின்னுட்டு ஊருக் கதைய பேசிட்டு இருக்கும் இல்லனா இப்போதான் படம் எடுக்குறாங்கல்ல அங்க போய் வாய ஆ...ன்னு பிளந்து பார்த்துட்டு இருக்கும்" என்றதும் மதி சிரித்தாள்.


அவள் சிரிப்பு சத்ததில் அவளை திரும்பி பார்த்தான் மித்ரன்.


ஒல்லியாக மாநிறத்தில் மங்கிபோன உடைகளை அணிந்து தலை நிமிராமல் ராணியிடம் பேசிக் கொண்டு சென்றவளைப் பார்த்ததும் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு அவனை ஆட்கொண்டது. 


மது தங்கள் வயலில் களை வெட்டிக் கொண்டிருக்க சிறிது தூரத்தில் தான் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். 


இதை கவனித்த மித்ரன் அவள் ராணியிடம் பேசிக் கொண்டு சென்றதை நினைத்துப் பார்த்தான். 


"சித்தின்னு சொன்னாளே அப்போ இந்த பொண்ணோட அம்மா எங்க?" என்று யோசித்துவிட்டு அதோடு அதைவிட்டு விட்டான்.


அன்று இரவு அவளின் சிரித்த முகம் மீண்டும் வந்து அவனைப் பாடாய் படுத்தியது. 


இவன் பெண்களைப் பார்க்கதவன் அல்லவே லண்டனில் படித்தபோது எத்தனையோ பெண்களை கடந்து வந்தவன் இவளிடம் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. 


"என்ன மித்ரா வெறும் ஈர்ப்பு மட்டும் தான் அதற்கு இப்படி தடுமாறுற " என்று நினைத்தவன் உறங்கிப்போனான். 


அடுத்த நாள் விக்கியிடம் அனைத்தையும் கூறினான்.


"அப்படி யாரு மச்சி ...உன்னை மயக்கின அந்த கிராமத்து பைங்கிளி.. நான் பார்த்தே ஆகணுமே …" என்றதும் 


"அடுத்த முறை போகும் போது வா பார்க்கலாம் " என்றவன் அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் அடுத்த நாள் காலையிலே கிளம்பிருந்தான். 


போகும்போது விக்கியிடம் புலம்பிக்கொண்டே போனான் தன் நெஞ்சை தொட்டு காண்பித்து


"இங்க ஏதோ பண்றா மச்சி... என்னமோ பண்றா" என்று கூறியதும் விசித்திரமாக அவனை பார்த்தான் விக்கி. 


பின் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தன் வீட்டுக் கதவைத்தட்டி "மச்சான் வாடா சூட்டிங் நடக்குற இடத்துக்கு போகலாம்" என்று தன்னை கிளப்பி அழைத்துப்போகும் அவனை கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டு வந்தான்.


"மச்சான் லவ் பண்றியா" என்று விக்கி கேட்டதற்கு 


"தெரியலை மச்சான் ஆனா ஏதோ ஒரு மாதிரி கிளுகிளுப்பா இருக்கு" என்று கூறியவனைப் பார்த்து 


"ஐயையோ பைத்தியமா இவன்" என்று வடிவேலு மாடுலேஷனில் கூறினான். 


அதை கேட்டு வாய்விட்டு சிரித்தான் மித்ரன்.


அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டை அடையும் போது மணி ஒன்பது அங்கு மதியும் வான்மதியும் மோட்டரை போட்டுவிட்டு தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். 


மது வரவில்லை என்று சொல்லியும் வான்மதி அவளிடம் 


"வாக்கா அம்மா எதும் சொல்லாது வா கொஞ்ச நேரம் தானே " என்று அழைத்து அவள் தண்ணீருக்குள் இறங்கினாள். 


அவளுக்கு தெரியும் மதி தொட்டியில் இறங்க மாட்டாள் என்று அதனால் அவளைக் தொட்டியில் அமர சொல்லி தான் உள்ளே இறங்கினாள்.


மதி தன் காலை தண்ணீரில் விட்டுக் கொண்டு ஆட்டிக்கொண்டிருந்தாள். 


அதை மித்ரன் ரசித்துக் கொண்டிருந்தான் . 


அப்பொழுது தூரத்தில் ஒரு பெண்மணி கத்துவது தெரிந்தது. 


அதை என்னவென்று திரும்பி இருவரும் பார்த்தார்கள். சிவகாமி தான் கத்திக்கொண்டு வந்தார். 


அவர் குரலைக்கேட்டதும் திடுக்கிட்டு தட்டுத்தடுமாறி எழுந்து நின்று பயத்துக்கொண்டே பார்த்தாள் மது.


"ஏய் உன்னை வேலை செய்ய சொன்னா இங்க என்ன கூத்தடிச்சிட்டு இருக்க போடி போய் வேலைய பாரு டி "என்று கத்தினார் சிவகாமி. 


"ம்மா இப்போ எதுக்கு அக்காவை இப்படி விரட்டுற நான்தான் கூட்டிட்டு வந்தேன் இப்போ என்ன அதுக்கு அங்க தான் வீட்டுல எல்லா வேலையும் அக்கா தானே செய்றா அப்புறம் ஏன் இந்த பாடு படுத்துற அவளை " என்று வான்மதி கத்தியதும் சிவகாமி மதியை முறைத்தார். 


மதி பயந்துக்கொண்டே வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தாள். 


இதை கண்டதும் மித்ரனுக்கு கோபத்தில் உடல் இறுகியது.


விக்கி "எப்பா சரியான பஜாரி பொம்பளையா இருப்பா போல " என்று மித்ரன் பக்கம் திரும்பவும் "விடு மச்சான் இதெல்லாம் இங்க சாதாரணம்" என்ற கூற அவன் அப்பொழுதும் கோபத்துடன் நிற்கவே அவன் மனதை மாற்றும் பொருட்டு "எங்க மச்சான் உன் கிளி" என்றதும் மதுவை நோக்கி கைகாட்டினான். 


"ஐயோ" என்று மனதுக்குள் அலறியவன்


"பாவம் மச்சான் அந்த பொண்ணு.. விடு உனக்கு பிடுச்சிருக்குனா சொல்லு நாம டீட்டைல்ஸ் கலக்ட் பண்ணலாம்" என்றதும் "அந்த பொண்ணு வேணும் மச்சி "என்றான் மித்ரன். 


"எந்த பொண்ணு வேணும் ஹாங்.." என்று ஒரு குரல் கேட்கவும் இருவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர். 


அங்கே இவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றாள் ராணி.


அவளைப் பார்த்ததும் விக்கி வாயில் வாட்டர் பால்ஸை திறந்து விட்டான். 


"ஏங்க வந்தோமா வேலைய பார்த்தோமான்னு போய்க்கிட்டே இருக்கனும்.. இங்க எதாவது கலாட்ட பண்ணீங்கன்னா அவ்ளோதான் கத்தி ஊரையே கூட்டிடுவேன் பார்த்துக்கோங்க..." என்றதும் மித்ரனுக்கு புரிந்தது தங்களை வெளியாட்கள் என்று நம்பாமல் பேசுகிறாள் என்று புரிந்துகொண்டு 


"சிஸ்டர் உங்க ப்ரண்ட பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா " என்று கேட்டான். 


ராணி "அது எதுக்குங்க உங்களுக்கு இந்த இடத்தை விட்டு கிளம்புங்க முதலில்... இல்லைன்னா நடக்குறதே வேற.." என்று அவள் கூறியதும் ராணியை ஆ..வென பார்த்துக் கொண்டிருந்தவனின் விலாவில் தன் கையால் இடித்து நினைவுக்குக் கொண்டு வந்தான். 


"மச்சி மைனா டா .. மை மைனா டா.. " என்கவும் 


"டேய் மச்சி அடக்கி வாசி அந்த பொண்ணு ஏற்கனவே கோபமா பேசுது ..." என்கவும் அடங்கியவன் 


"என் நண்பன் உங்க பிரண்ட் விரும்புறேன்னு சொல்றான் அதான் அந்த பொண்ண பத்தி தகவல் வேணும் கொஞ்சம் சொல்லுங்க..." என்றதும் 


"உங்களை யாருன்னே தெரியாது எப்படிங்க நான் சொல்லுவேன் முதல்ல இடத்தை காலி பண்ணுங்க இல்லன்னா இதுக்கும் அவளோட சித்தி திட்டும் முதல்ல போங்க இங்கிருந்து..."என்றதும் விக்கி மித்ரனை இழுத்துக்கொண்டு வந்தான். 


விக்கி மித்ரனிடம் "மச்சி அந்த பொண்ணு நம்பாம பேசுதுடா நீ எதும் மனசுல வச்சுக்காத" என்று கூறியதும் 


"வருங்கால பொண்டாட்டிக்கு இப்போவே சப்போர்ட்டு ம்ம்.. நடத்து நடத்து" என்றான். 


"ஹிஹி ...கண்டு பிடிச்சிட்டியா" என்று வெட்கப்பட்டவன் 


"ஆனால் எப்படி " என்றதும் "அதான் வழியுதே" என்றான்.


"அவ்ளோ மோசமாவா வழிஞ்சது தெரியுது"


" ரொம்ப ரொம்ப " என்றான் "சரி விடு மச்சி இதெல்லாம் கண்டுக்காத" என்றான் . 


சிறிது நேரம் கழித்து ராணி இல்லாத நேரமாக பார்த்து வந்த மித்ரன் மதியைத் தேடினான் .


அவள் அங்கிருந்த மாமரத்தின் நிழலில் சாய்ந்து உட்கார்ந்திருந்து கண்களை மூடியிருந்தாள்.


அவளிடம்பேச நெருங்கியவன் அவள் சீரான மூச்சில் தூங்குகிறாள் என்று தெரிந்ததும் மறைவாக நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான். 


இப்படியே நாட்கள் ஓட மதி எப்பொழுது வயலுக்கு வருகிறாள் வீட்டிற்கு எப்பொழுது செல்கிறாள் என்பது வரை தெரிந்துக்கொண்டான். 


காலை ஒன்பது மணிக்கு வருகிறவள் மாலை ஆறு மணிக்குதான் செல்வாள்.


வந்ததும் தன் வேலையைப் பார்ப்பவள் சிறிது நேரம் அந்த மாமரத்தின் அடியில் அமர்ந்திருப்பாள். 


அன்றொரு நாள் அவள் படுத்திருக்கவும் காற்று பலமாக அடிக்கவும் தான் வைத்திருந்த சால்வையைப் போர்த்தி விட்டான்.


அப்பொழுது ராணி அதை பார்த்தவள் ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள். 


இப்படியே போய்கொண்டிருக்க மித்ரனும் விக்கியும் மதுவின் கிராமத்தின் அருகிலிருந்த ஒரு டவுனில் வீடு எடுத்துத் தங்கினர். 


மதுக்கு அம்மா இல்லை சித்தி, அப்பா ,ஒரு தங்கை என்றளவுக்கு அவர்களுக்கு தெரிந்தது.


அன்று காய்கறிகளை எடுத்துக்கொண்டு விற்பனைக்காக ராணியும் மதியும் சந்தைக்கு சென்றனர்.


மித்ரனும் விக்கியும் இவர்களைப் பின்தொடர்ந்தார்கள். 


இவர்கள் பின்தொடர்வதைப் பார்த்து ராணி மதியிடம் "கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குள்ள மதி" என்றதும் மித்ரன் விக்கியை முறைத்தான். 


"மச்சி கோபப்படாத டா " என்றான். 


"மச்சான் உன் மைனா ஓவரா பேசுது டா".


" விடுறா மச்சான் உன் தங்கச்சி தானே பொறுத்து போடா"


"போடாங்க"


"ஏன் மச்சி மதி மட்டும் இவ்ளோ வேலை செய்றா.. அவங்க சித்தி நல்லாதானே இருக்காங்க அவங்க செய்ய வேண்டியது தானே " என்று இவன் பேசியதைக் கேட்ட ராணி ஒன்றும் பேசாமல் போய்விட்டாள்.


அடுத்த நாள் மாலை இவன் ஒரு மரத்தில் சாய்ந்து மதியை ரசித்துக்கொண்டு நின்றிருந்தான் .


மதி தொட்டியில் கால்களை உள்ளே தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பலாம் என்று எழுந்தாள்.


பக்கத்தில் தான் ராணி வேலை செய்து கொண்டிருந்தாள். 


அப்பொழுது வரப்பில் கிடந்த பாம்பை மதி பார்க்கவில்லை தெரியாமல் அதன் மேல் காலை வைக்கவும் அவளைக் கொத்தியிருந்தது.


மதிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை ஒரு நொடியில் நடந்து விட்டதால் ஒன்றும் புரியவில்லை எதன் மீதோ காலை வைத்தோம் என்று சுற்றி பார்க்க ஒன்றும் இல்லை பாம்பு அப்பொழுதே அவளைக் கொத்தி விட்டு சென்றிருந்தது .


தன் பாவாடையைத் தூக்கிப் பார்க்க இரண்டு பொட்டு இரத்தம் இருக்கவும் பாம்பு தான் என்று நினைத்ததும் ராணியை அழைத்தாள்.


"என்ன மதி " என்று அருகில் வந்தவளிடம் 


"பாம்பு கடிச்சிடுச்சு "என்றதும் பயந்தவள் சுற்றி முற்றி பார்த்தவள் மித்ரன் விக்கி தான் இருந்தனர் வேறு யாரும் இல்லை என்றதும் அவனைப் பார்த்து கையசைத்தாள். 


மது அங்கு நிற்கவுமே பார்த்துக் கொண்டிருந்தவன் ராணி கையசைக்கவும் தன் பின்னாடி திரும்பி பார்த்தவன் தன்னை தான் கூப்பிடுகிறாள் என்றதும் திரும்பியவன் மதி ராணி மேல் சாயவும் அவள் அருகே ஓடிவந்தான்.


"அண்ணா மதிய பாம்பு கடிச்சிடுச்சு மயங்கிட்டா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும் அண்ணா" என்றதும் அதிர்ந்தவன் மதியை தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.


மித்ரன் ஓடவும் விக்கி இவன் பின்னாலே வந்தவன் ராணி அவனிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவன் வண்டியை நோக்கி விரைந்தான். 


விக்கி காரை எடுத்து வந்ததும் மதியை பின்னிருக்கையில் கிடத்தினான் ராணி அமர்ந்து அவள் தலையைத் தன் மடி மேல் வைத்துக்கொண்டாள்.


மித்ரன் மிகவும் பதட்டத்துடன் இருக்கவும் 


"மச்சான் தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாதுடா கவலைப்படாதா " என்று ஆறுதல் கூறினான். 


"மச்சான் பயமா இருக்குடா சீக்கரம் போடா" என்றான்.


ராணி அவன் பரிதவிப்பை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். 


பின் மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர் உயிருக்கு ஒன்றும் பயமில்லை என்றதும் தான் மித்ரனுக்கு உயிரே வந்தது.


பின் ராமர் வரவும் அவர் கண்ணில் படாமல் இருவரும் கிளம்பினர்.


பின் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த இரண்டாவது நாளே அவள் திரும்ப வயலுக்கு வரவும் கோபமானவன் அவளை நெருங்கினான்.


உடனே ராணி அவனை மறித்து உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றதும் "சொல்லுங்க" என்றான். 


இவள் வந்து பேசவுமே விக்கி எங்கிருந்து வந்தான் என்றே தெரியவில்லை வந்துவிட்டான்.


அவனைப் பார்த்து சிரிக்க முயன்ற உதட்டை இறுக்கி வைத்தவள் மித்ரனிடம் திரும்பி "மதியைப் பற்றி கேட்டீங்களே " என்றதும் முகம் பிரகாசமானவன் 


"ஆமாம் சொல்லுமா" என்றதும் "உங்களை எப்படி நம்புறது அண்ணா.. அவள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இனியாவது அவள் சந்தோஷமா இருக்கனும்" என்றாள்.


அவள் கூறியதைக் கேட்டுப் புரியாமல் பார்த்தவனிடம் மதுவின் சித்தி அவளைப் படுத்தி எடுப்பதைக் கூறினாள்.


சிவகாமி எந்த ஒரு வேலையைச் செய்யாமல் மதுவை வேலைக்காரிப் போல நடத்துவதும் அவ்வப்பொழுது அடிப்பது திட்டுவது சாப்பாடு கூட ஒழுங்கா குடுக்கமாட்டங்க அவளை பன்னிரெண்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்.


அவளை எப்பொழுதும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார் என்று கூறினாள் .


அதை கேட்டு மித்ரன் கோபத்தில் பல்லை கடித்தான.


மதிக்காக வருந்தினான் .


"நான் உன்னை சீக்கரமாவே கூட்டிட்டுப் போறேன் மதுக்குட்டி" என்று மனதுக்குள் பேசிக்கொண்டான் தன்னவளிடம். 


"இதெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா அன்னைக்கு மதிக்கு போர்வைப் போர்த்திவிட்டது.. அஞ்சு நாளைக்கு முன்னாடி பாம்பு கடிச்சப்போ மதிக்காக நீங்க துடிச்சத் துடிப்பு எல்லாத்தையும் பார்த்தா நீங்க அவளை விரும்புறீங்க... நல்லா பார்த்துக்குவீங்கன்னு தான் சொல்றேன்"


"முதல்ல உங்ககிட்ட பேச தயங்குனது நீங்க வெளியூர்காரங்க அதுமில்லாம பெரிய இடத்து பசங்க போல இருக்கவும் அவ்வளவு சீக்கரம் நம்ப முடியலை " 


"உண்மையா அவளை நீங்க விரும்பினா கூட்டிட்டு போயிடுங்க " என்றதும் "சரி மா கூடிய சீக்கரம் அதுக்கு வழி பண்றேன்" என்றதும் 


"சரி அண்ணா" என்றவள் விக்கியிடம் ஒரு தலையசைப்போடு விடைப் பெற்றாள்.


அதைக் கண்டு விக்கி வானத்தில் பறந்தான். 


"மச்சான் மை குயின் மச்சான் அவ" என்றதும் 


"சரி வாடா சீக்கரம் கல்யாணம் பண்ணனும் " என்றதும் "மச்சான் நானும் " என்று விக்கி சொன்னதும் 


"எனக்கு குழந்தை பிறந்த பிறகு பார்க்கலாம் மச்சி" என்றதும் அவனை மொத்தினான். 


சூட்டிங் முடியும் தருவாயில் இருந்தது.. 


அப்பொழுது ஒருநாள் காலையில் மித்ரனிறகு ஒரு எண்ணில் இருந்து கால் வரவும் யாரு என்று எடுத்துப் பேசியவனின் முகம் இறுகியது "சரி மா சீக்கரம் வரேன் மா" என்று விட்டு விக்கியை அழைத்தான் 


"என்ன மச்சான் நாளைக்கே கல்யாணம் நடக்கனும்டா" என்றதும் "என்னடா " என்றவனிடம் ராணி கூறியதைச் சொன்னான். 


சிவகாமி மதிக்கு நாற்பது வயது இருக்கும் ஒருவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போவதாக அவள் அள்ளக்கைகளிடம் கூறியிருக்கிறாள்.


அது எப்படியோ கசிந்து ராணி காதிற்கு வரவும் மித்ரனிற்கு போன் அடித்து விட்டாள். 


பிறகுதான் சிவகாமியிடம் தெரியாமல் கையெழுத்து வாங்கி கடன் வாங்கி இருப்பதாக கூறி மதியைத் திருமணம் செய்தான். 


இதை அனைத்தையும் மதியிடம் கூறவும் மதி அழுதாள்.


தனக்காக தன் கணவன் என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்று அழுதாள். 


விக்கி மதியிடம் 


"மதி அவன் நீ இல்லாம இருக்க மாட்டான் மா நீ என்றால் அவனுக்கு உயிர்"


"கிளம்பு நாங்க உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறோம். நீ இருந்ததால ஒன்னும் அவனுக்கு அப்படி ஆகவில்லை" என்று ரமேஷ் நிவேதாவின் வேலை அனைத்தையும் மதியிடம் கூறினான்.


"ஐயோ.. மடத்தனமா அத்தான் கிட்ட என்னென்னமோ சொல்லிட்டேன் இப்போ போனா அத்தான் என்கிட்ட பேசுவாங்களா" என்று சிறு பிள்ளைப்போல் கேட்டதும் 


"அவன் முன்னாடி நீ போய் நின்னாலே அவன் உருகிடுவான் நீ வா கிளம்பு" என்றதும் உடனடியாக கிளம்பினாள்.


ஆனால் மித்ரன் மதுவை ஏற்றுக்கொள்வானா…??

No comments