மோகம் -7



 மோகம்-7:


"மதுமதி" என்று கோபமாக அழைத்த மித்ரனை கண்டு, "ஏன் கோபப்படுறாங்க..? என்னாச்சு? " என்று நினைக்கும் போதே அவளை நெருங்கி அவள் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான்.


அறைக்கு வந்ததும் "என்ன ஆச்சு அத்தான்.. ஏன் இவ்வளவு கோபம்…"


"உனக்கு அறிவு இருக்கா மது.." என்று ஆத்திரமாக கேட்டான்.


"ஏன் அத்தான்.." என்று பாவமாக கேட்டாள்.


"என்ன? ஏன் அத்தான்…? நீ எதுக்கு வேலை செய்ற... நீ வேலை செய்ய சொன்னா ஆயிரம் ஆளுங்க இருக்கும்போது நீ ஏன்டா மதும்மா வேர்த்து விறுவிறுக்க வேலை செய்யனும்.." என்றதும் அவளுக்கு உருகிப்போயிற்று..


"அதுமில்லாம வேலையாட்கள் கூட அதிகமா பேச்சு வச்சுக்க கூடாதுடா.." என்று நாசுக்காக கூறினான்.


"இல்ல அத்தான்.. அந்த அண்ணா தான் உதவி பண்றேன்னு சொன்னாங்க..." என்று வெகுளியாக சொன்னாள். 


"அதில்லடா மதுக்குட்டி.. யாரு எப்படினு நமக்கு என்ன தெரியும்.. அதுமில்லாம வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ஆளு நீ.. அதான்டா மது தெரியாதவங்ககிட்ட அதிகமாக பேச்சு வச்சுக்க கூடாது.. சரியா.."


"ஹிம்ம்.. சரி அத்தான்.."

 

"அதுமில்லாம நீ எந்த தப்பான எண்ணத்தோடும் பேச மாட்ட.. ஆனால் உன்கிட்ட பேசுறவங்களும் அப்படி இருக்கணும்ல.. அவங்க தப்பான நோக்கத்தோடு பேசினா நமக்கு எப்படி தெரியும்.. அப்புறம் வெளிய இருந்து பாக்குறங்களுக்கும் அது தப்பா தான் தெரியும.. சரியா.." என்று சின்ன குழந்தைக்கு சொல்வதுபோல் சொன்னான்.


"சரி அத்தான்.."என்று சொன்னவள் தன் மேல் அக்கறை காட்ட தன் அத்தான் இருக்கின்றான் என்ற சந்தோஷத்தில் அவனை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.


"என்ன மதுக்குட்டி கன்னத்துல குடுக்குற... எனக்கு இங்க வேணும்.." என்று தன் உதட்டை குவித்து காட்டினான்.


"போங்க அத்தான்.. நான் மாட்டேன்" என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள். 


"ஐயோ.. அத்தான் உங்க சட்டையில் மண் ஒட்டிடுச்சு அச்சோ.."என்று சொல்லி அதே கையால் துடைத்து விட்டாள்.


"மது நீ கறையை தொடைக்கிறேன்னு இன்னும் அழுக்காக்குற.. " என்று சிரித்தான்.


"ஐயையோ..." என்று அவளும் சிரித்துக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.


"மது.. ரெண்டுபேரும் சேர்ந்து குளிப்போமா.." கள்ளப்பூனை ஒரு கேப் கிடைத்தாலும் விடக் கூடாதென்று நினைத்தான் போல..


"அதெல்லாம் வேண்டாம் அத்தான்.. "


அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அலேக்காக தூக்கியவன் குளியலறையில் இறக்கிவிட்டு ஷவரைத் திறந்துவிட்டான்.


"அத்தான் நீங்க வெளியே இருங்க... நான் குளிச்சிட்டு வரேன்.." அவள் சொல்லும் போதே சேலையை உருவிப் போட்டிருந்தான்.


"அத்தான்.. ப்ளீஸ் அத்தான்... " என்று சுவற்றுபக்கம் திரும்பி நின்றுகொண்டாள் வெறும் பாவாடை ரவிக்கையுடன்.


அப்படியே அவள் மீது சாய்ந்து சுவற்றோடு அழுத்தியவன் "மதும்மா திரும்பிடி.." என்று அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான் கூச்சம் தாங்காமல் திரும்பியவள் பேரம் பேச ஆரம்பித்தாள்.


"அத்தான் இப்போ வெளியே போனா நைட் ரெண்டு திராட்சைப்பழமும் தருவேன்.."


அவளைப் பார்த்து சிரித்தவன் "நீ தர வேண்டாம் நானே எடுத்துப்பேன்.." என்று அவள் நெஞ்சில் முட்டினான் பின்பு அவள் கெஞ்சவும்


"சரி இரு நான் குளிச்சிட்டு போறேன்.." 


"ஐயோ.. வேண்டாம் அத்தான்.."


"நான் உன்னை போல வெக்கமெல்லாம் பட மாட்டேன் மதுக்குட்டி.." என்று அவன் சட்டையை கழட்டினான்.


அவன் சட்டையை கழட்டவும் இவள் திரும்பி நின்றுகொண்டாள்.


பின்பு எந்த சத்தமும் வரவில்லை என்றதும் ஓரக்கண்ணால் பார்த்தாள்.


"ஓய் கள்ளி இங்க என்ன பார்வை..." என்று அவளை பின்னால் இருந்து அணைத்தவன் "குளிச்சிட்டு வா.. நான் போறேன்.." என்று முத்தமிட்டு விட்டு சென்றான்.


அவன் வெளியே சென்றதும் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.


பின்பு அவள் குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தாள்.


அங்கேயே நின்றிருந்திருப்பான் போல.. வந்து அள்ளிக்கொண்டான்.


"அத்தான்.. என்ன அத்தான்.. இப்படி பண்றீங்க.."


"எப்படி பண்றேன்.. என் பொண்டாட்டிய நான் தூக்கினது தப்பா.. இதென்னடா மித்ரனுக்கு வந்த சோதனை.. ஏதோ வேற யாரையோ தூக்கின மாதிரி சொல்ற..."


"ஓ.. வேற யாரையும் தூக்குற ஐடியா உங்களுக்கு இருக்கா?" என்று மிரட்டியவள் "என்ன தவிர வேற யாரையும் தொட கூடாது அத்தான்... எனக்கு நீங்க மட்டும்தான் இருக்கீங்க.. நீங்களும் என்னைவிட்டு போய்ட்டா நான் என்ன பண்ணுவேன்.."


இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை தான் அவனை பார்த்து , ஆனால் இனி அவன் இல்லாமல் இருக்க முடியாது என்று தோன்றியது.


அன்பு காட்ட யாருமே இல்லாமல் அன்புக்காக ஏங்கி தவித்தவள் அன்பின் மொத்த உருவமாய் , "உனக்கெனவே நான்" என்று வந்து நின்றவனை அப்படியே இறுக பிடித்துக்கொண்டாள்.


"உன்னை விட்டுட்டு எங்கும் போக மாட்டேன்டா.." என்று அணைத்துகொண்டான்.


"சரி புடவை கட்டலையா... இப்படியே அணைச்சுக்கிட்டே எவ்வளவு நேரம் இருக்குறது.."


"திராட்சைபழம் சாப்பிடலையா.." என்று இவளே கேட்க "சூப்பர் மதுக்குட்டி நல்ல முன்னேற்றம்..." என்று அவளை சிலாகித்தவன் தன் வேலையே ஆரம்பித்தான்.


அப்புறம் என்ன.. இன்னொரு திராட்சைப் பழமும் பெருசாயிடுச்சுன்னு புகார் வாசித்தாள்.


ஆனால் இந்த சந்தோஷம் நாளை நிலைக்குமா......


வான்மதி தன் தாயிடம் 


"நான் கிளம்புறேன்.. தயவு செஞ்சு சென்னைக்கு போய் அசிங்கப்பட்டு வராதா.. ஏன்னா நீ கண்டிப்பா சும்மா இருக்க மாட்டேன்னு மாமாக்கு தெரிஞ்சிருக்கும்... அதனால் உன் வேலையெல்லாம் அங்கபோய் காட்டாத... அப்புறம் பின்னாடி வருத்தப்படுவ..."

சொல்லிக்கொண்டிருந்தவள்


தன் தாயை நெருங்கி கைகளைப் பிடித்துக் கொண்டு "ம்மா அக்கா பாவம் மா.. உன்கூட இருந்தவரைக்கும் அவள் நிம்மதியா இல்ல.. சரி உனக்கு தொந்தரவா இருந்தா, சுமையா இருந்தா என்று நீ நினைச்சாலும் அவ இங்க இருக்கிற வரைக்கும் மாடு மாதிரி உழைச்சிருக்கா.. நீ அப்பொழுதும் அவளை அடிச்சிருக்க.. திட்டிருக்க.. ஆனால் அவள் ஒன்னுமே பேசுனது இல்லை.. ப்ளீஸ் மா.. அவள் இப்போ இங்க இல்லை.. உனக்கு எந்த வேலையும் வைக்காம மாமா வந்து கூட்டிட்டு போய்ட்டாரு..."


"சரி டி.. சொன்னதே எத்தனை தரம் திரும்ப திரும்ப சொல்லுவ.. இப்படியே இருந்தா உன்ன கட்டிக்கப் போறவன் காதுல பஞ்ச வச்சுட்டுதான் சுத்துவான்..."


"அந்த பாவப்பட்ட பிறவி எங்க இருக்கோ யாருக்கு தெரியும்.."


(எனக்கு தெரியும் அந்த பாவப்பட்ட பிறவி லண்டன்ல இருக்கு)


"சரி நான் கிளம்புறேன்.."


"சரி போய்ட்டு போன் போடு.."

...................


ஒரு வாரம் ஓடியிருந்தது...


மித்ரன் மதியிடம் சொல்லிக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டான்.


கிருஷ்ணா புறப்பட்டதும் சனா, மதியிடம் 


"கோயிலுக்கு வரியாடா போய்ட்டு வரலாம்.."


"இல்லை அத்தை.. எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு.. நான் வீட்டுலயே இருக்க வா.."


"சரிடா டேப்லட் தரேன் வா போட்டுட்டு படு.. ".


"ஹிம்ம்.."


"மித்ரன் கிட்ட சொன்னியா.. "


"இல்லை அத்தை சொல்லியிருந்தா விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க.. ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்க.. அதான் எதும் சொல்லல.."


"ஹிம்ம்.. ஆமாம் டா ஜெர்மனில இருந்து ஏதோ ஒரு ப்ரோஜெக்ட் பத்தி பேச வரதா உங்க மாமா கூட சொல்லிட்டு இருந்தார்."


"ஹிம்ம்.. ஆமாம் அத்தை அத்தானும் அதான் சொன்னாங்க.."


"சரிடா நான் ரமேஷ கூட்டிட்டு கிளம்புறேன்.. நீ ரூம்க்கு போ.."


"சரி அத்தை..." என்று தன் அறைக்கு வந்தவள் மாத்திரையை போட்டு சிறிது நேரம் தூங்கினாள்.


ஒரு மணி நேரம் கழித்து மதிய சமையலுக்கு மெனு சொல்ல கீழிறங்கியவளை ,கர்னக் கொடூரமான ஒரு குரல் அழைத்தது.


(வெண்கலப்பானையை உருட்டினா ஒரு சத்தம் வருமே அதவிட மோசமா)


"ஏய் இங்க வா.. "


(மித்ரன் இருக்கும் போது சொல்லி பாரு வாய ஒடைச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பான்..)


"பிச்சைக் காரியை வீட்டுல வச்சா இப்படிதான்.. நல்ல தூக்கமா..."


"மித்ரன் யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்னு சொன்னப்போ.. சரி பொண்ணு அழகா இருப்பா... சொத்து சொகமா இருப்பான்னு நினைச்சேன்.."


"இங்க வந்து பாத்தால்ல தெரியுது.. கருப்பா இருக்க..

அப்படி என்னடி உன்கிட்ட இருக்கு.. மித்ரன் உன்கிட்ட மயங்க..." என்று கேவலமாக பேசினாள்.


"நல்லா பணக்காரனா பாத்து வலச்சுப் போடுன்னு உங்க ஆத்தாக்காரி சொன்னாளா.." என்றதும் மதிக்கு பொல பொலவென கண்ணீர் கொட்டியது.


அவள் அழுததை பார்த்திருந்தால் வேறொருவராக இருந்தால் எதும் சொல்லாமல் போயிருப்பார்கள்.


ஆனால் இந்த பூதம் அவளை விடவில்லை.


"மித்ரன் எவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரியுமாடி உனக்கு.. அவனுக்கு பொண்ணு குடுக்க க்யுல பணக்காரங்க வரிசைக் கட்டி நிக்கிராங்க.."


"அவனையும் உன்னையும் சேர்த்து கண்ணாடில பார்த்துருக்கியா... என் அண்ணன் மகன் கால் தூசிக்குப் பெறமாட்ட நீயெல்லாம் அவனோட பொண்டாட்டி..."


மதி மனதிற்குள் 


"அத்தான்.. வாங்க அத்தான்.. ப்ளீஸ் இந்தம்மா என்னென்னமோ பேசுறாங்க.. என்னால தாங்க முடியலை.." என்று மனதோடு அவனிடம் பேசியவள் அழுதுகொண்டே இருந்தாள்.


"இப்போ கூட ஆயிரம் கோடி பெருமானமுள்ள ஒரு ப்ரொஜெக்ட் சைன் பண்ண தான் போயிருக்கான்.."


"ஆயிரம் கோடிக்கு எத்தனை ஜீரோன்னு உனக்கு தெரியுமாடி.."


"இந்த அண்ணன் அண்ணிக்கு புத்தி எங்க போச்சு.." என்று பேசிக்கொண்டிருந்தவர்


"போதும் நிறுத்து வசந்தா.." என்ற குரலில் திரும்பிப் பார்த்தாள்.


"என் வீட்டுக்கு வந்து என் மருமகளை திட்டுறதுக்கு உனக்கு எந்த ரைட்சும் இல்லை..."


"மித்ரன் அவளை கல்யாணம் பண்ணினா அது அவனோட விருப்பம்.. அதுல நாம யாரும் தலையிட முடியாது.."

என்று கூறினார் .


வேறு யாராக இருக்க முடியும் ராதாகிருஷ்ணன்தான்.


"அதில்லைண்ணா ஒரு அன்றாடங்காட்சியைப் போய்.." என்று சொல்ல வருவதற்குள் தன் கைகளை காட்டி அவள் பேச்சை நிறுத்தியவர் 


"மதுமதி இப்போ மித்ரனோட பொண்டாட்டி... அவள் முன்னாடி யாரா வேணா இருந்துட்டு போகட்டும்.. ஆனால் இப்போ பிஸ்னஸ் கிங் ராதாகிருஷ்ணனோட மூத்த மருமகள்... இந்த சொத்த ஆளப் போறதே அவள் தான்.. உன்னை இதுவரைக்கும் நிக்க வச்சு பேசிட்டு இருக்குறதே என் தங்கை என்கிறதால தான்... இது மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் உண்டில்லைன்னு பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பான்.. அவன் வருவதற்குள் இடத்தை காலி பண்ணு..." என்று வாயிலைக்காட்டினார்.


"இல்லை அண்ணா.. நம்ம அந்தஸ்து என்ன.." என்று திரும்ப ஆரம்பிக்க அப்பொழுதுதான் வந்த சனா "பணம், அந்தஸ்து எல்லாம் நாம பிறக்கும் போதேவா வருது.. பணம் பணம் என்று ஓடி தான் என் மித்துவ தொலைச்சிட்டு நிக்குறேன்.." என்றார்.


"என் மருமகள் போல நல்ல குணம் கொண்ட ஒருத்தர் இந்த அந்தஸ்து, பணம் என்று இருக்குறவங்கள்ல்ல பார்க்க முடியுமா.."


"இதுக்கு மேலே நான் பேச விரும்பல.." என்று வாசல் பக்கம் கையை காட்டினார்.


வசந்தா அதற்குமேல் அங்கு இருப்பாரா...?


அழுது கொண்டிருந்தவளை "மதி அழாத.. மித்ரன் இப்போ வந்துருவான்.. அவன் இப்படி உன்னை பார்த்தா வருத்தப் படுவான்டா..." என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டார்.


"உன் ரூம்க்கு போ.. காலையிலேயே தலைவலிக்குதுன்னு சொன்ன.. ரெஸ்ட் எடு" என்று அனுப்பிவைத்தார்.


மித்ரனுக்கு தன் மதி அழுவது தெரிந்தால்.....?

No comments