மழை - 6

 



மழை - 6:

தன் மனைவி எழ உதவி செய்தவாறு தானும் எழுந்துக் கொண்ட விஜயன்.. ஜெயாவை இருக்கையில் அமர்த்தி அவர் பக்கத்து இருக்கையிலேயே தானும் அமர்ந்துக் கொண்டார். "ஜெயா நான் பரிமாருறேன்" என்று எழ "உட்காரு ஜெய்" என்றது விஜயன் என்று நினைத்தால் அது தவறு வீர் தான் அவ்வாறு கூறினான். கோபம் வந்தால் அவன் இப்படி தான்.. விஜயன் ஜெயாவை 'ஜெய்' என்று தான் அழைப்பார் அது போல ஜெயா விஜயனை 'விஜி' என்று அழைப்பார்.

கோபம் வந்தால் மட்டும் அவர்களின் அழைப்பை இவன் கடன் வாங்கிக் கொள்வான். (இது புதுசா இருக்கே) வீர் அவ்வாறு கூறவும் கப்சிப்பென சட்டென்று இருக்கையில் அமர்ந்துக் கொள்ள.. "இவங்க பெரிய சத்தியவான் சாவித்திரி.. இவங்க சாப்பிடலைன்னா.. இவரும் சாப்பிட மாட்டாராம்.. இந்த வயசுல ரோமியோ ஜூலியட்னு மனசுல நினைப்பு.. நேராநேரத்துக்கு சாப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. இனிமே ஊட்டிதான் விடணும் போல.." என்று வசைப்பாடியவாறே இருவருக்கும் பரிமாறினான்.

"இங்க என்ன பார்வை..? உங்களுக்கெல்லாம் போட முடியாது.. நீங்களே போட்டு கொட்டிக்கோங்க.." என்று அவனை பார்த்த மற்ற மூவரையும் முறைத்து விட்டு சென்று டிவி முன்பு உட்கார்ந்துக் கொண்டான்.

 (ஐயோ டிவி நீ ரொம்ப பாவம்.. டிவியின் மைண்ட் வாய்ஸ்.. ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னே தெரிகிறது...)

"போடா ஆங்கிரி பேர்டு மண்டையா.. நீ போடலைனா எங்களுக்கு சோறு தண்ணீ இறங்காதா.." என்று தன் தமையனின் முதுகை பார்த்து வக்களம் காட்டியவள்.. தன் அண்ணனுக்கும் அன்பனுக்கும் பரிமாறி தனக்கும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். மகேன் அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்தவனாக அமைதியாக சாப்பிட்டான். சாணுவோ தன்னருகே அமர்ந்திருந்த தன்னவளிடம் அவள் காதோரம் சற்று சரிந்து "ஏன் ஐசு..? உன் அண்ணங்காரன் இப்படி ருத்ரதாண்டவம் ஆடிட்டுப் போறான்.." ஊப்பென்று பெருமூச்சு விட்டு தன் காதை குடைந்து கொண்டான்.

(ஐயோ பாவம் காது ஜவ்வு கிழிஞ்சிடுச்சுப் போல...)

அவன் அப்பப்பா இப்படித்தான் குரங்கு வித்தை காமிப்பான்(வீர் கிரேட் இண்சல்டிங் சோ சேட்) அதெல்லாம் கண்டுக்காதீங்க இப்போ காமிச்சது வெறும் டீஸர் தான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டுவாங்க பாருங்க ஒரு படம்.. காட்சிகள் அனைத்தும் உல்டாவா மாறும் பாருங்க.." என்றவாறு தன் தட்டிலிருந்த உணவை கொறிக்கத் தொடங்கினாள். இங்கு வேக வேகமாக சாப்பிட்ட விஜயனும் ஜெயாவும் ஒரு தட்டில் சாப்பாடைப் போட்டு வீர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றனர்..

அங்கு மூஞ்சை ஏழு முழத்துக்கு தூக்கி வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் கையில் இருந்த ரிமோட் படாதப்பாடு பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கிருந்த கோபத்தில் ரிமோட்டின் பட்டனை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தான்.. டிவிக்கு மட்டும் வாய் இருந்திருந்தால்.. நம்மூர் கிழவிகளே தோற்றுப் போய் விடுவர்.. அந்தளவுக்கு கிழித்து நார் நாராக தொங்க விட்டிருக்கும் .

"போடா பொசக்கெட்டப் பயலே.. உன்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகுறதுக்கு.. காயிளாங் கடையிலேயே சும்மா இருப்பேன்.." என்று கூக்குரலிட்டது.

நொடிக்கொருதரம் அந்த ரிமோட் பட்டனை அழுத்திக் கொண்டிருக்க டிவியில் சிரிக்க வைக்கும் காமெடி சேனல்.. ரசிக்க வைக்கும் பாட்டு சேனல்.. அழுக வைக்கும் சீரியல்.. என அனைத்தும் வந்துப்போக அவன் இடது பக்கம் விஜயனும் வலது பக்கம் ஜெயாவும் அமர்ந்து ஜெயா அவன் நாடியைப் பிடித்து தன்னை பார்க்க செய்தார்.

அவர் கையைத் தட்டி விட்டவன்.. உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ரிமோட்டை பாடாய் படுத்த ஜெயா அவன் கன்னத்தில் முத்தம் வைத்து.. அவனைப் போலவே அடங்காத தலைமுடியை தன் விரல்களால் கோதிக் கொடுத்தவாறே.. "என் செல்லக்கண்ணா தானே.. அம்மாவ இந்த முறை மன்னிச்சிடு கண்ணா.. காலையில் பயங்கரமான கனவு டா.. அதான் ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஒன்றென்றால் என்னால் எப்படி கண்ணா தாங்க முடியும்..? அதான் அந்த டென்ஷனில் சாப்பிட தோணலை.. என் செல்லக்குட்டி தானே சாப்பிடுடா.." என்று சாதத்தை பிசைந்து ஊட்டவும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டான்.

வீர் எப்பொழுதும் இப்படித்தான் தன் அம்மா "கண்ணா" என்றால் வெயிலில் வைத்த வெண்ணெய் கட்டியாய் கரைந்து விடுவான்.அதுவும் அவர் அவன் தலைமுடி கோதுவது என்றால் அப்படியே பிளாட்டாகிடுவான். தன் தாய் தலை கோதும் சுகத்திற்கு அவன் என்றுமே அடிமை. இப்பொழுதும் ஜெயா தன் மகனை பற்றி தெரியுமாதலால் அவனை தாஜா பண்ண அவனும் சரியாகி விட்டான்.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தன்னை தன் தாய் கண்ணாவென அழைக்கும் போதெல்லாம் தன் சாக்லேட் நிறத்தழகி தான் கண்களுக்குள் மின்னி மறைகிறாள்.

அவளை நினைக்கும் போதே ஜில்லென்ற ஓர் உணர்வு அவனை தாக்க.. "ஏன் டி தினம் தினம் என்னை கொல்லுற ராட்சசி..?" என்று தனக்குள்ளே தன் சாக்கியிடம் முறையிட்டுக் கொள்வான்.

"ம்மா நாங்க சின்ன குழந்தையில்லை.. எங்களுக்கு எதும் ஆகாது.. நீங்க தேவையில்லாம கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.." என்றவாறு அவர் ஊட்ட சாப்பிட்டுக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்துகொண்டான்.

இதனை கண்ட ஐஸ்வர்யா "டேய் தடியா..! எருமை மாடு அளவுக்கு வளர்ந்துருக்க எழுந்திருடா.. எனக்கு தான் எங்க அப்பா அம்மா நகருடா.." என்று அவன் கையைப் பிடித்திழுத்தாள். "சாரி உலகழகி அவர்களே.. பட்டா போட்டாச்சு.. உங்களுக்கு இந்த இடம் தர முடியாது.." என்கவும் "இதென்ன ஃபிளாட்டா டா.. பட்டா போடுறதுக்கு.." என்று இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருக்க "சரி சரி போதும்.. உங்க சண்டையை நிறுத்துங்க" என்று ஐஷூக்கு ஜெயா ஒரு கவளம் ஊட்ட "அவ்ளோதான் இதுக்கு மேல கிடையாது.. இப்போ தானே தட்டு நிறைய கொட்டிகிட்ட.. பத்தாதுக்கு என் மச்சி பிளேட்ல இருந்ததையும் விட்டு வைக்கல.. அதும் பத்தலையென்று.. இப்போ இங்க வந்துட்ட.. அது வயிரா இல்ல சேமிப்பு கிடங்கா..? போட்டு நோன்ஸ்டாப்பா உள்ள தள்ளிட்டே இருக்க.." என்று வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தான்.

"யாருடா நோன்ஸ்டோபா கொட்டிகுறா.. நீயா நானா.. எருமா நில்லுடா.." என்று துரத்த அனைவரும் அவர்களின் செயலில் உள்ளம் நிறைந்து சிரிக்க அதை குலைக்கவே அந்த ஃபோன் அழைப்பு வந்தது.

எல்லாம் அந்த அழைப்பு வரும் வரை தான்…

இருவரும் சண்டை போடுவதைக் கண்டு "ஓய் வாண்டுகளா.. வெளியே போய் விளையாடுங்க.." என்று அவர்களை கேலி செய்த மகேன்.. தன்னறைக்கு சென்று சில மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்தவன்.. சாணுவிடம் பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையிடம் வந்து அருகில் அமர்ந்தான். 

தன் தந்தைக்கு இரத்தழுத்தத்தைப் பரிசோதித்தவன் "அப்பா பிரஷர் ஏறியிருக்கு.. ஏன் ப்பா! எதுக்கும் கவலைப்படாதீங்க.. எங்களுக்கு எதுவும் ஆகாது.." என்கவும் "அதில்லைப்பா.. என் தம்பி குடும்பம் போன துக்கமே என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.. இப்போ இந்த போன் கால் வேற.. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.." என்று சற்று சாய்வாக சோஃபாவில் சாய்ந்தமர்ந்தார்.

"எதைப் பற்றியும் நினைக்காதீங்க.. நாங்க பார்த்துக்கிறோம்.." என்று அவர் கையை அழுத்திக் கொடுத்தவன்.. தன் தாய்க்கு நவீன கருவி கொண்டு சுகர் லெவலை பரிசோதனை செய்து.. அவருக்கும் ஒரு மருத்துவராக அறிவுரை வழங்கியவன்.. மகனாக "உன்னை விட்டு எங்கும் போகமாட்டோம் ம்மா.." என்று உறுதியளித்தான். 

ஆனால் அப்பொழுது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவன் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் தன் உயிருக்கு உயிரான தன் தம்பியை பலிக்கொடுக்க போகிறோமென்று...

அவன் பரிசோதனை செய்வதைப் பார்த்த வீர் "என்ன டாக்டரே பரிசோதனையெல்லாம் முடிச்சாச்சா..?" என்றவாறு தன் தமையனை நோக்கி வந்தவன் அவன் சொன்ன தன் தாய் தந்தையின் ஹெல்த் கண்டிஷனை பற்றி அறிந்துக்கொண்டவன்.. அவர்களை முறைத்தான் "என்ன பண்ணி வச்சுருக்கீங்க..?" என்று எகிறியவனை கலைத்தது மகேனின் செல்பேசி அழைப்பு..

தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் இந்திய நம்பர் காட்டாமல் அமெரிக்க நம்பர் காட்டவும்... எழுந்துக்கொள்ளப் போக அவனை தடுத்த ஜெயா "இங்கேயே பேசுப்பா.." என தன் நடுங்கும் குரலில் ஜெயா கூற.. தன் தாய் அந்த அழைப்பைக் கண்டுக்கொண்டார் என புரிந்துக்கொண்டவன்.. தன் தம்பிக்கு கண்ணைக் காட்ட அதனை புரிந்துக்கொண்டவன்.. தன் தாய் தந்தையர் இடையில் சென்று அமர்ந்துக்கைகளை அவர்களின் தோளை சுற்றிப் போட்டுக்கொண்டு அணைத்துக்கொண்டான்.

மகேன் ஆன் செய்து காதில் வைக்க "என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..? உங்க ரெண்டு பேருக்கும் ரைடர்னு நினைப்பா..? அப்படியே பைக்ல பறக்குறீங்க.. ஒரு லாரி ஏற்பாடுப் பண்ணி தூக்கலாமென்று தான் பார்த்தேன்.. அப்படி செய்தால் நீங்க பொட்டுன்னு போயிடுவீங்க இல்லையா.. நீங்க ஒரே அடியில் மேலே போய்ட்டா அது நல்லாருக்காது.. அப்படியே துடித்துடிச்சி அணு அணுவா சாகனும்.. அதைப் பார்த்து நான் ரசிக்கனும்.. ஹா.. ஹா.." என்று கர்னக் கொடூரமாக சிரித்தவன் அவன் அமைதியாக இருக்கவும் "என்னடா பயமா..? உன் அப்பனும் ஆத்தாளும் பயத்துலையே மேல போய் சேர்ந்துடுவாங்கப் போலையே..?" என்று எகத்தாளமாக கூற தன் கோபத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன்.. தன் தாய் தந்தையைப் பற்றி அவன் பேசவும் "ஏய் என்ன விட்டா பேசிக்கிட்டே போற..? உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோடா..? தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து பேசுடா.." என்று கழுத்து நரம்பு புடைத்து வெளித்தெரிய கோபத்தில் கண்கள் சிவந்து கர்ஜித்தான்.

அவன் கர்ஜித்ததில் அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவனை அதிர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்க "என்னடா..? உன் அப்பன் ஆத்தால சொன்னா.. உனக்கு பொத்துக்கிட்டு வருது போல.." என்று கேலியாகக் கூறியவனை இப்பொழுது கண்டதுண்டமாக வெட்டிப் போடும் ஆத்திரம் எழுந்தது. "டேய்..! நீ மட்டும் என் கையில் கிடைச்ச.." என்று கர்ஜிக்க "டேய்..! நிறுத்து நிறுத்து.. இந்த சவுண்டெல்லாம் நீ போடக் கூடாது.. அப்புறம் பின் விளைவுகள் பெருசா இருக்கும்.." என்று மிரட்டியவன் "உன் மச்சான் வேற இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்துருக்கான் போல.. உன் தங்கச்சியும் அவனும் மன்மதன் ரதியோ..! அப்படியே பார்வையிலேயே காதல் பண்றாங்க.. எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ.. இன்னும் ஒரு வாரத்துல உன் வீட்டுல சாவு விழும் பாரு.. வெயிட் அண்ட் வாட்ச் டாக்டர் கொம்பு.." என்கவும் "டேய் உன்னாலா என்ன பண்ண முடியுமோ பார்த்துக்கோ.. என் வீட்டுல இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது உன்னால முடிஞ்சத பார்த்துக்கோடா.." என்று அழுத்தமாகக் கூற மறுபக்கம் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுதே அவனை அழிக்க வேண்டுமென வெறி ஏற.. "வரதையப்பாளையத்துலையே உங்களை போட்டுருக்கனும்டா.. மிஸ் பண்ணிட்டேன்.. யுவர் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்.." என்று உறுமியவன் அழைப்பை துண்டித்தான்.

மகேன் போனை அனைத்து பாக்கெட்டில் போட "என்னடா அவனா..?" என்று வீர் விவை "அந்த நாதாரிதான்.. அவனை விடுடா.. லுச்சா பயல்.." என்று அவனை ஓரங்கட்டியவன் தன் தாய் நடுக்கமுற்று அமர்ந்திருக்க "அம்மா ஒன்னும் ஆகலை.. அவன் எவனோ பணத்துக்கு அடிப்போடுறான்.." என்று தன் நெஞ்சரிந்து தன் தாய்க்காக பொய் கூறினான்.

"பணத்திற்காகவா மகேன்.. எவ்வளவு வேணுமோ அந்த பையனுக்கு குடுத்துடலாம் ப்பா.. நம்மக்கிட்ட தான் பணம் இருக்கே பணம் கூட சம்பாரிச்சுக்கலாம் நாம கொடுத்துடுவோம்.." என்று வெள்ளந்தியாக கூற "ம்ம் சரிம்மா நல்லா கொடுத்திடலாமென.." அந்த 'நல்லா' வில் அழுத்திக் கூறினான்.

"சரிம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நாங்க சும்மா கொஞ்ச நேரம் வெளியே வாக் மாதிரி போயிட்டு வரோமென்று" தன் தாய் தந்தையையும் தங்கையையும் வீர் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தவன் சாணுவையும் மகேனையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

மழை பொழியும் ...



No comments:

Theme images by RBFried. Powered by Blogger.