மழை - 7

 




மழை - 7:

மனதை மயக்கும் மல்லிகை வாசம் மல்லிகைப் பந்தலில் இருந்து வரப் பலவகையான செடிகள் அழகாக திருத்தப்பட்டு கண்ணை கவரும் வண்ணம் இருக்க.. அதனை ரசிக்கும் நிலைமையில் மூவருமே இல்லை.

மகேனும் வீரும் அமைதியாக இருக்கவே சாணு தான் பேச்சைத் தொடங்கினான் "என்னடா மச்சான் ஆச்சு..? யாரு அவன் என்ன சொன்னான்..?" என்கவும் தன் மொபைலில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்காடர் செயலியை ஆன் செய்து அவன் பேசிய பொழுது ரெக்கார்ட் ஆன ஆடியோவை ப்ளே செய்ய அந்த அவன் பேசியதைக் கேட்ட இருவரும் கொதித்தெழுந்துவிட்டனர்.

சாணு மகேனிடம் "அந்த நம்பர் கொடுடா.. நான் சைபர் க்ரைமில் கொடுத்து செக் பண்ண சொல்றேன்.." என்கவும் "ஒவ்வொரு முறையும் வேறு வேறு நாடுகளில் இருந்து கால் வருது.. ஐ தாட் அவன் நெட் காலில் ஏதோ ஒரு செயலியை வைத்து பேசுறான் போல.." என்று கூற "ஓ..?" என்று யோசித்தவனிடம் "இது தான் அந்த நம்பர்.." என்று ஒரு எண்ணை காட்டியவன் பின் மற்றொரு எண்ணை காட்டியவன் "இது ஒரு வாரத்துக்கு முன்ன வந்தது.." எனக் காட்ட அதனைக் குறித்துக் கொண்டவன் "சரிடா டியூட்டிக்கு டைம் ஆச்சு.. நாளைக்கு பால் காய்ச்சனும்.." என்று அம்மா சொன்னாங்க..

"நாளைக்கு அம்மாவும் தங்கச்சிகளும் வராங்க.." என்று கூறவும் இத்தனை நேரம் கோபத்தில் இருந்தவன் மனதை மயிலிறகாய் வருடியது போலானது..

சாணு தங்கச்சி என்றதும் தன் சாக்கி பேபி வீரின் மண்டையில் தட்டி "என்னை மட்டும் யோசிடா" என்று மத்தளம் கொட்ட அவன் தன் சாக்கி பேபியுடன் டூயட் பாட ஓடி விட்டான் (கனவில் மட்டும்)

(இந்த ரணகளத்துளையும் உனக்கு குதூகலம் கேட்குது நீ அங்க இருக்கடா வீரி)

சாணு வீட்டினுள் சென்று தன் அத்தை மாமாவிடம் பால் காய்ச்சுவதைப் பற்றிக் கூறிவிட்டு தன்னவளிடமும் கண்களால் அழைப்பு விடுத்தவன் கிளம்பவும் "பி கேர்புல் மச்சி" என்று ஆயிரம் பத்திரம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

இங்கு வீர் தன் அறையில் தன் சாக்கி பேபியை நினைத்து பனிக்கூழாய் கரைந்துக் கொண்டிருந்தான். "அடியே கன்னுக்குட்டி..! எப்போ டி என்கிட்ட வருவ..?" என்று தன்னவள் தன் மனதில் அழியாக் கல்வெட்டாய் பதிந்த அந்த நாளுக்கு சென்றான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு... தன் படிப்பை அமெரிக்காவில் முடித்து விட்டு தன் அத்தையைப் பார்க்க சென்றவன் பார்த்ததென்னவோ தன் அத்தை மகளைத்தான்.. அதுவும் சாக்லேட்டை வைத்துக்கொண்டு ஒரு சிறுவனிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

அதனைக் கண்டு பக்கென்று சிரித்து விட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு…

"ஹே ஏஞ்சல்..!" என்று தான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே விளையாண்டுக்கொண்டிருந்த சிறுமி கீழே விழுந்து விட அவளை தூக்கி "ரிலாக்ஸ் பேபி.." என்று தட்டிக்கொடுத்தவன் அந்த சிறுமி அழுகைக்கு தயாராகவும் "ஓ நோ பேபி.. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்..!" என்று கன்னத்தில் முத்தம் வைக்க தன் முத்து மூறல்கள் தெரிய கிளுக்கி நகைத்தது.

"யூவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்..?" என்று கேட்க "லிசி.." என சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறவும் "வாவ் யூவர் நேம் இஸ் சோ ஸ்வீட் அஸ் யூ ஆர்.." என்று அக்குழந்தையின் கன்னம் தட்ட "யூ டூ அங்கிள்.." என்று அவனது இறுகிய தாடையில் தன் மலரிதழைப் பதித்தவள்.. தன் தாய் தேடி வரவும் "மாம்" என்று தன் தாயிடம் தாவியவள் "தாங்க் யூ ஸ்வீட் அங்கிள்.." என தன் தாயின் கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்ட அதனை வாங்கியவன் "யூ ஆர் சோ ஸ்வீட்.." என்று கன்னம் கிள்ளி "யூவர் மாம் ஆல்சோ.." என்று மாயக்கண்ணனாய் கண்ணடிக்க அவன் தோளில் கரம் பதித்த மகேன் "டேய் வீரி உன் வாலை கொஞ்சம் சுருட்டிட்டு அமைதியா இருடா.. ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.." என்கவும் அதற்கேற்றார் போல் போர்டிங்கான அழைப்பு வரவே தன் தமையனுடன் ட்ரோளியே தள்ளிக் கொண்டு செக் இன் செய்வதற்காக சென்றான் வீர்.

மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தன் இரு மகன்களுக்காக விஜயன் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் வரும் விமான எண் கூறி வந்துவிட்டதாக கூறி அறிவிப்பு வரவே.. கண்கள் மின்ன பயணிகள் வெளிவரும் கேட்டிலேயே கண்களை பதித்திருந்தார்.

தூரத்தில் இருவரும் தங்களின் ட்ரோளியைத் தள்ளிக் கொண்டு வருவது தெரிய தன் பிள்ளைகளை நினைத்து முகமெல்லாம் விகசிக்க நின்றிருந்தார். ஏர்போட்டில் இருந்த பயணிகள் முதல் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள வரை அவர்களை இருவரையும் பார்த்தவாறு இருந்தனர்.

ஆளுமையான தோற்றத்துடன் கிரேக்க சிற்பம் போல் அகண்ட தோள் புஜங்களுடன் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவான உடல்வாகு கொண்டு ஒரே தோற்றத்தில் அனைவரின் கண்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தனர்.. ஒரே வித்தியாசம் என்னவென்றால் மகேன் தாடியுடனும் வீர் க்ளீன் ஷேவ் செய்தும் இருப்பர்.

மனதில் எழுந்த மகிழ்ச்சியுடன் தன் புதல்வர்களை தன்னுடன் சேர்த்தணைத்த விஜயன்.. இருவருக்கும் நெற்றியில் முத்தமிட்டு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். தன் அம்மாவிடம் இருவர் கொஞ்சி விட்டு பாசமழையைப் பொழிந்து விட்டு தன் தந்தையிடம் "எப்போ ப்பா ஹாஸ்பிட்டல் ஓபன் பண்ண போறோம்..?"

"இன்னும் ஒரு வாரத்தில் ஓபன் பண்ணிடலாம் ப்பா.." என்று கூறியவர் வீரை நோக்கி "வீர் அத்தை வீட்டுக்கு போயிட்டு ஹாஸ்பிட்டல் ஓபன் பண்ணுவதை பற்றி சொல்லிட்டு அழைப்பிதழ் கொடுத்துட்டு வா..நாங்க இங்க இருக்குற வேலையை பார்க்கிறோம்" என்றவர் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமென்று கூறிக் கொண்டிருந்தார்.

"சரிப்பா.. நாளை காலையில் போயிட்டு வரேன்.." என்று கூறியவன் ஓய்வெடுக்க செல்வதாகக் கூறித் தன்னறைக்குள் புகுந்துக் கொண்டான். இங்கு ஹாலில் சிறிது நேரம் தன் தாயின் மடியில் படுத்திருந்த மகேன்.. அவர் தலை கோதும் சுகத்தை அனுபவித்தவாறு இருந்தவன்.. தன் அம்மாவிடம் "ம்மா ஷிவானி.." என்று ஆரம்பிக்க "கண்ணா..! அதில் உன் தப்பு எதுவுமில்லை.. புரியுதா..? மனசை போட்டுக் குழப்பிக்காத" என்று ஆருதல் கூறவும் அதிர்ந்தான்.

"ம்மா.." என்று கலங்கிய கண்களுடன் தன் அம்மாவை நோக்க..அதில் தெரிந்த தவிப்பும் குற்றவுணர்ச்சியையும் கண்டவர்கள்.. அவன் கையை தட்டிக் கொடுத்த விஜயன் "மகேன்..! எங்களுக்கு எல்லாம் தெரியும் ப்பா.. உன் தவறு எதுவுமில்லை.. மனசை குழப்பிக்காத.." என்று தன்னுடன் சேர்த்தணைத்தவர் அவனை அறைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கூறி அனுப்பி வைத்துவிட்டு தன் மனைவியுடன் சில விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு "சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்துவிட்டால் அவளை பற்றிய நினைப்பு அழிந்துவிடும்.." என்று அவர் தன் மனைவியிடம் கூற "ஐஷூக்கு முடிச்சிட்டு ரெண்டு பேருக்கும் முடிச்சிடுவோம் விஜி.." என்று தன் கணவனிடம் கூறினார்.

ஐஷூவிடம் திருமணத்தைப் பற்றிப் பேச 'அவள் ஒரே பிடியாக கட்டினால் சாணுவை தான் கட்டுவேன்' என்று கூற அதில் அவர்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லாததால் அவளது காதலுக்கு ஒத்துக்கொண்டு தன் தங்கையிடமும் சாணுவிடமும் பேச.. சாணுவும் ஐஷூவும் இரண்டு வருடம் போகட்டும் என கூறிவிட்டனர்.

அடுத்த நாள் காலையில் வீர் தன் புதிய ரக பென்ஸ் காரில் தன் அத்தை வீட்டுக்கு சென்று தன் காரை நிறுத்தியவன்.. இறங்க முற்படும் போது பக்கத்தில் இருந்து சத்தம் கேட்க என்னவென்று பார்க்க.. ஆர்வம் உந்த தன் காரில் இருந்து இறங்கியவன் சத்தம் கேட்ட சந்தை நோக்கிச் சென்றான்.

அங்கு சாஹித்யா ஒரு சிறுவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். "டேய் ப்ளீஸ் டா.. எங்க அம்மாகிட்ட சொல்லிடாதடா.. தெரியாம செளமிக்கிட்ட நீ பார்த்து எழுதினதை சொல்லிட்டேன்.. சாரிடா.. ஆனாலும் நீ பார்த்து எழுதுவது தப்பு தானே டா.." என்று அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

"டேய் தம்பி.. இந்தாடா இந்த சாக்லேட் வச்சிக்கோடா.. ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் மண்ணு எடுத்துட்டு வாடா.. உனக்கு பிள்ளையார் செஞ்சுத் தரேன் பிள்ளையார் சதுர்த்தி வருதுல்ல.. ப்ளீஸ் டா நான் உன்கிட்ட மண்ணு கேட்டேன்னு சொல்லிடாத.." என்று கெஞ்சினாள்.

அந்த சிறுவனோ சிறிது நேரம் பிகு பண்ணி அவள் கையில் இருந்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டவன்.. "இனிமே அக்காட்ட போட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லு.." என்று கேட்டதும் "டேய் பார்த்து எழுதக் கூடாது.. போடா அக்கா வர சத்தம் கேட்குது.." என்று வேண்டுமென்றே பொய் சொல்லி அவனை பின் வாசல் வழியாக அனுப்பி வைத்தாள்.

அவனை அனுப்பி வைத்தவள்.. திரும்ப அவளை நெருங்கி நின்றவனை பார்த்து திகைத்தாள். 'யார் இந்த புதியவன்' என்று யோசிக்கும் போதே அவளை மூச்சுக் காற்று முகத்தில் படுமாறு நெருங்கி நின்றவன் "ஓய் சாக்கிக்குட்டி..!" என்று அவள் கன்னத்தை வருட தன் கையைக் கொண்டு செல்ல.. அவன் செயலைக் கண்டு பயந்தவள் பயத்தில நெஞ்சில் கை வைத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் சாய்ந்தாள்.

அது அவனுக்கு வசதியாக போனதோ..! அவளின் இரு பக்கமும் தன் கைகளை ஊன்றி "ஓய் கன்னுக்குட்டி..!" என்று பார்த்த சிறிது நேரத்திலேயே அவளுக்கு புதுப்புது விதமான பெயரை வைத்தவனை 'யாரிவன் இவ்ளோ பெருசா இருக்கான்..' (அட ஜிம் பாடிக்கு வந்த சோகத்தே..)

'எருமை மாடு மாதிரி உரசுறான்.. யாரிவன்..?' என்று மனதில் நினைத்தவள் வெளியில் அவனிடம் கேட்கத்தான் நா எழவேயில்லை. "ஓய் அந்த பையனுக்கு சாக்லேட் கொடுத்துட்ட.. அவன் உங்க அம்மாக்கிட்ட சொல்ல மாட்டான்.. ஆனால் நான் உங்க அம்மாகிட்ட சொல்லிடுவேனே.. இப்போ என்ன பண்ணுவ..?" விஷயம் என்னவென்றே தெரியாமல் அவளிட போட்டு வாங்க பேச்சை வளர்த்தான்.

"அது மட்டுமில்லாம அந்த பையன் பார்த்து எழுதினதை உங்க அக்காக்கிட்ட சொல்லி ஒரு சின்ன பையன் மனசை காயப்படுத்திருக்க.. இதுக்காகவே இரு உங்க அம்மாக்கிட்ட நான் சொல்றேன்.." என்று வேண்டுமென்றே அவளை பயப்படுத்தியவன் விலகிப் போவது போல பாவ்ளா செய்ய.. "ஐயோ தென்னமரம் சார் ப்ளீஸ்.. எங்க அம்மாக்கிட்ட சொல்லாதீங்க.." 

"நான் மண் வச்சு விளையாண்டா திட்டுவாங்க.. வேண்டாம் சொல்லாதீங்க.." என்று அவன் கையைப் பிடித்தவாறு கூற அவள் தன்னை தென்னமரம் என்று கூறியதில் அதிர்ந்தவன் அவள் வாயாலேயே விஷயத்தைக் கூறியதில் "ஐயோ கன்னுக்குட்டி மாட்டிக்கிச்சு.." என்று உள்ளுக்குள் சிரித்தவன் "ஓய் நான் உனக்கு தென்ன மரமா..?" என்று மிரட்டும் தொனியில் கேட்டான்.

அவனின் மிரட்டலில் தன் மருண்ட கன்னுக்குட்டியின் விழிகளில் கண்ணீர் விழவா வேண்டாமா என்றிருக்க மனம் கனிந்தவன் "மண்னு வச்சு என்ன பண்ணுவ..?" என்று கேட்டதும் "அது.. அது.." என்று இழுத்தவள் "எங்க அம்மாக்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லுங்க.." என்று பேரம் பேச அவள் குழந்தை தனத்தில் கவரப்பட்டவன் "நீ உண்மையா பதில் சொன்னா நான் யாருக்கிட்டையும் சொல்ல மாட்டேன்.." 

"அதெப்படி நான் சொல்றது உங்களுக்கு உண்மையென்று தெரியும்..?" எனக் கேட்க சிரித்தவன் "எனக்கு அடுத்தவங்க மனசுல நினைக்கிறதைப் படிக்கிற சக்தி இருக்கு.. அதுவும் இப்போ நீ என்னை பற்றி என்ன நினைக்குறன்னு சொல்லவா..?" என்று கேட்டவன் "யாரிவன்..? எருமமாடு மாதிரி வந்து உரசிக்கிட்டு நிக்குறான் அப்படி தானே நினைச்ச" என்று கேட்க தன் முட்டைக் கண்களை விரித்த அழகில் தன் மனதை பரிகொடுத்தவன் "மண்ணு வச்சு என்ன பண்ணுவ..?" என்று கேட்கவும் 

"எனக்கு மண்ணு வச்சு குட்டி குட்டியா சிலை செய்ய பிடிக்கும்.. அப்புறம் குட்டி குட்டி சாமான் செய்வேன்.." என்று கூற "ஓ..!" என்றவன் தன்னை நம்பவில்லை போல என்று அங்கு ஓரமாக மறைத்து வைத்திருந்த ஒரு சிலையை அவனிடம் கண்கள் மின்ன எடுத்துக் காண்பித்தாள்.

அதனைக் கண்டவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.. ஒரு குருவி அதன் குஞ்சுகளுடன் கூட்டில் இருப்பது போல் தத்ரூபமாக செய்திருந்தாள். "ஹே சூப்பரா இருக்கு.." என அவன் பாராட்டவும் தன்னை அவன் பாராட்டியதில் முகம் விகசிக்க "நல்லாருக்கா..? உண்மையாவா..?" என்று வினவ "ஹிம்ம்.. உன்னைப் போலவே அழகா இருக்கு.." என்றவன் "அம்மா எங்க..?" என்று கேட்கவும் பயந்தாள் தன் தாயிடம் கூறி விடுவானோ என்று..

மாட்டிவிடுவானா..? இல்லை அவளின் மனம் கொள்ளை கொள்வானா..?
 
மழை பொழியும்...


No comments:

Theme images by RBFried. Powered by Blogger.