புயல் -11

 



மோகம் - 21:


தமிழ் ஸ்டூலில் நின்றுக் கொண்டு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுக்க அதனை வாங்கிக் கீழே வைத்தவன் ஏய் ஏன்டி இந்தப் பாவாடை சட்டைப் போட்ட என்று குரல் கரக்கரக்கக் கேட்க ஏன் அத்தான் இது தான் ஃபிரியா படுக்க நல்லாருக்கும் அதான் இதைப் போட்டேன் என்று அவனுக்கு காரணத்தைக் கூறினாள்.


அதுக்கு ஏன் தமிழ் இவ்ளோ கஷ்டம் படுற என்கிட்ட கேட்டிருந்தா ஈஸியான ஐடியா சொல்லிருப்பேன்ல என்று ஸ்டூலை ஒரு ஆட்டு ஆட்ட அதில் பயந்தவள் ஒழுங்கா பிடிக்க மாட்டீங்களா நான் பயந்தே போயிட்டேன் என்றவாரு கீழே குனிந்து அவன் தோளைக் கட்டிக்கொள்ள கலகலத்து சிரித்தான்.


சிரிக்காதீங்க வேணும்னுதானே இப்படி பண்ணுனீங்க நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன் நீங்க ரொம்பக் கெட்டப் பையன் அத்தான் என்று அவனை அடித்துக் கொண்டே கூற ஹிம்ம் நான் ரொம்ப கெட்டப் பையன் இல்லை ரொம்ப ரொம்ப ரொம்பக் கெட்ட பையன் என்று அவள் இடையை வருடியவாறு அவன் அருகிலிருந்த அவள் காதுமடலைக் கடித்தான்..


ஹிம்ம் விடுங்க அத தான் புக்ஸ் எடுக்கணும் என்று அவனிடமிருந்து பிரிந்தவள் புத்தகத்தை எடுத்தவாரே என்ன ஏதோ ஈஸியான வழி நான் சொல்லுவேன்னு சொன்னீங்க என்ன அது என்று கேட்க அவன் சொன்னப் பதிலில் ச்சீ ச்சீ அத்தான் என்று சிணுங்கி அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தாலேயே அவனை அடி வெளுத்தாள்.


அவள் கொடுத்த அடிகளை சுகமாகவே வாங்கிக் கொண்டவன் ஏய் மாமன் ரொமான்ஸ் பண்ற நேரம் மட்டும் உனக்குள்ள சந்திரமுகி பூந்துடுவாளா இப்படி வெளுத்து வாங்குர என்று சும்மா இருந்தவளை சொறிந்துவிட்டது போல் பேச காண்டா வள் அவன் மேல் அப்படியே பாய்ந்திருந்தாள்..


இதை சற்றும் எதிர்ப்பாராதவன் அவளுடன் தானும் கீழே சரிந்தான்.. அவன் கீழே கிடக்க இவள் அவன் மேல் படுத்திருக்க இடுப்பைப் பிடித்தவன் ஐயோ இப்படி நான் எதும் பண்ணாததுக்கு முன்னாடியே இடுப்பை உடைக்கிறாளே என்னை காப்பாத்த யாருமே இல்லையா…என்று கதறினான்.


இப்போ எதுக்கு அத்தான் கத்துறீங்க வாயை மூடுங்க இல்லை நசுக்கிடுவேன் என்று அவனிடம் எகிர இன்னும் என்ன டி நசுங்குறதுக்கு இருக்கு அதான் எல்லாத்தையும் பஞ்சர் பண்ணிட்டியே படுபாவி என்று கூற முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.


பின் புரிந்ததும் ஐயோ போச்சு அத்தான் என்று அவனை உலுக்க ஆமா டி போச்சு உன்னை யாரு டி அதுக்குள்ள எனக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ண சொன்னது.. போனா போகுதுன்னு ஒரு பத்து பிள்ளை பெத்தப் பிறகு நானே பண்ணியிருந்துருப்பேனே.. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியேடி ராட்சசி என்று வராதக் கண்ணீரை சுண்டிவிட்டவாறு அவள் அதிர்ச்சியை ரசித்தான்..


அதற்குள் அதை உண்மை என்று நம்பியவள் ஐயோ எல்லாம் போச்சே என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க ஐயோ இவ என்ன ஊர கூட்டிடுவா போல என்று ஹே தமிழ் சும்மா சொன்னேன் டி சும்மா ஒன்னும் ஆகலை என்று கூறியதும் அவனை தள்ளி மேலே அமர்ந்தவள் அவன் தலை முடியை கொத்தாக பிடித்துக் கொண்டு ஏன்டா எரும மாடு நீ சொன்னதும் நான் எவ்வளவு பயந்து போய்டேன் எதுல விளையாடனும்னு கூடவா தெரியாது என்று அவனை அடித்தாள்..


ஹே தமிழ் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி சும்மா என்று சிரித்துக் கொண்டே கூற ஹிமம் சும்மாவா என்று கேட்டவாறு அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி அவனை அலரவிட்டாள்…


ஐயோ அம்மா கொல்ராளே ராட்சசி ஹே விடு டி வலிக்குது என்று அவள் கையை எடுத்தவன் போ டி போய் புத்தகத்தை எடுத்து வை என்று தான் எழுந்து அவளுக்கு கை கொடுத்து எழுப்பியவன் ஆமா அதான் படிப்பு முடியப் போகுதே இந்த புக்ஸ் இனி தேவையா என்று கேட்க ஹிம்ம் இதுல புக்ஸ் மட்டும் இல்ல அத்தான் நான் பண்ணின புராஜக்ட் இருக்கு இது ரொம்ப முக்கியம் அத்தான்…


ஒஹ் சரி சரி என்ன புராஜக்ட் இது என்ன பண்ணின என்று கேட்க அது நிறைய வகையான பூச்சிகள் பிடிச்சு ஒட்டனும் அப்புறம் விவசாயத்துக்கு எதுலாம் உதவுமோ அதெல்லாம் பிடிச்சு ஒட்டி வச்சுருக்கேன் என்று கூற என்ன பூச்சா என்ன டி அக்ரி படிக்கிறன்னு சொல்லிட்டு பூச்சி பிடிச்சு வச்சிருக்க என்று கலாய்த்தான்..


அத்தான் நீங்க கிராம்ப கலாய்க்கிறீங்க என்று சிணுங்க என்ன தமிழ் ஏதோ கறுகிற வாசனை வருது நம்ம தான் ஏதும் சமைக்கலையே என்று முகர்ந்து பார்க்க எனக்கு வாசனை வருது தமிழ் என்கவும் அவளும் முகர்ந்துப் பார்க்க ஆமா அத்தான் எனக்கும் வருது என்று ஸ்டூலை விட்டு இறங்கினாள்.


இவன் சுற்றும் முற்றும் பார்க்க தமிழ் பெட்டியில் அணைத்தையும் எடுத்து வைத்து மூடினாள்.. கதிருக்கு எதோ தவறாகப் பட மேலே நிமிர்ந்து பார்க்க கூரை எரியத் தொடங்கி நெருப்புக் கங்குகள் தெரிய தமிழ் என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..


அவள் என்ன என்று உணரும் முன்பே அவளை வெளியில் தள்ளி விட்டு மீண்டும் உள்ளே சென்றான். அப்பொழுது தான் தமிழ் உணர்ந்தாள் கூரைத் தீப்பற்றி எரிவதை உடனே உடல் நடுங்க அத்தான் அத்தான் என்று கத்த அவன் தமிழ் வராதா அங்கேயே இரு வரேன் என்று குரல் கொடுத்தான்.


அத்தான் வாங்க என்று கத்தி அழ அங்கு பக்கத்தில் வயல் என்பதால் வீடுகள் ஒன்று இரண்டு தான் இருந்தது.. இவள் அழுதுக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் கத்த முன் பக்கம் இருந்த அனைத்தும் நெருப்பில் எரிந்து கீழே விழுந்து வாசலை அடைத்துக் கொள்ள ஐயோ அத்தான் என்று கிட்டேப் போக அவளுக்கு உடலில் எரிச்சல் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அத்தான் என்று அழுதுக் கொண்டே நெருங்க எப்படி வந்தானோ பார்த்தி அவளை இழுத்திருந்தான்.


அத்தான் அத்தான் என்று அழுதுக் கொண்டே வீட்டைப் பார்த்துக் கத்த அங்கு நின்று அதை பார்த்த ஒருவனுக்கு முகம் முழுக்க சிரிப்பு. ஏய் தமிழ் இரு ஒன்னுமில்லை இங்கேயே இரு நான் வரேன் அதுக்குள்ள இந்தா வீட்டுக்குப் போன் போட்டு அப்பாக்கு சொல்லு என்று தன் செல்போனை கொடுக்க அவள் அதையெல்லாம் கண்டுக் கொள்ளும் நிலைமையில் இல்லை.


அவள் இருக்கும் நிலைமைக்கு இப்பொழுது எப்படியாவது அவனைப் பார்த்தே ஆக வேண்டும் அத்தான் அத்தான் என்று மீண்டும் வீட்டை நெருங்க ஏய் தமிழ் லூசு நெருப்பு அண்ணனுக்கு ஒன்னும் ஆயிருக்காது வா பின் வாசலில் போய் பார்ப்போம் என்கவும் அவள் அழுகையை விடாமல் தொடரவும் அவள் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று உணர்ந்தவன் வா தமிழ் அண்ணா பின்னாடி தான் இருக்கும் என்று அழைத்தான்.


வீடு ஃபுல்லா எரிஞ்சிப் போச்சு பாரு அத்தான் எனக்கு வேணும் என்று அழ வா என்று அவளை இழுத்துக் கொண்டு பின் வாசலிற்கு சென்றான் அங்கு அவனை ஏமாற்றாமல் கதிர் நிற்க அவனை கண்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் உடனே அவனை நோக்கிப் பாய்ந்தாள்.


அவனை கட்டிக்கொண்டு அத்தான் அத்தான் என்று கதறிக் கொண்டே முகம் முழுக்க முத்தமிட்டவள் அவனை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள்.


தமிழ் ஏய் ஒன்னுமில்லை டி இங்கப் பாரு நான் நல்லாத்தான் இருக்கேன் இங்கப்பாரு என்கவும் உடும்புபோல் அவனை ஒட்டிக் கொண்டவள் பிரியவே இல்லை கடைசி வரைக்கும்..


பார்த்தி தன் வீட்டிற்கு அழைத்தவன் தன் அப்பாவிடம் சுருக்கமாக சொல்லி அழைத்தான்.அவர் பதட்டத்துடன் பிள்ளைங்க ரெண்டும் எங்கப்பா என்று கேட்க அவங்க நல்லாருக்காங்கப்பா அண்ணனுக்குத்தான் கொஞ்சம் காயம் போல நீங்க சீக்கிரம் வாங்க என்று கூறிவிட்டு போனை அணைத்தான்.


அவர்கள் அருகே சென்றவன் அங்கிருந்த பெட்டியை மற்ற பொருட்களையும் ஓரமாக எடுத்து வைத்தவன் ஏய் தமிழ் அண்ணன் கொஞ்சம் உட்காரட்டும் விடு என்று கூற உனக்கென்னடா எருமை என் புருஷன் போடா உன் வேலையைப் பார்த்துட்டு என்று அவனை விட்டு விலக சொன்னக் கோபத்தில் அவனை கத்தினாள்.


ஹே யாரு இல்லன்னு சொன்னா அவரு உன் புருஷன் தான் இங்க அணலா இருக்கு அங்க வாங்க என்று அழைக்க அதுவும் சரி தான் வா தமிழ் அங்கப் போகலாம் உடம்பெல்லாம் அரியுற மாதிரி இருக்கு என்று கூறவும் சற்று விலகினாள்.


அப்பொழுது தான் அவன் கையில் இருந்த தீக்காயத்தைக் கண்டாள் ஐயோ அத்தான் என்று மீண்டும் விட்ட அழுகையைத் தொடங்க ஒன்னுமில்லை தமிழ் வா என்று ஒரு காலை எடுத்து வைத்தவனால் மற்றொரு காலை எடுத்து வைக்க முடியவில்லை ஸ்ஸ் என்று சத்தம் கொடுக்க அவன் சத்தத்தை தொடர்ந்து அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவள் அத்தான் என்று கதறினாள்.


காலில் வேறு நெருப்புக் காயம் பட்டிருக்க அவன் நகர முடியாமல் நிற்கவும் பார்த்தி உடனே அவனிடம் வந்தவன் வா அண்ணா கொஞ்சம் தூரம் தான் பைக் வரைக்கும் கொஞ்சம் ட்ரைப் பண்ணு என்று அவன் ஒரு புறம் தோளைப் பிடித்துக் கொண்டான்.


அவனையும் அவன் காயத்தைப் பார்த்து அழுதுக் கொண்டிருந்த தமிழை ஏய் தமிழ் அந்தப் பக்கம் பிடி என்கவும் மற்றொரு புறம் பிடித்துக் கொண்டாள்.அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டு மெது மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்தவனிடம் வலிக்குதா அத்தான் என்று கேட்க இல்லை இனிக்குது கேட்கிறா பாரு கேள்வி என்று சிரிக்க இவள் அழுதாள்.


(இப்போ அழுவுறான்னா பின்னாடி ஆப்பு இருக்கு கதிரு தயாரா இருந்துக்கோ எல்லாத்தையும் தாங்க..)


வீட்டிலிருந்து அனைவரும் வந்திருக்க கதிரைப் பார்த்து பெண்கள் அனைவரும் அழுதனர்.. கொஞ்ச நேரம் சும்மா இருங்க என்று கத்திய சுந்தரம் பார்த்தி அண்ணனை கிளினிக் அழைச்சிட்டுப் போ நான் இவங்களை வீட்டுல விட்டுட்டு வரேன் என்றவர் அவர்கள் இருவரும் கிளம்பியதும் பெண்களை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றார்..


இதை அனைத்தையும் கண்ட அந்தக் கருப்பாடு குதூகலத்துடன் அந்த இடத்தைக் காலி செய்தது.


அந்தக் கொழுப்பெடுத்தக் கருப்பாட்டைக் கதிர் பிரியாணி போடுவானா..?


மோகம் மையம் கொள்ளும்…


மோகம்-22:


சுந்தரம் வீட்டில் பெண்களை விட்டுவிட்டு க்ளினிக் வர அங்கு கதிருக்கு சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது.. வெளியில் நின்ற பார்த்தியிடம் சென்றவர் இது எப்படி நடந்துச்சு நீ எப்படி அந்த நேரத்தில் அங்கப் போன என்று கேட்க ஐயோ வசமா மாட்டிக்கிட்டோமே என்று பதில் கூறாமல் திருத்திருவென விழித்தான்..


ஐயோ இப்போ எதாவது சொல்லியே ஆகனுமே அது வந்து இந்த வசந்த் இருக்கான்ல அவன போய் பார்த்துட்டு வந்தேன் ப்பா அந்த வழியா வந்துட்டு இருக்கும் போது தான் மேல புகையா வந்துச்சு வந்து பார்த்தா தமிழ் கத்திட்டே உள்ள போக பார்த்தா அப்போ தான் அண்ணன் உள்ள இருக்கிறது தெரிஞ்சுது…


அதுக்கப்பறம் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி வர சொன்னேன் என்று கூறவும் ஹிமம் யாரு தம்பி இதை பண்ணிருப்பா நமக்கு அப்படி யாரும் விரோதி இல்லையே என்று யோசிக்க அப்பா போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்கலாம் ப்பா என்கவும் சரி ப்பா பிள்ளை வரட்டும் என்று காத்திருக்க ஒரு நர்ஸ் வந்து உள்ளே அழைத்து சென்றார்…


பின் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொண்டவர்கள் பின் அவனை அழைத்துக் கொண்டு வீடு வந்தனர்.. வடிவும் அப்பத்தாவும் வந்து கதிரைப் பற்றிக் கொண்டு உனக்கு ஒன்னும் இல்லையே ராசா இவன் போன் பண்ணி சொன்னதும் பக்குன்னு ஆயிடுச்சு.. என்று அவனை தொட்டு தடவி நலம் விசாரித்தனர்.


கதிரோ தன்னைப் பற்றி கேட்டவர்களுக்கு பதிலளித்தாலும் அவன் கண்கள் தமிழைத் தான் ஆராய்ந்துக் கொண்டிருந்தது.அவளுக்கு ஏதும் அடிப் பட்டிருக்கிறாதா என்று ஆராய்ந்தவன் அப்படி எதுவும் இல்லை என்கவும் தான் நிம்மதியடைந்தான்.


தமிழ் கண்கள் கலங்கியவாறு அவன் கையிலும் காலிலும் போட்டிருந்தக் கட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. சுந்தரம் எப்படி ஆச்சு கதிர் என்று கேட்க நாங்க பொருளெல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தோம் ப்பா அப்போ கருகிற வாடை வரவும் தான் மேலே பார்த்தப்போ நெருப்பு உடனே தமிழைக் கூட்டிட்டு வெளியே வந்துட்டேன்.


அப்புறம் ஏன் சாமி உள்ளே போன என்ற அப்பத்தா கேட்க தமிழ் ப்ரோஜக்ட் செஞ்சது உள்ள இருந்துச்சு அப்பத்தா அது ரொம்ப முக்கியம்ன சொன்னா அதான் அதை எடுக்க உள்ளே போனேன்.


இந்தக் காயம் எப்படிப்பா ஏற்பட்டது.. என்று கேட்க நான் தமிழோட புக்ஸ் டிரெஸ் இருந்தப் பெட்டியை எடுத்துட்டு இருக்கும் போது முன் வாசல் அடைச்சிடுச்சு. அதையெல்லாம் எடுத்துட்டு பின் வாசல் வழியா வெளியே வந்துட்டேன்…


அப்புறம் தான் நினைப்பு வந்துச்சு அத்தையோட போட்டோ உள்ள இருக்குன்னு அது எரிஞ்சிப் போயிட்டா அவ்வளவுதான் அவங்க ஃபோட்டோ ஒன்னே ஒன்னு தான் இருந்துச்சு அதான் அவங்க ஃபோட்டோவை எடுத்துட்டு வந்துடலாம்ன உள்ளே போனேன்.


ஃபோட்டோ எடுத்துட்டு வரும் போது தான் மேலே எரிஞ்சிட்டு இருந்த வாரை மேலே விழுந்துருச்சி என்று கூறியவன் தமிழ் அழுவதைப் பார்த்து பொதுவாக அனைவரிடமும் கூறவது போல் எனக்கு ஒன்னும் இல்லை கவலைப் படாதீங்க போங்க போய் எல்லாரும் படுங்க என்று கூறினான்.


இதை யாருப்பா செஞ்சிருப்பா நமக்கு அப்படி யாரு விரோதி இருக்கா தானா பத்திக்கொள்ளவும் வாய்ப்பு இல்லையே.. எப்படி என்று கேள்வியெழுப்ப அதை நான் பார்த்துக்குரேன் ப்பா நீங்க எதும் யோசிக்காமப் போய் தூங்குங்க என்று அனுப்பி வைத்தவன் பார்த்தியை அழைத்தான்..


பார்த்தி வாடா என்னை ரூம்ல கொண்டு வந்து விட்டுட்டுப்போ என்கவும் ஹிம்ம் சரி அண்ணா என்று அவன் தோளைப் பற்ற அதுவரையில் அமைதியாக இருந்த தமிழ் டேய் பார்த்தி அறிவில்லை உனக்கு நான் இருக்கும் போது நீ என் வர ப்பே என்று அவன் கையைக் கதிர் மேலிருந்து எடுத்துவிட்டாள்.


ஐயோ உன் புருஷன் பேரழகன் சரி தான் போ வந்துட்டா உன் புருஷன்தானே என்னை உதவிக்கு கூப்பிட்டாரு என்கவும் அவரு கூப்பிட்டா உனக்கெங்க போச்சு புத்தி.. இப்படி புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நுழையுற வெட்கமா இல்லை உனக்கு…


உங்கக் கூட இருந்தா அதெப்படி எனக்கு இருக்கும் எனக்கு அது எதுவும் இல்லை சரி நீ அந்தப் பக்கம் பிடி நான் இந்தப் பக்கம் பிடிச்சிக்கிறேன் என்கவும் போடா எனக்கு மட்டும் தான் ஓடிடு நானே கூட்டிட்டுப் போயிக்கிறேன் என்று அவனை பிடித்துக் கொண்டாள்.


உனக்கு அறிவிருக்கா என் புருஷனை நீ பாதி நான் பாதின்னு பங்குப் போடுற எனக்கு மட்டும் தான் என்கவும் ஆமாம் உன் புருஷன் பெரிய உலகழகி பாரு பங்கப் போடுறாங்க ப்பே என்றவன் நல்லா சேர்ந்திருக்கீங்க டா புருஷனும் பொண்டாட்டியும் யப்பா ஆளை விடுங்க..


இவர்கள் செய்யும் அலப்பறையைக் கண்டு அமைதியாக சிரித்தவன் சரி எனக்கு வேலை மிச்சம் என்று கிளம்பப் போனவனை தடுத்து நிறுத்தியக் கதிர் நீ எப்படி பார்த்தி அந்த நேரத்துல அங்க வந்த என்று கேட்கவும் ஐயோ போச்சு மாட்டிக்கிட்டேன் என்று திருத்திருவென விழித்தான்.


அது என் ப்ரெண்ட பார்க்கப் போயிருந்தேன் அப்போ வரும் பொழுது தான் பார்த்தேன் என்று மென்று முழுங்க அவனை யோசனையுடன் பார்த்தவன் சரி நீ போ என்று அவனை அனுப்பி வைத்தான்.


வா தமிழ் போகலாம் என்று அவள் தோளில் கையைப் போட அவன் கையைத் தட்டி விட்டவள் யாரும் என் மேல கை வைக்க தேவையில்லை என்று கூறிவிட்டு தன் கையை அவன் மேல் போட்டுக் கொண்டு அவனை தன்னுடன் அணைத்துப் பிடித்தவாறு அறைக்கு அழைத்து வந்தாள்.


ஏய் தமிழ் இந்த சட்டையைக் கழட்டி விடேன் என்று சொல்லவும் அமைதியாக அதனை கழட்டியவள் அவன் கையில் இருந்தக் கட்டை விரல்களால் வருடி விட்டாள்.அவள் அதனைக் கண்டு கண் கலங்க ஏய் தமிழ் போய் முகத்தை கழுவு இல்ல குளிச்சிடு மேல ஃபுல்லா சாம்பல் என்கவும் அவனை முறைத்தாள்.


அதில் ஜர்க்காவைன் என்ன முறைக்கிறா நம்ம என்னப் பண்ணினோம் நான் தான் எதும் பண்ணலையே அப்புறம் ஏன் முறைக்கிறா என்று யோசித்துக் கொண்டே அவளைப் பார்க்க அவனை முறைத்துப் பார்த்தவாறு வாய்க்குள் முனகிக் கொண்டே வெளியே சென்றாள்..


ஐயோ இவ முறைச்சிட்டுப் போறதைப் பார்த்தா நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறேன் போல ஐயோ கடவுளே காப்பாத்து என்று மனதிற்குள் தன் கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்..


இங்கு வெளியே வந்த தமிழ் நேரே பின் கட்டிற்கு சென்றவள் விறகை எடுத்து அடுப்பைப் பற்ற வைத்தாள்.. தண்ணீர் சற்று வெதுவெதுப்பாக சூடானாதும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு அவள் குளிப்பதற்காக மீண்டும் தண்ணீர் ஊற்றினாள்.


அப்பொழுது யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள். சுற்றிலும் ஒரே இருட்டு வெளிச்சத்திற்காக ஒரு குண்டு பல்பு மட்டுமே பின் வாசலில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது..யாரும் இல்லை என்றதும் தண்ணீர் அடங்கியப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.


அங்கு கதிர் கட்டிலில் சாய்வாக அமர்ந்தவாறு கண்களை மூடியிருக்க இவள் வரும் அரவம் கேட்டு விழித்தவன் இவளை என்னவென்று பார்த்தான்.. கையை கொஞ்சம் தூக்குங்க என்கவும் இவன் தூக்க உடனே அவன் அணிந்திருந்த பனியனை கழட்டினாள்.


ஏய் ஏன் தமிழ் என்று கூச்சத்துடன் கேட்க மேல எல்லாம் சாம்பல் அப்பியிருக்கு இருங்க நான் துடைச்சி விடுறேன் என்று கூறியதும் அவள் முன்பு சட்டை இல்லாமல் அமர்ந்திருக்க கூச்சமாக இருந்தது போலும் நீ போ தமிழ் போய் குளி நான் துடைச்சிக்கிறேன் என்று கூறவும் முறைத்தாள்.


அவள் முறைத்ததும் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.. பின்பு தண்ணீரில் துணியை நனைத்து அவன் கை கழுத்து நெஞ்சு என்று துடைத்தவள் அவன் முகமருகே துணியை எடுத்துக் கொண்டு வர தமிழ் ஒரு உம்மா தாயேன் என்று குறும்புடன் கண் சிமிட்டியவாறு கேட்க கடுப்பாவைன் நான் இருக்கு கடுப்புல உம்மா தர மாட்டேன் உதை தருவேன் வேணுமா என்று கோபத்துடன் கேட்க சரி நீ கோபமா இருக்கப் போல நீ தர வேண்டாம் நான் தரேன் என்று அவள் பின் கழுத்தில் வலது கையைக் கொண்டு சென்று நெருக்கி அவள் இதழில் நொடி நேரத்தில் முத்தமிட்டவன் விலகினான்..


பதில் ஏதும் பேசாமல் முறைத்தவள் அவன் தாடையை ஒரு கையால் பற்றிக் கொண்டு அவன் முகத்தை அழுத்தித் துடைத்தவள் அவனை நெருங்கி அவன் மீசையை பற்கள் கொண்டு கடித்திழுக்க வலியில் அலறினான்..ஆஹ் வலிக்குது டி ராட்சசி என்று தேய்த்து விட்டான்.


வலிக்கட்டும் வலிக்கனும்னு தான் கடிச்சி இழுத்தேன் என்று அவன் வேஷ்டியில் கை வைக்க ஏய் என்னடி பண்ற விடுடி வேஷ்டியை என்கவும் கையை எடுங்க கால் துடைக்க வேண்டாமா என்று கேட்டவாரே அவன் வேஷ்டியைப் பிடித்து இழுத்தாள்.


வேஷ்டியை ஒரு கையால் பிடித்தவாரு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் அப்புறம் துடைச்சிக்கிறேன் விடு டி என்று இவன் இழுக்கவும் ஹூக்கும் கிழிப்பீங்க நானே துடைச்சி விடுறேன் என்று இவள் சற்று பலமாக இழுக்க அவள் கையோடு வந்தது.


ஐயோ என்னை காப்பாத்துங்க என்று கத்த அடச்சீ இப்போ என்ன வேஷ்டியை தானே உருவினேன் ரொம்பத் தான் பண்றீங்க இப்போ என்ன உங்களை ரேப்பா பண்ணிட்டேன். ஓவரா கத்துறீங்க வாயை மூடுங்க யாராவது எழுந்து வந்துரப் போறாங்க…என்று அதட்டினாள்.


என்னடி இப்படிலாம் பேசுர என்று அதிர்ந்து பார்க்க இப்போ வாயை மூடல இதுக்கு மேலையும் பேசுவேன் என்று விட்டு அவன் கால்களைத் துடைக்க சங்கடத்தில் நெளிந்தான்.. ஆடாம அசையாம இருக்க மாட்டீங்களா எங்கையாவது துடைக்க ஒழுங்கா காட்டுறீங்களா என்று அவன் மண்டையில் கொட்டு வைத்தாள்.


பின் துடைத்து விட்டு மற்றொரு வேட்டியை எடுத்து அவனுக்கு கட்டி விட்டவள் அவன் சட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். துவைக்கப் போடுவதற்காக அவன் சட்டையில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க பர்ஸ் இருக்கவும் பிரித்துப் பார்த்தவள் அந்த சட்டையில் வைத்து விட்டு அடுப்பின் அருகே சென்றாள் தண்ணீர் சுட்டு விட்டதா என்று பார்க்க..


அப்பொழுது யாரோ ஓடி வரும் அரவம் கேட்க அதை கவனித்தவள் சட்டென்று அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த விறகைக் கையில் எடுத்தவள் ஓடி வந்தவன் கையில் காலிலும் அதை வைத்தே அடித்தாள்.


எரியும் விறகு கட்டை மேலே பட்டதும் அலறி துடித்தவாறு அந்தக் குள்ள நரி வந்த வழியே ஓட்டம் பிடித்தது…


மோகம் மையம் கொள்ளும்…


No comments