தேவநிலா - 3:

ஐயா அடுத்த வாரம் நம்ம ஜவுளி கடையோட திறப்பு விழா அதுக்கு சின்னதா ஒரு விளம்பரம் கொடுத்திடலாம் ஐயா நம்ம கடை என்றாலே பிரம்மாண்டம் தான் இதோட இருபத்திரண்டு இடத்துல பிராஞ்சு ஓபன் பண்ணியாச்சு நீங்க எதை தொட்டாலும் பொன்னா பெருகுது ஐயா என்று கொடுக்கும் காசுக்கு மேலேயே கூவினார்.

அடுத்து நகைக்கடை தான் திறக்கணும் நல்ல லாபம் பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவரது மகன் வரவும் ராகவ் கண்ணா பூந்தமல்லில அடுத்த வாரம் ஓபன் பண்ண போறோம்ல அந்த ஜவுளி கடைக்கு சின்னதா ஒரு விளம்பரம் பண்ணிடலாம்.

சரிப்பா அப்படியே பண்ணிடலாம் என்று கூறினான்.

ம்ம் இந்த ஹிந்தி நடிகை எல்லாம் வேணாம் நம்ம ஊரு பொண்ணா குடும்ப பாங்காண அழகோடு இருக்கு பொண்ண பார்த்து பேசிடு என்று கூறவும் சரிப்பா என்றவன் சிறிது நேரத்திலேயே வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் இப்பொழுது இருக்கும் டாப் மூன்று நடிகைகளின் புகைப்படத்தை தன் தந்தையிடம் எடுத்து வந்து காட்டினான்.

இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து கையில் தாமரையை வைத்து கொண்டு போஸ் கொடுத்திருந்த தேன்நிலாவை கண்டதும் அவருக்குப் பிடித்து போனது.

எப்பா எவ்வளவு அழகா இருக்கா செதுக்கி வைத்த கோயில் சிற்பம் போல.. இதுவரைக்கும் என் கண்ணில் படவே இல்லையே செம கட்டை பணத்தை கொடுத்து ஒரு நாள் இவக்கூட ஜமாய்ச்சிடலாம். ஏன் ஒருநாள் இனி ஒவ்வொரு நாளும் ஆடித் தீர்க்கலாம்.

பொட்டக் கழுதை காசு கொடுத்தால் எல்லாம் க்யூ கட்டி வருவாள்க என்று கேவலமாக நினைத்தவர் வெளியில் ஏதும் காட்டிக் கொள்ளாமல் இந்த பெண்ணை பேசி முடிச்சிடலாம் ராகவ்..

பணம் அமெளண்ட் எல்லாம் துரை பேசிடுவான் அந்த பொண்ணோட டீட்டெய்ல்ஸ் எல்லாம் துரைக்கிட்ட கொடுத்திடு என்று கூற ஏன் ப்பா எப்பொழுதும் நான் தானே போய் பேசுவேன் இப்போ என்ன புதுசா என்று அவரை சந்தேகமாகப் பார்த்தவன் தன் தந்தையின் பார்வையை உணர்ந்து கொண்டவன் ப்பா நீங்க ஏதாவது தில்லு முல்லு வேலை பண்ணாதீங்க..

நீங்க ஏதாவது செய்ய போய் அந்த பொண்ணு அதுக்கு ஒத்து வராம வெளியே பேரை நாரடிச்சிட்டா அவ்வளவுதான் என் அரசியல் கனவு கந்தலாகிடும் எதா இருந்தாலும் பார்த்து பண்ணுங்க என்று எச்சரிக்கை செய்து விட்டு தேன்நிலாவின் விவரம் அடங்கிய கோப்பை அவர் கையில் திணித்து விட்டு சென்றான்.

அந்த கோப்பை வாங்கி பார்த்தவர் அதில் தீக்ஷா என்று இருக்கவும் அவள் பெயரை இரண்டு முறை தீக்ஷா தீக்ஷா என்று சொல்லி பார்த்தவர் அவள் புகைப்படத்தைக் கையில் எடுத்து உன்னை அனுபவிக்க சொல்லி என் உடம்பு இப்போவே பரப்பரன்னு இருக்கு என்று முனகியவருக்கு தெரியவில்லை கை வைத்ததற்கே காணாமல் போக போகிறார் என்று.

துரை இந்தப் பொண்ணுக்கு எவ்வளவு காசு வேணாலும் கொட்டிக் கொடுக்கலாம்டா சீக்கிரம நம்ம விளம்பரத்துக்கு பேசி முடி என்கவும் ஐயா இது பெரிய நடிகையாச்சே விளம்பரத்துல நடிக்குமான்னு தெரியலை என்று கூற காசு அதிகமா கொடுத்தா வரப்போறா இந்தா செக் எழுதி தரேன் அட்வான்ஸா கொடு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு வருவாள்க

(உனக்கு நாக்கு தொங்கப் போகுதுடா டால்டா தலையா)

சரி ஐயா பேசிட்டு சொல்றேன்.

பேசி கண்பார்ம் பண்ணிட்டு வாடா அவள் எனக்கு வேணும் உனக்கும் மேல போட்டுத் தரேன் என்று கூற துரைக் வாயெல்லாம் பல்லானது.

(மாமா வேலை பாக்குறதுக்கு உனக்கெதுக்கு சிரிப்பு)

கோப்பில் உள்ள நம்பருக்கு அழைப் விடுத்து பார்த்த துரை யாரும் எடுக்கவில்லை என்றதும் நேரடியாக வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்று நினைத்தவன் நிலாவின் வீட்டிற்கு செல்ல பங்கஜம் தான் இருந்தார்.

முன்பெல்லாம் நிலா ஷூட்டிங் செல்லும் பொழுது கூடவே செல்லும் பங்கஜம் அங்கிருந்தவர்களிடம் இந்த ஜூஸ் கொண்டு வா குடை பிடி என்று அராஜகம் செய்ய நீ வந்தா நான் நடிக்க மாட்டேன் என்று ஒரே போடாக நிலா போட வீட்டிலே இருந்து கொண்டார்.

தோட்டத்தில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு இருந்தவர் துரை வரவும் யாரு வேணும் என்ன விஷயமா வந்துருக்கீங்க என்று கேட்கவும் ஒரு விளம்பரம் பண்ணனும் அதும் எங்க முதலாளி தீக்ஷாம்மா தான் பண்ணி தரணும்னு ஒத்த காலில் நிற்கிறார் என்று கூறினான்.

என் பொண்ணு தான் தீக்ஷா அவள் விளம்பரத்தில் எல்லாம் நடிக்க மாட்டாலே அதும் நீங்க ஜவுளி கடை விளம்பரம்னு வேற சொல்றீங்க என்று இழுக்க துரை இருபது லட்சத்திற்கான காசோலையை நீட்டவும் பங்கஜத்தின் கண்கள் விரிந்து கொண்டது.

ஐயோ இருபது லட்சமா என மனதிற்குள் குதூகலித்தவர் வெளியில் கெத்தாக சரி தம்பி உங்களுக்காக நான் என் பொண்ணுக்கிட்ட பேசிப் பார்க்கிறேன்.. நான் சொன்னால் என் பொண்ணு இந்த விளம்பரத்துல நடிக்க ஒத்துப்பா என்று தன் கெத்து குறையாமல் சொன்னவர் வாயெல்லாம் பல்லாக அந்த காசோலையை வாங்கிக் கொண்டார்.

துரை சென்றதும் பங்கஜம் ஆஹா சொலையா இருபது லட்சம் சூப்பர் டி பங்கு உனக்கு இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும்னு நான் கனவுல கூட காணலையே என்று தனக்கு தானே பேசியவர் இப்போ இதை வச்சு என்ன செய்யலாம் வைர அட்டிகை வாங்கலாமா இல்லை ஆரம் வாங்கலாமா இல்லை இல்லை வேண்டாம் நமக்கு ஒட்டியாணம் செஞ்சுக்கலாம் என்று மாற்றி மாற்றி யோசித்தவர் எப்படியோ கடைசியாக ஒரு முடிவுக்கு வர அந்த இருபது லட்சத்தையும் தன் மகளைப் பற்றி நினைக்காமல் எடுத்துக் கொண்டு நகைக்கடைக்கு சென்று விட்டார் ஒட்டியாணம் செய்ய கொடுக்க..

*****
இங்கு துரை பங்கஜத்தை பார்க்க கிளம்பியதும் அந்த பெரிய மனிதர் விளம்பரம் எடுக்க புக் ஆகியிருக்கும் இயக்குநரை வீட்டிற்கு வர சொன்னார்.

இயக்குநர் வந்ததும் விளம்பரத்திற்கு என்ன ஸ்கிரிப்ட் வச்சிருக்கீங்க என்று கேட்க அவர் சாதாரணமாக கல்யாணம் ஷாட் வச்சிக்கலாம் சார் என்று கூற ஏதோ கணக்கு போட்டவர் ஓகே தம்பி ஐயராத்து முறையில் கல்யாணம் பண்ணுவது போல ஷாட் வச்சிடுங்க என்று கூறினார்.

பின்பு பச்சை வர்ணத்தில் பட்டு சேலை எடுக்க சொல்லி யாருக்கோ போன் செய்து கூறியவர் அவள் புகைப்படத்தைப் பார்த்து உனக்கு பச்சை கலர் எடுப்பா இருக்கும் குட்டி இன்னும் கொஞ்ச நாளில் உன்னை ருசிக்கப் போறேன் என்று அவளை ரசித்தவாறு தனக்குள் சொல்லிக் கொண்டார்.

***

இன்று காலையில் பங்கஜம் நிலாவிடம் விளம்பரத்தை பற்றி கூறிய அடுத்த பத்தாவது நிமிடம் இங்கு வயலுக்கு சென்று வந்த வெற்றிக்கு போன் டானென்று வந்தது.

தன் போனை எடுத்து அந்த எண்ணை பார்த்தவன் வரான் வரான் பூச்சாண்டி போன் மூலமா இன்னைக்கு என்ன காலையிலே சிங்கம் போன் பண்ணுது என்று முணுமுணுத்தவாறு அழைப்பை ஏற்க ஹலோ என்று எலிக்குரலில் கீச்சுக் குரலில் பேச அந்த பக்கம் புலியென கர்ஜித்தான்.

ரேய் இதுதான் நீ தேனை பார்த்துக் குற லட்சணமா பெரிய புடுங்கி மாதிரி என் நிலாவை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் பொந்துக்குள்ள வச்சி பார்த்துப்பேன்னு அப்படி இப்படின்னு சொன்ன அந்த வாயை வாடகைக்கு விட்டுட்டியா என்று கர்ஜிக்க டேய் இவன் ஒருத்தன் காலையிலே ஆரம்பிச்சுட்டான் என்னடா இன்னைக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா என்று வெற்றி சலிப்பாக கூறினான்.

டேய் வந்தேன்னு வச்சுக்கோயேன் சுட்டுத் தள்ளிடுவேன் நான் பார்த்துக்குறேன்னு சொல்லி அழைச்சிட்டு போன இப்போ என்னடான்னா அங்க ஒரு பூதம் இருக்கே அது என் ஹனிக்கு பிடிக்காதது அனைத்தையும் செய்யுது எனக்கு இருக்குற கோவத்துக்கு அந்த பொம்பளையை பொலந்து கட்டணும்னு தோணுது.

ஐயயே இவன் ஒருத்தன் பிச்சி பிச்சி சொல்லிட்டிருக்கான் தலையும் புரியல வாலும் புரியல என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் டேய் தேவா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லி தொலை காலையிலேயே கடுப்பேத்துற நான் அப்போவே சொன்னேன் அந்த பூதத்தை அடிச்சி துரத்தி விடுன்னு…

அப்போ எதும் என் பேச்சை கேட்கலை என் ஹனி கஷ்டப்படுறா குஷ்டப்படுறான்னுட்டு இப்போ வந்து புலம்பிட்டிருக்க ஓடிடு என்கவும் டேய் என் ஹனியை விளம்பரம் நடிக்க வைக்க அது பணம் வாங்கி வச்சிருக்கு

(அந்த பணம் ஒட்டியாணம் வாங்க போயாச்சு..)

அதுமில்லாம அந்த கடை முதலாளி பொண்ணுங்க விஷயத்துல ஒரு மாதிரியாம் இவ போய் அங்க மாட்டிட கூடாது ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரி எனக்கு தோணுது என்று கூற அந்த பக்கம் வெற்றியின் சிரிப்பு சத்தம் கேட்டது.

டேய் குருவி மண்டையா ஒழுங்கா சிரிக்கிறதை நிப்பாட்டு என்று கூற தன் சிரிப்பை நிறுத்தியவன் ஏன்டா டேய் அது என்ன தப்பு நடக்க போற மாதிரின்னு சொல்ற அந்த தப்பை செய்யப் போறதே நீ தானே என்று மீண்டும் சிரிக்க 
இந்த பக்கம் தேவாவும் சிரித்தான்.

அந்த பெரிய மனுஷனோட உயிர் போய்தான் ஆகணும்னு இருந்தா போய் தானே ஆகும்.. என்று கூறியவன் இன்னும் சிலவற்றை பேசியவன் அழைப்பை துண்டித்தான்.

பின்பு தான் பீமிற்கு வீடியோ கால் அழைத்து பேசி சூரசம்காரமும் நடந்து முடிந்து விட்டது ..

ஹனி இந்த புடவையில ஏதோ பண்ணுரியே இப்படி ஆளை அசரடிக்குற அளவுக்கு வளர்ந்து நிக்குறியே ஒருவேளை இது தான் சரியான வயசோ நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ..

என்ன தான் இருந்தாலும் நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலையே.. நீ தானே சொன்ன லவ் இருந்தால் தான் கல்யாணம் செய்ய முடியும்னு. 

(அட லூசுப் பயலே அவ எப்ப சொன்னதை அப்போ கோட்ட விட்டுப்புட்டு இப்போ கடைப் புடிக்குது பாரு விளங்கிடும்..)

உனக்கு பிடிச்சவங்களை கல்யாணம் செய்து சந்தோஷமா இரு என்றவனுக்கு தெரியவில்லை இன்று அவன் நினைப்பு தவிடுப்பொடியாகப் போவது.

அப்பொழுதுதான் நிலாவிடம் அத்துமீறுவது கண்டு தன் ஆட்களுடன் வந்தவன் ஏன்டா நாயே உன் புறா தலைக்கு என் ஹனி உனக்கு வேணுமா உன்னை பற்றி தெரிஞ்சும் என் ஹனியை அனுப்பினது என் தப்பு தான் என்று சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு வந்த சுவடே இல்லாமல் சென்று விட்டான்.

இங்கு கொலை கொலை என்று அலறியவர்கள் அங்கும் இங்கும் ஓடி பதுங்க அதில் யாரோ ஒருவர் போலீஸிற்கு அழைப்பு விடுத்திருப்பர் போலும்.. அடுத்து பத்து நிமிடத்தில் போலீஸ் வந்து பார்த்தது இறந்து போன அந்த பெரிய மனிதரின் உடலை தான்..

கிட்டத்தட்ட பதினாறு இடங்களில் வெட்டு விழுந்திருக்க அவர் அணிந்திருந்த உடை முழுவதும் அவரின் இரத்தத்தில் நனைந்து போயிருக்க இடது கை வெட்டப்பட்டு பக்கத்தில் தனியே கிடந்தது.

இதனையெல்லாம் போலீசார் அங்கிருந்தவர்களிடம் இந்த ஷூட்டோட இயக்குநர் நடிகர் நடிகை எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வரணும் என்று உத்தரவிட்டவர் அந்த கட்டடத்தின் கதவை இழுத்து மூட சொன்னார்.

விஷயம் அறிந்து வந்த ராகவ் தன் தந்தை இருக்கும் கோலத்தை கண்டு கதறி அழுதான்.. அவர உடல் முழுதும் வெள்ள துணி போட்டு மூடி வைத்திருக் அவரது இரத்தம் உறைந்து கிடந்தது.

அவர் இழப்பைத் தாங்க முடியாமல் மண்டியிட்டு கதறி அழுதவன் ப்பா உங்க சாவுக்கு காரணமானவனை சும்மா விட மாட்டேன் ப்பா என்று கதறியவனை இன்ஸ்பெக்டர் வந்து தூக்கிவிட்டு சர் எழுந்துறீங்க என்று எழுப்பியவர் கொஞ்சம் விசாரணை பண்ணனும் என் கூட கொஞ்சம் வாங்க என்றவர் தன்னுடன் வந்த சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமாவை அழைத்தார்.

(இதுதான் பீமுக்கு ஏற்ற பாமோ.?)

சத்யா இங்க இருக்குறவங்களை எல்லாம் விசாரணை முடிச்சிட்டு அனுப்பி விடுங்க என்று விட்டு ராகவுடன் வெளியில் சென்றார்.

சத்யபாமா அனைவரையும் விசாரிக்க அஞ்சு பேரு வந்தாங்க வெட்டிப் போட்டுட்டு போயிட்டாங்க என்று ஒரே பதிலையே தர டைரக்டர் முறை வரவும் அப்போ தான் ஷாட் முடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம் திடீரென்று எப்படி வந்தாங்கன்னு தெரியல கையில் பெரிய பெரிய கத்தி வச்சிருந்தாங்க..

எல்லாம் பயத்துல அலறி அடிச்சு ஓட இவரை வெட்டி சாச்சிட்டாங்க என்று தனக்கு தெரிந்ததைக் கூறினார்.

ஓகே இந்த செட்டுல சிசிடிவி கேமரா இருக்கா என்று கேட்க இருக்கு மேடம் என்று கூறவும் ஓகே அந்த ஃபூட்டேஜ் எனக்கு ஒரு டிரைவ்ல காப்பி பண்ணி தாங்க.. 

அதுக்கு முன்னாடி இந்த விளம்பரத்தில் நடிக்க வந்த ஆர்டிஸ்ட்ட கூப்பிடுங்க என்று உத்தரவிட்டவள் அங்கிருந் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

இப்போ கூப்பிட்டு வர சொல்றேன் மேடம் என்ற டைரக்டர் அங்கிருந்த ஒரு பையனை அழைத்து தீக்ஷிதா மேமையும் வருண் சாரையும் அழைச்சிட்டு வா என்றவர் சிசிடிவி ஃபூட்டேஜ் எடுக்க சென்றார்.

அந்த பையன் சென்று அழைக்கவும் வருண் அங்கு வந்தான்.

சார் இப்படி கொஞ்சம் உட்காருங்க உங்ககிட்ட இந்த கொலை சம்மந்தமா விசாரிக்கணும் என்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டி அமர சொன்னாள்.

என்ன மேம் கேட்கணும் அப்போ தான் ஷூட்டிங் முடிந்தது நான் கேரவனுக்குள் போயிட்டேன் அதுக்கப்புறம் வெளி சத்தம் கேட்கவும் தான் எட்டிப் பார்த்தால் இவர் இரத் வெள்ளத்தில் விழுந்துக் கிடக்கார். எனக்கு இவ்வளவு தான் தெரியும் மேடம் என்று தனக்கு தெரிந்ததை கூறியவன் கண்கள் அங்கு பீமுடன் வந்த நிலாவை ஆர்வமாகப் பார்த்தது.

அவன் பார்வையை உணர்ந்த பீம் டேய் ரப்பர் வாயா இப்போ கையை வச்சதுக்கு உயிரை எடுத்துட்டு போய் இருக்காரு நீ இப்படி பார்த்து திரும்ப வர வச்சுராத என்று உள்ளுக்குள் நினைத்தவன் உன் கண்ணு காக்காவுக்கு கன்பார்ம் என்னு முணுமுணுத்தவன் அவனை முறைத் பார்த்தான்.

வருண் பார்வையை சத்யாவும் உணர்ந்தே இருந்தாள். பின் தொண்டையை கணைத்துக் கொண்டவள் ஓகே சார் நீங்க போகலாம் நான் அவங்க கிட்ட விசாரணை பண்ணனும் என்று சத்யா கூறவும் நிலாவிடம் வந்த வருண் ஹாய் தீக்ஷா இன்னைக்கு நைட் பிரியா நீங்க என்றவன நான் கேட்டதுக்கு இதுவரைக்கும் பதில் சொல்லவே இல்லையே.. 

எப்போ டேட் போகலாம் என்று கேட்க எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் நாட் இன்டிரஸ்டட் என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு சென்று விட்டாள்.

டேட்டிங்கா கூப்பிடுற செத்து சொர்கத்துக்குப் போய் உன் செத்து போன ஆயா கூட போடா டோமர் தலையா என்று சொன்னது வேறு யாருமல்ல சாட்சாத் நம் பீமன் தான்..

வருண் யூ… என்று கத்த பீம் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அவனை நெருங்க அவன் உடம்பையும் உயரத்தையும் கண்ட வருண் வந்த வழியே சென்று விட்டான்.

இவை அனைத்தையும் சத்யபாமா பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். 

நிலா வந்து அமர்ந்ததும் அருகில் பீமனும் நிற்க ஹலோ சார் இவங்ககிட்ட விசாரணை பண்ணனும் நீங்க கொஞ்சம் வெளியே போங்க என்று சத்யா கூற நோ மேடம் அது முடியாது நான் எப்பொழுதும் மேம் கூட இருக்கணும்னு எனக்கு ஆர்டர். அதுதான் என் வேலையும் கூட என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கூற அவனை ஒரு பார்வை பார்த்தவள் நிலாவிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.

அவள் கேட்கவும் மேம் அப்போ அங்கே இல்லை அவங்களுக்கு வெளியே நடந்தது எதுவும் தெரியாது கேரவனில் இருந்தாங்க என்று விறைப்பாக கூற ஹலோ மிஸ்டர் நான் உங்கள எதும் கேட்கலை என்று காட்டமாக பதில் கூற பீம் கொஞ்சம் அமைதியா இருங்க என்று நிலா அடக்கினாள் அதன் பிறகு வாயே திறக்கவில்லை.

தடி மாடு மூஞ்சை பாரு முந்திரி கொட்டை என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தாள்.

பின்பு பீமனையும் அபியையும் விசாரணை செய்து விட்டு சிசிடிவி ஃபூட்டேஜ் வாங்க சென்றாள்.

இங்கு பீமன் நிலாவிடம் மேம் கிளம்பலாம் இதுக்கு மேல இங்கு இருக்க வேண்டாம் சேப் இல்ல என்றவன் அபியையும் நிலாவையும் அழைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு வர ஒருவன் வந்து பீமனிடம் உங்களை சப் இன்ஸ்பெக்டர் வர சொன்னாங்க என்று கூற அதான் விசாரணை எல்லாம் முடிஞ்சிடுச்சு தானே எதுக்கு இப்போ கூப்பிடுறாங்க அதெல்லாம் வர முடியாதுன்னு சொல்லு என்று கூற நிலா பீமா போய் என்னன்னு கேட்டுட்டு வா நாங்க கார்ல இருக்கோம் என்று கூற முடியாது மேம் என்று கூற வர மூச் போடா உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை என்று அவனை அனுப்பி வைத்தாள்.

அதுவே அவளை கடத்துவதற்கு ஏதுவாக அமைந்து விட்டது.

நிலா காரில் ஏறியதும் அபி மறுபக்க கதவை திறக்க போக எங்கிருந்து தான் அந்த வாகனம் வந்ததோ அவர்கள கார் அருகில் கொண்டு வந்து நிறுத்தி அபியை இரு கரங்கள் காரில் அள்ளிப்போட்டு பறந்து விட்டது.

இதனை எதிர்ப்பார்க்காத நிலா சட்டென்று காரை விட்டு இறங்கினாள். 

(மேடமுக்கு கார் ஓட்ட தெரியாது.. பட் வாயால பிளைட்டே ஓட்டுவாங்க)

 சிறிது தூரம் அந்த காரை துரத்த அந்த கார் அவள் கண்ணில இருந்து மறைந்து விட்டது.


கண்ணீர் கண்களை மறைக்க அபிம்மா என்று கத்த அவளருகே ஒரு கார் வந்து நிற்க சார் சார் என் தங்கச்சியை கடத்திட்டு போறாங்க ப்ளீஸ் அந்த காரை பாளோ பண்ணுங்க ப்ளீஸ் என்று கெஞ்ச அந்த டிரைவர் பின் சீட்டை திரும்பி பார்க்க கட்டளை வந்ததும் ஏறுங்க மேடம் என்று கதவை திறந்து விடவும் அவள் இருக்கையில் அமர்ந்து அண்ணா ஒரு வெள்ளை கார் என்று கூறினாள்.

சரிங்க மேடம் என்று காரை எடுக்க தங்கச்சிய கண்டுபிடிக்கிறேன்னு என்கிட்ட வந்து மாட்டிக்கிட்டியே என்ற குரல் பின் சீட்டில் இருந்து வரவும் அதிர்ந்து திரும்பியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

இங்கு பீம் திரும்பி வந்தவன் கார் மட்டும் தனியே நிற்கவும் ஐயோ போச்சு என்று தலையில் அடித்துக் கொண்டவன் தன் பாஸிற்கு அழைத்தான்.

****

அந்த இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் வருணின் கார் நின்றிருக்க வருணை ஒருவன் இந்த வாய் தானே டேட்டிங்கு கூப்பிட்டுச்சு என்று அவன் வாயிலேயே குத்த முன் பற்கள் நான்கும் உடைந்து இரத்தம் பொலப்பொலவென கொட்டியது.

அபியை கடத்தியது யார்?

நிலாவை கடத்தியது யார்?

வருணை அடி வெளுத்து வாங்குவது யார்?

தொடரும்…