தெவிட்டா தெள்ளமுதின் தேவனவன்
தேவநிலா-1:
கல்யாணத்திற்குரிய அனைத்து ஆடம்பரங்களுடன் அந்த மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகள் ஒளிர பல வண்ண மலர்கள் கோர்த்து தோரணங்கள் கட்டிப் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது அந்த இடம்.
மணமேடையில் ஐயர் அக்னி முன்பு அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்க அவரைப் பின்பற்றி மணமகனும் அவர் செய்வது போல அனைத்தையும் கர்ம சிரத்தையுடன் செய்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து ஐயர் "பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்று சத்தம் கொடுக்க மணமகள் அறை கதவு திறக்க ரம்பை ஊர்வசியை மிஞ்சும் அளவிற்கு விண்ணுலக தேவதை வானத்திலிருந்து பிளைட் பிடித்து வந்தது போல் அங்கு தன் தோழிகள் புடை சூழ நடந்து வந்து கொண்டிருந்தவளையே அங்கிருந்த அனைவரின் கண்களும் மொய்த்தன.
(அப்சரசின் அத்தை பொண்ணு அதான் எல்லா கண்களும் வாட்சிங்)
பச்சை நிற பட்டுப் புடவையில் பார்ப்பவர் கண்களில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் அழகில் வீனஸ் சிற்பமாக நடந்து வந்தவள் மணமகன் அருகில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் அவளை ஒரு புன்சிரிப்புடன் பார்த்தவன் ஏதோ அவள் காதில் கூற வெட்கநகை பூத்தாள் பூவையவள்.
அவனுக்கு தன் வெட்கத்தையே பரிசாகத் தந்தவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
பின் ஐயர், பெண்ணுடைய தகப்பனாரை அழைத்தவர் அவரை அமர வைத்து மணப்பெண்ணை அவர் மடியில் அமர கூறினார். பெண்ணவள் தன் தகப்பன் மடியில் அமர்ந்ததும் ஐயர் பகவானை சேவிச்சிட்டு பொண்ணு கழுத்தில் கட்டுங்கோ என்று பொற்தாலியை மணமகன் கையில் கொடுக்க அவன் அவளைப் பார்த்துக் கொண்டே மூன்று முடிச்சிட்டான்.
(பார்த்துடா உன் முட்டை கண்ணு வெளிய வந்துராமா)
அவன் மங்கள நாணை கட்டியதும் பெண்ணவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. அதனை கண்டவன் அவள் பட்டுப்போன்ற கன்னங்களைப் பிடித்து பிறை நெற்றியில் முத்தம் வைக்க "கட்" என்ற சத்தம் கேட்க உடனே எழுந்து கொண்டவள் தன் அப்பாவின் காலை மிதித்து விட்டாள்.
அவர் வலியில் கத்த ஒன்றும் தெரியாதது போல் "ஒஹ்.. ஐம் சாரி சார்.." என்று நகர அவளை நெருங்கிய இயக்குனர் "ரொம்ப நல்லா வந்துருக்கு மேம்.. இன்னும் கொஞ்சம் ஸ்டில்ஸ் எடுக்க வேண்டியது இருக்கு.. அதை மட்டும் முடிச்சு கொடுத்துட்டுப் போங்க மேம்" என்கவும் மனதில் எழுந்த உஷ்ண கொதிப்பை அவரிடம் காட்டாமல் மறைத்தவள் "ஓகே சார்.. நான் கேரவனில் இருக்கேன் ஷாட் ரெடியானதும் கூப்பிடுங்க." என்று விட்டு சென்றாள்.
அவள் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் அவள் பின்னே ஓடினாள் அவளின் உடன் பிறந்த தங்கையும் காரியதரிசியுமான அபிநயா.
கேரவனில் நுழைந்ததும் அடக்கி வைத்த கோபம் பொங்க தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி வீசியவள் கழுத்தில் தொங்கிய தாலியை பிய்த்தெறிந்தாள்.
தன் கையில் இருந்த தாலியை பார்க்க பார்க்க ஏதேதோ பழைய நியாபகங்கள் தூசித்தட்டப்பட்டு உன் நினைவடுக்கில் நானும் இருக்கிறேன் என்று அவளுக்கு நினைவூட்ட அந்தத் தாலி சரடை மேஜையில் விட்டெரிந்தவள் தான் கொண்டு வந்த தன் கைப்பையில் இருக்கும் ஒரு சிறிய நகைப்பெட்டியைக் கையில் எடுத்தாள்.
சதுரங்க வடிவில் வெள்ளி முலாம் பூசப்பட்ட சிறிய பெட்டியை எடுத்தவள் அதனை திறக்க புத்தம் புதிதாக வாங்கிய தாலி செயின் இவளை பார்த்து பல்லிளித்தது.
"இதெல்லாம் உன்னால் தான்டா மலைமாடு.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு குரங்கு? எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு ச்சே " என்று இன்னும் சில பல நல்ல வார்த்தைகள் கொண்டு அர்ச்சித்தவள் நினைவில் 'ஹனிமூன்' என்று தன்னை அழைக்கும் குரல் கேட்டது.
அவனை நினையாதே மனமே என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் கண்களை திறக்க தனக்கு பயந்துக் கொண்டு கதவோரமாக நிற்கும் அபிநயாவை அழைத்தாள் தேன்நிலா.
தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயத்தைக் களவாடிய கனவு கன்னி தீக்ஷிதா.. இரண்டு வருடங்களாக கொடி கட்டி பறக்கும் நம்பர் ஒன் நடிகை. சினிமா உலகில் நுழைந்ததும் தேன் நிலா என்ற பெயர் தீக்ஷிதாவாக மாறிப் போனது.
"அக்கா" என்று அபிநயா நிலா அருகில் வர "பீம் எங்க போனான்? அவனை வர சொல்லு." என்கவும் அபி நிலாவின் மெய் காப்பாளன் பீமசேனனுக்கு அழைத்தாள்.
அவள் அழைத்த பத்தாவது விநாடியில் கேரவன் கதவை தட்டினான் பீமன். நிலா அபிநயாவை பார்க்க அவள் சென்று கதவை திறந்தாள்.
அங்கு ஏழடி உயரத்தில் ஓங்கு தாங்கான உடலுடன் முக இறுக்கத்துடன் ஒருவன் உள்ளே வந்தான்.
"சொல்லுங்க மேம்.. அவனை என்ன செய்யணும்?" என்று கேட்க அபிநயாவிற்கு ஒன்றும் புரியவில்லை அவள் திருத்திருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
'இவங்க ரெண்டு பேரும் யாரைப் பற்றி பேசிட்டு இருக்காங்கன்னு தெரியலையே..! இன்னைக்கு யாரு மண்டை உடையப் போகுதோ யாருக்கு தெரியும்? நமக்கு எதுக்கு.." என்று யோசித்தவள் அவர்களிடம் தன் கவனத்தை செலுத்தினாள்.
"அவனோட இடது கையை ஒடிச்சிடு.. ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல கையை வைப்பான். என்னை பற்றி என்ன நினைச்சிட்டிருக்கான் அவன் மனசுல ராஸ்கல். என் மேல கையை வச்சா என்ன நடக்கும்னு அவனுக்கு தெரியணும்."
"இனி தப்பா இதுப்போல யாரு மேலேயும் கைவைக்கவே தோணக் கூடாது."
"கடை முதலாளின்னா பெரிய இவனா அவன் விளம்பரம் நடிச்சுக் கொடுக்க தானே கூப்பிட்டானுங்க.. எல்லாம் இந்த அம்மாவை சொல்லணும் இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் நான் தான் நடிக்க மாட்டேன்னு எத்தனை முறை சொல்றது.."
"இவ்ளோ பணம் வருது அவ்ளோ பணம் வருதுன்னு எல்லாத்துலையும் சைன் போடுறது.. அப்புறம் என் தலை தான் உருளுது" என்று கோபமாகக் கத்தினாள்.
"அபி இனிமே இது போல அம்மா சைன் பண்ணினா அப்போவே அந்த ஒப்பந்தத்தைக் கிழிச்சிப் போட்டுடு" என்கவும் "சரிக்கா நீ டென்ஷனாகாத" என்றாள்.
பிரபல ஜவுளி கடைக்கு நிலா விளம்பரம் செய்து தருவதாக அவளின் தாயார் கையெழுத்து போட்டிருக்க வேண்டா வெறுப்பாக வந்து அந்த விளம்பரத்தை நடித்துக் கொடுக்க வந்தால் கடை முதலாளி தனக்கு அப்பாவாக நடிக்கப் போகிறார் என்று நிலாவிடம் இயக்குநர் காட்சிகள் அனைத்தையும் விவரித்துக் கொண்டிருந்தார்.
இந்த ஷாட்டை முடித்து கொடுத்து விடலாம் என்று பார்த்தால் தன் மகன் வயதுடைய நிலாவை காமக் கண்கள் கொண்டு பார்த்தார் அந்த பெரிய மனிதர்.
அவள் அவர் மடியில் அமர்ந்ததும் அவளை பிடிப்பது போல் அவள் இடையில் அழுத்தம் கொடுத்தும் வருடிக் கொண்டும் தன் சில்மிஷங்களை தொடர ஷாட் முடியும் வரை எதையும் காட்டிக்கொள்ளாமல் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
இயக்குநர் "கட்" என்று கூறியதும் அதுவரை பொறுத்திருந்தவள் அதற்கு மேல் எதையும் பொருட்படுத்தாது தன் ஹீல்ஸ் அணிந்த கால்களால் அவரது கால்களை மிதித்தவள் ஒன்றும் தெரியாதது போல் ஒரு சாரி சொல்லிவிட்டு வந்து விட்டாள்.
"பீம் நீங்க போய் அந்த கிழவனை ஒரு வழி பண்ணிடுங்க பஸ்டர்ட் யாரு மேல கையை வைக்கிறான்" என்று அவனிடம் கூற இதனை கேட்டுக் கொண்டிருந்த அபிநயா "மாமாக்கு மட்டும் இது தெரிஞ்சுது அவன் தொலைஞ்சான்" என்று தன் மனதில் நினைத்துக் கொண்டிருக்க வெளியே காச் மூச்சென ஒரே சத்தம்.
( பங்காரத்துக்கு எதாவதுன்னா பாவா எல்லாரையும் பாயாசம் ஆக்கிருவாரு)
விளம்பரத்திற்காக செய்த அலங்காரங்கள் அனைத்தும் கந்தலாக அறுந்து கீழே தொங்க அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அங்குமிங்கும் ஓட நாலைந்து ஆட்கள் முகத்தில் முகமூடி அணிந்து வந்து அந்த கடை முதலாளி.. நிலாவிடம் தப்பாக நடந்து கொண்ட அவனை சரமாரியாக வெட்டி சாய்க்க சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்த அபிநயா அவர் உடம்பில் ஊற்றெடுத்த செங்குருதியைக் கண்டவள் அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.
அவள் சரியவும் அவளை பின்தொடர்ந்து வந்த பீமன் தன் கைகளில் அவளை தாங்கிக் கொள்ள அங்கு அவரை வெட்டி சாய்த்தவர்களில் ஒருவன் நிலாவை தொட்ட இடது கையை சரமாரியாக வெட்டி உடலில் இருந்து தனியாக எடுத்ததும் தான் அவனுக்கு கோபம் தணிந்ததோ என்னவோ நொடிக்கும் குறைவான நேரத்தில் பீமை பார்த்து ஓர் தலையசைப்புடன் வெளியேறினான்.
இங்கு அபி சரியவும் என்னவோ ஏதோவென்று வெளியே வர முயன்ற நிலாவை தடுத்தவன் "மேம் இப்போ போக வேண்டும் இங்கேயே இருங்க" என்றவாறு அந்த கதவை மூடியவன் அபியை அங்கிருக்கும் படுக்கையில் படுக்க வைத்தான்.
பீம் தண்ணீர் எடுத்து அபியின் முகத்தில் தெளிக்கவும் மயக்கம் தெளிந்தவள் சற்றுமுன் பார்த்தது நினைவு வர தன்னருகே இருந்த தன் தமக்கையை கட்டிப்பிடித்துக் கொண்டவள் "அக்கா இரத்தம்" என்று கூற பீமை கேள்வியாக பார்த்தாள்.
"யாரோ அந்த கடை முதலாளிக்கு வேண்டாதவங்க போல மேடம் அவரை முடிச்சிட்டாங்க.. கூலிப்படை போல " என்கவும் அவனை சந்தேகமாக பார்த்தாள்.
அவள் பார்வை தன்னை சந்தேகமாக பார்க்கவும் உள்ளுக்குள் அலறியவன் "மேம் இப்படியெல்லாம் பார்க்காதீங்க இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.. நான் உங்க கூடத்தான் இருந்தேன்" என்று கூற வேறு யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
"அப்பாடி நம்ம தப்பிச்சோம்" என்று பெருமூச்சு விட்டவன் ஷாட் எடுக்கும் போது நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
பீம் எப்பொழுதும் நிலாவுடன் இருக்க வேண்டும் என்பது தான் அவனுக்கு வந்த உத்தரவு..
நிலா ஷூட்டிங்கில் பிசியாக இருக்க அப்பொழுது பீமிற்கு போனில் அழைப்பு வரவும் அதனை எடுத்தவன் அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ "ஓகே பாஸ்" என்றவன் அந்த பக்கம் ஏதோ கேட்க தலையை சொரிந்தவன் "பாஸ் மேம் கண்டு பிடிச்சுட்டா நான் அவ்ளோதான் பாஸ்" என்று பயப்பட "டேய் வேண்டாம் ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்காத" என்றவன் "தேனுக்கு தெரியாம வீடியோ கால் போட்டு அவளை காமி டா வெண்ணை" என்று கூறினான்.
"ஐயோ இவரு வேற நேரம் காலம் தெரியாம கால் பண்ணி காமின்னு சொல்றார்.. கேட்டா லவ் பண்ணலன்னு சொல்லுவாரு ஆனால் பண்றது எல்லாம் எதிர்மாறாக இருக்கும் இவரை புரிஞ்சிக்க முடியலையே" என்று தனக்குள் புலம்பினான்.
(பாவம் யாரு பெத்த புள்ளையோ இப்படி கதருறான்.. யாரு சாமி இவன்)
பின் வீடியோ கால் ஆன் செய்து அவளை காண்பிக்க அவளை தன் கைப்பேசி திரையில் கண்டதும் மேலெழுந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவன் ஹனிமூன் நீ வர வர அழகு கூடிக்கிட்டே போற நான் தாங்குவேனா என்று அவளை பார்த்து பிணாத்திக் கொண்டிருக்க அப்பொழுதுதான் ஷாட் எடுக்கும் பொழுது அந்த கடையின் முதலாளி நிலாவிடம் அத்துமீருவது தெரிந்தது.
அதனை கண்டு வெகுண்டெழுந்தவன் "என் ஹனி எனக்கு மட்டும் தான்.. ஹவ் டேர் யூ ராஸ்கல் இன்னைக்கு நைட் போக வேண்டிய உயிர் இன்னும் கொஞ்ச நேரத்துல போகப்போகுது வரேன் உனக்கு எமனா" என்று கண்கள் சிவக்க கூறியவன் ஆந்திராவிலிருந்து அடுத்த அரை மணி நேரத்தில் தன் பங்காரத்தை காக்க பறந்து வந்து விட்டான் சென்னைக்கு.
"கை வச்சதுக்கே கைமா பண்ணிட்டாரு ஆனால் கேட்டா லவ் இல்லையாம்.. அவங்களுக்காக எது வேணும்னாலும் பண்ணுவாராம் ஆனா லவ் இல்லையாம். இது அவருக்கே அடுக்குமா.."
"இன்னும் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ.. எதையெல்லாம் அனுபவிக்கப் போறேனோ தெரியலையே கடவுளே.. இவங்க கிட்ட இருந்து என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்து" என்று சுயநலமாக வேண்ட பாவம் கடவுள் பீமுக்கு ஏற்ற பாம் செலக்ட் செய்து பார்சல் அனுப்பி விட்டிருக்கார்.
பார்ப்போம் பீமுக்கு ஏற்ற பாம் யார் என்று..
0 Comments